Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ரஞ்சித் உங்கள் நேரத்துக்கும் உழைப்புக்கும் .

 

  • Thanks 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் ஆவணமாக்கல் பணி தொடர வாழ்த்துக்கள் 
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

நன்றி ரஞ்சித் உங்கள் நேரத்துக்கும் உழைப்புக்கும் .

 

நானும் கிழக்கு போய்  அந்த மக்களையாவது நிம்மதியாக வைத்திருப்பார் என்று பார்த்தால் சிங்கன் சிங்களவனை விட பல படி மேவி நிக்கிறார் நன்றி தொகுத்து தந்த தகவல்களுக்கு .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும்... பயனுள்ள பதிவு ரஞ்சித்.
தமிழருக்கு மறதி  அதிகம் உள்ளது. 
அப்படியானவற்றை...  உங்களது பதிவு நிச்சயம்  நிவர்த்தி செய்யும்.  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பெருமாள் said:

நன்றி ரஞ்சித் உங்கள் நேரத்துக்கும் உழைப்புக்கும் .

 

இதுவரை எவருமே இத்திரியில் கருத்து எழுதாததால் , இதனை எவருமே கவனத்தில்க் எடுப்பதில்லையென்று எண்ணிவந்தேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி

 

10 hours ago, zuma said:

உங்கள் ஆவணமாக்கல் பணி தொடர வாழ்த்துக்கள் 
 

உங்களின் ஆதரவுக்கு நன்றி சுமா

 

5 hours ago, தமிழ் சிறி said:

மிகவும்... பயனுள்ள பதிவு ரஞ்சித்.
தமிழருக்கு மறதி  அதிகம் உள்ளது. 
அப்படியானவற்றை...  உங்களது பதிவு நிச்சயம்  நிவர்த்தி செய்யும்.  👍

நன்றி சிறி, இந்தத் திரியை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சில நாட்களுடன் அது தானாகவே நின்றுவிடும், இதன்மீதான எனது ஆர்வமும் நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்த சம்பவங்களைத் தேடிப் பார்க்கும்போது, பல விடயங்கள் மிகுந்த வருத்தத்தினையும், கோபத்தினையும் தருவதால் இதுபற்றி அனைவரும் அறியவேண்டும் என்கிற அவாவே இப்போது தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, வைகாசி 2009

தனுசிக்காவின் கொலையில் தனது பங்கினை மறைக்க கடத்தலில் ஈடுபட்ட மூன்று சகாக்களைத் தானே கொன்றுபோட்ட கருணா

கடந்த சனிக்கிழமை கொன்று கிணற்றுக்குள் வீசப்பட்ட மட்டக்களப்புச் சிறுமியான தினுசிக்கா சதீஸ்குமாரின் கொலையில் தனது பங்கினை மறைக்க, அக்கடத்தல் மற்றும் கொலையில் நேரடியாகப் பங்குபற்றிய மூன்று சகாக்களை கருணா கொன்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இக்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு பொலிஸார் இக்கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட மூன்று கொலையாளிகளின் உடல்களை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுத்திருக்கின்றனர்.

கிராம வாசிகள் தமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் உடல்களை தாம் கண்டெடுத்ததாக அவர்கள் மேலும் கூறினர்.

தினுசிக்காவின் உறவினர்கள் இதுபற்றிப் பேசும்போது தமது பிள்ளையைக் கடத்தி வைத்திருந்த கருணா மூன்று மில்லியன் ரூபாய்களைக் கப்பமாகத் தரும்படி வற்புறுத்தியதாகக் கூறியுள்ளனர்.

கடத்திக் கொல்லப்பட்ட தினுசிக்காவின் தந்தையாரான சதீஷ்குமார் சாந்திராஜா இரு வருடங்களுக்கு முன்னர் இதே கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு, கப்பப் பணத்தின் ஒரு பகுதியை வசூலித்த நிலையிலும் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, ரஞ்சித் said:

இதுவரை எவருமே இத்திரியில் கருத்து எழுதாததால் , இதனை எவருமே கவனத்தில்க் எடுப்பதில்லையென்று எண்ணிவந்தேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி

 

உங்களின் ஆதரவுக்கு நன்றி சுமா

 

நன்றி சிறி, இந்தத் திரியை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சில நாட்களுடன் அது தானாகவே நின்றுவிடும், இதன்மீதான எனது ஆர்வமும் நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்த சம்பவங்களைத் தேடிப் பார்க்கும்போது, பல விடயங்கள் மிகுந்த வருத்தத்தினையும், கோபத்தினையும் தருவதால் இதுபற்றி அனைவரும் அறியவேண்டும் என்கிற அவாவே இப்போது தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

மூலங்களை,  மேற்கோள் அல்லது உசாத்துணைகளுடன்   குறிப்பிட்டால் , இது ஒரு வ்ரற்லாறு ஆவணமாக இருக்கும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

நன்றி சிறி, இந்தத் திரியை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சில நாட்களுடன் அது தானாகவே நின்றுவிடும், இதன்மீதான எனது ஆர்வமும் நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்த சம்பவங்களைத் தேடிப் பார்க்கும்போது, பல விடயங்கள் மிகுந்த வருத்தத்தினையும், கோபத்தினையும் தருவதால் இதுபற்றி அனைவரும் அறியவேண்டும் என்கிற அவாவே இப்போது தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

