Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

132024882_3824464807577682_2388474337565

Funny Boy இன் சிறந்த சர்வதேசத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் கனவு கலைந்தது.

ஆங்கிலம் அதிகம் என்பதால், சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ஏற்றுக்கொள்ள முடியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

FUNNY BOY - திரைப்படம் மற்றும் திரைப்படத்தை எதிர்ப்பவர் குறித்த எனது பார்வை.

ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரபலமான நாவலை தழுவிய திரை கதையே funny boy .
சியாம் செல்வதுரை என்பவரின் பதின்ம வயது வாழ்க்கை அனுபவம்.
ஆண் உடலுக்குள் அடைக்கப்பட்ட பெண் உணர்வின் பிரதிபலிப்பே இந்த திரைப்படம்.குடும்பத்தாரிடமும் சமூகத்தில் இருந்தும் அவருக்கு கிடைக்கும் எதிர்ப்புகள்; நாட்டில் நிலவிக் கொண்டிருந்த அரசியல் அசாதாரண சூழ்நிலைகள்; ஒரு தமிழராக சியாம் செல்வதுரை அவர்கள் சந்தித்த அனுபவங்கள் ; கடைசியாக நாட்டை விட்டுப் பிரிந்து இன்னும் ஒரு நாட்டிற்கு அகதியாக இடம்பெயர்வது இதுதான் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் நாவல் ஆயிரத்து 1994 இல் அச்சிடப்பட்டு வெளிவந்தது. ஆங்கில நாவல்களில் அதிக நாட்டம் இல்லை என்றாலும் கூட எங்கள் நாட்டில் நடந்த நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்ட நாவல் என்ற ஒரு காரணத்தால் அதை வாங்கி முழுமூச்சில் வாசித்து எனக்கு பிடித்த புத்தகங்கள் வரிசையில் சேர்த்துக் கொண்டேன்.

அதேபோல இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே என் குடும்பத்தாருடன் பார்த்து மகிழ்ந்தேன்.

இந்த திரைப்படத்தில் காட்டப்படும் இனக்கலவரத்தை போல நானும்
1977; 1983 இரண்டு கலவரங்களை கண்டியில் வசித்த காலத்தில் நேரடியாகப் பார்த்தும் அனுபவித்தோம் கடந்து வந்தவன். படத்தில் காட்டப்படுவது போல் நடந்த ஒரு ரெயில் கொடூரத்தில் இருந்து மீண்டும் வந்தவன்.
அந்தக் காலங்களில் என்னைச் சுற்றியிருந்த பெரும்பான்மையான சிங்களவர்கள்; தமிழர்கள் குறித்து வைத்திருந்த துவேஷ பார்வையும் அவர்களின் ஏளனச் சொற்களும் மறக்க கூடியவை அல்ல. 
அதேபோல இந்த கலவர காலங்களில்; எமது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க எம்மிடையே வாழ்ந்த சில சிங்கள அயலவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் வாழ்க்கையில் மறக்க கூடியதும் அல்ல. 
சிங்கள வீடுகளிலேயே ஒளிந்து இருந்த காலங்கள் அவை.

தமிழர் வியாபார நிலையங்களையும் தமிழர் சொத்துக்களையும் சூறையாடிய சிங்கள குண்டர்கள் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு சிங்களக் காடையனை கொன்ற சம்பவம் கூட எமது ஊரில் நடந்தது தான். இந்த துப்பாக்கி சம்பவத்தை நிகழ்த்தியது ஒரு ராணுவ வீரன் தான்.

சரி இனி இந்த படத்திற்கான எம்மவரின் எதிர்ப்பு அலைகளை பற்றி பார்ப்போம்.
நம்மவர்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாற்று,
இந்த திரைப்படத்தில் பேசப்படும் தமிழ் சரியாக கையாள படாமல் கொச்சையாக இடம் பெற்றுள்ளது. தமிழ்ச் சொற்களின் உச்சரிப்புகள் மிகவும் மட்டமாக அமைந்திருக்கிறது.
இது முற்றிலும் உண்மைதான்.
இந்த விடயத்தில் தயாரிப்பாளர்; திரைப்படக் குழுவினர் கூடுதல் கவனம் எடுத்துஇருக்க வேண்டும் .

இந்த திரைப்படத்தில் தமிழர் அல்லாதவர்கள் நடித்திருக்கிறார்கள்; ஏன் எங்கள் அசலூர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது.
கனடா; ஸ்காபரோவில் வசிக்கும் சுதன் மகாலிங்கம் எனும் இளையவர் ஒருவரை தான் முதன்முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 
துரதிஸ்டவசமாக சுதனின் தந்தை யார் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, அவரால் இந்த திரைப்படத்திற்கு தேவையான நேரத்தை ஒதுக்க முடியாமல் போனது. 
இதைப்போல இன்னும் ஒரு சிலர் இந்த திரைப்படத்துக்கு அணுகப்பட்ட போதும் கூட இலங்கைக்குச் சென்று இந்த படப்பிடிப்பில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்திற்காகவும் இலங்கை அரசாங்கத்தின் கெடுபிடிகள் மாட்டிக்கொள்ள விரும்பாத காரணத்தாலும் ஒரு சிலர் தவிர்த்து விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் இந்த திரைப்படத்துக்கான நடிக நடிகையர்கள் தேர்வுகள் நடைபெற்றிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வசனங்கள் குறித்த விடயங்களில் பேராசிரியர் சேரன் அவர்களை அணுகி அவர் மூலமும் ஒரு சில அறிவுரைகளையும்  பெற்றுக்கொண்டதாகவும் நான் வாசித்திருக்கிறேன். 

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிங்கள பொதுமகன் பின்வரும் வசனத்தை கூறுவதாக ஒரு காட்சி
புலிகள் அப்பாவி மக்களை கொள்வதால் தான் இந்த கலவரம்  வெடித்தது.
உண்மையில் இப்படித்தான் நிறைய சிங்களவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இது தவறு. கலவரம் நடந்த 1983ஆம் ஆண்டு; புலிகள் பொதுமக்களை தாக்கி உயிர் சேதங்கள் விளைவித்ததாக பதிவுகள் கிடையாது. உண்மையில் அப்படியான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.

இன்னும் ஒரு காட்சியில்; கலவரம் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட கதாநாயகியை அடுத்த நாள் போலீசார் கூட்டிக் கண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு செல்வார்கள்.
இது கூட ஒரு பெரிய பேசுபொருளாக நம்மவர் இடையே மாறி இருக்கிறது.

பெரிய அளவில் மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு வகையில் தமிழர்கள் சந்தித்த, சந்தித்துவரும் இன்னல்கள் மற்றும் அவர்கள் தங்கள் பிறந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்.

பெரிய தயாரிப்பாளர்கள் எமது கதைகளை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கவும் கூடும். 
ஒரு சில சிங்களவர்கள் கூட தமிழர்களுக்கு அன்று இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒருமுறை நினைத்துப் பார்க்கக் கூடும்.

உதாரணம் - ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்றொரு திரைப்படம் வெளிவந்தபோது; யூத மக்களுக்கு எதிராக நாசிப் படைகள் விளைவித்த கொடூரங்களை திரைப்படமாக பார்த்த ஜெர்மேனிய மக்கள்; திரையரங்கை விட்டு வெளியே வரும்பொழுது கண்ணீர் சிந்தியவாறு நான் ஜெர்மனிய குடியாக பிறந்ததற்கு அவமான படுகிறேன் என்று பதிவு செய்த நிகழ்வுகளும் உள்ளன.

இதை எல்லாவற்றையும் விட;. ஒரு படைப்பாளியாக அவர்கள் படைத்திருக்கும் ஒரு படைப்பை பார்க்காமலே விரலை நீட்டி உனது படைப்பு தவறு; படத்தை தோல்வியடையச் செய்வோம்; உன் திரைப்படத்தை பகிஸ்கரிப்போம்; நீ என் தேசியத்துக்கு விரோதி என முத்திரை குத்துவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

