Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ஆனால் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் தேடிப் பார்த்து வாசியுங்கள். அவர் தமிழ், சைவ சமயம் தவிர்த்து வேறு எதனை முன்னிலைப்படுத்தி உறுதிப்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியும். 🙂

கண்டவன் போனவன் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த பலதையும் எழுதுவான். அதை எல்லாம் அறிவுபூர்வமான.. சமுதாய நலன் சார்ந்த எழுத்துக்கள் என்று எடுக்க முடியாது. அப்படி எடுத்து வாசிப்பதே நம் தவறு.

ஆறுமுகநாவலர் ஒரு ஆக்கிரமிப்புச் சூழலை எவ்வாறு கத்தி இன்றி.. துப்பாக்கி இன்றி.. தான் சார்ந்த மக்களின் உரிமையை அடையாளத்தை அவர்களின் மண்ணில் நிலை நிறுத்தப் பாடுபட்டார் என்பதும்.. தமிழ் மொழியை செம்மொழியாக்க எவ்வளவுக்கு உழைத்தார் என்பதும்.. தமிழுக்கு இலக்கண வடிவம் வழங்கியவர்களில்.. அவரும் முதன்மையானவர்..  தான் முக்கியம்.

தேசிய தலைவரின் மக்களுக்கான.. போராட்ட நியாயமும் தியாகமும் தான் முக்கியம்.. அவரைப் பற்றியும் அவதூறு எழுதிப் பிழைக்கும் கூட்டங்களும் உள. அது அவசியமில்லை.

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரைப் பற்றி எமக்கு முன்னாலே அவதூறு பேசும் கூட்டம்.. ஆறுமுகநாவலரைப் பற்றி என்ன என்ன எல்லாம் எழுதும் என்பது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

அதுதான் சொன்னேனே.. எமது அடிமை நிலைக்கு நாமே தான் பெரிதும் காரணம். யாரை எங்கே வைப்பது என்று நமக்குப் புரிவதில்லை... தெரிவதில்லை. 

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தயவு செய்து என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்... 

நானே நீங்கள் - நீங்களே நான். இதிலே எங்கே ஒப்பீடு? வேறு பெயர்களில் எழுதுவது மட்டும் தானே வித்தியாசமாக இருக்கிறது? 😀

11 hours ago, nedukkalapoovan said:

கண்டவன் போனவன் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த பலதையும் எழுதுவான். அதை எல்லாம் அறிவுபூர்வமான.. சமுதாய நலன் சார்ந்த எழுத்துக்கள் என்று எடுக்க முடியாது. அப்படி எடுத்து வாசிப்பதே நம் தவறு.

ஆறுமுகநாவலர் ஒரு ஆக்கிரமிப்புச் சூழலை எவ்வாறு கத்தி இன்றி.. துப்பாக்கி இன்றி.. தான் சார்ந்த மக்களின் உரிமையை அடையாளத்தை அவர்களின் மண்ணில் நிலை நிறுத்தப் பாடுபட்டார் என்பதும்.. தமிழ் மொழியை செம்மொழியாக்க எவ்வளவுக்கு உழைத்தார் என்பதும்.. தமிழுக்கு இலக்கண வடிவம் வழங்கியவர்களில்.. அவரும் முதன்மையானவர்..  தான் முக்கியம்.

தேசிய தலைவரின் மக்களுக்கான.. போராட்ட நியாயமும் தியாகமும் தான் முக்கியம்.. அவரைப் பற்றியும் அவதூறு எழுதிப் பிழைக்கும் கூட்டங்களும் உள. அது அவசியமில்லை.

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரைப் பற்றி எமக்கு முன்னாலே அவதூறு பேசும் கூட்டம்.. ஆறுமுகநாவலரைப் பற்றி என்ன என்ன எல்லாம் எழுதும் என்பது விளங்கிக் கொள்ளக் கூடியதே.

அதுதான் சொன்னேனே.. எமது அடிமை நிலைக்கு நாமே தான் பெரிதும் காரணம். யாரை எங்கே வைப்பது என்று நமக்குப் புரிவதில்லை... தெரிவதில்லை. 