எழுதுங்கள் சகோ

எம்மை எழுதவோ  போராடவோ தூண்டுவதும்

உந்த  சக்தியும்  எப்பொழுதும் சிங்களமும் துரோகிகளின் வஞ்சனைகளுமே...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, வைகாசி 2009

குழந்தைகளைக் கடத்திச்சென்று பணம்பறிக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் யாழ்ப்பாண ராணுவத்திற்கு அளித்திருக்கும் முறைப்பாட்டில் தம்மிடம் பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகச் செலுத்தும்படி துணைராணுவக் குழுக்கள் கோரிவருவதாகவும், அப்படிப் பணம் செலுத்தப்படாதவிடத்து தமது பிள்ளைகளைக் கடத்தப்போவதாக அரச ரணுவத்தின் ஆதரவுடனும் ஆசீர்வாதத்துடனும் செயற்பட்டுவரும் துணைராணுவக் குழுக்கள் மிரட்டிவருவதாகத் தெரிவித்திருக்கின்றன்ர். அவர்கள் இதுபற்றி மேலும் குறிப்பிடுகையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் வெள்ளைவான்களில் வலம்வரும் இக்குழுக்கள் ராணுவ முகாம்களையும், காவலரண்களையும் சுற்றி மிகச் சுதந்திரமாக இக்கைங்கரியத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

பல பிரபலமான வர்த்தகர்கள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், பணக்கார மக்கள் என்று பலர் தமது பிள்ளைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக இக்கடத்தல்க் காரர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்தினைக் கொடுத்துவிடுவதாகத் தெரிகிறது. இவ்வாறான கடத்தல் நிகழ்வுகளில் பெருமளவு பெண்குழந்தைகளே கடத்தப்பட்டு வருவதாகவும், பலர் பெருமளவு பணத்தினைக் கப்பமாகக் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டுவருவதாகவும் தெரிகிறது.

அண்மையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பள்ளிச் சிறுமிகளின் கொடூரத்தின் பின்னர், தமது குழந்தைகளுக்கும் இதே கதியேற்பட்டுவிடும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கடத்தல்களின் பாணியிலேயே இவை நடைபெறுவதால் கிழக்கில் கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் கருணா குழு யாழ்ப்பாணத்திலும் தனது கொடூரத்தினை விரித்திரிப்பதாக நம்பப்படுகிறது.

மக்கள் இக்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தமக்குத் தகவல்களை வழங்கவேண்டும் என்று ராணுவம் கூறினாலும், இக்கடத்தல்க்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் உள்ள தொடர்பினை மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளதுடன், முறைப்பாடு செய்யுமிடத்து தாமும் இக்குழுக்களால் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

அண்மையில் அமெரிக தூதுவர் ரொபேர்ட் பிளேக் வோஷிங்க்டனுக்கு அனுப்பிவைத்த கேபிள் செய்தியில் கிழக்கில் கடத்தல்கள் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் கருணா தற்போது வடக்கிற்கும் தனது வன்முறைகளைப் பரப்பியிருப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் இவ்வாறான சம்பவங்களில் கருணா குழுவே இருப்பதாகவும் கூறியிருந்ததும் நினவிலிருக்கலாம். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=29301

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

நன்றி சிறி, இந்தத் திரியை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சில நாட்களுடன் அது தானாகவே நின்றுவிடும், இதன்மீதான எனது ஆர்வமும் நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்த சம்பவங்களைத் தேடிப் பார்க்கும்போது, பல விடயங்கள் மிகுந்த வருத்தத்தினையும், கோபத்தினையும் தருவதால் இதுபற்றி அனைவரும் அறியவேண்டும் என்கிற அவாவே இப்போது தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

ரஞ்சித்.... இப்படியான துரோகங்களை, பலரும் விரைவில் மறந்து விடுவார்கள்.

அவற்றை நினைவில் வைத்து, எழுதும் திறமை உங்களுக்கு உண்டு.

நாட்காட்டி இப்போது... 2009’ம் ஆண்டில் நிற்கிறது. இன்னும் முக்கிமான பத்து வருடங்கள் இருக்கின்றது. 

எல்லாவற்றையும் எழுதுங்கள். ஒரு காலத்தில்.... புத்தக வடிவில், இந்த நாட்காட்டி வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

அவற்றை நினைவில் வைத்து, எழுதும் திறமை உங்களுக்கு உண்டு.

எனக்கும் பல சம்பவங்கள் மறந்துவிட்டன, அல்லது மிக மங்கலாகவே நினைவில் இப்போது இருக்கின்றன. அதனால் இணையத்தளங்களிலிருந்து தேடி மொழிபெயர்த்து இணைக்கிறேன். 

