Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்பும் பெருமாளின் கருத்து நீக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து தெரிகிறது நிர்வாகம் எதை, யாரை  விரும்புகிறது என்று! விரும்பினால் என்னையும் தூக்கலாம். அதற்காக நாம் நமது கருத்துக்களை எழுதாமல் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

இங்கு 1994 இல் யாழில் இருந்தவர்கள் ஒருவர் கூட இல்லையா...?

வெடி சத்தம் கேட்கமுதல் ஓடியாச்சு என்று மற்றவர்களைப் பார்த்து எப்படி இவர்களால் கூற முடிகிறது?

கோசான் கூட சந்தேகத்தில் எழுதுகிறார்.

வணக்கம் மீரா,

நான் சந்தேகத்தில் எழுதவில்லை. 1994 இல் யாழ் மாவட்டத்தில் தேர்தலா? என்ற உங்கள் கேள்வியை அந்த வருடம் தேர்தல் நடந்ததா என்று கேட்கிறீகள் என விளங்கி கொண்டேன். அதனால்தான் அப்படி எழுதினேன்.

நான் அறிந்த/சொந்த அனுபவத்தில் - 1994 பொதுத்தேர்தலை நடத்த புலிகள் அனுமதித்தால் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதியிலும் நடத்தலாம் என்று அரசு “வெறும் கண்துடைப்புக்காக” ஒரு அறிக்கை மட்டும் விட்டது. 

சந்திரிகாவே தமிழர் வாக்குகளை வெல்லும் சாத்தியம் அதிகம் என்பதால் அத்தோடு இதை யு என் பி அரசு விட்டு விட்டது.

புலிகள் அதற்கான பதிலை வழங்கவே இல்லை என நினைக்கிறேன்.

அல்லது பொருளாதார தடையை நீக்காமல் தேர்தல் மட்டும் சாத்தியமில்லை போன்றதொரு பதிலை கொடுத்தார்கள் எனவும் நினைக்கிறேன்.

மன்னிக்கவும் சரியாக நினைவில்லை.

 எம்பிகளை அனுப்பி அரசியல் ரீதியாகவும் போராட்டத்தை சமகாலத்தில் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை அவர்கள் ஏற்காத நாட்கள் அவை.

வவுனியாவில், மன்னாரில் அரச கட்டுபாட்டு பகுதியில், புலிகள் பகுதி மக்களுக்கும் கொத்தணி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால் யாழில் தீவு பகுதி-குடாநாடு இடையே யுத்த சூனிய பிரதேசம் ஊடாக போக்குவரத்து என்றுமே இல்லை என்பதால் பெயருக்கு தீவு பகுதியிலும் கொத்தணி நிலையங்களை அமைத்தது அரசு.

ஆகவே புலிகள் பகுதியில் இந்த தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கவும் இல்லை புலிகள் பகிஸ்கரிக்கவும் இல்லை

இதுதான் என் விளக்கம்.

ஆனால் துல்பன் சொல்ல வந்ததை நான் பின்வருமாறு விளங்கி கொள்கிறேன்.

2001 இல் புலிகள் கைக்கொண்ட உத்தியை அதற்கு முன்பும் பின்பும் கைக்கொண்டிருக்க வேண்டும்.

1 hour ago, MEERA said:

https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1994.pdf
 
https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/presidential-elections/PresidentialElections1994.pdf

ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கூறுவது முழுப் பொய்....

தகவல் தவறுக்கு மன்னிக்கவும் மீரா.  எனது தகவல் தவறு தான். சந்திரிகா பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பி இருந்த புலிகள் அத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பை தடுக்காத்தால் பெருவாரியான தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர் என்பதே உண்மை. தேர்தலில் சந்திரிக்காவுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தனர் என்பது உண்மை.  

