Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

spacer.png

ஜெனிவா சவால்களை எதிர்கொள்வது குறித்து மகா சங்கத்தினருடன் பிரதமர் தலைமையிலான குழு கலந்துரையாடியது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக மகா சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரரேணை தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொவிட்-19 கட்டுப்படுத்தலில் சர்வதேச மட்டத்தில் இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் , நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை உருவாக்கும் வகையில் மனித உரிமைகள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று இதன் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றி மற்றும் இறையாண்மை என்பவற்றுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான 16 யோசனைகள் அடங்கிய அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் , இவ்வாறான நெருக்கடியான சூழலில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள தீர்மானத்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

நாட்டை பிளவுபடுத்துவதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் , தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்தமையை யுத்தக்குற்றமாக்குவது பாரிய குற்றமாகும் என்றும் கூறினார்.

இதற்கு எதிராக நாம் மீளெழ வேண்டும். பாராளுமன்றத்தில் இதற்கான தேசப்பற்று சட்டமூலமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் தேரர் வலியுறுத்தினார்.

இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு பௌத்த நாடுகளுக்கு எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியும். அதன் ஊடாக சாதகமானதொரு பதில் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்.

WhatsApp_Image_2021-02-11_at_12.00.40.jp

இதன் போது கருத்து தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர் ,

மனிதாபிமான போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாத்துக் கொள்ளவதோடு , சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் வெளிநாட்டு கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாமும் செயற்பட வேண்டும் என்று கூறினார்.

மங்கள சமவீர கையெழுத்திட்ட 30(1) பிரேரணையின் அழுத்தமே இன்றும் தொடர்வதாகவும் பெங்கமுவே நாலக தேரர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந்த யோசனைகளின் அடிப்படையில் பார்க்கும் போது , நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதித்தல் , ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த யோசனைகளுக்கு எதிராகவும் இலங்கைக்கு சார்பாக செயற்படும் நாடுகளின் ஆதரவை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமானதாகும் என்றும் கூறினார்.

விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்புக்கள் வழங்கப்படுவது வழமையாக காணப்படுகின்ற போதிலும், அதற்கு மாறாக தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே தீர்மானத்தை எடுத்துள்ளமையானது நியாயமற்றது.

இந்த யோசனைகள் நியாயத்திலிருந்தும் நீதியிலிருந்தும் முற்றாக விலகியுள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதன் அபாய நிலையானது பிரதானமான இரு காரணிகளில் தங்கியுள்ளது என்று கூறிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ,

இஸ்லாம் அடிப்படைவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காமை , அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றும் நிலைக்கு தள்ளுதல் என்பன அந்த காரணிகளாகும் என்றும் கூறினார். இலங்கை கால அவகாசம் கோர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கால அவகாசம் கோரினாலும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும் என்று கூறிய அமைச்சர் விமல் வீரவன்ச,

எத்தகைய விளக்கமளித்தாலும் மாற்றமடையாத நாடுகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.

அவ்வாறான நாடுகளின் கொள்கைககளில் மாற்றங்கள் ஏற்படாது. எனவே எமக்கு சார்பான நாடுகளின் ஆதரவை வலுப்படுத்திக் கொள்வதே தற்போது நாம் செய்ய வேண்டியதாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் டயஸ்போராக்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செயற்படாத வெளிநாட்டு தூதரக சேவையை பலப்படுத்தி ஏனைய நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதன் மூலம் , இவ்வாறான நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியும் என்று நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறினார்.

மகா சங்கத்தினரின் யோசனைகள் , ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நாட்டில் நெருக்கடியான எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு மகா சங்கத்தினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதாகவும் அதன் படி செயற்படுவதாகவும் கூறினார்.

மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர் | Virakesari.lk

25 minutes ago, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு என்று ஒரு அரசியலைப்பு, நீதி / சட்ட முறைமை, சிவில் அமைப்புகள் எல்லாம் இருந்தும், பிக்குகளிடம் ஆலோசனை கேட்டுத்தான் சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை எதிர்கொள்ள போகின்றனராம்!

28 minutes ago, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

இதற்கு எதிராக நாம் மீளெழ வேண்டும். பாராளுமன்றத்தில் இதற்கான தேசப்பற்று சட்டமூலமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் தேரர் வலியுறுத்தினார்.