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஆனி, 2009

அதிகரித்துவர் வரும் மணிக்பாம் தடுப்பு முகாம் கடத்தல்கள்  - மனிதவுரிமை ஆதரவாளர் சுனிலா அபயசேகர

sunila abeysekeraக்கான பட முடிவுகள்

மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும், மனிதவுரிமை மீறல்ச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆவணப்படும் அமைப்பான இன்போம் அமைப்பின் நிர்வாகியுமான பெண்மணி சுனிலா அபெயசேகர அண்மையில் ரியல் நியூஸ் டொரொன்டோ எனும் செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தத்தின் இறுதியில் ராணுவத்தால் பிடித்து அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்றுலட்சம் அப்பாவிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எவையுமின்றி நிர்க்கதியான நிலையில் வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும், அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கும் மக்கள் விபரக் கணக்கெடுப்பினைப் பாவித்து கருணா குழு உட்பட சில துணைராணுவக் குழுக்கள் முகாமினுள் இருந்து பல இளைஞர்களைக் கடத்திச் செல்ல ராணுவமே உதவிவருவதாகவும்  குற்றஞ்சாட்டியுள்ளார். 

"பெரும்பாலான மக்கள் உடல்நீர்வறட்சியினால் பாதிக்கப்பட்டும், பலர் காயங்களில் தொற்று ஏற்பட்டும் அல்லற்படுகிறார்கள். வவுனியா நீதிமன்ற நீதியரசர் வெளியிட்ட தகவல்களின் படி ஒருநாளில் மட்டும் 14 முதியோர் பட்டிணியால் இறந்துபோயிருக்கிறார்கள்"

" மூன்று லட்சம் தமிழர்களையும் விசாரித்த பின்னரே அரச சார்பற்ற நிறுவனங்களான சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், மனிதவுரிமைகள் அமைப்பு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றினை முகாமினுள் அனுமதிக்கமுடியும் என்னும் இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது". 


"கடந்த வாரத்தில் மட்டும் 11 வயதிலிருந்து 17 வரையான சிறுவர்களில் குறைந்தது 200 பேரை துணைராணுவக் குழுக்கள் மணிக்பாமிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு முகாமிலிருந்து கருணா துணைராணுவக்குழுவால் கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்று அரசாங்கமும் ராணுவமும் கூறுகின்றன.  கடத்தப்பட்ட இச்சிறார்களின் பெற்றோர் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர்".

"அரசாங்கம் தம்மிடம் குறைந்தது 10,000 விடுதலைப் புலிகள் சரணடைந்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் எங்கே அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது. அல்லது இவர்களின் பெயர் விபரங்களைக்கூட அரசு தர மறுக்கிறது. புலிகளின் தளபதிகளின் குடும்ப உறுப்பினர்களைக்கூட ராணுவம் எங்கோ அடைத்துவைத்திருக்கிறது. சூசையின் மனைவியும் பிள்ளைகளும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்கள் பற்றிய விபரங்களை அரசு தரமறுத்துவருகிறது. இவர்களை நாம் தொடர்ந்தும் தேடி வருகிறோம், ஆனால் இவர்களை காணுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கப்போவதில்லையென்பதே உண்மை".

என்று அவர் மேலும் கூறினார்

2007 ஆம் ஆண்டின் மனிதவுரிமைப் பாதுகாவலர் எனும் சர்வதேச விருதினை சுனிலா அபெயசேகர பெற்றுக்கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ரஞ்சித்.... இப்படியான துரோகங்களை, பலரும் விரைவில் மறந்து விடுவார்கள்.

அவற்றை நினைவில் வைத்து, எழுதும் திறமை உங்களுக்கு உண்டு.

நாட்காட்டி இப்போது... 2009’ம் ஆண்டில் நிற்கிறது. இன்னும் முக்கிமான பத்து வருடங்கள் இருக்கின்றது. 

எல்லாவற்றையும் எழுதுங்கள். ஒரு காலத்தில்.... புத்தக வடிவில், இந்த நாட்காட்டி வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை.

கூடுதலாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து இளையதலைமுறையை சென்றடைய வேண்டும்.

தமிழில் மட்டும் எழுதுவது எம்மைப் போன்றோருடனே நின்றுவிடும்.

மொழிபெயர்க்கும் புலமை ரஞ்சித்திடமுள்ளபடியால் சுலபமாக செய்யலாம்.

ரஞ்சித்துக்கு மிகவும் நன்றி.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, மார்கழி , 2009

அம்பாறையில் கருணா துணைராணுவக்குழுவுக்கும் பிள்ளையான் கொலைக்குழுவிற்குமிடையே மோதல்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் சுதந்திர ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கான தேதல் பிரச்சாரத்திற்கென்று நான்கு வாகனங்களில் பயணித்த சுமார் 50 பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகளுக்கும், அப்பகுதியில் அமைந்திருந்த சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் காவலில் இருந்த கருணா துணைராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

திருக்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினருகில் நடந்த இந்த மோதலில் கருணா துணைராணுவக் குழுவினருக்கு இனியபாரதி எனும் ஆயுததாரியே தலைமைதாங்கியதாகத் தெரியவருகிறது. தாக்குதலில் காணாமல்ப் போன தமது சகாக்களை தேடிச்சென்ற பிள்ளையான் குழுவினரின் வாகனத்தை உள்ளேயிருந்தவர்களுடன் சேர்த்து கருணா துணைப்படையினர் தீயிட்டுக் கொழுத்தியதாகவும் தெரியவ்ந்திருக்கிறது.

