Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 16:16, நிழலி said:

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை  பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு.

நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு.

நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம்  தமது தேவைக்கு மட்டும்  பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும்.

 வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து  உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும்.

இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2021 at 18:43, குமாரசாமி said:

அன்புள்ள அம்மா அறிவது!
நான் நல்ல சுகம். அது போல் நீங்களும்  நீங்கள்  விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன்.

நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன்.

வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன்.

 எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன்.

ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா..

எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா?

அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா.

அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’.

சொன்னபடியே அவ செத்து போயிட்டா...

ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன்.

வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை  பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு.

நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு.

நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம்  தமது தேவைக்கு மட்டும்  பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும்.

 வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து  உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும்.

இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.

ஒரு இரு சந்தர்ப்ப அல்லது பொறுப்பற்ற தன்மைகள் முழு சமுதாயத்தின் தன்மையாக பார்க்கப்படுவதில்லை பார்க்கப்படமாட்டாது பார்க்கப்பட கூடாது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒரு இரு சந்தர்ப்ப அல்லது பொறுப்பற்ற தன்மைகள் முழு சமுதாயத்தின் தன்மையாக பார்க்கப்படுவதில்லை பார்க்கப்படமாட்டாது பார்க்கப்படமாட்டாது

அதைதான் முதலே சொல்லிவிட்டேனே விசுகு அண்ணா. 

“””இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.””””

  • கருத்துக்கள உறவுகள்

 "அம்மா" என்ற வார்தைக்குமட்டும் ஏனோ இத்தனை  பிணைப்பு . தன்னை   ஈந்தவள் , தாய் என்பதாலா ? கண் கண்ட தெய்வம் என்பதாலா ? இருக்கும் போது  கவனியுங்கள் , ஆதரியுங்கள்  கடமையை செய்யுங்கள் . தவறினால் ஏழேழு  ஜென்மம் எடுத்தாலும் தீராது . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா!  

உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா.

சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது  போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா?
அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒவ்வொரு நாட்டிலும்; வீட்டிலும் இதே தான் நடக்கிறது தாத்தா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வீட்டுக்கு வீடு வாசல்படி.

3 hours ago, குமாரசாமி said:

நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா?

இது கனடாவில ரொம்பவும் மோசம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா?

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்,
அந்த்ப் புண்ணியம் கண்ணனுக்கே...!

போற்றுவார் போற்றலும்....தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே....!

காண்டீபம் எழுக...!
உன் கை வண்ணம் எழுக...!
களமெலாம் சிவக்க வாழ்க....!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா!

ஒரு முற்றத்தில் விளையாடிய  உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்குள் பல பிரிவுகள் வந்து விட்டதம்மா..பாசத்தை விட சொந்த உறவை விட சொத்துக்கள் பெரிதாகி விட்டது. எங்கடை தூரத்து சொந்த தம்பு வாத்தியார் என்ரை பனங்காணி எல்லாத்தையும் தன்ரை காணியோடை சேர்த்து வேலிபோட்டு அடைச்சு போட்டார். நீங்கள் இல்லாதது அவருக்கு பயம் விட்டு போச்சுது.கேட்டால் சண்டித்தனத்துக்கு வாறார். நீ வெளிநாட்டிலை செற்றிலாகிட்டாய் உனக்கு என்னத்துக்கு இஞ்சை காணி பூமி எண்டு கேக்கிறார்? என்ரை பிற்காலத்துக்கு வேணுமெண்டால் வரேக்கை தல்லாமாம். அம்மா நீங்கள் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமோ ?

