Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் ஓரளவுக்கேனும் தமிழர் உரிமை கதைக்கும் மாற்று கட்சி  "தமிழக வாழ்வுரிமை கட்சி " அதற்கு சென்று இருக்கலாம் #

8 hours ago, goshan_che said:

உண்மைதான். அல்லது ஒதுங்கி இருக்கலாம்.

இவர் நல்லவராக இருந்தால்  ஒதுங்கி பேராசிரியராக போய் இருக்கலாம். ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பிகளில் ஒருவர்  இவர்.

  • Replies 109
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

திராவிட இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் ஓரளவுக்கேனும் தமிழர் உரிமை கதைக்கும் மாற்று கட்சி  "தமிழக வாழ்வுரிமை கட்சி " அதற்கு சென்று இருக்கலாம் #

இவர் நல்லவராக இருந்தால்  ஒதுங்கி பேராசிரியராக போய் இருக்கலாம். ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பிகளில் ஒருவர்  இவர்.

👇 இதுதான் பேரம் என்கிறது தட்ஸ் தமிழ்.

———————————

டக்குனு முடிவெடுத்த கல்யாண சுந்தரம்.. "ரத்தத்தின் ரத்தமே" ஆன கதை இதுதான்.. செம விறுவிறுப்பா இருக்கே!

HemavandhanaUpdated: Wed, Dec 23, 2020, 22:51 [IST]

சென்னை: பேராசிரியர் கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்ததன் பின்னணி அபாரமாக இருக்கிறது.. அதிமுக மிக சாதுர்யத்துடன் இந்த விஷயத்தை முடித்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கேள்விகள்

பேட்டிகள்

இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் பெரிதும் கவர்ந்து வருபவை.. அதேபோல, டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்கிவிடுவார்.. திமுக, உட்பட எந்த கட்சி பிரமுகர்களாக இருந்தாலும், கல்யாண சுந்தரம் தன்னுடைய கேள்வியினால் அவர்களை திணறடித்து விடக்கூடியவர்.

அதிருப்தி

அதிமுக

இப்படி ஒரு வலுவான நபர், அதுவும் தேர்தல் சமயத்தில், அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்தும் விட்டார்.. நேற்று, செய்தியாளர்களிடம் ஏன் அதிமுகவில் இணைந்தேன் என்று ஒரு விளக்கமும் அளித்துவிட்டார்.. இந்நிலையில், கல்யாண சுந்தரம் எப்படி அதிமுகவில் இணைந்தார் என்ற ஒரு தகவல் கசிந்து வருகிறது.

கட்சி

முயற்சி

அதாவது, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபிறகு சொந்தமாக ஒரு கட்சியை இவர் தொடங்க போவதாக செய்திகள் வந்தன.. அதற்கான வேலைகளிலும் இவர் ஈடுபட்டு கொண்டிருந்தபோதுதான், இந்த தகவல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு தெரிந்துள்ளது.. அதன்பிறகு, கல்யாண சுந்தரத்தை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் அமைச்சர் இறங்கினார்.

மறுப்பு

கல்யாண சுந்தரம்

ஆனால், கல்யாண சுந்தரம் இதற்கு எடுத்தவுடன் மறுப்புதான் சொன்னாராம்.. ஒதுங்க நினைத்துள்ளார்.. அதனால், அமைச்சரே நேரடியாக கல்யாணசுந்தரத்தை அணுகி உள்ளார்.. அப்போது ஒரே ஒரு கண்டிஷனைதான் கல்யாண சுந்தரம் முன்வைத்தாராம்... அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி என்பதுதான்.. அதற்கு அமைச்சர் உடனே ஓகே சொல்ல, பிறகு அதிமுக தலைமையை சந்திக்க வைக்க.. அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன.

பங்கு

சுனில் டீம்

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் சுனில் டீமுக்கு பங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆக, 2 விஷயம் தெரிகிறது.. ஒன்று, கல்யாண சுந்தரம் கோவை பகுதியை சேர்ந்தவர் என்பதால், கொங்குவை வலுவாக்கும் தளம் வலுவாகி உள்ளது.. மற்றொன்று, அதிமுகவை நம்பி சென்றால், அவர்களுக்கு உரிய பொறுப்பும், பதவியும் தந்து மேலிடம் அழகு பார்க்கும் என்றும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவர் நல்லவராக இருந்தால்  ஒதுங்கி பேராசிரியராக போய் இருக்கலாம். ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பிகளில் ஒருவர்  இவர்.

கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏதாவது பேசினாலும் திட்டுவீர்கள்.
கலயாணசுந்தரம் கட்சி மாறினாலும் திட்டுவீர்கள் ஆக மொத்தத்தில் சிரங்குகாரன் சொறிஞ்ச மாதிரி நீங்களும்........😜

  • கருத்துக்கள உறவுகள்
மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது!
தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். மராட்டியர் ஆள அனுமதிக்க முடியாது என்று கூறினால் அதை தவறு என்கிறார்கள்.
அதுமட்டுமன்றி தமிழன் என்றால் யார் என்று நக்கலாகவும் கேட்கிறார்கள்.
ஆனால் மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆள வேண்டும். குஜராத்தி ஆள அனுமதிக்க முடியாது என்று மம்தா கூறும்போது அதை தவறு என்று இவர்கள் கூறுவதில்லை.
அதுமட்டுமன்றி வங்காளி என்றால் யார் என்று தைரியமிருந்தால் மம்தாவிடம் இவர்கள் கேட்டுப் பார்க்கட்டுமே.
ஏனெனில் தமிழனை இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
மம்தாவின் அரசியல்; உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் இன உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது.

132653940_10226137427843440_413212443210

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nunavilan said:

மம்தா பேனர்ஜி ஒரு இன உணர்ச்சியுள்ளவர்.
இதையே சீமான் சொல்லும் போது இனவாதி ஹிட்டலருக்கு சமாமானவர் என்று ஒரு கூட்டம் சொல்லும்.அதை விடA டீம்  Bடீம் Cடீம்  எண்ட நக்கல் வேறை 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 09:02, Justin said:

ஜஸ்ரின் பாலர் தமிழில் எழுதியதை கப்ரன் எப்படியும் விளங்கிக் கொள்ளலாம், அது கப்ரனின் தமிழ் கிரகிப்பு, சாதாரண மொழிக் கிரகிப்புத் தொடர்பானது! அதைப் பற்றி அபிப்பிராயம் இல்லை!

ஆனால் ஜஸ்ரின் இப்படித் தான் என்று எடை போட உங்கள் குறைபாட்டை நீங்கள் பயன்படுத்தல் ஆகாது!

எனது குறைபாட்டை (நேயர் விருப்பப்படி) நான் பயன்படுத்துவதில் தவறில்லையே.. Justin 

😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

எனது குறைபாட்டை (நேயர் விருப்பப்படி) நான் பயன்படுத்துவதில் தவறில்லையே.. Justin 

😀

நீங்கள் மட்டுமல்ல, இங்கே இந்த திரியில் எழுதும் சீமான் தம்பிகள் பலருக்கும் நேர்மையான கருத்துக்களை விட "நேயர் விருப்பம்" தான் பெரிது! (இதை நான் "முதுகு சொறிதல்" என்று அழைப்பதுண்டு!)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

நீங்கள் மட்டுமல்ல, இங்கே இந்த திரியில் எழுதும் சீமான் தம்பிகள் பலருக்கும் நேர்மையான கருத்துக்களை விட "நேயர் விருப்பம்" தான் பெரிது! (இதை நான் "முதுகு சொறிதல்" என்று அழைப்பதுண்டு!)

எட்டாத பக்கத்தை குச்சி வச்சி சொறிதல் என்பதாலா  😜:grin:

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

நீங்கள் மட்டுமல்ல, இங்கே இந்த திரியில் எழுதும் சீமான் தம்பிகள் பலருக்கும் நேர்மையான கருத்துக்களை விட "நேயர் விருப்பம்" தான் பெரிது! (இதை நான் "முதுகு சொறிதல்" என்று அழைப்பதுண்டு!)

