Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட வெறியன் ரஜனிகாந்தின் சிவாஜி படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் கண்டுகளியுங்கள்!

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம். கள்ள சிடி எண்டால் ஓக்கே!

400மெகா பைற் தரமான படத்தை www.sweetmiche.com இல் பார்க்கலாம்...

வீணாக தியேட்டர் சென்று அங்கே காசை செலவு செய்து பார்ப்பதைவிட 1 மணித்தியாலத்திற்குள் (எனக்கு 10 நிமிடங்கள் போதுமாக்கும்) தரவிறக்கம் செய்து ஆறுதலாக றீவேன் பன்னி, பெவர்ட்பன்னி உங்க இஸ்ரத்துக்கு பார்க்கலாம்..

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

Edited by Danklas

நண்பர்களே நாம் விவாதிப்பதற்குமுன் சில விடயங்களில் தெளிவுபடவேண்டும்.

சிங்கள தேசத்து பொருட்களை புறக்கணிக்க நீங்கள் போராடுகின்றீர்கள். ஆனால் தமிழ் தொலைக்காட்சி இணையம் நிறுத்தப்படும்வரை ஒரு மாதத்திற்கு கிடைக்கு 200 300 களுக்காக சிங்களதேசத்து பொருட்களுக்கான கடை விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீங்கள் சிவாஜி படத்தை புறக்கணிக்க கோருகின்றீர்கள். தரிசனத்தில் அதற்கு விளம்பரம் நடக்கின்றது.

தென்னிந்திய படங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியதுதான் ஆனால் ஒரு கை ஓசை எழுப்பாது. வெளிநாடுகளை நம்பித்தான் பெரிய தொகையில் படம் பண்ணுகின்றார்கள். ஆனால் முடிந்தவரை எம்மை கேலியும் செய்வார்கள். அதை நாம் கை தட்டி மகிழ்வோம்.

இங்கு எமது விடுதலைக்காக குரலெழுப்புவதாக பல சுயநலபுலிகள் கூறுகின்றன.அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்மாட்டார்கள். நாமாகத்தான் சுய கட்டுப்பாட்டுன் இதை தடைசெய்யவேண்டும்.

ஐயோ உங்களுடன் கருத்தை பகிர்ந்துகொள்ள முயன்று நான் படத்துக்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது குறை நினைக்காதையுங்கோ சிவாஜி படம் போடுறாங்கள் முதல்நாள் முதல் ஷோவிலை படம் பார்த்தால்தான் எனக்கு நித்திரை வரும். இப்ப படத்துக்கு போறன் .குறை நினையாதையுங்கோ.

எப்பிடியொண்டாலும் உந்த தென்னிந்திய படங்களை இங்கை வெளியிடவிடக்கூடாது.

தம்பியவையள் உதிலை கவனமாக இருங்கோ

நீண்ட நாட்களுக்கு பிறகு வ(ச)ம்புவையும் டண்ணையும் பார்த்ததில் மகிழ்ச்சி இருவரும் நலமா? :lol::lol::D:D:D

இணைய விளம்பரங்களின் முன்னிலையை அறியவே தெரிகிறதே

படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் தான் கூடுதலாக சனம் பார்க்கபோகிறது.

காசுள்ளோரும்... கட்டாகாலிகளும்.... இப்படதத்தின் பிரமாண்டத்தை திகட்டரில்பார்த்தால் தெரியுமென்போரும்.....

(ஓடிக்கொண்டிருக்கும் போதே சிடிக்கள் வெளிவந்தாலும்) திகட்டரில் பார்கத்தான் செய்வார்கள். படம் வாங்கி ஓடுபவருக்கு அதுவே துணிவு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

ம்.. :D:D

வித்தியாசமான சிந்தனை.

  • தொடங்கியவர்

படம் 25 வாரம் ஓடவேண்டும் என்று வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் ரஜினி காந்த் மன்ற நிருவாகிகள் 11 பேர் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனராம்.

