Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.

  • January 27, 202110:56 am

முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையானிடம் உள்ள சொத்து விபரப்பட்டியல்:

#இலங்கையில்..
1)மட்டக்களப்பு மாநகரம் பூம்புகார் எனும் இடத்தில் வீடு இதன் பெறுமதி 2,கோடி.
2)கொழும்பு ராஜகிரிஜயில் றோயல் அப்பாட்மெனட் வீடு இதன்பெறுமதி 6.5,கோடி.
3)கொழும்பு கறுவாத்தோட்டம் வீடு இதன்பெறுமதி 23,கோடி.
4)மட்டக்களப்பு வாவிக்கரை இல1 வீதி இதன்பெறுமதி 12,கோடி.
5)திருகோணமலை உப்புவெளி சுற்றுலாவிடுதி இதன்பெறுமதி 5, கோடி.
6)நுவரேலியா நகர் சுற்றுலாவிடுதி இதன் பெறுமதி 17, கோடி.
7)மட்டக்களப்பு பாசிக்குடா 12,ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 25,கோடி.
8)திருகோணமலை கும்புறுபிட்டி 50, ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 20,கோடி.
9)மட்டக்களப்பு திராய்மடு நிலம் 80, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
10)மட்டக்களப்பு புறுட்டுமான்ஓடை 115,ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்நவில்லை.
11)மட்டக்களப்பு மாங்கேணி 10, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
12)ஆழ்கடல் படகுகள்12, கொழும்பு டிக்கோவிட்ட எனும் இடத்தில் இதன்பெறுமதி 20,கோடி.

#வெளிநாடுகளில ..
13)சிங்கப்பூர் ஒகஷாவீதி அல்பிறட்றவர் என்ற இடத்தில தொடர்மாடிகுடியிருப்பு வீடு இதன்பெறுமதி 7.5,கோடி.
14)சுவிஷ்நாட்டில் சுரிச்நகரில் நகைக்கடையும் கட்டடமும இதன்பெறுமதி 150,கோடி.
15)வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் இருப்பு 20 மில்லியன் அமரிக்க டொலர்.

இவ்வாறு 15, விதமான இடங்களில் சொத்துக்களை பிள்ளையான் தன்னகத்தே வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை முன்எடுக்குமாறு அந்த சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.meenagam.com/பிள்ளையானின்-சொத்துக்கள/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

பிள்ளையானிடம் உள்ள சொத்து விபரப்பட்டியல்:

#இலங்கையில்..
1)மட்டக்களப்பு மாநகரம் பூம்புகார் எனும் இடத்தில் வீடு இதன் பெறுமதி 2,கோடி.
2)கொழும்பு ராஜகிரிஜயில் றோயல் அப்பாட்மெனட் வீடு இதன்பெறுமதி 6.5,கோடி.
3)கொழும்பு கறுவாத்தோட்டம் வீடு இதன்பெறுமதி 23,கோடி.
4)மட்டக்களப்பு வாவிக்கரை இல1 வீதி இதன்பெறுமதி 12,கோடி.
5)திருகோணமலை உப்புவெளி சுற்றுலாவிடுதி இதன்பெறுமதி 5, கோடி.
6)நுவரேலியா நகர் சுற்றுலாவிடுதி இதன் பெறுமதி 17, கோடி.
7)மட்டக்களப்பு பாசிக்குடா 12,ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 25,கோடி.
8)திருகோணமலை கும்புறுபிட்டி 50, ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 20,கோடி.
9)மட்டக்களப்பு திராய்மடு நிலம் 80, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
10)மட்டக்களப்பு புறுட்டுமான்ஓடை 115,ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்நவில்லை.
11)மட்டக்களப்பு மாங்கேணி 10, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
12)ஆழ்கடல் படகுகள்12, கொழும்பு டிக்கோவிட்ட எனும் இடத்தில் இதன்பெறுமதி 20,கோடி.

#வெளிநாடுகளில ..
13)சிங்கப்பூர் ஒகஷாவீதி அல்பிறட்றவர் என்ற இடத்தில தொடர்மாடிகுடியிருப்பு வீடு இதன்பெறுமதி 7.5,கோடி.
14)சுவிஷ்நாட்டில் சுரிச்நகரில் நகைக்கடையும் கட்டடமும இதன்பெறுமதி 150,கோடி.
15)வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் இருப்பு 20 மில்லியன் அமரிக்க டொலர்.

