Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. 

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும். 

இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/17103651/2169549/Tamil-News-Free-flight-from-Australia-for-Kailash.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சாமி சிலோனுக்கு ஒரு பிளைன விட்டு ஏத்துங்க எங்களை கைலாசவை ஒரு கணக்கு பார்க்கணும் உங்கள பார்க்காட்டியும் உங்க சிஸ்யைகளை நான் பார்த்தே ஆகணும் பிளிஸ்😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாமி சிலோனுக்கு ஒரு பிளைன விட்டு ஏத்துங்க எங்களை கைலாசவை ஒரு கணக்கு பார்க்கணும் உங்கள பார்க்காட்டியும் உங்க சிஸ்யைகளை நான் பார்த்தே ஆகணும் பிளிஸ்😜

என்னவோ  தெரியல

கல்யாணம் கட்டிய  பின்னர் தான்  இந்த  உற்சாகம் பீறிட்டுக்கொண்டு  கிளம்புது????😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும். 

சேர்ந்தா..? 

Screenshot-2020-12-17-23-31-41-564-org-m

தனியாவே கும்பிடுறம் ..👍

  • கருத்துக்கள உறவுகள்

சாமி.. ஞானசம்பந்தர் தேவாரத் திருபதிகள் விளங்கும்..  ஈழத்தில்.. கார்த்திகை விளக்கீட்டு விளக்குகளை காலால் தட்டி சைவத்துக்கு அவமதிப்புச் செய்யும் மகிந்த கும்பலை என்ன செய்யப் போறீங்கள். அதுதொடர்ப்பான அறிவிப்பு எதுவும் ஏன் விடுறீங்கள் இல்லை. ஏன் வம்பை விலைக்கு வாங்குவான் என்றோ...??!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா டு கைலாசா... இலவச விசா... கருட விமானத்தில் ஆன்மிக சுற்றுலா! - நித்யானந்தா அதிரடி!

நித்தியானந்தா

நித்தியானந்தா

``ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வரை சொந்தச் செலவில் வந்தால், அங்கிருந்து கைலாசா நாட்டின் சிறிய ரக விமானமான கருட விமானத்தில் கைலாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்'' - நித்யானந்தா

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து, கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து, அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கிளை ஆசிரமங்களைத் தொடங்கியவர் நித்யானந்தா. 2010-ம் ஆண்டு முதல் பல சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வந்தவர், கடந்த சில மாதங்களாக புதிய நாடு உருவாக்கியிருப்பதாகக் கூறி வந்தார். அந்த நாட்டுக்கு `கைலாசா' என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் நித்யானந்தா.

சத்சங்க சொற்பொழிவு!

பல குற்ற வழக்குகள் காரணமாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, `நான் தனி நாடு உருவாக்கிவிட்டேன்' என்று சொன்னது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ``நித்யானந்தா தனி நாடெல்லாம் உருவாக்கவில்லை. நேபாளத்துக்கு அருகே எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்'' என்ற செய்திகளும் சொல்லப்பட்டன. இந்த நிலையில் `சத்சங்கம்' என்கிற பெயரில் தினசரி வீடியோ வெளியிட்டுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார் நித்யானந்தா. அந்த வீடியோக்கள் எங்கு எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து இன்டர்போல் காவல்துறையினர், நித்யானந்தாவுக்கு எதிராக `ப்ளூ கார்னர்' நோட்டீஸ் அனுப்பினர்.

நித்யானந்தா
 
நித்யானந்தா

தனது சத்சங்க சொற்பொழிவுகள் மூலம் பல அதிரடி தகவல்களை வெளியிட்டு வந்தார் நித்யானந்தா. கைலாசா நாட்டின் கொடி, கரன்சி நோட்டுகள், ரிசர்வ் பேங் ஆஃப் கைலாசா, பாஸ்போர்ட் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் நித்தியானந்தா. இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.

கைலாசா - இலவச சுற்றுலா!

டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்ட சத்சங்க சொற்பொழிவு வீடியோவில், கைலாசாவுக்கு 3 நாள்கள் இலவச சுற்றுலா ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். ``கைலாசாவுக்கு வரவேண்டுமென விரும்புபவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி இலவச விசா வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வரை சொந்தச் செலவில் வந்தால், அங்கிருந்து கைலாசா நாட்டின் சிறிய ரக விமானமான கருட விமானத்தில் கைலாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
நித்தியானந்தா

மேலும், ``கைலாசா நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பும் வரை உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து ஆகியவை இலவசமாகச் செய்து தரப்படும். ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 பேருக்கு நேரடி தரிசனம் தருவேன். இங்கு வருபவர்கள் அனைவரையும் நீங்கள் பரமசிவனாகப் பார்க்க வேண்டும். சிவனை வழிபடுகின்ற ஆன்மிக நோக்கத்தோடு மட்டுமே இங்கு வரவேண்டும்'' என்று பேசியிருக்கிறார் நித்யானந்தா.

நித்தி
 
நித்தி

ஆஸ்திரேலியா வரை வரவேண்டுமென நித்யானந்தா சொல்லியிருப்பதால், அவர் தங்கியிருக்கும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ளதா என்கிற கேள்வியெழுந்துள்ளது. அதேநேரத்தில் `கைலாசா' என்கிற பெயரில் எந்தவொரு நாடும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, `அப்படியொரு நாடு இருக்கிறதா... நித்யானந்தா எங்கேயிருக்கிறார்?' என்கிற கேள்விகளுக்கெல்லாம், இந்த ஆன்மிக சுற்றுலா நடைபெற்றால் மட்டுமே விடை தெரியவரும்.

https://www.vikatan.com/spiritual/miscellaneous/nithyananda-announces-free-visa-and-flight-services-from-australia-to-kailasa

இனி மூன்று நாட்கள் கைலாசாவில் தான் 😍

  • கருத்துக்கள உறவுகள்

கருடா (Garuda) என்பது இந்தோனேசியாவின் விமான சேவையாகவும் இருக்கக் கூடும். பல உலக நாடுகளில் கருடா சேவை பறப்பதற்குத் தடை இருக்கிறது! அவர்களது தரம் அத்தகையது😎!

https://www.smh.com.au/world/indonesian-airlines-rank-lowest-in-world-for-safety-20160106-gm0hx4.html#:~:text=Most of Indonesia's airlines are,exception to the EU ban. 

அவுஸ் வாசிகள்  அவசரப் பட்டு நிஜக் கைலாசாவுக்கே போய் விடாதீர்கள்!   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அவுஸ் வாசிகள்  அவசரப் பட்டு நிஜக் கைலாசாவுக்கே போய் விடாதீர்கள்!   

எங்குமே காணமுடியாத, அதுவும் வீடியோக்களில் அன்றிப் படங்களில் கூடக் காணமுடியாத கன்னிகளைக் கான்பதற்கு முசுலீம்கள் தங்கள் இன்னுயிரைவிட்டுச் சொர்க்கத்துக்கே போகிறார்கள்.

ஆட்டம் பாட்டமென் கண்ணால் காணக்கூடிய இளம் கன்னிகளைக் காணச்சென்று உயிர் போனால்தான் என்ன.? உங்களுக்கு ஏன் பொறாமை.!!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

நித்யாநந்தா ஆசிரமத்தில் கன்னிகளா....

எங்கள் குருஜியின் மகிமைகளை நீங்கள் இன்னமும் முழுதாக விளங்கவில்லை என்று தெரிகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிராடு இந்தியாவுக்குள் முன்பே வாங்கிய இடத்துக்குள் இருந்துகொண்டு இணையத்துக்குள்ளால் ஆட்டம் காட்டி கொண்டு இருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

எங்குமே காணமுடியாத, அதுவும் வீடியோக்களில் அன்றிப் படங்களில் கூடக் காணமுடியாத கன்னிகளைக் கான்பதற்கு முசுலீம்கள் தங்கள் இன்னுயிரைவிட்டுச் சொர்க்கத்துக்கே போகிறார்கள்.

ஆட்டம் பாட்டமென் கண்ணால் காணக்கூடிய இளம் கன்னிகளைக் காணச்சென்று உயிர் போனால்தான் என்ன.? உங்களுக்கு ஏன் பொறாமை.!!

அட இவ்வளவு தானா? நானும் ரிக்கற் போடுவம் எண்டு விட்டு இந்த வீடியோவைப் பார்த்தா ஆண்களையும் பெண்களையும் பிரிச்சு ஆட விட்டிருக்கிறாங்கள்! 🤦‍♂️

மத்திய கல்லூரியில் படித்த போதே வேம்படியின் உயர சுற்று மதிலை தகர்க்க வேண்டுமென்று போராட்டம் நடத்திய எங்களுக்கு இந்த பால் பிரிவினை பிடிக்கவில்லை! 

