Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன?

 
  • கார்த்திகேசு குமாரதாஸன்

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.”

“உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா.

%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%“1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார்.

“பனிப்போரின் இடை நடுவில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையிலான பிளவுகளால் ஒருமித்த கருத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தன. அதனால் சோவியத் ஒன்றியத்தின் டாங்கிகள் ஹங்கேரிக்குள் நகர்ந்தன. ஐ. நா. கைகட்டி பார்த்து நின்றது. அமெரிக்க விமானங்கள் வியட்நாம் கிராமங்களில் நேபாம் குண்டுகளைப் போட்டன.”

“பனிப்போருக்குப் பின்னரும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நீடித்த பிளவுகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐ. நாவின் திறனை கொண்டு நடத்தின.

“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்

உலக நெருக்கடிகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்களை விமர்சிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.

சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்க ப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை தவிர்க்குமாறு அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்தார்.

இறுதிப்போரை நிறுத்துவதற்கு ஒபாமா தலையிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு ஈழத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய நாடுகள் மத்தியிலும் காணப்பட்டது.

தற்சமயம் தனது நூலில் இலங்கை இனப் படுகொலையை ஐ. நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது, ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

 

https://thinakkural.lk/article/91781

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

தற்சமயம் தனது நூலில் இலங்கை இனப் படுகொலையை ஐ. நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது, ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

அவ்வப்போது வலியை மயிலிறகால் தடவி ஆறுதல்படுத்த முயல்கிறாக்களே தவிர வலிக்குக் காரணமான நோய்க்கு மருந்துதர அவர்களால் முடியவில்லை, நாங்களாக மருந்து தேடிக்கொண்டாலும் அதனை ஏற்பதற்கு மனமில்லை.😫

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தில் ஒரு வரிதான் சிறிலங்காவைப் பற்றி இருக்காம்! அதையே ஊதிப் பெரிசாக்கிவிட்டிருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புத்தகத்தில் ஒரு வரிதான் சிறிலங்காவைப் பற்றி இருக்காம்! அதையே ஊதிப் பெரிசாக்கிவிட்டிருக்கின்றார்கள்!

போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போறதுக்கெல்லாம் ஒரு ஆராச்சி, ஒரு ஆய்வுக் கட்டுரை... 😏

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புத்தகத்தில் ஒரு வரிதான் சிறிலங்காவைப் பற்றி இருக்காம்! அதையே ஊதிப் பெரிசாக்கிவிட்டிருக்கின்றார்கள்!

 

6 minutes ago, Kapithan said:

போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போறதுக்கெல்லாம் ஒரு ஆராச்சி, ஒரு ஆய்வுக் கட்டுரை... 😏

 

அது தான் எங்களின் மிகப்பெரிய பலகீனம்.சுய இன்பம்.(இது வேறை)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

புத்தகத்தில் ஒரு வரிதான் சிறிலங்காவைப் பற்றி இருக்காம்! அதையே ஊதிப் பெரிசாக்கிவிட்டிருக்கின்றார்கள்!

எந்தப் பெரிய வீட்டையும் கொழுத்த ஒரு சிறிய தீக்குச்சி காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் மாதிரி தானே இந்த கட்டுரையாளரும் தமிழர்களை ஏமாற்றுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புத்தகத்தில் ஒரு வரிதான் சிறிலங்காவைப் பற்றி இருக்காம்! அதையே ஊதிப் பெரிசாக்கிவிட்டிருக்கின்றார்கள்!