எல்லாம் பொய்...பொய்......பொய்...பொய்...... பொய்...பொய்...... . சிப்பிக்குள் இருந்து வெளியேறிய முத்து அவர். 
கறை படியா திலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டும் அமைப்புகள் பிழையான கருத்துக்களை வெளியிடுகின்றன. மக்களுக்கு அபிவிருத்தி காட்ட அரசியலுக்குள் புகுந்தவர் மேல் இப்படி பழி போடக்கூடாது. அவர் சொர்க்கத் தங்கம். இப்போ வரி வரியாய் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரப்போகுது பெரிய படை, வக்காலத்து வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 
கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 
கொலையையே விசாரிக்காமல் வெளில விட்டுப்போட்டார் கோத்தா, கொள்ளையையே விசாரிக்கப்போகிறார் எண்டு உங்கை ஒருத்தர், சிரிச்சு, சிரிச்சு, ஈசி சேறிலை இருந்து விழுந்து போனார். :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 
கறுவாதோட்டம்  தான் என்னது. ராஜகிரி... தமிழ் சிறியர் வாங்கி விட்டது. சொல்லிப்போடாதீங்கோ. கோவிப்பார்.  

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

கொலையையே விசாரிக்காமல் வெளில விட்டுப்போட்டார் கோத்தா

சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கறுவாதோட்டம்  தான் என்னது. ராஜகிரி... தமிழ் சிறியர் வாங்கி விட்டது. சொல்லிப்போடாதீங்கோ. கோவிப்பார்.  

பாதுகாப்பாய் இருக்கும் என்று வேறொருவர் பெயரில் மாற்றி எழுதி, கைமாற்றி கைக்கு எட்டாமற் போய், சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் ஏமாந்த அரசியல்வாதிகளும் உண்டு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலேயே உண்டு பாருங்கோ.

என்னத்தை சொன்னாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்த சேவையை மறக்க முடியாது. அந்த காலத்தில் அது கிழக்கு  தமிழர்களுக்கு ஓரளவாவது வாழக்கையை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது. படித்தவர்கள் , புத்திசாலிகள் எண்டு மார் தட்டிக்கொண்டு வீணுக்கு தீர்மானங்களை நிறைவேற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது , பிள்ளையான் படிக்காத மேதையாக சேவை செய்ததை பாராட்ட வேண்டும். எந்த ஒரு நாணயத்துக்கும் இரு பக்கம் இருப்பதுபோல இங்கும் இருக்கத்தான் செய்யும். எந்த அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது கொள்ளையடிக்காமல் இருந்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது பார்க்கும்போது பிள்ளையான் கொள்ளையடித்தது பெரிய காரியம் இல்லை. அதற்ககாக பிள்ளையானின் இப்படியான செயல்களை ஆதரிக்க முடியாது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 
எல்லாம் அடாத்தாகவும், பயமுறுத்தியும் எடுத்தவைதானே. வாவிக்கரை வீடு சாம் தம்பிமுத்துவின் பரம்பரை வீடு என்பதால் பசையும் செல்வாக்கும் உள்ள மகன் வழக்குப்போட்டார். அதனையும் வளைத்துப்போட 2 கோடி கொடுக்க ரெடிதானே!

9 hours ago, குமாரசாமி said:

கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

செய்தியின்படி சுவிஸில் ஒரு நகைக்கடையும் புள்ளையான் பெயரில் இருக்கு. அவர் சுவிஸுக்கு வந்தா வாங்கினார்?

அதிகாரமும், ஆயுதமும் கையில் இருக்கும்போது அதை வைத்து ஊரைக்கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சேர்ந்துவிடும். சொத்துக்களை எப்படி கையகப்படுத்துவது, எப்படி முதலீடுவது என்று ஆலோசனை சொல்லவும், பினாமியாக இருக்கவும் பலர் வருவார்கள். 