எங்கள் செயல்களைப் பார்த்து ஆங்கிலேயர்களும் சிங்களவர்களும் சிரிக்கிறார்கள்.
இப்படி எல்லோரையும் பகைத்துக்கொண்டு தோப்பாகாமல் தனிமரமாக நிற்போம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிறிஸ்மஸ்/கொரோனா வீடுறைந்திருக்கும் விடுமுறையில் பார்க்கவுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
🎯 ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயார்...???
"இதுவும் கடந்து போகும்… எல்லாம் மறந்துபோகும்..." என்ற ஒரு இயலாமை மரபை, தமிழர்கள் தமது நிரந்தர அடையாளங்களில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்களோ ? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இடர்கள் பல கடந்தும், இமயம் தொடும் உயரம் தொட்ட தமிழர்கள் நம்மை, எப்படி இயலாமைத் தமிழர்களாக அடையாளப்படுத்த முடியும்..? என்ற ஆதங்கம், கோபம் சிலருக்கு வரலாம். ஆனால், பலருக்கு இக்குற்றச்சாட்டு ஒரு பொருட்டே அல்ல.
காரணம், நம்மை இழிவுபடுத்துவோரிடமே, நம்மை முற்போக்காளர்களாகக் காண்பித்து, நல்ல பிள்ளைகளாகப் பெயரெடுக்கும் பழக்கமுள்ள, தன்மானத் தமிழர்கள் பலர் நம் மத்தியில் உண்டு.
"...பொங்குவார் 'புட்டு' இழிவுற்றமை கண்டு...
பொங்கார் 'தமிழ்' கொலையுண்ட போதிலும்..."
என்பதாக, இலக்கை அடைவதற்கான வழிறைகளை நாடாமல், தமது உணர்ச்சிகளையும், புரட்சிகளையும் வெளிப்படுத்த, இலகுவான செயற்பாட்டு வழிமுறைகளை மட்டும் தெரிவு செய்யும், ஒரு இயலாமைக் கூட்டமாகவே என்னால், நம்மவர்களில் பலரை அடையாளப்படுத்த முடிகிறது.
கடந்த சுமார் 30 ஆண்டுகளில், தனித்தனி சாதனையாளர்களின் எண்ணிக்கை நம்மவர்கள் பட்டியலில் மிகவும் உச்சமானது என்பதை மறுப்பதற்கில்லை.
மூன்று தசாப்தகால, மாபெரும் இனவழிப்புப்போரை எதிர்கோண்டு, உலகம் முழுவதும் சிதறியோடிய ஈழத்தமிழர்கள், அதே சுமார் 30 ஆண்டுகளுக்குள் பொருளீட்டல், புலமை எய்தல், அரசியல் அரியணைகளை அலங்கரித்தல் என்று அவர்களின் தனித்தனியான அடைவுகள் பிரமிப்பூட்டும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான தனித்தனி அடைவுகளே, தமிழர்களுக்கான ஒரு கௌரவமான அடையாளத்தையும், சாதனைத் தமிழர்கள் என்ற அங்கீகாரத்தையும், தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் அவர்களுக்குக் கொடுத்துள்ளன.
ஒரு தலைமுறைக்காலத்தில், அதிலும் குறிப்பாக சமதலைமுறைக்காலத்தில், தமிழர்களின் அடைவு என்பது அசாத்தியமான சாத்தியமே.
அதன் காரணமாகவே, இவ்வாறான பல உதிரிகளின் அடைவுகளை, வெளியில் இருந்து நோக்கும் பிற இனத்தவர்கள், தமிழர்களை அதிசய மனிதர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்.
ஆனால், அவ்வாறான பெருமைகளைத் தமிழர்கள் கூட்டாகச் சுமக்க முடியுமா..? சாதனைத் தமிழர்கள், அதிசய மனிதர்கள் என்ற போற்றுதல்களை ஒரு பொது அடையாளமாகக் கொள்ள முடியுமா..?
இதற்கான பதிலை, தன்மானத் தமிழர்கள்தான் நன்கு அறிவார்கள். "...பாம்பின் கால் பாம்பு அறியும்.." என்பதுபோல, தமிழர்களின் இயலுமைகள் மற்றும் இயலாமைகள் குறித்து நாமே நன்கு அறிவோம்.
…..காடு பச்சை என்பது பொது அடையாளமே… ஆனால், காட்டுக்குள் நிறையவே பட்ட மரங்களும், சொத்தை மரங்களும், வனாந்தரத் தரைகளும் பரந்து கிடந்தால், அதனையொரு பசுங்காடாக அடையாயப்படுத்த முடியாது. ஆங்காங்கே நிலத்தடி நீரை உறிஞ்சிக்குடித்துவிட்டு, நிமிர்ந்து நிற்கும் சில நெடு மரங்கள் மட்டும், காட்டின் அடையாளம் நாமே என்று மார்தட்டிக்கொள்ள முடியாது....
அவ்வாறுதான், 'நான்' என்ற அடையாளம்… 'நாம்' என்ற அடையாளமாக மாற்றம் அடையும் வரையில், தமிழர்கள், தமது செயல்களையும், சிந்தனைகளையும் செப்பனிடவேண்டியது வரலாற்றுக் கடமை.
ஒரு புறம் தனித்தனி அடைவுகளுக்கான பாய்ச்சல்கள் அவசியம் என்றபோதிலும், நமது அடையாளங்கள் அழிக்கப்படாமல் தடுத்தாடுவதும், அழிவுகளுக்குத் துணைபோகாமல் எதிர்த்தாடுவதும், தமிழ்ப்பால் குடித்தவர்களுக்கு இருக்க வேண்டிய பாரிய பொறுப்பு.
ஆனால், அந்த சுயம்காப்பு அறப்போரை தனித்தனி மனிதர்களாக நின்று நடத்திவிட முடியாது. அது ஒரு கூட்டு வலியின் கூட்டு மொழியாகவே வெளிப்படவேண்டும்.
நுண்ணறிவும், நுண்திறனும் சின்ன எறும்புக்கு இருந்தபோதிலும், தனது கூட்டுறவின் மூலமே, ஒழுங்கு விதியை இவ்வுலகிற்கு அது போதிக்கிறது. ஐக்கியமே அதனது மகாசக்தி ! ஒற்றுமையே அதனது போராயுதம் !
இவ்வாறான பின்புலத்தில் தான், தமிழர்கள் தமது அடையாளச் சிதைப்பையும், வரலாற்றுத் திரிபையும், மொழியின் அவமதிப்பையும், எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் ? என்ற விடை தெரியாக் கேள்வி தொக்கி நிற்கிறது.
தமிழர்கள் தமது இருப்பைக்காக்கும் பொறுப்பை எப்பொழுது கூட்டாகச் சுமக்கப்போகிறார்கள்..?
தமது சுய இலாபங்களுக்காகவும், சுய அடையாளங்களுக்காகவும், அவ்வப்பொழுது தோன்றி மறையும் பொறுப்பற்ற பொறிகளுக்குள், நமது பொறுப்புக்களைப் புதைத்துவிடப்போகிறோமா..?
....குஞ்சைத் தூக்கிச்செல்ல, காற்றைக் கிழித்து வருகின்ற பருந்திடமிருந்து, தன் குஞ்சுகளைக் காக்க, தாய்க்கோழி விரைந்து பறந்து விரட்டுவதும், தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை போர்த்திக் கொள்வதும், எவ்வளவு அறப்புதமான உணர்வும், விரைந்த வினையாற்றலும் என்பதை நமக்குப் புரியவைக்கிறது...
இந்நிலையில் தான், தமிழர்களுடைய, தமிழ் செயற்பாட்டாளர்களுடைய, தமிழ் அமைப்புக்களுடைய, தமிழ்ப் பற்றாளர்களுடைய அசமந்தப்போக்குத் தொடர்பான விவாதம் அவசியம் என்று தோன்றுகிறது.
தமிழர்களுடைய மொழிச் செழுமையை அசிங்கப்படுத்தி, தமிழர்களுடை வரலாற்றைத் திரிபுபடுத்தி, தமிழ் தற்பாலினத்தவர்களை மலினப்படுத்தி, தமிழர்களுடைய அடையாளத்தை மாற்றியமைத்து, ஒரு தமிழ் திரைப்பட அடையாளத்துடன் ஒஸ்காருக்குள் (OSCASRS) நுழைந்து, சர்வதேச அங்கீகாரம் பெறமுனைந்த 'FUNNY BOY' தொடர்பில், எத்தனை தமிழர்கள் தமது குரல்களைப் வெளிப்படுத்தியிருகிறார்கள் அல்லது பதிவுசெய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் கேட்டாகவேண்டும்.
கனடாவில் வசிக்கும், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியாம் செல்வத்துரையின் (Shyam SELVADURAI) நாவலைத் தழுவி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, கனேடிய திரைப்ப இயக்குனர் தீபா மேத்தாவின் (Deepa MEHTA) இயக்கத்தில், கனடாவில் வெளிவந்துள்ள தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளை உள்ளடக்கிய திரைப்படமே 'FUNNY BOY'.
ஷியாம் செல்வத்துரையும், தீபா மேத்தாவும் இணைந்து திரைக்கதை - வசனங்களை எழுதியுள்ள இத்திரைப்படம், தற்போது, கனடாவில் CBS GEM தளம் ஊடாகவும் மற்றும் பிறநாடுகளில் NETFLIX தளம் ஊடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டுக்கும், 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சுட்டி நிற்கும் இத்திரைப்படத்தில், தமிழ் தற்பாலின இளைஞன், தனது சிறு பராயம் முதல், வாலிபப்பருவம் வரையில் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் அவமானங்கள் குறித்தும், உள்நாட்டு யுத்த சூழ்நிலைகளால், குறித்த இளைஞன் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்தும், அத்திரைப்படம் சித்தரிக்க முனைகிறது. ஈற்றில், அவன் எதிர்கொண்ட அவமானங்கள் மற்றும் அநீதிகளுக்கான தீர்வாக, அவனது கனடா வருகை சித்தரிக்கப்படுகிறது.
இத்திரைப்படம் உத்தியோபூர்வமாக வெளியாகி சுமார் 2 வாரங்கள் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான விவாதங்களும், எதிர் விசர்சனங்களும், கடந்த சில மாதங்களுக்கு முன்னமே, சில தமிழ் புலமைசார் மற்றும் செயற்பாட்டுத் தளங்களின் பேசுபொருளாக மட்டும் அமைந்தன.
இந்நிலையில்த்தான், இத்திரைப்படத்தின் தமிழ் மொழிப் பிரயோகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, தமிழில் பேசப்படும் காட்சிகளில் மீள் குரற்பதிவுகள் (DUBBINGS) இடம்பெற்று, திரைப்படம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், திரைப்படத்தின் அடிப்படைத் தவறுகள் குறித்தும், திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குரல்பதிவுகளில், ஒரு பாத்திரத்துக்கான பேச்சுமொழியைத் தவிர, ஏனைய அனைத்துத் தமிழ்ப் பாத்திரங்களின் பேச்சு வழக்கிலும், தமிழ்மொழிப் பிரயோகம் சிதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், புலம்பெயர் தளங்களில் உள்ள, ஒரு சில இளம் தலைமுறைத் தமிழ்ப்பற்றாளர்களே தமது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் முன்வைத்தனர்.
மேலும், குறிப்பாக தமிழ் தற்பாலினத்தவர்கள் தரப்பில் இருந்து, தமது அடையாளம் மற்றும் தமிழின அடையாளம் என்பன மலினப்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் முன்வைத்ததோடு, திரைப்படத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக, நீதி வேண்டும் எனவும், தமது கோரிக்கை மனுவை முன்வைத்தனர்.
அதன் பின்னரே, இவ்விடயம் ஒரு பொதுத்தளத்தின் பேசுபொருளாகக் கவனத்தை ஈர்த்தது. எனினும், அது போதுமான கவனத்தையும், கரிசனையையும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தத் தவறிவிட்டது.
குறிப்பாக, 'தமிழ் மொழி', 'தமிழ் இனம்', 'தமிழ் வரலாறு' என்று சத்தமிட்ட ஒரு பெருங்கூட்டம் சத்தமில்லாமல் அடங்கிப்போனமை அம்பலமானது. ஊடகங்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
எனினும், ஒரு சில தமிழ்மொழி ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களுமே, இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு மைய்யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முனைந்தார்கள். ஆனால், அதற்கான ஒத்துழைப்பை, சமூகமாகவோ ? அல்லது அமைப்புக்களாகவோ..? தமிழர் தரப்பு கூட்டாக வெளிப்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை.
'புட்டு'க்காக புரட்சி செய்த தமிழர்கள், தம் கண்முன்னால் ஒரு வரலாற்றுத்தவறு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்ற பாரிய, உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.
இவ்வாறான பலவீனமே… கட்டமைக்கப்பட்ட இனவழிப்புவாதிகளுக்கு, தமிழர்கள் கொடுக்கின்ற ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியும்.
இத்திரைப்படம் ஏன் ? எதிர்க்கப்படுகறது என்ற புரிதல் கூட, நம்மத்தியில் பலருக்கு இல்லை. BIG BOSS விடுப்பு நிகழ்ச்சி பார்த்து ஆதங்கப்படுவதும், சின்னத்திரை நாடகங்களைப் பார்த்து கண்ணீர் விடுவதுமாக இருக்கும் பலருக்கு 'FUNNY BOY' யின் ஆபத்துப் புரியவில்லை.
'FUNNY BOY' ஏன் எதிர்க்கப்படுகிறது…?
▪️தமிழர்களின் 'தோற்றம்', 'நிறம்', 'இயல்பு'களைக் கொண்டிராத, தமிழர்கள் அல்லாதோரும், தமிழர்களை இனவழிப்புச் செய்த தரப்பைச் சேர்ந்த சிங்களவர்களும், தமிழர்களின் பாத்திரத்தில் நடிக்கவைக்கப்பட்டமை.
▪️இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும், தமிழ்ப் பாத்திரங்களில் நடிப்பதற்குரிய நடிகர்களைத் தேர்வு செய்யமுடியவில்லை என்ற காரணங்களை உருவாக்கி அதனை நியாயப்படுத்தியமை.
▪️முதலில் தமிழர்கள்தான், சிங்களவர்களைத் (சிறுவர்கள், பெண்கள் உட்பட) தாக்கிக் கொன்றார்கள் என்றும், அதுவே 1983 யூலைத் தமிழினப்படுகாலைகள் இடம்பெறக்காரணமாக அமைந்ததாகவும் காட்சிகள் ஊடாகச் சித்தரிக்க முனைந்தமை.
▪️வரலாற்று முரணாக, வடக்கு-கிழக்கு எல்லைக்கிராமங்களில், தமிழர்களின் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள், சிங்களவர்களைக் கொலைசெய்கிறார்கள் என்று தமிழிலும், தென்னிலங்கையில் சிங்களவர்களைக் கொலை செய்கிறார்கள் என்று ஆங்கில மொழிபெயர்ப்பிலும் சித்தரித்தமை.
▪️முழுக்க முழுக்க அரசினதும், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளினதும், ஆசீர்வாத்துடனும், அனுசரணையுடனும், நெறிப்படுத்தப்பட்ட யூலைத் தமிழினப்படுகொலைகைளை, சில சிங்கள இனவெறியர்களால் மட்டும் நடத்தப்பட்டதாகவும், அரசும், ஏனைய சிங்களவர்களும் தமிழர்களைக் காப்பாற்ற மட்டும் முனைந்தார்கள் என்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்க முனைந்தமை.
▪️ஏனைய சிங்களக் கைதிகளால், சிறைக்கூடங்களில் வைத்தே, திட்டமிட்ட முறையில், தமிழ்க் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, கண்கள் பிதுக்கி எடுக்கப்பட்டபோது துணைநின்ற சிங்களக் காவல்துறை, தமிழ்ப் பெண் ஒருவர் தாக்கப்பட்டபொழுது, அவரைக் காப்பாற்றி, தமது காவல்துறை வாகனத்தில் வீடுவரை அழைத்து வந்து குடும்பத்திடம் ஒப்படைப்பதாகக் காண்பிக்கும் காட்சி, தமிழர்களை ஓட ஓட வெட்டியும், எரித்தும் கொன்ற சிங்களக் காடையர்களுக்கு காவல்நின்ற காவல்துறையை, தர்மத்தின் காவலர்களாக சித்தரிக்கும் ஒரு முயற்சி.
▪️ஜனநாயக மறுப்பும், சட்ட ஒழுங்கு மறுப்பும், தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு, அவர்கள் வேட்டையாடப்பட்ட காலத்தில், பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் இளைஞரை, அவரது குடும்ப உறுப்பினர் சென்று சந்திப்பதற்கு, ஜனநாயக அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் காவல்துறை அனுமதியளித்ததாகக் காண்பிக்க முனைவது, சட்ட-ஒழுங்கும், ஜனநாயகமும் காட்சி இடம்பெற்ற காலத்தில் பேணப்பட்டதாகக் காண்பிக்க முனைந்தமை.
▪️தனது மகளை ஒரு சிங்கள இளைஞன் காதலிக்கிறான் என்று அறிந்ததும், சிங்கள இளைஞரின் வீட்க்குச் சென்று அவனது பெற்றோரைத் திட்டித் தீர்க்கும் தாயாரிடம், தேனீர் அருந்துகிறீர்களா…? பிஸ்கிட் சாப்பிடுகிறீர்களா..? எனக்கேட்டு சமாதானம் செய்ய முற்படும் சிங்களத் தாயின் பாத்திரப்படைப்பு, தமிழர்களை வன்முறையாளர்களாகவும், சிங்களவர்களை அகிம்சைவாதிகளாகவும் காண்பிக்கும் ஒரு வலிந்த திணிப்பு.
▪️83 யூலைப்படுகொலைகள் அரசால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், அது சார்ந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பை இலங்கையில் மேற்கொள்வதற்கு எவ்வாறு இலங்கை அரசு அனுமதியளித்தது என்ற தமிழர்களின் ஆதங்கம்..?
▪️சமபால் உறவு, இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகவும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், எவ்வாறு இலங்கையில் அவ்வாறான ஒரு மைய்யக்கருவைக் கொண்ட திரைப்படத்தை எடுப்பதற்கு, இலங்கை அரசு அனுமதயளித்தது என்ற இயல்பான சந்தேகம்.
▪️எனவே, யூலைப்படுகொலைகள், மற்றும் தற்பாலின விவகாரம் சார்ந்த கதைக்கருவின் படப்பிடிப்பை இலங்கையில் செய்வதற்காக, தமிழர்களின் அடையாளச்சிதைப்பு மற்றும் வரலாற்றுத் திரிபு என்ற சமரசங்களைத் திரைப்படக் குழு செய்துகொண்டதா என்ற நியாயமான கேள்வி..?
மேற்குறிப்பிட்ட காரணிகளே… 'FUNNY BOY' திரைப்படம் எதிர்க்கப்படுவதற்கான பிரதான காரணிகளாக விளங்குகின்றன.
யார் பொறுப்பு...?
'FUNNY BOY' தொடர்பான தரவுகளின் தவறுகளுக்கும், அடையாளச் சிதைப்பிற்கும், வரலாற்றுத் திரிபுகளுக்கும், விருதுகளுக்காகப் படமெடுக்கும் தமிழரல்லாத 'தீபா மேத்தா' என்ற இயக்குனரே முழுப்பொறுப்பாளி என்று கூறிவிட்டோ..? அல்லது தனது தாய்மொழி தமிழ் அல்லவெனவும், தான் ஒரு இலங்கையன் (SRI LANKAN) எனவும், மொழிகடந்து தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்ற 'ஷியாம் செல்வத்துரை' என்ற எழுத்தாளரின் புனைவில் உருவான ஒரு சினிமாப் படைப்புத்தானே என்று கூறிவிட்டோ..? தமிழர்கள் நகர்ந்து செல்ல முற்பட்டால், இனிவரப்போகின்ற திரிபுகளுக்கும், தவறுகளுக்கும் இதுவே தொடக்கமாக அமையும்.
இனிவரும் காலங்களில், யூலைப்படுகொலைகள் போன்றோ.. அல்லது முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகள் போன்றோ.. வெளிப்படையான மனிதக் கொலைகள் இடம்பெறுவதைக் காட்டிலும், இதுவரை இடம்பெற்ற படுகொலைகளுக்கான நியாயப்படுத்தல்களும், வெள்ளையடித்தல்களுமே, அதிகம் அரங்கேறும்.
அதற்கு 'தீபா மேத்தா' மற்றும் 'ஷியாம் செல்வதுரை' போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளும், புலமையாளர்களுமே அதிகம் பயன்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறான படைப்புக்கள் மூலமே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியல்ல, அதுவொரு சமன்-எதிர் விளைவு (Collateral Damage) என்பதாகச் சித்தரிக்கவே, இதுபோன்ற புனைவுகள் ஊடாக இனவாத அரசுகள் சர்வதேச அரங்கில் விதைக்க முனையும்.
அவ்வாறான படைப்புக்களுக்கு 'ஒஸ்கார்' (OSCARS) போன்ற சர்வதேச விருதுகளும் கிடைத்துவிட்டால், அதுவே நம்பகத்தன்மையுடைய ஒரு வரலாறாகவும் பதியப்படும் அபாயமுண்டு.
எனவே தான், இவ்வாறான சதிக்கோட்பாட்டு (Conspiracy Theory) நகர்வுகள் மூலம், தமிழர்களின் தலைவிதியைக் கைய்யாழும், எதிராளிகளின் மூலோபாயங்களை முளையிலேயே கிள்ளிவிட, தமிழர் தரப்பு கூட்டாக முனைந்திருக்கவேண்டும்.
மறுபுறத்தில், இவ்வாறான மூலோபாய நகர்வுகளுக்கு, தமிழர் தரப்பில் உள்ள, புலமையாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்குவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்துவோரையே, சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருவிகளாகப் பயன்படுத்தும்.
அவர்கள் மூலமாகவே, சமூகத்தில் ஒரு ஒப்புதலைப் (Endorsement) பெறுவதற்கான கருத்தியல் விதைப்புக்களையும், மிகவும் நுட்பமாக முன்னெடுக்க முனையும்.
இவ்வாறான தந்திரங்களின் அடிப்படையிலேயே, 'FUNNY BOY' திரைப்பட விவகாரம் கைய்யாளப்பட்டுள்ளது. தமிழர்கள் சிலர், ஆலோசகர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், உதவியாளர்களாகவும் உள்வாங்கப்பட்டு, 'FUNNY BOY' திரைப்படம், ஒரு சிறப்பான படைப்பு எனவும், சர்வதேச அரங்கிற்கு, ஒரு சொல்லப்படாத செய்தி, துணிச்சலாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும் முன் அங்கீகாரம் பெறமுற்பட்டுள்ளனர்.
இத்தமிழர்களே, மொழிப்பிரயோகம் FANSTASTIC எனவும், வரலாறு SUPER என்றும், நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஏன் ? தீபா மேத்தாவிற்கும், மேலாகச் சென்று அத்திரைபடத்தை நியாயப்படுத்த முனைந்துள்ளனர்.
மேலும், சிலர் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக, தமது அடையாளத்தையும், உணர்வுகளையும் சுயநல நோக்கில் அடகுவைத்து விலைபோயுள்ளனர்.
மேலும் சிலர், தமது புலியெதிர்ப்பு நிலைப்பாட்டை, தமது தமிழின எதிர்ப்பாக மடைமாற்றி, தமது நெடுநாள் குரோதத்தை தீர்க்கமுற்பட்டுள்ளனர்.
இவர்கள் '....தமக்கு மூக்குப் போனாலும், எதிரிக்குச் சகுனம் பிழைக்கவேண்டும்...' என்ற அளவுக்கு, மதம்கொண்ட புலியெதிர்பாளர்களாக 'FUNNY BOY' கான ஆதரவின் மூலம் தம்மை வெளிக்காட்டியுள்ளனர்.
கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், '....ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயங்காதவர்கள்....' இவர்களே.
குறிப்பாக, 'தமிழ் இருக்கை' மூலம், தமிழை அரியாசனம் ஏற்றுவோம் என்று தமிழ் மக்களிடம் நிதிசேர்க்கும் ஒரு தமிழ் அமைப்பும், அதனது தமிழின எதிர்ப்பு சகபாடிகளும், இலங்கைத் தூதரக அதிகாரிகள் இருவர் சகிதம், திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்வையிட்டுப் பாராட்டியதோடு, அதனை சமூகத்தில் சந்தைப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தலையால் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் துணைபோனவர்களும், அதனை தமது சுயநலங்களுக்காக அங்கீகரித்தவர்ளும் போக, இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும், ஒரு பெரும் கூட்டம் அமைதியாக இருப்பது, வேதனைக்குரியதும் விசித்திரமானதுமாகும்.
போட்டிக்கு விருது கொடுத்தல், ஏட்டிக்குபோட்டியாக அஞ்சலி நிகழ்வுகளை நடத்தல் என்று, நுனிநாக்கில் 'தமிழ்த் தேசியம்' பேசித்திரியும் மாற்று அமைப்புக்கள் பலவும், இவ்விடயத்தில் மௌனமாக இருந்து அங்கீகரித்திருக்கிறார்களோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
'முள்ளிவாய்க்கால்' நினைவுக்கும், 'மாவீரர்' நினைவுக்கும், நடன நிகழ்ச்சிகளை நடத்தி, தமது செல்வாக்கைக் காட்டுவதே, இவ்வமைப்புக்களின் அகராதியில், அதியுச்சமான அரசியல் எழுச்சியும், உணர்வு வெளிப்பாடுமா என்ற எண்ணம் மானத்தமிழர்களுக்கு வராமற்போனதேனோ.?
மேலும், ஊருக்கொரு 'சங்கம்', பாடசாலைக்கு ஒரு 'அமைப்பு' என்று தங்களை அமைப்புக்களால் அடையாளப்படுத்த முனையும், ஊர்ப்பிரமுக சிங்கங்களும், 'தமிழ்' அசிங்கப்படுவதைப்பற்றி வாய்திறக்க முன்வரவில்லை.
தமிழ் எங்கள் 'மூச்சு', தமிழே எங்கள் 'அடையாளம்' என்று, மேடைகளில் முழங்கிப் பொன்னடைகள் வாங்கியவர்கள் பலரும், இவ்விடயத்தில் பதுங்கியதேனோ..?
ஒருவேளை, இவர்களின் மொழிப்பற்றும், தேசப்பற்றும் தமது விளம்பரங்களுக்கானவை மட்டுமே என்று மறைமுகமாகச் சொல்கிறார்களோ..?
கனடாவில் உள்ளுராட்சித் தேர்தலில் கூட, 'தமிழருக்கு உரிமை', 'தமிழருக்கு நீதி', 'தமிழ்த் தேசியமே' எங்கள் அடையாளம் என்று, வாக்குவேட்டையில் இறங்கிய 30 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பற்றாளர்கள், இப்போது எங்கே தொலைந்து போனார்கள்..?
எனவே, 'தீபா மேத்தா'வை நோக்கி ஒரு விரல் சுட்டப்படுகிறபோது, மிகுதி நான்கு விரல்களும் நம்மையே சுட்டுகின்றன என்பதையே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விளைகிறது.
இந்நிலையில், 'FUNNY BOY' ஒஸ்காரில், பிறமொழியில், அங்கீகாரம் பெறுகிறதா? அல்லது வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெறுகிறதா ? என்பதற்கு அப்பால், 'தீபா மேத்தா' போன்றவர்கள் இனிவரும் காலங்களில் தமிழர்களை தமது கருவிகளாகப் பயன்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அதற்காக, நம்பவர்களையே முகவர்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குமான ஒரு கூட்டுக்குரல் ஒலிக்கவில்லையெனில், தவறுகள் மீளவும் நடக்கும்.
எனவே, தவறுகளுக்கான தீர்வாக, 'தீபா மேத்தா'விடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும், பொருப்புக்கூறலுடனான மன்னிப்புக்கோரல் தமிழர் தரப்பால், கூட்டாக வலியுறுத்தப்படவேண்டும்.
'FUNNY BOY' திரைப்படம் தவறான வழிநடத்தலில், தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தி, வரலாற்றைத் திரிபுபடுத்திவிட்டது என்பதை, 'தீபா மேத்தா' பகிரங்க வெளியில் ஒப்புக்கொண்டு, தமிழர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும்.
அவ்வாறான மன்னிப்புக்கோரல் 'FUNNY BOY' யை சந்தைப்டுத்துகின்ற, அத்தனை மைய்ய ஊடகங்களின் செய்திகளிலும், படைப்புகளிலும் உள்ளடக்கப்படவேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்களும், செயற்பாட்டாளர்களும், அவர்களின் அமைப்புக்களும், உடனடியாகவே தமது கண்டங்களையும், அதிருப்திகளையும் பதிவு செய்யவேண்டும்.
இதுவே, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைக்கு, தமிழர்கள் கொடுக்கும் முதலடியாக இருக்கவேண்டும்.
'புட்டு'க்காக தலைமையின்றிக் குரல் கொடுத்த தன்மானத் தமிழர்கள், இவ்விடயத்தில் 'உணர்வுத் தோழமை'யுடன் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இல்லையேல், தீபா மேத்தாவை விட, நீங்களே குற்றவாளிகள்.
'வரலாறு' தவறாகப் பதியப்படுவதை அனுமதித்தாலும், அதுவும் ஒரு வரலாற்றுத் தவறே..!!!
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை
1 hour ago, பெருமாள் said:

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Sasi_varnam said:

மிகவும் காத்திரமான பதிவு வர்ணத்தார்,

நான் படம் பார்க்கவில்லை புத்தகமும் வாசிக்கவில்லை.

ஆனால் புலிகள் மக்களை கொண்டதால் 83 உருவாகியது என்பது அப்பட்டமான பொய்.

அதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால் மிக மிக அரிதாக புலிகள் சிங்கள மக்களை இலக்கு வைத்தர்கள் அல்லது அப்பாவி சிங்கள மக்கள் collateral victims ஆவதை பற்றி கவலைபடாமல் சில தாக்குதல்களை செய்தார்கள் என்பது உண்மைதானே.

அதற்காக 83 பற்றிய படத்தில் 95 இல் நடந்ததை செருக முடியாது. ஆனால் இதை சொல்லாமல் விட்டால் படம் ஒரு பக்க தவறுகளை மட்டும் சொல்லும் பிரச்சார படமாகிவிடும்.

ஆகவே அந்த பலன்சை காப்பாற்ற இப்படி ஒரு காட்சியை அமைத்திருக்க கூடும்.

அத்துடன் இதில் நாவலாசிரியரின் பங்கு அதிகம் இராது என நினைகிறேன். காட்சியமைப்பது டைரக்டர்தானே.

எப்படியாயினும் ஒரு பிராச்சார படம் போல எடுக்காமல் விட்டால் எங்கள் ஆட்கள் குறை சொல்லுவார்கள்.

அப்படி எடுத்தால் ஏனையோர் எழும்பி போவார்கள்.

In the name of Buddha படம் லண்டனில் திரைக்கு வந்த போது, பல கலைச் சினிமா ரசிகர்களான வேற்று நாட்டவர் இடைவெளியில் எழுந்து சென்றதை கண்டேன். கடைசியில் கொஞ்சம் தமிழர் மட்டும் இருந்து பார்த்தோம்.

எமது பிரச்சினையை சொல்லும் என நினைத்து நான் கூட்டி சென்ற சிலர் எனக்கா இருந்து பார்த்தார்கள்.

பிகு: அருமையான பதிவு. தக்காளி வாங்கும் இடைவெளியில் திண்ணையில் மட்டும் மினெக்கெடாமல் பதிவுகளை போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உதயன் பிள்ளை எழுதிய லோன்ட்ரி லிஸ்ட் பார்த்து தலை விறைக்கிறது. 

ஷியாம் ஒரு கொழும்புத் தமிழர் (பெரும்பகுதி வாழ்க்கையில்). அவரது அனுபவம், பார்த்தவை, கேட்டவை  வைத்துக் கொண்டு சில காட்சிகளை அமைத்திருக்கிறார். அவரது அனுபவத்தை மறுதலிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது?

இதை வைத்துக் கொண்டு ஷியாமும், மேத்தாவும் இலங்கை வரலாற்றை மாற்றி விடுவார்கள் என்கிற பதற்றம் சிறு பிள்ளைத் தனமானது!

உதயன் பிள்ளை போன்றோர் படைப்பவனுக்கு படைப்புச் சுதந்திரத்தைக் கொடுக்கும் முதிர்ச்சியை முதலில் அடைய வேண்டும்!

படைக்கும் சுதந்திரம் உதயன் பிள்ளை போன்றோருக்கும் இருக்கிறது! இயலுமென்றால் தங்கள் அனுபவத்தை நூலாகவும் திரைப்படமாகவும்  வெளியிடுவது தானே முறை?   

20 hours ago, Sasi_varnam said:

FUNNY BOY - திரைப்படம் மற்றும் திரைப்படத்தை எதிர்ப்பவர் குறித்த எனது பார்வை.

ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரபலமான நாவலை தழுவிய திரை கதையே funny boy .
சியாம் செல்வதுரை என்பவரின் பதின்ம வயது வாழ்க்கை அனுபவம்.
ஆண் உடலுக்குள் அடைக்கப்பட்ட பெண் உணர்வின் பிரதிபலிப்பே இந்த திரைப்படம்.குடும்பத்தாரிடமும் சமூகத்தில் இருந்தும் அவருக்கு கிடைக்கும் எதிர்ப்புகள்; நாட்டில் நிலவிக் கொண்டிருந்த அரசியல் அசாதாரண சூழ்நிலைகள்; ஒரு தமிழராக சியாம் செல்வதுரை அவர்கள் சந்தித்த அனுபவங்கள் ; கடைசியாக நாட்டை விட்டுப் பிரிந்து இன்னும் ஒரு நாட்டிற்கு அகதியாக இடம்பெயர்வது இதுதான் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் நாவல் ஆயிரத்து 1994 இல் அச்சிடப்பட்டு வெளிவந்தது. ஆங்கில நாவல்களில் அதிக நாட்டம் இல்லை என்றாலும் கூட எங்கள் நாட்டில் நடந்த நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்ட நாவல் என்ற ஒரு காரணத்தால் அதை வாங்கி முழுமூச்சில் வாசித்து எனக்கு பிடித்த புத்தகங்கள் வரிசையில் சேர்த்துக் கொண்டேன்.

அதேபோல இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே என் குடும்பத்தாருடன் பார்த்து மகிழ்ந்தேன்.

இந்த திரைப்படத்தில் காட்டப்படும் இனக்கலவரத்தை போல நானும்
1977; 1983 இரண்டு கலவரங்களை கண்டியில் வசித்த காலத்தில் நேரடியாகப் பார்த்தும் அனுபவித்தோம் கடந்து வந்தவன். படத்தில் காட்டப்படுவது போல் நடந்த ஒரு ரெயில் கொடூரத்தில் இருந்து மீண்டும் வந்தவன்.
அந்தக் காலங்களில் என்னைச் சுற்றியிருந்த பெரும்பான்மையான சிங்களவர்கள்; தமிழர்கள் குறித்து வைத்திருந்த துவேஷ பார்வையும் அவர்களின் ஏளனச் சொற்களும் மறக்க கூடியவை அல்ல. 
அதேபோல இந்த கலவர காலங்களில்; எமது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க எம்மிடையே வாழ்ந்த சில சிங்கள அயலவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் வாழ்க்கையில் மறக்க கூடியதும் அல்ல. 
சிங்கள வீடுகளிலேயே ஒளிந்து இருந்த காலங்கள் அவை.

