Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை!

spacer.png

 

விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் 'துக்ளக் தர்பார்'. நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

 

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் அரசியல்வாதி சீமானை பிரதிபலிப்பதாக இருப்பதாக சீமானின் தம்பிகள் கொந்தளிக்க துவங்கியிருக்கிறார்கள். அதோடு, வசனங்கள் கூட நாம் தமிழர் கட்சிக்கு எதிராக இருப்பதாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியிலிருந்து விஜய்சேதுபதிக்கு போனில் அழைத்து பேசியிருக்கிறார்கள். அதற்கு விஜய்சேதுபதி அப்படியா, எனக்குத் தெரியவே தெரியாது என கூறிவிட்டாராம். அதெப்படி, என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என தெரியாமலா நடிப்பார் என கோவத்தில் இருக்கிறார்களாம் சீமானின் தம்பிகள்.

இந்த நேரத்தில், துக்ளக் தர்பார் இயக்குநர் குறித்து விசாரித்தால், பல புதுத்தகவல்கள் கிடைத்தது. வர்ணம் எனும் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் பிரசாத் தீனதயாளன். அப்போது, அந்தப் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அப்போதே இருவருக்கும் நட்பு துவங்கியிருக்கிறது.

அந்த நேரத்தில் தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்க புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்திருக்கிறார் பாலாஜி தரணிதரன். பிரசாத் தீனதயாளன் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் விஜய்சேதுபதி. அப்படி தான், பாலாஜி தரணிதரனுக்கும் விஜய்சேதுபதிக்கும் நட்பு உருவாகியிருக்கிறது. விஜய்சேதுபதிக்கு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தின் மூலமாக தான் விஜய்சேதுபதி எனும் நடிகர் வெளியில் தெரிய துவங்கினார். அந்த நன்றிக் கடனுக்காக, விஜய்சேதுபதி கொடுத்த படம் தான் துக்ளக் தர்பார். அதோடு, நான்கு வருடத்துக்கு முன்பாகவே துக்ளக் தர்பார் படத்தின் பணிகளை துவங்கிவிட்டாராம் இயக்குநர். தற்பொழுது அரசியல் கட்சிகளிலிருந்து எதிர்ப்பு வந்திருப்பதை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.


 

https://minnambalam.com/entertainment/2021/01/12/42/seeman-vijaysethupathi-thuglak-dharbar-naam-tamilar

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி தமிழனை நக்கலடித்துக்கொண்டு நடித்து  பிழைக்கலாம் என்று நினைக்கிறார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

விஜய் சேதுபதி தமிழனை நக்கலடித்துக்கொண்டு நடித்து  பிழைக்கலாம் என்று நினைக்கிறார் .

கடைசிவரை பாருங்கள் சீண்டல் அப்பட்டமாக தெரியும்.

 

Vijay Sethupathi leaves Muttiah Muralitharan biopic 800 after severe  backlash - Movies News

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கடைசிவரை பாருங்கள் சீண்டல் அப்பட்டமாக தெரியும்.

 

உடைந்து விழும் கண்ணாடி போல் அவரும் விழுந்து காணாமல் போக போகிறார் நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

உடைந்து விழும் கண்ணாடி போல் அவரும் விழுந்து காணாமல் போக போகிறார் நன்றி வணக்கம் .

கண்ணாடி உடைந்து விழும்போது பின்னணியில் தெரியும் படத்தை உன்னிப்பாக கவனியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்,

இன்னும்.

மேல

மேல🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்னும்,

இன்னும்.

மேல

மேல🤣

 

கொறோனா முடிந்திருந்தால் இந்த தமிழ் படம் வரும் போது நாங்கள் எல்லாம் தியோட்டரில் சென்று பார்க்க வேண்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொறோனா முடிந்திருந்தால் இந்த தமிழ் படம் வரும் போது நாங்கள் எல்லாம் தியோட்டரில் சென்று பார்க்க வேண்டும் 😂

பார்த்து... 🤥

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொறோனா முடிந்திருந்தால் இந்த தமிழ் படம் வரும் போது நாங்கள் எல்லாம் தியோட்டரில் சென்று பார்க்க வேண்டும் 😂

எனக்கு எப்போதும் மணிவண்ணன், சத்யராஜின் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிடும் படம் என்றால் அல்வா சாப்பிடுவது போல.