இதற்காக அவர்கள் நேற்று காவி உடை அணிந்து காப்புக்கட்டி விரதமும் தொடங்கியுள்ளனராம். இவர்கள் அனைவரும் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிடுகிறார்களாம்.

படம் 25 வாரம் ஓடவேண்டும் என்பதற்காக 25 செ.மீ. உயரமுள்ள வெள்ளிவேல் ஒன்றையும் செய்து அதை கோல்டன் சரவணன் என்ற ரசிகர் அலகு குத்தி கிரிவலம் வருகிறாராம்.

சிவாஜி படத்தை புறக்கணிக்க வேணும்... மெகா பட்ஜட் படம்....! ஆகவே ஈழத்தமிழரை நம்பி படம் எடுத்து இருக்க மாட்டார்கள்...! ஆகவே ரஜனிக்காந்தின் சிவாஜியை புறக்கணிப்பதில் தவறு இல்லை....!

ஆனால் தென்னிந்திய சினிமாவை புற்றக்கணிக்க எண்டு வெள்ளிக்கிடுவது, தென்னிந்தியாவுடன் எங்களுக்கு இருக்கிற உறவுப்பாலங்களிலை ஒண்டை வெடி வைத்து தகர்ப்பதுக்கு சமனாக இருக்கும்... வேண்டாத விரோத போக்கை வளர்ப்பதை விடுத்து அரவணைத்து எங்களுடையை பிரச்சினைகளை சினிமாவில் காட்ச்சிகளாக்கி உலகறிய செய்யாவிட்டாலும் தமிழர்களை அனைவரையும் கொண்டு சேர்க்க செய்யலாம்...

அதுக்காக சிவாஜியை புறக்கணிக்க வேண்டாம் எண்று சொல்லவில்லை.... கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்... ஒட்டு மொத்த தமிழக சினிமாவே தங்களின் படங்களை வெளியிடாமல் செய்து நட்டத்தை தவிர்க்க சிவாஜியை வெளியிட்ட பின்னர் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்... இதில் விஜயின் "அழகிய தமிழ் மகனும்' அடக்கம்... அப்படி எண்றால் தமிழ் சினிமாவே பணத்தை முதலீடு செய்தபின்னர் மீட்டு எடுக்க வளி இல்லாமல் சிவாஜிக்கு வளிவிட்டு இருக்கிறது.....! அப்படி எண்றால் சிவாஜி நட்டப்பட்டால் எவரும் கவலை கொள்ள போவதில்லை...!! எங்களை எதிர்க்கவும் போவதில்லை...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

என்ன கந்தப்பு உம்மட வயசு தானே ஆனால் அவர் 16 வயசில டூயட் பாடுறார் என்று எரிச்சலோ நீரும் அங்கன கிழசுகளை மேக்கப் போட்டு ஆடுறது தானே

:P

திருட்டு விசிடி இணைய வெளியீடு மூலம் அவர்களிற்கு ஓரு பெரிய இழப்பை வழங்கலாம் என்பது எனது முடிவு. அனைவரிற்கும் இலவசமாக சிடி வழங்கினாலும் தவறில்லை. வாய்வழிப்பிரச்சாரங்களை விட இவ்வாறான செயல்கள் பலன் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இரண்டு திரைஅரங்குகளில் காட்சி அளிக்கபடுகிறது இன்று தொடக்கம் 10நாட்களுக்கு இரு காட்சிகளாக இரு திரையரங்குகளில் காட்சிகளாக காண்பிக்கபட இருகிறது,இன்றைய சோவுக்கான டிக்கட் ஏறத்தாழ 2 கிழமைக்கு முன் முடிவடைந்துவிட்டது.நாங்கள் என்னத்த தான் எழுதினாலும் செவிடன் காதில சங்கு ஊதின மாதிரி தான்.நானும் பார்த்துவிட்டு வந்து வடிவாக இதை பற்றி சிட்னி கோசிப்பில் எழுதுகிறேன்,நான் பார்த்ததை எழுதமாட்டேன் மற்றவர்கள் பார்ததை கிண்டலாக எழுதுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் வித்தியாசமாக நான் இத் திரைப்படத்தை பார்த்துவிட்டு புறக்கணிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் என்னப்பா சொல்றீங்க? :lol:

ம் நல்ல விடயம்தான் வடிவேலு

ஒன்று செய்யுங்கள் .

