Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....

Featured Replies

20 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?

வரலாற்றை எழுதுபவர்கள் பல்வேறு வித்தியாசமான தரப்புகளின் பதிவுகள், ஆவணங்களை ஆராய்ந்தே அதை எழுதுவர்.  ஆகவே வித்தியாசமான நபர்கள் தமது அனுபவங்களை பகிர்கையில் அதை ஆராய்ந்து அக்கால பத்திரிகை செய்தி அறிக்கைகள், பல்வெறு அமைப்பு ரீதியான தகவல்கள்   போன்ற ஆவணங்களை சரிபார்த்து  உண்மைக்கு புறம்பான தகவல்களை கண்டுபிடிப்பது இலகு. 

  • Replies 52
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

முகத்திரையை கிழிப்பதோடு மட்டும் விட்டு விடலாகாது 
அவர்களை தூக்குமேடை வரை கொண்டு செல்லவேண்டும் 
அதுக்கு அர்ஜுன் அவர்கள் பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகிறேன் 

வீட்டுக்குள் வைத்து அடித்து கொல்வதை சகோதரபடுகொலைக்குள் 
கொண்டுவர முடியாது என்பது  புரியாமல் சிலர்  எழுதுகிறார்கள் அவர்களின் 
முகத்திரையையும் கிழிக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா.... தமிழில் இவ்வளவு, பட்டங்களா... 😁

இது காணாவிட்டால்... கௌரவ டாக்டர் பட்டமும், எம்மிடம் உள்ளது. 🤣

இதைவிட தமிழ் தமிழ் பற்று என்று எழுதினால் யாழில் ஒருத்தர் கண்னை  மூடிக்கொண்டு தமிழ் இனவெறியர்  என்று பட்டம் கொடுப்பார் .😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

வீட்டுக்குள் வைத்து அடித்து கொல்வதை சகோதரபடுகொலைக்குள் 
கொண்டுவர முடியாது என்பது  புரியாமல் சிலர்  எழுதுகிறார்கள்

என்ன நீங்கள் முழுப்பூசணிக்காயை நடு றோட்டிலை போட்டு உடைச்சிட்டியள்? 😁

கதையின்ர கதாநாயகனே தப்பி ஓடி வந்தனான் எண்டு சொல்லேக்கை இயக்கத்தின்ரை விகாரம் எப்பிடியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ...😎

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  அர்ஜின் அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள்  அர்ஜின் அண்ணை 

எதற்காக வாழ்த்துகிறீர்கள் ?

நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

பேட்டி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக

இயக்கத்தை விட்டு ஓடி வந்தவர் என்பதற்காக வாழ்த்துக்கள் கூறுவது ⁉️

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட பெரிய பகிடி பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் யாழ் உறுப்பினர்கள் இங்குதான் அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் நேரம் 2.47லிருந்து கவனிக்கவும் .இருவரும் யாழுக்கு நன்றி கூறுகிறார்கள் அப்போதைய யாழுக்கு இப்ப .....................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நன்றி... பெருமாள், உடனே போய் பார்க்கின்றேன். :)

இந்தக் காணொளியை... முழுமையாக பார்த்தவர்கள்,
யாழ். களத்தைப்  பற்றி, சொன்ன இடங்களை பார்க்க... குசியாக உள்ளது.
வேறு... ஏதாவது இடத்தில், சொல்லியிருந்தால்,
அந்த... நிமிடங்களை குறிப்பிடுங்களேன்.

மிச்சம்  எல்லாம்....  "வேஸ்ட்டு" என்று,  எனக்கு முதலே தெரியும்.
ஆன படியால்... எனது நேரத்தை,  வீணாக்க  விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

2.46.30அதன்பின் தான் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள் அர்ஜுன் வெளிப்படையாகவே இங்கு யாழில் எழுதியதையே  அங்கு சொல்வதாக சொன்னார் பேட்டி எடுத்தவர்தான் மிண்டி  முழுங்கிக்கொண்டு இருந்தார் அவர் என்ன பெயரில் யாழில் வந்தார் என்று கடைசி வரை  சொல்லவே இல்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட பெரிய பகிடி பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் யாழ் உறுப்பினர்கள் இங்குதான் அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் நேரம் 2.47லிருந்து கவனிக்கவும்....................................................................................

