Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்

1-3.jpeg
 48 Views

கொரோனாத்தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதி வழியில் மேற்கொண்டனர்.

அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்களே வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

“20 நாள் குழந்தை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்”  என்றார்.

மேலும் பேராசிரியர் மலிக் பெரேரா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கோவிட்-19 பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதன் மூலம் சுகாதார ஆபத்தில்லை என்று கூறியதையும் சில கிறிஸ்தவர்கள் கட்டாயத் தகனங்களை எதிர்ப்பதையும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ilakku.org/?p=37472

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எரிப்பு விடயத்தில்....  முஸ்லீம்களுடன், கிறிஸ்தவரும் இணைந்து விட்டார்கள்.

பௌத்த  சிங்களம் இறங்கி வருமா? வராதா? என்பதை... வரும் நாட்களில் தெரிய வரும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

உடல் எரிப்பு விடயத்தில்....  முஸ்லீம்களுடன், கிறிஸ்தவரும் இணைந்து விட்டார்கள்.

பௌத்த  சிங்களம் இறங்கி வருமா? வராதா? என்பதை... வரும் நாட்களில் தெரிய வரும்.

சிறீத்தவர்களுக்கு வேண்டாத வேலை. ☹️

1 hour ago, உடையார் said:

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்

நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். என்றார்.

2 hours ago, Kapithan said:

சிறீத்தவர்களுக்கு வேண்டாத வேலை. ☹️

2 hours ago, பழுவூர்கிழான் said:

நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?!

பக்கத்து இலைக்கு.... பாயாசம் கேட்பது மாதிரி,
முஸ்லீம்களை சாட்டி, தங்களையும் புதைக்க  வேண்டும் என்பதனையே..
கிறீஸ்தவ பாதிரியார்கள் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.

ஒடுக்கப் பட்டவர்களுக்கும் துன்பப் படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும்...
என்று ஒரு நொண்டிச் சாட்டு, சொல்லிக் கொண்டு.. முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுக்க  வருகிறார்கள்.

நேரே... கேட்டால், கோத்தா... பின்னி எடுத்துப் போடுவா(ன்)ர் என்று பயம்.  

இங்கு, பிணத்தை எரிக்கும்... புத்த / இந்து   கோஸ்டிகள் ஒரு புறமும்,
புதைக்கும்... முஸ்லீம் / கிறிஸ்தவ  கோஸ்ட்டிகள்  மறு புறமும் நிற்கிறார்கள். என்பதுதான்...   உண்மை.

Edited by தமிழ் சிறி

2 hours ago, தமிழ் சிறி said:

ஒடுக்கப் பட்டவர்களுக்கும் துன்பப் படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும்...
என்று ஒரு நொண்டிச் சாட்டு, சொல்லிக் கொண்டு.. முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுக்க  வருகிறார்கள்.

ஒடுக்கப்படட தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் , அவர்களுடன் இறுதிவரை நின்றவர்கள் இந்த கத்தோலிக்க , கிறிஸ்தவப்பாதிரிமார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது. இப்போதுதான் அவர்கள் ஒடுக்கப்படட மக்களுக்காக போராட தொடங்கவில்லை. மற்றைய மத தலைவர்கள் அப்படி போராடியதாக்க இல்லை. அப்படி போராடி இருந்தால் அது இனவாத , மதவாத சிந்தனை கொண்டதாகத்தான் இருந்திருக்கும். இவ்வளவு சீக்கிரத்தில் தமிழர்கள் அவர்களது தியாகத்தை மறந்து கவலைக்குரியதே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

ஒடுக்கப்படட தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் , அவர்களுடன் இறுதிவரை நின்றவர்கள் இந்த கத்தோலிக்க , கிறிஸ்தவப்பாதிரிமார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றது கத்தோலிக்க கிறிஸ்தவ தமிழ் பாதிரியார்கள் 
சிங்கள பாதிரிகள் சிங்கள பௌத்தர்களின் பின்னாடி தான் நின்றார்கள், மேலே கூவும் கூட்டமும் சிங்கள பாதிரிக்கூட்டமாக தான் இருக்கும்,  

