Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்! பதற்றமான சூழல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் கூடுவதாகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதாகவும் தெரியவருகின்றது.

இதனை உறுதிப்படுத்துவதற்கு யாழ். துணைவேந்தரின் ஊடகப்பிரிவு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போது யாரும் பதில் அளிக்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

யாழ். பல்கலை நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும் பல்கலை மாணியங்கள் ஆணைக்குழுவும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை வளாகத்தில் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதானாலும் துணைவேந்தரின் ஒப்புதல் மிக முக்கியமானதாக இருக்கின்றது.

அதாவது ஒரு கட்டிடம் புதிதாக நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி ஒரு கட்டிடத்தை அகற்றுவதானாலும் சரி உப வேந்தரின் அனுமதி மிக பிரதானம்.

எனினும், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/265933?ref=breaking-news

  • Replies 132
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை முன் பதற்றம் தொடர்கிறது; பொலிஸாரும் கடும் அச்சுறுத்தல்!!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உள்ளிட்ட நினைவுத் தூபிகள் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர்.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும்பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு 9 மணி தொடக்கம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் பல்கலைக்கழகம் முன் தற்போது கூடியுள்ள மாணவர்கள், யாழ்மாநகர முதல்வர் உள்ளிட்டோரை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கொரோனா சட்டத்தினை சாதகமாக்கி கூடியுள்ளோரை விரட்ட பொலிஸார் முயன்றதயைடுத்து, அங்கு கூடியுள்ளோர் இடைவெளி பேணி வருகின்றனர்.

யாழ்.பல்கலை முன் பதற்றம் தொடர்கிறது; பொலிஸாரும் கடும் அச்சுறுத்தல்!!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நினைவுகளை, முற்றாக  அழிப்பதிலேயே.... 
சிங்களம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பது போல்... தெரிகின்றது.

ஆகக் கூடிய... அடக்கு முறைகளும், மீண்டும் வேறொரு வடிவத்தில்...
ஸ்ரீலங்காவிற்கு... தலையிடியாக மாறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு - யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம்

36 நிமிடங்களுக்கு முன்னர்
யாழ்

பட மூலாதாரம்,@KAVINTHANS

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களும், மாணவர்கள் தரப்பும் ஆட்சேபம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நிலைமை பதற்றத்துடன் காணப்படுவதாக பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 2019இல் அமைக்கப்பட்டது. இதேபோல, 2018இல் அமைக்கப்பட்ட பொங்கு தமிழர் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி என மேலும் இரு நினைவு தூபிகள் அந்த வளாகத்தில் உள்ளன.

இந்த நிலையில், இலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

முதல் கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்த நிலையில், அது பற்றி கேள்விப்பட்டவுடன் மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பகுதிக்கு வந்தனர். ஆனால், அதில் பலரையும் உள்ளே நுழைய பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவிலான காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை பெற்று, யாழ் பல்கலை வளாகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த பல்கலைகழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது.அந்த பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.

நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

யாழ்ப்பாணம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

நினைவுதூபி
 
படக்குறிப்பு,

2018இல் எடுக்கப்பட்ட படம்

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு - யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கூட... தமிழனை, 
நிம்மதியாக... இருக்க விடமாட்டோம்   என,,,
அடம்  பிடிக்கின்றார்கள். 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா எலி அம்மணமா ஓடுதே என்று யோசிக்க  வளைவு  கட்ட  ஒரு பக்கம் அனுமதித்துவிட்டு இந்தப்பக்கமாய் வந்து இடித்து தள்ளினம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கர் வந்து போயிருப்பாரோ.. ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

ஜெய்சங்கர் வந்து போயிருப்பாரோ.. ☹️

வடகிழக்கில் வம்பு செய்த இந்தியப்படையின் நினைவு தூபி  இன்னும் உடையாமல் இருக்கா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kapithan said:

ஜெய்சங்கர் வந்து போயிருப்பாரோ.. ☹️

முள்ளிவாய்க்கால் அழிவுகளின் உரிமையாளர்களுக்கு இப்படியான நினைவுச்சின்னங்கள் ஒருவித அச்சுறுத்தல்களாக இருக்கும் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம எம்பிமார் என்ன செய்கினமாம் ?