மோதலில் கடுமையாகக் காயப்பட்ட பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்கள் மூவரின் விபரங்கள் வருமாறு,

சிவராஜா, கேதீஸ்வரன், ஜீவகுமாரன்

மகிந்தவுக்கான பிரச்சாரத்திற்காக அக்கரைப்பற்றிலிருந்து மூன்று வான்களிலும் ஒரு ஜீப் வண்டியிலும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் அம்பாறை நோக்கிப் பயணித்தவேளையிலேயே இம்மோதல் நிகழ்ந்திருக்கிறது.
 மோதலில் ஈடுபட்ட மற்றைய தரப்பான கருணா துணைப்படை ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பதுடன் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாகவும் இணைந்திருக்கிறது.

பிள்ளையான் குழுவினரால் மாலை தமது காணாமல்ப்போன சகாக்களைத் தேடி அனுப்பப்பட்ட இன்னொருவாகனம் உள்ளிருந்தவர்களுடன் சேர்த்து திருக்கோயில்சந்தியில் உள்ள இடுகாட்டினருகில் எரிக்கப்பட்டது.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, தை , 2010

பிள்ளையான் கொலைக்குழு மற்றும் கருணா துணை ராணுவக்குழுக்களின் ஆதரவாளர் சிவகீதா மீண்டும் கட்சி மாறினார்

08_01_10_batti_02.jpg

மட்டுநகர் மேயர் சிவகீதா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவை ஆதரிக்கும் முகமாக  சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியுள்ளார்.

பிள்ளையான் கொலைக்குழுவில் ஆரம்பத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சிவகீதா பின்னர் கருணாவின் அழைப்பின் பேரில் அத் துணைராணுவக் குழுவினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சிக்குத் தாவியிருந்தார். இப்போது, அக்கட்சியிலிருந்தும் வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தாவியிருக்கிறார்.

 


தம்மைவிட்டுக் கட்சி மாறிய சிவகீதாவின் ராணுவப் பாதுகாப்பினை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஜெனரல் சரத் பொன்சேக்காவை தான் ஆதரிக்கப்போவதாக சிவகீதா அறிவித்த சில மணிநேரத்திலேயே அரசு அவருக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த 25 ராணுவத்தினரைக் கொண்ட அணியை வாபஸ் பெற்றுள்ளது.

கொழும்பில் ரணிலுடன் சேர்ந்து இவர் தனது முடிவுபற்றி அறிவித்த சில நேரத்திலேயே ராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதுடன், மட்டக்களப்பில் அவரின் வீட்டிற்கு வழங்கப்பட்ட ராணுவப் பாதுகாப்பும் முற்றாக விலக்கப்பட்டு இரு பொலீஸ் கான்ஸ்டபிள்களை மட்டும் வாயிலில் பணிக்கு அமர்த்தியிருக்கிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரஞ்சித் said:

இதுவரை எவருமே இத்திரியில் கருத்து எழுதாததால் , இதனை எவருமே கவனத்தில்க் எடுப்பதில்லையென்று எண்ணிவந்தேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி

7.7k views இவ்வளவு பேர் பார்த்து இருக்கினம் தேவையில்லாமல் கருத்தை வைத்து திரியை அணைக்க கூடாது பாருங்கோ.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பெருமாள் said:

7.7k views இவ்வளவு பேர் பார்த்து இருக்கினம் தேவையில்லாமல் கருத்தை வைத்து திரியை அணைக்க கூடாது பாருங்கோ.

நான் இதாலைதான் இந்த திரியிலை கருத்து எழுதவேயில்லை.எல்லாம் முடிய வைச்சு செய்வம் எண்டு யோசிச்சு இருந்தனான். நேற்றும்  இது பற்றி ஒரு குமுறல் திண்ணையிலை நடந்தது பாக்கேல்லையோ?

இப்பவெல்லாம் முள்ளிலை விழுந்த சேலையை வெளியிலை எடுக்கிற மாதிரி.......கவனமாய் இருக்க வேணும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, ஆனி , 2010

பிள்ளையான் குழு முக்கியஸ்த்தர் ஜெயம் வீட்டில் கருணாவின் அழுத்தத்தின்பேரில் குற்றப்புலநாய்வுத்துறையினர் விசாரணை

karuna pillaiyaan jeyamக்கான பட முடிவுகள்

இலங்கை குற்றப்புலநாய்வுப்பிரிவினர் கடந்த செவ்வாயன்று பிள்ளையான் கொலைக்குழு முக்கியஸ்த்தரான ஜெயம் எனப்படும் நாகலிங்கம் திரவியம் என்பவரது வாழைச்சேனை வீட்டில் கடும் சோதனைகளை நடத்தியுள்ளனர். கிழக்குமாகாணசபையின் உறுப்பினரான இவர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதோடு, 2004 ஆம் ஆண்டு அப்போது புலிகளின் கிழக்குமாகாணத் தளபதியாகவிருந்த கருணாவினால் இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.  வாழைச்சேனையில் இவரது வீட்டில் நடந்த கடுமையான சோதனைகளைப்போலவே, இவரது வாகரை வீட்டிலும், உறவினர்களின் சல்லித்தீவு மற்றும் பனிச்சங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்த வீடுகளிலும் சோதனை நடந்திருக்கிறது.