தமிழர் வியாபார நிலையங்களையும் தமிழர் சொத்துக்களையும் சூறையாடிய சிங்கள குண்டர்கள் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு சிங்களக் காடையனை கொன்ற சம்பவம் கூட எமது ஊரில் நடந்தது தான். இந்த துப்பாக்கி சம்பவத்தை நிகழ்த்தியது ஒரு ராணுவ வீரன் தான்.

சரி இனி இந்த படத்திற்கான எம்மவரின் எதிர்ப்பு அலைகளை பற்றி பார்ப்போம்.
நம்மவர்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாற்று,
இந்த திரைப்படத்தில் பேசப்படும் தமிழ் சரியாக கையாள படாமல் கொச்சையாக இடம் பெற்றுள்ளது. தமிழ்ச் சொற்களின் உச்சரிப்புகள் மிகவும் மட்டமாக அமைந்திருக்கிறது.
இது முற்றிலும் உண்மைதான்.
இந்த விடயத்தில் தயாரிப்பாளர்; திரைப்படக் குழுவினர் கூடுதல் கவனம் எடுத்துஇருக்க வேண்டும் .

இந்த திரைப்படத்தில் தமிழர் அல்லாதவர்கள் நடித்திருக்கிறார்கள்; ஏன் எங்கள் அசலூர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது.
கனடா; ஸ்காபரோவில் வசிக்கும் சுதன் மகாலிங்கம் எனும் இளையவர் ஒருவரை தான் முதன்முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 
துரதிஸ்டவசமாக சுதனின் தந்தை யார் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, அவரால் இந்த திரைப்படத்திற்கு தேவையான நேரத்தை ஒதுக்க முடியாமல் போனது. 
இதைப்போல இன்னும் ஒரு சிலர் இந்த திரைப்படத்துக்கு அணுகப்பட்ட போதும் கூட இலங்கைக்குச் சென்று இந்த படப்பிடிப்பில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்திற்காகவும் இலங்கை அரசாங்கத்தின் கெடுபிடிகள் மாட்டிக்கொள்ள விரும்பாத காரணத்தாலும் ஒரு சிலர் தவிர்த்து விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் இந்த திரைப்படத்துக்கான நடிக நடிகையர்கள் தேர்வுகள் நடைபெற்றிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வசனங்கள் குறித்த விடயங்களில் பேராசிரியர் சேரன் அவர்களை அணுகி அவர் மூலமும் ஒரு சில அறிவுரைகளையும்  பெற்றுக்கொண்டதாகவும் நான் வாசித்திருக்கிறேன். 

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிங்கள பொதுமகன் பின்வரும் வசனத்தை கூறுவதாக ஒரு காட்சி
புலிகள் அப்பாவி மக்களை கொள்வதால் தான் இந்த கலவரம்  வெடித்தது.
உண்மையில் இப்படித்தான் நிறைய சிங்களவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இது தவறு. கலவரம் நடந்த 1983ஆம் ஆண்டு; புலிகள் பொதுமக்களை தாக்கி உயிர் சேதங்கள் விளைவித்ததாக பதிவுகள் கிடையாது. உண்மையில் அப்படியான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.

இன்னும் ஒரு காட்சியில்; கலவரம் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட கதாநாயகியை அடுத்த நாள் போலீசார் கூட்டிக் கண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு செல்வார்கள்.
இது கூட ஒரு பெரிய பேசுபொருளாக நம்மவர் இடையே மாறி இருக்கிறது.

பெரிய அளவில் மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு வகையில் தமிழர்கள் சந்தித்த, சந்தித்துவரும் இன்னல்கள் மற்றும் அவர்கள் தங்கள் பிறந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்.

பெரிய தயாரிப்பாளர்கள் எமது கதைகளை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கவும் கூடும். 
ஒரு சில சிங்களவர்கள் கூட தமிழர்களுக்கு அன்று இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒருமுறை நினைத்துப் பார்க்கக் கூடும்.

உதாரணம் - ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்றொரு திரைப்படம் வெளிவந்தபோது; யூத மக்களுக்கு எதிராக நாசிப் படைகள் விளைவித்த கொடூரங்களை திரைப்படமாக பார்த்த ஜெர்மேனிய மக்கள்; திரையரங்கை விட்டு வெளியே வரும்பொழுது கண்ணீர் சிந்தியவாறு நான் ஜெர்மனிய குடியாக பிறந்ததற்கு அவமான படுகிறேன் என்று பதிவு செய்த நிகழ்வுகளும் உள்ளன.

இதை எல்லாவற்றையும் விட;. ஒரு படைப்பாளியாக அவர்கள் படைத்திருக்கும் ஒரு படைப்பை பார்க்காமலே விரலை நீட்டி உனது படைப்பு தவறு; படத்தை தோல்வியடையச் செய்வோம்; உன் திரைப்படத்தை பகிஸ்கரிப்போம்; நீ என் தேசியத்துக்கு விரோதி என முத்திரை குத்துவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

எங்கள் செயல்களைப் பார்த்து ஆங்கிலேயர்களும் சிங்களவர்களும் சிரிக்கிறார்கள்.
இப்படி எல்லோரையும் பகைத்துக்கொண்டு தோப்பாகாமல் தனிமரமாக நிற்போம்.

நன்றி.

