Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு  பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன்.  சிறையிலிருந்த‌ சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள்  இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து  ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும்  கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. 

எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை.

சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு?  நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப  பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ‌ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம்   என்றான் இளையவன்.

 ஆட்டம் தொடரும் 

  • Like 16
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல்  ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் .

அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . 

சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் .

அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது  பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க‌ பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை

அண்ண இஞ்ச கொஞ்சம்  வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா??  அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட‌ அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள்.  போய்  பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது .

அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள்  கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு  அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. 

தொடரும் .

  • Like 10
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுத்துநடை நன்றாக இருக்கின்றது, தொடருங்கள் தனி.......!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

எழுத்துநடை நன்றாக இருக்கின்றது, தொடருங்கள் தனி.......!   👍

நன்றி சுவி அண்ணை நான் கருத்துக்கள் வராது என நினைத்து இருந்தன் இந்த கதைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடரும் என்ற வார்த்தையை யாழிலிருந்து(band)பண்ண வேண்டியுள்ளது..☺️🤭

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்டம் தொடரட்டும் பார்க்க ஆவலாய் உள்ளோம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி, தொடருங்கள், கதைதானே

 இப்பவெல்லாம் ஒரே ஒரு பக்க விமர்சனங்கள் மட்டுமே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, யாயினி said:

தொடரும் என்ற வார்த்தையை யாழிலிருந்து(band)பண்ண வேண்டியுள்ளது..☺️🤭

நேரம் வேலையும் பிள்ளையும் இருப்பதால முற்றாக எழுதி முடிக்க முடியல கணணியை திறந்தால் ஏறி மடியில் இருந்து கீ போட்டை தட்டுகிறாள் ரெண்டு மூணு கீ போர்ட் மாத்தியாச்சு என்றால் பாருங்கோவன் 

கருத்துக்கு மிக்க நன்றி விரைவில் கதை முடியும் ( தணிக்கைகைகளுக்குள் கதையும் கட்டுப்படுகிறது)

20 hours ago, putthan said:

ஆட்டம் தொடரட்டும் பார்க்க ஆவலாய் உள்ளோம்

நன்றி புத்து கருத்துக்கும் வருகைக்கும்

15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

மகிழ்ச்சி தோழர்

2 hours ago, உடையார் said:

பகிர்விற்கு நன்றி, தொடருங்கள், கதைதானே

 இப்பவெல்லாம் ஒரே ஒரு பக்க விமர்சனங்கள் மட்டுமே

நன்றி உடையார் ஒரு பக்க விமர்ச்னம் என்பதை உன்மையெனவும் ஏற்றுக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது  

 

 

எங்கள் பயிற்ச்சி ஆரம்பமானது  அரைகாற்சட்டையுடன் முடி ஒட்டையாக வெட்டி பயிற்ச்சிகள் கனமாக இருந்தது எனது பெயரோ மாற்றப்பட்டு கங்கையாழியன் என அழைக்கப்பட்டது கங்கா எனவும் சுருக்கமாகஅழைத்தார்கள் நாள் தோறும் காலையில் அம்மா  வருவா ஆனால் சந்திக்க முடியாது

பயிற்சி முடிவடைந்ததும் தளபதிகள் முன்னிலையில் அணி வகுப்பு நடந்து பாசறையிலிருந்து வெளியேறுகிறோம். அன்றுதான் முக்கியமான தளபதிகளை நேரில் காண்கிறோம் அன்று பூசிக்கப்பட்டவர்கள் அவர்கள். வன்னிக்கான படையும் செல்ல தயாராக இருந்தது கிழக்கில் பெரும்  சண்டைகள் தொடர்வதில்லை அதனால் வன்னிக்கே படையணிகளில் அதிகமானவர்கள் அனுப்பப்படுவதுண்டு  போராட்டத்தின் இதயம்  அது தலைவர் தலைவரே எல்லாம் என எங்களுக்கும் உரம் ஊட்டப்பட்டது அவரின் நாமத்துக்கே பலபேர் இணைந்தார்கள் என்றும் சொல்லலாம் அந்த அணியில் என் பெயர் இல்லை ஆயிரக்கணக்கில் போராளிகள் மட்டக்களப்பில் இருந்ததை அன்று காணக்கிடைத்தது மட்டக்களப்பில் பொருட்களுக்கு பஞ்சம் இல்லை ஆனால் மாற்று இயக்கத்திற்கும் , ஆளஊடுவல் செய்யும் ஆட்களும் மிகவும் சவாலாக இருந்தார்கள். அதையும் சமாளித்து போராட்டம் வலுபெற்றிருந்த காலம் அது. அதற்கு புலனாய்வு துறையை சிறப்பாக செய்த தளபதியை பாராட்டலாம் கிழக்கை அக்குவேர் ஆணிவேராக அறிந்திருந்தவர் வன்னி போல் அல்லாமல் கிழக்கில் எந்தப்பக்கமும் இருந்தும்  எதிரிகள் உள் நுழையலாம் அத்தனை பேரையும் சமாளிக்கும் துணிச்சல் மிக்க அணிகள்  அவர்கள்  