TMVP Jeyamக்கான பட முடிவுகள்

பல்வேறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஜெயம், தனது வருமானத்திற்கு மிக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துவைத்திருந்ததுடன் அப்பகுதியில் பெரும் பணக்காரராகவும் மிகக் குறுகிய காலத்தில் மாறியிருந்தார். ஆனால், இச்சோதனைகளின்பொழுது ஜெயத்தின் வீடுகளிலிருந்து மக்களிடம் சூறையாடப்பட்ட பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் என்று எவற்றையுமே குற்றப் புலநாய்வுத்துறையினர் கைப்பற்ற விரும்பாததோடு, வெறுமனே ஒரு எச்சரிக்கைக்காக இச்சோதனைகளை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

வாழைச்சேனைப் பகுதியில் பெருமளவு கொள்ளைகள், கொலைகளில் ஈடுபட்டு வரும் ஜெயம், வாழைச்சேனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகரியின் முழு ஆதரவினையும் கொண்டிருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஜெயத்தின்மேல் மக்களால் கொடுக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் அப்பொலீஸ் அதிகாரியினால் கண்டுகொள்ளப்படவில்லையென்று தெரியவருகிறத்து.

வாழைச்சேனை மக்களின் புகாரின்படி வாகரையிலிருந்து செங்கலடி வரையான பகுதிகளில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் இயங்கிவரும் கொலைக்குழு பகுதிவாரியாக பிரித்து கொள்ளைகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. வாகரைப்பகுதியில் ஜெயமும், கறுவாக்கேணியில் அஜித்தும், கண்ணகிகிராமத்தில் ஜெயந்தனும் வாழைச்சேனை பொலீஸ் நிலைய அதிகாரியின் துணையுடன் கொள்ளைகள், கொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உள்வீட்டு முரண்பாடுகளில் சிக்கியிருக்கும் பிள்ளையான் கொலைக்குழுவின் மேற்படி ஆயுததாரிகள், கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தினை தமக்குள் பங்குபோடுவதில் முரண்பட்டுவருவதாகவும், ஒருவர் நடத்தும் கொள்ளைபற்றி மற்றையவர் காட்டிக் கொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கோல்மூட்டல்களால் ஜெயத்தின் ஆதரவாளர்கள 15 பேர் இதுவரையில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

TMVP Jeyamக்கான பட முடிவுகள்

இதேவேளை கிழக்குமாகாண முதலமைச்சராக இருக்கும் கொலையாளி பிள்ளையான் 2005 ஆம் ஆண்டில் வெள்ளைவான்களில் வலம்வந்து பெருமளவு இளைஞர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியதுடன் இவர்களைப் பாவித்தே கொள்ளைகள், கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது இங்கே குறிப்பிடத் தக்கது. இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவத்தில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் 7 பேர் கடத்தப்படு ஆண்கள் சித்திரவதையின் பின் கொல்லப்பட, பிரேமினி தனுஷ்கோடி எனும் கணக்காய்வாளர் பிள்ளையான் கொலைக்குழுவின் 7 பேர் அடங்கிய மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துண்டு துண்டுகளாக வெட்டி வீசியெறியப்பட்டது நினவிருக்கலாம்.

premini TROக்கான பட முடிவுகள்

பிள்ளையான் முதலமைச்சர் ஆனதன் பின்னர், 2008 ஆம் ஆண்டு குறைந்தது 75 பேரிடம் வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தலா 40,000 ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நவம் என்றழைக்கப்படும்  கந்தவனம்  நவரத்திணலிங்கம் எனும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியிடம் இவ்வாறு பணத்தினைக் கொடுத்து ஏமாந்த இவர்கள் பொலீஸில் இந்த முறைப்பாட்டினை வைத்திருக்கிறார்கள்.

20 minutes ago, பெருமாள் said:

7.7k views இவ்வளவு பேர் பார்த்து இருக்கினம் தேவையில்லாமல் கருத்தை வைத்து திரியை அணைக்க கூடாது பாருங்கோ.

நான் அடக்கியே வாசிக்கிறன். பொல்லைக் குடுத்து அடிவாங்கக் கூடாது கண்டியளோ ?!

 

13 minutes ago, குமாரசாமி said:

நான் இதாலைதான் இந்த திரியிலை கருத்து எழுதவேயில்லை.எல்லாம் முடிய வைச்சு செய்வம் எண்டு யோசிச்சு இருந்தனான். நேற்றும்  இது பற்றி ஒரு குமுறல் திண்ணையிலை நடந்தது பாக்கேல்லையோ?

இப்பவெல்லாம் முள்ளிலை விழுந்த சேலையை வெளியிலை எடுக்கிற மாதிரி.......கவனமாய் இருக்க வேணும்.

