Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய மீனவர்களை தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் – முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய மீனவர்களை தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் – முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.அப்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவறினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரைப் பகுதிக்கு வருகைந்த அரச அதிகாரிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மீனவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடினர்.குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அவ்வாறு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தரத் தவறினால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மீனவர்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், போராட்டத்தினைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் சென்று இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என மீனவர்கள் சார்பில் வருகை தந்த அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் அங்கு வருகைதந்த மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,இது இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. எனவே இப் பிரச்சினைக்கு இராஜ தந்திரவழியிலேயே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

மாறாக இரு நாட்டு மீனவர்களும் நேரடியாகமோதிக்கொள்வது மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாக அமையும்.ஆகவே இப் பிரச்சினை தொடர்பில் மாவட்டசெயலர் க.விமலநாதன் ஊடாக வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்குத் தெரியப்படுத்தி உரிய தீர்வினைப் பெற்றத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் உரிய அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் போன்றோருக்குப் பலதடவைகள் தெரியப்படுத்தியிருந்த நிலையில் அவர்களால் இதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

இந் நிலையிலேயே நேற்றைய தினம் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர் இணைந்து, கடலில் அத்துமீறி நழைந்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடலுக்குள் செல்வதற்குத் தயாராகியிருந்தனர்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-கடற்பரப்ப-3/

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் இலங்கை அரசும் விரும்புகிறது... நிச்சயமாக இது ஒருநாள் நடைபெறும். 

இந்த இழுபறி நிலையை இந்திய அரசால் மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் அவர்கள் செய்யப் போவதில்லை.

இறுதியில் சீன மீன்பிடிப் படகுகள் எமது கடலில் மீன் பிடிக்கும் நிலை ஏற்படும்.

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை எமது மீனவர்களுக்கு.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

எது  நடந்தாலும்  லாபம்  சிறீலங்காவுக்கு??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எது  நடந்தாலும்  லாபம்  சிறீலங்காவுக்கு??

தமிழர் இழப்புகளிலைதான் சிங்களம் பிழைப்பு நடத்துதெண்டு இஞ்சை ஒரு இடத்திலை சொன்னன். எனக்கு அடி உதை விழாதது தம்பிரான் புண்ணியம். 😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு சுமூகமாக தீர்க்கலாம். ஆனால் பாராமுகமாக இருக்கிறார்கள். இப்பிரச்சனைக்கு இந்திய மத்திய அரசு வரை செல்லத் தேவை இல்லை என நினைக்கிறேன்.
வீராப்பு பேசும் டக்ளஸ் கொலை குற்றம் அங்கு இருப்பதால் அந்தப்பக்கம்  போக முடியாமல் “ இந்தா பேசுகிறேன்” என புலுடா விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

தமிழக அரசு சுமூகமாக தீர்க்கலாம். ஆனால் பாராமுகமாக இருக்கிறார்கள். இப்பிரச்சனைக்கு இந்திய மத்திய அரசு வரை செல்லத் தேவை இல்லை என நினைக்கிறேன்.
வீராப்பு பேசும் டக்ளஸ் கொலை குற்றம் அங்கு இருப்பதால் அந்தப்பக்கம்  போக முடியாமல் “ இந்தா பேசுகிறேன்” என புலுடா விடுகிறார்.

உண்மையில் இந்த அத்துமீறலை இலங்கையின்மீதான ஒருவித அழுத்தமாகப் பிரயோகிக்க அனுமதிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் கடலில் சென்று இந்திய மீனவர்களை துரத்தி இருந்தால் அடுத்த நாள் தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் அறிக்கை விடுவார்கள் இந்திய எல்லை பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இலங்கை இராணுவம் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் அத்துமீறல் நடந்தாலும் மாரி காலங்களில் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் படகு நீரோட்டத்தில் இழுத்து செல்லும் அதனால் இலங்கை கடற்பரப்புக்குள் வரலாம்.  இலங்கை நேவி கூட தற்போது சுடாமல் தண்ணி பீச்சு அடிக்கிறது இலங்கை நேவிக்கு பயத்தினால் நம்மவர்களின் வலைகளை அறுத்துவிட்டு ஓடின சம்பவங்களும் நடக்கிறது . அந்த கடலில் மீன் பிடிக்க சென்ற கிழக்கு மீனவர் ஒரு வரின் சாட்சியம் நான் சொன்னவை . ஆனால் வடகிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் குறைய  விரும்பவில்லை ஏனென்றால் மீனவர்கள் வாழ்க்கையென்பது போராட்டம் மிகுந்த வாழ்வு 

