Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, யாயினி said:

தடி வேண்டும் என்றால் பார்சலில் அனுப்பி விடுறன்..பூவரசு கிடையாது..😊🤭

மூங்கில் ஓகே

16 hours ago, suvy said:

Top 30 The Fisherman GIFs | Find the best GIF on Gfycat

தூண்டிலா போடுறீங்கள்.......நான் நழுவிடுவேன்......யாரிட்ட ........!   😎

அப்ப மனைவிக்கு உதவுவது கேவலம் என்று எண்ணுகிறீர்கள் ???

18 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படித் தான் கரணமடித்தாலும் பெண்களைப் போல வீட்டுவேலைகள் பொறுமையாக செய்ய முடியாது.
 
வெட்கப்பட்டுக் கதையை மாத்தாமல் வெட்டுறது உரிக்கிறதுகளைச் சொல்லுங்கோ அண்ணா

16 hours ago, சுவைப்பிரியன் said:

இது பேசாப் பொருள் பகுதியில் வர வேண்டியது.😂

அப்ப அங்காலை மாத்தினால்த்தான் எழுதுவியளோ???

  • Replies 58
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

paavam.jpg

ஒவ்வொரு மங்கையருக்கும் வந்து வாய்க்கும்  மன்னவர்கள் எப்படி எப்படி இருக்க வேண்டும்?  எந்த விடயங்களில் உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? வேலைக்கு செல்லும் பெண்கள். வேலைக்கு செல்லாத பெண்கள். வேலைக்கு செல்லும் ஆண்கள். வேலைக்கு செல்லாத ஆண்கள்  அல்லது இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒரு சிறு பட்டியல் இட முடியுமா? 😁

உது பெரிய வேலையே.

வேலைவெட்டிக்குப் போகாமல் இருக்கக் கூடாது.

நல்ல சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டும். 

பார்க்க நாலு பெண்கள் சைட் அடிக்கும்படி இருக்கக்கூடாது

அவரும் மற்றவரைப் பார்த்து லொள்ளு விடுபவராக இருக்கக் கூடாது.

சுவையான தேநீர் தயாரிக்கத் தெரியவேணும்.

கஞ்சப் பிசினாரியாக இல்லாமல் நாம் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தராவிட்டாலும் வாங்க ஆசைப்பட்டதைத் தடுக்காது இருக்கவேண்டும்.

அதை உண்ணாதே இதை உண்ணாதே என்று கடுப்பைக் கிளப்பக் கூடாது.

வாரம் ஒருநாளாவது முழு வேலைகளையும் அவர் செய்யவேண்டும்.

சும்மா இருக்கிறாய் என்னும் வசனத்தை மறந்தும் பாவிக்கக் கூடாது.

வீட்டில இருந்து என்ன வெட்டி முறிக்கிறாய் என்று சொல்லவே கூடாது.

கணக்குவளக்கெல்லாம் ஒழுங்கக்காக காட்ட வேணும்.

எமக்குத் தெரியாமல் தன் பேரில தனியா பணம் சேர்த்து வைக்கவே கூடாது.

வீணாச் செலவழிக்கிறாய் என்ற கதையே கதைக்கக்கூடாது.

மற்றப்படி ஓகே

16 hours ago, புங்கையூரன் said:

அத்தாரை நினைக்கத் தான் எனக்கு அழுகை...அழுகையா வருகுது....!😆

ம் .. நல்லா அழுவியள். அழுகிற சாட்டில எழுதாமல் போகாமல் என்ன உதவி செய்யிறது எண்டு எழுதுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் போட்ட இந்தப் படத்தை நிர்வாகம் நீங்கியது????

paavam.jpg

15 hours ago, குமாரசாமி said:

என்ன கதை இது? கொத்தார் என்ன குறை வைச்சவர் எண்டு கேக்கிறன்? போன கிழமையும் பிரியாணி செய்து குடுத்தவர். பூ தொட்டி செய்து குடுத்தவர். கமராவிலை சமையல் படம் எடுக்க தடியிலை ஸ்ரான்ட் செய்து குடுத்தவர்.😂

