Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாஜக விரைவில் தொடங்கப்படும்... சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தடாலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான தனி கட்சி ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு (காந்தளகம்) சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sevanai-president-maravanpulavu-sachithananthan-announces-to-launch-bjp-in-srilanka-412299.html

  • Replies 54
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டு கட்சிகள் இலங்கையில் கட்சி அமைக்க முடியாது- மஞ்சுல கஜநாயக்க

1-152-696x392.jpg
 37 Views

இலங்கையில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஸ்தாபிக்க இந்தியாவினால் முடியாது என தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஒரு கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, நாடாளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய எந்த சட்ட கட்டமைப்பும் இல்லை என குறிப்பிட்டார்.

இருப்பினும் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் கட்சிக்கான அலுவலகங்களை நிறுவியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் மத்தியில் தங்கள் அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கும் கட்சிக்கு ஆதரவாளர்கள் மூலம் நிதிகளைப் பெறுவதுமே இவ்வாறு வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவதாகவும் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும் அத்தகைய கட்சியை பதிவு செய்ய இலங்கையில் எந்தவொரு சட்ட கட்டமைப்பும் இல்லை அல்லது அத்தகைய கட்சியின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

அதே நேரம், வேறு நாடு ஒன்றின் கட்சி ஒன்றுக்கு எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=42449

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 நபர், நிற்கும் நிலை மற்றும் , ’BBC NEWS BBC News தமிழ் 20 m• 20m・ m "இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர்"- இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் i BBC NEWS தமிழ் BBC NEWS தமிழ் 'இங்கும் பா.ஜனதா கட்சியை ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது'- இலங்கை சிவ சேனை’ எனச்சொல்லும் உரை இன் Twitter ஸ்கிரீன்ஷாட்டாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

kallai.jpg

சிவ-சேனை சைவம் .. அவா வைஷ்ணவம் ஒத்துபட்டு வருமா.? ரெல் மீ கிளியர்லி..!..👍

  • கருத்துக்கள உறவுகள்

வரேவா 
நம்ம ஸ்ரீலங்கன் ஹிந்துசும் வெரைட்டி வெரைட்டியாக மாட்டுச்சாணியில் கேக், பிஸ்க்கெட் என்று செய்து உள்ள தள்ளப்போரினம், பார்த்து மக்களே பேதி வேறு நாள்கணக்கில் புடுங்குதாம் அற்பாயுசில் மேல போயிடாம  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வரேவா 
நம்ம ஸ்ரீலங்கன் ஹிந்துசும் வெரைட்டி வெரைட்டியாக மாட்டுச்சாணியில் கேக், பிஸ்க்கெட் என்று செய்து உள்ள தள்ளப்போரினம், பார்த்து மக்களே பேதி வேறு நாள்கணக்கில் புடுங்குதாம் அற்பாயுசில் மேல போயிடாம  

அடிச்சு விரட்டணும் இவங்களை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடிச்சு விரட்டணும் இவங்களை 

ஏன் முனிவர்?

எப்பன்... சிங்களவனுக்கு கடுக்காய் கொடுக்க வேணாமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடிச்சு விரட்டணும் இவங்களை 

9 minutes ago, Nathamuni said:

ஏன் முனிவர்?

எப்பன்... சிங்களவனுக்கு கடுக்காய் கொடுக்க வேணாமா?

அதானே... சிங்களவனையும், கொதி நிலையில்.. வைத்திருக்க வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அதானே... சிங்களவனையும், கொதி நிலையில்.. வைத்திருக்க வேண்டும். :)

நாம பாரத ஜனதா கட்சி ராவணன் நாட்டு கிளை தொடங்கிறம்.... சீதையை அடைத்து வைத்திருந்த, நுவரேலியா அசோகவனத்தை எடுத்து, பெரி......ய சீதா பிராட்டி கோவிலை கட்டி...... அயோத்தி ராமர் கோவிலோடை டைரக்ட் கனக்சன் கொடுக்கிறம்... 👍😁