ஆறுதலாய் நித்திரையில் இருந்து எழும்பி கேஸ் போடுவம் என்று அறிக்கை விடுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

என்னடா எலி அம்மணமா ஓடுதே என்று யோசிக்க  வளைவு  கட்ட  ஒரு பக்கம் அனுமதித்துவிட்டு இந்தப்பக்கமாய் வந்து இடித்து தள்ளினம் .

புத்த சிங்கள பேரினவாதமும், உயர் குடி சைவருக்கும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர்.
யாழ். துணைவேந்தரின் பூரண ஆசீர்வத்திதுடன் தான் இது நடைபெற்று உள்ளது, அவர் ஒரு உயர் குடி சைவர்.இச் செயற்ப்பாடு தமிழ் தேசியத்தை நோக்கி பயணிக்க ஒரு உந்து சக்தியாய் இருக்கும்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கொஞ்சம் கூட... தமிழனை, 
நிம்மதியாக... இருக்க விடமாட்டோம்   என,,,
அடம்  பிடிக்கின்றார்கள். 😡

கடுமையாக யோசிக்க வேண்டாம் சிறி. இந்தத் தூபிகள் எங்கள் ஆன்மாவுடன் தொடர்புபட்டவை. அது அழியாதுதானே. 

திரும்பவும் கட்டிக் கொள்ளலாம்.. 👍

(டக்ளசை ஜெய்சங்கர் சந்தித்துச் சென்றவர். அதன் விளைவாக வடக்கு கிழக்கில் அமைதியின்மையை திட்டமிட்டு ஏற்படுத்த முனைகிறார்களோ.. 🤥)

போராளிகளின் உடல்கள் உறங்கிய
கல்லறைகளையே இடித்து உழுதவர்கள்
இன்று நினைவுத்தூபிகளை இடித்தழிக்கின்றனர்.
 
மனிதப்படுகொலைகளை நிகழ்ச்சி நிரலாக கொண்டவர்கள் இன்று
மனங்களை சிதைத்து வெஞ்சினத்தை
விதைக்கின்றனர்.
 
அதிகாரத்தின் மமதையையும்
அடக்குமுறையின் சன்னதத்தையும் கொண்டாடுகின்றவர்கள்
இன்று இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு
அடிக் கோடு இடுகின்றனர்..
 
பார்க்கலாம்...
எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வைக்கும் காலம் ஒன்றை இனிவரும் சந்ததி உருவாக்கியே தீருமா அல்லது உறங்கியே சாகுமா என ..
  • கருத்துக்கள உறவுகள்

மனவுறுதியை சிதைக்கும்  மாற்று வழி. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

கடுமையாக யோசிக்க வேண்டாம் சிறி. இந்தத் தூபிகள் எங்கள் ஆன்மாவுடன் தொடர்புபட்டவை. அது அழியாதுதானே. 

திரும்பவும் கட்டிக் கொள்ளலாம்.. 👍

(டக்ளசை ஜெய்சங்கர் சந்தித்துச் சென்றவர். அதன் விளைவாக வடக்கு கிழக்கில் அமைதியின்மையை திட்டமிட்டு ஏற்படுத்த முனைகிறார்களோ.. 🤥)

கபிதன்,   இந்திய மத்திய அரசின் தலையீடு,  எமக்கு.. என்றுமே இருக்கக் கூடாது.
ஏற்கெனவே.. அவர்களிடமிருந்து, பல பாடங்களை கற்று விட்டோம்.

மீண்டும்... அந்தச் சகதிக்குள், தமிழர்களை தள்ள...
தமிழ் அரசியல் வாதிகள் முனைகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

திருநீறு பட்டை அடிச்சுக் கொண்டு உந்த புதிய சிங்கள அதிஉச்ச விசுவாசி.. உபவேந்தர் வரும் போதே சொன்னம்.. ரெம்ப வாழ்த்தாதீங்க.. வருத்தப்பட நேரிடும் என்று.

இப்ப அதுபோல ஆச்சே. 

நமக்கு எதிரிங்க துரோகிங்க வடிவில்..  வெளில விட உள்ள அதிகம். அதனால்.. தான் இந்த இனம் ஒரு விடிவே இல்லாமல் இப்படி அகில உலகமும் அடிமையாக் கிடக்குது. 

காலம் இதையும் கடந்து போகும்.