8 hours ago, ரதி said:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 
புள்ளையான் தான் மறியலில் இருந்து கல்லுடைத்து உழைத்த காசிலா இத்தனை சொத்தையும்  வாங்கினார்?😂

53 minutes ago, Robinson cruso said:

எந்த அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது கொள்ளையடிக்காமல் இருந்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது பார்க்கும்போது பிள்ளையான் கொள்ளையடித்தது பெரிய காரியம் இல்லை. அதற்ககாக பிள்ளையானின் இப்படியான செயல்களை ஆதரிக்க முடியாது

வடக்கு என்றால் யாழ்ப்பாணம் என்று கருதும் சில யாழ் மையவாதிகள் போல கிழக்கு என்றால் மட்டக்களப்பு மாத்திரம் என்று நினைக்கும் புள்ளையான் கொள்ளையடித்ததை வைத்து மாபியா கும்பல் ஒன்றை வைத்திருக்கின்றார். ஆனால் இவரும் ராஜபக்‌ஷக்களின் அடிமைதானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எல்லாம் அடாத்தாகவும், பயமுறுத்தியும் எடுத்தவைதானே. வாவிக்கரை வீடு சாம் தம்பிமுத்துவின் பரம்பரை வீடு என்பதால் பசையும் செல்வாக்கும் உள்ள மகன் வழக்குப்போட்டார். அதனையும் வளைத்துப்போட 2 கோடி கொடுக்க ரெடிதானே!

செய்தியின்படி சுவிஸில் ஒரு நகைக்கடையும் புள்ளையான் பெயரில் இருக்கு. அவர் சுவிஸுக்கு வந்தா வாங்கினார்?

அதிகாரமும், ஆயுதமும் கையில் இருக்கும்போது அதை வைத்து ஊரைக்கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சேர்ந்துவிடும். சொத்துக்களை எப்படி கையகப்படுத்துவது, எப்படி முதலீடுவது என்று ஆலோசனை சொல்லவும், பினாமியாக இருக்கவும் பலர் வருவார்கள். 

புள்ளையான் தான் மறியலில் இருந்து கல்லுடைத்து உழைத்த காசிலா இத்தனை சொத்தையும்  வாங்கினார்?😂

வடக்கு என்றால் யாழ்ப்பாணம் என்று கருதும் சில யாழ் மையவாதிகள் போல கிழக்கு என்றால் மட்டக்களப்பு மாத்திரம் என்று நினைக்கும் புள்ளையான் கொள்ளையடித்ததை வைத்து மாபியா கும்பல் ஒன்றை வைத்திருக்கின்றார். ஆனால் இவரும் ராஜபக்‌ஷக்களின் அடிமைதானே.

எல்லாம் அப்படி எடுக்கவில்லை...வாவிக்கரை வீடு  எப்படி எடுக்கப்பட்டது என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்....எல்லா அரசியல்வாதிகளும்  கல் உடைத்த காசிலா சொத்து வேண்டி குவிக்கினம்... எனக்கு தெரிய சும்மை தவிர வேறு ஒருத்தரும் வேறு தொழிலுக்கு போவதில்லை எங்கால் அவர்களுக்கு இவ்வளவு சொத்து
முந்தி கருணாவுக்கு பின்னால் திரிஞ்ச கூட்டம் இப்ப பிள்ளையானுக்கு பின்னால திரியுது ...அந்தாள் கொள்ளையடித்தாலும்  தன்னால் முயன்றதை மக்களுக்கு செய்கிறார் ...மற்றவர்களை மாதிரி வாயால் வடை சுடவில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்தமைக்காக கருணா குழுவுக்கு ரூபாய் 50 மில்லியன்களைக் கோத்தா வழங்கினார் என்பதை அக்காலத்தில் பொலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் இக்கொலை வழக்கில் சாட்சியமளித்தார். உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் இக்கொடுக்கல் வாங்கலில் தூதராகச் செயற்பட்டிருந்தார். கருணாவின் கீழேயே பிள்ளையான் அக்காலத்தில் கொலைகளிலும், கடத்தல் மற்றும் கப்பம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்ததால், அவருக்கும் இதில் ஒரு பங்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

அத்துடன் கொழும்பில் பல தமிழ் வியாபார நிலைய உரிமையாளர்களிடம் பல மில்லியன்களைக் கருணாவும் பிள்ளையானும் கப்பமாக அறவிட்டு வந்ததும், இதனைக் கண்டித்து அவ்வர்த்தகர்கள் கொழும்பின் பெட்டா, கோட்டை , கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் ஒருநாள் கதவடைப்புப் போராட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.

இதைத்தவிரவும் மட்டக்களப்பில் காலம் காலமாக வாழ்ந்துவந்த பல வட மாகாண தமிழ் வர்த்தகர்களின் சொத்துக்களும் இவர்களால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. 