நெடுக்கு,  ஆறுமுக நாவலர்  எவ்வாறான சாதி வெறியர் என்பதை மற்றவர்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர் எழுதிய சைவ வினாவிடையில் தானே தனது அசிங்கமான சைவ உயர் சாமித் திமிர்  முகத்தை காட்டியுள்ளார்.  அறிவு என்பது பரந்து பட்டு எல்லா மனிதரையும சமமாக மதிக்கும் வெளிப்பாட்டையே தரவேண்டும். தான் விரும்பும் கோட்பாட்டை தான்விரும்பும்  தலைவரை மட்டும் துதிபாடும் அதேவேளை,  அதை தவிர்தது மற்றவர்களை வசைபாடுவது அறிவு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த உலகில் மனிதன் தனக்குள் ஆயிரக்கணக்கான ஏற்றத்தாழ்வுகளை விதைத்தே உயர்வு தாழ்வு எல்லாத்தையும் விதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதை முற்றாக அகற்ற முடியாது.

ஒரு இனத்தின் விடிவைப் பற்றி பொதுத்தளத்தில்.. ஒரு பொது மீட்சிக்கு உழைத்தது பற்றிப் பேசுவதுதான் சாத்தியப்பாடானது.. தேவையானதும் கூட. ஆறுமுக நாவலர் அதைச் செய்தார். அது அறிவு பூர்வமான ஒன்றே. 

2 hours ago, nedukkalapoovan said:

அப்படியா?  அப்படியானால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் மேலாண்மையை  மாற்ற முடியாது என்ற அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?  

இதை நீங்கள் அப்பவே சொல்லியிருந்தால்   சும்மா சம உரிமை எல்லோரும் சமம் எற்று போராடப் போய் இவ்வளவு இழப்பும் வந்திருக்காது . 

Edited by tulpen

அப்போதே சொன்னேன். ஆறுமுகநாவலரை விட்டுவிடுவோம் என்று. கேட்டீர்களா.. 🤥

சில விடயங்களை அப்பட்டமாக நான் கூறியதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதற்காக அதைக் கிளறி புண்ணாக்க வேண்டிய தேவை இல்லை.

🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி செய்யாமல் இருப்பதுதான் மடத்தனம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது முதியோர் அறிவுறுத்தியது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அப்படியா?  அப்படியானால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் மேலாண்மையை  மாற்ற முடியாது என்ற அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?  

இதை நீங்கள் அப்பவே சொல்லியிருந்தால்   சும்மா சம உரிமை எல்லோரும் சமம் எற்று போராடப் போய் இவ்வளவு இழப்பும் வந்திருக்காது . 

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2021 at 19:13, யாயினி said:

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

எங்கள் ஈழம் கலை கலாச்சாரம் அழிது என்று வெளிநாட்டில் இருந்து கத்துவியள் பிறகு கலாச்சாரத்தும் , சமய விழுமியங்களுக்குக்கும் இடம்கொடுத்தால் இங்க வந்து குத்தி முறிவியள் .

இப்ப யாழ்ப்பாண முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டிருக்கு அப்ப இது கட்டுன காசுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாமே அம்மையாரே அந்த நேரமும் பசி நிலவியது , பஞ்சம் நிலவியது, ஏழைகள் வாழ்ந்தார்கள் இப்ப என்ன சொல்ல போகிறீர்கள். 

நாங்கள் எங்கள் கலாச்சாரத்துடனே வாழப்போகிறோம் உங்களால் எங்களை திருத்த முடியாது திருத்தவும் ஏலாது , திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்ட நம்ம சமூகமே விடாத போது அடக்கி ஆழும் சிங்கள சமூகம் எம்மை அடக்க நினைத்து நமது வாழ்விடங்களையும் , வயல்களைய்ம் காடுகளையும் அவர்கள் புராதன சின்னங்களை புதைத்து விட்டு இது சிங்களவர்கள் காணி நிலம் எனும் போது மட்டும் சந்தோசமாக இருக்கும் போல . நாளைக்கு சிங்களவர்கள் நல்லூரில் இருப்பது கதிர்காம கந்தன் நீங்கள் வெளியேறுங்கள் என்றால் கொடுத்து விட்டு போவோம் என்ன சும்மா வீணான செலவுகள் தானே நமக்கு . பிறகு கலை கலாச்சாரம் என்று கண்டியை சொல்லுவம் சரிதானே

48 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

என்ன நெடுக்கர் நீங்கள் தானே சொன்னீர்கள் சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏற்றத்தாழ்வுகள் உலகில் இருக்கும். அதை முற்றாக மாற்ற முடியாது என்று.  