அநேகமாக இந்த சட்டமூலம் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிறுபான்மை இனங்களின் சிவில் அமைப்புகளுக்கும் எதிரானதாக அமையும் என கணிக்க முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்புக்கள் வழங்கப்படுவது வழமையாக காணப்படுகின்ற போதிலும், அதற்கு மாறாக தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே தீர்மானத்தை எடுத்துள்ளமையானது நியாயமற்றது.

இந்த யோசனைகள் நியாயத்திலிருந்தும் நீதியிலிருந்தும் முற்றாக விலகியுள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நீங்கள் தான் விசாரிக்கவே முடியாது என்கிறீர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த நாட்டின் அழிவுக்கும், இவர்கள் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும் இந்த மகாசங்கத்தினரே காரணம். இவர்களது ஆலோசனை இன்னும் பல நெருக்கடிகளையே ஏற்படுத்துவதோடு நாட்டை மிகப்பெரிய கேலிக்கூத்தாக்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகா சங்கத்தினருக்குப் பசி ஒரு பிரச்சனையே இல்லையே?

ஆனால் பட்டுத் தான் திருந்த வேண்டுமென்றால்....அதை யாரால் தடுக்க முடியும்?🥺

நாட்டு மக்கள் கண்களைத் திறக்கும் போது...அரசியல் வாதிகள் நாட்டைத் தின்று...ஏவறையும் விட்டிருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சமய தலைவர்களிடம் ஆலோசனை கேக்கும் எந்த நாடும் உருப்பட்டதாக நவீன உலகில் வரலாறு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

149016371_10214798670759506_178404842785

தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம்.

எழுந்து நிற்பது மரியாதை. நாகரீகம். பண்பாடு. தேசபக்தி. இவர்களிடம் பிரதமர் கலந்துரையாடுவது என்பது எவ்வகையில் ஆரோக்கியமாகும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, zuma said:

சமய தலைவர்களிடம் ஆலோசனை கேக்கும் எந்த நாடும் உருப்பட்டதாக நவீன உலகில் வரலாறு இல்லை. 

முற்றிலும் உண்மை.
போலிக்காக தன் அரசியலுக்காக பைபிளை தூக்கி காட்டினவரே இப்ப வெளியிலை... இப்படியானவர்களை மக்கள் துடைத்தெறிய வேண்டும்.

US-Präsident Trump hält mit beiden Händen eine Bibel. | AFP

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

149016371_10214798670759506_178404842785

தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம்.

எழுந்து நிற்பது மரியாதை. நாகரீகம். பண்பாடு. தேசபக்தி. இவர்களிடம் பிரதமர் கலந்துரையாடுவது என்பது எவ்வகையில் ஆரோக்கியமாகும்??

தனித் தமிழீழம் உருவானால் கூட அடுத்த வீட்டுக்காரர் பௌத்தர்கள். கவலைக்குரிய வகையில் இத்தனை ஆண்டு யுத்தத்தின் பின்பும் கூட ஈழத்தமிழருக்கு பௌத்தர்களை பற்றிய அறிவு குறைவு. பௌத்தத்தில் புத்தம், தம்மம், சங்கம் என்ற திரித்துவம் கடவுளுக்கு சமமானது. புத்தம் என்பது சிலையாக உள்ள புத்தர் என்ற சித்தார்த்தர். தம்மம் அவரும் அவருக்கு பின்னால் வந்தவர்களும் அருளிய போதனைகளை ஓதுதல் (பிரித் ஓதுதல்). சங்கம் என்பது பிக்குகள். இந்த மூன்றினதும் ஆசி பௌத்தர்களுக்கு கட்டாயம் தேவையான கடவுளின் கருணை. சாதாரண மொழியில், ஒவ்வொரு பிக்குவும் கடவுள். கடவுள்கள் மற்றவர்களுக்கோ, தேசிய கீதத்துக்கோ எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? பௌத்த கலாச்சாரத்திலேயே அது இல்லை.

https://en.m.wikipedia.org/wiki/Refuge_(Buddhism)

WhatsApp_Image_2021-02-11_at_12.00.40.jp

எல்லோரும் யாரை கும்பிடுகிறார்கள் என்று பாருங்கள்? சங்கவை கும்பிடுகிறார்கள். இதுதான் பௌத்தம். இலங்கைத் தீவில் சமாதானமாக வாழ ஈழத்தமிழர்கள் பௌத்த கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பௌத்தர்கள் இந்துமதத்தை புரிந்து கொண்டுள்ளது மட்டுமன்றி இந்துக்கடவுள்களையும் வணங்குவதை இங்கே நிச்சயமாக அவதானிக்கவும் வேண்டும்.