கருத்துக்கு நன்றி சசிவர்ணம். மிகவும் பொறுப்புணர்வான சிறந்த  தெளிவான பார்வையுடைய விமர்சனம். 👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:
🎯 ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயார்...???
"இதுவும் கடந்து போகும்… எல்லாம் மறந்துபோகும்..." என்ற ஒரு இயலாமை மரபை, தமிழர்கள் தமது நிரந்தர அடையாளங்களில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்களோ ? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இடர்கள் பல கடந்தும், இமயம் தொடும் உயரம் தொட்ட தமிழர்கள் நம்மை, எப்படி இயலாமைத் தமிழர்களாக அடையாளப்படுத்த முடியும்..? என்ற ஆதங்கம், கோபம் சிலருக்கு வரலாம். ஆனால், பலருக்கு இக்குற்றச்சாட்டு ஒரு பொருட்டே அல்ல.
காரணம், நம்மை இழிவுபடுத்துவோரிடமே, நம்மை முற்போக்காளர்களாகக் காண்பித்து, நல்ல பிள்ளைகளாகப் பெயரெடுக்கும் பழக்கமுள்ள, தன்மானத் தமிழர்கள் பலர் நம் மத்தியில் உண்டு.
"...பொங்குவார் 'புட்டு' இழிவுற்றமை கண்டு...
பொங்கார் 'தமிழ்' கொலையுண்ட போதிலும்..."
என்பதாக, இலக்கை அடைவதற்கான வழிறைகளை நாடாமல், தமது உணர்ச்சிகளையும், புரட்சிகளையும் வெளிப்படுத்த, இலகுவான செயற்பாட்டு வழிமுறைகளை மட்டும் தெரிவு செய்யும், ஒரு இயலாமைக் கூட்டமாகவே என்னால், நம்மவர்களில் பலரை அடையாளப்படுத்த முடிகிறது.
கடந்த சுமார் 30 ஆண்டுகளில், தனித்தனி சாதனையாளர்களின் எண்ணிக்கை நம்மவர்கள் பட்டியலில் மிகவும் உச்சமானது என்பதை மறுப்பதற்கில்லை.
மூன்று தசாப்தகால, மாபெரும் இனவழிப்புப்போரை எதிர்கோண்டு, உலகம் முழுவதும் சிதறியோடிய ஈழத்தமிழர்கள், அதே சுமார் 30 ஆண்டுகளுக்குள் பொருளீட்டல், புலமை எய்தல், அரசியல் அரியணைகளை அலங்கரித்தல் என்று அவர்களின் தனித்தனியான அடைவுகள் பிரமிப்பூட்டும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான தனித்தனி அடைவுகளே, தமிழர்களுக்கான ஒரு கௌரவமான அடையாளத்தையும், சாதனைத் தமிழர்கள் என்ற அங்கீகாரத்தையும், தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் அவர்களுக்குக் கொடுத்துள்ளன.
ஒரு தலைமுறைக்காலத்தில், அதிலும் குறிப்பாக சமதலைமுறைக்காலத்தில், தமிழர்களின் அடைவு என்பது அசாத்தியமான சாத்தியமே.
அதன் காரணமாகவே, இவ்வாறான பல உதிரிகளின் அடைவுகளை, வெளியில் இருந்து நோக்கும் பிற இனத்தவர்கள், தமிழர்களை அதிசய மனிதர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்.
ஆனால், அவ்வாறான பெருமைகளைத் தமிழர்கள் கூட்டாகச் சுமக்க முடியுமா..? சாதனைத் தமிழர்கள், அதிசய மனிதர்கள் என்ற போற்றுதல்களை ஒரு பொது அடையாளமாகக் கொள்ள முடியுமா..?
இதற்கான பதிலை, தன்மானத் தமிழர்கள்தான் நன்கு அறிவார்கள். "...பாம்பின் கால் பாம்பு அறியும்.." என்பதுபோல, தமிழர்களின் இயலுமைகள் மற்றும் இயலாமைகள் குறித்து நாமே நன்கு அறிவோம்.
…..காடு பச்சை என்பது பொது அடையாளமே… ஆனால், காட்டுக்குள் நிறையவே பட்ட மரங்களும், சொத்தை மரங்களும், வனாந்தரத் தரைகளும் பரந்து கிடந்தால், அதனையொரு பசுங்காடாக அடையாயப்படுத்த முடியாது. ஆங்காங்கே நிலத்தடி நீரை உறிஞ்சிக்குடித்துவிட்டு, நிமிர்ந்து நிற்கும் சில நெடு மரங்கள் மட்டும், காட்டின் அடையாளம் நாமே என்று மார்தட்டிக்கொள்ள முடியாது....
அவ்வாறுதான், 'நான்' என்ற அடையாளம்… 'நாம்' என்ற அடையாளமாக மாற்றம் அடையும் வரையில், தமிழர்கள், தமது செயல்களையும், சிந்தனைகளையும் செப்பனிடவேண்டியது வரலாற்றுக் கடமை.
ஒரு புறம் தனித்தனி அடைவுகளுக்கான பாய்ச்சல்கள் அவசியம் என்றபோதிலும், நமது அடையாளங்கள் அழிக்கப்படாமல் தடுத்தாடுவதும், அழிவுகளுக்குத் துணைபோகாமல் எதிர்த்தாடுவதும், தமிழ்ப்பால் குடித்தவர்களுக்கு இருக்க வேண்டிய பாரிய பொறுப்பு.
ஆனால், அந்த சுயம்காப்பு அறப்போரை தனித்தனி மனிதர்களாக நின்று நடத்திவிட முடியாது. அது ஒரு கூட்டு வலியின் கூட்டு மொழியாகவே வெளிப்படவேண்டும்.
நுண்ணறிவும், நுண்திறனும் சின்ன எறும்புக்கு இருந்தபோதிலும், தனது கூட்டுறவின் மூலமே, ஒழுங்கு விதியை இவ்வுலகிற்கு அது போதிக்கிறது. ஐக்கியமே அதனது மகாசக்தி ! ஒற்றுமையே அதனது போராயுதம் !
இவ்வாறான பின்புலத்தில் தான், தமிழர்கள் தமது அடையாளச் சிதைப்பையும், வரலாற்றுத் திரிபையும், மொழியின் அவமதிப்பையும், எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் ? என்ற விடை தெரியாக் கேள்வி தொக்கி நிற்கிறது.
தமிழர்கள் தமது இருப்பைக்காக்கும் பொறுப்பை எப்பொழுது கூட்டாகச் சுமக்கப்போகிறார்கள்..?
தமது சுய இலாபங்களுக்காகவும், சுய அடையாளங்களுக்காகவும், அவ்வப்பொழுது தோன்றி மறையும் பொறுப்பற்ற பொறிகளுக்குள், நமது பொறுப்புக்களைப் புதைத்துவிடப்போகிறோமா..?
....குஞ்சைத் தூக்கிச்செல்ல, காற்றைக் கிழித்து வருகின்ற பருந்திடமிருந்து, தன் குஞ்சுகளைக் காக்க, தாய்க்கோழி விரைந்து பறந்து விரட்டுவதும், தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை போர்த்திக் கொள்வதும், எவ்வளவு அறப்புதமான உணர்வும், விரைந்த வினையாற்றலும் என்பதை நமக்குப் புரியவைக்கிறது...
இந்நிலையில் தான், தமிழர்களுடைய, தமிழ் செயற்பாட்டாளர்களுடைய, தமிழ் அமைப்புக்களுடைய, தமிழ்ப் பற்றாளர்களுடைய அசமந்தப்போக்குத் தொடர்பான விவாதம் அவசியம் என்று தோன்றுகிறது.
தமிழர்களுடைய மொழிச் செழுமையை அசிங்கப்படுத்தி, தமிழர்களுடை வரலாற்றைத் திரிபுபடுத்தி, தமிழ் தற்பாலினத்தவர்களை மலினப்படுத்தி, தமிழர்களுடைய அடையாளத்தை மாற்றியமைத்து, ஒரு தமிழ் திரைப்பட அடையாளத்துடன் ஒஸ்காருக்குள் (OSCASRS) நுழைந்து, சர்வதேச அங்கீகாரம் பெறமுனைந்த 'FUNNY BOY' தொடர்பில், எத்தனை தமிழர்கள் தமது குரல்களைப் வெளிப்படுத்தியிருகிறார்கள் அல்லது பதிவுசெய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் கேட்டாகவேண்டும்.
கனடாவில் வசிக்கும், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியாம் செல்வத்துரையின் (Shyam SELVADURAI) நாவலைத் தழுவி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, கனேடிய திரைப்ப இயக்குனர் தீபா மேத்தாவின் (Deepa MEHTA) இயக்கத்தில், கனடாவில் வெளிவந்துள்ள தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளை உள்ளடக்கிய திரைப்படமே 'FUNNY BOY'.
ஷியாம் செல்வத்துரையும், தீபா மேத்தாவும் இணைந்து திரைக்கதை - வசனங்களை எழுதியுள்ள இத்திரைப்படம், தற்போது, கனடாவில் CBS GEM தளம் ஊடாகவும் மற்றும் பிறநாடுகளில் NETFLIX தளம் ஊடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டுக்கும், 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சுட்டி நிற்கும் இத்திரைப்படத்தில், தமிழ் தற்பாலின இளைஞன், தனது சிறு பராயம் முதல், வாலிபப்பருவம் வரையில் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் அவமானங்கள் குறித்தும், உள்நாட்டு யுத்த சூழ்நிலைகளால், குறித்த இளைஞன் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்தும், அத்திரைப்படம் சித்தரிக்க முனைகிறது. ஈற்றில், அவன் எதிர்கொண்ட அவமானங்கள் மற்றும் அநீதிகளுக்கான தீர்வாக, அவனது கனடா வருகை சித்தரிக்கப்படுகிறது.
இத்திரைப்படம் உத்தியோபூர்வமாக வெளியாகி சுமார் 2 வாரங்கள் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான விவாதங்களும், எதிர் விசர்சனங்களும், கடந்த சில மாதங்களுக்கு முன்னமே, சில தமிழ் புலமைசார் மற்றும் செயற்பாட்டுத் தளங்களின் பேசுபொருளாக மட்டும் அமைந்தன.
இந்நிலையில்த்தான், இத்திரைப்படத்தின் தமிழ் மொழிப் பிரயோகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, தமிழில் பேசப்படும் காட்சிகளில் மீள் குரற்பதிவுகள் (DUBBINGS) இடம்பெற்று, திரைப்படம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், திரைப்படத்தின் அடிப்படைத் தவறுகள் குறித்தும், திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குரல்பதிவுகளில், ஒரு பாத்திரத்துக்கான பேச்சுமொழியைத் தவிர, ஏனைய அனைத்துத் தமிழ்ப் பாத்திரங்களின் பேச்சு வழக்கிலும், தமிழ்மொழிப் பிரயோகம் சிதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், புலம்பெயர் தளங்களில் உள்ள, ஒரு சில இளம் தலைமுறைத் தமிழ்ப்பற்றாளர்களே தமது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் முன்வைத்தனர்.
மேலும், குறிப்பாக தமிழ் தற்பாலினத்தவர்கள் தரப்பில் இருந்து, தமது அடையாளம் மற்றும் தமிழின அடையாளம் என்பன மலினப்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் முன்வைத்ததோடு, திரைப்படத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக, நீதி வேண்டும் எனவும், தமது கோரிக்கை மனுவை முன்வைத்தனர்.
அதன் பின்னரே, இவ்விடயம் ஒரு பொதுத்தளத்தின் பேசுபொருளாகக் கவனத்தை ஈர்த்தது. எனினும், அது போதுமான கவனத்தையும், கரிசனையையும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தத் தவறிவிட்டது.
குறிப்பாக, 'தமிழ் மொழி', 'தமிழ் இனம்', 'தமிழ் வரலாறு' என்று சத்தமிட்ட ஒரு பெருங்கூட்டம் சத்தமில்லாமல் அடங்கிப்போனமை அம்பலமானது. ஊடகங்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
எனினும், ஒரு சில தமிழ்மொழி ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களுமே, இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு மைய்யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முனைந்தார்கள். ஆனால், அதற்கான ஒத்துழைப்பை, சமூகமாகவோ ? அல்லது அமைப்புக்களாகவோ..? தமிழர் தரப்பு கூட்டாக வெளிப்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை.
'புட்டு'க்காக புரட்சி செய்த தமிழர்கள், தம் கண்முன்னால் ஒரு வரலாற்றுத்தவறு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்ற பாரிய, உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.
இவ்வாறான பலவீனமே… கட்டமைக்கப்பட்ட இனவழிப்புவாதிகளுக்கு, தமிழர்கள் கொடுக்கின்ற ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியும்.
இத்திரைப்படம் ஏன் ? எதிர்க்கப்படுகறது என்ற புரிதல் கூட, நம்மத்தியில் பலருக்கு இல்லை. BIG BOSS விடுப்பு நிகழ்ச்சி பார்த்து ஆதங்கப்படுவதும், சின்னத்திரை நாடகங்களைப் பார்த்து கண்ணீர் விடுவதுமாக இருக்கும் பலருக்கு 'FUNNY BOY' யின் ஆபத்துப் புரியவில்லை.
'FUNNY BOY' ஏன் எதிர்க்கப்படுகிறது…?
▪️தமிழர்களின் 'தோற்றம்', 'நிறம்', 'இயல்பு'களைக் கொண்டிராத, தமிழர்கள் அல்லாதோரும், தமிழர்களை இனவழிப்புச் செய்த தரப்பைச் சேர்ந்த சிங்களவர்களும், தமிழர்களின் பாத்திரத்தில் நடிக்கவைக்கப்பட்டமை.
▪️இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும், தமிழ்ப் பாத்திரங்களில் நடிப்பதற்குரிய நடிகர்களைத் தேர்வு செய்யமுடியவில்லை என்ற காரணங்களை உருவாக்கி அதனை நியாயப்படுத்தியமை.
▪️முதலில் தமிழர்கள்தான், சிங்களவர்களைத் (சிறுவர்கள், பெண்கள் உட்பட) தாக்கிக் கொன்றார்கள் என்றும், அதுவே 1983 யூலைத் தமிழினப்படுகாலைகள் இடம்பெறக்காரணமாக அமைந்ததாகவும் காட்சிகள் ஊடாகச் சித்தரிக்க முனைந்தமை.
▪️வரலாற்று முரணாக, வடக்கு-கிழக்கு எல்லைக்கிராமங்களில், தமிழர்களின் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள், சிங்களவர்களைக் கொலைசெய்கிறார்கள் என்று தமிழிலும், தென்னிலங்கையில் சிங்களவர்களைக் கொலை செய்கிறார்கள் என்று ஆங்கில மொழிபெயர்ப்பிலும் சித்தரித்தமை.
▪️முழுக்க முழுக்க அரசினதும், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளினதும், ஆசீர்வாத்துடனும், அனுசரணையுடனும், நெறிப்படுத்தப்பட்ட யூலைத் தமிழினப்படுகொலைகைளை, சில சிங்கள இனவெறியர்களால் மட்டும் நடத்தப்பட்டதாகவும், அரசும், ஏனைய சிங்களவர்களும் தமிழர்களைக் காப்பாற்ற மட்டும் முனைந்தார்கள் என்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்க முனைந்தமை.
▪️ஏனைய சிங்களக் கைதிகளால், சிறைக்கூடங்களில் வைத்தே, திட்டமிட்ட முறையில், தமிழ்க் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, கண்கள் பிதுக்கி எடுக்கப்பட்டபோது துணைநின்ற சிங்களக் காவல்துறை, தமிழ்ப் பெண் ஒருவர் தாக்கப்பட்டபொழுது, அவரைக் காப்பாற்றி, தமது காவல்துறை வாகனத்தில் வீடுவரை அழைத்து வந்து குடும்பத்திடம் ஒப்படைப்பதாகக் காண்பிக்கும் காட்சி, தமிழர்களை ஓட ஓட வெட்டியும், எரித்தும் கொன்ற சிங்களக் காடையர்களுக்கு காவல்நின்ற காவல்துறையை, தர்மத்தின் காவலர்களாக சித்தரிக்கும் ஒரு முயற்சி.
▪️ஜனநாயக மறுப்பும், சட்ட ஒழுங்கு மறுப்பும், தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு, அவர்கள் வேட்டையாடப்பட்ட காலத்தில், பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் இளைஞரை, அவரது குடும்ப உறுப்பினர் சென்று சந்திப்பதற்கு, ஜனநாயக அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் காவல்துறை அனுமதியளித்ததாகக் காண்பிக்க முனைவது, சட்ட-ஒழுங்கும், ஜனநாயகமும் காட்சி இடம்பெற்ற காலத்தில் பேணப்பட்டதாகக் காண்பிக்க முனைந்தமை.
▪️தனது மகளை ஒரு சிங்கள இளைஞன் காதலிக்கிறான் என்று அறிந்ததும், சிங்கள இளைஞரின் வீட்க்குச் சென்று அவனது பெற்றோரைத் திட்டித் தீர்க்கும் தாயாரிடம், தேனீர் அருந்துகிறீர்களா…? பிஸ்கிட் சாப்பிடுகிறீர்களா..? எனக்கேட்டு சமாதானம் செய்ய முற்படும் சிங்களத் தாயின் பாத்திரப்படைப்பு, தமிழர்களை வன்முறையாளர்களாகவும், சிங்களவர்களை அகிம்சைவாதிகளாகவும் காண்பிக்கும் ஒரு வலிந்த திணிப்பு.
▪️83 யூலைப்படுகொலைகள் அரசால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், அது சார்ந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பை இலங்கையில் மேற்கொள்வதற்கு எவ்வாறு இலங்கை அரசு அனுமதியளித்தது என்ற தமிழர்களின் ஆதங்கம்..?
▪️சமபால் உறவு, இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகவும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், எவ்வாறு இலங்கையில் அவ்வாறான ஒரு மைய்யக்கருவைக் கொண்ட திரைப்படத்தை எடுப்பதற்கு, இலங்கை அரசு அனுமதயளித்தது என்ற இயல்பான சந்தேகம்.
▪️எனவே, யூலைப்படுகொலைகள், மற்றும் தற்பாலின விவகாரம் சார்ந்த கதைக்கருவின் படப்பிடிப்பை இலங்கையில் செய்வதற்காக, தமிழர்களின் அடையாளச்சிதைப்பு மற்றும் வரலாற்றுத் திரிபு என்ற சமரசங்களைத் திரைப்படக் குழு செய்துகொண்டதா என்ற நியாயமான கேள்வி..?
மேற்குறிப்பிட்ட காரணிகளே… 'FUNNY BOY' திரைப்படம் எதிர்க்கப்படுவதற்கான பிரதான காரணிகளாக விளங்குகின்றன.
யார் பொறுப்பு...?
'FUNNY BOY' தொடர்பான தரவுகளின் தவறுகளுக்கும், அடையாளச் சிதைப்பிற்கும், வரலாற்றுத் திரிபுகளுக்கும், விருதுகளுக்காகப் படமெடுக்கும் தமிழரல்லாத 'தீபா மேத்தா' என்ற இயக்குனரே முழுப்பொறுப்பாளி என்று கூறிவிட்டோ..? அல்லது தனது தாய்மொழி தமிழ் அல்லவெனவும், தான் ஒரு இலங்கையன் (SRI LANKAN) எனவும், மொழிகடந்து தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்ற 'ஷியாம் செல்வத்துரை' என்ற எழுத்தாளரின் புனைவில் உருவான ஒரு சினிமாப் படைப்புத்தானே என்று கூறிவிட்டோ..? தமிழர்கள் நகர்ந்து செல்ல முற்பட்டால், இனிவரப்போகின்ற திரிபுகளுக்கும், தவறுகளுக்கும் இதுவே தொடக்கமாக அமையும்.
இனிவரும் காலங்களில், யூலைப்படுகொலைகள் போன்றோ.. அல்லது முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகள் போன்றோ.. வெளிப்படையான மனிதக் கொலைகள் இடம்பெறுவதைக் காட்டிலும், இதுவரை இடம்பெற்ற படுகொலைகளுக்கான நியாயப்படுத்தல்களும், வெள்ளையடித்தல்களுமே, அதிகம் அரங்கேறும்.
அதற்கு 'தீபா மேத்தா' மற்றும் 'ஷியாம் செல்வதுரை' போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளும், புலமையாளர்களுமே அதிகம் பயன்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறான படைப்புக்கள் மூலமே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியல்ல, அதுவொரு சமன்-எதிர் விளைவு (Collateral Damage) என்பதாகச் சித்தரிக்கவே, இதுபோன்ற புனைவுகள் ஊடாக இனவாத அரசுகள் சர்வதேச அரங்கில் விதைக்க முனையும்.
அவ்வாறான படைப்புக்களுக்கு 'ஒஸ்கார்' (OSCARS) போன்ற சர்வதேச விருதுகளும் கிடைத்துவிட்டால், அதுவே நம்பகத்தன்மையுடைய ஒரு வரலாறாகவும் பதியப்படும் அபாயமுண்டு.
எனவே தான், இவ்வாறான சதிக்கோட்பாட்டு (Conspiracy Theory) நகர்வுகள் மூலம், தமிழர்களின் தலைவிதியைக் கைய்யாழும், எதிராளிகளின் மூலோபாயங்களை முளையிலேயே கிள்ளிவிட, தமிழர் தரப்பு கூட்டாக முனைந்திருக்கவேண்டும்.
மறுபுறத்தில், இவ்வாறான மூலோபாய நகர்வுகளுக்கு, தமிழர் தரப்பில் உள்ள, புலமையாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்குவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்துவோரையே, சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருவிகளாகப் பயன்படுத்தும்.
அவர்கள் மூலமாகவே, சமூகத்தில் ஒரு ஒப்புதலைப் (Endorsement) பெறுவதற்கான கருத்தியல் விதைப்புக்களையும், மிகவும் நுட்பமாக முன்னெடுக்க முனையும்.
இவ்வாறான தந்திரங்களின் அடிப்படையிலேயே, 'FUNNY BOY' திரைப்பட விவகாரம் கைய்யாளப்பட்டுள்ளது. தமிழர்கள் சிலர், ஆலோசகர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், உதவியாளர்களாகவும் உள்வாங்கப்பட்டு, 'FUNNY BOY' திரைப்படம், ஒரு சிறப்பான படைப்பு எனவும், சர்வதேச அரங்கிற்கு, ஒரு சொல்லப்படாத செய்தி, துணிச்சலாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும் முன் அங்கீகாரம் பெறமுற்பட்டுள்ளனர்.
இத்தமிழர்களே, மொழிப்பிரயோகம் FANSTASTIC எனவும், வரலாறு SUPER என்றும், நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஏன் ? தீபா மேத்தாவிற்கும், மேலாகச் சென்று அத்திரைபடத்தை நியாயப்படுத்த முனைந்துள்ளனர்.
மேலும், சிலர் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக, தமது அடையாளத்தையும், உணர்வுகளையும் சுயநல நோக்கில் அடகுவைத்து விலைபோயுள்ளனர்.
மேலும் சிலர், தமது புலியெதிர்ப்பு நிலைப்பாட்டை, தமது தமிழின எதிர்ப்பாக மடைமாற்றி, தமது நெடுநாள் குரோதத்தை தீர்க்கமுற்பட்டுள்ளனர்.
இவர்கள் '....தமக்கு மூக்குப் போனாலும், எதிரிக்குச் சகுனம் பிழைக்கவேண்டும்...' என்ற அளவுக்கு, மதம்கொண்ட புலியெதிர்பாளர்களாக 'FUNNY BOY' கான ஆதரவின் மூலம் தம்மை வெளிக்காட்டியுள்ளனர்.
கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், '....ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயங்காதவர்கள்....' இவர்களே.
குறிப்பாக, 'தமிழ் இருக்கை' மூலம், தமிழை அரியாசனம் ஏற்றுவோம் என்று தமிழ் மக்களிடம் நிதிசேர்க்கும் ஒரு தமிழ் அமைப்பும், அதனது தமிழின எதிர்ப்பு சகபாடிகளும், இலங்கைத் தூதரக அதிகாரிகள் இருவர் சகிதம், திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்வையிட்டுப் பாராட்டியதோடு, அதனை சமூகத்தில் சந்தைப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தலையால் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் துணைபோனவர்களும், அதனை தமது சுயநலங்களுக்காக அங்கீகரித்தவர்ளும் போக, இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும், ஒரு பெரும் கூட்டம் அமைதியாக இருப்பது, வேதனைக்குரியதும் விசித்திரமானதுமாகும்.
போட்டிக்கு விருது கொடுத்தல், ஏட்டிக்குபோட்டியாக அஞ்சலி நிகழ்வுகளை நடத்தல் என்று, நுனிநாக்கில் 'தமிழ்த் தேசியம்' பேசித்திரியும் மாற்று அமைப்புக்கள் பலவும், இவ்விடயத்தில் மௌனமாக இருந்து அங்கீகரித்திருக்கிறார்களோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
'முள்ளிவாய்க்கால்' நினைவுக்கும், 'மாவீரர்' நினைவுக்கும், நடன நிகழ்ச்சிகளை நடத்தி, தமது செல்வாக்கைக் காட்டுவதே, இவ்வமைப்புக்களின் அகராதியில், அதியுச்சமான அரசியல் எழுச்சியும், உணர்வு வெளிப்பாடுமா என்ற எண்ணம் மானத்தமிழர்களுக்கு வராமற்போனதேனோ.?
மேலும், ஊருக்கொரு 'சங்கம்', பாடசாலைக்கு ஒரு 'அமைப்பு' என்று தங்களை அமைப்புக்களால் அடையாளப்படுத்த முனையும், ஊர்ப்பிரமுக சிங்கங்களும், 'தமிழ்' அசிங்கப்படுவதைப்பற்றி வாய்திறக்க முன்வரவில்லை.
தமிழ் எங்கள் 'மூச்சு', தமிழே எங்கள் 'அடையாளம்' என்று, மேடைகளில் முழங்கிப் பொன்னடைகள் வாங்கியவர்கள் பலரும், இவ்விடயத்தில் பதுங்கியதேனோ..?
ஒருவேளை, இவர்களின் மொழிப்பற்றும், தேசப்பற்றும் தமது விளம்பரங்களுக்கானவை மட்டுமே என்று மறைமுகமாகச் சொல்கிறார்களோ..?
கனடாவில் உள்ளுராட்சித் தேர்தலில் கூட, 'தமிழருக்கு உரிமை', 'தமிழருக்கு நீதி', 'தமிழ்த் தேசியமே' எங்கள் அடையாளம் என்று, வாக்குவேட்டையில் இறங்கிய 30 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பற்றாளர்கள், இப்போது எங்கே தொலைந்து போனார்கள்..?
எனவே, 'தீபா மேத்தா'வை நோக்கி ஒரு விரல் சுட்டப்படுகிறபோது, மிகுதி நான்கு விரல்களும் நம்மையே சுட்டுகின்றன என்பதையே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விளைகிறது.
இந்நிலையில், 'FUNNY BOY' ஒஸ்காரில், பிறமொழியில், அங்கீகாரம் பெறுகிறதா? அல்லது வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெறுகிறதா ? என்பதற்கு அப்பால், 'தீபா மேத்தா' போன்றவர்கள் இனிவரும் காலங்களில் தமிழர்களை தமது கருவிகளாகப் பயன்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அதற்காக, நம்பவர்களையே முகவர்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குமான ஒரு கூட்டுக்குரல் ஒலிக்கவில்லையெனில், தவறுகள் மீளவும் நடக்கும்.
எனவே, தவறுகளுக்கான தீர்வாக, 'தீபா மேத்தா'விடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும், பொருப்புக்கூறலுடனான மன்னிப்புக்கோரல் தமிழர் தரப்பால், கூட்டாக வலியுறுத்தப்படவேண்டும்.
'FUNNY BOY' திரைப்படம் தவறான வழிநடத்தலில், தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தி, வரலாற்றைத் திரிபுபடுத்திவிட்டது என்பதை, 'தீபா மேத்தா' பகிரங்க வெளியில் ஒப்புக்கொண்டு, தமிழர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும்.
அவ்வாறான மன்னிப்புக்கோரல் 'FUNNY BOY' யை சந்தைப்டுத்துகின்ற, அத்தனை மைய்ய ஊடகங்களின் செய்திகளிலும், படைப்புகளிலும் உள்ளடக்கப்படவேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்களும், செயற்பாட்டாளர்களும், அவர்களின் அமைப்புக்களும், உடனடியாகவே தமது கண்டங்களையும், அதிருப்திகளையும் பதிவு செய்யவேண்டும்.
இதுவே, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைக்கு, தமிழர்கள் கொடுக்கும் முதலடியாக இருக்கவேண்டும்.
'புட்டு'க்காக தலைமையின்றிக் குரல் கொடுத்த தன்மானத் தமிழர்கள், இவ்விடயத்தில் 'உணர்வுத் தோழமை'யுடன் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இல்லையேல், தீபா மேத்தாவை விட, நீங்களே குற்றவாளிகள்.
'வரலாறு' தவறாகப் பதியப்படுவதை அனுமதித்தாலும், அதுவும் ஒரு வரலாற்றுத் தவறே..!!!
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை

சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தமிழ் தேசியம் பேசுவோரை அடக்கி, கேள்வி கேட்கும் CMR உதயன், புலிகளின் செயல்களை விமர்சிக்கும் CMR உதயன். இவரை துணைக்கு அழைத்திருக்கிறீர்கள். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தமிழ் தேசியம் பேசுவோரை அடக்கி, கேள்வி கேட்கும் CMR உதயன், புலிகளின் செயல்களை விமர்சிக்கும் CMR உதயன். இவரை துணைக்கு அழைத்திருக்கிறீர்கள். 🤔

முகநூலில் அதிகமானவர்கள் பார்வையிட்ட தமிழ் ஆக்கம் எது என்று தேடியபோது சமீபத்தில் cmr உதயனின் இந்த ஆக்கம் கண்ணில் பட்டது இங்கு இணைத்துவிட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் சுதன் மஹாலிங்கம். இந்த திரைப்படத்தில் நடிக்க தெரிவாகிஇருந்தவர்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்றிரவு Netflix இல் பார்த்தேன். மிக நுணுக்கமாக விமர்சகர் போல பார்க்காமல் indie படங்களைப் பார்ப்பதுபோலத்தான் பார்த்தேன்.  எதுவும் உறுத்தலாக இருக்கவில்லை. கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் பணம் படைத்தவர்களாக இருந்தாலும், சிங்களவர்களுக்கு சமமாக வாழமுடியவில்லையே என்று இனவுணர்வு கொள்வதை படம் காட்டியுள்ளது. தமிழர்கள் சிறிலங்காவில் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ தயார் என்றால்தான் வாழலாம். அப்படி வாழ முடியாதவர்களுக்கு போராடுவது அல்லது புலம்பெயர்வதுதான் தீர்வாக இருந்தது என்பதுதான் அரசியல் சாரம்சம்.

தமிழ்ப் பையனை தற்பாலினத்தவராகக் காட்டியது (நடிப்பு மிகவும் நன்றாகவே இருந்தது) கோபத்தைத் உதயன் பிள்ளை போன்றோருக்கு கோபத்தை தூண்டியிருக்கலாம்.

சிங்களவர்களின் வன்முறைதான் நேரடியாகக் காட்டப்பட்டிருந்தது. அநுராதபுரம் ரயிலில் படுகொலை செய்வதும், 83 இனக் கலவரத்தில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து தம்மை பொலிஸ் என்று சொல்லியே கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும் காட்டப்பட்டிருந்தது.

நல்ல படங்களைப் பார்த்துப் பழக்கமாக இருந்தால் குத்தி முறியமாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2020 at 21:09, nunavilan said:

FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..? 

நுணா இணைத்திருந்த காணொளியை இன்று தான் நான் பார்த்தேன். இந்த கருத்து உரையாடலில் பங்கு பற்றியவர்களில் நண்பர் பேராசிரியர் சேரனை போல தமிழ் இலக்கிய; இலக்கண; சமூக பிரக்ஞை கொண்டவர்கள் எவரும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். 

என்னுடைய பார்வையில்; இந்த உரையாடலின் நெறியாளர் உதயனின் போலித்தனம் நன்கு தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.சேரன் அவர்கள் அவரை வைத்து செய்துள்ளார்கள்.

தான் தொழில் புரியும் வானொலி நிகழ்ச்சிகள்; விளம்பரங்கள்; இவற்றில் எல்லாம் தூய தமிழை தேடாத உதயன் எதற்காக இப்படி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் குதிக்கிறார்? அவரே நடத்தும் வானொலி கருத்தாடல் நிகழ்ச்சிகளில் தமிழ் தேசியம் பேசும் பலருடைய குரல்களை இடைமறித்து தன்னுடைய கருத்தை மட்டுமே விதைத்த நெறியாளர் தான் உதயன்.

இந்த பேட்டியிலும கூட அவர் இதைத்தான் செய்ய முயற்சிக்கிறார்.

எப்படியோ; இந்த படம் தமிழர்களின் வசூலை நம்பி வெளிவந்த கமல்; ரஜினி போன்றோரின் மசாலா படம் அல்ல. நீங்கள் பார்த்தாலோ பார்க்காமல் விட்டாலோ அவர்களுக்கு நட்டம் ஏற்படப்போவதில்லை.

அப்படியே இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தாலும் அது எங்களுக்கான விருதும் அல்ல; அப்படியே அது கிடைக்காமல் போனாலும் அது எங்களுக்கான தோல்வியும் அல்ல.

Your assumptions are your windows on the world. Scrub them off every once in a while, or the light won't come in.

~~~ Isaac Asimov.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

இது ஒரு புத்தகத்தை வைத்து எடுத்த படம் 
புத்தக ஆசிரியர் சொல்லாத பல விடயங்களை 
சிங்கள போலீசும் ஆமியும் நல்லவர்கள் போன்ற காட்சி அமைப்புக்கள் 
என்னைப்பொறுத்தவரை தேவை அற்றது. 
எமது இன விடுதலைக்கு  சுயலவாதிகள்  துரோகிகள் தடையாக இருப்பதை 
எந்த குத்துமுறிவும் நியாயம் ஆக்கிவிட போவதில்லை 

நன்கு திட்டமிட்டு நடத்தப்டட இனப்படுகொலையை 
இனப்படுகொலை என்று சொல்ல கூட வக்கில்லாத ஒரு இனமாக 
இன்று ஈழ தமிழினம் இருக்கிறது என்றால் அதுக்கு சிங்கள இனவாதிகள் 
மட்டுமே காரணம் அல்ல இவ்வாறான சிறு சிறு வெள்ளை அடிப்புகளும் 
முக்கிய காரணம் இதை தெரிந்தும் சுயலாபத்துக்கும் ஒரு சில சுகபோகங்களும் 
சிலர் செய்கிறார்கள் ....... இவற்றுக்கான எதிர்ப்பு என்பது 
தெரியாமல் செய்பவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக நிச்சயம் அமையும்.

இங்கு மேலே இருக்கும் சில கருத்துக்கள் போல படைப்பவனுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது?
விமர்சிக்கிறவனுக்கு மட்டும் வாய்ப்பூட்டு இருக்கவேண்டும் என்ற எண்ணம் 
எந்த ஆதிக்க எண்ணத்தின் வடிவத்தில் இருந்து வருகிறது? 

தமிழ்இனதுக்கு இது பாதிப்பாக இருக்கிறதா என்றால்.
ஆம் நிச்சயமாக இந்த கால நேரத்தில் சிங்கள காடைகள் இராணுவ போலீஸ் பற்றிய
ஒரு நல் அபிப்பிராயத்தை உண்டுபண்ணும் சில காட்சிகள்  குறிப்பாக புத்தகத்தில் 
இல்லாதவைகள் புகுத்தப்பட்டு மாற்று இனத்தவருக்கு ஒரு தவறான செய்தியை கொண்டு செல்கிறது 

Your assumptions are your windows on the world. Scrub them off every once in a while, or the light won't come in.

~~~ Isaac Asimov.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Maruthankerny said:

விமர்சிக்க உரிமை இல்லையென்று சொல்லவில்லை! ஆனால், விமர்சிப்பின் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? தமிழ் சரியில்லை என்பது நியாயம். ஆனால்,  ஒரு தரப்பின் அரசியல் கருத்தை (rhetoric) காட்டமாகப் பிரதிபலிக்கவில்லை என்பது விமர்சனத்தின் அடிப்படையாக இருக்க வேண்டுமானால் வடகொரிய பாணி படங்கள் மட்டும் தான் இந்த "விமர்சகர்களின்" பாராட்டைப் பெறும் நிலை வந்து விடும்! 

அதனால் தான், காட்டமான அரசியல் சார்பு இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் விமர்சகர்கள் தாமே படைப்பாளிகளாக வேண்டுமென்று சொல்லப் பட்டிருக்கிறது! இன்னொருவரின் உழைப்பில் நம் காரியம் இலவசமாக நிறைவேற வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியல்ல!

(எந்தப் புத்தகமும் படமாகும் போது அப்படியே எடுப்பதில்லை! ஹரி பொட்டரில் இருந்து ஹில்பிலி எலெஜி வரை இது தான் நடைமுறை. இதன் காரணம், படத்தைப் பார்த்து விட்டு புத்தகத்தை மக்கள் வாங்காமல் விட்டு விடக் கூடாது என்கிற பொருளாதார நோக்கம் தான்!)