சும்மா பகிடிக்கில்லை முனிவர்.... 😁

தனியா நிண்டு புலம்பாமல், எது வேலைக்கு ஆகுமோ, அதை செய்ய, மீண்டும், நீங்கள் பழைய முனிவர் ஆகத்தான் வேண்டும். 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நாம பாரத ஜனதா கட்சி ராவணன் நாட்டு கிளை தொடங்கிறம்.... சீதையை அடைத்து வைத்திருந்த, நுவரேலியா அசோகவனத்தை எடுத்து, அயோத்தி ராமர் கோவிலோடை டைரக்ட் கனக்சன் கொடுக்கிறம்... 👍😁

அதுமட்டுமா.... தலதா மாளிகை முற்றத்தில்,
தொல் பொருள் ஆராய்ச்சி  செய்து,  சீதா பிராட்டியின்... 
மூக்குத்தியை, தோண்டி எடுத்து.. அந்த இடத்திலை...
சீதைக்கும்,  அனுமானுக்கும்... தனிக் கோயில் கட்டுறம்.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

ஏன் முனிவர்?

எப்பன்... சிங்களவனுக்கு கடுக்காய் கொடுக்க வேணாமா?

அப்படி இல்லை இவர்கள் உள்ளே வந்தால் நமக்குள் இன்னும் பிரிவை ஏற்படுத்தி விடுவார்கள் அது அவர்களுக்கு சார்பாக அமைந்துவிடும். ஏற்கனவே வடக்கு,கிழக்கு ,சைக்கிள், வீணை,வீடு, படகு,கப்பல் என்று இருக்கிறது, அது மட்டும் இல்லாமல், சைவம், வேதம்,இவனுகள விட்டால் இந்து, பொந்து என்று இழுத்துக்கொண்டு இருப்பானுகள்😆😊

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அதுமட்டுமா.... தலதா மாளிகை முற்றத்தில்,
தொல் பொருள் ஆராய்ச்சி  செய்து,  சீதா பிராட்டியின்... 
மூக்குத்தியை, தோண்டி எடுத்து.. அந்த இடத்திலை...
சீதைக்கும்,  அனுமானுக்கும்... தனிக் கோயில் கட்டுறம்.    🤣

அடிச்சு துரத்த வேணும் எண்டு முனிவர் சொன்னது, உந்த ஆமத்துறு மாரை எண்டு தான் நினைக்கிறன். முதலில பிழையா விளங்கிக்கொண்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அதானே... சிங்களவனையும், கொதி நிலையில்.. வைத்திருக்க வேண்டும். :)

அவன் கொதிக்க மாட்டான் சிறியர் நம்மளை கொதிக்க விடுவான் எப்படி என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன் .😃

ஒரு வளைவை ஏரியா மாறி கட்டினால் போதும் நமக்குள் பொங்கலும் ,புடுங்குப்பாடும் ஆரம்பமாகும் 🤪🤪

2 minutes ago, Nathamuni said:

அடிச்சு துரத்த வேணும் எண்டு முனிவர் சொன்னது, உந்த ஆமத்துறு மாரை எண்டு தான் நினைக்கிறன். முதலில பிழையா விளங்கிக்கொண்டன்.

ஆமத்துறுக்கள்தானே இலங்கையை ஆள்வது பிறகெப்படி அவர்களை விரட்டி அடிப்பது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

அவன் கொதிக்க மாட்டான் சிறியர் நம்மளை கொதிக்க விடுவான் எப்படி என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன் .😃

ஒரு வளைவை ஏரியா மாறி கட்டினால் போதும் நமக்குள் பொங்கலும் ,புடுங்குப்பாடும் ஆரம்பமாகும் 🤪🤪

சிங்களவனுக்கு கடுக்காய் கொடுக்க, நமக்கு இருக்கும் ஒரே ஒரு கயிறு, இந்து மதம் தான் முனிவர். 

இந்தியாவின் 85% இந்துக்களோட நாமும் சேர்ந்தால்..... சிங்களவன் வால், காலுக்கிளை மடங்கும்.