https://www.accesstoinsight.org/lib/authors/kariyawasam/wheel402.html

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

‘தம்மம்’ என்பதின் பொருள் நீங்கள் குறிப்பிடுவதை விடவும் மிகவும் சிக்கலானதும் ஆழமானதும் ஆகும். சடத்துவத்திலும் தம்மாவைக் கண்டவன் புத்தன்! அது சரி...புத்தன் கூடத் தன்னைக் கடவுள் என்று கூறவில்லையே! எப்படி இவர்கள் கடவுளாகலாம்?

’குண்டலினியைப் பற்றி.. எப்படி ஒரு இந்துச் சாமியார் கதை விடுகிறாரோ..அதைப் போலத் தான் இந்தப் பௌத்தர்கள் கதை விடுகிறார்கள். உண்மையான பௌத்த்தத்தின் ஒரு ஐந்து வீதமாவது இவர்கள் புரிந்திருந்தால், இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது. சக உயிர்கள் மீது வெறுப்பை உமிழ்பவன் ஒரு நாளும் பௌத்தனாக முடியாது. சிங்களவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குவது பத்தியினால் அல்ல. பயத்தினால் என்பது எனது கருத்து. ஏனெனில் அவர்கள் சமையக் கதைகளின் படி.. முருகன் தேவ சேனாதிபதியாவான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

புத்தன் கூடத் தன்னைக் கடவுள் என்று கூறவில்லையே!

வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தி, அதிலுள்ள மூட நம்பிக்கைகளை களையும் நோக்கோடு அரசியலை துறந்த சிர்த்தாத்தன், தான் ஒரு துறவி, ஞானி என்கிற உண்மையை உணர்த்தாமல் மறைந்ததன் விளைவு இது. எந்த காரணத்துக்காக  அவர் அரசியலைத் துறந்தாரோ, அதை தக்க வைப்பதற்காக  புத்தரைப்பிடித்துக்கொண்டு கம்பு சுத்துகிறார்கள் இந்த சுயநலவாதிகள். சும்மா இருந்து ஊரை ஏய்த்து, வயிறு வளர்த்தால் உப்பிடித்தான் மற்றவர் வலி தெரியாமல் அதில் சுகம்  அனுபவிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா கூட்டத்தொடருக்கு சமூகமளிக்க இருக்கும் அமைச்சர் கையில் பிரித் ஓதி நூலைக் கட்டிவிட்டால் எல்லாம் சுபமே. வெற்றியோடு திரும்புவார்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

‘தம்மம்’ என்பதின் பொருள் நீங்கள் குறிப்பிடுவதை விடவும் மிகவும் சிக்கலானதும் ஆழமானதும் ஆகும். சடத்துவத்திலும் தம்மாவைக் கண்டவன் புத்தன்! அது சரி...புத்தன் கூடத் தன்னைக் கடவுள் என்று கூறவில்லையே! எப்படி இவர்கள் கடவுளாகலாம்?

’குண்டலினியைப் பற்றி.. எப்படி ஒரு இந்துச் சாமியார் கதை விடுகிறாரோ..அதைப் போலத் தான் இந்தப் பௌத்தர்கள் கதை விடுகிறார்கள். உண்மையான பௌத்த்தத்தின் ஒரு ஐந்து வீதமாவது இவர்கள் புரிந்திருந்தால், இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது. சக உயிர்கள் மீது வெறுப்பை உமிழ்பவன் ஒரு நாளும் பௌத்தனாக முடியாது. சிங்களவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குவது பத்தியினால் அல்ல. பயத்தினால் என்பது எனது கருத்து. ஏனெனில் அவர்கள் சமையக் கதைகளின் படி.. முருகன் தேவ சேனாதிபதியாவான்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதே வேளை, எல்லா மதங்களிலும் தத்துவங்களும், அவற்றை ஆரம்பத்தில் தந்தவர்களும் புனிதமாக இருந்தாலும், மதக் கலாச்சாரங்கள் முற்றிலும் வேறான கலாச்சாரங்களாகவே வளர்ச்சியடைந்துள்ளன. இன்றைய மக்கள் மீது தாக்கம் செலுத்துபவை மதக் கலாச்சாரங்களேயன்றி மதங்களின் புனிதமான தத்துவங்களோ அல்லது அவற்றை போதித்தவர்களின் புனிதத்தன்மையோ அல்ல. Popular Religions, Religious Politics போன்ற தலைப்புகளின் கீழ் இவை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

நன்றி, கற்பகதரு...!  

