Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கடமையில் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சுமந்திரனின்-பாதுகாப்பு/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு நாடகம் .

சுமத்திரன் தனக்கு குண்டு வைக்க வந்தவர்களென்று அப்பாவி  முன்னாள் ஊனமுற்ற விடுதலை புலிகளை குற்றம் சாட்டி சிறையில் தள்ளியவர் அப்ப  அவர்களின்  கதை அதோ கதிதானக்கும் .

இது சும்மா இலங்கை அரசுக்கும் சுமத்திரனுக்கும் ஒன்றும் இல்லை என்று காட்ட .நடாத்தும் நாடகம் .

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் அவருக்கு உயிராபத்து என்றும்  கொலை முயற்சி என்று கூறி சில முன்னாள் போராளிகளை பிடித்து உள்ளே போடுவார்கள். அத்துடன் மீண்டும் STF பாதுகாப்பு வழங்கப்படும்.

😏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

தவராசா போன்ற்வர்களுக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டது நான் எழுதிய தூக்கட்டும் என்பதுக்கு பதிலா திருப்பி அளிக்கட்டும் இனப்படுகொலை என்பதை ஒத்துக்கொள்ளட்டும் என்று வந்து இருக்கனும் . கடைசி மட்டும் இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி கொல்லுப்பட்டவர்  அவசரத்தில் எழுதி கொப்பி பேஸ்ட் சில குழப்பங்களை உருவாக்கியத்துக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க்கிறேன் .

இன்னும் ஒரு கூடுதல் தகவல் சுமத்திரனுக்கு STF  பாதுகாப்பு மட்டுமே விலக்கப்பட்டுள்ளது  சாதாரண MP மாருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு தொடர்கிறது .

சுமந்திரன் விரோதிகளுக்கு இது இரண்டாவது நல்ல செய்தி. முதல் செய்தி ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவி சுமந்திரன் , சம்பந்தர் , இன்னும் பல சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை செய்து குடியுரிமை நீக்குவதட்கான திடத்தை அரசு செய்யபோகின்றது. எனவே,இனி சுமந்திரனைப்பற்றி அதிகமாக எழுதவேண்டி வராது.  இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2021 at 04:00, Robinson cruso said:

சுமந்திரன் விரோதிகளுக்கு இது இரண்டாவது நல்ல செய்தி. முதல் செய்தி ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவி சுமந்திரன் , சம்பந்தர் , இன்னும் பல சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை செய்து குடியுரிமை நீக்குவதட்கான திடத்தை அரசு செய்யபோகின்றது. எனவே,இனி சுமந்திரனைப்பற்றி அதிகமாக எழுதவேண்டி வராது.  இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

சுமத்திரன்  மக்களுக்கு நல்லது செய்தால்  நாங்களும் அவரின் ஆள்தான் ஆனால் அவர் சென்ற எந்த இடம் எமக்கு சார்பாக முடிந்து இருக்கு ?

**

பெரிய வார்த்தை எல்லாம் பேச வேண்டாம் சம்பந்தரின் கொழும்பு வீட்டை திரும்ப எடுக்கிறார்கள் என்றாலே காணும் அந்தாளுக்கு மோட்சம் தெரியும் .

சுமத்திரனுக்கு கொடுத்த கவுரவ ஜனதிபதி சட்ட தரணி பதவியை மீள  பெறுகிறோம் என்று அவர்கள் அறிவித்தால்  காணும் எடப்பாடியை  மின்சிய ஆளாய் குறுகி போய்  விடுவார் சுமத்திரன் .

On 9/2/2021 at 04:20, பெருமாள் said:

இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

இளையவர்கள் பலர் இருக்கினம் அவர்கள் வருவார்கள் கவலை வேண்டாம் .

On 9/2/2021 at 04:20, பெருமாள் said:

சுமத்திரன்  மக்களுக்கு நல்லது செய்தால்  நாங்களும் அவரின் ஆள்தான் ஆனால் அவர் சென்ற எந்த இடம் எமக்கு சார்பாக முடிந்து இருக்கு ?

**.

இளையவர்கள் பலர் இருக்கினம் அவர்கள் வருவார்கள் கவலை வேண்டாம் .

உங்களுக்கு சந்தோசம் போல இருக்குது. சுமந்திரனின் எதிரி என்றவுடன் ஐயா கொதித்தெழுந்து விடீர்கள். இளையவர்கள் யார்? விக்கி, சித்தார்த்தன், சுரேஷ் , அனந்தி, அடைக்கலம், ஸ்ரீகாந்தா, சிவாஜி , மாவை , சிவசக்தி போன்றோரா ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

உங்களுக்கு சந்தோசம் போல இருக்குது. சுமந்திரனின் எதிரி என்றவுடன் ஐயா கொதித்தெழுந்து விடீர்கள். இளையவர்கள் யார்? விக்கி, சித்தார்த்தன், சுரேஷ் , அனந்தி, அடைக்கலம், ஸ்ரீகாந்தா, சிவாஜி , மாவை , சிவசக்தி போன்றோரா ?

அவர்கள் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

”சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நீக்கியது நானே” : அமைச்சர் சரத் வீரசேகர

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நானே நீக்கியதாகவும், அவருக்கு அந்தப் பாதுகாப்பு அவசியமற்றது என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அமைச்சரவை இதனை கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாக பேரணி 7 ஆம் திகதி இரவு பொலிகண்டியில் நிறைவடைந்தது. இதன்போது எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பேரணியில் முன்னின்று செயற்பட்டனர்.

