Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன்.

234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன்.

தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது.

இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு.

திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும்.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''.

இவ்வாறு சீமான் கூறினார்.

அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/626364-naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview-1.html

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

இந்த திரி பற்றுமா ? ரெல் மீ.! 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

tenor.gif

இந்த திரி பற்றுமா ? ரெல் மீ.! 👍

நிச்சயம்..... பெற்றோல் ஊத்தியாவது, பத்த வைக்கவேணும் தோழர். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயம்..... பெற்றோல் ஊத்தியாவது, பத்த வைக்கவேணும் தோழர். 🤣

நீங்கள்  ஒன்றும் பற்றவைக்க தேவையில்லை கருத்துக்களத்தில்  சீமான் என்ற பெயரை பார்த்தவுடன் உடலெல்லாம் பதறி  வேர்த்துக்கொட்டியபடி கொஞ்சப்பேர் ஓடிவருவினம் பாருங்க .வெய்ட்  அண்ட் சி ......................😆

மறை நீர் பற்றி அழகாக நம்மாழ்வார் சொல்லியிருப்பார் அதை சீமான் லூசு ஊர் ஊராக போய்  கூட்டங்களில் சொல்லும்போது கூட அந்த மக்களுக்கு புரிந்து இருக்குமா தெரியலை கடைசியாக பூமி திரைப்படத்தில் கதாநாயகன் மறைநீர் பற்றி விளக்குவார் படம் பார்க்கும் மக்களுக்கு விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே .மறைநீரை விளங்கிக்கொண்டவரால் கே கே ஸ் ல் சீமெந்து  தொழில் சாலை மீள  இயங்க அனுமதிக்க மாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

தாராப்பா சீமான் திரி ஆரம்பிச்சது..... ஓகோ... கிருபன் அய்யாவே...

உங்களுக்கு போரடிச்சு போச்சு கிருபன் சார்... அதுதான் நீங்களே போட்டு தொடங்கி இருக்கிறியள்..

சாரி.... வீ ஆர் வெரி பிஸி... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

தாராப்பா சீமான் திரி ஆரம்பிச்சது..... ஓகோ... கிருபன் அய்யாவே...

உங்களுக்கு போரடிச்சு போச்சு கிருபன் சார்... அதுதான் நீங்களே போட்டு தொடங்கி இருக்கிறியள்..

சாரி.... வீ ஆர் வெரி பிஸி... :grin:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

ந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம்.

உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது. 
 
ஆனால் கூர்ந்து பார்த்தால் இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், நாம் தொலைத்த வளங்கள் ஏராளம். அதில் ஒன்று தண்ணீர்.  பூமியில் 71% தண்ணீர் உள்ளது. அதில் 99.7% தண்ணீர் மனிதர்களால் பயன்படுத்தமுடியாது.

மீதமுள்ள 0.3% தண்ணீர் மட்டுமே மனிதன் பயன்படுத்த தக்கதாக உள்ளன. அந்தத் தண்ணீரைத்தான் நாம் விவசாயத்திலிருந்து, ராக்கெட் உற்பத்தி வரைக்கும் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு....
 
ஒரு ஏ4 அளவு பேப்பர் - 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
 
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 2500 லிட்டர் தண்ணீர்
 
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
 
ஒரு ஜோடி காலணி -  7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
 
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர் 
 
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்
 
அதிர்ச்சியடையாதீர்கள். இதுதான் உண்மை.  அடுத்த உலகப் போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான நீர் அரசியல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு,  நடந்துகொண்டிருக்கின்றன. எப்படி என்கிறீர்களா? அந்த காரணத்தை,  நாம் இழந்துவிட்ட இரண்டு வளமான ஆறுகள் சொல்லும்.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
நொய்யல் ஆறு
 
திருப்பூர்,  துணிகளுக்குப் பேர் போன நகரம். ஆனால் அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி வகைகள் பெரும் பாலும் ஏற்றுமதியே செய்யப்படுகின்றன. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 6000 லிட்டர் தண்ணீரும், ஒரு டி ஷர்ட் தயாரிக்க 1900 லிட்டர் தண்ணீரும் என ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கான தண்ணீரை நம் நீராதாரங்களிலிருந்து எடுப்பதோடு மட்டுமல்லாமல், துணிகளுக்குச் சாயமிட்டப் பிறகு அந்த சாயக் கழிவுகளும் நீர்நிலைகளில்தான் கொட்டப்படுகிறது. இந்தச் சாயக் கழிவுகளால் அழிந்ததுதான் நொய்யல் ஆறு. 

பாலாறு
 
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தோல் பொருட்களைத் தயாரிப்பதற்கான பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றுமதி செய்யும் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்த தோல் பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் பாலாறு நாசமானது. 

தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!
 
ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே. 
நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன. 
 
மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம். இது மட்டுமா?
இங்கு 10 ல் 9 பேர் ஷவரில் குளிக்க விரும்புகிறார்கள். நம் அன்றாட தண்ணீர் செலவில் ஷவரில் குளிக்க மட்டுமே 27 சதவிகிதத்தை வீணாக்குகிறோம். ஒருவர் ஷவர் மூலம் ஒருமுறை குளிக்கும் தண்ணீரில், குடிசைப் பகுதியினர் ஒரு முழு நாளுக்குப் பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாம் செய்யும் ஒரு சிங்கிள் ஃப்ளஷில் 12 லிட்டர் தண்ணீர் போகிறது. நகரங்களில் குழாய்களில் உள்ள விரிசல்கள் வழியே 50% நீர் வீணாகிறது.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.
 
நாம் இதுவரை தொலைத்த தண்ணீரை இனி நம்மால் மீட்டெடுக்க முடியாது. ஆனால் இப்போது மிச்சமுள்ள நீர் ஆதாரங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கு இந்த நிமிடத்தில் இருந்து நமது பணியை துவக்கவேண்டியது அவசியம். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து தண்ணீராக இருக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் உற்பத்தியைச் செய்வது தண்ணீரைத் திருட மட்டுமல்ல. ஊதியம், காப்புறுதி இதர சலுகைகள், தொழிலாளர் உரிமைகள் என்பன மிகவும் குறைவு. எனவே இலாபம் அதிகம். 

எனவே தண்ணீரைக் காக்க வேண்டுமென்றால், மேற்குத் தராதரத்திற்கு ஊதியத்தையும், இதர பாதுகாப்புகளையும் கூட்ட வேண்டும். உற்பத்தித் துறை சுருங்கும், தண்ணீரில் மிதக்கலாம்!😎

ஆனால், அப்படி செய்ய முதல் மாற்றுத் தொழில்களுக்கு உதவும் கல்வியை வளர்த்து விட்டுத் தான் பிளக்கைப் பிடுங்க வேண்டும்! இல்லையேல் உலக உணவுத் திட்டத்தில் தங்கியிருக்க வேண்டி வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

ம்ம்..ம்.. 

க்....க்கும்...

உங்கை எல்லோரும் நிண்டு அடிபட, கிருபன் அய்யாவை காணக்கிடையாது. ஆள் தொடங்கின வேலை, நல்லா போகுதோ எண்டு அப்பப்ப வந்து பார்ப்பார்.... நல்லா போகலை எண்டால், பெட்ரோலை எட்டி நின்று ஊத்திப்போட்டு போடுவார். 

ஆனால், அவர் தொடங்கின திரி எண்டபடியால, பூட்டச்சொல்லி, பெட்டிசம் போடார்.... அது மட்டும் அடிச்சு சொல்லலாம்...

நாங்க வரேல்லை இந்த விளையாட்டுக்கு...  :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு எண்டு ஜோசித்தால்.... அவர்... நம்ம தத்தி.... ஸ்டாலின் தான் இதை சொல்லி, மீம்ஸ் காரரிடம் வாங்கிக் கட்டியவர். 😄

அவர் சொன்னது: கேக்கிறவன் கேனையன் எண்டால், கேரளாவில  எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுச்சாம். (ஒரு தலைவனுக்கு இந்த உவமானம் தேவையா என்று கிழித்தார்கள்).

அது சரி நீங்கள் புகுந்து விளயாடுங்கோ. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''.

கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்து கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக 80களில் ராமேஸ்வரக் கடலில் படகேறிய நெடுமாறன் நினைவுக்கு வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

ஏன் அது உண்மையாக இருக்கக் கூடாது..? இலங்கைக் கடர்பரப்புக்குள் போவது தண்டனைக்குரியதாக செயற்படுத்தினால் போயிற்று.. 👍

48 minutes ago, Kavi arunasalam said:

கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்து கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக 80களில் ராமேஸ்வரக் கடலில் படகேறிய நெடுமாறன் நினைவுக்கு வருகிறார்.

ஆமிக்காறன் சுடுவான் பேசாம வீட்டில இருந்தாப் போச்சு.. 😏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

ஏன் அது உண்மையாக இருக்கக் கூடாது..? இலங்கைக் கடர்பரப்புக்குள் போவது தண்டனைக்குரியதாக செயற்படுத்தினால் போயிற்று.. 👍

👍 இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்க்கை மேலும் இவர்களால்  பாதிக்கப்படுவது முடிவுக்கு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை  தாண்டும் மீனவர்களின் படகை மட்டும் தடுத்து வைத்தால் காணும் டி  ஆர் பாலு பாய்ந்துவிழுந்து வந்து மறுபடியும் ராஜபக்ஸவின்  காலில் விழுந்து கிடப்பார் .அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் ஒரு கடத்தல் அங்கு நடைபெறுவதில்லை கேரள கஞ்சா என்று சொல்லப்படும் பொருள் உண்மையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திர மீனவர்களால் கடத்தப்படும் பொருள் இடையில் தரகர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பினாமிகள் மூலம் இலங்கையின் கரையோரங்களை அடைகிறது .இங்கு கேரளா கஞ்சா என  ஊடகங்கள் விளிப்பது  ஒருவித திசை திருப்பல் இந்த கடத்தல் விடயம் அரசுகளுக்கு தெரியும் . கடத்தலின் பெரும் வகி பாகம் இருபெரும்  தமிழக கட்சியின் பினாமிகளே  . 70அல்லது 80 வள்ளம்கள்  இலங்கை கரைக்கு கிட்ட வருகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் சரக்கு இன்னும் கைமாறப்படவில்லை டன் கணக்கில் உள்ள கஞ்சா உள்ள வள்ளம் பொருள் கைமாறாமல் துறைமுகம் திரும்புவதில்லை பதிலாக அது ஆழ்  கடலிலேயே  நிக்கும் வேலை செய்பவர்கள் மட்டும் வேறு படகுகள் மூலம் உணவு தண்ணீர் உடன்  மாறிக்கொள்வார்கள் . அதே அவர்கள் கூட்டமாக முல்லைதீவு பக்கமாக கிழக்காக  கிளம்பினார்கள் என்றால்  சர்வதேச கப்பலுக்கு லிங்க் பண்ணுகிறார்கள் என அர்த்தம் .