நேயர் என்று Justinஐத்தான் குறிப்பிட்டேன்.. 😂😂 

நிச்சயமாக..சரியானது என அடையாளம் காணும் அனைத்திற்கும் நான் ஆதரவளிப்பேன்.. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பிறரை இகழ்ந்து, இழிவுபடுத்தி அதில் திருப்தியடையும் அளவுக்கு நான் இன்னும் தரம் தாழ்ந்து போகவில்லை. சீமான் தம்பிகளாயினும் சுமந்திரனுக்கு(சரி பிழை பாராது முதுகு சொறிவோராயினும் சரியானதைக் கூறும்போது நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். இங்கே பிரதேசம்(பலருக்கு இந்தச் சொல் வேப்பங்காயும் வேப்பங் குச்சியும்.. ☹️) சாதி, சமயம் என்ற அடிப்படையில் எனது கருத்துக்கள் நிச்சயம் பக்கச் சார்பாக இருக்காது, சிலரைப் போல.. 😎

  • கருத்துக்கள உறவுகள்

மம்தா பேனர்ஜி அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் தான் பிஜேபியிடம் தோற்று போடுவேன் என்ற பயத்தில் மறுபடியும் தான் ஆளவேண்டும் என்பதற்காக மேற்கு வங்களம் வங்காளிகளால் ஆளப்படும் என்றதனால் அவர் இன உணர்ச்சியுள்ளவர் 🤦‍♂️ தமிழ்நாட்டையும் பழனிசாமி என்ற தமிழர் தானே ஆள்கிறார் அதற்கு முன்பு அவரின் தலைவி அப்படியாக தமிழர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள் தான் அங்கே ஆள்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஏன் இவ்வளவு சுற்றி வளைப்பு? ஜஸ்ரின் தான் எதை ஆதரிக்கிறார் எதை எதிர்க்கிறார் என்று எளிமையான தமிழில் சொல்லும் போது விளங்கிக் கொள்ள வேண்டும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்!

உங்களுக்குப் பிரச்சினை நான் சொன்னது விளங்காமையா அல்லது ஏற்றுக் கொள்ளாமையா?

அதைத் தான் சுட்டிக் காட்டினேன்: விளங்காமல் இருப்பது உங்கள் உரிமை, அதை வைத்துக் கொண்டு ஜஸ்ரின் இப்படித் தான் என்று தீர்ப்பெழுதுவது உங்களை ஒத்த  கருத்துடையோருக்கு சுகமாக முதுகு சொறிந்து விடும் வேலை! அதை என் செலவில் செய்யக் கூடாது!  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

என்ன செய்வது Justin என்னைக் குழந்தையாகப் பாவித்து தமிழ் வகுப்பெடுப்பதற்கு நன்றிதான் என்னால் கூற முடியும். அது கிடக்கட்டும் மேற்றருக்கு வருவோம்..

நான் யாருக்காவது முதுகு சொறிந்ததை உங்களால் காட்ட முடியுமா.. 👍

சுமந்திரனது(சரி பிழை பார்க்காது) சகல செயல்களுக்கும் ஒட்டுமொத்தமாக (உங்கள் மொழியில்) முது சொறிவது நான் அல்ல சாமியோவ். 

12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மம்தா பேனர்ஜி அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் தான் பிஜேபியிடம் தோற்று போடுவேன் என்ற பயத்தில் மறுபடியும் தான் ஆளவேண்டும் என்பதற்காக மேற்கு வங்களம் வங்காளிகளால் ஆளப்படும் என்றதனால் அவர் இன உணர்ச்சியுள்ளவர் 🤦‍♂️ தமிழ்நாட்டையும் பழனிசாமி என்ற தமிழர் தானே ஆள்கிறார் அதற்கு முன்பு அவரின் தலைவி அப்படியாக தமிழர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள் தான் அங்கே ஆள்கிறார்கள் 

நீங்கள் அவரா.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

என்ன செய்வது Justin என்னைக் குழந்தையாகப் பாவித்து தமிழ் வகுப்பெடுப்பதற்கு நன்றிதான் என்னால் கூற முடியும். அது கிடக்கட்டும் மேற்றருக்கு வருவோம்..

நான் யாருக்காவது முதுகு சொறிந்ததை உங்களால் காட்ட முடியுமா.. 👍

சுமந்திரனது(சரி பிழை பார்க்காது) சகல செயல்களுக்கும் ஒட்டுமொத்தமாக (உங்கள் மொழியில்) முது சொறிவது நான் அல்ல சாமியோவ். 