இதுவரை பார்தீபனின் நகைச்சுவையும் பிடிக்கும். 

இப்போ அவரும் அரசியல் படத்தில் இறங்கியுள்ளார்.

நவம்பர் 2015 க்கு பின் இன்னும் தியேட்டர் போய் ஒரு படம் பார்க்கவில்லை. இதை போய் பார்க்கும் படியாக எடுத்தால் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை சீண்டுகிறதா துக்ளக் தர்பார்| விஜய் சேதுபதி | சாட்டை | துரைமுருகன் |

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை சீண்டுகிறதா துக்ளக் தர்பார்? என்ன சொல்கிறார் பார்த்திபன்

 

 

விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிப்பில் உருவாகிவரும் படம்  துக்ளக் தர்பார்.  நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.  அரசியல் கதையாக இப்படம் உருவாகிவருகிறது.  இப்படத்தின் டீஸர் வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

படத்தில் பார்த்திபனின் பெயர் கூட ராசிமான்.  படமெங்கும் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சியை குறிக்கும் லோகோ இடம்பெற்றுள்ளது. அதோடு,  பார்த்திபனின் கதாபாத்திரமானது சீமானின் கேரக்டரின் பிரதிபலிப்பாக இருப்பதாக சீமானின் தம்பிகள் கொந்தளிக்கத் துவங்கினார்கள். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. என்னவென்றால், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தது சீமான் தான். அதன்பிறகு பெரிய பிரச்னையாகி, படமும் நின்றது. அதற்கு பழிவாங்கவே பார்த்திபன் கதாபாத்திரத்தை சீமான் கேரக்டரைக் கொண்டு வடிவமைக்கச் சொல்லியிருக்கிறார் விஜய்சேதுபதி என சொல்லப்பட்டது.

 

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விஜய்சேதுபதிக்கு போனில்  அழைத்து பேசியிருக்கிறார்கள்.  சீமானை கிண்டல் பண்ணுவது போல பார்த்திபன் கேரக்டர் இருக்கிறதே என கேட்டதற்கு, விஜய்சேதுபதி அப்படியா, எனக்குத் தெரியவே தெரியாது என கூறிவிட்டாராம். அதெப்படி, என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என தெரியாமலா நடிப்பார் என கோவத்தில் இருக்கிறார்களாம் சீமானின் தம்பிகள்.

இந்நிலையில், பார்த்திபன் சீமானிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்தப் படம் குறித்து முறையாக விளக்கமொன்றையும் அளித்திருக்கிறார் பார்த்திபன். இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, “ நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல” என்று கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/entertainment/2021/01/13/26/seeman-tuklak-darbar-parthiban

 

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களும் சாமான்யர்களும் அரசியல் வாதிகளை நக்கல் பண்ணக் கூடாது என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது: நக்கலுக்குரிய விதமாக நடந்து கொள்ளாமல் இருப்பது! 

தாங்களே நகைச்சுவை சீன்களை தினமும் நடத்திக் கொண்டு "படம் தியேட்டரில் வந்தால் ஓடாது" என்று பயம் காட்டுவதில் ஒரு அர்த்தமும் இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

கலைஞர்களும் சாமான்யர்களும் அரசியல் வாதிகளை நக்கல் பண்ணக் கூடாது என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது: நக்கலுக்குரிய விதமாக நடந்து கொள்ளாமல் இருப்பது! 

தாங்களே நகைச்சுவை சீன்களை தினமும் நடத்திக் கொண்டு "படம் தியேட்டரில் வந்தால் ஓடாது" என்று பயம் காட்டுவதில் ஒரு அர்த்தமும் இல்லை! 

நீங்கள் கூறுவது ரொம்பச் சரி.

ஆனால் இதனை யாரெல்லாம் கூறுவதென்றொரு விவஸ்தை வேண்டாமா.. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, goshan_che said:

எனக்கு எப்போதும் மணிவண்ணன், சத்யராஜின் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிடும் படம் என்றால் அல்வா சாப்பிடுவது போல.

இதுவரை பார்தீபனின் நகைச்சுவையும் பிடிக்கும். 

இப்போ அவரும் அரசியல் படத்தில் இறங்கியுள்ளார்.

நவம்பர் 2015 க்கு பின் இன்னும் தியேட்டர் போய் ஒரு படம் பார்க்கவில்லை. இதை போய் பார்க்கும் படியாக எடுத்தால் போகலாம்.