மிச்ச வீட்டு வேலையும் கொத்தார் தான் செய்யிறார் எண்டு இஞ்சாலை ஒரு கதை கசியுது🤣

நான் என் அத்தாரைப் பற்றிச் சொல்லவில்லை. மற்றவையைத்தான் சொல்லுறன்,கேட்கிறன்.😎

14 hours ago, Kandiah57 said:

நானும் பல வருடங்களுககுமுன் வெங்காயம் உரிந்துக்கொருத்தேன் ....நான் உரிந்தது சரியில்லையென  மனிசி. ஒரு தோலை மேலதிகமாக உரிநது குப்பையில்போட்டார். . நானும் அப்படியே இன்னெரு தோலை உரிந்த

உரித்து  குப்பையில் போட்டேன் ......இப்படியாக....முழு வெங்காயமும்.  குப்பையில் போட்டுது.....அதன்பின்.  தனித்தனி சமையல் தான்.  

சிரித்து முடியவில்லை 😂🤣

12 hours ago, சாமானியன் said:

காலையில ஒவ்வொரு நாளும் பெட் காஃபி போட்டுக் குடுத்தியளெண்டால் , மிச்ச வேலையெல்லாம் அப்பிடி சுண்டி சுண்டி நடக்கும் - 😀

ஆருக்கு எண்டு சொல்லவேயில்லை 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அக்காவுக்கு தெரியாது அல்லது மறந்து விட்டா போல் உள்ளது ஆரம்பத்தில் வந்தவர்கள் சமையல் முறைவைத்து சமைத்தவர்கள்  நாங்கள் அதே போல் கிழமையில் ஒரு நாள் வீடு கிளீனிங் நடக்கும் . இப்பகூட வீட்டில் நின்றால்  பழைய நினைவுகளை மறக்காமல் உண்டன  தூளை போட்டு பக்கத்து வீட்டு  வெள்ளையை அழவைப்பது உண்டு .இங்கு என்ன ஊர் போல்  புனல் வைத்து ஊதியா  சமைப்பது ? தேங்காய் திருவும்  வேலைகிடையாது சின்ன வெங்காயம் உடைக்க தேவையில்லை எல்லாம் பெரிய வெங்காயம் ஊரில் காலையில் 9 பத்துக்கே  மதிய சமையல் தொடங்கிவிடும் பகிடி நாலைந்து பேர் ஊர்கதை  உலககதை எல்லாம் கதைத்து ஒவ்வொரு நேரம் விதம் விதமாய் வாசம் வேறு வரும் இப்படி ஒரு பெரிய வேலையாய் செய்து முடிப்பார்கள் .

இங்கு அப்படியா ?ஒருமணிநேரத்தில் மூன்று கறி  ரைஸ் ரெடியாகும் .இந்த நாட்டில் வந்து சமையல் கஷ்ட்டம் என்பவர்களை ஊரில் புனலுடன் மழை பட்ட விறகை கொடுத்து சமைக்க  சொல்லணும் அப்ப தெரியும் .

சமையல் மட்டும்தான் வேலையா?? அப்பா நீங்கள் சமையலைத் தவிர ஒன்றும் செய்யவில்லைப் போல. கிளீனிங் என்றால் குளியலறை, குஷினி எல்லாம் செய்வதுண்டா ??? தேங்காய்ப் பூவும் பாவிப்பதில்லையோ ????

9 hours ago, Nathamuni said:

அப்ப, படுக்கை.... ஒண்டோ.... தனித்தனியோ?🤭

அதுபற்றி இதில கேட்கக் கூடாது 🤫

4 hours ago, சாமானியன் said:

சமையலைப் பற்றி கதைக்க கை  துரு துறுக்குது…

 நண்பனொருவன் கேட்டு விட்டான் இராச்  சாப்பாடு தோசை என்கும்  போது அது ரொட்டி இல்லை என்று நிச்சயம் தெரியுமா என்று ……….