உரிமை பெற்று இவ் நாவலை தமிழில் மொழிபெயர்த்து சரிநிகரில் எழுதிக் கொண்டு இருந்த விக்கினேஸ்வரன் (சேரனது சகோதரி அவ்வையின் கணவர்) இத் திரைப்படத்தை பார்த்து விட்டு எழுதியது

//Funny boy படம் பார்த்தேன். நாவலை மொழிபெயர்க்க 1998 இலேயே தொடங்கியவன் என்ற முறையில் எனக்கு மிக மகிழ்ச்சி. நாவலில் இருந்தவற்றை விட படத்திற்காக சில விடயங்கள், புதிதாக திரைக்கதையயும் எழுதிய  அதே நாவலாசிரியர் ஷியாம் செல்வத்துரை அவர்களால் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த விடயங்களை சேர்த்தததில் நல்ல அம்சங்களும் இருந்தன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1983 கலவரத்துக்கு முன்பாகவே சிங்கள மக்களை புலிகள் படுகொலை செய்ததாக காட்டப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்போது நடந்தது, அதன் விபரம் என்ன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எனக்குத் தெரிந்தளவில், ஒரு பொய்யானன கதையே. சிங்கள மக்கள் மீதான புலிகளின் தாக்குதலை,நாவலில் இல்லாத இந்த விடயத்தை ,படத்தில் காட்டியிருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல கோபமும் கூட.
ஆனாலும் இதை விட்டுவிட்டுப் பார்த்தால் படம் நன்றாக இருந்தது என்பதே எனது கருத்து. தமிழ் மொழியில் பேசப்படும் உரையாடல்கள் பல இடங்களில் ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்தி படத்தின் சிறப்புக்குப் பங்கம் செய்தன என்றாலும் படம் மொத்தத்தில் நன்றாக இருந்ததென்பது உண்மையே.
ஆனால் வரலாற்றுப் புரட்டு மன்னிக்க முடியாதது. ஏனென்றால்  ஒரு  படத்தின் வெற்றியை விட மக்களின் எதிர்காலம்  முக்கியமானது
.//

ஈழத்து பிரபல எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான எஸ்.ரஞ்சகுமார் தன் முகனூலில் எழுதியது

//நான் படங்கள் சிலவற்றைப் பாருங்கள் எனச் சிபாரிசு செய்வது வழமை.
ஆனால். Funny boy படத்தைப் பாருங்கள் என எவருக்கும் சிபாரிசு செய்யப் போவதில்லை.
வரலாற்றுத் திரிபு, கற்றுக்குட்டித்தனமான செய்நேர்த்தி ஆகியவற்றால் சலிப்புற்றேன்//

----------------------------------------------------------------------

வரலாற்று திரிபு என்பது அரசியல் நிலைப்பாடு அல்ல. அது பொய். பித்தலாட்டம் மற்றும் வரலாறு இடம்பெற்ற காலத்துக்குரியவர்கள் மீது இகழப்படும் அவமானம். புத்தகத்தில் இல்லாத ஒன்றை வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இவற்றை ஒரு இயக்குனர் காட்சிப்படுத்தி இருப்பார் என்பது சப்பைக்கட்டே ஒழிய வேறு எதுவுமாக இருக்க முடியாது. 

இலங்கையில் இடம்பெற்ற அனைத்து கலவரங்களும் இனக்கலவரங்கள் என்ற வகைக்குள் கூட அடங்க முடியாதன. ஏனெனில் இனக்கலவரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு இடையிலான கலவரம். ஆனால் இலங்கையில் சிங்கள இனம் இன்னொரு இனத்தை (மற்ற இனம் வன்முறையில் ஈடுபடாதிருந்த பொழுதுகளில்) அழிக்க முற்பட்ட சம்பவங்கள் தான் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்கள் அனைத்திலும் இலங்கை பொலிசும் படைகளும் அழித்தொழிப்புக்கு உதயினவே ஒழிய, ஒரு போதும் சிறுபான்மை இனத்தை பாதுகாக்க முற்படவில்லை. எனவே அப்படி ஒரு காட்சியை வைப்பது என்பது வெறும் வியாபார நோக்கத்துக்குரிய ஒன்றுதான் அரசியல் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு விளையாட்டு அணி மோகமாக விளையாடும் பொழுது அதை விமர்சிப்பவர்களை பார்த்து "வேணுமென்றால் நீ போய் விளையாடு, முடியாவிட்டால் வாயைப் பொத்திக் கொண்டு இரு" என்று சொல்வது போலத்தான், இப் படத்தை எதிர்மறையாக விமர்சிக்கின்றவர்களை பார்த்து "நீங்களே படம் தயாரிக்கலாமே" எனக் கேட்பதும்.

பெருமாள் இணைத்து இருந்த பதிவின் மூலம் இப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு இலங்கை தூதரக அதிகாரிகளும் அழைக்கப்பட்டு இருந்தார்கள் என்று அறிய முடிகின்றது. இது எனக்கு மணிரத்தினம் தன் பம்பாய் படத்தை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அன்றைய தலைவர் பால்தாக்கரேக்கு போட்டு காட்டியதைத் தான் நினைவுபடுத்தியது.

இப் படத்தை நான் பார்க்கவில்லை. இனவழிவுக்குள்ளாகும் தமிழ் இனத்தை சார்ந்தவன் என்ற ரீதியில் திரைப்படத்தில் இருக்கும் நல்ல காட்சியமைகளுக்காக வரலாற்று திரிபுகளை ரசிக்க போவதும் இல்லை அதே நேரத்தில் அரசியல் எல்லாம் இரண்டாம் பட்சம், வரலாற்று திரிபுகள் என்றாலும் மற்ற இனம் எம்மை பாவம் பார்த்து எம் மேல் இரக்கப்பட செய்யும் என்ற நோக்கத்திற்காக பார்த்து ரசித்து மற்றவர்களுக்கு சிபாரிசு செய்கின்றவர்களையும் இகழப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

ஒரு சம்பவம் வரலாற்றில் நடக்காததைக் குறிப்பிட்டு விட்டதால் பாரிய திரிப்பு முயற்சி என்று நான் நினைக்கவில்லை. ஆனால் 2 , மூன்று திரிப்புகள் என்று இதற்கு ஒரு cut off வைக்க முடியுமென்றும் நினைக்கவில்லை. எனவே அப்படி விமர்சகர்கள், எதிர்ப்பாளார்கள் நினைத்தால் நினைக்கட்டும்.

இந்த திரிப்பு வியாபார நோக்கமென்று நான் சொல்லவில்லை. புத்தகத்தில் இல்லாத விடயங்கள் சேர்த்து, இருக்கும் விடயங்கள் தவிர்ப்பது இரண்டையும் தொடர்ந்து விற்கும் நடைமுறை. இது வழமை.

மேலும், இலங்கை அதிகாரிகளோடு ஷியாம் நட்பாக இருந்தது எனக்கு ஆச்சரியமில்லை. பல ஆண்டுகளாக சிங்கள தமிழ் இளையோருக்கு எழுத்துப் பட்டறை மூலம் இன நல்லிணக்கம் என்ற ஒரு பயிற்சியை அவர் இலங்கையில் நடத்தி வந்ததாக அறிந்தேன். எனவே, தமிழர் சிங்களவர் ஒற்றுமையைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து விட்ட ஒருவர் தான் அவர்.

ஒரு விளையாட்டு அணியின் விளையாட்டை விமர்சிப்பது அல்ல இங்கே கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. அந்த அணி விளையாடும் போது ஒரு குறிப்பிட்ட உடையை அணிந்து விளையாடா விட்டால் விமர்சிப்பது விமர்சனமா என்பது கேள்விக்குரியது! எனவே, "விரும்பின உடையை அணிந்து கொண்டு நீங்களே விளையாடலாமே?" என்று சொல்வதில் ஒரு தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!  

ஒரு உழைப்பு முதலிடப் பட்டிருக்கிறது. அதில் முதலிட்டவர் சம்பவங்களைத் தன் பார்வையினூடாக தன் சொந்த செலவில் சொல்லும் உரிமை இருக்க வேண்டும்!  

அதை நிபந்தனையின்றிப் பாராட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்லை! ஆனால், உடனே ஒரு  மக்கள் கூட்டத்தை பகிஷ்கரிக்கத் தூண்டும் நிராகரிப்பு அவசியமற்றது என நினைக்கிறேன்!
 
இத் திரைப்படத்தினை நேர்மையாக அணுகிய இன்னொரு விமர்சனம். நேரம் இருக்கின்றவர்கள் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மனைவி பார்த்துக் கொண்டிருந்த போது இடையிடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கமெரா, கண்ணில் பட்ட நடிக நடிகையரின் நடிப்பு என்பன சிறப்பாக இருந்தன. தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அக்கிரமங்களை பெருவாரியாகக் காட்டியிருக்கிறார்கள். 

இலங்கை தொடர்பான period piece ஆக இந்தத் திரைப்படம் அமையும்! 👍

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இந்த திரியில் சசி குத்தி முறிந்து கருத்து எழுதுகிறார் என்று யாரும் நினைக்கலாம்.
என்னவோ தெரியவில்லை, ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, இந்த படம் என்னை போன்றோரின் வாழ்க்கையின் பதிவு, துயரங்களை ஒரு கொஞ்சம் காட்டி செல்கிறது. இது இன்னமும் தீர்க்கப்படாத துயரமே. 
அது தவிர எதிர்மறையான எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு படைப்பை தள்ளி வைக்கும் போக்கு என்னால் சகிக்க முடியாமல் இருந்தது.
மேலே இணைத்துள்ள 2 பேட்டியிலும் கூட அடிப்படை புரிதல் இல்லாத ஒருசிலரின் தூண்டுதல்கள் காரணமாகவும் இருக்கிறது. 

நுணா இணைத்த கலந்துரையாடலில் பேசிய ஒரு சிலர் என்ன பேசுகிறார்கள் என்றும் கூட புரியவில்லை.
ஆன் அரியதாசா கேட்கிறார் "Can a German actor given a role to play a s a Jew, does that make sense etc!!!
இப்படியானவர்கள் தான் இப்போது எமது சமூகத்துக்கு வழி காட்டிகள்.!!!👆

1982 இல் வெளிவந்த காந்தி திரைப்படம், காந்தியின் கதாபாத்திரத்தில், இந்தியாவை காலனித்துவப்படுத்திய அதே பிரிட்டிஷ் நாட்டின் நடிகர் பென் கிங்ஸ்லி தான் நடித்திருந்தார். எந்த வெள்ளை இனத்துக்கு எதிராக காந்தி போராடினாரோ, அதே இனத்தவர் தான் காந்தியாகவும் நடித்தார். அதுமட்டுமல்ல சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றார். தவிர அந்த ஆண்டுக்கான 8 பெரும் ஆஸ்கர் விருதுகள் காந்தி திரைப்படத்துக்குத்தான் கிடைத்தது.
இதை எல்லாம் தாண்டி இன்னும் பல அவார்டுகள் வாங்கி குவித்த படம் அது.