அண்ணை, நீங்களும் தெரிஞ்சத எழுதுங்கோ, திரியும் நல்லாப் போகும். 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, ஆனி , 2010

கல்முனையில் கருணா துணைராணுவக்குழுவும், பிள்ளையான் கொலைக்குழுவும் அரசியல்வாதிகளுக்காகக் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள் 

SLMC HARISக்கான பட முடிவுகள்

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் ஹரிஸ் கருணா துணைராணுவக் குழுவும், பிள்ளையான் கொலைக்குழுவும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு கல்முனையில்  ஆட்களைக் கடத்திப் பணம் பறிப்பதிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொள்ளைகளில் ஈடுபடும் துணைராணுவக் குழுவினர் தொடர்பான விபரங்களை தாம் பொலீஸாருக்கு வழங்கியபொழுதும், அவர்கள் அதுதொடர்பாக நடவடிக்கை எதனையும் எடுக்க முன்வரவில்லையென்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை கல்முனைப் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில், தாம் இந்த துணைராணுவக் கொள்ளையர்களைக் கைதுசெய்தபோதிலும் அரச உயர்மட்டத்திலிருந்து வரும் அழுத்தத்தினால் அவர்களை விடுதலை செய்யவேண்டி ஏற்படுவதாகக் கூறியிருக்கிறார்.

ஹரிஸ் அவர்கள் மேலும் கூறுகையில், இதே துணைராணுவக் குழுவினரே கடந்த காலத் தேர்தல்களிலும் வாக்குமோசடி மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்றும், அரச நிகழ்வுகளிலும், கல்விசார் நடவடிக்கைகளிலும்  அநாவசியமாகத் தலையிட்டு மக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

 கல்முனைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா மேலும் இதுபற்றிக் கூறுகையில், கடந்த இருவாரங்களில் மட்டும் கல்முனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களிலும், பொதுமக்கள் வீடுகளிலும் இக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகளில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகள், பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Iniya Bharathiக்கான பட முடிவுகள்

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும் கருணா துணைராணுவக் குழு முக்கியஸ்த்தருமான இனியபாரதியே இப்பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், படுகொலைகள், கப்பம் கோரல்கள் மற்றும் கொள்ளைகளுக்குப் பொறுப்பாக விளங்குவதாகத் தெரியவந்திருக்கிறது. தேர்தல் காலத்தில் பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட்ட இனியபாரதி தற்பொழுது இப்பகுதியில் சிவில் நடவடிக்கைகளிலும், கல்விசார் நடவடிக்கைகளிலும் தலையீடு செய்வதாக அதிகாரிகள் முறையிட்டு வருகின்றனர்.

http://4.bp.blogspot.com/_otWn2PlEOdY/RuuJdJKuG4I/AAAAAAAABBU/6rDspiSxIKc/s1600/tmvpkaruna-pillaiyan-iniyaparathinew1.jpg

இனியபாரதியின் அடாவடித்தனம் குறித்து முறைப்பாடுகளை அம்பாறை வாழ் தமிழ்பேசும் மக்கள் பொலீஸாரிடம் கொடுத்திருக்கின்றனர்.

Iniyapaarathi.jpg

பொலீஸாருக்கு இனியபாரதி மற்றும் அவருடன் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபடும் நபர்களது விபரங்கள் தெரிந்தபொழுதும்கூட, மகிந்த ராஜபக்ஷவின் தலையீட்டினால் அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் தாம் இருப்பதாக விசனம் தெரிவித்திருக்கின்றனர். வெளிப்படையாக வாகனங்களில் ஆயுதங்கள் சகிதம் உலாவரும் இனியபாரதியும், அவரது சகாக்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சங்கடங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்திவருவதாக பொலீஸாரும் மக்களும் தெரிவிக்கின்றனர்.


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரஞ்சித் said:

இதுவரை எவருமே இத்திரியில் கருத்து எழுதாததால் , இதனை எவருமே கவனத்தில்க் எடுப்பதில்லையென்று எண்ணிவந்தேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி

 

 

எல்லோரும் வாசிக்கிறோம் 
அங்கின இங்கின குத்தி பச்சை முடிந்து போவதால் 
எல்லாவற்றுக்கும் பச்சை போடா முடிவதில்லை.

நாங்கள் வாசிக்கிறோமோ இல்லையோ 
வாசிக்க வேண்டியவர்கள் வாசிக்கிறார்கள் 
அதுதான் திண்ணை பாண் போரானை மாதிரி கொதிக்குது 
மாவை குழைத்து திணையில் வைத்து பாண் வெத்துக்கலாம் போல இருக்கு 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரஞ்சித் said:

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, மார்கழி , 2009

அம்பாறையில் கருணா துணைராணுவக்குழுவுக்கும் பிள்ளையான் கொலைக்குழுவிற்குமிடையே மோதல்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் சுதந்திர ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கான தேதல் பிரச்சாரத்திற்கென்று நான்கு வாகனங்களில் பயணித்த சுமார் 50 பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகளுக்கும், அப்பகுதியில் அமைந்திருந்த சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் காவலில் இருந்த கருணா துணைராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

திருக்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினருகில் நடந்த இந்த மோதலில் கருணா துணைராணுவக் குழுவினருக்கு இனியபாரதி எனும் ஆயுததாரியே தலைமைதாங்கியதாகத் தெரியவருகிறது. தாக்குதலில் காணாமல்ப் போன தமது சகாக்களை தேடிச்சென்ற பிள்ளையான் குழுவினரின் வாகனத்தை உள்ளேயிருந்தவர்களுடன் சேர்த்து கருணா துணைப்படையினர் தீயிட்டுக் கொழுத்தியதாகவும் தெரியவ்ந்திருக்கிறது.