 அதற்கு பதில் தான் இது  …….

ஆறு நாட்களுக்கு முன்னர் அரைத்து - இரவு முழுவதும்

23deg செல்ஷியஸில் பொங்க  வைத்து

குளிர்ப்பெட்டியினுள் நுரை ததும்ப

காத்திருந்த தோசை மா ..

கேரட்டையும் வெங்காயத்தையும் பொடிசாக  நறுக்கி

 வீட்டு கடை கோடியில் ஆய்ந்த பிஞ்சு மிளகாய் தூவி

 சற்றே சோயா Sauceம்  கிங்ஸ் தூளும்

 எள்ளுப்பன் நல்லெண்ணெயும் கலந்த  மசாலா ..

இரண்டு ஊர் முட்டையை தட்டி விட்டு

ஒரு பின்ச் Mt Everest உப்பும் சேர்த்து

ஒரு கரண்டி  நற்  பசும் பாலும் கலந்து

நன்கு நுரை ததும்ப அடித்த முட்டை …

காஸ் அடுப்பில் அளவான சூட்டில் தோசை மா வார்த்து

மேலே நுரை பொங்கும் முட்டையை ஊற்றி

மசாலா கலவையை அடங்கலாக பரவி

மறுபக்கம் பிரட்டி போட  வந்தது தான் இரா சாப்பாடு ..

துரையவர்கள் இன்று கேட்கிறார்

ரொட்டியா தோசையா என்று

வெங்காயம் உடைத்தீரா அல்லது மறு தோசை வார்க்க முன்னர்

தோசை தட்டில் தண்ணீர் தெளித்தீரா …

தப்பி விட்டீர்கள்  துரை அவர்களே

கேட்டிருக்க  வேண்டும் இந்த  கேள்வியை நீங்கள் வேறிடத்தில்

வந்து பாருங்கள் துரை அவர்களே பிரிஸ்பேனுக்கு

உண்மை தோசை என்பது என்னவென்று அறிவீர்கள் நீங்கள் ..

முகநூலில் சுட்டதா????

1 hour ago, உடையார் said:

சுமே இங்கு தூண்டில் போடுகின்றார் நாங்கள் வீட்டில் என்ன வேலை செய்கிறோமென தெரிந்து அத்தாருக்கு காட்டி, அத்தாரை படாத படுபடுத்த😎

அத்தார் சும்மா வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருந்தால் செத்தார். நல்ல காலம் ஒழுங்காக வேலை செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

அது ஒரு கனா  காலம் சமைத்து  முடிய ஒரு குளியல் ஒன்று போட்டு விட்டு வந்து பார்த்தால் திடீர் விருந்தினர்கள் வந்து கறி  இருக்காது பிறகென்ன அந்த கறி சட்டிக்குள்ளே  முட்டையை வெங்காயம் பச்சை மிளகாயுடன் அடித்து ஊத்தி இருக்கிறதுகளை ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே சட்டிக்குள் இருக்கிற  ரைஸ்  மேலும் பாண் துண்டுகள் எல்லாத்தையும் போட்டு பகிர்ந்து உண்டோம் அந்த சுவையை இடையிடையே தேடுவது உண்டு தற்போதும் .

பகிடி என்னவெண்டால் ஊரிலை சமையலறை வீட்டில் எந்த திசையில் இருக்குது எண்டு தெரியாத ஆட்கள் இங்கு யூடியூபில் சமையல் குறிப்பு கொடுப்பது கொடுமையிலும் கொடுமை .சுமே அக்காவை சொல்லவில்லை சண்டைக்கு வரக்கூடாது . சமையல் குறிப்பு கொடுக்கும்போது புத்தகத்தை பார்த்து சொல்லினமா அல்லது அனுபவத்தில் சொல்கினமா  என்று தெரிந்து விடும் .