  • கருத்துக்கள உறவுகள்

கச்சைதீவை இந்திராகாந்தி இலங்கைக்குத் தாரைவார்க்கும் வரையில் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பாரிய பிரச்சனைகள் தோன்றியதாகத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:

கச்சைதீவை இந்திராகாந்தி இலங்கைக்குத் தாரைவார்க்கும் வரையில் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பாரிய பிரச்சனைகள் தோன்றியதாகத் தெரியவில்லை. 

ஐயா,

அப்போது பெரும் இழுவை படகுகள் இல்லை. அதன் பின் இந்திய முதலாளிகள் இழுவை படகில் தமது கடலை வழித்து தொடைச்சு இப்ப இங்கால வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஐயா,

அப்போது பெரும் இழுவை படகுகள் இல்லை. அதன் பின் இந்திய முதலாளிகள் இழுவை படகில் தமது கடலை வழித்து தொடைச்சு இப்ப இங்கால வருகிறார்கள்.

தற்போது இழுவைப்படகுகளை விட நாட் கணக்கில் கடலில் தங்கி நின்று மீன் பிடிக்கும் படகுகளாலும் அதிக மீன் வளம் சூறையாடப்படுகிறது  (3 வாரங்கள் 2 வாரங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது இழுவைப்படகுகளை விட நாட் கணக்கில் கடலில் தங்கி நின்று மீன் பிடிக்கும் படகுகளாலும் அதிக மீன் வளம் சூறையாடப்படுகிறது  (3 வாரங்கள் 2 வாரங்கள்)

அதைதான் நானும் சொல்ல வந்தேன். இழுவை படகு பிழையான பெயராக இருக்கலாம். ஆங்கிலத்தில் Multi day fishing trawlers என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர் இழப்புகளிலைதான் சிங்களம் பிழைப்பு நடத்துதெண்டு இஞ்சை ஒரு இடத்திலை சொன்னன். எனக்கு அடி உதை விழாதது தம்பிரான் புண்ணியம். 😎

நீங்க  அப்படி சொல்லலாமா??

உண்மையை சொல்லலாமா???😅

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, goshan_che said:

அதைதான் நானும் சொல்ல வந்தேன். இழுவை படகு பிழையான பெயராக இருக்கலாம். ஆங்கிலத்தில் Multi day fishing trawlers என்பார்கள்.

பிரச்சனையே இழுவை படகுகளை உபயோகிக்க தொடக்கிய காலம்கள் தான் இந்த இழுவைப்படகுகள் மீன்  உற்பத்தியாகும் கண்டமேடைகளை நாசம் பண்ணுகின்றன https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7755:2011-03-03-101418&catid=187:2008-09-08-17-56-28&Itemid=259 விளக்கமாய் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதைதான் நானும் சொல்ல வந்தேன். இழுவை படகு பிழையான பெயராக இருக்கலாம். ஆங்கிலத்தில் Multi day fishing trawlers என்பார்கள்.

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் மீன் பிடிக்கும் முறைதான் பிரச்சனை. 

தெளிவாகக் கூறுவதானால், ஆழம் குறைந்த கண்டமேடையை இலக்காகக் கொண்ட இழுவைப் படகுகள்,  மிகவும் குறிப்பாக கடலின் அடித்தளத்தைக் குறிவைத்து(மண், முருகைக்கல்) மீன் பிடியைச் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் இறால், சங்கு போன்றவை. இதற்காக அவர்கள் பாவிக்கும் வலைகளின் கண் அளவு(ஓட்டை)மிகவும் சிறியவை. இவர்களின் வலைகளுடன் சேர்த்து மண்ணைக் கிழற இறக்கப்படும் பாரமான சங்கிலி, இரும்பு பூட்டப்பட்ட மரப் பலகைகள் போன்றன மண்ணைக் கிழறி மண்ணிலுள்ள சகல உயிரினங்களையும் அதன் உயிர் வாழ்க்கை/ இனவிருத்திக்கான சகல அடிப்படையையுமே இல்லாதொழித்துவிடுகின்றன. இதனால் இனப் பெருக்கம் முற்றிலும் இல்லாதொழிக்கப்படிகிறது. வலைகளோ மிகச் சிறிய கடல்வாழ் உயிரினங்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. 