இதுக்குள்ள இன்னுமொரு புதுமையும் இருக்கு. மதவாத அரசியலில் முன்னுக்கு நிற்பவர்கள் எல்லாருக்கும்ஜே,ஆர், மகிந்த சகோதரர்கள் , பண்டார நாயக்கர்கள் எல்லாருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெயர்களும் இருக்கு. 

கலாச்சாரம் கூட வசதிகளுக்கு ஏற்ற மாதிரி மாறும் போல...!!!

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்காக மதத்தை தியாகம் செய்த தியாகிகள் இவர்கள். பதவிக்காக மதத்தை ஏற்ற சுமைதாங்கி  மல்கம் ரஞ்சித். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புங்கையூரன் said:

நன்றி, கற்பகதரு...!  

இதுக்குள்ள இன்னுமொரு புதுமையும் இருக்கு. மதவாத அரசியலில் முன்னுக்கு நிற்பவர்கள் எல்லாருக்கும்ஜே,ஆர், மகிந்த சகோதரர்கள் , பண்டார நாயக்கர்கள் எல்லாருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெயர்களும் இருக்கு. 

கலாச்சாரம் கூட வசதிகளுக்கு ஏற்ற மாதிரி மாறும் போல...!!!

சேன நாயக்காக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புங்கையூரன் said:

நன்றி, கற்பகதரு...!  

இதுக்குள்ள இன்னுமொரு புதுமையும் இருக்கு. மதவாத அரசியலில் முன்னுக்கு நிற்பவர்கள் எல்லாருக்கும்ஜே,ஆர், மகிந்த சகோதரர்கள் , பண்டார நாயக்கர்கள் எல்லாருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெயர்களும் இருக்கு. 

கலாச்சாரம் கூட வசதிகளுக்கு ஏற்ற மாதிரி மாறும் போல...!!!

அந்த கிறீஸ்தவ பெயர்களுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. போர்த்துக்கேயர் கரையோரப் பகுதிகளை கைப்பற்றி கட்டாய மதமாற்றம் செய்தார்கள். அதனாலேயே கரையோர சிங்களவருக்கு கிறீஸ்தவ பெயர்கள் உருவாகின. பொர்த்துக்கேயர் காலத்தின் பின் அவர்கள் மீண்டும் பௌத்தர்கள் ஆகிவிட்டார்கள். தமிழ் பகுதிகளில் மதம் மாறிய தமிழர்கள் கத்தோலிக்கராகவே இருந்து விட்டார்கள். 

மதம் மாறியவர்கள் நகர்ப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். கிராமத்தவர்களை மதம் மாற்ற வேண்டிய தேவை போர்த்துக்கேயருக்கு இருக்கவில்லை. மதம் மாறியவர்களுக்கு, கல்வி, பதவி, செல்வம் அதிகரித்து அந்த குடும்பங்கள் பலம் கொண்டவையாக உருவாகின.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தி, அதிலுள்ள மூட நம்பிக்கைகளை களையும் நோக்கோடு அரசியலை துறந்த சிர்த்தாத்தன், தான் ஒரு துறவி, ஞானி என்கிற உண்மையை உணர்த்தாமல் மறைந்ததன் விளைவு இது. எந்த காரணத்துக்காக  அவர் அரசியலைத் துறந்தாரோ, அதை தக்க வைப்பதற்காக  புத்தரைப்பிடித்துக்கொண்டு கம்பு சுத்துகிறார்கள் இந்த சுயநலவாதிகள். சும்மா இருந்து ஊரை ஏய்த்து, வயிறு வளர்த்தால் உப்பிடித்தான் மற்றவர் வலி தெரியாமல் அதில் சுகம்  அனுபவிப்பார்கள். 