அதாலை.... கொஞ்சம் நிதானமா யோசியுங்கோ.... 

புத்தம் சரணம் கச்சாமி எண்டால், ராம்....ராம்.... புத்தர் ராமர் போல ஒரு அவதாரம் எண்டு சொல்ல வேண்டியதுதான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அடிச்சு துரத்த வேணும் எண்டு முனிவர் சொன்னது, உந்த ஆமத்துறு மாரை எண்டு தான் நினைக்கிறன். முதலில பிழையா விளங்கிக்கொண்டன்.

கதிர்காமத்துக்கு... பாத யாத்திரை போற முனிவர்,
ஆமத்துறு மாரைத்தான், சொன்னவர் என்று எனக்கு உடனேயே புரிந்து விட்டது. :grin:

நீங்கள், சரியான...  "ரியூப் லைற்" போல கிடக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

சிங்களவனுக்கு கடுக்காய் கொடுக்க, நமக்கு இருக்கும் ஒரே ஒரு கயிறு, இந்து மதம் தான் முனிவர். 

இந்தியாவின் 85% இந்துக்களோட நாமும் சேர்ந்தால்..... சிங்களவன் வால், காலுக்கிளை மடங்கும்.

அதாலை.... கொஞ்சம் நிதானமா யோசியுங்கோ.... 

புத்தம் சரணம் கச்சாமி எண்டால், ராம்....ராம்.... புத்தர் ராமர் போல ஒரு அவதாரம் எண்டு சொல்ல வேண்டியதுதான். 😁

இந்தியா பேய்க்காய் தெரியுமோ அவன் தொடங்கிப்போட்டு ஓடிடுவான் பிறகு நாம்தானே குத்துது குடையுது என்று ஓடித்திிரிய வேண்டும். நமது போராட்டம் போல பயிற்சி கொடுத்து விட்டு பயங்கரவாதியென முத்திரையை குத்தியதை மறந்து விட்டீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

கதிர்காமத்துக்கு... பாத யாத்திரை போற முனிவர்,
ஆமத்துறு மாரைத்தான், சொன்னவர் என்று எனக்கு உடனேயே புரிந்து விட்டது. :grin:

நீங்கள், சரியான...  "ரியூப் லைற்" போல கிடக்குது. 🤣

ராமர் கோவிலை கட்ட, பக்த கோடிகள்... வெள்ளி ஓடுகள், தங்க கற்கள் அனுப்ப, லொக்கர்  எல்லாம் நிறைந்து விட்டனவாம், அனுப்பாதீர்கள் எண்டு இன்று அறிவித்துள்ளார்கள்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம்..... சீதாபிராட்டி கோவில் அமைப்போம் என்று கிளம்பினாள் தான்.... சிங்களவனை ஒரு வழி பண்ணலாம் எண்டு முனிவர் நினைக்கிறார் போலை கிடக்குது. 

23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியா பேய்க்காய் தெரியுமோ அவன் தொடங்கிப்போட்டு ஓடிடுவான் பிறகு நாம்தானே குத்துது குடையுது என்று ஓடித்திிரிய வேண்டும். நமது போராட்டம் போல பயிற்சி கொடுத்து விட்டு பயங்கரவாதியென முத்திரையை குத்தியதை மறந்து விட்டீர்களா??

அது இந்திய அரசியல்வாதிகள் வேலை. இது rss, சங்கிகளை கிளப்பி விட்டால், சிங்களவன் கதை சரி.

இனி.... இந்தியா... சங்கிகளின் நாடு தான்... அதுக்குள் பூந்து தான் அலுவல் பார்க்க வேணும்.

எதுக்கும் சச்சிதானந்தம் அய்யாவின் தொடர்புகளை தேடி வையுங்கோ.

அய்யா காதில உந்த.... சீதா பிராட்டி கோவில் கட்டுற விசயத்தை போட்டு வைப்பம். அய்யா வெளியாலை சொல்லி வைக்கட்டும்.