300 - 400 இழுவைப்படகுகள்  குறிப்பிட்ட இடத்தை சூறையாடிச் சென்ற பின்னர் அங்கே மிச்சம் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை.

இவர்கள் செய்வது பேரழிவு. ..

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஐயா,

அப்போது பெரும் இழுவை படகுகள் இல்லை. அதன் பின் இந்திய முதலாளிகள் இழுவை படகில் தமது கடலை வழித்து தொடைச்சு இப்ப இங்கால வருகிறார்கள்.

சரியாகச் சொன்னீர்கள் இந்திராகாந்தி கச்சைதீவு காலங்களில் அந்த இழுவைப்படகுகள் இல்லை மற்றும் தங்களது கடலை அவர்கள் வழித்து தொடைச்ச நிலையில் தற்போது மக்கள் தொகையும் மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் மீன் பிடிக்கும் முறைதான் பிரச்சனை. 

தெளிவாகக் கூறுவதானால், ஆழம் குறைந்த கண்டமேடையை இலக்காகக் கொண்ட இழுவைப் படகுகள்,  மிகவும் குறிப்பாக கடலின் அடித்தளத்தைக் குறிவைத்து(மண், முருகைக்கல்) மீன் பிடியைச் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் இறால், சங்கு போன்றவை. இதற்காக அவர்கள் பாவிக்கும் வலைகளின் கண் அளவு(ஓட்டை)மிகவும் சிறியவை. இவர்களின் வலைகளுடன் சேர்த்து மண்ணைக் கிழற இறக்கப்படும் பாரமான சங்கிலி, இரும்பு பூட்டப்பட்ட மரப் பலகைகள் போன்றன மண்ணைக் கிழறி மண்ணிலுள்ள சகல உயிரினங்களையும் அதன் உயிர் வாழ்க்கை/ இனவிருத்திக்கான சகல அடிப்படையையுமே இல்லாதொழித்துவிடுகின்றன. இதனால் இனப் பெருக்கம் முற்றிலும் இல்லாதொழிக்கப்படிகிறது. வலைகளோ மிகச் சிறிய கடல்வாழ் உயிரினங்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. 

300 - 400 இழுவைப்படகுகள்  குறிப்பிட்ட இடத்தை சூறையாடிச் சென்ற பின்னர் அங்கே மிச்சம் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை.

இவர்கள் செய்வது பேரழிவு. ..

😡

நன்றி உங்களின் விளக்கத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கண்டமேடைப்பகுதிகளில் பழுதாகிய வாகனம்களை இறக்கி விடவேண்டியது நல்லது அவர்களின் மடிவலையில் இப்பாரிய வாகனங்கள் மாட்டுப்பட்டு கடைசியில் அறுத்துவிட்டு செல்லவேண்டிய நிலை உருவாகும் .அதே நேரம் மீன்களின் பெருக்கமும் அதிகரிக்கும் அவர்களின் ரோலர்கள் அடிக்கடி மடிவலை  போடும் இடங்களில் இப்பாரிய வாகனம்களை கடலில் இறக்கி விடுவது ஒருக்கல்லில் பலமாங்காய் விழுத்தும் . 

உள்ளூரில் ரோலர் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் குழம்புவார்கள் அவர்களை சமாளிக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நன்றி உங்களின் விளக்கத்துக்கு .

உண்மை பெருமாள். 90களின் இறுதிப்பகுதிகளில் மன்னாரின் வட கடலோரங்களில் நின்று பார்த்திருக்கிறேன். இரவில் கடலில் மிகப் பெரிய திருவிழாவையே காணலாம். உங்களால் எண்ண முடியாத அளவில் வெளிச்சம் பாச்சப்பட்ட இழுவைப்படகுகள்  கரையின் மிக அண்மையில் மீன்பிடியில் ஈடுபடுவார்கள். அதிகாலையில் புறப்பட்டுவிடுவார்கள். அப்போதிருந்த சூழலில் எதனையும் ஆற அமர இருந்து யோசித்து புரிந்துகொள்ள முடியவில்லை. 

