Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சர்வதேசம் நாட்டு அபிவிருத்திக்கென கொடுத்த உதவிகள் தமிழ்மக்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட போது வராத கேள்வி....
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரண உதவிகள் சிங்கள தேசத்திற்கு பரிமாறப்பட்ட போது வராத கேள்வி....
யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளால் தமிழர் பிரதேசங்களுக்கு மட்டும் என அளிக்கப்பட்ட உதவிகள் ஏனைய பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டப்பட்ட போது வராத கேள்வி...

மௌனிக்கப்பட்ட  விடுதலைப்புலிகள் மீது மட்டும் எழும் வரும்?

புலி மீது சேறடிப்பது என்று முடிவெடுத்தபின் சிங்களவன் என்ன செய்தால் என்ன இந்தியன் என்ன செய்தால் என்ன எங்களுக்கு புலி மீது சேறடிக்கணும் அதுதான் எங்கள்  இலக்கு .😁

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

1. யூட்டர் இன்னொரு இடத்தில் சொன்னதை நான் எதிர்க்கவில்லையென்பது பிரச்சினையா? அதை நான் உள்ளூர ஆமோதித்தால் ஏன் எதிர்க்க வேண்டும்? உங்களிடம் முதுகு சொறியல் வாங்கவா? அது ஏன் இங்கே பேசு பொருள் இப்ப? எழுத எதுவும் இல்லையா?

2.  புலிகள் தங்கள் பணத்தை நன்றாக நிர்வாகம் செய்தார்கள். அதில் தானமும் இருந்தது. ஆனால், தமிழ் மக்களின் கல்விக்காக, பொருளாதார உயர்வுக்காக என்று பிரதானமாக எதுவும் செய்யவில்லை என்பது அங்கே வசித்த என் அவதானிப்பு. அங்கே வசிக்காத உங்களுக்கு என்ன சொல்லப் பட்டது என்று நான் அறியேன்!

3. சுயவிளம்பரம் என்பதை நீங்கள் அந்த நோக்கத்தில் பயன்படுத்தியதை விட, அதிக சந்தர்ப்பங்களில் எதிர்கருத்தாளர் எதுவும் செய்யாமல் பேசுகிறார் என்று தட்டிக் கழிக்க அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்! அண்மைய திரிகளில் உங்கள் கருத்துக்களை நீங்களே தேடி வாசிக்க வேண்டும்! 

கந்தையா, நீங்கள் மீளவும் வேறு வரிகளில் எழுதியிருப்பதெல்லாம் போராட்டத்தின் தவறுகளுக்கு எல்லாத் தமிழர்களும் காரணகர்த்தர்கள் என்று தான்! அர்த்தமேயற்ற வெற்றுக் கோசம் இது!

எனவே தான் முள்ளிவாய்க்காலை உதாரணமாகக் காட்டினேன். உங்கள் வாதப் படி தமிழர்கள் அரைவாசிக் காரணமான ஒரு இன அழிவுக்கு, எப்படி தமிழர்களே வழக்குத் தொடுப்பது? 

எப்படி சிங்களவர்அனைவரும் போராட்ட வெற்றியைக்கொண்டடுகிறார்கள்? அதேபோல்  தமிழர்கள் அனைவரும் போராட்டத்தோல்வியை ஏன்  எற்க்ககூடாது?உங்கள் கருத்துகள் முன்னுக்கு பின் முரனாகவுள்ளது...ஒர் இடத்தில் என் வாதத்தை துணைக்கு அழைக்கிறிர்கள்.  இன்னேர்இடத்தில் எதிர்க்கிறிர்கள் .இது தமிழர் போராடடம்..தீர்வு தமிழர்களுக்கானது .தமிழர்களை ஏன? தனித்தனியாக நோக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் . யாரில் பிழையிருந்தாலும் நீதிமன்றமே தீர்ப்பு கூற வேண்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பெருமாள் said:

புலி மீது சேறடிப்பது என்று முடிவெடுத்தபின் சிங்களவன் என்ன செய்தால் என்ன இந்தியன் என்ன செய்தால் என்ன எங்களுக்கு புலி மீது சேறடிக்கணும் அதுதான் எங்கள்  இலக்கு .😁

பெருமாள்! இவர்கள் 20,30 வருடங்களாக புலிகள் மீது சேறடித்து என்னத்தை கண்டார்கள்? ஏதாவது ஒன்றை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்? எனக்கு எதுவுமே தெரியவில்லை. 10 வருடங்களாகி விட்டது. இவர்கள் தமிழில் எழுதுகின்றார்களே ஒழிய  சாரம்சம் அனைத்தும் இனவாத சிங்களத்தின் பிரதிபலிப்பாபகவே தெரிகின்றது.
பல இடங்களில் இவர்களை தமிழர்களாகவே பார்க்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

எப்படி சிங்களவர்அனைவரும் போராட்ட வெற்றியைக்கொண்டடுகிறார்கள்? அதேபோல்  தமிழர்கள் அனைவரும் போராட்டத்தோல்வியை ஏன்  எற்க்ககூடாது?உங்கள் கருத்துகள் முன்னுக்கு பின் முரனாகவுள்ளது...ஒர் இடத்தில் என் வாதத்தை துணைக்கு அழைக்கிறிர்கள்.  இன்னேர்இடத்தில் எதிர்க்கிறிர்கள் .இது தமிழர் போராடடம்..தீர்வு தமிழர்களுக்கானது .தமிழர்களை ஏன? தனித்தனியாக நோக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் . யாரில் பிழையிருந்தாலும் நீதிமன்றமே தீர்ப்பு கூற வேண்டும்..