மோதலில் கடுமையாகக் காயப்பட்ட பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்கள் மூவரின் விபரங்கள் வருமாறு,

சிவராஜா, கேதீஸ்வரன், ஜீவகுமாரன்

மகிந்தவுக்கான பிரச்சாரத்திற்காக அக்கரைப்பற்றிலிருந்து மூன்று வான்களிலும் ஒரு ஜீப் வண்டியிலும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் அம்பாறை நோக்கிப் பயணித்தவேளையிலேயே இம்மோதல் நிகழ்ந்திருக்கிறது.
 மோதலில் ஈடுபட்ட மற்றைய தரப்பான கருணா துணைப்படை ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பதுடன் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாகவும் இணைந்திருக்கிறது.

பிள்ளையான் குழுவினரால் மாலை தமது காணாமல்ப்போன சகாக்களைத் தேடி அனுப்பப்பட்ட இன்னொருவாகனம் உள்ளிருந்தவர்களுடன் சேர்த்து திருக்கோயில்சந்தியில் உள்ள இடுகாட்டினருகில் எரிக்கப்பட்டது.
 

உறைக்க கூடிய மாதிரி உண்மைகளை பதிவு செய்து கொள்வதே நன்று 
எமக்கு இரை  மீட்டலாக இருந்தாலும் இப்படி பதிவு செய்து வைப்பது அவசியமான ஒன்று.

எல்லோரும் வந்து கருத்து எழுத தொடங்கினால் 
அந்த சந்தர்ப்பத்துக்கு ஒரு கோஸ்ட்டி மதில் மேல் பூனையாக காத்திருக்கிறது 
அப்படியே வந்து குமுறி கூத்தாடி திரியை எவ்வாறு அணைப்பது என்பது 
அவர்கள் புத்தியில் இந்த திரி தொடங்கிய நாளில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் 
ஒரு எண்ணம் அதுக்கு நாம் வழி செய்து கொடுக்கல் ஆகாது 

எப்படி பார்த்தாலும் தமிழனாக எமக்கு அவமானம் மட்டுமே 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, ஆனி 2010

துணைராணுவக் குழுத் தலைவர் கருணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

18_06_2010_karuna_jaffna_visit_01.jpg

இலங்கை ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணைராணுவக்குழுவொன்றின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த வியாழன் அன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். மகிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்றத்தில் உதவியமைச்சராக துணைராணுவக் குழுத் தலைவர் தெரிவுசெய்யப்பட்டபின் நடக்கும் முதலாவது யாழ்ப்பாண விஜயம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது.

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த துணை ராணுவக் குழுத் தலைவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் குறித்தே கவனம் செலுத்த வந்தேன் என்று கூறினார். இதன்போது முஸ்லீம் நல்வாழ்வுக் கழகம் மற்றும் அரச அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

18_06_2010_karuna_jaffna_visit_02.jpg

இதேவேளை யாழ் சிவில் சமூக அமைப்புக்கள் இவரது யாழ்ப்பாண வருகைபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், கருணா இறுதியாக யாழ்ப்பாணத்தில் நின்றது 1990 ஆம் ஆண்டு முஸ்லீம்களை யாழ்க்குடா நாட்டிலிருந்து வெளியேற்றும் புலிகளின் நடவடிக்கையின்போதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

முதலில் பொரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கருணா அங்கு முஸ்லீம் சமூக நலக் கழகத்தைச் சந்தித்ததுடன் பின்னர் யாழ்ப்பாண செயலகத்தில் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்த தேவையான நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்.

இங்கு பேசிய கருணா, முஸ்லீம்கள் தமது மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை இலங்கை அரசின் அனுமதியுடன் செல்வந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க பலமுறை முயன்றபோதும் அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=31995

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, புரட்டாதி 2010

இலங்கை அரசாங்கமே ஆட்களைக் கடத்துகிறது - கொலைக்குழுத் தலைவர் பிள்ளையானின் பிரச்சாரச் செயலாளர் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் இயங்கிவரும் ராணுவ புலநாய்வுப்பிரிவின் கொலைக்குழுவான பிள்ளையான் குழுவின் பிரச்சாரப் பொறுப்பாளர் கொம்மாதுறைப் பகுதியில் பொதுமக்களுடன் நடத்திய சந்திப்பொன்றில் பேசும்பொழுது, மட்டக்களப்பில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நடந்துவரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இவரது கூற்றுப்பற்றிக் கருத்துக் கூறிய மட்டக்களப்பு மக்கள் பிள்ளையானின் கொலைக்குழுவும், இன்னொரு துணைராணுவக் குழுவான கருணா குழுவுமே மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அரசின் உயர்மட்டத்தினரின் ஆசீர்வாதத்துடனேயே இது நடப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இதுபற்றிக் கூறிய மக்கள் கடத்தல்களை அரசுதான் பொறுப்பெடுக்கவேண்டும் என்று கூறும் இந்த துணைராணுவக் குழுக்களின் தலைவர்கள் அதே அரசில் முதலமைச்சராகவும் இன்னொருவர் பிரதியமைச்சராகவும் இருந்துகொண்டு அரசுதான் பொறுப்பெடுக்கவேண்டும் என்று கூறுவது விசித்திரமானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பணத்திற்காக சிறுவர்களைக் கடத்திக் கொல்லும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரும் கருணா மற்றும் பிள்ளையான், தம்மீது மக்களுக்கு ஏற்பட்டுவரும் அதிருப்த்தியைத் திசை திருப்புவதற்காக தமது உறுப்பினர்களையே கடத்திவைத்துக்கொண்டு ராணுவப் புலநாய்வுத்துறை அவர்களைக் கடத்திச் செல்வதாக நாடகம் ஆடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=32624