 

அப்போது மாவீரர் நாள் வருகிறது துயிலுமில்லங்கள் வண்ணக்கோலம் பூண்கிறது போராட்டம் , இழப்பு , பாராமரிப்பு என அத்தனை விடயங்களும் கற்று   அன்றைய நாளுக்காககவும் நினைவு கூரலுக்காகவும் புலிப்படை திரள்கிறது அதில் நானும் எனும் போது பிரமிப்பாக இருக்கிறது .அன்றைய நாளில் எனைக்காண வந்த அம்மா, அண்ணா , தங்கச்சியை கண்டதில் மிகுந்த சந்தோசம் எனக்கும். எல்லாச்சாப்பாடும் கிடைக்குமாடா ஓமோம் அங்க கிடைக்காத சாப்பாடு எல்லாம் கிடைக்கும் இங்க அதுக்கு கவலையே இல்ல அம்மா. எனது குடும்பம் சந்தோசத்திலிருக்க மற்ற அம்மாக்கள் அழ துளிர்விட்டசந்தோசமும் அழுகையாக மாறுகிறது  அம்மாவை தேற்றியவனாக அங்கே துயிலும் எங்கள் உறவுகளின் கனவுகளை சொல்லி அம்மாவை தேற்றுகிறேன்.

 

மாவீரர் நாள் முடிந்ததும் அழைக்கப்படுகிறோம் சின்ன தாக்குதலுக்கு அன்றுதான் முதல் சண்டையென்பதால் ஒரு பத பதப்பும் , பயமும் தொற்றிக்கொள்கிறது  நாங்கள் 10 பேரும் சிலவிபரங்களுடன் காட்டுக்கு செல்கிறோம் பல கிலோ மீற்றர் நடந்து சென்று சருகுக்குள் ஆளை மறைத்து படுத்துக்கொள்கிறோம் காலை விடிகிறது நேரம் 6 மணி இருக்கும் சருகு மெல்ல சரசரக்கிறது சிங்கள உரையாடலுடன். பேச்சு சத்தம் எங்களை நோக்கி வருகிறது   இன்னும் பயம் அதிகரிக்கிறது போர் என்றால் ஆளையாள் சுடுவார்கள் என்ற நினைப்பு அந்த நொடி எனக்குள் வரும் போது அது என்னை மிரட்டும் நொடியாக அந்த நிமிடம் இருந்தது . எந்த ஒரு அசைவும் வராமல் நாங்கள் பதுங்கியே இருந்தோம்.

 

இன்னும் ஒரு பகுதி மட்டும் மீதம் இருக்கிறது ....................

  • Like 9
Posted

தொடர் நன்றாக உள்ளது.

ஊரில் இருந்து கொண்டு எழுதும் போராட்டக் கதைக்கும் வெளி நாட்டில் இருந்து கொண்டு அதில் பங்கு கொள்ளாமல் போர்காலம் பற்றி எழுதும் கதைக்கும் சூழ்நிலை சார்ந்த யதார்த்தம் , சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. அது உங்கள் கதையில் தெரிகின்றது.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதைத் தொடரைக் கொண்டு செல்லும் விதம் அருமை..!

மட்டுத் தமிழ் தனித்துவமானது போல உள்ளது! நேரம் கிடைக்கும் மட்டுத் தமிழைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ள அவா!