நீங்கள் அவரா.. 😂

இந்த திரி பற்றி மட்டுமே என் உரையாடல். சும் எங்கே வந்தார் என அறியேன்.

நான் க.சு வை மேற்கோள்காட்டியதாலேயே "இப்போது நான் க.சு ஆதரவாளர் ஆகி விட்டேன்" என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள் தமிழ் புரிதல் இருந்தது. பிறகு நேராக எளிய தமிழில் சொன்னேன். அதற்கும் உங்கள் அரைகுறையான புரிதலை வைத்து ஒரு சாராம்சம் எழுதினீர்கள்! 

இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒன்று உங்களுக்கு நான் எழுதும் தமிழ் புரியவில்லை! அல்லது புரிந்தாலும் இங்கே எழுதும் சீமான் விசிறிகளுக்கு உவப்பா எழுதும் நோக்கில் என் கருத்தை திரிக்க வேண்டிய தேவை உங்களுக்கு! 

இதில் எது உங்கள் நிலை? எனக்கு பதில் அவசியமில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

மம்தா பேனர்ஜி அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் தான் பிஜேபியிடம் தோற்று போடுவேன் என்ற பயத்தில் மறுபடியும் தான் ஆளவேண்டும் என்பதற்காக மேற்கு வங்களம் வங்காளிகளால் ஆளப்படும் என்றதனால் அவர் இன உணர்ச்சியுள்ளவர் 🤦‍♂️ தமிழ்நாட்டையும் பழனிசாமி என்ற தமிழர் தானே ஆள்கிறார் அதற்கு முன்பு அவரின் தலைவி அப்படியாக தமிழர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள் தான் அங்கே ஆள்கிறார்கள் 

மந்தைகளாக இருக்கும் சமுதாயத்தை மாற்றுவதுதான் சீமானின் நோக்கம். இது சிறு வயதினர்க்கும் தெரிந்த விடயம்...முக்கியமாக இயற்கை வளங்கள் சுரண்டப்படக்கூடாது. அதை சீமான் செவ்வனே செய்கின்றார். தற்சமயம் சீமான் வழி தவறினால் நானும் சீமானுக்கு எதிரிதான்.

உங்களுக்கு ஒரு சிறு உதாரணம்... ஜேர்மனியின் தலைநகரத்திற்கு அருகாமையில் ஒரு பெரிய கார்( tesla) தொழிற்சாலை நிறுவப்படுகின்றது.அதற்கு மக்களின் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருந்தது. இருக்கின்றது.இதற்கு காரணம் காடு அழிப்பும் பெருமளவு நன்னீர் தேவையும் அதன் மூலம் வரும் சாக்கடை நீரின் நச்சுத்தன்மையும்....... எதிர்கால சந்ததியில் மிக மிக கவனமாக இருக்கின்றார்கள். அதனால் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள்.சுற்றாட சூழல் கருதி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  இதைத்தான் சீமானும் அங்கே செய்கின்றார்.இங்கே எந்தவொரு பிரபல்யங்களோ அரசியல் தலைவர்களோ வந்து இப்படி போராட்டங்கள் நடாத்தினால் நாடு சுடுகாடாகி விடும் என்று லூசுத்தனமாக பேட்டி கொடுக்கவில்லை. மாறாக மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கின்றார்கள்.மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள்.

காடு அழிப்பும் ஆர்ப்பாட்டமும்....

Teslas neue Fabrik in Brandenburg wird zum Stresstest für Deutschland |  STERN.de 

Proteste für und gegen Tesla-Fabrik: Unter Strom - taz.de

Demo-Sonnabend in Grünheide: Gegner und Befürworter protestieren vor der  geplanten Tesla-Fabrik - Berlin - Tagesspiegel

fridays for future  என ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வு நடக்க ஆரம்பித்து விட்டது.உலக காலநிலை மாற்றங்கள் சுற்ற சுற்றாடல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் .எல்லாம் இளம் சமுதாயம். அவர்களே முன்னெடுக்கின்றார்கள். இதைப்போல் சீமான் இளைஞர்களும் செய்கின்றார்கள்.  ஊருக்கு ஊர் மரங்கள் நடுகின்றார்கள். சீமான் பெண்களுக்கு சம உரிமை என்று சொல்கிறார். சம்பளம் என்று சொல்லவில்லை.😂

Wer steht hinter Fridays for Future?

