Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

இதெல்லாம் இங்க கதைக்கப்படாது ரஞ்சித். மெளனமாகப் பார்த்து அழவேண்டியதுதான்.

வேறொரு திரியில் யாரோ கூறிய நினைவு ""வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா மிக முக்கிய பங்காளி"". நாங்கள் நன்றி கூற வேண்டும்""

இருக்கிற கோவணமும் உருவப்பட்ட பின்னர்.. ? 

யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி..?

😢

3 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

இந்தாள் வேற...

😏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

19 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

7 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். சிங்களவருடன் ஒரே நாட்டில்த்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவனுக்குக் கீழ் அடிமையாகவா அல்லது அவனுக்குச் சமமாகவா என்பதுதான் கேள்வி. மற்றும்படி, மாடு, தீவணம், பாலுற்பத்தி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. 

நான் ஏன் தமிழ்நாட்டிற்குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும்? எனது நாடும் இலங்கையின் வடக்குக் கிழக்கே. என்ன, அது இப்போது அவனது ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கிறது, அதனால் அது எனது தாய்நாடு இல்லையென்று ஆகிவிடுமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

ஆமாம் ஆமாம். இவர் அபிவிருத்தி பெற்ற நாயகன். எல்லாம் விளங்கினவர். சொறீலங்காவில் தமிழர்களின் நிலத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து அபிவிருத்தி என்ன ஒரு புல்லையும் புடுங்க முடியாது.

10,000 ரூபா நோட்டும் வந்திட்டுதாம். நல்ல அபிவிருத்தி. இராணுவச் செலவு மொத்த வருமானத்தில்.. 30 சதவீதத்தை விழுங்கும் சொறீலங்கா வல்லரசின் அபிவிருத்தி நாயகன் தாங்கள் என்பதில் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்ளுங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள்; கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர். 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள். அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். 

இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை. 

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/155221

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாதவூரான் said:

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

1 hour ago, Kapithan said:

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

காப்பி , எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

😷பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று. இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

காப்பி ,

1)எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

2) பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று.

3) இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

Just now, Kapithan said:

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

Just now, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

Just now, Kapithan said:

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

அது உங்கள் முடிவு. வாழ்க்கையின் தனிப்படட விவகாரங்களில்  நான் தலையிடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

உண்மையில் இதுதான் alzheimer. தேடிப்படியுங்கள் - புரியும். நீண்டகால நினைவுகள் விபரமாகவும் தெளிவாகவும் இருக்கும். குறுகிய கால      நினைவுகள் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்.

அப்படி நான் எழுதவில்லை. உண்மையை எழுதி நேர்மையாக கருத்து பரிமாறுவது யாழ்களத்தின் மதிப்புக்கு பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.