ஐ ஆம் அவுற்!😎

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

ஐ ஆம் அவுற்!😎

சீச்சீ இந்த பழம் புளிக்கும்|Tamil Funny Story|GnJ tamil ...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் புகலிடம் தேடும் நித்தியானந்தா! பெலிசில் குடியுரிமை கோரி  விண்ணப்பம் செய்துள்ளது அம்பலம் | Patrikai - Tamil Daily - latest online  local breaking news ...

சுவாமி  நித்தியானந்தாவில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்,
ஆனால்... இந்திய நாட்டிற்கே, வருடக் கணக்கில்...  
தண்ணி காட்டிக் கொண்டிருக்கும், அவரை பாராட்டத்தான் வேண்டும். :)

டிஸ்கி:  நித்தியானந்தா சுவாமி  ஜீ...  இந்தப் பதிவைப் பார்த்து,
வெள்ளிக்கிழமையான... இன்றே...
யாழ். களத்தில், அங்கத்தவராக சேரும் படி...    
பயபக்தியுடன்,  வேண்டிக் கொள்கின்றேன். 🙏  🙏  🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2020 at 22:47, விசுகு said:

என்னவோ  தெரியல

கல்யாணம் கட்டிய  பின்னர் தான்  இந்த  உற்சாகம் பீறிட்டுக்கொண்டு  கிளம்புது????😜

இளங்கன்று பயமறியாதது சாமி 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவில் புகலிடம் தேடும் நித்தியானந்தா! பெலிசில் குடியுரிமை கோரி  விண்ணப்பம் செய்துள்ளது அம்பலம் | Patrikai - Tamil Daily - latest online  local breaking news ...

சுவாமி  நித்தியானந்தாவில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்,
ஆனால்... இந்திய நாட்டிற்கே, வருடக் கணக்கில்...  
தண்ணி காட்டிக் கொண்டிருக்கும், அவரை பாராட்டத்தான் வேண்டும். :)

டிஸ்கி:  நித்தியானந்தா சுவாமி  ஜீ...  இந்தப் பதிவைப் பார்த்து,
வெள்ளிக்கிழமையான... இன்றே...
யாழ். களத்தில், அங்கத்தவராக சேரும் படி...    
பயபக்தியுடன்,  வேண்டிக் கொள்கின்றேன். 🙏  🙏  🙏

இப்படி ஆண்களே அதிகம் கும்மி அடிக்கும் இடத்தில் நித்தியின் நிழல் கூட விழாது.

சிலசமயம் நாவூற வாயூற பகுதிக்கு மட்டும் வந்து போகக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 13:02, தமிழ் சிறி said:

அமெரிக்காவில் புகலிடம் தேடும் நித்தியானந்தா! பெலிசில் குடியுரிமை கோரி  விண்ணப்பம் செய்துள்ளது அம்பலம் | Patrikai - Tamil Daily - latest online  local breaking news ...

சுவாமி  நித்தியானந்தாவில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்,
ஆனால்... இந்திய நாட்டிற்கே, வருடக் கணக்கில்...  
தண்ணி காட்டிக் கொண்டிருக்கும், அவரை பாராட்டத்தான் வேண்டும். :)

டிஸ்கி:  நித்தியானந்தா சுவாமி  ஜீ...  இந்தப் பதிவைப் பார்த்து,
வெள்ளிக்கிழமையான... இன்றே...
யாழ். களத்தில், அங்கத்தவராக சேரும் படி...    
பயபக்தியுடன்,  வேண்டிக் கொள்கின்றேன். 🙏  🙏  🙏

Condition;

1) தனியே அவர் மட்டும் வந்தால் அனுமதி இல்லை

2) சிஸ்யைகளுடன் வந்தால் மட்டும் அனுமதி உண்டு

3) யாழ் களத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுடன் உரையாட அனுமதி இல்லை(கோசான், குமாரசாமி.. மற்றும் பலர் Out )

4) 30-49(😜) வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் நித்தியானந்தா & Co வுடன் அளவளாவலாம்.

😎

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, text that says 'Welcome To Kailasaa கைலாச உங்களை அன்புடன் வரவேற்கிறது #Singles Sweet Surya Memes E ஆரம்பமே அமர்க்களமா இருக்கே'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.