சிங்களவருக்கு ஏன் பௌத்தம் முக்கியமானது? புத்தர் துன்பங்களுக்கான காரணத்தை தேடியபோது அது அன்று தானும் மக்களும் பின்பற்றிய இந்து சமய முறைகளில் ஆழ்ந்திருப்பதை கண்டார். முக்கியமாக, சாதி அடக்குமுறையும் மிருகங்களை பலி கொடுக்கும் யாகங்களும் துன்பத்துக்கு காரணங்களாக இருந்தன. பௌத்தம் இவற்றை நிராகரிக்கும் மதமாக வீரியம் கொண்டெழுந்தது. இந்துக்கள் அதை தடுக்க வன்முறையை நாடினார்கள். ஆகவே பௌத்தத்தை பரப்பும் பிக்குகள் தற்காப்பு சண்டைக்கலையில் தேர்ச்சிபெற்று பௌத்த மக்களையும் பயிற்றுவித்தார்கள். இந்தியா முழுவதும் பௌத்த நாடாகி, இலங்கைக்கும் பௌத்தம் பரவிற்று. ஆனால் பின்னர் பௌத்தத்திலும் பல ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற ஆரம்பித்தன. முகலாய மன்னர்கள் வட இந்தியாவை பிடிக்க பிராமணர்கள் தெற்கே வந்தார்கள். வணிகத்திலும், கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கிய சோழர்கள் பிராமணர்களின் உலக அறிவையும் இராஜதந்திரத்தையும் விரும்பி அவர்கள் சொற்படி பௌத்தர்களை கழுவேற்றி இந்து மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள். இந்து கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்ட்டன. பௌத்தம் அடையாளம் இல்லாமல் அழிக்கப்பட்டது. பௌத்த காலத்தை தமிழர் வரலற்றில் இருண்ட காலம் என்பார்கள். இதற்கு காரணம், ஐம்பெரும் காப்பியங்கள் தவிர வேறு எந்த ஆதாரங்களும் இந்த 300 ஆண்டு காலப்பகுதி பற்றி இன்றும் இல்லை. பௌத்தம் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் அழிக்கப்பட்டது. 

பௌத்தம் இலங்கையின் சிங்களப் பகுதியில் மட்டுமே தப்பி பிளைத்தது. சிங்களவரின் விகாரைகளில் வைத்து சிங்கள பிக்குகளும் தமிழ் பிக்குகளும் பௌத்தத்தை மீண்டும் ஓலைகளில் எழுதினார்கள். புத்த கோசர், புத்த தர்மர் போன்ற தமிழ் பிக்குகள் இவர்களுள் முக்கியமானவர்கள். புத்த தர்மர் இந்த இலங்கை பௌத்தத்தை சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளுக்கு பரப்பினார். இவர் சேர நாட்டில் பயின்ற அடிவர்மம், படுவர்மம், படுகொலை போன்ற சண்டை முறைகளை ஷோலான் புத்த ஆசிரமத்தில் வைத்து பழக்கினார். இந்த சண்டை முறைகளே இன்றைய கராட்டே, குங்பூ முறைகளாகும். என்னுடைய படம் புத்த தர்மரின் படம்.

ஆகவே, சோழர்களாலும் ஏனைய இந்து அரசர்களாலும் வேரறுக்கப்பட்ட பௌத்தத்தை பாதுகாத்து, உலகெங்கும் பரப்பியவர்களாக சிங்கள பௌத்தர்கள் தங்களை காண்கிறார்கள். இன்றும் இந்து தமிழர்களிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்கும் கடமை தமக்கு உள்ளது என்று சங்க நினைக்கிறது. ஆகவே சிறிலங்கா அரசு இந்த கடமையை சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

Edited by கற்பகதரு

என்ன வரலாற்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும்,   நடைமுறையில் மதங்களுக்கும் அந்த மத நம்பிக்கைகளுக்கும் அது   தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில், அயோக்கியத்தனமும் சோம்பேறித்தனமும் வறுமையும் அநீதியான விடயங்களும் தலைவிரித்து ஆடும், என்பதே உண்மை.  மதத்தை  ஒரு சிறிய,  முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டுமே, பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் மதத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்காத அறிவியலை,  உலக மக்கள் பெற்றுக்கொண்டால்,  மதத்தை வைத்து மக்களைப் பயப்படுத்தி சோம்பேறிக் கூட்டங்களாக, அடிமைகளாக  தீயவர்கள் அதைப் பயன்படுத்துவதை தடுக்கலாம். 

சிங்கள பேரினவாத இன வெறியர்கள்   மதத்தை பயன்படுத்தி அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி மத வெறியை உருவாக்கியதன் மூலம்,  தமது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். சாதாரண சிங்கள மக்களின் வாழ்ககைத்தரத்தில்  மதத்தினால் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களே.