ஜெயலலிதா கிந்தி தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என கண்ணும் கருத்துமாக இருந்தார்.

IPL Tournament 2013 | Cricket Match Venues | Chennai | Jayalalithaa | Sri  Lankan Players - myKhel

எடப்பாடி......!?!?!?!?!?!

தமிழர்தான். அதை விட விவசாயி இன்னும் பெருமிதம். ஆனால் இவரை வைத்து கிந்தி தாம் நினைத்ததை விட இன்னும் கூடுதலாக சாதிக்கப்போகின்றார்கள்.

மோடியை நெருங்கும் எடப்பாடி... ஒன்று கூடும் அதிமுக பெரும் தலைகள்.. அதிமுகவை  சுழற்றியடிக்கும் டெல்லி புயல்..! - Seithipunal

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நல்ல கருத்து அண்ணை (நக்கல் இல்லை).

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.

ஜெயலலிதா, ஶ்ரீரங்கத்தில் பிறந்தாலும் அவர் கன்னட பூர்வீகி அதனால் அவர் தமிழர் இல்லை என ஒரு சாரார் தமிழ் நாட்டில் சொல்கிறார்கள். 

அதே சாரார் தமிழர்கள் ஆளாதபடியால்தான் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிட்டதாயும் சொல்கிறார்கள்.

நீங்கள் மேலே சொன்னதை வைத்து பார்த்தால், தமிழரல்லாத ஜெயாவைவிட, பச்சை கொங்கு கவுண்ட, தேவர் சாதி தமிழர்களான ஓபிஎஸ், இபிஎஸ் தமிழ்நாட்டை மோசமாக ஆளுவது போல் தெரிகிறது.

இதனடிப்படையில் பார்க்கும் போது, தலைவர்கள் ஒரு நாட்டுக்கு கேடு செய்வது அவர்களின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் தமிழனா என்பதை விட, அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதில்தான் தங்கியுள்ளது போல் படுகிறதே?

ரிசி சுனாக்கின் பாட்டா இந்தியர், போரிஸின் பாட்டா துருக்கியர் என்பதால் அவர்கள் இந்தியாவுக்குக் துருக்கிக்கும் விசுவாசமாக, யூகேயை நாசம் பண்ணுவார்கள் என்றோ, கமலா ஹாரிஸ் இந்தியாவுக்கும், ஜமைகாவுக்கும் சார்பாக அமெரிக்காவை நாசம் பண்ணுவார் என்றோ இந்த நாடுகளில் கடைந்தெடுத்த இனவாதிகளை தவிர வேறு யாரும் சொல்வதில்லை.

அதே போல் தமிழ்நாட்டிலும், இனதூய்மை அடிப்படையில் அன்றி ஒவ்வொரு தலைவரின் தனிபட்ட குணாதிசய அடிப்படையில்தான் அவர் நல்லவரா கள்ளரா என்பது முடிவாகும் இல்லையா?

இதை நீங்கள் ஏற்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

 இலங்கையில் பிறந்த புலம்பெயர்ந்த ஈழத்தவர்களும் தாம் இருக்கும் நாடுகளில் தேர்தலில் நின்று வெற்றி பெறுகின்றார்கள்..கமலாவை விட பொரிஸ் ஜோன்சனை விட எம்மவர் ஒரு படி மேல்....😁

இங்கே நீங்கள் இனவாதம் எதனால் உருவாகின்றது என்பதை கவனிக்க தவறுகின்றீர்கள்.
எல்லா மக்களும் சம  உரிமையுடன் வாழ உரிமையிருந்தால் ஏன் அப்படி இனவாதம் உருவாகும். இலங்கை இந்திய நாடுகளில் சம உரிமை இல்லை. அதை விட தமிழ்நாட்டில் சாதியமும் வேறு அடக்குமுறைகளும் ஏராளம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அப்போ இலங்க, தமிழ்நாட்டில் தமிழர் நிலத்தை தமிழர்தான் ஆளவேண்டும் (வேறு பூர்வீகிகளை நம்ப முடியாது)

ஆனால் புலம்பெயர் தேசத்தில் நாளை எமது பிள்ளைகள் ஆட்சி அதிகாரத்து வரலாம் அவர்கள் பெற்றார் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர ஒரு தடையாக இருக்க கூடாது.