வெற்றிக்கு ஆயிரம்பேர் தகப்பன் தோல்விக்கு ............................

ஜெயசுக்குறு முறியடிப்பு சமர்  ஆனையிறவு வெற்றி களின் போது  அப்ப  தமிழ்நாதம் அதில் பலரும் ஒலிநாடாவில் பதிவு இட்டார்கள் அப்போது எல்லோருமே புலிகளாக தெரிந்தார்கள் புலியை  எதிர்த்து பதிவுகள் பிளாக்குகளில்  இட்டவர்கள் கூட அமைதியானர்கள் . நீங்கள்  யார் என்றால் சிலோன் தமிழ் என்றோம்  கேட்டவன்  புரிந்து கொண்டு தமிழ் டைகர் என்று அவர்களாகவே சொன்னார்கள் நாங்கள் கேட்கவில்லை அப்படி சொல்லு என்று .

ஆனால் இப்போது போல் அப்போதும் ஒரு கூட்டம் நித்திரையின்றி தவித்தனர் அவர்களின் நயவஞ்சக சதிக்கு  ஆயிரக்கணக்கான மக்களும் புனித போராட்டமும் பலியாகியது இனத்தை துழைத்தோம் ஆனாலும் புலிகளின் புகழ்சியை இந்த பத்து வருடங்களில் அடக்க முடியாமல் இன்னும் யாழில் ........................................

6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

சாரி ராங் நம்பர் நீங்கள்  கேட்கவேண்டிய கேள்வி சிங்கள அரசை பார்த்து ?

நீங்கள்  தமிழ்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள்  கேட்கவேண்டிய கேள்வி சிங்கள அரசை பார்த்து ?

நீங்கள்  தமிழ்தானே ?

போரரில் தோல்வியடைவதையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிட்டவர் இங்குள்ள யாழ்கள உறுப்பினர் தான்.
நீங்கள்  தமிழ்தானே? ஏன் தமிழ் விளங்கவில்லை?

10 hours ago, Kandiah57 said:

அந்த சம்பவத்தை அராயவும் தீர்ப்பு கூறவும் நான் விரும்பவில்லை..ஆனால் நீங்கள் ஒவ்வோர் திரியிலும் பிரபாகரனை மிகவும் மூர்க்கமாக எதிர்த்திர்கள் ஏன்?பிரபாகரனைப்போல் உறுதியான கொள்கைப்பற்றுள்ள..சுயநலமற்ற..தலைவனைப் இனி எக்காலத்திலும் தமிழ் இனம் பெறமுடியாது..நீங்கள விரும்பினால் தலைமையை நன்றாக விமர்சனம் செய்யலாம்..ஆனல். 04-02-1948 இலிருந்து தொடங்குங்கள் நானும் வாசிக்க ஆவலாகவுள்ளேன்..இதை விட்டு இடையில் வந்த புலிகளை மட்டும் விமர்சனம் செய்வது என்றால் அது உண்மையில் விமர்சனமில்லை.

(1) 04-02-1948 இருந்து ஆயுதப்போராட்ட ஆரம்பம் வரை..

(2) ஆயுதப்போராட்டக்காலம்..

(3) 18-05-2009இருந்து இன்று வரை  இந்த ஆய்வு முடியமுன் நாடு முழுக்க சிங்கள மயமாகிவிடும். இப்படியான விமர்சனத்தின் பயனாக..இனி எவனும் போராட்டத்துக்கு தலைமை எற்க வர முடியாதபடி எம்மை அறியமால் நாமே தடை செய்தவர்கள் ஆவோம் ஆகவே மறப்போம் மன்னிப்போம் நல்லதே நடக்கும்  எங்கள் அமைவிடம்  ஐரோப்பாவிலிருந்து இருத்தால் ஆறுபது ஆண்டுகளுக்குமுன் ஐ.நா சபையில் அங்கத்தவராகியிருப்போம். சிங்களவர் ஒரு மாநில சுய ஆட்சி தரவிரும்பமையே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..

கந்தையா, எனது கருத்துகள் எவையும் பிரபாகரன் பற்றியதல்ல.   பிரபாகரனையோ அவரது இராணுவ திறமையையோ விமர்சனம்  செய்யும் தகுதி எனக்கு இல்லை. அதை நான் செய்யவும் இல்லை. நீங்கள்  தான் அடிக்கடி  பிரபாகரனை வலிந்து இங்கே கொண்டு வருகின்றீர்கள்.

எப்படி எவர்  போரிட்டாலும் தோல்வி நிச்சயம் கிடைத்திருக்கும்  என்று ஒன்றிற்கு பல தடவை அழுத்தி  சொல்லிவிட்டு பிரபாகரன் போராடினதால் தான் தோல்வி கிடைக்கும் என்ற உணமையை அறிந்துகொண்டோம்  என்று கூறினீர்கள். உங்கள் கருத்துப் படி தோல்வி கிடைக்கும் என்ற உண்மையை அறிவதற்காக போர் செய்து அதனால் பலியான லட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பற்றி நீங்கள் கூறவில்லை. அந்த உணமையை அறிவதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் என்று நினைத்தீர்களோ தெரியாது.  

பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. இராணுவ பலத்தை மட்டும் பெருக்குவதன் மூலம் தமிழர்கள் தமிழ் ஈழத்தை அடையலாம் என்று முழுமையாக நம்பி அதற்காகவே அர்ப்பணிப்புடன்  செயற்பட்டவர்.  இராணுவ ரீதியில் பல சாதனைகளை செய்த சிறந்த இராணுவத்தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

"முள்ளிவாய்க்காலில் அடைத்து வைக்கப் பட்டு இறந்த தமிழர்கள் இறந்தது அவர்களின் தவறு.."

  விடுதலைப் புலிகளும் இராணுவமும் மோதஆரம்பித்த காலத்திலிருந்து இராணுவம் அழித்தது பொதுமக்களையும், அவர்களின் சொத்துதுகளுமே அதிகம். புலிகளின் முகாம்களை தெரிந்தும் அதனை தாக்காது பொதுமக்களையும் அவர்களின் வீடுகளையுமே  குறி வைத்து தாக்கியது. ஒன்று புலிகளின்   எதிர்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்,உடைமை, விமான சேதம். புலிகளை மக்கள் வெறுத்து தனிமைப்படுத்தல், பொதுமக்களின் அழிவுகளினால் புலிகளை போராட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பது, சாட்டோடு சாட்டாக மக்களையும், சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக்குவது. ஆனால் மக்கள் புலிகள் இருக்கும் இடமே தமக்கு பாதுகாப்பெனஉணர்ந்து அவர்கள் இருக்கும் இடங்களை நாடி குடியமர்ந்தார்கள். அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து புலிகளை சுட்டுக்கொன்றோம் என செய்தி வெளியிட்டார்கள். உறவுகள் இறந்தவரின் உடலைக் கேட்ட போதுஅவன் ஒரு புலி என்று கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு உடன்பட மறுத்து உடலை பெற்றுக்கொள்ளாமலே சென்ற உறவுகளும், இதைப்பார்த்து வெறுப்புற்று இயக்கத்தில் இணைந்தவர்களும் உண்டு. குண்டு போட்டு அழிக்கப்பட்ட மக்களையும், அவர் வீடுகளையும் போராளிகள் என்றும் அவர்களின் முகாம்கள் என்றும் விளக்கம் கொடுத்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்து குண்டுபோட்டு அழித்த பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், எத்தனையெத்தனை? செஞ்சோலை  உட்பட.  வன்னிப்போரின்போது அங்கு சிக்கியிருந்த அத்தனை மக்களையும் கொன்றொழிப்பதே அரசின் முழுத்திட்டம். பொதுத் தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றி சாட்சிகளில்லாமல் அழிப்பது, அங்கிருந்த மக்களின் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்கூறியது, மக்கள் வெளியேறும் வழிகளை தடுத்தது, உணவு மருத்துவ வசதிகளை தடுத்தமை, மனித குலத்துக்கு எதிரான எரி குண்டுகளையும், ஆயுதங்களையும் பாவித்தமை, சமய நிறுவன உணவுகளஞ்சியங்களை குண்டு போட்டு அழித்தமை, வைத்தியசாலைகள் பாடசாலைகள், ஆலையங்கள், பதுங்கு குழிகள், மக்கள் தஞ்சமடைந்த இடங்களில் கண்மூடித்தனமான எறிகணை, விமானக்குண்டுத் தாக்குதல்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக போர் உக்கிரம் அடைய முன்னே ஒட்டுக்குழுக்களின் வி. முரளிதரனின் உதவியுடன் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி உள்நுழைந்து நோயாளர் காவுவண்டிகள், சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு  மக்களோடு மக்களாக கலந்து துல்லியமாக போராளிகளின் அசைவுகளை தெரிந்துகொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது சாட்சி. இதற்கு மேல் மக்கள் தப்புவார்கள் என்று அரசு எதிர்பார்க்காததால் மக்களை மீட்டு பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடு தங்குமிட வசதி ஏதும் பொறுப்புள்ள, மக்களை பாதுகாப்பாக மீட்க போர்செய்த அரசு செய்திருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பொதுமக்களை அடைத்து வைத்திருந்தால் இராணுவம் தங்களை தாக்காது பாதுகாக்கும், போக இடமே இல்லாதபோது போகவிடும்என்று நம்புமளவிற்கு நம்மில் சிலர் முட்டாள்களாக இருக்கலாம் புலிகள் அப்படியிருந்திருக்க மாட்டார்கள்.  

14 hours ago, Justin said:

இதை சிங்களவன் சில இடங்களில் சொல்கிறான்.