Just now, அக்னியஷ்த்ரா said:

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றது கத்தோலிக்க கிறிஸ்தவ தமிழ் பாதிரியார்கள் 
சிங்கள பாதிரிகள் சிங்கள பௌத்தர்களின் பின்னாடி தான் நின்றார்கள், மேலே கூவும் கூட்டமும் சிங்கள பாதிரிக்கூட்டமாக தான் இருக்கும்,  

நிச்சயமாக சிங்கள கத்தோலிக்க, கிறிஸ்தவ  பாதிரிமார்களாக இருக்க முடியாது. கர்தினால் மல்கம்  ரஞ்சித் அவர்கள் எரிப்பதட்கு சிங்கள பாதிரிமாரின் ஒப்புதலுடன் அனுமதி அரசுக்கு வழங்கி விடடார். அப்படி என்றால் சிங்கள பாதிரிமார் என்று எழுதி இருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

நிச்சயமாக சிங்கள கத்தோலிக்க, கிறிஸ்தவ  பாதிரிமார்களாக இருக்க முடியாது. கர்தினால் மல்கம்  ரஞ்சித் அவர்கள் எரிப்பதட்கு சிங்கள பாதிரிமாரின் ஒப்புதலுடன் அனுமதி அரசுக்கு வழங்கி விடடார். அப்படி என்றால் சிங்கள பாதிரிமார் என்று எழுதி இருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். 

சிங்களப் பாதிரியார்கள் என்று மனதில் நினைத்துத்தான் எழுத வந்தேன், அதனை தட்டச்சு செய்ய மறந்து விட்டேன்.

தமிழ்ப் பாதிரியார்களின் தியாகத்தையும், ஆதரவுகளையும் எவரும், என்றும் மறக்கவில்லை.

எனது தவறை... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரிமார் சிங்களவரோ தமிழரோ அந்தந்த பக்கத்துக்கு ஆதரவாக நின்றார்கள்.

முன்னர் வெரிட்டாஸ் வானொலியின் தமிழ் சேவையின் புலி ஆதரவையும், சிங்கள சேவையின் அரச ஆதரவையும் கண்டோருக்கு இது தெரியும்.

ஆனால் இங்கே நாம் எல்லாரும் கவனிக்காமல் (வேண்டும்மென்றே?) இருக்கும் விடயம், இந்த புதைக்கும் தடை முஸ்லீம்களை போல எமது சக தமிழ் கிறீஸ்தவரையும் பாதிக்கிறது.

ஆனால் அவர்களுக்கான அநீதியை எதிர்த்து எந்த தமிழ் அமைப்பும் கதைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் அதிகமானவர்கள் தமிழ் பாதிரிமார்கள். இந்த போராடடத்தை விமசிப்பவர்கள் சிங்கள பேரினவாதிகளிடம் எலும்பு துண்டுகளை எதிர்பாப்பவர்களும், அவருடைய ஆதரவாளருமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில கருத்துகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

கத்தோலிக்க பாதிரிமார் (அல்லது திருச்சபை)  தமிழ் சிங்கள சார்பென்று பிரிந்து நிற்பதாக மால்கம் ரஞ்சித் என்ற ஒரு கத்தோலிக்க தலைவரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு தீர்மானிப்பது தவறான அணுகுமுறை. கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின் படி மனித உரிமை விடயங்கள் சார்ந்து தான் அதன் தலைவர்கள் சார்பு நிலை எடுக்கலாம். அரசியல் சார்பு நிலை எடுக்க முடியாது.

பின்னர் எப்படி மால்கம் ரஞ்சித் அரசு பக்கம் நிற்கிறார்? காரணம் தாம் இருக்கும் நாடுகளின் மீது தேசப்பற்றுக் காட்டும் ஆயர்களைத் தான் வத்திக்கான் கருதினால்களாக நியமிக்கும். மதங்கள் தடை செய்யப் பட்ட  சீனாவில் கூட சீன அரசு அனுமதிக்கும் குருக்களைத் தான் வத்திக்கான் கருதினாலாக நியமிக்கும் என்று இப்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் காரணம் மதத்தைப் பரப்பவும் செயல்படவும் அரச ஆதரவு தேவை. எனவே மால்கம் ரஞ்சித் போன்ற கத்தோலிக்க திருச்சபையின்careerist கள் மேலே வந்து விட்டார்கள்.