ஏனென்றால் தமிழ்நாடு ஐரோபாவில் இல்லை, அங்கே சாதி அடக்குமுறை அதிகம். 

விளக்கத்து நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

உங்கள் விளங்குதலில் பிழை...

ஒரு சமூகம் நிறைவாக வாழ்ந்தால் ஏன் மாற்றுக்கருத்து உருவாகுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உங்கள் விளங்குதலில் பிழை...

ஒரு சமூகம் நிறைவாக வாழ்ந்தால் ஏன் மாற்றுக்கருத்து உருவாகுகின்றது?

அப்படி இல்லையே நீங்கள் நிறைவாவ வாழ்வதாக கூறும் சமூகங்களில் ஒன்றான பிரான்சில் ஒவ்வொரு தேர்தலிலும் இனத்தூய்மை கட்சியான நேஷனல் புர்ண்ட் கணிசமான வாக்குகளை பெறுகிறதே. இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனியில் கூட இனதூய்மை பேசும் கட்சிகள் உள்ளனவே. ஹங்கேரி, இத்தாலியில் அதிகாரத்தையும் பகிர்கிறனவே.

இலங்கை போன்ற நாடுகளில் இனவாதிகள் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார்கள்.

ஆனால் அதிஸ்டவசமாக ஜேன்மனி, பிரான்சில், தமிழ்நாட்டில் இப்படியான கட்சிகள் இன்னமும் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இனத்தூய்மைவாதம் சரி என்றும் ஜேர்மனியில் அது பிழை என்றும் வாதாடுவது எப்படி என்றது -நீங்கள் சொன்னது போல எனக்கு விளங்கவே இல்லை.

விளங்கும் என்றும் நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மந்தைகளாக இருக்கும் சமுதாயத்தை மாற்றுவதுதான் சீமானின் நோக்கம். இது சிறு வயதினர்க்கும் தெரிந்த விடயம்...முக்கியமாக இயற்கை வளங்கள் சுரண்டப்படக்கூடாது. அதை சீமான் செவ்வனே செய்கின்றார். தற்சமயம் சீமான் வழி தவறினால் நானும் சீமானுக்கு எதிரிதான்.

உங்களுக்கு ஒரு சிறு உதாரணம்... ஜேர்மனியின் தலைநகரத்திற்கு அருகாமையில் ஒரு பெரிய கார்( tesla) தொழிற்சாலை நிறுவப்படுகின்றது.அதற்கு மக்களின் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருந்தது. இருக்கின்றது.இதற்கு காரணம் காடு அழிப்பும் பெருமளவு நன்னீர் தேவையும் அதன் மூலம் வரும் சாக்கடை நீரின் நச்சுத்தன்மையும்....... எதிர்கால சந்ததியில் மிக மிக கவனமாக இருக்கின்றார்கள். அதனால் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள்.சுற்றாட சூழல் கருதி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  இதைத்தான் சீமானும் அங்கே செய்கின்றார்.இங்கே எந்தவொரு பிரபல்யங்களோ அரசியல் தலைவர்களோ வந்து இப்படி போராட்டங்கள் நடாத்தினால் நாடு சுடுகாடாகி விடும் என்று லூசுத்தனமாக பேட்டி கொடுக்கவில்லை. மாறாக மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கின்றார்கள்.மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள்.

காடு அழிப்பும் ஆர்ப்பாட்டமும்....