பெருமாள் அந்தக் காலங்களில் எத்தனை பேர் இருந்தும் தனித்தனி இயக்கங்களும் இருந்தும் எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
போட்டி பொறாமை எல்லாம் அதன் பிறகே முளைத்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இதில கொலரை தூக்கி விட ஒன்றுமில்லை

வீட்டுக்கு வீடு வாசற்படி.

வந்த புதிதில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடிய சமையல்காரன் நான்.

ஆனால் அந்த வெறுப்போ என்னவோ குசினிப் பக்கம் போனதில்லை.

அதேபோல் துவைக்கும் மிசினை போடக்கூட தெரியாது.

அதற்கு காரணம் நான் இன்றும் 7 நாளும் குறைந்தது 15 மணித்தியாலங்கள் வெளியே வேலை செய்பவன்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் என்னால் முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து வருகின்றேன் 

காரணம் எனது இந்த பழக்கம் அவர்களை பற்றி விடக்கூடாது. ஏனெனில் அவர்களது வாழ்க்கை என் போன்று இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சமையலறையில் சந்தோசம் இல்லை என்றால்

படுக்கை அறையிலும் அது பிரதிபலிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சமையல் மட்டும்தான் வேலையா?? அப்பா நீங்கள் சமையலைத் தவிர ஒன்றும் செய்யவில்லைப் போல. கிளீனிங் என்றால் குளியலறை, குஷினி எல்லாம் செய்வதுண்டா ??? தேங்காய்ப் பூவும் பாவிப்பதில்லையோ ????

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

அருமையான தேங்காய்ப்பூ பிரீசர் பண்ணி வாறதாலை, இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடாகி, வேறு என்ன எண்ணெய் பாவிக்கலாம் எண்டு அரசு ஆய்வு செய்யுது.

நாடு விட்டு ஓடினால், மீனும், கிழங்குப் பொரியலும் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

எங்கட பறிக்கிளையோ கைய போடுறது எண்டு, புஞ்சி பண்டாவும், கந்தையரும், மொஹமட்டும் புறுபுறுக்கினம்.

அக்கா வேறை, சின்ன வெங்காயம் உரிச்சு வெட்ட வேணுமாம்.:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

சமையலறையில் சந்தோசம் இல்லை என்றால்

படுக்கை அறையிலும் அது பிரதிபலிக்கும்.

அடிபட்டு  துவண்டு தவண்டு போன காய். அனுபவம் பெரிசு ராசா..😁 👍🏽
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அடிபட்டு  துவண்டு தவண்டு போன காய். அனுபவம் பெரிசு ராசா..😁 👍🏽
 
நிதர்சனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதில கொலரை தூக்கி விட ஒன்றுமில்லை

வீட்டுக்கு வீடு வாசற்படி.

வந்த புதிதில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடிய சமையல்காரன் நான்.

ஆனால் அந்த வெறுப்போ என்னவோ குசினிப் பக்கம் போனதில்லை.

அதேபோல் துவைக்கும் மிசினை போடக்கூட தெரியாது.

அதற்கு காரணம் நான் இன்றும் 7 நாளும் குறைந்தது 15 மணித்தியாலங்கள் வெளியே வேலை செய்பவன்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் என்னால் முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து வருகின்றேன் 

காரணம் எனது இந்த பழக்கம் அவர்களை பற்றி விடக்கூடாது. ஏனெனில் அவர்களது வாழ்க்கை என் போன்று இருக்கப்போவதில்லை.

நல்ல காரியம் அண்ணா. குடும்பத்தில் உள்ளவர்களைப்பார்த்துப் பழக்குவதுதானே பிள்ளைகள் குணம்.

4 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?

யார் எப்பிடித் திருவி எப்பிடி பக் பண்ணுகிறார்களோ??? இருமுறை வாங்க்கிப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதன்பின் பத்துத் தேங்காயை வாங்கிவந்து மனிசன் துருவித் தருவார். பொலித்தீன் பையில் அளவாகப் போட்டுக் கட்டி வைப்பேன். tin கூட கெமிக்கல் என்று பவுடர் தான் கறிக்கும் அப்பத்துக்கும் பயன்படுத்துவது.