இதைத்தவிரவும் கிழக்கில் மக்களிடம் அச்சுருத்திப் பறித்துக்கொண்ட சொத்துக்களும் ஏராளம். 

இத்துடன், கிழக்கு மாகாணத்திற்கென்று புலிகளால் அனுப்பப்பட்ட, கிழக்கில் மக்களிடமிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பெருமளவு பணம் கருணாவிடமும், பிள்ளையான் ஜெயம் ஆகியோரிடமும்தான் இருந்தது. 

இவையெல்லாமுமே இவரையும் கருணாவையும் கோடீஸ்வரர் பட்டியலிலும் இலங்கையில் ஐந்தாவது கோடீஸ்வரர் என்னும் உயரத்திற்கும்  கொண்டுசேர்த்தது.

Edited by ரஞ்சித்
வட மாகாண

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் புலிகளின் மௌனிப்புடன்

அடிக்கடி  எழுதியது  தான்

இனி இந்திய  தமிழக அரசியல் தான் இங்கும்  என்று.

பிள்ளைகளையாவது கையேந்தாமல்  வாக்களிக்கும் நிலைக்கு கொண்டு வரட்டும் தாயகம்???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

முள்ளிவாய்க்காலில் புலிகளின் மௌனிப்புடன்

அடிக்கடி  எழுதியது  தான்

இனி இந்திய  தமிழக அரசியல் தான் இங்கும்  என்று.

பிள்ளைகளையாவது கையேந்தாமல்  வாக்களிக்கும் நிலைக்கு கொண்டு வரட்டும் தாயகம்???

கர்ணாவுக்கு வாக்களித்த , மக்கள் பிள்ளையானுக்கு வாக்களித்த மக்கள் தொகையை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதை எழுதினாலும் நாங்கள் அவங்கள் போடும் எலும்பை தின்பவர்கள் என்பீர்கள் உங்கள்  பாசையில்  

மேலும் 172 பட்டதாரிகளாக இருந்தும் சேர்க்கபடாமல் இருப்பவர்களுக்கு பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய  நியமனம் வழங்கப்பட இருக்கிறது , மட்டக்களப்பில் பட்டதாரிகளாக இருக்கும் சுமார் 1300 பேர்  வரையிலானவர்கள் கல்வி அமைச்சிடம்  கொடுத்த வேண்டுகோளின் பேரின் ஆசியர்களாக மேற்கு வலயம் மட்டு, கல்குடா வலயம் அது போக ஒரு தேசிய பாடசாலை என்பதும் மேற்கில் கிடைக்க இருக்கிறது  இதை நான் சொன்னால் இதுதான் வளர்ச்சியா அபிவிருத்தியா என கேட்பார்கள் கேலியும் செய்வார்கள் இதை விட அம்மக்களுக்கு வேறு என்ன தேவை கல்வி போதும் அவர்கள் பிழைத்துக்கொள்ள .

நாளைக்கு கேட் கணும் அவர் ஊடகவியலாளரிடம் இவ்வளவு சொத்து இருக்கிறதா என 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மேலும் 172 பட்டதாரிகளாக இருந்தும் சேர்க்கபடாமல் இருப்பவர்களுக்கு பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய  நியமனம் வழங்கப்பட இருக்கிறது ,

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

காய் நகர்த்தல் மற்றும் மறைமுக அடக்குமுறை இன அழிப்பு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

எனது மடியில் கனம். அதனால் பலவற்றை எழுத முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

நல்லாட்ட்சி அரசாங்கம் இருக்கும் போது அதே பட்டதாரிகள் பூங்காவிலும் நடு ரோட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள் நீங்கள் பார்க்கலையா 

அது மட்டும் அல்லாமல் மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

நீங்கள் இப்படி எழுதியதில் வியப்பு எதுவும் இல்லை ...வெளி நாட்டில் இருக்கும் உங்களால் இப்படித் தான் சிந்திக்க முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

இதைத்தான் பலதடவை சொல்லியுள்ளேன். அரசு  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தங்கள் முகவர்மூலம் பிச்சையாக போட்டு, தன் சொந்தநலனையும், வாக்கு வங்கியையும் நிரப்பி, அவர்களின் உரிமையையும், நிலங்களையும் பறித்து,  அவர்களின் வாயையும்  அடைக்கிறது. முகவர்களும் தங்கள் வங்கி கணக்குகளையும் நிரப்பி, சொத்துக்களையும் குவித்து, அடியாட்களையும் வளர்ப்பதுதான் நடக்கிறது. அற்ப சொற்ப நலன்களுக்காக உரிமைபறிபோவதை யாரும் கணக்கெடுப்பதில்லை. எல்லாம் விழுங்கப்பட்ட பின் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனையடைவார்கள். அதன் பலனை இப்போ அனுபவிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

இதுதான் உண்மை. ஆனால் இதனை மறைத்து தமது தலைவர்கள் என்று சொல்வோரின் பின்னால் கண்களை இறுக மூடி, காதுகளைக் கட்டிக்கொண்டு பின்செல்கிறார்கள். 