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரிக்கற்றை கிழித்து எறிந்து விட்டு வாருங்கள். அதுவே நீங்கள் புறக்கணிச்சமாதிரித்தான்...........

கொஞ்சம் வித்தியாசமாக நான் இத் திரைப்படத்தை பார்த்துவிட்டு புறக்கணிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் என்னப்பா சொல்றீங்க? :lol:

அடடா அற்புதமான யோசனை. :lol: நீர் சொல்லிவிட்டு செய்கின்றீர். :P மற்றவர்கள் சொல்லாமல் செய்கின்றார்கள். அது தான் வித்தியாசம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்குவதற்கு வாழ்த்துக்கள்

ஏனப்ப புறகணிக்கிறீங்கள் அதில ஒருடயலக் சொலுவார் கேளுங்கோ அழகான பெண்பார்க்கவேண்டும் என்று சொல்ல உடனே இவர் சொல்லுவார் அழகான பெண் என்றா யாழ்பாணதிற்கு தான் போக வேண்டும் என்று இது காணாதா படத்தை பார்க்க எல்லாரும் போய் பாருங்கோ யம்மு சொல்லுறேன். :lol:

சா சிட்னி கோயில் எல்லாம் வேஸ்ட் நானும் யாழ்பாண பக்கம் தான் போக வேணும் சிட்னி ஆட்கள் எனி உங்களை நான் பார்க மாட்டேன்

:P :lol: :P

மு.கு: தயவு செய்து பெண்கள் (16-20) தியெட்டர்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் போனால் சிவாஜி ஷ்ரேயாவை படத்தில பார்க்காட்டிலும் பறவாயீல்லை அட்லீஸ் உங்களை பார்க்கவது நேரத்தை போக்குவமே என்று ஜொள்ஸ் கூட்டம் வரும்... :lol::lol:

டங்குவின் இந்த நடவிக்கையை நான் புறகணிக்கிறேன் இது ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களுக்கும் செய்யும் ஒரு சதியாகவே நான் கருதுகிறேன்

:P

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்குவதற்கு வாழ்த்துக்கள்

ஒரு சின்னத் திருத்தம்

படத்தை புறக்கணிப்போம் என்று தொடங்கி அதே படத்தை பிரபலமாக்கியதற்கு வாழ்த்துக்கள். என்று எழுதியிருக்க வேண்டும். :D:D

டங்குவின் இந்த நடவிக்கையை நான் புறகணிக்கிறேன் இது ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களுக்கும் செய்யும் ஒரு சதியாகவே நான் கருதுகிறேன்

:P

அட நீங்களொன்று அவர் மற்:றவர்களை வரவேண்டாமென எழுதியதே தான் மட்டும் போய் கூத்தடிக்கலாமென்று எண்ணியே. :angry: :angry:

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.சிட்னியில் 25 வெள்ளிக்கு இப்படத்தை காண்பிக்கிறார்கள். 57 வயதுள்ள கன்னடக் கிழவன் 16 வயது பெண்ணுடன் ஒடித்திரிவதை 1 வெள்ளிக்கு தியேட்டரில் காண்பித்தாலும் சென்று பார்க்க மாட்டேன்.

அவ்வளவு வயித்தெரிச்சலா?? :P :D :P :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல் "ஷோ"வுக்கு ரிக்கற் கிடைக்கவில்லை என்ற வயித்தெரிச்சல் நமக்கு!