இப்போது மாற்றி பேசுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மேலாதிக்கத்தை சிங்களவர்கள் தங்களோடு வைச்சுக் கொள்ளலாம். அதனை தமிழர்கள் மீது பிரயோகிக்க முயல்வதுதான் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பாக பரினமிக்கிறது. அதையே தான் தமிழர்கள் வெறுக்கிறார்கள். 

நீங்கள் கூறும் மேலாதிக்கம் சாதிய அமைப்பிற்கும் பொருந்தும். 

சற்று சிந்தியுங்கள். 

எம்மைப் பலமிழக்கச் செய்யும் ஒன்றிற்கு எப்படி ஆதரவளிப்பீர்கள்..?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறும் மேலாதிக்கம் சாதிய அமைப்பிற்கும் பொருந்தும். 

சற்று சிந்தியுங்கள். 

எம்மைப் பலமிழக்கச் செய்யும் ஒன்றிற்கு எப்படி ஆதரவளிப்பீர்கள்..?

8 minutes ago, tulpen said:

என்ன நெடுக்கர் நீங்கள் தானே சொன்னீர்கள் சும்மா எழுத்தில் எல்லா மனிதர்களும் சமன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏற்றத்தாழ்வுகள் உலகில் இருக்கும். அதை முற்றாக மாற்ற முடியாது என்று.  

இப்போது மாற்றி பேசுகின்றீர்கள்.

சாதி என்பது அழிக்கப்பட்டு விட்டது. ஒரு இன அழிப்பை நாம் சந்தித்த போது சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் அரச பயங்கரவாதம் கொண்டு எம்மை சாதி.. மதம் என்று பிரிச்சு அழிக்கவில்லை. தமிழன் ஒரு தனி இனம் என்று தான் அழித்தார்கள். அந்தப் பொதுமைப்பாட்டின் அடிப்படையில் தான் இப்போ தமிழர்களாக நாம் எமது பூர்வீக நிலத்தில் எமக்கான உரிமையை வலியுறுத்தி எமக்கான ஆட்சி மற்றும் வாழ்வுரிமையை கோரி நிற்கிறோம்.

ஆறுமுக நாவலரும்.. தமிழ் மொழி பேசிய தமிழர்களின் மீட்சிக்கு தான் அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களின் சதிகளுக்கு எதிராக செயற்பட்டு.. எம் இனத்தின் மீட்சிக்கு உதவினார். அவர் அதற்கு சைவத்தை தமிழை கருவியாக்கிக் கொண்டார். 

தனிமனித ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால்.. நாம் தமிழர்கள். அந்தப் பொதுமைப்பாடுதான் எம்மை ஒரு தனித் தேசிய இனமாக்கியுள்ளது. அதில் சாதி.. மத.. வர்க்க.. நிற.. பேதங்கள் இருக்கலாம்.. இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்.. நாம் ஒரு இனமாக அழிக்கப்படக் கூடாது. அழிக்க அனுமதிக்கவும் முடியாது. 

Edited by nedukkalapoovan

3 minutes ago, nedukkalapoovan said:

சாதி என்பது அழிக்கப்பட்டு விட்டது. ஒரு இன அழிப்பை நாம் சந்தித்த போது சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் அரச பயங்கரவாதம் கொண்டு எம்மை சாதி.. மதம் என்று பிரிச்சு அழிக்கவில்லை. தமிழன் ஒரு தனி இனம் என்று தான் அழித்தார்கள். அந்தப் பொதுமைப்பாட்டை தான் இப்போ தமிழர்களாக நாம் எமது பூர்வீக நிலத்தில் எமக்கான உரிமையை வலியுறுத்தி எமக்கான ஆட்சி மற்றும் வாழ்வுரிமையை கோரி நிற்கிறோம்.

தனிமனித ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால்.. நாம் தமிழர்கள். அந்தப் பொதுமைப்பாடுதான் எம்மை ஒரு தனித் தேசிய இனமாக்கியுள்ளது. அதில் சாதி.. மத.. வர்க்க.. நிற.. பேதங்கள் இருக்கலாம்.. இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்.. நாம் ஒரு இனமாக அழிக்கப்படக் கூடாது. அழிக்க அனுமதிக்கவும் முடியாது. 