இதுவரையில் சிங்களவன் உண்மையைத்தவிர வேறெதுவும் சொன்னதேயில்லை. ஆகவே இதுவும் சத்தியம் நம்புங்கோ. தான் செய்வதற்கு ஒரு காரணம் சொல்வான் அதுவே வேத வாக்கு நமக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

Satan இவர்களுக்கு பொழுது போகனும் புலிகளை சாடி, விட்டுவிடுங்கள் நல்லவர்களா வேஷமிட்டு திரியும் பொழுது போக்கர்கள். ஏதற்கெடுத்தாலும் புலிகளில் தான் இவர்களின் தரங்கெட்ட விமர்சனம், இவர்களிடம் விடுதலைக்கான நல்ல பொறிமுறையில்லை, இவர்களுடன் எமது நேரத்தை செலவிடுவதை விட, மக்களுக்கு எம்மால் இயன்றதை செய்வது நல்லது

3 hours ago, tulpen said:

பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. இராணுவ பலத்தை மட்டும் பெருக்குவதன் மூலம் தமிழர்கள் தமிழ் ஈழத்தை அடையலாம் என்று முழுமையாக நம்பி அதற்காகவே அர்ப்பணிப்புடன்  செயற்பட்டவர்.  இராணுவ ரீதியில் பல சாதனைகளை செய்த சிறந்த இராணுவத்தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

உங்களின் நக்கலை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்,

தலைவர் இராணுவ, அரசியல். பொருளாதார... எல்லாவற்றிலும் மேதை, அவரைப்பற்றி கதைக்க / விமர்சிக்க உங்களுக்கு / யாருக்குமே எந்தவித அருகதையுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஈழ தமிழ் மக்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது.
அதில் கல்வி சுகாதாரம் வீதி போக்குவரத்து ஓய்வூதியம் என பல விடயங்கள் இதற்குள் சேரும்.

***

இது தான் உங்கள் பூசணிக்காய்? 🤔

வெளியில் இருந்து வந்த நிதி , உள்ளூரில் வரி உட்பட பல்வேறு வழிகளில் சேர்க்கப் பட்ட நிதி என்பவற்றின் பெரும்பகுதி போர் நடவடிக்கைகள் சம்பந்தப் பட்டதேயொழிய நீங்கள் சொல்கிற  பகுதிகளுக்கு செல்லவில்லை என்பதை அங்கே வாழ்ந்தோர் அறிவர்! 

இது குற்றச்சாட்டல்ல, போரியல், அரசியல் அமைப்பான புலிகள் மக்களின் பொருளாதாரம் கல்வி பற்றி அக்கறை கொள்ளக் கடமையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை! எனவே, இதை ஒரு தகவலாகத் தான் சொல்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விடயங்களில் சில அங்கே இருந்த அரசசாரா அமைப்புகளால் செய்யப்பட்டன. போக்குவரத்து போன்ற விடயங்கள் புலிகளுக்கு மேலதிக வருமானம் ஈட்டும் துறைகளென்பதால் அவர்களே செய்தனர்.  
 
Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

  விடுதலைப் புலிகளும் இராணுவமும் மோதஆரம்பித்த காலத்திலிருந்து இராணுவம் அழித்தது பொதுமக்களையும், அவர்களின் சொத்துதுகளுமே அதிகம். புலிகளின் முகாம்களை தெரிந்தும் அதனை தாக்காது பொதுமக்களையும் அவர்களின் வீடுகளையுமே  குறி வைத்து தாக்கியது. ஒன்று புலிகளின்   எதிர்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்,உடைமை, விமான சேதம். புலிகளை மக்கள் வெறுத்து தனிமைப்படுத்தல், பொதுமக்களின் அழிவுகளினால் புலிகளை போராட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பது, சாட்டோடு சாட்டாக மக்களையும், சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக்குவது. ஆனால் மக்கள் புலிகள் இருக்கும் இடமே தமக்கு பாதுகாப்பெனஉணர்ந்து அவர்கள் இருக்கும் இடங்களை நாடி குடியமர்ந்தார்கள். அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து புலிகளை சுட்டுக்கொன்றோம் என செய்தி வெளியிட்டார்கள். உறவுகள் இறந்தவரின் உடலைக் கேட்ட போதுஅவன் ஒரு புலி என்று கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு உடன்பட மறுத்து உடலை பெற்றுக்கொள்ளாமலே சென்ற உறவுகளும், இதைப்பார்த்து வெறுப்புற்று இயக்கத்தில் இணைந்தவர்களும் உண்டு. குண்டு போட்டு அழிக்கப்பட்ட மக்களையும், அவர் வீடுகளையும் போராளிகள் என்றும் அவர்களின் முகாம்கள் என்றும் விளக்கம் கொடுத்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்து குண்டுபோட்டு அழித்த பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், எத்தனையெத்தனை? செஞ்சோலை  உட்பட.  வன்னிப்போரின்போது அங்கு சிக்கியிருந்த அத்தனை மக்களையும் கொன்றொழிப்பதே அரசின் முழுத்திட்டம். பொதுத் தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றி சாட்சிகளில்லாமல் அழிப்பது, அங்கிருந்த மக்களின் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்கூறியது, மக்கள் வெளியேறும் வழிகளை தடுத்தது, உணவு மருத்துவ வசதிகளை தடுத்தமை, மனித குலத்துக்கு எதிரான எரி குண்டுகளையும், ஆயுதங்களையும் பாவித்தமை, சமய நிறுவன உணவுகளஞ்சியங்களை குண்டு போட்டு அழித்தமை, வைத்தியசாலைகள் பாடசாலைகள், ஆலையங்கள், பதுங்கு குழிகள், மக்கள் தஞ்சமடைந்த இடங்களில் கண்மூடித்தனமான எறிகணை, விமானக்குண்டுத் தாக்குதல்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக போர் உக்கிரம் அடைய முன்னே ஒட்டுக்குழுக்களின் வி. முரளிதரனின் உதவியுடன் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி உள்நுழைந்து நோயாளர் காவுவண்டிகள், சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு  மக்களோடு மக்களாக கலந்து துல்லியமாக போராளிகளின் அசைவுகளை தெரிந்துகொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது சாட்சி. இதற்கு மேல் மக்கள் தப்புவார்கள் என்று அரசு எதிர்பார்க்காததால் மக்களை மீட்டு பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடு தங்குமிட வசதி ஏதும் பொறுப்புள்ள, மக்களை பாதுகாப்பாக மீட்க போர்செய்த அரசு செய்திருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பொதுமக்களை அடைத்து வைத்திருந்தால் இராணுவம் தங்களை தாக்காது பாதுகாக்கும், போக இடமே இல்லாதபோது போகவிடும்என்று நம்புமளவிற்கு நம்மில் சிலர் முட்டாள்களாக இருக்கலாம் புலிகள் அப்படியிருந்திருக்க மாட்டார்கள்.  