தேங்காய் திருவும் மிஷின் தான் தேடித் திரியிறன். எனக்காவது இருந்தால் கூறுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அருமையான தேங்காய்ப்பூ பிரீசர் பண்ணி வாறதாலை, இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடாகி, வேறு என்ன எண்ணெய் பாவிக்கலாம் எண்டு அரசு ஆய்வு செய்யுது.

நாடு விட்டு ஓடினால், மீனும், கிழங்குப் பொரியலும் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

எங்கட பறிக்கிளையோ கைய போடுறது எண்டு, புஞ்சி பண்டாவும், கந்தையரும், மொஹமட்டும் புறுபுறுக்கினம்.

அக்கா வேறை, சின்ன வெங்காயம் உரிச்சு வெட்ட வேணுமாம்.:grin:

சின்ன வெங்காயம் போட்டால் சுவையே தனிதானே

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தேங்காய் திருவும் மிஷின் தான் தேடித் திரியிறன். எனக்காவது இருந்தால் கூறுங்கள். 

ஏற்கனவே வீட்டிலே ஒன்றை வைத்து (அத்தாரை பாவப்பட்ட மனிசன்)கொண்டு இருக்கிறியள்.😁 

குசினியில் வேலை செய்யாட்டி யாழில் எழுதி போட்டிடுவா  என்று அந்த மனிசன்  உள்ளுக்குள் அழுது  கொண்டு இருப்பது ஆண்கள்க்குத்தான் கேட்க்கும் .😄

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2021 at 16:58, Maruthankerny said:

போட்டு பாருங்க வாக்கை 
அப்புறம் பாருங்க நாட்டை 

கட்டி தாருங்கள் ஒரு பெண்ணை 
அப்புறம் பாருங்கள் லிஸ்டை 

இவர் சட்டப்படி மனைவியுடன்  வாழ்கிறார்.

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுக்கும் உங்கள் குறிப்பையும் ஒரு முழுப்படத்தையும் அனுப்பிவிடுங்கள்.

எற்கனவே. மனைவியுடன். இருப்பவார்களும்.  குறிபபும். படமும். அனுப்பமுடியுமா?

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

இது  பலருக்கு தெரிவதில்லை...புரிவதில்லை...அப்படித் தெரிந்து...புரிந்தாலும். வாய்விட்டு  சொல்வதில்லை  பாராட்டுவதுமிலலை...உண்மையில்..உங்கள்  கணவர. அதிஷ்டசாலி.    நன்றி பல...

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nige said:

நன்றி nige ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் அம்மா அப்பாவோடு வாழ்ந்த காலங்களில் அம்மாவுக்கு என்னென்ன உதவிகளைச் செய்தனோ.. அவற்றை என் துணைவிக்கும் பாகுபாடின்றி.. எனக்கு வேளைகள் வாய்க்கும் போதெல்லாம்... செய்கிறேன்.

இதில் துணைவிக்கு என்று விசேடமாக உதவிகள் செய்யனும் என்ற பொருள்பட எழுதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 22:13, Kandiah57 said:

இவர் சட்டப்படி மனைவியுடன்  வாழ்கிறார்.

எற்கனவே. மனைவியுடன். இருப்பவார்களும்.  குறிபபும். படமும். அனுப்பமுடியுமா?

மருதங்கேணியா ???? அப்ப எங்களுக்கு பொய்யா சொன்னவர்????