சரி, அப்படியானால் சிங்களப் பாதிரிகள், ஆயர்கள் எத்தனை பேர் அரசு , தமிழர் என்று சார்ந்து நிற்கின்றனர்? இலங்கையின் ஏனைய மதங்களின் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பெயர் குறிப்பிடக் கூடியவர்கள் எவரும் இல்லை! ஆனால், பெயர் வெளியே தெரியாமல் தமிழ் மக்களுக்கே தங்கள் உதவிகளைப் பெரும்பாலும் செய்த சிங்கள இனக் கத்தோலிக்க பாதிரிகள் பலர் இருக்கின்றனர். நீண்ட காலம் அநுராதபுர ஆயராக இருந்த கோமிஸ், அந்த நகரில் சிறையில் இருந்த, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்கி நிற்க தன் ஆயர் இல்லத்தைத் திறந்து விட்டிருந்தார். இது செய்திகளில் வராத, ஆனால் பயன் பெற்ற தமிழர்களுக்குத் தெரிந்த விடயம்! 

இலங்கையின் வட பகுதியில் ஏராளமான நிவாரண கல்விப் பணிகளை போர்க்காலத்தில் செய்து கொண்டிருந்த கரிட்டாஸ் என்ற கத்தோலிக்க சேவை அமைப்பு எப்போதுமே கொழும்பில் இருக்கும் சிங்கள பாதிரிகளால் நிர்வகிக்கப் படும் ஒரு அமைப்பு.இதன் சேவைகள் எந்தக் காலத்திலும் தமிழ் அகதிகளைப் புறந்தள்ளவில்லை! மாறாக அதிகம் வடக்கில் செலவழித்தார்கள். 

எனவே, மால்கம் ரஞ்சித் என்ற ஒருவரின் செயல்களை வைத்துக் கொண்டு இலங்கையின் கத்தோலிக்க குருக்களை எடை போடாதீர்கள்!   
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வணக்கம் அண்ணா,

இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற கோடு மிக ஆழமானது அல்லவா? இந்த வேற்றுமை வேறு பல ஒற்றுமைகளையும் மேவக்கூடியது, மேவியது என்பதே உண்மை.

சிங்களவர்களில் தமிழர்க்கு உதவிய பெளத்தர்களும் உள்ளார்கள். ஆனால் அதை விட அதிகமாக நீங்கள் குறிப்பிட்டவர்கள் போன்ற சபையினர் உதவினார்கள் என்பது மறுப்பதற்கல்ல. ஆனால் இவை எல்லாம் சிங்களவர்கள் மத்தியில் இருந்த ஒரு நல்ல சிறுபான்மை செய்ததே. இந்த நல்ல சிறுபான்மை அதிகம் சிங்கள கத்தோலிக்க சபையில் இருந்தே வந்தது. ஆனால்

பெரும்பாலானோர், மத அடையாளம் தாண்டி அநகாரிக தர்மபால வெளிகொணர்ந்த இனவாத சிந்தனைக்கு அடிமைபட்டே செயல்படுகிறர்கள், செயல் பட்டார்கள். அதில் பெரும்பான்மை சிங்கள கதோலிக்க சபையினரும் அடக்கம்.

பாதர் சிங்கராயர், கிளிபாதர், அல்லைபிட்டி பாதர், இப்படி தமிழ் கத்தோலிக்க சமூகத்துக்கு நேர்ந்த அவலங்கள் பலதை சிங்கள கத்தோலிக்க சமூகம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. 

அது மட்டும் அல்ல நவாலி தேவாயலபடுகொலை, ஆலய சிதைப்பு, யாழ்நகரில் ஆலயங்கள் திட்டமிட்டு தாக்கபட்டதை கூட கண்டு கொள்ளாமல் இருந்தது மட்டும் அல்ல அதை வத்திகானுக்கு கொண்டு செல்ல கூடாது என்பதில் கவனமாயும் இருந்தார்கள்.