தொடருங்கள், தனி...!

மகளுக்கு மட்டு மண்ணில் ...ஆனா, ஆவன்னா எழுதிப் பழக்குங்கள்! உங்கள் தட்டச்சுப் பலகையை அடிக்கடி உடைக்க மாட்டாள்!

மண்ணில் எழுதி விளையாடிக் கொண்டிருப்பாள்...!😃

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர் சிறப்பாக போகின்றது தனி ......தொடருங்கள்.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/3/2021 at 07:17, நிழலி said:

தொடர் நன்றாக உள்ளது.

ஊரில் இருந்து கொண்டு எழுதும் போராட்டக் கதைக்கும் வெளி நாட்டில் இருந்து கொண்டு அதில் பங்கு கொள்ளாமல் போர்காலம் பற்றி எழுதும் கதைக்கும் சூழ்நிலை சார்ந்த யதார்த்தம் , சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. அது உங்கள் கதையில் தெரிகின்றது.

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி தணிக்கை ஒன்றை கையில் வைத்தே நகர்த்துகிறேன்  வீட்டுக்கு ஒரு போராளி வந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திலே பல இளவயது திருமணங்கள் நடந்து மட்டு மேற்கு கல்வியில் இன்று பிந்தங்கி நிற்கிறது ஆனால் அந்த ஆளணி சேர்ப்பை இங்கே குறை சொல்ல ஆட் கள் இல்லை  காரணம் போராட்டம் வெல்ல வேண்டும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரின் வேதனையென்பது இப்பவரைக்கும் சொரிந்து கொண்டே இருக்கும் ஓர் துர்ப்பாக்கிய நிகழ்வு 

22 hours ago, புங்கையூரன் said:

கதைத் தொடரைக் கொண்டு செல்லும் விதம் அருமை..!

மட்டுத் தமிழ் தனித்துவமானது போல உள்ளது! நேரம் கிடைக்கும் மட்டுத் தமிழைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ள அவா!

தொடருங்கள், தனி...!

மகளுக்கு மட்டு மண்ணில் ...ஆனா, ஆவன்னா எழுதிப் பழக்குங்கள்! உங்கள் தட்டச்சுப் பலகையை அடிக்கடி உடைக்க மாட்டாள்!

மண்ணில் எழுதி விளையாடிக் கொண்டிருப்பாள்...!😃

 கருத்துக்கு நன்றி அண்ணா மட்டு தமிழ் வித்தியாசமானது யாழ்ப்பாண தமிழ் போல் அல்ல  

தற்போது ஆள் வீட்டுச்சுவரை கிறுக்க ஆரம்பித்துவிட்டாள் அம்மா ஆசிரியை மகள் கிறுக்கத்தொடங்கி விட்டாள் வீட்டு சுவற்றையும்  நிலத்தையும்  வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் கடல் உள்ளது அந்த மணலில் கிறுக்கி விளையாட கொண்டு செல்வதுண்டு ஆளை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போது பார்த்தால் கள்ள மரம் வெட்டுபவர்கள் அவர்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எழும்பி துப்பாக்கியை நீட்ட அவர்கள் அலறினார்கள் எங்களுக்கு சிங்களம் தெரியாது. அவர்களோ கைபாஷையில் மரம் வெட்ட வந்ததாக சொன்னார்கள் இவர்களை விடுவதா? அல்லது சுடுவதா? அல்லது கைது பண்ணி செல்வதா? என எங்களுக்குள் பாரிய வினா எழுகிறது ?? அப்போது எனது அப்பா ஞாபகமும் வருகிறது இப்படித்தான் எனது அப்பாவும் அகப்பட்டிருப்பாரோ படையினரிடம் என நினைத்து கொடிகளால் அவர்கள் கைகளை கட்டி மரக்கிளையுடன் அமர வைக்கிறோம் சத்தம் போட கூடாது என‌.

நேரம் 3 மணி ஆனதும் அன்றய தாக்குதல் சம்பவங்களோ சண்டையோ இடம்பெறவில்லை அவர்களை விடுவதா அல்லது முகாமுக்கு கொண்டு செல்வதா என கேள்விகள் மீண்டும் எழ  நான் விட்டு விடுவோம் ஆனால் இனிமேல் இங்கே வரக்கூடாது என சொல்ல கைகூப்பி கும்பிட்டு அவர்கள் காட்டுக்குள் ஓடுகிறார்கள் ஆனால் அவர்களால்தான் பல போராளிகள் சுடப்பட்டார்கள் என்பது  தெரிந்தும் விட்டு செல்கிறோம்.