எங்கடை சின்னம்மா குடும்பம் இப்ப சரியான கஷ்டத்திலை இருக்கினம். அவையள் செய்த பாவங்கள் இப்ப சூனியமாய் வந்து சேர்ந்து கொண்டிருக்கு.வட்டிக்கு காசு குடுக்காதேங்கோ எண்டு நீங்கள் சொல்லச்சொல்ல  எதையுமே கேக்காமல் நடந்த அவைக்கு நோய் நொடிகள் தான் மிச்சம். அவையளுக்கு இப்ப ஒரே வருத்தம் துன்பங்கள்.சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிற காசெல்லாம் ஒரு பிரயோசனத்துக்கும் இல்லை. அவையாலை இப்ப விரும்பின சாப்பாட்டை கூட சாப்பிடேலாது.நாலு இடத்தை பார்க்க கூட நடந்து திரியேலாது.அம்மா நீங்கள் அடிக்கடி சொல்லுற மாதிரி மனிசரை மதித்து பாவ புண்ணியங்கள் நினைச்சு வாழப்பழகோணும் எண்டது தெய்வவாக்கு மாதிரி அம்மா. 

அம்மா! நீங்கள் உங்களுக்கென என்னிடம் எதையுமே கேட்கவில்லை. அதே போல் நானும் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவும் இல்லை. அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. ஏன் எமது இருவருக்கும் இடையில் அந்த அவசியமும் தேவைப்படவில்லை. இருந்தாலும் இங்கு என்னோடு வாழ்ந்தவர்கள் பலவற்றை தமது தாய் தந்தையர்களுக்கு செய்யும் போது நான் ஏன் அவர்கள் போல் செய்யவில்லை என்ற ஆதங்கம் இன்றும் முள்ளாய் மனதில் குத்துகின்றது.கேட்காமலே தேவையில்லா விட்டாலும் ஊர் பகட்டுக்கு செய்திருக்க வேண்டும் என்ற மனநிலையை எற்படுத்தி விட்டார்கள். 

அம்மா நாங்கள் இருவரும் செல்வச்சன்னதியில் கந்தசஷ்டி உபவாசம் இருந்தோம் ஞாபகம் இருக்கா...? 
எம்முடன் சேர்ந்து உபவாசம் இருந்த பாக்கியம் அக்கா ஞாபகம் இருக்கா?

அவவை பற்றியும் சொல்லுறன் அம்மா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, குமாரசாமி said:

எம்முடன் சேர்ந்து உபவாசம் இருந்த பாக்கியம் அக்கா ஞாபகம் இருக்கா?

அவவை பற்றியும் சொல்லுறன் அம்மா.

அம்மா! சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார்.  அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள்.

 ஆனால்   பாக்கியம் அக்காவை  பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி  வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா.

இப்போது  பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும்  பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம்.

அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா.

அம்மா ! வட்டி  கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மனித வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கடிதமாக கோர்த்து சொல்லும் விதம் அருமை . பாராட்டுக்கள் .. எந்த வயதிலும் அம்மா அம்மாதான் யாருமே ஈடு கொடுக்க முடியாத ஒரு பதவி .

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் தெய்வம் அம்மாவை நினைக்கவைத்த அருமைக் கடிதம்.

இக்காலத்து நிதர்சனங்களைப் பதிவுகளாகத் தொடரும் குமாரசாமி அண்ணருக்கு மிக்க நன்றி. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அன்னைக்கு நிகரான சொந்தம் எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்பதற்குள் தான் எத்தனை உள்ளடக்கம்.

தாய் என்பது வயிற்றில் சுமப்பதிலிருந்து ஆரம்பித்து அதன் வீச்சும் பரிமாணங்களும் அரவணைப்பும் ஆளுமையும் சொல்லில் வடிக்க முடியாத பெரும் பேறு தாய்.

என் அம்மா இறக்கும் போது அவருக்கு 94வயது. அவருக்கு எந்த குறையும் வைத்ததில்லை  என்ன வேண்டுமானாலும் கேள் அம்மா என்பதே எனது வேண்டுகோளாக இருந்தது அவரிடம் . ஆனால் இன்றும் மனதில் ஒரு மூலையில் இன்னும் கொஞ்சம் நன்றாக பார்த்திருக்கலாம் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற ஏக்கத்துடன்...

ஒரு தாயால் மட்டுமே தன் பிள்ளையை சரியாக கணிக்க முடியும்.

என்னை பற்றி என் அம்மா சொல்லுவா 

எனக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி நான் தட்டிய தூசி நிலத்தில் விழும் முன் என் ராசன் வந்து என் முன் நிற்பான் என. அது தான் உண்மை. அது தான் நான். இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ள அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. 

நன்றி அண்ணா 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.