ஓம்.....நீங்கள்  ராசிமான் நக்கலுக்காகவே பத்துபதினைஞ்சு தரம் தியேட்டருக்கு போய் பாக்கவேணும். இதிலையாவது நீங்கள் ஆரெண்டதை காட்டவெல்லொ வேணும்.😜

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவது ரொம்பச் சரி.

ஆனால் இதனை யாரெல்லாம் கூறுவதென்றொரு விவஸ்தை வேண்டாமா.. 😂

முதலில் களவிதிகளை வாசித்து விடுங்கள்! பின்னர் "யாழ் கள விவஸ்தை இன்ஸ்பெக்ரர்" பதவியை உங்களுக்குத் தருவது பற்றி யோசிக்கலாம்!

நடக்க முதல் ஓட ஆரம்பிக்கக் கூடாது!😊

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

முதலில் களவிதிகளை வாசித்து விடுங்கள்! பின்னர் "யாழ் கள விவஸ்தை இன்ஸ்பெக்ரர்" பதவியை உங்களுக்குத் தருவது பற்றி யோசிக்கலாம்!

நடக்க முதல் ஓட ஆரம்பிக்கக் கூடாது!😊

பெட்டிசன் போட்டாப் போச்சு..😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பெட்டிசன் போட்டாப் போச்சு..😂

யாழ் களத்தை முகநூல் போல அலட்டுவதற்கும் அரட்டைக்கும் மட்டும் பயன்படுத்துவது அவரவர் விருப்பம்! ஆனால், ஏனைய உறுப்பினர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்!

இதெல்லாம் விதிகளில் ஏற்கனவே இருப்பதால் தான் மேலே குறிப்பிட்டேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யாழ் களத்தை முகநூல் போல அலட்டுவதற்கும் அரட்டைக்கும் மட்டும் பயன்படுத்துவது அவரவர் விருப்பம்! ஆனால், ஏனைய உறுப்பினர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்!

இதெல்லாம் விதிகளில் ஏற்கனவே இருப்பதால் தான் மேலே குறிப்பிட்டேன்.

நன்றி

முயற்சிக்கிறேன்.

நன்றி. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2021 at 21:52, goshan_che said:

இன்னும்,

இன்னும்.

மேல

மேல🤣

 

இப்ப நான் சொல்லும்  நேரம் ம்😁 தொடங்கட்டும் .....

 

 

படம் வந்து பார்த்த பின் முடிவை சொல்வது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 22:53, பெருமாள் said:

இப்ப நான் சொல்லும்  நேரம் ம்😁 தொடங்கட்டும் .....

 

 

படம் வந்து பார்த்த பின் முடிவை சொல்வது நல்லது .

படம் வரட்டும் அதை பிறகு பாக்கலாம்.

இப்ப விஜே சேதுபதி தமிழனா இல்லை தெலுங்கனா எண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

சாட்டை துரை பச்சை தமிழன் என வீடியோ போட்டார் ஆனால் சில தம்பிகள் விஜே தெலுங்கன் என்கிறார்கள்.

அப்புறம் ராசிமானை எதிர்ப்பதில் நீ பெரிசா நான் பெரிசா என்று சாட்டையும், பாரியும் கட்டி புரள்கிறார்கள்🤣.

இடையே சாட்டை யூடுபுரூட்டசோட நட்பாய் வேற இருக்கிறார். புரூட்டஸ் சீமானை கழுவி ஊத்துறார்🤣.

கட்சி 2ம் மட்டத்தில் அல்லோலகல்லோல படுகுது🤣.

தலைமை ஒருங்கிணைப்பாளர்?

அவர் பிள்ளையை தூக்கி கொண்டு ஆந்திரா போய், திருப்பதியில் வைத்து துலாபரம் கொடுக்கிறார்🤣.

அப்ப முருகன் முப்பாட்டன் எல்லாம் கப்ஸாவா?

தனக்கு, குடும்பத்துக்குன்னா “ஏழு குண்டலவாடா, கோவிந்தா, கோவிந்தா”.

அப்பாவி தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு மட்டும், கறுப்பன், மாரி, சூலி, முருகனா🤣.

யாழ்கள நாம்தமிழர் கட்சி உறுப்பினர்  கருத்து என்னவோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கடந்த ஒரு வருடத்தில் சீமானிசத்துக்கு “மதம் மாறியவர்கள்” ஓவராக பிரச்சாரம் செய்யாமல் விட்டிருந்தால் அந்த திரி இன்றைக்கும் ஓடி இருக்க கூடும்.