இந்த சம்பவம் பொறுப்பாளருக்கு தெரிய எனக்கு பணிஸ்மென்ற் கொடுக்கப்படுகிறது சமையல் பிரிவில் அந்த நேரமே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யுத்த நிறுத்தம் வருகிறது போராளிகளுக்கு சரியான சந்தோசம் பலர் அரசியல் நடவடிக்கயென எல்லா இடங்களுக்கு செல்கிறார்கள்.

மனிதர்களும் மனதும் மாறக்கூடியவை இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல நகர் புறங்களில் சென்றவர்கள் பலர் நாள் தோறும் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் சிலர் வெளிநாடு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை வெளிநாடு செல்ல காசும் இல்ல. பேச்சு வார்த்தையின் இடையில்  போராட்டமும் நியாயப்படுத்தலால் பிளவுறுகிறது எங்களுக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியவில்லை ஒர் நாள் கர்ணா அம்மானால் அனைத்து போராளிகளும் அழைக்கப்படுகிறார்கள் நான் போராட்டத்திலிருந்து விலகுறன் இல்லாட்டால் கிழக்கு பகுதிய நாம் வச்சிருக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணன் ஏதும் செய்ய  வெளிக்கிட்டால் யாரும் இங்க நிற்கக்கூடாது எல்லோரும் அவங்கவங்க வீட்ட போகலாம் என்றார் அடியும் தெரியல முடியும் தெரியாமல் போராளிகள்  முளித்துக்கொண்டிருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான போராளிகள் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் என்பதை விட அம்மாமார் வந்து அழைத்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமானவர்கள் சிலரே இருந்தார்கள் போராட்டம் தலைகீழாக மாறியது 
( அது யாவரும் அறிந்தது)

என்னையும் அம்மா அழைத்து சென்றுவிட்டார் நானும் நகர் பகுதிதில் வந்து ஒளிந்து கொண்டேன் அழைப்புக்கள் வந்தன இணையச்சொல்லி ஆனால் மீண்டும் சேரவோ இணையவோ மனதும் உறவுகளும் விரும்பல ஆனால் காட்டிக்கொடுப்பால் சிறை செல்ல அங்கே சகோதர யுத்தமும் அரங்கேறுகிறது இந்த நேரத்திலே அரசு வெற்றி கொண்டது என்றும் சொல்லலாம்.  சிறையிலிருந்து வந்தால் எல்லாமே வேதனையான வெற்றியுடன் முற்று  முழுதாக முற்றுப்பெற்றிருந்தது. படிப்பும் இல்லை தொழிலும் இல்லை அம்மாவை தேடி நானும் செல்ல அம்மாவோ படுக்கையில் அண்ணன் மிருக வைத்திய துறையில்  தங்கை திருமணம் முடித்து இருந்தாள் நம்மவர் யாரிடமாவது ஓர் வேலையை பெற்று வாழலாம் என நினைத்தால். வாழ்க்கையை இந்த சமுதாயத்தில்  வாழ முடியாது ஓடி விடு என துரத்திக்கொண்டே இருக்கிறது துரோகியென்ற‌ பட்டத்துடன். 

திடிரென யாரோ என் மீது விரலால் தட்ட துப்பாக்கி முனைதானோ என‌ துடித்து எழும்புகிறேன்  தம்பி கடையை திற சனம் வந்துட்டுது என்று சொன்னார் அந்த முஸ்லீம் கடை முதலாளி முகத்தை கழுவி முன்கண்ணாடியில் பார்க்கிறேன் கண்ணாடி மட்டும் பொய் சொல்லாமல் என்னைப்பார்கிறது.  

பொய்யென்றும் சொல்ல முடியல கற்பனையென்றும்  சொல்ல முடியல‌

முற்றும் . 