Teslas neue Fabrik in Brandenburg wird zum Stresstest für Deutschland |  STERN.de 

Proteste für und gegen Tesla-Fabrik: Unter Strom - taz.de

Demo-Sonnabend in Grünheide: Gegner und Befürworter protestieren vor der  geplanten Tesla-Fabrik - Berlin - Tagesspiegel

fridays for future  என ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வு நடக்க ஆரம்பித்து விட்டது.உலக காலநிலை மாற்றங்கள் சுற்ற சுற்றாடல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் .எல்லாம் இளம் சமுதாயம். அவர்களே முன்னெடுக்கின்றார்கள். இதைப்போல் சீமான் இளைஞர்களும் செய்கின்றார்கள்.  ஊருக்கு ஊர் மரங்கள் நடுகின்றார்கள். சீமான் பெண்களுக்கு சம உரிமை என்று சொல்கிறார். சம்பளம் என்று சொல்லவில்லை.😂

Wer steht hinter Fridays for Future?

ஜெயலலிதா கிந்தி தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என கண்ணும் கருத்துமாக இருந்தார்.

IPL Tournament 2013 | Cricket Match Venues | Chennai | Jayalalithaa | Sri  Lankan Players - myKhel

எடப்பாடி......!?!?!?!?!?!

தமிழர்தான். அதை விட விவசாயி இன்னும் பெருமிதம். ஆனால் இவரை வைத்து கிந்தி தாம் நினைத்ததை விட இன்னும் கூடுதலாக சாதிக்கப்போகின்றார்கள்.

மோடியை நெருங்கும் எடப்பாடி... ஒன்று கூடும் அதிமுக பெரும் தலைகள்.. அதிமுகவை  சுழற்றியடிக்கும் டெல்லி புயல்..! - Seithipunal

ஐயா,

நாதக வினரின் கொள்கைகளில் காலத்துக்கொவ்வாத விடயங்கள் இருக்கலாம். அதைவிட மிகவும் போற்றத்தக்க விடயங்களும் இருக்கலாம். காலத்திற்கொவ்வாத விடயங்கள் காலப்போக்கில் மாற்றமடைந்தேயாக வேண்டும். இதுதான் விதி. 

நாகதவினரை மட்டம்தட்டிக் கதைப்பதுதான் எனக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. 

எங்கள் படித்த தமிழர்களில் மிகப்பலர் தங்களை எல்லோரும் தேடி வரவேண்டும். தாங்கள் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். அப்படி நடக்காவிட்டால் அவர்களை குறை சொல்வதும்,நையாண்டி செய்வதும் வழமை. ஆனால் தாங்களாகச் சென்று வழிகாட்டுவதும் இல்லை. பிறர் வழிகாட்ட விட்டதும் இல்லை. 

பிரச்சனையே இங்குதான் ஆரம்பாஅகிறது. 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kapithan said:

தமிழர்களுக்கு இப்ப 9 கிரகமும் சரியில்லை......:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு ஒரு சிறு உதாரணம்... ஜேர்மனியின் தலைநகரத்திற்கு அருகாமையில் ஒரு பெரிய கார்( tesla) தொழிற்சாலை நிறுவப்படுகின்றது.அதற்கு மக்களின் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருந்தது. இருக்கின்றது.இதற்கு காரணம் காடு அழிப்பும் பெருமளவு நன்னீர் தேவையும் அதன் மூலம் வரும் சாக்கடை நீரின் நச்சுத்தன்மையும்....... எதிர்கால சந்ததியில் மிக மிக கவனமாக இருக்கின்றார்கள். அதனால் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள்.சுற்றாட சூழல் கருதி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  இதைத்தான் சீமானும் அங்கே செய்கின்றார்.இங்கே எந்தவொரு பிரபல்யங்களோ அரசியல் தலைவர்களோ வந்து இப்படி போராட்டங்கள் நடாத்தினால் நாடு சுடுகாடாகி விடும் என்று லூசுத்தனமாக பேட்டி கொடுக்கவில்லை. மாறாக மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கின்றார்கள்.மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள்.

காடு அழிப்பும் ஆர்ப்பாட்டமும்....

Teslas neue Fabrik in Brandenburg wird zum Stresstest für Deutschland |  STERN.de 

Proteste für und gegen Tesla-Fabrik: Unter Strom - taz.de

Demo-Sonnabend in Grünheide: Gegner und Befürworter protestieren vor der  geplanten Tesla-Fabrik - Berlin - Tagesspiegel

fridays for future  என ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வு நடக்க ஆரம்பித்து விட்டது.உலக காலநிலை மாற்றங்கள் சுற்ற சுற்றாடல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் .எல்லாம் இளம் சமுதாயம். அவர்களே முன்னெடுக்கின்றார்கள். இதைப்போல் சீமான் இளைஞர்களும் செய்கின்றார்கள்.  ஊருக்கு ஊர் மரங்கள் நடுகின்றார்கள். சீமான் பெண்களுக்கு சம உரிமை என்று சொல்கிறார். சம்பளம் என்று சொல்லவில்லை.😂

Wer steht hinter Fridays for Future?