ஆனால் யாழ் பாராளுமன்ற தேர்தலில் மக்களை புறக்கணிக்குமாறு கூறியது அரசியல் தவறு.  தமிழ் தேசியத்திற்கு ஆதரவான சுயேட்சை குழுக்களை மறைமுகமான தேர்தலில் இறக்கியிருந்தால் டக்லஸால் யாழ்மாவட்டத்தின் அனைத்து இடங்களையும்  8  - 10  என்ற ஒற்றை இலக்க வாக்குகளுடன் எடுதிருக்க முடியாது. இதுவே எனது முக்கிய  கருத்து.  தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அனுமதி அளிக்கபட்டது என்றது எனது ஞாபக சக்தியின் பலவீனம். சுட்டிக்காட்டிதற்கு நன்றி மீரா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இங்கு 1994 இல் யாழில் இருந்தவர்கள் ஒருவர் கூட இல்லையா...?

வெடி சத்தம் கேட்கமுதல் ஓடியாச்சு என்று மற்றவர்களைப் பார்த்து எப்படி இவர்களால் கூற முடிகிறது?

கோசான் கூட சந்தேகத்தில் எழுதுகிறார்.

சுயேட்சைக்குழு 2 (டக்கியின் கட்சி) ~9000 வாக்குகள் தீவகப் பகுதியில் அந்த 1994 தேர்தலில் எடுத்ததாக மீரா இணைத்த அட்டவணையிலேயே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு 9 ஆசனங்கள் கிடைத்தன அந்தத் தேர்தலில்.

யாழில் பதிவிருந்த ஆனால் புலிகளால் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் ~1000 வாக்குகளால் 1 முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியும் தெரிவானார். இவையெல்லாம் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் 1994 இல் நடந்தவை. 

1994 இல் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன். உள்ளூர் செய்திகளில் கூட இவை பற்றி எதுவும் பிரதான செய்தியாக வரவில்லை. வார இறுதியில் மட்டும் யாழுக்கு அனுமதிக்கப் பட்ட வீரகேசரியில் செய்திகள் வந்தன.

1 hour ago, MEERA said:

இங்கு 1994 இல் யாழில் இருந்தவர்கள் ஒருவர் கூட இல்லையா...?

வெடி சத்தம் கேட்கமுதல் ஓடியாச்சு என்று மற்றவர்களைப் பார்த்து எப்படி இவர்களால் கூற முடிகிறது?

கோசான் கூட சந்தேகத்தில் எழுதுகிறார்.

மீரா, அக்காலப் பகுதியில் நான் அங்கிருந்தேன். முதன் முதலில் ஈபிடிபி 9 பாராளுமன்றத் உறுப்பினர்களை முதன் முதலில் பெற்றுக் கொண்டது 1994 இல் தான். தீவுப்பகுதியில் விழுந்த 50 இற்கும் குறைவான வாக்குகளினாலேயே பா.உ ஆன கதையெல்லாம் நடந்தது. இதில் வெற்றிபெற்றுப் போன அற்புதன் (தினமுரசு) எனது நெருங்கிய உறவு என்பதால் இந்த விடயம் நல்லா நினைவில் இருக்கின்றது. 

94 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலை புலிகள் பகிஸ்கரிக்க கோரியிருந்தனர். ஆனால் உத்தியோக பூர்வமான அறிவித்தல் இல்லாமல், அவர்களுக்கு ஆதரவான அமைப்புகளினூடகவும், மீடியாக்களினூடாகவும் அவ்வாறான ஒரு தகவலை மக்களுக்கு அறியத்தந்து இருந்தனர், லோறன்ஸ் திலகரிடம் அக்காலப்பகுதியில் பிபிசி ஆனந்தி இது தொடபாக தொடர்பு கொண்டு கேட்டப் பொழுது தாம் அப்படி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனத் தெரிவித்தார் என நினைக்கின்றேன், சரியாக நினைவில் இல்லை. 

தீவுப்பகுதி தவிர்த்து, யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அங்கு சிறிலங்காவின் தேர்தலை நடாத்துவது என்பது முரண்பாடானது. ஆனால் சனாதிபதித் தேர்தலில் மெளனமாக இருந்ததன் ஊடாக தமிழ் மக்கள் தம் விருப்பின் படி நடக்கலாம் என மறைமுகமாக தெரிவித்து இருந்தனர்.