அநேகமாக காணொளிகளை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்ததுதான் வழக்கம். ஆனால் இந்த காணொளியை அப்படி பார்க்கவில்லை. சில இடங்களில்   காணொளியை திருப்பி இழுத்து வார்த்தைகளை உன்னிப்பாகவும் கவனித்தேன். ஏனெனில் பேட்டி எடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. பேட்டி கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. யாழ்களம் என்று ஒரு இணையத்தளம் இருக்கின்றது என சமூக ஆர்வலருக்கு காட்டிக்கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல...

58 minutes ago, பெருமாள் said:

இருவரும் யாழுக்கு நன்றி கூறுகிறார்கள் அப்போதைய யாழுக்கு இப்ப

அன்றைய யாழ்கள காலத்திலும் வெட்டுக்கொத்துக்கள் அளவில்லாமல்  இருந்தது. அதில் நான் என்ற அகங்காரம் இல்லை. அப்போதைய மட்டுறுத்தினர்கள் நான் என்ற சொல்லை பாவிப்பதில்லை. அத்துடன் எல்லா உறவுகளிடமும் மிக மிக சிநேகபூர்வமாக இருந்தார்கள்.தனிமடலில் ஏதாவது கேள்வி கேட்டால் இன்றோ நாளையோ அல்லது பல நாட்கள் சென்றாதும் அதற்குரிய பதில் சொல்வார்கள். அது இன்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

2.46.30அதன்பின் தான் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள் அர்ஜுன் வெளிப்படையாகவே இங்கு யாழில் எழுதியதையே  அங்கு சொல்வதாக சொன்னார் பேட்டி எடுத்தவர்தான் மிண்டி  முழுங்கிக்கொண்டு இருந்தார் அவர் என்ன பெயரில் யாழில் வந்தார் என்று கடைசி வரை  சொல்லவே இல்லை .

இந்த பேட்டி எடுத்தவரின் முழுப்பெயர் முகம்மது சர்தார் ஜமீல். இவர் முன்னர் ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் தமிழ் வானொலியான சுவர்ண ஒலி என்ற வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர்.  யாழில் என்ன பெயரில் வந்தார் என ஒரளவு ஊகிக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அநேகமாக காணொளிகளை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்ததுதான் வழக்கம். ஆனால் இந்த காணொளியை அப்படி பார்க்கவில்லை. சில இடங்களில்   காணொளியை திருப்பி இழுத்து வார்த்தைகளை உன்னிப்பாகவும் கவனித்தேன். ஏனெனில் பேட்டி எடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. பேட்டி கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. யாழ்களம் என்று ஒரு இணையத்தளம் இருக்கின்றது என சமூக ஆர்வலருக்கு காட்டிக்கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல...

அன்றைய யாழ்கள காலத்திலும் வெட்டுக்கொத்துக்கள் அளவில்லாமல்  இருந்தது. அதில் நான் என்ற அகங்காரம் இல்லை. அப்போதைய மட்டுறுத்தினர்கள் நான் என்ற சொல்லை பாவிப்பதில்லை. அத்துடன் எல்லா உறவுகளிடமும் மிக மிக சிநேகபூர்வமாக இருந்தார்கள்.தனிமடலில் ஏதாவது கேள்வி கேட்டால் இன்றோ நாளையோ அல்லது பல நாட்கள் சென்றாதும் அதற்குரிய பதில் சொல்வார்கள். அது இன்றில்லை.

6 minutes ago, வாலி said:

இந்த பேட்டி எடுத்தவரின் முழுப்பெயர் முகம்மது சர்தார் ஜமீல். இவர் முன்னர் ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் தமிழ் வானொலியான சுவர்ண ஒலி என்ற வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர்.  யாழில் என்ன பெயரில் வந்தார் என ஒரளவு ஊகிக்க முடியும். 