ஜெயலலிதா கிந்தி தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என கண்ணும் கருத்துமாக இருந்தார்.

IPL Tournament 2013 | Cricket Match Venues | Chennai | Jayalalithaa | Sri  Lankan Players - myKhel

எடப்பாடி......!?!?!?!?!?!

தமிழர்தான். அதை விட விவசாயி இன்னும் பெருமிதம். ஆனால் இவரை வைத்து கிந்தி தாம் நினைத்ததை விட இன்னும் கூடுதலாக சாதிக்கப்போகின்றார்கள்.

மோடியை நெருங்கும் எடப்பாடி... ஒன்று கூடும் அதிமுக பெரும் தலைகள்.. அதிமுகவை  சுழற்றியடிக்கும் டெல்லி புயல்..! - Seithipunal

யேர்மன் நாட்டில் நடந்த கார் தொழிற்சாலைக்காக காடுகள் அழிப்பு அதற்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் படிக்க பிடித்திருந்தது. தகவலுக்கு நன்றி காடுகளின் நிலையை படங்களில் பார்க்க கவலையாக இருந்தது.

1 hour ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் நாளை எமது பிள்ளைகள் ஆட்சி அதிகாரத்து வரலாம் அவர்கள் பெற்றார் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர ஒரு தடையாக இருக்க கூடாது.

ஒருபோதும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது தடையாக இருக்க அனுமதிக்க முடியாது.  Gary ஆனந்தசங்கரி தனது கட்சியில் வளர்ந்து வந்து பிரதமராகி  கனடா நாட்டை ஆளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒருபோதும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது தடையாக இருக்க அனுமதிக்க முடியாது.  Gary ஆனந்தசங்கரி தனது கட்சியில் வளர்ந்து வந்து பிரதமராகி  கனடா நாட்டை ஆளலாம்

இதை, இதைதான் தூரப்பார்வையற்ற அரசியல் என்பது.

இதை சொல்வதற்கு எமக்கு படிப்போ, பெரிய பெரிய எண்ணங்களோ இருக்க தேவையில்லை. நாம் செயல் வீரர்களாய் இருக்க தேவையும் இல்லை.  கொஞ்சம் யோசிக்க முடிந்தால் போதுமானது.

உலகெங்கும் இனதூய்மைவாதம் வலு பெற்று, பூர்வீக அடிப்படையில் முன்னெடுக்க படும் அரசியல் வலுப்பெறும் சமயத்தில், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இன்னொருவனின் பூர்வீக நிலத்தில் போய் குந்தி கொண்டிருக்கும் ஒரு சமூகம், விழிப்படைய வேண்டும்.

இல்லாமல் இப்படியான இனதூய்மை வாதத்தை எமது பாரம்பரிய நிலங்களில் வலுபெறுவதை, இன்னொருவனின் பூர்வீக நிலத்தில் இருந்தபடி நாம் இன்று வரவேற்போம் ஆயின், நாளை இதே வாதம் எமது அடுத்த சந்ததிகளை ஐரோபாவிலும், வட அமெரிக்காவிலும் பாதிக்கும் போது, அதை எதிர்க்கும் தார்மீக வலுவை நாம் இழந்து விட்டிருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/12/2020 at 00:12, goshan_che said:

தமிழ் நாட்டில் இனத்தூய்மைவாதம் சரி என்றும் ஜேர்மனியில் அது பிழை என்றும் வாதாடுவது எப்படி என்றது -நீங்கள் சொன்னது போல எனக்கு விளங்கவே இல்லை.

ஜேர்மனியில் ஒரு சில இனவாத கட்சிகளின் கொள்கை சரியாகவே எனக்கு படுகின்றது.குறிப்பாக வெளிநாட்டவர்கள் சம்பந்தமான  கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.