இதுவரையில் சிங்களவன் உண்மையைத்தவிர வேறெதுவும் சொன்னதேயில்லை. ஆகவே இதுவும் சத்தியம் நம்புங்கோ. தான் செய்வதற்கு ஒரு காரணம் சொல்வான் அதுவே வேத வாக்கு நமக்கு. 

சாத்தான், இது தான் மிகப் பெரிய பூசணிக்காயாக எனக்குத் தெரிகிறது!🤣 

மே 17-18 அளவில் முன்னரங்க நிலை தகரும் வரை குறுகிய முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில் தஞ்சமடைந்த மக்கள் தரை வழியே அல்லது செஞ்சிலுவைச் சங்க கப்பல் வழியே வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை!

காயமடைந்த மக்களைக் கூட காயத்தின் தீவிரம் பார்த்துத் தான் கப்பலில் ஏற அனுமதித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது போல, அல்லது தெரிந்தாலும் அதை மறைக்கிறீர்கள்!

இதற்கு ஆதாரம் சிங்களவனின் செய்தி அல்ல: நீங்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஐ.நா அறிக்கையிலேயே இருக்கிறது! மேலதிக ஆதாரங்கள் அங்கேயிருந்து தப்பி வந்த மக்களின் சாட்சி, சிலர் இதை எழுதியும் இருக்கிறார்கள் (அலெக்ஸ் பரந்தாமனின் தொடர் யாழிலேயே இருக்கிறது).

எனவே தான், முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு சரி அரைவாசிக் காரணம் தமிழர் தரப்பான புலிகள் என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை! உங்கள் கற்பனைகள் உங்கள் உரிமை!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இவர்கள் மதில் மேல் பூனை அல்ல புலிகளின் அழிவுக்கு காரணமான அனைத்தையும் உள்ளேயும் வெளியேயும் செய்தவர்கள். அதனால் தான் புலிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே முழுமையாக பொறுக்கி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

நாம் எவ்வளவோ எழுதியும் கெஞ்சியும் அவர்கள் புலிகளை தூற்றுவதையும் எம்மை கோபப்படுத்துவதையும் நிறுத்துவதாக இல்லை என்பதே இவர்களின் நோக்கத்தை தெளிவாக சொல்கிறது 

எனவே நேரம் பொன்னானது.
***

டொட்.

உங்களுக்கு கோபம் வரவேண்டுமென்பதற்காக எதையும் எழுதுவதில்லை! 

புலிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் உங்களுக்கு அந்தப் பக்கங்களை ஒரு சக கருத்தாளர் சொல்லும் போது "களையெடுத்தல்" எனும் பதம் பாவிக்குமளவுக்குக் கோபம் வர வேண்டியது ஏன் எனப் புரியவில்லை!

தமிழ் தேசிய வரலாற்றில் ஒளிப்பு, மறைப்பு, திரிப்பு என்பன எங்கள் தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்! 

6 hours ago, உடையார் said:

உங்களின் நக்கலை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்,

தலைவர் இராணுவ, அரசியல். பொருளாதார... எல்லாவற்றிலும் மேதை, அவரைப்பற்றி கதைக்க / விமர்சிக்க உங்களுக்கு / யாருக்குமே எந்தவித அருகதையுமில்லை

உடையார் நான் எந்த நக்கலும் செய்யவில்லை. உணமையைதான் எழுதினேன். 

மற்றது அருகதை, தகுதி என்று ஏதோவெல்லாம் எழுதுயுள்ளீர்கள்.

ஒரு மக்கள் கூட்டத்தின்  எதிர்காலத்தில்   பாரிய   தாக்கம் செலுத்திய/ செலுத்தும் அளவுக்கான  அரசியல் தீர்மானங்களை எடுத்த அரசியல் தலைமைகளைப்பற்றிய பொது  விமர்சனம் என்பது உலகில்  பொது தளங்களில்  இயல்பானது. இதில் எவரும் புனிதர்கள் அல்லர்.