ஆக்கிரமிப்பில் தமிழர்கள் வாழினம் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட மகிந்த கும்பலாலும் அதன் அடிவருடிகளாலும் மட்டுமே முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பதிவாளர் இந்த இரவிலும் ரையோட நிக்கிறார்! 

என்ன அறிக்கை நிர்வாகத்திடமிருந்து வருகிறதென்று பார்க்கலாம்!

மக்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் செயல், இடிக்கப் படப்போவது தெரிந்திருந்தால் முதலே செய்தியைக் கசிய விட்டிருக்க வேண்டும் அல்லது எம்.பி மாருக்காவது சொல்லியிருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

பதிவாளர் இந்த இரவிலும் ரையோட நிக்கிறார்! 

என்ன அறிக்கை நிர்வாகத்திடமிருந்து வருகிறதென்று பார்க்கலாம்!

மக்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் செயல், இடிக்கப் படப்போவது தெரிந்திருந்தால் முதலே செய்தியைக் கசிய விட்டிருக்க வேண்டும் அல்லது எம்.பி மாருக்காவது சொல்லியிருக்க வேண்டும். 

ஜஸ்ரின்,  என்ன... சொல்ல,  வருகின்றீர்கள் ⁉️
🙃 சத்தியமாக... ஒன்றும் புரியவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே நுழைந்த எங்கள் மீது பைக்கோவை ஏற்ற பணித்தனர் – சுகாஸ் பரபரப்பு பேட்டி!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பை பார்வையிட பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுடன் நுழைந்த தங்கள் மீது பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் பைக்கே (ஜேசிபி) இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டினர் என்று சட்டத்தரணி சுகாஸ் சற்றுமுன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக நுழைவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் சுகாஸ் உள்ளிட்ட சிலர் பலவந்தமாக கம்பி வேலியால் பாய்ந்து பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சற்றுமுன் வெளியே வந்தனர்.

இந்நிலையிலேயே சுகாஸ் மேற்கண்வாறு தெரிவித்தார். மேலும்,

300Views

IMG_20210108_233300.jpg?fit=758%2C349&ss
 
“தங்கள் மீது பைக்கோ இயந்திரத்தை ஏற்ற தயாரான போது மேலும் சில மாணவர்கள் உள்ளே நுழைந்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.

எமது எதிர்ப்பையடுத்து இரண்டு பைக்கோ இயந்திரங்கள் பொலிஸ், இராணுவ பாதுகாப்போடு வெளியேறியுள்ளனர்.

இரண்டாவது மற்றும் ஏனைய தூபிகள் இனிவரும் நாட்களில் பாதுகாப்பு படைகளின் துணையுடன் இடிக்கப்படலாம். உள்ளே இருந்த எமக்கு பொலிஸார், இராணுவத்தினர் கடும் அச்சுறுத்தல் தந்தனர். கைது செய்ய முயன்றதால் வெளியேறினோம்” – என்றார்.

உள்ளே நுழைந்த எங்கள் மீது பைக்கோவை ஏற்ற பணித்தனர் – சுகாஸ் பரபரப்பு பேட்டி!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை முன் தொடங்கியது மாபெரும் போராட்டம்; தயார் நிலையில் அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பை தொடர்ந்ளு யாழ் பல்கலைக்கழக வாயிலில் கூடியுள்ள மாணவர்கள், அரசியல்வாதிகள் தற்போது “பேச வேண்டும் துணைவேந்தரோடு பேச வேண்டும்” என கோஷம் எழுப்பி வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முற்றாக இடித்தழிக்கப்பட்டமை உறுதியான நிலையில் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இராமநாதன் வீதி எங்கும் திரளானோர் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் சுற்றி ஆயுத் ஏந்தி தயார் நிலையில் அதிரடி படையினர், இராணுவத்தினர், பொலிஸார் குவித்துள்ளனர். இதனால் எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற பதற்றத்துடன் போராட்டம் நள்ளிரடை தாண்டி தொடருகிறது.

FB_IMG_1610130964322.jpg?fit=720%2C540&s
 
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதேவேளை,

யாழ்ப்பாணத்தின் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கலகம் அடக்கும் பொலிஸாரும் உள்ளடக்கம்.

