Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

usa-sri-lanka.jpg

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள்.

இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

அதேவேளை இருதரப்பினரதும் அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களையும் பெரிதும் வரவேற்கின்றோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.
அனைத்து அமெரிக்க கோரிக்கைகளையும் யூதர்கள் திறமையாக நிர்வகித்தனர்.
விளைவு ஒரு சக்திவாய்ந்த நாடு இஸ்ரேல். இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கு ஒரு பெரிய விலை கொடுத்தார்.
இஸ்ரேலிஸ் மாமா சாமுக்கு பல முக்கியமான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கினார். மத்திய கிழக்கில் பிழைக்க.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

us-state-696x349.png
 52 Views

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

https://www.ilakku.org/?p=47331

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா? எதுவாகினும் அமெரிக்கா இதை வெளிப்படைதன்மையுடன் செய்யபோவதில்லை. எடுபிடிகள், கூலிப்படை, காட்டிகொடுப்போர், அள்ளக்கைகள் இப்படி ஏதாவது தனிதிறமையுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நிச்சயமாக இரண்டாவதுதான். ஆனால், தமிழ்த்தலைமைகள் (அப்படியொன்று இருக்கா என்ன?) இச்சந்தர்ப்பத்தைப் பேரம் பேசும் ஒரு சந்தர்ப்பமாகப் பார்த்து அரசியல் ரீதியான தீர்வொன்றுக்கு இலங்கையைத் தள்ள வேண்டும்.

ஆனால் , பொங்கலுக்கும், வருடப் பிறப்பிற்கும், தீபாவளிக்கும் வாழ்த்துச் செய்தி சொல்ல மட்டுமே அரசியலில் இருக்கும் கருங்காலிகள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 14:40, vanangaamudi said:

இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நூறு வீதம் உண்மை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. போரினால் கணவரை இழந்தவருக்கு வீடு கட்டிக்குடுக்கினமாம் மனிதாபிமானமான இலங்கை இராணுவம், கூடிகூத்தடிச்சு அழிச்சவை இணைந்து செயற்படபோகினமாம். எல்லாம் காலம் செய்யும் திருவிளையாடல். அதுக்கு கிடைச்சான் தமிழன். ஏட்டிக்குப்போட்டியாக பக்கத்து வீட்டு பெரியண்ணரும் ஓடிவரப்போறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:16, குமாரசாமி said:

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 23:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 18:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

இஸ்ரேல் ராணுவத்தளபதி போல் இருக்கிறது அவரா இவர்?

5 hours ago, பெருமாள் said:

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

பல சந்தர்ப்பங்கள் லூப் கோல் loophole கிடைத்தன அதையெல்லாம் சுமத்திரன்  சம்பந்தன் போன்ற அகராதி பிடித்தவர்கள் தவற  விட்டார்கள் இப்ப கூட அருமையான டக் கிடைத்துள்ளது எடுத்த எடுப்பில் போர் குற்றம் நிறுவ முடியாது என்று எரியும்  கற்பூரத்தில அடிச்சு சத்தியம் பண்ணுகினம் இப்படியானவர்களை  வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது .

யுத்தம் முடித்து வைக்கப்பட்டது உண்மையே புலி இல்லாத கடந்த பத்துவருட உலகம் தொழில் நுட்ப பாய்ச்சல் அபரிதமானது இப்பவும் பேச்சு வார்த்தை என்று இழுத்துக்கொண்டு புலி படையணிகள் அழிக்க படாமல் இருந்தால் யார் யார் பயந்து கொண்டு இருப்பினம்  தென்னாசியாவின் குடும்பி யாரிடம் இருந்து இருக்கும் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கிறேன் .

  On 15/4/2021 at 18:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

My Pentagon correspondent replied me "not to answer" you, because Pentagon identified that you are a "RAW" agent.
  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 
நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 07:20, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

ஆம் அவரேதான்.

இவருக்கு ஐரோப்பிய யூனியனின் ஆதரவும் அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்தது. ஆனால் இப்போது இவர் எங்கே???????

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 02:28, தனிக்காட்டு ராஜா said:

நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

அமேரிக்காவின் ஆசிய பிராந்திய கொள்கை வகுப்பாளர்கள் ....எங்களை விட சிறிலங்கா அரசியலையும் பிராந்திய அரசியலையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் .

டமிழ் டயஸ்பரா என்ற சொல் பொதுவாக ஊடகஙளில் பாவிக்கப்படும் சொல்.....அதே சொல்லை அமேரிக்கா பாவித்தால் சிங்கள மக்கள் அமெரிக்கா மீது வெறுப்படைவார்கள்...அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா இவர்களுக்கு தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் தான் பிரச்சனை, தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல் ,தமிழர் அரசியல் பிரச்சனை போன்றவை தொட்டுக்க பாவிக்கும் ஊறுகாய்....ஆகவே தான் சிறிலங்கா டயஸ்பரா என்று சொல்லி தாங்கள் நடுநிலையானவர்களாம் என சிங்கள மக்களை முதுகில் தட்டிகொடுக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.