நிழலி இணைத்த 2ஆவது பேட்டியில் நிறையவே பேசிய துஷி ஞானப்பிரகாசம்; முடிக்கும் போதுதமிழர்கள் எங்கள் கதைகளை, நாங்களே கூறும் பொழுதுதான் எங்கள் லாப நட்ட கணக்குகள் சரியாக தீர்க்கப்படும். அப்படி இல்லவிட்டால் இப்படி கொதிதெழுந்து எதிர் வினை ஆற்றுவதும் தொடர்கதை ஆகிப் போகும். அதிலும் நாங்கள் உடன் படாத எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறுவதில் ஞாயம் இல்லை . அது எமது குரலையும் குறிக்கோளையும் குறுக்கி தனினைப்படுத்தி விடும். உணர்வு தோழமையோடு நீட்டப்படும் கரங்களை தட்டி கழிக்கும் சொகுசு நிலை தமிழர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்றே முடிகிறார்.

~~~~ ~~~ ~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~~~

என் பார்வையில் ஏதும் கோளாறா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள மீண்டும் ஒரு முறை இந்த படத்தை நேற்று பார்த்தேன். படத்தில் வரும் தமிழ், சிங்கள, ஆங்கில உரையாடல்களையும் இடைநிறுத்தி சரியாக புரிந்து கொண்டு குறிப்பெடுத்துக்கொண்டு பார்த்த ஒரு திரைப்படம் இது.
உங்கள் பார்வைக்காக எனது குறிப்புகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் போது இந்த திரைப்படத்தை சிங்களவர்கள் தான் மூர்க்கமாக எதிர்த்து இருக்க வேண்டும்.  இங்கே என்னவோ மாறி நடக்கிறது.

இதோ அந்த உரையாடல்கள். இதில் சில தமிழர்கள் மேல் வசைபொழிய பயன் படும் ஆபாச வார்த்தைகள் வரும், அதை நான் அப்படியே இணைக்கிறேன். தயவு செய்து, வெட்டி முடக்காதீர்கள்.

காட்சி 1. 
ஆர்ஜி (நாயகன்) கொழும்பில் பிரபல பாடசாலையில் (St .Thomas a.k.a Victoria Academy) முதல்நாள் வகுப்பிட்குப் போகிறார்.
அங்கே நடக்கும் சில உரையாடல்கள், சம்பவங்கள் சிங்கள மாணவர்கள், தமிழ் மாணவர்களை நோக்கி பிரயோகிக்கும் துவேஷ வசனங்கள் மற்றும் காட்சிகள்:

"Hey selvaratnam, this is 12C the Sinhala  class, you want 12F for your brother the Tamil class.

no Salgadhu, I want 12C.  நீ உள்ளே போ. Wait you are in the Sinhala class. My parents put me here to assimilate. 
Assimilate ....we want our separate state, our independence.. I see you Tamils are wining here for the last 15 years, we don't want you here anymore.

 பள்ளிக்கூட கழிப்பறையில் ஒரு தமிழ் மாணவனை தாக்கும் சிங்கள மாணவர்கள் கூறும் வசனங்கள் : 
Another Tamil dog. Hey Chelliah; don't you know better  than using this toilet!! you Tamil...there are plenty of toilets here... (and they go on to beat the guys behind the washroom doors.) தமிழ் மாணவனை கழிப்பறைக்குள் இழுத்துச்சென்று தாக்குவார்கள்.

காட்சி 2. 
ஆர்ஜியின் குடும்பம் கடைத்தெருவில் கரி வாங்குவதற்கு ஒரு இறைச்சிக்கடைக்கு போவார்கள் அங்கே வரும் வசனங்கள்:
அம்மா தமிழ்ழ பேசக்கூடாது. நீங்க சிங்களத்தில் பேசுங்க. நீங்க தமிழ் பேசிட்டு போவீங்க, நீங்க பெரிய ஆக்கள். நாங்கள் இங்க இருக்கவேணும்.

காட்சி 3.

ஜெகன் எனும் கதாபாத்திரம் யாழ்பணத்து இளைஞர் என்ற காரணத்தால் அவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அப்போது ஜெகனை அங்கிருந்து கூட்டிச் செல்ல வரும் ஆர்ஜியின் குடும்பத்தாரிடம் ஜெகன் இப்படி கூறுவார்.
அந்த லேடி எனக்கு சொன்னார் All you Tamils are liars and murderers.

அப்போது ஆர்ஜியின் அம்மா கூறும் வசனங்கள்.
இதை எனது கணவருக்கு சொல்ல முடியாது! நான் உன்னிடம் சொல்கிறேன்; நான் புலிகளை அட்மயர் பண்ணுகிறேன். அவர்கள் மட்டும்தான் எங்களுக்காக சண்டை போடுகின்றார்கள்.

காட்சி 4 
கலவரம் ஆரம்பிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தமிழில் வாசிக்கப்படுகிறது. 
அதுக்கு அமைவான சில காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன.
"கோண்டாவில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலை புலிகள் அதனை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை முதல் ராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்கள். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழ் இளைஞர்களும்; சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்து தமிழ்மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரே அமைப்பு என்று அவர்களுடன் பெருமளவில் இணைந்து வருகிறார்கள். "

1977; 1981 ஆண்டுகளில் இடம்பெற்ற இனக் கலவரங்களில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் வீடுகள் சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இலங்கை இராணுவம் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதேவேளை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து பழிதீர்க்கும் முகமாக; வடக்கு கிழக்கு எல்லை கிராமங்களில் வசிக்கும் சிங்கள மக்கள் மீது விடுதலைப்பலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். "

காட்சி 5

ஆர்ஜியின் குடும்பம் அவர்களுக்கு சொந்தமான ஹோட்டலில் அமர்ந்திருப்பார்கள். ஹோட்டலுக்கு வெளியே அம்புலன்ஸ் வண்டிகளின் சத்தம் தொடர்ச்சியாக கேட்கிறது.
அந்த நேரத்தில் ஹோட்டலில் வேலை செய்யும் ஒரு ஊழியர் பின்வருமாறு பேசுகிறார்.
எல்லா ரேடியோக்களும் சொல்லுகிறார்கள்; "மே தெமலு அபே கொல்லன்ட கெவ்வே நேத்தம் மேம வென்னே ந‌." இந்த தமிழங்கள் எங்கட பொடியங்களுக்கு அடிச்சிருக்காட்டி இப்படி நடந்து இருக்காது. 

அம்புலன்ஸ் வண்டிகள் இருந்து பொதுமக்களின் ஊடகங்களும்; காயப்பட்டவர்களும் எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

காட்சி 6

ஆர்ஜியின்அப்பா, அம்மா உரையாடும் ஒரு பகுதி.

Bloody tigers who told them to fight for a Homeland. Certainly I did not. 

அப்போது ஆர்ஜியின் அம்மா கூறுவார்.
They are not fighting for people like us. I'm saying that they have a point and we can't ignore it. 
உங்களிண்ட மக்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்கோ.

காட்சி 7.
அதே ஹோடடலில் வேலை செய்யும் ஒரு சிங்கள உத்தியோகத்தரை ஜெகன்  நீ பொய்யன் என கடிந்து கொள்கிறார். அதற்கு அந்த சிங்கள உத்தியோகத்தர் மிகவும் ஆத்திரத்தோடு; நீ வாயை மூடு என்று கூறி ஜெகனின் கன்னததில் பலர் முன்னிலையில் அறைந்து விடுகிறார்.

பிறகு வரும் உரையாடலில் ஆர்ஜீயின் அப்பா ஜெகனுக்கு இப்படிச் சொல்வார்
நான் உனக்கு ஹையர் போசிஷன் தந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நானும் தமிழன் நீயும் தமிழன்.
அதற்கு ஜெகன் சொல்லும் வசனங்கள்
எல்லாத்தையும் உங்க கிட்ட இருந்து சிங்களவர் பிடுங்கிக் கொண்டு போகும் வரையில் தான். 
போட்டி போட விட மாட்டாங்கள்‌. உங்களிடம் இருக்கிறது எல்லாத்தையும் எடுத்துக் கொள்வாங்கள்
.

பிறகு ஒரு கட்டத்தில் ஜெகன் போலீசாரால் கைது செய்யப்படுவார். 
அதுகுறித்த சில உரையாடல்கள்.
Prevention of terrorism act. அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். 

காட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை பிடித்து சிறையில் வைத்திருப்பதை காட்டுவார்கள். அவர்களின் குடும்பத்தார் கதறி அழும் காட்சியும்; போலீசாரிடம் கெஞ்சி மன்றாடு வதையும்
காட்சி படுத்தியிருப்பார்கள் .

காட்சி 8.
கலவரம் ஆரம்பம். அந்த சம்பவத்தோடு சார்ந்த உரையாடல்கள்.
ஊருக்குள்ள கலவரமாம். தமிழர்களுக்கு அடி விழுகுது; கொழும்பில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

வன்முறையில் ஈடுபடும் சிங்கள காடையர்கள் கூச்சலிடும் வசனங்கள்:
Kill the Tamils; burn them alive. 
Bastards; fucking Tamils; how dare they . 
Every Tamil is a tiger. Kill them all!!!

இரவோடு இரவாக ஆர்ஜீயின் குடும்பம் அவரின் பக்கத்து வீட்டு சிங்கள நண்பர் பெரேரா வீட்டுக்குள் அடைக்கலம் புகுவார்கள்.
அப்போது பெரேரா கூறும் வார்த்தைகள்
நான் ஒரு சிங்களவனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்
பெரேரா அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பழைய ஸ்டோரேஜ் அறையில் ஒளித்து கதவை பூட்டுகிறார்.
அப்போது பெரேராவின் மனைவி இப்போதைக்கு இந்த இடம் மட்டும் தான் உங்களுக்கு பாதுகாப்பானது என கூறுகிறார்.

கலவரக்காரர்கள் பெரேராவின் வீட்டை ஆக்ரோசமாக கதவை தட்டி உள்ளே பாய்கிறார்கள்..
"அவர்கள் எங்கே" "அந்த தமிழர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்" "எங்கே அந்த பயங்கரவாதிகள்" என்று மீண்டும் மீண்டும் கோபத்தோடு கத்துகிறார்கள். பெரேராவின் குடும்பம் அவர்களிடம் மன்றாடுகிறது. 
நாங்கள் நல்ல சிங்கள மனிதர்கள். எங்களுக்கு தொல்லை தராதீர்கள் நாங்கள் போலீசாரை கூப்பிடுவோம்.

இதற்கு அந்த கூட்டத்தில் உள்ள குண்டர்கள் நாங்களே போலீஸ் தானே , நாங்கள் போலீஸ் தான்  என்று இரண்டு மூன்று முறை கூறிக்கொண்டு வீட்டிலுள்ள எல்லா ரூமிலும் பலவந்தமாக புகுந்து தேடுவார்கள்.

ஆர்ஜீயின் குடும்பம் அந்த குண்டர்களிடம் இருந்து தப்புகிறது.

அந்தப் குண்டர் படையும் கோபத்தோடு அங்கே இருந்து கிளம்பி, இன்னும் ஒரு வீட்டை நோக்கி கத்திகள் பொல்லுகளோடு ஆவேசமாக பாய்கிறது.
அப்போது அவர்கள் போடும் கூச்சல்கள்.
இந்த வீட்டிலே நிறைய விலை உயர்ந்த பொருட்கள் இருக்கின்றன. 
Mother fucking Tamil. Burn them all burn them all...
வீடுகள் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. ஆண்கள் பெண்கள் அவர்கள் கண்ணில் பட்ட எந்த பொருளையும் விட்டுவைக்காது தூக்கிச் செல்கிறார்கள். 
கொண்டுசெல்ல முடியாதவற்றை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார்கள்.

கலவரம் அடங்கி சில நாட்களில்:
நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒரு ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் அகதிகளாக கூறியிருப்பார்கள்.
குடி தண்ணீருக்கும் சாப்பாட்டுக்கும் சண்டை பிடிக்கும் மிகவும் அவலமான  நிலையில் இருப்பார்கள்.

நான்கு மாதங்களின் பின்னர் ஆர்ஜியின் குடும்பம்; சொத்துக்கள் உறவுகள்; அனைத்தையும் இழந்து நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக கனடாவுக்கு குடி பெயர்கிறது.

திரைப்படத்தின் முடிவில் ஆங்கிலத்தில் இந்த வசனங்கள் காட்டப்படுகிறது.

After 26 years the Sri Lankan civil war ended in 2009. More than a million Tamils left Sir Lanka has refugees within that period.
 
தமிழில்ஏதும் எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்காமலேயே முகப்புத்தகத்தில், யூரியூப்பில் வரும் வியாக்கியானங்களை  வைத்து யானை பார்த்த குருடர்கள் அதிகம் குத்திமுறிகின்றார்கள். பார்த்து விலாவாரியாக எழுதிய சிலர் தமது உள்நோக்கத்தை காட்டியுள்ளனர். 

புலிகளின் ஆளுகைக்குள் சுதந்திரமாக இருந்தவர்களுக்கும், கொழும்பில் ஆதிக்க மனநிலையில்  உள்ள சிங்களவர்களின் மத்தியில் தினம் தினம் அவமானங்களை தமிழன் என்ற காரணத்தால் அடைந்தவர்களுக்கும் உள்ள மனநிலை வேறுபாடு புரிகின்றது. இப்படி அவமானங்களைச் சந்தித்த கொழும்பில் வசித்த தமிழர்கள் பலர் சண்டைகளில் புலிகள் வெல்லும்போது மகிழ்ந்தும், தோற்கும்போது கவலைகொண்டும், அந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டமுடியாத அடக்குமுறைக்குள் வாழ்ந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

"1982 இல் வெளிவந்த காந்தி திரைப்படம், காந்தியின் கதாபாத்திரத்தில், இந்தியாவை காலனித்துவப்படுத்திய அதே பிரிட்டிஷ் நாட்டின் நடிகர் பென் கிங்ஸ்லி தான் நடித்திருந்தார். எந்த வெள்ளை இனத்துக்கு எதிராக காந்தி போராடினாரோ, அதே இனத்தவர் தான் காந்தியாகவும் நடித்தார். அதுமட்டுமல்ல சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றார். தவிர அந்த ஆண்டுக்கான 8 பெரும் ஆஸ்கர் விருதுகள் காந்தி திரைப்படத்துக்குத்தான் கிடைத்தது.
இதை எல்லாம் தாண்டி இன்னும் பல அவார்டுகள் வாங்கி குவித்த படம் அது."

இவை தற்செயல்களாக நடந்ததில்லை 
எல்லாம் தாய்ச்செயலாக நடந்தவை 

80 இறுதிகளில் 90 களில் ஒசாமா பின்லேடன்கள் 
ராம்போவாக உலக திரை அரங்குகளை அலங்கரித்தது ஒன்றும் 
படைப்புகள் இல்லை எல்லாம் நன்கு திட்டம்மிட்ட பரப்புரைகள். 

மேலே இருக்கும் சில கருத்துக்களை வாசித்தால் சில மனநிலைகள் 
உங்களுக்கு புரியலாம் ... தாங்கள் வாசித்தால் நல்ல புத்தகம் தாங்கள் பார்த்தால் 
நல்ல படம். தாம் சொன்னால் எல்லோரும் வாயை பொத்திக்கொண்டு கேட்க வேண்டும் என்ற 
மாதிரியான ஒரு வக்கிர மனநிலையை எழுத்திலே எழுதி நிரூபித்துக்கொண்டு மகான்களுக்கு 
நாடகம் போடும் எழுத்துக்களையும் கருத்துக்களையும் பார்க்கலாம். இவ்வாறான ஒரு மேதாவி கூட்டம் 
இருக்கிறது என்பது பரப்புரை காரர்களுக்கு நன்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இந்திய சினிமாக்களை அலங்கரிக்கும் 
கே GAY படங்கள் குறும்படங்கள் எல்லாம் மேலோட்டமாக அவர்கள் படும் துன்பங்களை 
வெளிக்கொணரும் படமாகவே தெரியும் .. இது எவ்வாறான பாதிப்பை 
ஒரு சமூகத்தில் உருவாக்கும் என்பதை நீங்கள் அமெரிக்க கனடா குறிப்பாக 
தென் அமெரிக்க நாடுகளில் காணலாம். காரணம் இவ்வாறான ஒரு மறைமுக பரப்புரையை 
10-20 வருடங்கள் முன்பு சந்தித்த சமூகமாக இவர்கள் இருக்கிறார்கள். 
இப்போ தான் ஆணா? பெண்ணா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சொல்ல கூடிய 
ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே வாழுகிறார்கள். இது உடல் ரீதியான பாதிப்பு இல்லை முழுவதும் 
மன நிலை சார்ந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உடலும் மனதும் சார்ந்த ஒரு விளங்க முடியா கவிதை பாலியல் அடையாளம் (sexuality). ஆங்கிலத்தில் innate என்பார்கள். தமிழில் உள்ளார்ந்தது எனலாம். அதை அவர் அவர் மட்டும்தான் உணர முடியும்.

ஒரு ஓரினசேர்க்கையாளரை பிரச்சாரம் மூலம் மாற்றின சேர்க்கையாளராக மாற்ற முடியாது. அதே போல ஒரு மாற்றின சேர்க்கையாளரையும் ஓரின சேர்க்கையாளராய் மாற்ற முடியாது.

சூழவும் ஓரின சேர்க்கை வெறுப்பை உமிழும் சமூகத்தில், தன்னுள் எழும் உணர்சிகளை என்ன என இனம் பிரித்து அறிய முடியாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, நீங்கள் ஒன்றும் தப்பானவர்கள், தப்பி பிறந்தவர்கள், சாத்தானின் பிள்ளைகள் இல்லை, நீங்கள் பாலியல் சிறுபான்மையினர் மட்டுமே என்ற நம்பிக்கையை, மன நிம்மதியை இந்த படங்கள் கொடுக்கலாம்.

படம் பார்த்து மாறும் விடயமில்லை பாலியல் அடையாளம் (sexuality/sexual identity).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.