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2010

துணை ராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை ராணுவத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறையிட்ட மட்டக்களப்பு மக்கள் 

LLRC sri lankaக்கான பட முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைக்குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு போன்றவை இம்மாவட்டத்தில் மேற்கொண்டுவரும் ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்பன பற்றி பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட கண்துடைப்பு அமைப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டுமே குறைந்தது 490 கடத்தல்கள் , காணாமற்போதல்கள்  மற்றும் படுகொலைகள் பற்றிய முறைப்பாட்டினை இந்தக் கொமிஷனிடம் செங்கலடியில் வைத்து மக்கள் கையளித்தனர். 

இதேவேளை இந்த விசாரணைகளை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் மட்டுமே தம்மால் விசாரிக்கமுடியும் என்று இந்த கண்துடைப்பு அமைப்பு பிடிவாதமாக மறுத்துவருவதென்பது, இனக்கொலையொன்றினைத் திட்டமிட்டு மறைக்கும் செயலே என்று காணமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.

karunaa paramilitaryக்கான பட முடிவுகள்

துணைராணுவக் குழுக்களின் உதயத்தின்பிறகு மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் பற்றியும், காணாமற்போதல்கள் பற்றியும் விசாரிக்க மறுக்கும் இந்த குழு, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ராணுவத்தின் தேவைக்காக கருணாவும், பிள்ளையானும் கடத்திச் சென்றதைப் பற்றி விசாரிக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த சாட்சிகள், தம்மை ராணுவப் புல்நாய்வுப்பிரிவு என்று அடையாளம் காட்டிக்கொண்டு ஆட்களைக் கைதுசெய்யும் நபர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை அருகிலிருக்கும் பொலீஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுதலை செய்தபின்னர், துணைராணுவக்குழுக்கள் அன்றிரவே வந்து அதே இளைஞர்களைக் கடத்திச் செல்வதாக சாட்சியமளித்தனர்.


வேறொரு சாட்சி இதுபற்றிக் கூறுகையில் ராணுவப் புலநாய்வுத்துறை என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் பல லட்சம் ரூபாய்களைத் தந்தால் உங்களது பிள்ளைகளை விடுவிப்போம் என்றோ அல்லது கடத்தியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவோம் என்றோ கூறி மக்களிடம் கப்பம் அறவிடுவதாகவும் தெரிவித்தனர்.

துணைராணுவக் குழுக்களான கருணாவும் பிள்ளையானும் கிரான், வாழைச்சேனை, வந்தாறுமூலை மற்றும் வாகரை பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவ்வாறு கடத்திசெல்;ல்ப்படுபவர்கள் பற்றி முறைப்பாடு செய்தால் குடும்பத்தில் மீதமுள்ளோரையும் கடத்துவோம் என்று மிரட்டியதாகவும் சாட்சி சொல்லப்பட்டிருக்கிரது.

karunaa paramilitaryக்கான பட முடிவுகள்

ராணுவப் புலநாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக் குழுக்களினால் மயிலந்தனை, புல்லுமலை, தோணித்தாட்டமடு, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, வாகரை ஆகிய மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் இருந்தும், திராய்க்கேணி, உடும்பன்குளம், சின்னவத்தை, கண்ணபுரம் கொலனி 35, கரவாக்கு, வீரமுனை மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய அம்பாறை மாவட்டக் கிராமங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இனவழிப்பு அரசாங்கத்தின் கட்டளையின்படி  கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஐப்பசி 2010

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும்  ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த மறுக்கும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிள்ளையான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களாலும், முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் தமிழர்களின் நிலங்களைக் காப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக மறுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் செல்வராசா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தொடர்ச்சியாக இதுபற்றி தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் முறைப்பாடுகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கும் பிள்ளையான், தமிழர்களது காணிகள் பறிபோவதை மெளனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.


தமிழருக்கெதிரான ஆட்கடத்தல்கள, கப்பம் கோருதல்கள், காணாமற்போதல்கள், படுகொலைகள என்று பாரிய வன்முறைகளை பிள்ளையானினதும் கருணாவினதும் கொலைக்குழுக்கள் தமிழ் மக்கள் மேல் ஏவியிருக்கும் நிலையில், தமிழர்களின் நிலம் இன்று சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், தமிழர்கள் எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அரச சார்பற்ற சில தொண்டு நிறுவனங்களாலும், சில தன்னார்வ அமைப்புக்களின்  உதவியினாலும் அன்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியிருப்பது சாத்தியப்பட்டிருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

மிகக் கொடூரமான யுத்த அழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு வாழ் தமிழர்களுக்கான எந்த நிவாரணத்தையும் இந்த அரசாங்கம் இதுவரை வழங்க மறுத்துவருவதுடன், அவர்களிடம் மீதமாக எஞ்சியிருக்கும் நிலத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது அநியாயம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=32799

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.