Even after the Cold War, divisions within the Security Councilcontinued to hamstring the U.N.’s ability to tackle problems. Itsmember states lacked either the means or the collective will toreconstruct failing states like Somalia, or prevent ethnic slaughter inplaces like Sri Lanka. Its peacekeeping missions, dependent onvoluntary troop contributions from member states, were consistentlyunderstaffed and ill-equipped. At times, the General Assemblydevolved into a forum for posturing, hypocrisy, and one-sidedcondemnations of Israel; more than one U.N. agency becameembroiled in corruption scandals, while vicious autocracies likeKhamenei’s Iran and Assad’s Syria would maneuver to get seats onthe U.N. Human Rights Council. Within the Republican Party, theU.N. became a symbol of nefarious one-world globalism.Progressives bemoaned its impotence in the face of injustice. இவ்வளவுதான் அவர் சொல்லியுள்ளார் 

மற்ற ஓர்  இடத்தில் வேறு ஒரு பதம் பாவித்துள்ளார் எங்களை குறிப்பிட அந்த பதம் இங்குள்ள தமிழ் எதிர் தேசியவாதிகளுக்கு உவப்பானது அதை தவிர வேறு ஒன்றும் இல்லை .தேவையில்லாமல் அமேசனில் 15.99 அழுது கொண்டது யாருக்கும் தேவையென்றால் அமேசன்  இரவல் திட்டத்தில் என்னால் அனுப்ப முடியும் .

 

ஓகேயா பரா மனம் ஆறனும் இன்னும் ......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அரசியல்வாதிகள் மாதிரி தானே இந்த கட்டுரையாளரும் தமிழர்களை ஏமாற்றுகிறார்.

அவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை நாமும் பெரும்பாலானோர், எமக்கு உவப்பான செய்திகளை மட்டும் கேட்டு இன்பம் அடையும் echo chamber இல் இருப்பதைதானே விரும்புகிறோம்.

கொஞ்சம் எமது பார்வைக்கு மாறாக எழுதினாலும் விசனப்படுகிறோம்.

ஆகவே அவர்களும் நமக்கு விரும்பிய விதத்தில் தோசையை வார்த்து விட்டு போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை நாமும் பெரும்பாலானோர், எமக்கு உவப்பான செய்திகளை மட்டும் கேட்டு இன்பம் அடையும் echo chamber இல் இருப்பதைதானே விரும்புகிறோம்.

கொஞ்சம் எமது பார்வைக்கு மாறாக எழுதினாலும் விசனப்படுகிறோம்.

ஆகவே அவர்களும் நமக்கு விரும்பிய விதத்தில் தோசையை வார்த்து விட்டு போகிறார்கள்.

வணக்கம் கோ சே. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ... கண்டது மகிழ்ச்சி. 😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வணக்கம் கோ சே. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ... கண்டது மகிழ்ச்சி. 😀

வணக்கம் கற்பிதன். உங்களை கண்டது எனக்கும் மகிழ்சியே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

. Its member states lacked either the means or the collective will to reconstruct failing states like Somalia, or prevent ethnic slaughter in places like Sri Lanka.

நன்றி பெருமாள். ஆக இம்புட்டுத்தான் புத்தகத்தில் இருக்கு!

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

எந்தப் பெரிய வீட்டையும் கொழுத்த ஒரு சிறிய தீக்குச்சி காணும்.

புத்தகத்தில் இருக்கிற வசனத்தைப் பார்த்தால் தீக்குச்சி தண்ணிக்குள் அமுங்கி நமுத்துப்போய் அல்லவா இருக்கு!!

Tamils for Obama என்று ஒரு அமைப்பு இருந்து எதையும் செய்யாமலேயே இப்ப காணாமலும் போய்விட்டது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.மீது குற்றத்தை சுமத்தி, தனது பொறுப்பிலிருந்து ஒளிந்து கொள்ளப்பார்க்கிறார் ஒபாமா.

1-154-696x348.jpg
 75 Views

‘உறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்கிற தனது நினைவுகளின் தொகுப்பு நூலில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து எழுதும் போது, Ethinic Slaughter என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் ‘இனப்படுகொலை’ என்பதற்கு, Genocide என்று சர்வதேச அளவில் பயன்பாட்டிலுள்ள வார்த்தைப் பிரயோகத்தை ஒபாமா தவிர்த்துள்ளார்.