இது... இறால், போட்டு.. சுறா பிடிக்கிற விடயமாக இருக்குது. 

பெருமாள்... சொன்ன படி, காணொளியை...  பார்க்க ஆரம்பித்து,
10:53´நிமிடத்தில்... (மாவீரன்)  சிவகுமாரின், இறுதிச்  சடங்கிற்க்கு, போனேன்...
என்று, சொல்ல வரும் போது...  

இரத்தக் கொதிப்பு, அதிகமாக தெரிந்ததால், அதனை பார்ப்பதை, நிறுத்தி விட்டேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் தந்த தகவலின் அடிப்படையில் கடைசி பதினைந்து நிமிடங்கள் உரையாடலை பார்த்தேன். சிறப்பாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை, செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பான கருத்து பரிமாற்றம் அருமை.

அடிக்கடி தோழர் என்று கூறப்படுவது கேட்பதற்கு கொஞ்சம் நெருடலாக உள்ளது. இத்தனை வருடங்கள் கழிந்தும் பழையதின் பிடியில் இருந்து மீள முடியவில்லை எனபதை இது காண்பிக்கின்றது.

எல்லோரும் சேர்ந்து சமூக முன்னேற்றத்துக்கு உழைப்பதற்கு தமது பழைய சீருடைகளை கழற்றிவிட்டு காலத்துக்கு ஏற்றாற்போல் இசைந்து போவது அவசியம். அவரவர் தத்தம் முன்னைய சார்புநிலைப்பாடுகளை மையப்படுத்தினால் ஒற்றுமை சாத்தியமில்லை. அது எந்த அமைப்பாக அமைந்தாலும் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக

அர்ஜுன் அண்ணா தன்னை அப்படி அழைக்கவில்லை. பேட்டி எடுத்தவர்தான் ஒரு பில்டப் கொடுக்க அப்படி அழைத்தார். வீடியோவின் ஆரம்பத்திலேயே இது இருக்கின்றது.

நீண்ட வீடியோ என்பதால் யூடியூப்பில் நேரடியாக பாவிப்பது நல்லது. வேகத்த்தை 1.5 அல்லது 1.75 இல் விட்டால் விரைவாக பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அர்ஜூன் தன்னை சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளவில்லை. இதனை எனது முதல் கருத்திலேயே கூறிவிட்டேன்.

ஆனால் பட்டம் சூட்டுவது/கொடுப்பது எமது சமூகத்தில் கால் தூசுக்கும் சமானமற்றுப் போய்விட்டது.

அதனால் தங்கத்திற்கும் தகரத்திற்கும் வேறுபாடு ....🤥 

அதனால் பட்டம் சூட்டிக்/போட்டுக்  கொள்ளும் எல்லோர் மீதும் சந்தேகம் ஓற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 01:50, Kapithan said:

எதற்காக வாழ்த்துகிறீர்கள் ?

நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

பேட்டி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக

இயக்கத்தை விட்டு ஓடி வந்தவர் என்பதற்காக வாழ்த்துக்கள் கூறுவது ⁉️

பேட்டி கண்ட சர்தார் பிள்ளையானையும் பேட்டி கண்டவர் பார்த்த நீங்களா ? அந்த இணைப்பு 

நான் வாழ்த்து சொன்னது பல விடயங்கள்  சொல்லியுள்ளார் பேட்டிக்கும் , நலமாக வாழவும்  

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வாழ்த்து சொன்னது பல விடயங்கள்  சொல்லியுள்ளார் பேட்டிக்கும் , நலமாக வாழவும்  

நன்றி அவரது அறிவுரைப்படியே நலமாக  வாழுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பேட்டி கண்ட சர்தார் பிள்ளையானையும் பேட்டி கண்டவர் பார்த்த நீங்களா ? அந்த இணைப்பு 

சர்தார் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களை மட்டும் தேடி தேடி பேட்டிகாண்பதில் மனவக்கிரத்தை  தீர்த்து கொள்பவர் .

இதே சர்தார் முடிந்தால் Sharmila Seyyid ஐ பேட்டி கண்டு அவரால் போடமுடியுமா ?