உண்மை என்னவென்றால் ஓவரா பிரச்சாரம் செய்த்தவர்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைக்க முடியாமல் போனதின் விளைவே திரி முடியாது அதுதான் உண்மை .

 

உங்கள் அளவுக்கு சீமானை அறிந்து விவாதம் செய்ய எனக்கு தெரியாது ஆனால் சீமானால் தமிழ் நாட்டில் பலருக்கு அரசியல் தெளிவு வரும் என்பதை உறுதியாக நம்புகிறேன் அதனால் சீமானை நம்புகிறேன் அவ்வளவே .

சீமானால் ஈழத்துக்கு  விடிவு வரும் என்பதில் எட்டு சுரைக்காய் கதை ஆனால் அங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புனர்வு வரட்டும் அதுவேதான் நம் எல்லோரின் கொள்கை .

அவர்களுக்கு அரசியல் தெரியணும் அதுகாணும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உண்மை என்னவென்றால் ஓவரா பிரச்சாரம் செய்த்தவர்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைக்க முடியாமல் போனதின் விளைவே திரி முடியாது அதுதான் உண்மை .

 

நீங்கள் கேட்ட கேள்விக்கு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள்.

ஆனால் காக்கா எல்லாத்தையும் கொண்டு போய்ட்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்ட கேள்விக்கு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள்.

ஆனால் காக்கா எல்லாத்தையும் கொண்டு போய்ட்டு🤣

இந்த கொரனோ  நேரம் காக்கா நல்லா புகுந்து விளையாடுது  மோகனை நேரில் சந்தித்து விளக்கம் குடுத்து இருக்கனும் சூழ்நிலை பாதகமாகிப்போயிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ஸ்ரீலங்கன் ஹிந்தூஸ் 
வெட்கமேயில்லாமல் சிங்கள பௌத்த  கதறகம தெய்யோவிடம்   ஓடுகிறீர்கள் ,கந்தன், தமிழ்க்கடவுள், சிவனின் மகன்,ஒளவையிடம் சுட்ட பழம் எல்லாம் கப்ஸாவா ..?
சொந்த தியேட்டரில் படத்தை ஓட்ட வக்கில்லை ,இந்த லட்சணத்தில் திருப்பதிக்கு போயாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ஸ்ரீலங்கன் ஹிந்தூஸ் 
வெட்கமேயில்லாமல் சிங்கள பௌத்த  கதறகம தெய்யோவிடம்   ஓடுகிறீர்கள் ,கந்தன், தமிழ்க்கடவுள், சிவனின் மகன்,ஒளவையிடம் சுட்ட பழம் எல்லாம் கப்ஸாவா ..?
சொந்த தியேட்டரில் படத்தை ஓட்ட வக்கில்லை ,இந்த லட்சணத்தில் திருப்பதிக்கு போயாச்சு 

திருப்பதியை பற்றி 2 கருத்து உண்டு.

1. அது ஆதியில் இருந்தே வெங்கடாசலபதி கோவில்

2. ஆதியில் முருகன் கோவில் பின்னர் தெலுங்கு வைணவர் அதை வெங்கடாசலபதி கோவிலாக மாற்றினர்.

எப்படி பார்த்தாலும், எனது இனத்துக்கான விடுதலை எனது இறையை மீட்பது என அரசியல் செய்பவர் எப்படி தெலுங்கு வைணவ கோயிலுக்கு போய் துலாபாரம் கொடுக்கலாம்?

ஒன்றில் திருப்பதியை மீட்க போராடவேண்டும் அல்லது அது வைஸ்ணவ கோவில் என ஏற்று பழனிக்கு போக வேண்டும்.

பிகு: ஏற்கனவே சொல்லிவிட்டேன் - இலங்கையில் எமக்கு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பதற்காக நாங்கள் டிரம்ப்பை, பைடனை பற்றி பேசாமல் இருப்பதில்லையே?

அது போலதான் தமிழக அரசியலை பேசுவதும். அது ஸ்டாலினாகிலும் சீமானாகிலும்.

இதில் வேடுவர் கோவிலான கதிர்காமத்தை இழுத்து வருது அக்மார்க் மொட்டந்தலை+முழங்கால்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.