எவரின்  தனிப்பட வாழ்ககையையும் நான் விமர்சிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் யார்மீதும் வசைமாரியும் செய்யவில்லை. அதை இங்கு செய்பவர்கள் யாரென்றால்  தேசியத்தை குத்தகைக்கு எடுத்த நினைப்பில்  உள்ளோரே. தமிழ் தேசியவாதம் என்பது  ஒரு அமைப்பின் மீதான விசுவாசம் மட்டுமல்ல. அது பரந்து பட்டது.     

இறுதியாக, 

நான் எந்த அரசியல் தலைவர்மீது விமர்சனம் வைக்கலாம். எவர் மீது விமர்சனம் வைக்கக்கூடாது என்பது தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கில்லை.

அதே போல் உங்களை, எவர் மீது விமர்சனம் வைக்கக்கூடது  என்று  கூறும் நாகரீகமற்ற உரிமை எனக்கும் இல்லை.  எமது உரிமைக்காக ஜெனிவாவில் நியாயம் கேட்கும் எமக்கு மற்றவரின் கருத்து வெளிப்பாட்டு உரிமையில் தலையிடும் உரிமையும்  இல்லை. 

Edited by tulpen
வசன நடைத் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளில் தமிழீழ கல்வித்துறை என்ற ஒன்று இருக்கவும் இல்லை. அதற்கு பொறுப்பாக இங்குமரன் என்றழைக்கப்பட்ட பேபி சுப்பிரமணியம் பொறுப்பாக இருக்கவும் இல்லை. 

தமிழீழ கல்வித்துறையால் முன்னோடித் தேர்வு என்ற ஒன்று நடாத்தப்படவும் இல்லை. அந்த தேர்வில் மாவட்ட ரீதியில் அதி சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  தலைவரின் கையால் 5,000/=  வழங்கப்படவும் இல்லை.

போராளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவும் இல்லை, 

சாதாரண மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் விற்கப்படவும் இல்லை.

தமிழீழ வைப்பகம் ஊடாக சேமிப்பு வைத்திருந்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவும் இல்லை, வியாபாரக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்கப்படவும் இல்லை வங்கி மேலதிகப்பற்றும் வழங்கப்படவில்லை.

தமிழீழ விளையாட்டுத்துறையால் அல்லது தமிழீழ கலை பண்பாட்டுக் களகத்தினால் போட்டிகள் நடாத்தப்படவும் இல்லை பரிசுகள் வழங்கப்படவும் இல்லை.

95/96 இல் கிளாலி ஊடாக வன்னிக்கு வந்திறங்கியவர்களுக்கு கடற்கரையில் வைத்து தேனிரும் பாணும் வழங்கவும் இல்லை, கிளிநொச்சி வரை போக்கு வரத்து வசதி செய்யவும் இல்லை.

செல்லடி கிபிர் மிக் அடியால் காயப்பட்ட மக்களை தமது வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் இல்லை.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

"முன் யோசனையில்லாதவருக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடத்தில் அப்புமாம்" - இப்படித் தான் போய்க் கொண்டிருக்கு திரியின் பதில்கள்:

நான் பதில் சொன்ன முதல் கருத்து விசுகரின்: "புலிகளுக்கு யுத்த காலத்தில் நாம் கொடுத்த பண உதவி மக்களின் பொருளாதாரம், கல்வியை உயர்த்தவே கொடுத்தோம்" என்ற கருத்து!

அதற்கு நான் கொடுத்த பதில் : "யுத்தச் செலவுக்குத் தான் பணம் பிரதானமாகப் பயன்பட்டது, மிச்சமெல்லாம் இரண்டாம் பட்சம், அல்லது புலிகள் சுயசார்பாக இருக்க எடுத்த தொழில் முயற்சி" 

மேலே மீரா, கடைசியாக வந்திருக்கிறார், மேலே பதில்களை வாசித்தாலும் அவருக்கு விளங்கியிருக்காது. 

ஒரு உதாரணம் மட்டும் கல்வி வளர்ச்சிக்கு - மட்டூக்கள் ரூ மச் என்று கருதினால் அகற்றி விடுங்கள்:

இளங்குமரன் கல்விப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் தான் யாழ் மத்திய கல்லூரியின் றொமெய்ன் மண்டபம் உடைந்த அதே நேரம் இன்னொரு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசிடம் இருந்து நிதி வந்தது. அந்த நிதி முழுவதும் கல்லூரிக்கு வர எவ்வளவோ போராட வேண்டி இருந்தது, சிங்கள அரசுடன் அல்ல!

அதே காலப் பகுதியில் கல்லூரிக்கு புதிய பாண்ட் வாத்திய செற் கொழும்பில் இருந்து வந்தது. அப்படியே கவர் கூட உடைக்காமல் எடுத்துச் செல்லப் பட்டது! நாங்கள் ஏனைய கல்லூரிகளிடம் இருந்து இரவலாக வாத்தியங்கள் பெற்றுப் பாவித்தோம்!

பேபி கல்விப் பொறுப்பாளராக இருந்து கல்வித் திணைக்களக் கூட்டங்களைக் கூட  நடத்தினார்! ஆனால் முதல் நோக்கமாக கல்வி முன்னேற்றம் இருக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியும் நான் எழுதுவது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்காது என்று.