மனைவியுடன் இருப்பவரும் குறிப்பு அனுப்பலாம். ஆனால் மனைவியின் குறிப்பும் சேர்த்து அனுப்பவேணும் .🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 03:01, nige said:

எனக்கென்னவோ அதிகமான வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் போல் தெரிகிறது. காரணம் என் சமையல் பதிவுகளை பார்த்து அது சம்மந்தமான நுட்பங்களை அழகாக எனக்கு சொல்லி கொடுத்தவர்கள் களத்தில் உள்ள ஆண்கள்தான். எங்கள் வீட்டில் என் அப்பாவில் தொடங்கி கணவர் வரை சமைக்கத் தெரிந்தவர்களே... எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

என் கணவர் புரியாணி, மீன் பொரியல் மட்டும் நன்றாகச் செய்வார். மற்றப்படி வீட்டில் பல வேலைகளுக்கும் உதவுவார். ஆனால் தேநீர் மட்டும் கட்டாயம் நான்தான் ஊற்றிக் கொடுக்க வேண்டும் காலையில். எல்லா ஆண்களும் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை நிகே.

On 4/4/2021 at 07:55, Kandiah57 said:

இது  பலருக்கு தெரிவதில்லை...புரிவதில்லை...அப்படித் தெரிந்து...புரிந்தாலும். வாய்விட்டு  சொல்வதில்லை  பாராட்டுவதுமிலலை...உண்மையில்..உங்கள்  கணவர. அதிஷ்டசாலி.    நன்றி பல...

நீங்கக்கள் கூறுவ தைப் பார்த்தால் எல்லா ஆண்களும் வாய்விட்டுப் பாராட்டுபவர்கள் என்பதுபோல் இருக்கே. பலரும் கடமைக்கு இன்னுமே வாழந்துகொண்டிருக்கிறார்கள்.

On 4/4/2021 at 19:31, nedukkalapoovan said:

நான் என் அம்மா அப்பாவோடு வாழ்ந்த காலங்களில் அம்மாவுக்கு என்னென்ன உதவிகளைச் செய்தனோ.. அவற்றை என் துணைவிக்கும் பாகுபாடின்றி.. எனக்கு வேளைகள் வாய்க்கும் போதெல்லாம்... செய்கிறேன்.

இதில் துணைவிக்கு என்று விசேடமாக உதவிகள் செய்யனும் என்ற பொருள்பட எழுதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

எல்லோரும் மேலோட்டம்மாக நானும் செய்கிறேன் என்கிறீர்கள். மனைவி செய்யும் வேலையையும் நீங்கள் செய்யும் வேலையையும் பட்டியலிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் புரியும். பல்கிப் பெருக்கிக் குடும்பம் பெரிதாக்கி பிள்ளைகள் வளரவளர வேலைகளும் அதிகரிக்கும் பெண்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கக்கள் கூறுவ தைப் பார்த்தால் எல்லா ஆண்களும் வாய்விட்டுப் பாராட்டுபவர்கள் என்பதுபோல் இருக்கே. பலரும் கடமைக்கு இன்னுமே வாழந்துகொண்டிருக்கிறார்கள்.

மன்னிக்கவும். சுமே.   நீங்கள். பிழையாக  விளக்கிவிடடீர்கள்....இங்கே.  njge.  .தனது  கணவரைப்  பாராட்டிகிறார்...(கணவன் குசினியில் உதவியதை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

மன்னிக்கவும். சுமே.   நீங்கள். பிழையாக  விளக்கிவிடடீர்கள்....இங்கே.  njge.  .தனது  கணவரைப்  பாராட்டிகிறார்...(கணவன் குசினியில் உதவியதை)

நீங்கள் தானே பலருக்கூம்புரிவதில்லை என்றீர்கள் 🤔😀

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கணவர் புரியாணி, மீன் பொரியல் மட்டும் நன்றாகச் செய்வார். மற்றப்படி வீட்டில் பல வேலைகளுக்கும் உதவுவார். ஆனால் தேநீர் மட்டும் கட்டாயம் நான்தான் ஊற்றிக் கொடுக்க வேண்டும் காலையில். எல்லா ஆண்களும் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை நிகே.

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல்கிப் பெருக்கிக் குடும்பம் பெரிதாக்கி பிள்ளைகள் வளரவளர வேலைகளும் அதிகரிக்கும் பெண்களுக்கு.

வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். 

எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல.

ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே.

கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு. 

இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர...

வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.