சிங்களவன்....முதலுக்கே மோசம் எண்டு.... முல்லைத்தீவு குருந்து மலையை விட்டுட்டு, நுவரெலியா ஓடிப்போய் நிண்டுகொள்ளுவான். 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவன் கொதிக்க மாட்டான் சிறியர் நம்மளை கொதிக்க விடுவான் எப்படி என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன் .😃

ஒரு வளைவை ஏரியா மாறி கட்டினால் போதும் நமக்குள் பொங்கலும் ,புடுங்குப்பாடும் ஆரம்பமாகும் 🤪🤪

Bildergebnis für மறவன்புலவு சச்சிதானந்தம்

முனிவர் ஜீ.... தற்போதுள்ள, சூழ்நிலையில்...
தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை.

சிங்களவனுக்கு... "கயிறு கொடுக்க"  சச்சிதானந்தம்  ஐயா தான், 
சரியான ஆளாக இருக்கிறார் என்பது எனது கணிப்பு.

பா.ஜா.க. வில் எனக்கு, உடன்பாடு இல்லை என்றாலும்,
அவசரத்துக்கு... அதை பாவிக்க வேண்டி இருக்குது.    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für மறவன்புலவு சச்சிதானந்தம்

முனிவர் ஜீ.... தற்போதுள்ள, சூழ்நிலையில்...
தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை.

சிங்களவனுக்கு... "கயிறு கொடுக்க"  சச்சிதானந்தம்  ஐயா தான், 
சரியான ஆளாக இருக்கிறார் என்பது எனது கணிப்பு.

பா.ஜா.க. வில் எனக்கு, உடன்பாடு இல்லை என்றாலும்,
அவசரத்துக்கு... அதை பாவிக்க வேண்டி இருக்குது.    

சாடை அறியாதவன் சர்வ முட்டாள்.

முனிவர்...சிந்தனை எப்படி போது எண்டு விளங்காமல் போனது என் பிழை தான்.

இனி நான் சீமான் ஆதரவு இல்லை. பாரதிய ஜனதா, ராவணன் நாட்டு கிளை உறுப்பினர்.

சீதாப்பிராட்டி கோவிலை கட்டுவதே தலையாய பணி. முனிவரே.... ம்ம்ம்.. கிளம்புங்கள்... வருகிறோம் (கோரோனோ முடிய)   😎

காசுக்கு காசும் ஆகுது.... சிங்களவனுக்கு பேதி கொடுத்ததும் ஆகுது....

புங்கையர் வந்து நிண்டு யோசிக்கிறார்.... டபக்கெண்டு ஐடியாவை பிடிச்சுக்கொண்டு இப்ப, சச்சி அய்யாவோடை போனை போட்டு கதைக்க தொடங்கி இருப்பார் கண்டியளே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இனி நான் சீமான் ஆதரவு இல்லை. பாரதிய ஜனதா, ராவணன் நாட்டு கிளை உறுப்பினர்.

சீதாப்பிராட்டி கோவிலை கட்டுவதே தலையாய பணி. முனிவரே.... ம்ம்ம்.. கிளம்புங்கள்... வருகிறோம் (கோரோனோ முடிய)   😎

காசுக்கு காசும் ஆகுது.... சிங்களவனுக்கு பேதி கொடுத்ததும் ஆகுது....

நாதமண்ணை உள்ள பெரிய கோக்குமாக்கு சிக்கல் ஒன்றை சொருகி வைத்திருக்கிறீர்கள் 
சிங்களவன் ஏற்கனவே ராவணனை வாடகைக்கு எடுத்து புட்பக விமானத்தின் ஸ்பேர் பார்ட்ஸை நிலத்தை தோண்டி தோண்டி தேடித்திரியிறான், 
ராவணன் நாட்டு  கிளை உறுப்பினராக தமிழர்கள் போவது இனி நடக்காது , வேணுமென்றால் ராமராஜ்ஜியத்துடன் பழைய பாலத்தை கொஞ்சம் தூக்கி கட்டுவதுதான் சரிப்படும், இம்முறை சங்கர் சீமன்ட் 
ஜிண்டால் உருக்கு கம்பிகளும் போட்டு முழு கான்க்ரீட்டில் கட்டினால் அவ்வளவு சீக்கிரம் கேஸை கேக்காது,