தமிழர்களின் மிகப்பெரிய வளம் கடல். இந்திய மீனவர்கள் தங்கள் வளத்தைச் சூறையாடி அழித்தொழித்தபின் இப்போது இங்கே வருகிறார்கள். 

இது மிகப்பெரிய துரோகம். 

😭

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் மீன் பிடிக்கும் முறைதான் பிரச்சனை. 

தெளிவாகக் கூறுவதானால், ஆழம் குறைந்த கண்டமேடையை இலக்காகக் கொண்ட இழுவைப் படகுகள்,  மிகவும் குறிப்பாக கடலின் அடித்தளத்தைக் குறிவைத்து(மண், முருகைக்கல்) மீன் பிடியைச் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் இறால், சங்கு போன்றவை. இதற்காக அவர்கள் பாவிக்கும் வலைகளின் கண் அளவு(ஓட்டை)மிகவும் சிறியவை. இவர்களின் வலைகளுடன் சேர்த்து மண்ணைக் கிழற இறக்கப்படும் பாரமான சங்கிலி, இரும்பு பூட்டப்பட்ட மரப் பலகைகள் போன்றன மண்ணைக் கிழறி மண்ணிலுள்ள சகல உயிரினங்களையும் அதன் உயிர் வாழ்க்கை/ இனவிருத்திக்கான சகல அடிப்படையையுமே இல்லாதொழித்துவிடுகின்றன. இதனால் இனப் பெருக்கம் முற்றிலும் இல்லாதொழிக்கப்படிகிறது. வலைகளோ மிகச் சிறிய கடல்வாழ் உயிரினங்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. 

300 - 400 இழுவைப்படகுகள்  குறிப்பிட்ட இடத்தை சூறையாடிச் சென்ற பின்னர் அங்கே மிச்சம் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை.

இவர்கள் செய்வது பேரழிவு. ..

😡

மேற்கு நாடுகளில் மீன் பிடிக்கும் போது ஓரளவுக்கு சிறிய அளவான மீன்களை பிடித்தால் திருப்பி  கடலில் திருப்பி விடும்படி அறிவுறுத்தப்படுத்துகிறார்கள். இதனால்  மீன்களின் இனப்பெருக்கம் அழிந்து விடும்.  இந்தியாவில் இது ஒரு பொருட்டே இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. போதாததுக்கு தமது எல்லையை விட்டும் மீன் பிடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

உண்மை பெருமாள். 90களின் இறுதிப்பகுதிகளில் மன்னாரின் வட கடலோரங்களில் நின்று பார்த்திருக்கிறேன். இரவில் கடலில் மிகப் பெரிய திருவிழாவையே காணலாம். உங்களால் எண்ண முடியாத அளவில் வெளிச்சம் பாச்சப்பட்ட இழுவைப்படகுகள்  கரையின் மிக அண்மையில் மீன்பிடியில் ஈடுபடுவார்கள். அதிகாலையில் புறப்பட்டுவிடுவார்கள். அப்போதிருந்த சூழலில் எதனையும் ஆற அமர இருந்து யோசித்து புரிந்துகொள்ள முடியவில்லை. 

தமிழர்களின் மிகப்பெரிய வளம் கடல். இந்திய மீனவர்கள் தங்கள் வளத்தைச் சூறையாடி அழித்தொழித்தபின் இப்போது இங்கே வருகிறார்கள். 

இது மிகப்பெரிய துரோகம். 

😭

தொழில் உற்பத்திக்கு அடிப்படையான மூலம்களை இழந்து தவிக்கின்றோம் இதை பலமுறை சொல்லியும் யாரும் கணக்கில் எடுப்பதாயில்லை .