அதே போல பாப்பனர்கள் இந்து சனாதன மதம் என்ற நச்சு விதையை பயன்படுத்தி மக்களை பிரித்து மூடர்களாக்கி தமது வாழ்ககையை வளப்படுத்துகின்றனர். தமிழர்களை பொறுத்தவரையும் அவரகள் மன்னர்கள் காலம் தொட்டு இந்து/ சைவ (இரண்டும் நடைமுறையில் ஒன்று தான்)பார்ப்பன ஆச்சாரங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக நிற்கிறார்கள். அதிக ஆச்சாரங்களுக்கும் புனிதங்களுக்கும் சென்றி  மென்றுக்கும் மட்டுமே அடிமைப்பட்டிருப்பதால் தமது தவறுகளை கூட திரும்ப பரிசீலித்து அதை திருத்த முடியாத நிலையில்  அரசியல் என்ற  அறிவு சார்  தத்துவத்தையும் அந்த புனிதங்களுக்குள் தொலைத்த victims ஆக தமிழர்களாகிய நாம் உள்ளோம். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, tulpen said:

என்ன வரலாற்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும்,   நடைமுறையில் மதங்களுக்கும் அந்த மத நம்பிக்கைகளுக்கும் அது   தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில், அயோக்கியத்தனமும் சோம்பேறித்தனமும் வறுமையும் அநீதியான விடயங்களும் தலைவிரித்து ஆடும், என்பதே உண்மை.  மதத்தை  ஒரு சிறிய,  முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டுமே, பயன்படுத்த வேண்டும்.

சீனாவில் கூட விகாரைகளும் கிறீஸ்தவ ஆலயங்களும் பக்தியுடன் மக்கள் வழிபடும் இடங்களாக இருப்பதை நேரடியாக சென்று பார்க்க கிடைத்தது. Russian Orthodox Christianity என்ற கிறீஸ்தவ சமயமே ரஷ்சியர்களுக்காக இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கத்தோலிக்கமும் கிறீஸ்தவமும் அரச வரிப்பணத்தில் இயங்குகின்றன. மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டுவீர்களா?

14 minutes ago, கற்பகதரு said:

அவ்வாறு முழுமையாக இல்லை என்பது தான் நான் சுட்டிக்ககாட்டிய கருத்து. மக்கள் மனதில் அப்படியான அறிவியல் சிந்தனை ஏற்பட வேண்டும் என்றே குறிபிட்டிருந்தேன்.  ஆசிய ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய நாட்டு மக்களிடம் அப்படியான சிந்தனை வளர்ச்சிஏற்பட்டுள்ளது என்பது எனது அனுபவத்தில் உணர்ந்த விடயம். 

நான் வாழும் நாட்டில் பல விதமான மக்களிடம் பழகி இருக்கிறேன். மதங்களை பற்றிய உரையாடல்கள் மிக அரிதாகவே இருக்கும்.

எனது முக நூலில் எனது உறவினர் தமிழ் நண்பர்ளுடன் வேற்று நாட்டு நண்பர்களும் உள்ளார்கள்.  வேற்று நாட்டு நண்பர்களின் முகநூல் பதிவிலும் மதங்கள் பற்றியோ ஒரு சாமி படத்தை பிரசுரித்துவிட்டு இதை share பண்ணினால் உனக்கு வாழ்வில் சிறப்பு உண்டாகும் என்றோ வரவில்லை.  மாறாக  தமது விடுமுறை படங்களோ, ஜோக் விடியோக்கள் படங்கள் மட்டுமே வரும். ஆனால் தமிழ் நண்பர்களிடம் இருந்து நாளுக்கு இரண்டு மூன்றுக்கு குறையாமல் நான் முன்னர் குறிப்பிட்ட  மூடத்தனமாக பதிவுகள் வருவது வழமை.

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு படத்தை எனக்கு பகிர்ந்திருந்தார். அதில் உள்ள   லட்சுமி படத்தின் கீழ் அதை ஒரு முகநூலில் share பண்ணினால் இன்றே உங்கள் பணப்பிரச்சனை தீர்ந்து  பணக்காராகிவிடுவீர்கள் என்று கூறப்பட்டிருந்த‍து.  நான் அவரின் பெயரை குறிப்பிட்டு மன்னிக்கவும் இன்று சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அதை பகிர்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த கொமென்டை பார்த்து பலர் சிரிக்க அது கொமடியாகி அதை பகிர்ந்த நண்பருகே வெட்கம் வந்துவிட்டது.