47 minutes ago, tulpen said:

ஆனால் யாழ் பாராளுமன்ற தேர்தலில் மக்களை புறக்கணிக்குமாறு கூறியது அரசியல் தவறு.

யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அதை அங்கு நடாத்துவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அப்படி நடாத்துவது என்றால் சிறிலங்காவின் பொலிசார் யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கப்பட்டு இருத்தல் வேணடும். எனவே புலிகள் பகிஸ்கரிக்க வேண்டாம் என்று மறைமுகமாக கூறியிருந்தால் கூட, அங்கு தேர்தலை நடாத்தியிருக்க கூடிய சூழ்னிலை இல்லை. ஆனால் மன்னாரில்,வவுனியாவில், கிழக்கில் அப்படி நிலை இருக்கவில்லை என்பதால் அங்கு தமிழ் மக்கள் ஓரளவுக்கு வாக்களித்து இருந்தனர்.

புலிகள் இலங்கை அரசின் தேர்தல்களை அணுகிய விதங்களை பார்த்தால், ஒவ்வொரு தடவையும் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவான ஒரு போக்கை பல தருணங்களில் காண முடியும். ஏனெனில் ஆட்சி மாற்றம் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இருந்து இராணுவ தலமை வரைக்கும் மாற்றங்களை கொண்டு வரும் என்பதாலும் அந்த மாற்றங்கள் சரியாக தொழிற்பட கால தாமதம் ஏற்படும் என்பதாலும் புலிகளுக்கு இராணுவ ரீதியிலான சாதகங்கள் அதிகம் என்பதால்.

இலங்கை தேர்தல், எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் தமக்கு சாதகம் என்ற கணக்கு பிழைத்துப் போனது மகிந்த விடயத்தில் மட்டும். அதுவே பெரும் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.

Edited by நிழலி
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் எழுதி 23 மணித்தியாலங்களுக்குப் பிறகு தான் பலருக்கு கண்ணில்பட்டுள்ளது.

எனவே நன்றி.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தகவல் தவறுக்கு மன்னிக்கவும் மீரா.  எனது தகவல் தவறு தான். சந்திரிகா பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பி இருந்த புலிகள் அத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பை தடுக்காத்தால் பெருவாரியான தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர் என்பதே உண்மை. தேர்தலில் சந்திரிக்காவுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தனர் என்பது உண்மை.  

ஆனால் யாழ் பாராளுமன்ற தேர்தலில் மக்களை புறக்கணிக்குமாறு கூறியது அரசியல் தவறு.  தமிழ் தேசியத்திற்கு ஆதரவான சுயேட்சை குழுக்களை மறைமுகமான தேர்தலில் இறக்கியிருந்தால் டக்லஸால் யாழ்மாவட்டத்தின் அனைத்து இடங்களையும்  8  - 10  என்ற ஒற்றை இலக்க வாக்குகளுடன் எடுதிருக்க முடியாது. இதுவே எனது முக்கிய  கருத்து.  தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அனுமதி அளிக்கபட்டது என்றது எனது ஞாபக சக்தியின் பலவீனம். சுட்டிக்காட்டிதற்கு நன்றி மீரா.

நன்றி துல்பன்.

விடுதலைப்புலிகள் மாத்தையாவின் பிரச்சனைக்கு பிறகு நேரடியாக அரசியலில் ஈடுபட முயற்சிக்கவில்லை அதேநேரம் தாம் இராணுவ ரீதியில் போரிட்டுக் கொண்டு அரசியலில் ஈடுபடவும் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பன் எழுதி 23 மணித்தியாலங்களுக்குப் பிறகு தான் பலருக்கு கண்ணில்பட்டுள்ளது.

எனவே நன்றி.....

ஞாயிற்று கிழமையும் அதுவுமா துல்பென் என்ன எழுதுகிறார் என்று கண்ணில் எண்ணை விட்டு கொண்டு எல்லாரும் பார்பதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம் 🤣 ( பகிடி).