புலிகளால் எவ்வளவு தூராம் போராடிக்கொண்டு மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்திகளை செய்யமுடியுமோ அதனை செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

எனக்கு தெரியும் நான் எழுதுவது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்காது என்று.

புலிகளால் எவ்வளவு தூராம் போராடிக்கொண்டு மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்திகளை செய்யமுடியுமோ அதனை செய்தார்கள்.

புலிகள் இயக்கத்தின் உப கட்டமைப்புகள் எத்தனை என்ற தரவுகளை பதிவிட முடியுமா சகோ??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

புலிகள் இயக்கத்தின் உப கட்டமைப்புகள் எத்தனை என்ற தரவுகளை பதிவிட முடியுமா சகோ??

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, யாழ் செல்லும் படையணி, பதுங்கித் தாக்குதல் அணிகள், குறிபார்த்து சுடும் படையணி, ஆழஊடுருவி பதுங்கித்தாக்குதல் அணி, சிறுத்தைப் படையணி, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, வேவுப்பிரிவு

02. கடற்புலிகள், நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி, நீரடி நீச்சல் அணி, படகு கட்டுமான பகுதி, கடற்கண்காணிப்பு பிரிவு (Radar Monitoring)

03. வான்புலிகள்
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு)
07. படையப் புலனாய்வுப் பிரிவு
08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி
09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – இராணுவ நகர்வுகளை விமானதாக்குதல்களை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் அணி)
11. வரைபட பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் தயாரிக்கும் அணி)
12. சமர் ஆய்வு மையம்
13. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
14. அனைத்துலகச் செயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
15. வழங்கற் பிரிவு
16. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் – http://www.ltteps.org/
17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை
18. தலைமைச்செயலகம்
19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
20. இராணுவ தொழிநுட்ப பிரிவு (கணனிப்பிரிவு)
21. போர்க்கருவி தொழிலகம்

01. ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு)
02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)
03. மருத்துவப் பிரிவு, திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை
04. தமிழீழ சுகாதார சேவைகள் (மருத்துவ சேவை, உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்)
05. வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)

01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, குற்ற புலனாய்வுப் பிரிவு, சீர்திருத்தப் பள்ளி)
02. தமிழீழ வன வளத்துறை
03. தமிழீழ நிதித்துறை
04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
05. தமிழீழ நீதித்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, நீதிமன்றுகள்) – http://www.eelamjudicial.org/
06. தமிழீழ நிர்வாக சேவை (மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான செயலகங்கள்)
07. சூழல் நல்லாட்சி ஆணையகம்
08. பெண்கள் அபிவிருத்தி மறுவாழ்வு மையம்
09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
10. தமிழீழ விளையாட்டுத்துறை
11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம்
13. தமிழீழ போக்குவரவு கழகம்
14. வடகிழக்கு மனிதவுரிமைகள் செயலகம் (NESoHR)
15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( விசா வழங்கும் பகுதி)
16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி)
17. தமிழீழ வைப்பகம் http://www.bankoftamileelam.net/
18. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
19. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
20. சுங்கவரித் துறை
21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House)
23. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம்
24. மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
25. தமிழீழ கல்விக் கழகம்
26. தமிழீழ கட்டுமானப் பொறியியல் செயலகம்

01. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
02. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
04. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
05. அன்பு இல்லம் (முதியோர்)
06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
07. இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
08. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­.
09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

01. அறிவமுது பொத்தகசாலை
02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்)
03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
04. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
05. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை தயாரிப்பு, மொழியாக்கப்பிரிவு)
06. புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, சிங்கள வானொலி
07. தமிழீழ இசைக்குழு
08. இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ் செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)

01. மாவீரர் பணிமனை
02. தியாகசீலம்
03. மாவீரர் துயிலும் இல்லங்கள்

01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம்
02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று
03. சோழன் தயாரிப்புகள்
04. பொன்னம்மான் உரவகை வாணிபம்
05. தென்றல் இலத்திரனியலகம்
06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்
07. அந்திவானம் பதிப்பகம்
08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
09. ஒளிநிலா திரையரங்கு
10. அந்திவானம் பதிப்பகம்.
11. இளவேனில் எரிபொருள் நிலையம்.
12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம்
13. காலணி (பாதணி உற்பத்தி மையம்)
14. மருதம் வாணிபம்.
15. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
17. கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை

01. தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
02. தொழில் நுட்பக் கல்லூரி
03. அரசறிவியற் கல்லூரி
04. தமிழீழ பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை)
05. சிறுவர் கணனிப் பூங்கா

01. விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
02. கிராம கடற்றொழிலாளர் சங்கம் – சமாசம் – சம்மேளனம் (மாவட்டம்) – இணையம் (மாகாணம்) கட்டமைப்புகள்
03. மாவீரர் அரங்குகள்.
04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
05. மாவீரர் நினைவு வீதிகள்.
06. மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்­கள்.
07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
08. மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
09. மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
10. மாவீரர் நினைவு நூலகங்கள்.
11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
12. மாமனிதர் விருதுகள் (தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
 
http://eelamhouse.com/?p=1082
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம். இப்ப மேலுள்ள லிஸ்ற்றில் ஒன்று மட்டும் இருக்கு.