IMG_20210108_235524-300x197.jpg
IMG-3665-1-300x225.jpg
IMG-3666-300x225.jpg

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதேவேளை,

யாழ்ப்பாணத்தின் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கலகம் அடக்கும் பொலிஸாரும் உள்ளடக்கம்.

யாழ். பல்கலை முன் தொடங்கியது மாபெரும் போராட்டம்; தயார் நிலையில் அதிரடிப்படை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்,  என்ன... சொல்ல,  வருகின்றீர்கள் ⁉️
🙃 சத்தியமாக... ஒன்றும் புரியவில்லை  

தமிழ்சிறி, மேலே ஒரு உறவு இணைத்த வீடியோவை இப்போது அகற்றி விட்டார், நான் அதில் யாழ் பல்கலைப் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் கழுத்துப்பட்டி அணிந்தவாறு இடிக்கப் படும் இடத்தில் நிற்பதைப் பார்த்தேன். வீடியோ எடுத்த ஆட்களையும் விரட்ட முனைகிறார். பிழம்பு இணைத்த செய்தியையும் பாருங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

உள்ளே நுழைந்த எங்கள் மீது பைக்கோவை ஏற்ற பணித்தனர் – சுகாஸ் பரபரப்பு பேட்டி!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பை பார்வையிட பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுடன் நுழைந்த தங்கள் மீது பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் பைக்கே (ஜேசிபி) இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டினர் என்று சட்டத்தரணி சுகாஸ் சற்றுமுன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக நுழைவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் சுகாஸ் உள்ளிட்ட சிலர் பலவந்தமாக கம்பி வேலியால் பாய்ந்து பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சற்றுமுன் வெளியே வந்தனர்.

இந்நிலையிலேயே சுகாஸ் மேற்கண்வாறு தெரிவித்தார். மேலும்,

300Views

IMG_20210108_233300.jpg?fit=758%2C349&ss
 
“தங்கள் மீது பைக்கோ இயந்திரத்தை ஏற்ற தயாரான போது மேலும் சில மாணவர்கள் உள்ளே நுழைந்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.

எமது எதிர்ப்பையடுத்து இரண்டு பைக்கோ இயந்திரங்கள் பொலிஸ், இராணுவ பாதுகாப்போடு வெளியேறியுள்ளனர்.

இரண்டாவது மற்றும் ஏனைய தூபிகள் இனிவரும் நாட்களில் பாதுகாப்பு படைகளின் துணையுடன் இடிக்கப்படலாம். உள்ளே இருந்த எமக்கு பொலிஸார், இராணுவத்தினர் கடும் அச்சுறுத்தல் தந்தனர். கைது செய்ய முயன்றதால் வெளியேறினோம்” – என்றார்.

உள்ளே நுழைந்த எங்கள் மீது பைக்கோவை ஏற்ற பணித்தனர் – சுகாஸ் பரபரப்பு பேட்டி!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

இந்த இரவு... யாழ். பல்கலைக் கழகத்தில், மிக மோசமான... 
அரச பயங்கரவாதம்,  ஏவி விடப் பட்டுள்ளது  என்பது.. தெட்டத் தெளிவாக தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

பணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தரின் ஆணவப்பதில்!!

Jaffna-University-Vice-Chancellor-Senior
 
சட்டபூர்வமற்ற கட்டிடம் கட்டப்பட்டாலும் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டபின் அதனை அறிவிக்க வேண்டும் என பணிக்கப்பட்டது. இந்த விடயத்தை பராமரிப்பு பகுதியினருக்கு அனுப்பியிருந்தேன். எனவே அதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அது அகற்றப்பட வேண்டிய ஒன்றே.

சிறிய அத்திவாரக்கல் வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்திருக்கினம், இவர்கள் கலைந்து செல்லாது விட்டால் கையாளும் விதத்தில் கையாளுவோம் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தரின் ஆணவப்பதில்!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிழம்பு said:

இந்தாள் ட்ரம்ப் மாதிரிப் பேசுகிறாரே?  🤦‍♂️

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக  இவர், வந்த போது... 
யாழ். களமே...  எவ்வளவு பெருமைப் பட்டது.

அதுகும்... எங்கள்,  கிருபன் ஜீ   அவர்களின், இளவயது  நண்பராம்.

எதிர்பார்ப்புகள்  எல்லாம்... ஒரு, கனவாகி போனதே....    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.