எல்லாருக்கும் வயசு போகுது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை கூட சரிதானா என ஒன்றுக்கு ரெண்டுதரம் சரி பார்த்தே சொல்ல முடிகிறது இப்போ.

இந்த தேர்தலில் ஈபிடிபி 9+2=11 {2 தேசியபட்டியல்} ?

அப்போ யாழுக்கு 10 சீட்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஞாயிற்று கிழமையும் அதுவுமா துல்பென் என்ன எழுதுகிறார் என்று கண்ணில் எண்ணை விட்டு கொண்டு எல்லாரும் பார்பதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம் 🤣 ( பகிடி).

எல்லாருக்கும் வயசு போகுது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை கூட சரிதானா என ஒன்றுக்கு ரெண்டுதரம் சரி பார்த்தே சொல்ல முடிகிறது இப்போ.

இந்த தேர்தலில் ஈபிடிபி 9+2=11 {2 தேசியபட்டியல்} ?

அப்போ யாழுக்கு 10 சீட்?

அந்த நேரம் தீவகத்தில் 9000 வாக்காளர்கள் வாழ்ந்தார்களா என்பதே சந்தேகம். உலங்கு வானூர்தி மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும் காவப்பட்ட வாக்குப் பெட்டிகளை படையினரே நிரப்பியிருக்கக் கூடும், அதனால் டக்கி வென்றார்.

ஆனால், யாழ் நகர தொகுதிக்குரிய ~1000 தேர்தல் வாக்குகள் சிலாபம், புத்தளம் பகுதிகளில் இடம்பெயந்து வாழ்ந்த யாழ் முஸ்லிம்களால் மு.காவுக்கு போடப்பட்ட நம்பிக்கையான வாக்குகள் என்பது பரவலான நம்பிக்கை.

இந்த வெற்றியை வைத்துக் கொண்டு 1995 இல் இராணுவ வசம் வந்த யாழ்மக்களில் கணிசமானோரை டக்கியின் கட்சி தன் வசம் கவர்ந்து கொண்டது. 2002 சமாதான காலத்தில் திரும்பவும் யாழ்ப்பாணத்தில் பயணித்த போது நான் கண்டு கொண்டது, பல இளைஞர்களும் வேலை செய்யும் வகுப்பினரும் டக்கி குழு மக்களுக்கு நன்மை செய்வதாக மனதார நம்பினர் என்பதைத் தான். 

டக்கியின் மீது கொலை முயற்சி நிகழ்ந்த ஒவ்வொரு முறையும், அவர் கட்சி மீது அனுதாப ஆதரவு கொஞ்சம் அதிகரித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

கிளிநொச்சியில் இப்போதும் கணிசமான ஆதரவை கொண்டுள்ள சந்திரகுமாரும் இதன் போதே முதலில் எம்பி ஆகினார் என நினைக்கிறேன்.

94 க்கு முதல் ஒரு துணை குழுவாக மட்டுபட்ட ஈபிடிபி, பெரும் அளவில் வளர்ந்தமைக்கும் இன்றுவரை, 2001 இல் கூட டக்லஸ் தோற்கடிக்க பட முடியாமைக்கும் இந்த தேர்தலே அத்திவாரம் இட்டது.

இதனாலதான் சின்பெயின் தொடர்ந்து தேர்தல்களில் பங்கு பற்றுகிறது. ஆனால் பாராளுமன்றில் பிரமாணம் செய்வதில்லை.

ஆனால் மார்டின் மக்கினசுக்கு ஜெரி அடம்ஸ் அமைந்தது போல பிரபாவுக்கு ஒரு நம்பிக்கையான அரசியல் சகா அமையவில்லை என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை டக்ளஸ் வென்றது .வு அருந்தப்பு. டக்ளசை விட அங்கையன் கவர்ச்சியான திறமையான ஆள் அடுத்த தேர்தலில் தனக்கு ஆப்பு ன்பத டக்ளசுக்கு விளங்கிய படியால் சிங்களவர்களைக் களிர்வித்து அதாயம் தேடப்பார்க்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.