சரி இப்போது தெளிவாக  புரிகிறது நெடுக்கு. தமிழர்களை மற்றய இனத்தவர்கள் அடக்குமுறை செய்யக்கூடாது. ஆனால் தமிழர்களுக்குள்  உயர் சாதி சைவர்களாகிய நாம் எமக்குள் தாழ்ந்த சாதி  என்று சிலர் மீது  அடக்கு முறை செய்வது உலக இயல்பு. அதை கண்டுக்ககூடாது. சிறந்த கொள்கை. அடிமையாக வாழ முழு தகுதியும் இந்த கொளகை உடையவர்களுக்கு உண்டு. இப்போது புரிகிறது போராட்டம் ஏன் தோற்றது என்று. தெளிவான வி ளக்கத்துக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நாம் எந்தச் சாதி அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தான் போராடினோம். வீழ்த்தப்பட்ட போதும் சாதி அறியாமல் தமிழர்களாகவே வீழ்ந்தோம்.

உங்கள் தேவைப்பாட்டுக்கு சாதியை தக்க வைக்க விரும்பினால்.. வைச்சுக் கொள்ளுங்கள். ஆனால் திணிக்காதீர்கள்.

சாதியே அறியாத தலைமுறை உருவாகிவிட்டது. அதையாவது இனப்பற்றோடு ஒற்றுமையாக விடுங்கள். 

நாவலர் வாழ்ந்த காலத்தின் சில பாதகத் தாக்கங்கள் அவரிடம் இருந்திருந்தாலும்..அவர் மொழி இன காப்புக்காக ஆற்றிய பங்களிப்பு போற்றுதற்குரியதே.

இந்த விளக்கம் இல்லாதவர்களோடு கருத்தாடி என்ன பயன்..????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஈழம் கலை கலாச்சாரம் அழிது என்று வெளிநாட்டில் இருந்து கத்துவியள் பிறகு கலாச்சாரத்தும் , சமய விழுமியங்களுக்குக்கும் இடம்கொடுத்தால் இங்க வந்து குத்தி முறிவியள் .

இப்ப யாழ்ப்பாண முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டிருக்கு அப்ப இது கட்டுன காசுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாமே அம்மையாரே அந்த நேரமும் பசி நிலவியது , பஞ்சம் நிலவியது, ஏழைகள் வாழ்ந்தார்கள் இப்ப என்ன சொல்ல போகிறீர்கள். 

நாங்கள் எங்கள் கலாச்சாரத்துடனே வாழப்போகிறோம் உங்களால் எங்களை திருத்த முடியாது திருத்தவும் ஏலாது , திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்ட நம்ம சமூகமே விடாத போது அடக்கி ஆழும் சிங்கள சமூகம் எம்மை அடக்க நினைத்து நமது வாழ்விடங்களையும் , வயல்களைய்ம் காடுகளையும் அவர்கள் புராதன சின்னங்களை புதைத்து விட்டு இது சிங்களவர்கள் காணி நிலம் எனும் போது மட்டும் சந்தோசமாக இருக்கும் போல . நாளைக்கு சிங்களவர்கள் நல்லூரில் இருப்பது கதிர்காம கந்தன் நீங்கள் வெளியேறுங்கள் என்றால் கொடுத்து விட்டு போவோம் என்ன சும்மா வீணான செலவுகள் தானே நமக்கு . பிறகு கலை கலாச்சாரம் என்று கண்டியை சொல்லுவம் சரிதானே

ஒன்றும் மேலதிகமாக எழுத தோன்றவில்லை காரணம் ஒவ்வொருத்தருடைய எண்ணங்களையும் மற்ற மற்ற உறவுகளும் பார்த்து கொண்டு தானேஇருப்பார்கள்..ஒவ்வொருத்தருடைய எழுத்துக்களுக்கும் எண்ணப்பாடுகளுக்கும் மதிப்பிடூ இரூக்கும் தானே.அன்று தொடக்கம் இன்றுவரை உங்கள் மத்தியில் இருக்கும் எண்ணம் நாம் வெளி நாடுகளில் இருந்து கொண்டு ஒன்றும் கேட்க கூடாது..என்பதே..நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி கட்சிகளையும் சாதி கதைப்பவர்களையும் அடக்கி ஒடுக்க எல்லாம் சரி வரும். 
ஆறுமுகநாவலர் செய்த நல்ல விடயங்கள் ஆயிரம் இருக்க ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து முகர்ந்து பார்ப்பவர்களின் உள் நோக்கம் நன்றாகவே புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சாதி கட்சிகளையும் சாதி கதைப்பவர்களையும் அடக்கி ஒடுக்க எல்லாம் சரி வரும். 
ஆறுமுகநாவலர் செய்த நல்ல விடயங்கள் ஆயிரம் இருக்க ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து முகர்ந்து பார்ப்பவர்களின் உள் நோக்கம் நன்றாகவே புரிகின்றது.