இங்கு முருங்கைக்காய் இங்கிலாந்துக்கு மட்டுமே மற்றைய நாடுகள் கணக்கில் இல்லை  ஒருகிழமை  தேவை 1000kg சராசரியாக நுகர்வோர் நாங்கள் மாத்திரம் இல்லை கன்னட ஆந்திரா கேரளா குஜராத்தில் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டினர் இவ்வளவு லட்ஷக்கணக்கான மக்கள் இங்கிலாந்தில் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய வடகிழக்கு பகுதிகளில் இவ்வளவு உற்பத்தி காணாது மிஞ்சி போனால் 200 kg எடுக்கலாம் அதுவும் ஒன்றுவிட்ட கிழமையே ஆனால் இந்த தேவையை அறிந்து அவுஸ்ரேலியாவில் குயின்ஸ்லண்டில் இருந்து பல்லாயிரம் ஏக்கரில் நம்ம கரவெட்டி ஆள்த்தான் உற்பத்தி செய்து கனடா ,இங்கிலாந்து ,பாரிஸ் போன்ற இடங்களுக்கு குளிர்கால உற்பத்தி குறைவை நிவர்த்தி செய்கிறார்  அவர்களின் கோடை காலம் முடியும்மட்டும் அவர்களின் உற்பத்தி முருங்கைக்காய் நம்ம தமிழ் கடைகளில் விலையும்  கூட அனால் மக்கள் வாங்குகிறார்கள் சந்தேகப்படுபவர்கள் தமிழ்க்கடையில் ஒஸ்ரேலியன் முருங்கைக்காய் வெள்ளை பெட்டியில் வருவது இருக்கா என்று கேட்டுப்பாருங்க கடைக்காரர் ஒரு அழுகை அழுவினம் பாருங்க (அழுவதன் காரணம் பிறகு சொல்கிறேன் )

ஊருக்கு போனடிச்சு ஏன்டா முருங்கை வராதா என்று கேட்டால் மசுக்குட்டி போன்ற வை மரத்தை பாழ்  பண்ணுகின்றன என்ற கதை வரும் .அதி  கூடிய கிருமி நாசினிகளை  பயன்படுத்தி அவைகளை கூர்ப்பு அடைய வைத்திருக்கோம் போதாக்குறைக்கு வீட்டுக்கு வீடு உபரியாய் கான்சர் போன்றவை  இதை அறிந்து தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்கு பலர் மாறுகினம் .

கடலில் மீன்  உற்பத்தியாகும் கருவறைகள் கண்டமேடைகளை நாசம் பண்ணுகிறம் .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா டக்கிளசின் அடாவடிப் பேச்சைக் கேட்டு.. தமிழக மீனவர்களோடு சிங்களவர்கள் விரும்பும் வகைக்கு பிணக்கு பிரச்சனையை உருவாக்காமல்..

தமிழக மீனவத் தரப்புக்களோடு ஈழத் தமிழ் மீனவர்கள் நேரடியாகப் பேசிப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதே சாலச் சிறப்பு. 

டக்கிளஸ் தனது அரசியல் செல்வாக்கிற்காக செய்யும் அடாவடிகளுக்கு வீரம் நிறைந்த.. முல்லைத்தீவு மீனவ சமூகம் இடமளிக்கக் கூடாது. கடந்த காலங்களில்.. கடற்புலிகள் காட்டிய வழிகளை பின்பற்றுங்கள். புலிகள் இருந்த காலத்தில்.. தமிழக.. தமிழீழ மீனவர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போதெல்லாம்.. அவை சுமூகமாகத் தீர்க்கப்பட்டன என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

ஊருக்கு போனடிச்சு ஏன்டா முருங்கை வராதா என்று கேட்டால் மசுக்குட்டி போன்ற வை மரத்தை பாழ்  பண்ணுகின்றன என்ற கதை வரும் .அதி  கூடிய கிருமி நாசினிகளை  பயன்படுத்தி அவைகளை கூர்ப்பு அடைய வைத்திருக்கோம் போதாக்குறைக்கு வீட்டுக்கு வீடு உபரியாய் கான்சர் போன்றவை  இதை அறிந்து தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்கு பலர் மாறுகினம் .

கடலில் மீன்  உற்பத்தியாகும் கருவறைகள் கண்டமேடைகளை நாசம் பண்ணுகிறம் .

பெருமாள் நீங்கள் இறக்குமதி துறையில் இருக்கிறீகளா.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

பெருமாள் நீங்கள் இறக்குமதி துறையில் இருக்கிறீகளா.

இல்லை என் நண்பர்கள் இருக்கிறார்கள் .

2 hours ago, nedukkalapoovan said:

சும்மா டக்கிளசின் அடாவடிப் பேச்சைக் கேட்டு.. தமிழக மீனவர்களோடு சிங்களவர்கள் விரும்பும் வகைக்கு பிணக்கு பிரச்சனையை உருவாக்காமல்..

அவருக்கு காத்து கொண்டு இருக்குது தமிழ்நாட்டு நீதிமன்றம் போனால் ஆள் உள்ளேதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.