ஐ.நா சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச்சபையின் உறுப்புநாடு அமெரிக்கா. அந்த சபை இயங்குவதற்கான அதிகளவு நிதி வழங்கும் முதன்மையான நாடு அமெரிக்கா. பின்னாளில் அதற்காக நிதிப்பங்களிப்பை டிரம்ப் குறைத்துக் கொண்டார் என்பது வேறு விடயம்.

இவரின் ஆட்சிக்காலத்திலேயே இது நடந்தது.

ஐ.நா சபை என்பது அமெரிக்காவைவிட பலம் பொருந்திய அமைப்பு என்று சொல்ல வருகிறாரா? அல்லது ஐ.நா.சபை என்பது எண்ணிக்கையில்  சிறுபான்மையாகவுள்ள தேசிய இனங்களை ஒடுக்கும் நாடுகளின் அதியுயர் சபை என்று நிறுவ வருகிறாரா?.

எதையும் மேலோட்டமாக சொல்லிவிட்டு, வரலாற்றின் இருண்ட பக்கங்களிலிருந்து தாம் அந்நியமாகி நிற்பது போல் ஒளிந்துகொள்ள முடியாது. 97 இல் விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க கொண்டு வந்த தடை, ஒபாமா காலத்திலும் நீக்கப்படவில்லை.

புலிகள் இருந்த சமாதான பேச்சுவார்த்தை மேடைகளில் பங்கு கொள்ளவும் அமெரிக்கா மறுத்தது. இந்த ‘பூகோள அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பது போலிருக்கிறது ஒபாமாவின் கதை.

அவர் கட்சி ஆட்சிதானே இனி அமெரிக்காவில் வரப்போகிறது.
பார்ப்போம்.

-இதயச்சந்திரன்-

 

https://www.ilakku.org/ஐ-நா-மீது-குற்றத்தை-சுமத்/

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

அவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை நாமும் பெரும்பாலானோர், எமக்கு உவப்பான செய்திகளை மட்டும் கேட்டு இன்பம் அடையும் echo chamber இல் இருப்பதைதானே விரும்புகிறோம்.

கொஞ்சம் எமது பார்வைக்கு மாறாக எழுதினாலும் விசனப்படுகிறோம்.

ஆகவே அவர்களும் நமக்கு விரும்பிய விதத்தில் தோசையை வார்த்து விட்டு போகிறார்கள்.

மிகச் சரியாக சொன்னீர்கள். அவர்களும் எமக்கு ஏற்ற மாதிரி நல்ல இனிப்பான தோசை சுட்டு கொடுத்து தங்கள் வியாபாரத்தை வளர்த்து கொள்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவு ஒபாமாவின் "A Promised Land" என்ற நூலின் தலைப்பு சம்பந்தமானது.  இதற்கு தமிழில் “உறுதியளிக்கப்பட்ட நிலம்” என்று நேரடியாக மொழிபெயர்ப்பு செயப்பட்டிருந்தாலும் ஒபாமாவின் தலைப்புக்கு வேறு ஆழமான அர்த்தங்களும்  உண்டு.

ஒபாமா குறிப்பிட்டது அமெரிக்காவை ஆகவே  a land of opportunity where one expects to find a better  life அல்லது a greatly desired place where one expects to find greater happiness or fulfilment என்ற பொருளில் (தன்னை நம்பி) "வந்தாரை  வாழவைக்கும் நாடு" என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும்.

"A Promised Land" என்ற வார்த்தை பைபிள்(Bible) நூலிலும் காணப்படுவதால்  அதற்கு அங்கு சொர்க்கம் (Heaven) என்றும் பொருள்படும். ஆகவே ஒபாமாவின் நூல் தலைப்புக்கு "சொர்க்க பூமி" என்றுகூட அர்த்தம் கொள்ளலாம்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.