சில விதி விலக்குகளை தவிர, கத்தோலிக்க சபை, யுத்தகாலத்தில் இன அடிப்படையில் இருகூறாக செயல்பட்டது என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் அதிகமானவர்கள் தமிழ் பாதிரிமார்கள். இந்த போராடடத்தை விமசிப்பவர்கள் சிங்கள பேரினவாதிகளிடம் எலும்பு துண்டுகளை எதிர்பாப்பவர்களும், அவருடைய ஆதரவாளருமாகும்.

அப்படியா...🤔

எனக்குமொரு எலும்புத்துண்டு பார்சல்... 😜

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

உடல் எரிப்பு விடயத்தில்....  முஸ்லீம்களுடன், கிறிஸ்தவரும் இணைந்து விட்டார்கள்.

பௌத்த  சிங்களம் இறங்கி வருமா? வராதா? என்பதை... வரும் நாட்களில் தெரிய வரும்.

      கிறீஸ்தவர்கள் (கத்தோலிக்கர் )  இறந்தவர்களுக்கு மறுவாழ்வு (உயிர்ப்பு உண்டு) என நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் எரிப்பதை விரும்புவதில்லை . ஆனால் சில விதிவிலக்கு உண்டு . இதனால் எரிப்பதை மறுக்கும் இனத்துடன் ( முஸ்லீம்) ஒன்று இணைந்து  எதிர்ப்பதில் தவறேதும் இல்லை .  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இந்த புதைக்கும் தடை முஸ்லீம்களை போல எமது சக தமிழ் கிறீஸ்தவரையும் பாதிக்கிறது.

எனக்கு தெரிந்தவரை கொரோனாவால் இறப்பவவர்களின் உடலங்களை எரிப்பதை பற்றி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ தமிழர்கள் -எனக்கு தெரிந்தவர்கள் -அலட்டிகொண்டதாக தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் சொன்னார் 9 வருடங்களுக்கு முன்பே தனது உறவினர் கிறிஸ்தவர் வெளிநாட்டில் இறந்த போது தகனம் செய்யபட்டதாக. அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி கொள்பவர்கள். முஸ்லிம்கள் மாதிரி இல்லை

மதம்மாறி கிறிஸ்தவர்களானவர்கள் நிலை வேறு அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களையே சிலை வணங்கிகள் என்று சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

      கிறீஸ்தவர்கள் (கத்தோலிக்கர் )  இறந்தவர்களுக்கு மறுவாழ்வு (உயிர்ப்பு உண்டு) என நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் எரிப்பதை விரும்புவதில்லை . ஆனால் சில விதிவிலக்கு உண்டு . இதனால் எரிப்பதை மறுக்கும் இனத்துடன் ( முஸ்லீம்) ஒன்று இணைந்து  எதிர்ப்பதில் தவறேதும் இல்லை .  

நிலாமதி அக்கா....  நீங்கள், சொல்வதை ஏற்றுக் கொள்கின்றேன்.
ஓவ்வொருவரின் உணர்வையும், புரிந்து கொள்கின்றேன்.  :)

ஆனால்... ஆசிய நாடுகளில் தான், மதத்தை வைத்துக் கொண்டு... 
அதனையே... ஒரு போராட்டமாக நடத்துவது,
எனக்கு உசிதமாக படவில்லை.

இது... இந்திய சாமியார்களுக்கும், ஸ்ரீலங்கா ஆமத்துறுகளுக்கும்,
அரபு  முஸ்லீம்களுக்கும்,   மேற்கத்தைய கிறிஸ்தவர்களுக்கும்  பொருந்தும். 
நன்றி. 🙏

டிஸ்கி: இந்த விடயத்தில்...  துல்பன், கன விடயங்களை,விரல்  நுனியில் வைத்திருப்பார். 
அவரை  மேடைக்கு வரும்படி... அன்புடன் அழைக்கின்றேன்.    