சர்தாரும்  மேல் சொன்ன விடயத்தை பார்ப்பார் அவரும் யாழ் அங்கத்தவர்தான் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர சீமான் எதிர்ப்புவாதியும் கூட 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

சர்தார் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களை மட்டும் தேடி தேடி பேட்டிகாண்பதில் மனவக்கிரத்தை  தீர்த்து கொள்பவர் .

இதே சர்தார் முடிந்தால் Sharmila Seyyid ஐ பேட்டி கண்டு அவரால் போடமுடியுமா ?

சர்தாரும்  மேல் சொன்ன விடயத்தை பார்ப்பார் அவரும் யாழ் அங்கத்தவர்தான் .

கணணியும் கைத்தொலைபேசியும் இருந்தால் எதையும் பொது வெளியில் பேசலாம் என்றொரு நிலை இப்போதுள்ளது. அவர்கள் சொல்வதை பலர் சத்தியவாக்கு என நினைக்க ஆரம்பித்தும் விட்டனர்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 08:28, colomban said:

போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

பெயர் வேறு கொழும்பான்.

பெயர் சொல்வதை வைத்து பார்க்கும் போது, வடக்கு, கிழக்கு தொடர்பு இருக்கும் போல தெரியவில்லை.

போலி தமிழ் தேசியவாதிகள் முகத்திரை கிழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நீங்கள், எந்த சார்பு (தேசிய)வாதி என்று அறியலாமா? 🤔

1 hour ago, குமாரசாமி said:

கணணியும் கைத்தொலைபேசியும் இருந்தால் எதையும் பொது வெளியில் பேசலாம் என்றொரு நிலை இப்போதுள்ளது. அவர்கள் சொல்வதை பலர் சத்தியவாக்கு என நினைக்க ஆரம்பித்தும் விட்டனர்.🤣

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Nathamuni said:

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

யார் அந்த நடேசன்? பத்திரிகையளாரா? எந்த பத்திரிகை? யூரியூப் பத்திரிகையா? 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

இப்பவெல்லாம் மழைக்கு  முளைத்த காளான் எல்லாம் தங்களையும் ஊடகவியலாளர் என்கினம் காலக்கொடுமை .

இல்லாவிடில் இந்த சர்தார் போல் புருடா விடும் ஊடகவியல் ஆக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

யார் அந்த நடேசன்? பத்திரிகையளாரா? எந்த பத்திரிகை? யூரியூப் பத்திரிகையா? 

24 minutes ago, பெருமாள் said:

இப்பவெல்லாம் மழைக்கு  முளைத்த காளான் எல்லாம் தங்களையும் ஊடகவியலாளர் என்கினம் காலக்கொடுமை .

இல்லாவிடில் இந்த சர்தார் போல் புருடா விடும் ஊடகவியல் ஆக இருக்கும் .

தமிழ்நாட்டில் ராமசுப்ரமணியம் என்று ஒருத்தர், பிஜேபி சார்பில் முன்னர் டிவி விவாதங்களில் வருவார். (இப்போது பிஜேபியில் இல்லை, ஆனால் வருகிறார்)

சமூகவியலாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மூத்த சமுக அக்கறையாளர் போன்ற பல பெயர்களில் வர, மீம்ஸ் குரூப் போட்டுத் தாக்க, இப்போது, ஒரே ஒரு பெயரால் மட்டும் வருகிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

தமிழ்நாட்டில் ராமசுப்ரமணியம் என்று ஒருத்தர், பிஜேபி சார்பில் முன்னர் டிவி விவாதங்களில் வருவார். (இப்போது பிஜேபியில் இல்லை, ஆனால் வருகிறார்)

சமூகவியலாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மூத்த சமுக அக்கறையாளர் போன்ற பல பெயர்களில் வர, மீம்ஸ் குரூப் போட்டுத் தாக்க, இப்போது, ஒரே ஒரு பெயரால் மட்டும் வருகிறார். 

இவரை தானே சொல்லுறியள்? ஆள் பேய்க்காய். நவரச திலகம். 😁

BJP should not join hands with Rajinikanth, says Ramasubramanian

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.