Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானதே: டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/144907/IMG-20210206-WA0024.jpg

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின்  நிறைவில்  ஊடகவியலாளர்களின்  கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும், அழிவுகளையும் கொடுத்ததால் தற்போது போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருந்தார். இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்றார். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானதே: டக்ளஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

Jude டிடம் அட்வைஸ் எடுத்திருப்பாரோ..🤥

  • கருத்துக்கள உறவுகள்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை
எமது கோரிக்கைகள் நியாயமானது. அதனை சில சிங்களவர்களும் விளங்கிக்கொண்டுள்ளனர்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக 'சட்டஹன' எனும் சிங்கள வானலையில் ஒலிபரப்பப்பட்ட காணொளியில் சுருக்கம் தமிழில் வருமாறு:

"தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அநேக தரப்பினர் சேர்ந்து மாபெரும் கவனயீர்ப்பு பாத யாத்திரை ஒன்றினை ஆரம்பித்திருந்தனர். கிழக்கின் பொத்துவில் தொடங்கி வடக்கின் பொலிகண்டி வரை 5 நாட்களுக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுதந்திர தினமாகிய 4ம் திகதி இப்பேரணி காத்தான்குடியினை வந்தடைந்த போது அங்கு பெருமளவிலான முஸ்லீம் மக்களின் பங்களிப்பினை கண்டு நாம் வியப்படைந்தோம். கடும் மழையினையும் பொருட்படுத்தாது இந்த நடைபயணம் தொடர்ந்தது.

காத்தான்குடியில் சுதந்திர தினமன்று திரு. M.A. சுமந்திரன் அவர்கள் முக்கியமான கருத்தினை பதிவு செய்திருந்தார். 'எண்ணிக்கையில் குறைவாயிருக்கும் ஒரே காரணத்திற்காக எமது வேண்டுகோள்களுக்கு செவிமடுக்காதிருப்பதேன்?' தமிழ் பேசும் மக்கள் என்றவகையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக உறவுகள் இணைந்து எமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் அநேகர் இக்கருத்தினை முன்வைத்தபோதும் செயற்படுத்தவில்லை. தொடர்ந்தும் அவர் முஸ்லீம் சமூகத்தினரை தமிழ் மக்களோடு இணைந்து செயலாற்ற அழைப்பினை விடுத்திருந்தார். முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் குரல் கொடுப்பதைப்போன்று தமிழர் உரிமைகளுக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.

இப்பேரணியில் ஜனாஸா எரிப்பு, மலையக மக்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளம், தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான நீதி போன்ற தமிழ் பேசும் சமூகங்கள் அனைத்தினதும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதனால் தான் இப்பேரணி முக்கிய வரலாற்று நிகழ்வாக திகழ்கின்றது.

பல்வேறு காரணங்களால் தமக்குள் பிளவுபட்டிருந்த தமிழ் பேசும் சமூகம் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்திருக்கின்றது. சுதந்திரத்தின் பின்பதான தேசிய அரசியல் சிறுபான்மையினரை எதிரிகளாக காண்பித்தே பெரும்பான்மை மக்களின் ஆதரவினை நாடிவந்துள்ளது. இதனால் தான் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இன்று தமது உரிமைகளுக்காக தாங்களே குரல்கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் என அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து பயணிக்குமா ? இவர்களுக்கு பெரும்பான்மை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அங்கங்கள் தமது ஆதரவினையும் வழங்குமா? இவற்றிற்கான பதில் சாதகமானதாக அமையுமாயின், இலங்கை ஜனநாயகத்தோடு கூடிய சமாதானமான நாடக முன்னேற வழிவகுக்கும். அவ்வாறில்லாது இவற்றினை தொடர்ச்சியாக புறக்கணித்தும் இப்போராட்டங்களை அடக்கியாள முற்பட்டால் முன்பிருந்ததைவிடவும் பாரதூரமான வன்முறை கலாச்சாரத்தினை நாம் எதிர்நோக்க நேரிடலாம்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் சுதந்திர தினத்தினை கருப்பு நாளாக, அமைதியான முறையில் அனுஷ்டித்தனர். "சுதந்திரம் என்பது பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் தானா?" என்ற கேள்வியோடு அவர்கள் இதனை முன்னெடுத்தனர்.