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு தெரிந்தவரை கொரோனாவால் இறப்பவவர்களின் உடலங்களை எரிப்பதை பற்றி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ தமிழர்கள் -எனக்கு தெரிந்தவர்கள் -அலட்டிகொண்டதாக தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் சொன்னார் 9 வருடங்களுக்கு முன்பே தனது உறவினர் கிறிஸ்தவர் வெளிநாட்டில் இறந்த போது தகனம் செய்யபட்டதாக. அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி கொள்பவர்கள். முஸ்லிம்கள் மாதிரி இல்லை

மதம்மாறி கிறிஸ்தவர்களானவர்கள் நிலை வேறு அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களையே சிலை வணங்கிகள் என்று சொல்கிறார்கள்

ஒரே... நேரத்தில், ஒற்றுமையான சிந்தனை. :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

      கிறீஸ்தவர்கள் (கத்தோலிக்கர் )  இறந்தவர்களுக்கு மறுவாழ்வு (உயிர்ப்பு உண்டு) என நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் எரிப்பதை விரும்புவதில்லை . ஆனால் சில விதிவிலக்கு உண்டு . இதனால் எரிப்பதை மறுக்கும் இனத்துடன் ( முஸ்லீம்) ஒன்று இணைந்து  எதிர்ப்பதில் தவறேதும் இல்லை .  

நான் ஒரு கத்தோலிக்கன். பொதுநலன் என்று வரும்போது பொது நலனுக்குத்தான் முன்னுரிமை. 👍

உங்களுக்கான கேள்வி.. 

இலங்கை முசிலிம்கள் எப்போதாவது யாருடனேனும் இணைந்து செயற்பட்டதுண்டா.. 

😂😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு தெரிந்தவரை கொரோனாவால் இறப்பவவர்களின் உடலங்களை எரிப்பதை பற்றி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ தமிழர்கள் -எனக்கு தெரிந்தவர்கள் -அலட்டிகொண்டதாக தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் சொன்னார் 9 வருடங்களுக்கு முன்பே தனது உறவினர் கிறிஸ்தவர் வெளிநாட்டில் இறந்த போது தகனம் செய்யபட்டதாக. அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி கொள்பவர்கள். முஸ்லிம்கள் மாதிரி இல்லை

மதம்மாறி கிறிஸ்தவர்களானவர்கள் நிலை வேறு அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களையே சிலை வணங்கிகள் என்று சொல்கிறார்கள்

இது உண்மை: வெளிநாடுகளில் மாற்றத்திற்குப் பிரதான காரணம் எரிப்பது செலவு குறைவு. புதைப்பதானால் நிலத்திற்குக் காசு! 
எனக்கும் ஏதோ ஒரு நிலத்தில் புல்லுக்குப் பசளையாகப் போவதை விட, சாம்பலாக என் மகளின் வீட்டில் ஒரு ஓரத்தில் இருக்கத் தான் விருப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

இது உண்மை: வெளிநாடுகளில் மாற்றத்திற்குப் பிரதான காரணம் எரிப்பது செலவு குறைவு. புதைப்பதானால் நிலத்திற்குக் காசு! 
எனக்கும் ஏதோ ஒரு நிலத்தில் புல்லுக்குப் பசளையாகப் போவதை விட, சாம்பலாக என் மகளின் வீட்டில் ஒரு ஓரத்தில் இருக்கத் தான் விருப்பம். 

ஜஸ்ரின்.... 
சைவ சமய வழக்கப்படி, எரித்த உடலின்  சாம்பலை....  
வீட்டில்....  கன நாள், வைத்திருக்கப் படாது என்று சொல்லி...
காடாத்து, அந்திரட்டி, துடக்குக் கழிவு.... என்று...
அந்தச் சாம்பலை, கீரிமலை கடலில் கரைத்து விடுவார்கள்.

அது மட்டும், வீட்டில் உள்ள பெண்களுக்கு...
அந்தச் சாம்பல், எங்கு ஒளித்து வைக்கப் பட்டுள்ளது  என்பது, 
அந்தக் குடும்பத்து.... முக்கிய  ஆண் உறுப்பினர்களை தவிர,
வேறு.. ஒருவருக்கும் தெரிய வரமாட்டுது.