எப்படியும் நாளைக்குத் தரவிறக்கம் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது!

முதல் "ஷோ"வுக்கு ரிக்கற் கிடைக்கவில்லை என்ற வயித்தெரிச்சல் நமக்கு!

எப்படியும் நாளைக்குத் தரவிறக்கம் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது!

அப்ப நீங்கள் சிவாஜியை புறக்கணிக்காவிட்டாலும் சிவாஜி உங்களை புறக்கணித்து விட்டதென்று சொல்லுங்கள். :D:D என்ன இருந்தாலும் அகன்ற திரையில் டிஜி ட்டல் ஒலியுடன் பார்ப்பதிலுள்ள பரவசம் வேறு எதிலும் வராதுதான். :D:D:D

எடுத்த எடுப்பிலேயே புறக்கணிப்பது என்பது சாத்தியமற்ற விடயம். ஆனால் படிப் படியாக

எங்கள் எதிர்ப்பை ரஜினி போன்ற நடிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் கொடுக்காமல் விடும் பணத்தினால் பெரிய நட்டம்

வரவா போகுது என நினைக்கும் நண்பர்களுக்கு, " சிறு துளி தான் பெரு வெள்ளம்" .

ஒரு போராட்ட சூழலில் இருக்கும் இனத்திற்கு திரைப்படத்தை விட நிறைய கடமைகள் உண்டு. ரஜினி போன்றவர்களின் படத்துக்கு கொடுக்கும் பணத்தை எங்கள் தேசதிற்கு கொடுக்கலாமே..

இதொன்றும் எடுத்த எடுப்பிலேயே எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல. ஒரு வருடத்திற்கு மேலாக திட்டமிட்டு சிலர் மேற்கொண்ட நடவடிக்கை. ஒரு நடவடிக்கை எப்போது எடுக்கப்படுகின்றதென்பது முக்கியமல்ல அது ஏன் எடுக்கப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இங்கே இந்த நடவடிக்கைக்கு எந்தவொரு நியாயமான கருத்தும் வைக்காமல் ஒருவரின் தனிப்பட்ட புகழை மழுங்கடிக்கவே முற்பட்டிருக்கின்றார்கள். இதனால் அது படத்திற்கு மேலும் பிரசாரமாகவே அமைந்துவிட்டது. இது தான் உண்மை நிலை. ஒரு போராட்ட சூழலில் இருக்கும் இனத்திற்கு திரைப்படத்தை விட நிறைய கடமைகள் உண்டுதான். அதனை இப்படியான வேலைகளில் வீணடிப்பதும் வேதனை தரும் விடயம் தான்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் சிவாஜியை புறக்கணிக்காவிட்டாலும் சிவாஜி உங்களை புறக்கணித்து விட்டதென்று சொல்லுங்கள். :D:D என்ன இருந்தாலும் அகன்ற திரையில் டிஜி ட்டல் ஒலியுடன் பார்ப்பதிலுள்ள பரவசம் வேறு எதிலும் வராதுதான். :D:D:D

வசம்பரே. யாழில் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் நீங்கள் தானாமே? சரி அப்படியெண்டால் சிவாஜி படம் எப்படி? இன்று முதல் ஷோ பார்த்தாச்சாமே? யாழ்.கொம்மில் சிவாஜி படத்தை முதல் முதலாக பார்த்த பெருமை இந்த வசம்புவையே சாரும் என்று படம் பார்த்து வெளியே வரும்பொழுது டீ விக்கிற பையனுக்கு சொல்லி பெருமை பட்டதாக அறிந்தேனே??? சரி எப்படி இசை? எப்படி சங்கரின் கமரா? ரஜனினின் விக் ஒருக்காலும் களரவே இல்லையா? நம்ம ஷ்ரேயா எப்படி இருக்கிறாங்க?? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.