இவ்வாறாக கண்மூடிதனமாக மூடத்தனங்களை வாழ்வியலில் நம்புவர்கள் குறைந்தால் மனித வாழ்வில் அக்கிரமங்கள் குறையும் என்பதே உண்மை.  அது தான் எனது அந்த பதிவில் கூறப்பட்டவிடயம் கற்பகதரு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

புனிதங்களுக்கும் சென்றி  மென்றுக்கும் மட்டுமே அடிமைப்பட்டிருப்பதால் தமது தவறுகளை கூட திரும்ப பரிசீலித்து அதை திருத்த முடியாத நிலையில்  அரசியல் என்ற  அறிவு சார்  தத்துவத்தையும் அந்த புனிதங்களுக்குள் தொலைத்த victims ஆக தமிழர்களாகிய நாம் உள்ளோம். 

இங்கு கருத்து எழுதும் எல்லாரும் சிங்கள பவுத்தம் பற்றி கருத்துக்களை வைக்கும் போது இவருக்கும் மட்டும் அதுவும் இந்த விடி காலையில் தமிழரை திட்டுவதுதான் தொழிலாக்கும் இந்த திரியில் தேவையற்று தமிழரை இழுத்துவைத்து கும்முகிறார் .

49 minutes ago, பெருமாள் said:

இங்கு கருத்து எழுதும் எல்லாரும் சிங்கள பவுத்தம் பற்றி கருத்துக்களை வைக்கும் போது இவருக்கும் மட்டும் அதுவும் இந்த விடி காலையில் தமிழரை திட்டுவதுதான் தொழிலாக்கும் இந்த திரியில் தேவையற்று தமிழரை இழுத்துவைத்து கும்முகிறார் .

காலை நேரத்தின் இறுதிப்பகுதியை அண்மித்த 08.45  விடி காலை என்று கூறிமளவுக்கு இருக்கும் போது நான் எழுதியதை வாசித்து கிரகிப்பது முடியாது என்பதை விளங்கி கொள்கிறேன். உலகத்தில் தனது தாய் மொழி வாசிப்பு அறிவு குறைவாக இருபவர்கள் தான் மிக அதிகமான இனவெறியர்களாக உள்ளார்கள். தமிழர்கள் மீது இனவெறியை உமிழும் இனவாதிகளுக்கும் தமது மொழியறிவு குறைவாகவே இருக்கும் என்பது எனது அனுமானம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

காலை நேரத்தின் இறுதிப்பகுதியை அண்மித்த 08.45  விடி காலை என்று கூறிமளவுக்கு இருக்கும் போது நான் எழுதியதை வாசித்து கிரகிப்பது முடியாது என்பதை விளங்கி கொள்கிறேன். உலகத்தில் தனது தாய் மொழி வாசிப்பு அறிவு குறைவாக இருபவர்கள் தான் மிக அதிகமான இனவெறியர்களாக உள்ளார்கள். தமிழர்கள் மீது இனவெறியை உமிழும் இனவாதிகளுக்கும் தமது மொழியறிவு குறைவாகவே இருக்கும் என்பது எனது அனுமானம். 

நீங்கள்  அதிமேதாவி சரிதானே .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

சிங்களவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குவது பத்தியினால் அல்ல. பயத்தினால் என்பது எனது கருத்து.

சிங்களவர்கள் மட்டும் அல்ல இந்துக் கடவுள்களை வணங்கும் இலங்கை தமிழர்களும்  பயத்தினால் தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் மதம்மாறி இயேசுவை வணங்குவதும் பயத்தினால் தான். பேரச்சமே பக்திக்கு காரணம்.

13 hours ago, tulpen said:

நான் வாழும் நாட்டில் பல விதமான மக்களிடம் பழகி இருக்கிறேன். மதங்களை பற்றிய உரையாடல்கள் மிக அரிதாகவே இருக்கும்.

தமிழர்கள் சந்திப்பில் கடவுள் புகழ் பேசாமல் இருப்பது அரிது.இயேசு சாயிபாவா அற்புதங்கள் பற்றிய பேச்சுக்களும் இடம் பெறும். மற்ற இனத்தவர்கள் சந்திப்பில் கடவுள் பேச்சு வந்தாலே நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.