கீரிமலையில்.... சாம்பலை , கரைத்த பின்...
வீட்டில்.... உள்ள பெண், உறவுகள் கேட்டால் மட்டும், சிலர் சொல்வார்கள். 
பலர்.. சொல்ல  மாட்டார்கள்.

ஒவ்வொருவரின்... மனதைப்  பொறுத்துத்தான் வாழ்க்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு தெரிந்தவரை கொரோனாவால் இறப்பவவர்களின் உடலங்களை எரிப்பதை பற்றி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ தமிழர்கள் -எனக்கு தெரிந்தவர்கள் -அலட்டிகொண்டதாக தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் சொன்னார் 9 வருடங்களுக்கு முன்பே தனது உறவினர் கிறிஸ்தவர் வெளிநாட்டில் இறந்த போது தகனம் செய்யபட்டதாக. அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி கொள்பவர்கள். முஸ்லிம்கள் மாதிரி இல்லை

மதம்மாறி கிறிஸ்தவர்களானவர்கள் நிலை வேறு அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களையே சிலை வணங்கிகள் என்று சொல்கிறார்கள்

விளங்க நினைப்பவன்,

எனது மதம் சம்பந்தமான பார்வை உங்களுக்கு தெரியும். எனக்கு எனது உடலை நான் இறந்த பின் பருந்துக்கு விருந்தாய் இட்டாலும் பரவாயில்லை. ஆனால் இன்று வரை என் தந்தையின் நம்பிக்கைக்கா பிதிர்காரியம் செய்கிறேன். அவரின் நம்பிக்கைக்காக.

சிலருக்கு அவர்களின் வாழ்வின் அடிநாதமே அந்த “தீர்ப்பு நாளில் மீள எழுதல்” என்ற நம்பிக்கைதான்.

புலம் வந்த சிலருக்கு அப்படி இல்லை. ஆனால் பல கத்தோலிக்கர்களுக்கு, ஜெகோவாவின் சாட்சிகளுக்கு அப்படித்தான்.

சுத்த பைத்தியகாரத்தன நம்பிக்கைதான் ஆனால் அவர்களின் நம்பிக்கை அது.

யோசித்து பாருங்கள் வாழ் நாள் முழுவதும் மத போதனையின் படி வாழ்ந்து, இறக்கும் தறுவாயில், மீட்புநாளில் மீட்சி என்ற இறுதி இலக்கு அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கபட்டால் எப்படி இருக்கும்?

இதை செய்ய வலுவான விஞ்ஞான ஆதராம் இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி: இந்த விடயத்தில்...  துல்பன், கன விடயங்களை,விரல்  நுனியில் வைத்திருப்பார். 
அவரை  மேடைக்கு வரும்படி... அன்புடன் அழைக்கின்றேன்.    

சிறித்தம்பி என்ன இது....? 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி என்ன இது....? 😜

குமாரசாமி அண்ணை....  
துல்பன்,  கட்டாயம்  கலந்து... கொள்ள வேண்டிய, தலைப்பு  இது. :grin:

அவர்... கலந்து கொள்ளும் வரை, 
திரியை.... அணைக்காமல் பாதுக்காக்க வேண்டியது... நமது பொறுப்பு. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை....  
துல்பன்,  கட்டாயம்  கலந்து... கொள்ள வேண்டிய, தலைப்பு  இது. :grin:

அவர்... கலந்து கொள்ளும் வரை, 
திரியை.... அணைக்காமல் பாதுக்காக்க வேண்டியது... நமது பொறுப்பு. 🤣

ஓகே  துல்பனுக்காக மண்ணெண்ணை செலவு என்ரை பொறுப்பு....😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஓகே  துல்பனுக்காக மண்ணெண்ணை செலவு என்ரை பொறுப்பு....😎

இதைப்  பார்த்த பின்.. துல்பன்,  நிச்சயம்  வருவார் என்ற.. நம்பிக்கை உள்ளது. :)

அவரிடம் இருந்து, சில அறிவுரைகளை... கேட்க வேண்டும் என்ற ஆவலும், இருக்கு 😎

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.