இவ்வாறான நிலைமையில் 7 ஆம் திகதி இரவு சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டது.

அதற்கான காரணமும் சுமந்திரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் நேற்று குறித்த தொலைகாட்சி நிகழ்ச்சியியொன்றில் அது தொடர்பாக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களினால் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் அவர் எப்படி அந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தார்.

இதனாலேயே அவரின் அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். -(3)

 

http://samakalam.com/சுமந்திரனின்-விசேட-அதிர/

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 06:15, தமிழ் சிறி said:

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள்தான் பேரணியை ஏற்பாடுசெய்து நடாத்தியது போன்ற ஒரு செய்தியை அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்டு சுமந்திரனைத் துகிலுரிந்துள்ளார். பாவம் சுமந்திரன் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கண்ணன் காப்பாற்ற ஓடோடி வந்திருப்பார், அவர் ஆணாச்சே காப்பாற்ற யார் வருவார் கச்சி ஏகம்பனே.??

See the source image

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு கொடுக்க ஒரு காரணம், அதை எடுக்க இன்னொரு காரணம். இதன் பின்புலம் இன்னும் கொஞ்ச நாளில் வெளிவரும் கவலை வேண்டாம். பகிங்கமாக அரசின் பாதுகாப்போடு, அரசுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து கொண்டது சந்தேகத்தை உருவாக்க கூடிய விடயமே. அதை  மக்கள் கண்டுள்ளதால் அவர்கள் கேள்வி கேட்கமுதல் தாங்களே  முந்திக்கொண்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.

இந்நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

என்ன காரணத்திற்காக தனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எப். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

"தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு எதற்கு?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அரசாங்கமே பொறுப்பு! - எம்.ஏ சுமந்திரன்

Report us Banu 5 hours ago

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக தனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

10 முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு எமக்கு உரிமையுள்ளது. இந்தப் போராட்டம் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளது.

 

இதற்கு அரசாங்கம் பதிலளிக்கும் என நம்புகின்றோம். இந்தப் போராட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் என்னுடைய பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் பாதகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் நான் எவருக்கு எதிராகவும் நான் எவ்வித முறைப்பாடுகளை செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை.

என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கமே சில விடயங்களை செய்தது. பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு என்னுடைய ஆலோசனைகளோ, முறைப்பாடுகளோ இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு ஏன் அகற்றப்பட்டது.

இதில் மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. ஒன்று அரசாங்கம் அவர்கள் என்னுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் எரிச்சலடைந்துள்ளது.

இது உண்மையல்லவெனின் அப்பாவிகளை அரசாங்கம் தேவைற்ற வகையில் சிறையில் தடுத்து வைத்துள்ளது. அல்லாவிடின் அவர்களை செயற்படுமாறு அரசாங்கம் சமிக்ஞையை கொடுக்கிறது.

ஆகவே எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/268377?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக தனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

35 minutes ago, பெருமாள் said:

இவ்வாறு என்னுடைய ஆலோசனைகளோ, முறைப்பாடுகளோ இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு ஏன் அகற்றப்பட்டது.

உங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பற்றி அப்போ கூறப்பட்ட காரணத்தை  நீங்கள் மறுக்கவும் இல்லை,. எதிர்க்கவும் இல்லை இப்போதுகூட அதை ஆதரித்து தானே கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். இப்போ பாதுகாப்பு தந்தவன் அதை எடுக்கும்போது மட்டும்  எச்சரிக்கிறீர்களே, இதற்கு என்ன அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 00:15, தமிழ் சிறி said:

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

கருணா பிள்ளையான் போன்றவர்களுக்கு மீண்டும் கொந்துராத்துகள் கிடைக்கப் போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 07:53, பெருமாள் said:

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

 

On 9/2/2021 at 05:20, பெருமாள் said:

சுமத்திரனுக்கு கொடுத்த கவுரவ ஜனதிபதி சட்ட தரணி பதவியை மீள  பெறுகிறோம் என்று அவர்கள் அறிவித்தால்  காணும் எடப்பாடியை  மின்சிய ஆளாய் குறுகி போய்  விடுவார் சுமத்திரன் .

ஜனாதிபதி சட்டதரணி என்பது பதவியல்ல இது அவர்களுக்கு வழங்கப்படும் தொழில்சார் பட்டம் மட்டுமே. குடியரசு ஆவதற்கு முன்பாக இருந்த King´s Counsel(KC), Queen´s Counsel(QC) என்ற வரிசையில் இன்று President´s Counsel(PC) என்ற கௌரவ பட்டம் இலங்கையில்  சிரேஸ்ட சட்டதரணிகளுக்கு அவர்களின் துறைசார்ந்த தகமை, சேவை ஆகிய அடிப்படைகளில் வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி சட்டதரணிகள் என பட்டம் பெற்றவர் ஜனாதிபதிக்கு சட்டதரணியாக பதவி வகிக்கிறார் என்று கொள்வது தவறு. இந்த பட்டம் பெற்றவர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிக்கு அருகே தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமரவும் தமது சீருடைகளை பட்டு வஸ்திரத்தில் அணியவும் தகுதிபெற்றவர்கள் ஆவர். இங்கிலாந்தில் தோன்றிய இந்த வழமை அதன் பழைய காலனித்துவ /காமன்வெல்த் நாடுகளில் இன்றும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.