சிலர் இதனை 'புலிகள் மீண்டும் உருவாகின்றனர்' என்றோ, 'பயங்கரவாதிகள் தலை தூங்குகின்றனர்' என்றோ, 'கிளர்ச்சிக்காரர் உருவாகின்றனர்' என்றோ அடையாளப்படுத்த கூடும். ஆயினும் இவ்வாறான அகிம்சை ரீதியான போராட்டங்களை மேற்கொண்டு எந்த மக்கள் கூட்டமும் தமது உரிமைகளை கோர ஜனநாயக வழியில் இடமுண்டு. இவற்றுக்கு செவிசாய்க்காது முடக்க முயல்வதே ஆயுத போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே அவ்வாறு அவர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளாது அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்களோ, எந்த இனமும் தமக்கு கீழே இருக்க வேண்டுமென்றோ கோரவில்லை மாறாக பெரும்பான்மை சமூகத்தினரை போன்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதனையே கோருகின்றனர்.

இப்போராட்டத்தினை தடுக்க காவல்துறை அநேக மாவட்டங்களில் நீதிமன்ற தடையினை கோரி நின்றது, இது ஜனநாயக வழியில் கோரிக்கையினை முன்னெடுக்காது ஆயுதத்தினை மறுபடி ஏந்த வைப்பதற்காகவா?"

 

பகிர்வுக்கு நன்றி நுணா. சிங்களத்தில் நன்றாக கூறியிருக்கின்றார்கள். என் சிங்கள நண்பர்களுக்கு இதனை வட்ஸப் இலும், என் முகனூலிலும் பகிர்ந்து உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ங்கர் சொல்வதிலும் நியாயம் இருக்கு...இனி சிங்கள இனம் ஒன்று பட்டுவிடும்....மாகாணசபைத் தேர்தலில் இது பிரதிபலிக்கும்...நாங்கள்  ஒன்று பட்டு  நின்றலும் எம்மால் எதுவுமே செய்யமுடியாது...இப்படி விளக்க முடியாமல் டங்கர் தன்னுடைய பாணியில் அடி போடுறார் ...அவ்வளவுதான்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும், அழிவுகளையும் கொடுத்ததால் தற்போது போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருந்தார்.

 ஆட தெரியாதவள் அரங்கு பிழையென்றாளாம். தான் பங்கேற்க முடியாததால், எஜமான் விசுவாசம் அதற்கு சார்பாய் மக்களை திசை திருப்ப முயற்சிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

Jude டிடம் அட்வைஸ் எடுத்திருப்பாரோ..🤥

தீபாவளிக்கு தமிழீழம் மலர போராட்டம் வழிவகுக்கும். வாழ்த்துகள் 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கற்பகதரு said:

தீபாவளிக்கு தமிழீழம் மலர போராட்டம் வழிவகுக்கும். வாழ்த்துகள் 😃

தீபாவளிக்கு முதல் பாத்து கீத்து ஏதும் செய்யேலுமே???? 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

தீபாவளிக்கு தமிழீழம் மலர போராட்டம் வழிவகுக்கும். வாழ்த்துகள் 😃

சாறி புறோ,

jude என்றவுடன் ஓடிவருவீர்கள் என்று தெரியும். ஆனால் இத்தனை வேகமா.. 🤥

உசேன் போல்ட் தோற்றார் போங்கள்.. 😂😂

(சாயம் வெழுக்கத் தொடங்கி பல நாளாயிற்று புறோ.. 😂)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

"For unity and reconciliation, you need to acknowledge that we are a plural society, that we are not homogenous, that there are people from different ethnic backgrounds, people who speak different languages and have different faiths and beliefs. Secondly that all of them are equal citizens irrespective of numbers, each one of them is an equal citizen and the groups that they belong to also have equal rights."

காலனிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 73 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாடு எந்த நிலைமையில் இருக்கின்றதென்பதையும், சரியான பாதையில் சென்றிருந்தால் எந்த நிலைமையில் இருந்திருக்கும் என்பதையும், ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ என்ன மாற்றம் நிகழ வேண்டுமென்பதையும் விளக்குகிறார் எம். ஏ. சுமந்திரன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.