  • Like 6
  • Sad 1
Posted

ஒரு போராளியின் அனுவப் பகிர்வு போன்ற கதையோட்டம்.. வாழ்க்கையே போராட்டமாக மாற்றிவிட்ட போர்+ஆட்டம். சிறப்பாக கதையை எழுதி இருக்கிறீர்கள் ,வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட்டம் பற்றிய புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கும், போர்க்களத்தில் நேரடியாக நின்றவர்கள் கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன! எமது மாணவப் பருவக் காலங்களில்...நாம் தனி நாடு கோரிப் போராடுவது சாத்தியாமனதா, னாம் தனியாகப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் போது எம்மால் பொருளதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியுமா, எமது சிறிய நாட்டை எத்தனை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடும், இந்திய தேசத்திந் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று பல கேள்விகளும் பதில்களும் பொதுவான சந்திப்புக்களில் எப்போதுமே அலசப் பட்டுக் கொண்டுமிருக்கும்! அந்தக் காலத்தில் பி.பி.சி போன்ற செய்திகளில் ஏதாவது ஒரு செய்தி வந்தாலே, அது மிக முக்கிய செய்தியாகவும், சர்வ தேச அளவில்..எமதினத்தின் சிறு வெற்றியாகவும் பார்க்கப் பட்டது!

நீங்கள் நம்பினால் நம்புங்கள்...மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்ற பேதமானது எனக்குத் தெரிந்து அப்போது இருந்தது இல்லை! அப்போதைய விடுதி கல்லூரி நண்பர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டும், ஒரே கட்டிலில் படுத்து உறங்கியும் உள்ளோம் என்பதை,இப்போது வெளிவரும் கருத்துக்களைப் பார்த்து நம்ப முடியவில்லை! ஆக மட்டக்களப்பு ஆக்கள் மந்திரம் போட்டுப் பாய்களில் ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பகிடியாகக் கூறுவார்கள்! இதன் உண்மையான கருத்தானது மட்டக்களப்பு மான் வளமும், மீன் வளமும் நிறைந்த மண்! மட்டக்களப்புப் பெண்கள் கொஞ்சம் குளுமையாக இருப்பார்கள்! அதனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தொழிலின் நிமித்தமாகச் செல்லும் யாழ் இளைஞர்கள் அங்கேயே திருமணம் செய்து செட்டிலாகி விடுவதால்,அந்தப் பாயோடு ஒட்ட வைக்கும் சொல்லடை ஏற்பட்டதாக மட்டக்களப்பு நண்பனே என்னிடம் விளங்கப் படுத்தியிருக்கிறான்!

உங்கள் கதையின் ஆரம்பத்தில்....தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை தான் எனினும் அதற்கும் பின்னணனியான காரணங்கள் உண்டு தான்! ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரந்திருந்த ஒரு இனம், நகரமைப்பு, கட்டிடக்கலை, யோகக் கலை, பரதக் கலை, வானியல் சாத்திரம் போன்ற துறைகளில் அதிகமான நிபுணத்துவம் கொண்டு வாழ்ந்த ஒரு இனம் எந்தத் தனித்துவமான மதத்தையும் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாது ஒரு சமாதானமான வாழ்வை வாழ்ந்திருந்தது! சமாதனமே நீண்ட காலங்கள் நிலவியதால்...போருக்கான ஒரு பெரும்படையையோ, பெரும் ஆயுதங்களையோ அது தன்னிடம் கொண்டிருக்கவில்லை! பெரிதாக எதிரிகளும் பெரிதாக இருந்திருக்க நியாயமில்லை! வட திசையிலிருந்து பட்டுப் பாதை வழியாக முதலில் உள் நுழைந்தவர்களால் , அந்த இனக்குழுமம் ஓரளவுக்கு அழிக்கப் பட்டதுடன் தெற்கு நோக்கிய அதன் புலம் பெயர்வும் ஆரம்பித்தது! ஓட,ஓடத் துரத்தப் பட்ட அந்த இனம் ஓட இடமில்லாமல்.....கடலணை மூலம் இலங்கை வந்து சேர்ந்து ஒரு வரண்ட பூமியில் வாழத் துவங்கியது! அதனிடம் வேறு என்ன குணாதிசங்களை எதிர் பார்க்கலாம்! உங்கள் கதையில் ஒரு வரலாறே பொதிந்து போய் இருந்ததால் ..சிறியதாக நான் எழுத நினைத்த கருத்து ஒரு கதயாக நீண்டு போனது! நன்றி...!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவோ நிறைய விடயங்கள் உங்களிடம்......அவற்றில் ஒரு துளி இதுவென்று நினைக்கின்றேன் தனி.......அருமையான பதிவு........!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/3/2021 at 13:31, ஜெகதா துரை said:

ஒரு போராளியின் அனுவப் பகிர்வு போன்ற கதையோட்டம்.. வாழ்க்கையே போராட்டமாக மாற்றிவிட்ட போர்+ஆட்டம். சிறப்பாக கதையை எழுதி இருக்கிறீர்கள் ,வாழ்த்துக்கள்.

நன்றி ஜெகதா துரை அவர்களே

 

On 13/3/2021 at 14:55, புங்கையூரன் said:

போராட்டம் பற்றிய புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கும், போர்க்களத்தில் நேரடியாக நின்றவர்கள் கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன! எமது மாணவப் பருவக் காலங்களில்...நாம் தனி நாடு கோரிப் போராடுவது சாத்தியாமனதா, னாம் தனியாகப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் போது எம்மால் பொருளதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியுமா, எமது சிறிய நாட்டை எத்தனை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடும், இந்திய தேசத்திந் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று பல கேள்விகளும் பதில்களும் பொதுவான சந்திப்புக்களில் எப்போதுமே அலசப் பட்டுக் கொண்டுமிருக்கும்! அந்தக் காலத்தில் பி.பி.சி போன்ற செய்திகளில் ஏதாவது ஒரு செய்தி வந்தாலே, அது மிக முக்கிய செய்தியாகவும், சர்வ தேச அளவில்..எமதினத்தின் சிறு வெற்றியாகவும் பார்க்கப் பட்டது!

நீங்கள் நம்பினால் நம்புங்கள்...மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்ற பேதமானது எனக்குத் தெரிந்து அப்போது இருந்தது இல்லை! அப்போதைய விடுதி கல்லூரி நண்பர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டும், ஒரே கட்டிலில் படுத்து உறங்கியும் உள்ளோம் என்பதை,இப்போது வெளிவரும் கருத்துக்களைப் பார்த்து நம்ப முடியவில்லை! ஆக மட்டக்களப்பு ஆக்கள் மந்திரம் போட்டுப் பாய்களில் ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பகிடியாகக் கூறுவார்கள்! இதன் உண்மையான கருத்தானது மட்டக்களப்பு மான் வளமும், மீன் வளமும் நிறைந்த மண்! மட்டக்களப்புப் பெண்கள் கொஞ்சம் குளுமையாக இருப்பார்கள்! அதனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தொழிலின் நிமித்தமாகச் செல்லும் யாழ் இளைஞர்கள் அங்கேயே திருமணம் செய்து செட்டிலாகி விடுவதால்,அந்தப் பாயோடு ஒட்ட வைக்கும் சொல்லடை ஏற்பட்டதாக மட்டக்களப்பு நண்பனே என்னிடம் விளங்கப் படுத்தியிருக்கிறான்!

உங்கள் கதையின் ஆரம்பத்தில்....தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை தான் எனினும் அதற்கும் பின்னணனியான காரணங்கள் உண்டு தான்! ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரந்திருந்த ஒரு இனம், நகரமைப்பு, கட்டிடக்கலை, யோகக் கலை, பரதக் கலை, வானியல் சாத்திரம் போன்ற துறைகளில் அதிகமான நிபுணத்துவம் கொண்டு வாழ்ந்த ஒரு இனம் எந்தத் தனித்துவமான மதத்தையும் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாது ஒரு சமாதானமான வாழ்வை வாழ்ந்திருந்தது! சமாதனமே நீண்ட காலங்கள் நிலவியதால்...போருக்கான ஒரு பெரும்படையையோ, பெரும் ஆயுதங்களையோ அது தன்னிடம் கொண்டிருக்கவில்லை! பெரிதாக எதிரிகளும் பெரிதாக இருந்திருக்க நியாயமில்லை! வட திசையிலிருந்து பட்டுப் பாதை வழியாக முதலில் உள் நுழைந்தவர்களால் , அந்த இனக்குழுமம் ஓரளவுக்கு அழிக்கப் பட்டதுடன் தெற்கு நோக்கிய அதன் புலம் பெயர்வும் ஆரம்பித்தது! ஓட,ஓடத் துரத்தப் பட்ட அந்த இனம் ஓட இடமில்லாமல்.....கடலணை மூலம் இலங்கை வந்து சேர்ந்து ஒரு வரண்ட பூமியில் வாழத் துவங்கியது! அதனிடம் வேறு என்ன குணாதிசங்களை எதிர் பார்க்கலாம்! உங்கள் கதையில் ஒரு வரலாறே பொதிந்து போய் இருந்ததால் ..சிறியதாக நான் எழுத நினைத்த கருத்து ஒரு கதயாக நீண்டு போனது! நன்றி...!