கொடுமை என்னவென்றால் யாரோ கடத்தல் செய்ய யாரின் பெயரையோ முகப்பில் போட்டு வியாபாரம் செய்தார்கள் 2009 மட்டும் .

எனவே கூட்டமாக வரும் படகு கூட்டத்தை பிடித்துக்கொண்டு மீனவர்களை  அனுப்பி விட்டாலே காணும் சிலவேளை டன்  கணக்கில் தங்கம் உள்ள படகுகளும் மாட்டும்  போர்முடிந்ததும் அவசர அவசரமாக வந்து பொன்னாடை போர்த்திய கையோடு சில மீனவ படகுகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்தவர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, பெருமாள் said:

இந்த நன்றி நவிலல்கள் எல்லாம் எதற்கு....? 
பார்க்கிறவனும் கேக்கிறவனும் கேணையன்.
புரிந்தவன் புத்திசாலி.😎
 
tamil makkal kural: nenjam marappathillai,kanimozhi srilanka visits

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

இந்தியாவிலையே தமிழ் நாடு சகல வளமும் சகல வல்லமையும் பொருந்திய நாடு.
 எதற்காக வட இந்திய பெரிய கட்சிகள் இரண்டும் தமிழ்நாட்டை கைப்பற்ற போராடுகின்றன என  சிந்தித்தால் நீங்கள் பிஸ்தா....🤠

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிலையே தமிழ் நாடு சகல வளமும் சகல வல்லமையும் பொருந்திய நாடு.
 எதற்காக வட இந்திய பெரிய கட்சிகள் இரண்டும் தமிழ்நாட்டை கைப்பற்ற போராடுகின்றன என  சிந்தித்தால் நீங்கள் பிஸ்தா....🤠

தல நீங்கள், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகின்றிர்கள் 🤕

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

என்ன சிறித்தம்பி? அந்த கூட்டமே சீமான் தூக்கின வேலோடை தான் இப்ப நிக்கிது. இதுக்கு பிறகும் இந்தப்பக்கம் வருவினமே?

மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு |  DMK leader MK Stalin received a silver Vel gift at the Thiruthani Murugan  Temple | Puthiyathalaimurai - Tamil ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, கிருபன் said:

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

வேல் எடுத்த ஸ்டாலின்.. கலாய்த்த சீமான் ....🤠

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

மறை நீர் பற்றி அழகாக நம்மாழ்வார் சொல்லியிருப்பார் அதை சீமான் லூசு ஊர் ஊராக போய்  கூட்டங்களில் சொல்லும்போது கூட அந்த மக்களுக்கு புரிந்து இருக்குமா தெரியலை கடைசியாக பூமி திரைப்படத்தில் கதாநாயகன் மறைநீர் பற்றி விளக்குவார் படம் பார்க்கும் மக்களுக்கு விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே .மறைநீரை விளங்கிக்கொண்டவரால் கே கே ஸ் ல் சீமெந்து  தொழில் சாலை மீள  இயங்க அனுமதிக்க மாட்டினம் .

மறை நீரைப் பற்றி..... நம்மாழ்வாரும், சீமானும் மட்டுமே அக்கறை கொண்டுள்ளார்கள் போலுள்ளது.

ஏன் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் அதனைப் பற்றி வாயே திறப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஏன் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் அதனைப் பற்றி வாயே திறப்பதில்லை.

திராவிட  கட்சிகள்  தமிழனை அடிமைப்படுத்தி பணம் பார்க்க அரியணை ஏறுபவர்கள் அவர்களுக்கு மறை நீரை பற்றி விளங்கிக்கொள்ள ஆந்திரா கன்னடா மொழிகளில் விளக்கம் கொடுக்கணும் .😄

**

  • கருத்துக்கள உறவுகள்

செங்கோவி: சீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷல்)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது – மலேசிய நாம்  தமிழர் இயக்கம் கடும் கண்டனம் – Malaysiakini

அவர்கள் திருந்தி இருந்தால்... 😎

தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த வெற்றியே... 👍🏼

அதனை... பாமர மக்களிடமும், கொண்டு போய் சேர்த்த பெருமையில்..
செந்தமிழன் சீமானுக்கும்,  பெரும் பங்கு உண்டு. ❤️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.