லிஸ்ற்றில் ஒன்றிரண்டு விடுபட்ட்டும் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

இது தான் உங்கள் பூசணிக்காய்? 🤔

வெளியில் இருந்து வந்த நிதி , உள்ளூரில் வரி உட்பட பல்வேறு வழிகளில் சேர்க்கப் பட்ட நிதி என்பவற்றின் பெரும்பகுதி போர் நடவடிக்கைகள் சம்பந்தப் பட்டதேயொழிய நீங்கள் சொல்கிற  பகுதிகளுக்கு செல்லவில்லை என்பதை அங்கே வாழ்ந்தோர் அறிவர்! 

இது குற்றச்சாட்டல்ல, போரியல், அரசியல் அமைப்பான புலிகள் மக்களின் பொருளாதாரம் கல்வி பற்றி அக்கறை கொள்ளக் கடமையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை! எனவே, இதை ஒரு தகவலாகத் தான் சொல்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விடயங்களில் சில அங்கே இருந்த அரசசாரா அமைப்புகளால் செய்யப்பட்டன. போக்குவரத்து போன்ற விடயங்கள் புலிகளுக்கு மேலதிக வருமானம் ஈட்டும் துறைகளென்பதால் அவர்களே செய்தனர்.  
 
சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டதைக்கூட/ அங்கீகரித்ததை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த துரதிஷ்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டதைக்கூட/ அங்கீகரித்ததை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த துரதிஷ்டங்கள்.

சிங்கள மக்களுக்கு தீவிர தேசியர்களைப் பப்பாவில் ஏற்றி விட்டால் அங்கேயே பேசாமல் இருந்து விடுவர் என்பது தெரியுமல்லவா? எனவே  கற்பனைகளை அவர்கள் அவர்கள் அங்கீகரிப்பர்! 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விளங்க நினைப்பவன் said:

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

நான் சொன்ன கருத்து பிழையாக கருதப்பட்டுள்ளது.எந்த ஒரு செயலும்..தோல்வியடையும்போது..சிலர் அது செய்தது பிழை..அப்படிச்செய்திருக்கக்கூடாது. .இப்படிச்செய்திருக்கலாம். .....என்று சொல்லுவதற்க்கு. தகுதி தேவையில்லையா? வெற்றி என்பதற்க்கு வரவிலக்கணம்..99%. தோல்வி ஆகும். ஆகவே தோல்வியடையும் எந்தச்செயலும் செய்யப்படாது எனக் கூறமுடியாது..தெரியாத விடயம் பற்றி கருத்து கூறக்கூடாது..அப்படிக்கூறும் கருத்துகள் பிழையானவை. பரீட்சைப்பேயிலும் ஒர் தோல்வி. போராட்டத்தோல்வியும் ஒர் தோல்வி. இரண்டும். தோல்விதான். இழப்புக்கள் பற்றி கருத்துக்கூறவில்லை....இரணடாம உலக யுததத்தில் ஜேர்மானி..யப்பன்....போன்ற நாடுகள் படுமோசமான இழப்புக்களையடைத்தன..இன்று அந்த நாடுகள் எப்படியிருக்கின்றன....இப்போ போராடத் தெரிந்தவர்கள் போராடலாம்...பேசி தீர்வு பெறக்கூடயவாரகள் பேசித்தீர்வை பெறலாம்....

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

போரரில் தோல்வியடைவதையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிட்டவர் இங்குள்ள யாழ்கள உறுப்பினர் தான்.
நீங்கள்  தமிழ்தானே? ஏன் தமிழ் விளங்கவில்லை?

இது உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

சிங்கள மக்களுக்கு தீவிர தேசியர்களைப் பப்பாவில் ஏற்றி விட்டால் அங்கேயே பேசாமல் இருந்து விடுவர் என்பது தெரியுமல்லவா? எனவே  கற்பனைகளை அவர்கள் அவர்கள் அங்கீகரிப்பர்! 

உங்களைப் போல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உங்களைப் போல்.

ஓம், நானும் அது தான் இங்கே பப்பாவில் உங்கள் போன்ற ஆட்களை "ஏற்றிக் கொண்டிருக்கிறேன்" அங்கேயே மெய்மறந்து இருக்க வேணும்! செயல் எல்லாம் கூடாது சரியா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

எந்த ஒரு செயலும்..தோல்வியடையும்போது..சிலர் அது செய்தது பிழை..அப்படிச்செய்திருக்கக்கூடாது. .இப்படிச்செய்திருக்கலாம். .....என்று சொல்லுவதற்க்கு. தகுதி தேவையில்லையா? வெற்றி என்பதற்க்கு வரவிலக்கணம்..99%.

100 முறை சரியாகச் செய்திருந்தாலும் 101 வது முறை ஒரு தவறு செய்துவிட்டால்அதையே குத்திக்காட்டும் நமது சமூகம், ஒரு தடவையாவது முயற்சி செய்திருக்காது. இதுவும்கடந்து  போகும் என்பதை விட இதுவும் பழகிப்போகும் என்பதே பல சமயங்களில் நம்  இழப்புக்கும், வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.