நன்றி கருத்துக்கு புங்கையூரன் அண்ண இன்றுவரைக்கும் யாழ் எனது ஓர் நண்பன் யாழ்ப்பாணத்தவரும் எனது உறவுகள்தான் நான் இறக்கும் வரைக்கும் அதற்கிடையில் எந்த பேதமும் எனக்கில்லை  என்பதை சொல்ல்லிக்கொள்கிறேன்

 

On 13/3/2021 at 18:01, suvy said:

எவ்வளவோ நிறைய விடயங்கள் உங்களிடம்......அவற்றில் ஒரு துளி இதுவென்று நினைக்கின்றேன் தனி.......அருமையான பதிவு........!   👍

பிரிந்து வந்த பல ஆயிரம் போராளிகள் மத்திய கிழக்கில் தஞ்சமடைந்தார்கள் அவர்கள் கதைகள் ஓவ்வோர் இரவிலும் நினைவு மீட்பார்கள் அண்ண அதன் சுருக்கம் எனக்கு கதையாக இன்னுமொருவர் இருந்தார் போராட்ட காலம் 1983 ம் ஆண்டு இணைந்தவர் அவர் சொன்ன கதைகள் இன்னும் ஏராளம் .

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/3/2021 at 15:46, தனிக்காட்டு ராஜா said:

இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து  ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து.

அதை ஒரு கெட்டித்தனமாக நினைத்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளவும் செய்வார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

அதை ஒரு கெட்டித்தனமாக நினைத்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளவும் செய்வார்கள். 😂

உலகில் தங்களை அதி புத்திசாலியானவர்கள் என நினைத்துக்கொள்பவர்கள் மனிதர்கள்தானாம் எங்கோ வாசித்த நியாபகம்  கிருபன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/3/2021 at 17:39, தனிக்காட்டு ராஜா said:

சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது  பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள்

கருணா அம்மான் வடக்கைப் போல கிழக்கிலும் பெரும்படைகள் கட்டவேண்டும் என்று சமாதானக் காலத்தில் கோயில் திருவிழாக் காலங்களிலும் கட்டாயமாக அள்ளிக்கொண்டு போனவர்தானே.

பிரிவுக்குப் பின்னாலும் இரு பகுதியும் பிள்ளைகளைப் பிடிப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:

கருணா அம்மான் வடக்கைப் போல கிழக்கிலும் பெரும்படைகள் கட்டவேண்டும் என்று சமாதானக் காலத்தில் கோயில் திருவிழாக் காலங்களிலும் கட்டாயமாக அள்ளிக்கொண்டு போனவர்தானே.

பிரிவுக்குப் பின்னாலும் இரு பகுதியும் பிள்ளைகளைப் பிடிப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

நான் கூட மத்திய கிழக்கு செல்ல காரணமும்  இதே  நகர் பகுதிகளில் ஒருவரும் கிராமப்பகுதிகளில் ஒரு பிரிவும் துலாவினர் என்றும் சொல்லலாம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் அவசரப்படாமல் சொல்லியிருக்கலாம் . போராளியே கதைசொன்னதுபோல் இருக்கு

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2021 at 21:09, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சம் அவசரப்படாமல் சொல்லியிருக்கலாம் . போராளியே கதைசொன்னதுபோல் இருக்கு

கருத்துக்கு நன்றி இன்னும் நீளும் ஆனால் சுருக்கிவிட்டேன் அக்கா



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.   (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
    • ChessMood  ·  Suivre 17 h  ·  The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!   💐
    • இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)   https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.