தமது புதிய தலைமைகள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகள் என்று நன்கு தெரிந்த பின்னரும் அவர்கள்  பின்னால் செல்பவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இன்று இருக்கிறார்கள். அவர்கள் செய்வதைத் தெரிந்தே செய்வதால் நாம் அவர்களை மாற்ற முடியாது. அவர்கள் கேட்கப்போவதுமில்லை, ஏற்கப்போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டும் அல்லாமல் மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

இதே மஹிந்த ஒருதடவை சொன்னார். நான் வடக்கு மக்களுக்கு வீதிகளை அமைத்தேன், புகையிரதம் ஓட வைத்தேன், பல அபிவிருத்திகளை செய்தேன் ஆனால் அவர்களது மனங்களை  என்னால் வெல்ல முடியவில்லை. அவர்கள் என்னை தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். அந்தத் தோல்வியே  தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போ சிங்களவரை உசுப்பி, ஆசை காட்டி சிங்கள மக்களாலேயே வென்றோம் எனும் மாயை காட்டுகிறார்கள். அப்படிஎன்றால் ஏன் சில விலைபோன  முகவர்களை தம் கட்சியின் பெயரில் எம்மத்தியில்  களமிறக்க வேண்டும்? அவர் எங்களுக்கு உதவுவதாக நினைத்து எதை எதையோ செய்கிறார் ஆனால் அவை எல்லாம் எங்களுக்கு தேவைதானா என்பதை தெரிந்து கொள்வதில்லை.  நாங்கள் இழந்ததை, எமது உரிமையை திருப்பி தருமா? இதை செய்வதன்மூலம் எம்மிடம் இருந்து பறித்ததை நிலையாக தன் வசம் வைத்திருப்பதற்கு  வழங்கப்படும் கையூட்டு என்பதுமட்டுமல்ல எம்மை திசை திருப்பும் யுக்தி என்பது  எம்மில் பலருக்கு விளங்குவதில்லை. எம்மிடம் இருந்து பறித்த எமது  உரிமையைத் திருப்பித் தந்தால் எமக்கு எது தேவையோ அதை நாமே  நிறைவேற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

இவர்கள் எமது உரிமைகளையும் தாயகத்தையும் விற்றுத்தான் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் வாங்குகிறார்கள். இதில் இடைத்தரகர்களாக இருப்பவர்கள்தான் பிள்ளையான், கருணா, அமல், டக்கிளஸ், அங்கஜன் போன்றோர்.

மகிந்த எனும் போர்க்குற்றவாளியை இக்களத்தில் போற்றுமளவிற்கு விலைபோய்விட்டார்கள் என்பது வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இவர்கள் எமது உரிமைகளையும் தாயகத்தையும் விற்றுத்தான் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் வாங்குகிறார்கள்.

இவர்கள் அரசுக்கு முண்டு கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வைக்கும்  கோசம் இது.  உண்மையானால்: இன்று இவர்கள் பிரிவு அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டிருக்கவேணுமே? வேலையற்ற  படித்த பட்டதாரிகள் என்கிற பதமே இருந்திருக்காதே? ஒவ்வொரு தேர்தலின்போதும் அதே பல்லவியோடல்லவா வருகிறார்கள்? சிங்களம் தூக்கியெறியும் எலும்பை நிரந்தரமென்று நினைக்கிறார்கள். இன்று கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, நாளைக்கு வருமானதுக்குமேல் சொத்து சேர்த்தார், மோசடி செய்தார் என்று கொடுத்ததை பறித்துவிடும். அடியாட்களை தன் கூலிப்படையாய் பயன்படுத்தும், காரியம் முடிந்தவுடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று போட்டுத்தள்ளும். அதுவரை அக்களிக்கட்டும்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.