ஆறுமுகநாவலரை இங்கே கொண்டுவந்தது நெடுக்கர். அவரை இங்கே விவாதப் பொருளாக்க வேண்டாம் என்று கூறியது நான். ஏனென்றால் அவர் தொடர்பாக சாதக/பாதகமான விமரிசனங்கள் உண்டு. அதன் பின்பும் அவரை இங்கே தொடர்ச்சியாக முன்நிலைப்படுத்தியது நெடுக்ஸ். 

ஆகவே நீங்கள் கூறியது நெடுக்கருக்குத்தான் பொருந்தும்.

நெடுக்கர் இதனைக் கவனிக்கவும் 🤥

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாயினி said:

ஒன்றும் மேலதிகமாக எழுத தோன்றவில்லை காரணம் ஒவ்வொருத்தருடைய எண்ணங்களையும் மற்ற மற்ற உறவுகளும் பார்த்து கொண்டு தானேஇருப்பார்கள்..ஒவ்வொருத்தருடைய எழுத்துக்களுக்கும் எண்ணப்பாடுகளுக்கும் மதிப்பிடூ இரூக்கும் தானே.அன்று தொடக்கம் இன்றுவரை உங்கள் மத்தியில் இருக்கும் எண்ணம் நாம் வெளி நாடுகளில் இருந்து கொண்டு ஒன்றும் கேட்க கூடாது..என்பதே..நன்றி.

கேள்வி கேட் கலாம் போராடலாம்  ஆனால் அங்கிருந்து செய்து ஏதும் ஆகப்போவதில்லை என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை மற்றவர்களை  நினைத்து நான் வாழ்வதில்லை யார் முத்திரை குத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை அவ்வளவுதான் .மதீப்பீடு செய்து என்ன மார்க்கா கொடுக்க போகிறார்கள் இல்லையே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகு...🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அழகு...🙏🏽

அசிங்கம் 🤮

21 minutes ago, குமாரசாமி said:

அழகு...🙏🏽

தமிழர் கலாச்சசாரம் வரவேற்கிறது இரண்டு பொண்டாட்டிகளுடன். இதுதான் தமிழர் பண்பாட்டின் குறியீடா? 

இரண்டு பொண்டாட்டி இருப்பது அழகா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் குத்தி முறிஞ்சாலும் முருகனுக்கு இரண்டு மனைவிகள்.

“நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.”

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

வளைவு எதற்காக கட்டப்பட்டதோ அதனை நிறைவேற்றி உள்ளது. 

குத்தி முறிஞ்சு பிரயோசனம் இல்லை..

👐

1 hour ago, MEERA said:

வளைவு எதற்காக கட்டப்பட்டதோ அதனை நிறைவேற்றி உள்ளது. 

குத்தி முறிஞ்சு பிரயோசனம் இல்லை..

👐

இங்கு குத்தி முறியவில்லை. நல்லூர் கோவில் நாம் ஜாலியாக தினசரி போன இனியும் ஜாலியாக  போக போகும் கோவில் தான். 😂🤣👍. ஆனால்  தமிழ் கடவுள் முருகன் என்று கூறிவிட்டு  வட இந்திய புராணமான ஸ்கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை யாழ்ப்பாண மக்கள் கலாசாரம் என்று கூறும் புலுடா கலாச்சாரத்தை தான் கூறினேன். 

யாழ்பாண மக்களுக்கு என்று சொந்த கலாச்சாரம் இல்லையா? அதனால் தான் நாம் வட இந்திய கலாச்சாரமான ஸ்கந்தபுராணத்தை எமது கலாச்சாரம் என்று புலுடா விடுகிறோமா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! -  NewMannar நியூ மன்னார் இணையம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூசைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், தைத்திருநாளான இன்று, நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

அத்துடன், தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Jvpnews

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

தமிழர்களின் சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கிய யாழ்ப்பாணம்  வரவேற்பு வளைவு கோலாகலமாகத் திறந்து வைப்பு!! | Newlanka

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! |  Perikai

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவு  திறப்பு - Tamilwin

வெகு விமரிசையாக திறக்கப்பட்டது நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்கார வளைவு! -  Jvpnews

யாழில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவு  திறப்பு - Tamilwin

http://athavannews.com/நல்லூர்-கந்தசுவாமி-கோயி-4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.