அப்படியே சிங்கையில் இருந்து வெந்துபோய் வரும் எங்களுக்கு VIP Pass வித் Anytime entry உங்களது தியான பீடங்களுக்கு தந்துதவினீர்கள் என்றால் விரும்பிய நேரமெல்லாம் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட எங்களுக்கும் வசதியாகஇருக்கும்...சிங்களவனுக்கு பேதி கொடுத்த மாதிரியும் இருக்கும் , நம்முடைய தாயாருக்கு  புதிய பேத்தியொன்றையும் கொடுத்த மாதிரி இருக்கும் என்ன நான் சொல்றது ...  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வேணுமென்றால் ராமராஜ்ஜியத்துடன் பழைய பாலத்தை கொஞ்சம் தூக்கி கட்டுவதுதான் சரிப்படும், இம்முறை சங்கர் சீமன்ட் 
ஜிண்டால் உருக்கு கம்பிகளும் போட்டு முழு கான்க்ரீட்டில் கட்டினால் அவ்வளவு சீக்கிரம் கேஸை கேக்காது,

tenor.gif

செம பகிடி தோழர்..☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தி இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புக்கே கொள்ளி வைச்சிட்டு போய் சேர்ந்திட்டாங்க. நானும் போய் சேர முதல் புதுசா இன்னொரு  கொள்ளி வைச்சுட்டு போனா தானே என்கட்டை வேகும்   என்று மறவன்புலவு  நினைச்சுட்டார்.

குளிர் நாடுகளிலை இருந்து, தாயகத்தில் அனல் பறக்கேக்க ஜாலியா விசில் அடித்து கிறிக்கட்  ஸகோர் கேட்டு கிக்  ஆகின  சிறிய கூட்டமும், நாங்கள்  போய் சேர முதல் அந்த கொள்ளிக்கட்டை எரியாதா? எப்ப அதிலை  குளிர் காயலாம் என்று அலைவது தெரியுது. 😂😂

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இந்தியாவின் 85% இந்துக்களோட நாமும் சேர்ந்தால்..... சிங்களவன் வால், காலுக்கிளை மடங்கும்.

ஒரு சில மாதங்களுக்கு முன் பவுத்தமத வளர்ச்சிக்கென்று இந்தியா ஒரு தொகை சிங்களவனுக்கு கொடுத்ததே தெரியுமோ உங்களுக்கு? நாம் எது செய்தாலும் அதற்கு எதிராக இந்தியா சிங்களத்துக்கு  கைகொடுக்கும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für மறவன்புலவு சச்சிதானந்தம்

முனிவர் ஜீ.... தற்போதுள்ள, சூழ்நிலையில்...
தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை.

சிங்களவனுக்கு... "கயிறு கொடுக்க"  சச்சிதானந்தம்  ஐயா தான், 
சரியான ஆளாக இருக்கிறார் என்பது எனது கணிப்பு.

பா.ஜா.க. வில் எனக்கு, உடன்பாடு இல்லை என்றாலும்,
அவசரத்துக்கு... அதை பாவிக்க வேண்டி இருக்குது.    

மன்னிக்கவும் என்னாலே மாட்டு மூத்திரம் குடிக்க முடியாது .😄

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பா.ஜா.க. வில் எனக்கு, உடன்பாடு இல்லை என்றாலும்,
அவசரத்துக்கு... அதை பாவிக்க வேண்டி இருக்குது.

சிறி அண்ணா bjp நல்லது என்றால் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்து எடுத்து அங்கேயே  ஆளவிடட்டும். இலங்கை தமிழர்கள் ஏற்கெனவே தாங்க முடியாத அளவுக்கு நொந்து போய்விட்டார்கள். இந்த பயங்கரமான பரீட்சைகள் அவர்களுக்கு வேண்டாம்.

Edited by விளங்க நினைப்பவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.