Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தனை தங்கத்தால் அலங்கரித்தவர் கோவிட்டால் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது.

சிவசண்முகநாதன் யாழ்‌ இந்துக்‌ கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில்‌ சினிமா தொழில்‌ துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார்.

நல்லூர்‌ கந்தனின்‌ உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர்‌ கந்தனின்‌ ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால்‌ செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும்‌ நல்லூரிலும்‌ முன்னின்று வழிநடத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

17 minutes ago, விசுகு said:

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார்.  இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால்  அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக  தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

இவர்களை போன்றவர்கள் திருந்த போவதில்லை 
மூலஸ்தானத்தையே பொன்னால் செய்யவும் ஒருவன் வர போகிறான்தான் 

கடவுள் படைத்தான் என்று நம்புவார்கள் 
அடுத்த தெருவில் பசியில் கிடப்பவன் தனது சகோதரன்/ சகோதரி 
என்று நம்ப தயங்குகிறார்கள். (எல்லோருக்கும் அப்பா கடவுள்) 

அநியாய செலவுகளும் ...
அறியாமை மரணங்களும் 
எமது சமூகத்தில் இருந்து நீங்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார்.  இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால்  அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக  தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா? 

அதாவது உங்களைப் போன்ற ஒற்றை பக்க சிந்தனை உள்ளவர்களுக்கு நான் எழுதியது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் மருதருக்கு புரிந்து இருக்கிறது. எனவே தவறு எம்மீது இல்லை.

15 minutes ago, விசுகு said:

அதாவது உங்களைப் போன்ற ஒற்றை பக்க சிந்தனை உள்ளவர்களுக்கு நான் எழுதியது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் மருதருக்கு புரிந்து இருக்கிறது. எனவே தவறு எம்மீது இல்லை.

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. ஆனால்  கடவுள் தண்டித்துவிட்டார் என்ற பொருள்பட நீங்கள் எழுதிய முதல்க்கருத்து சம்பந்தமாக மட்டுமே இங்கு விவாதம். அந்த கருத்து தவறென்பதை நீங்கள் உணர்ந்தால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. ஆனால்  கடவுள் தண்டித்துவிட்டார் என்ற பொருள்பட நீங்கள் எழுதிய முதல்க்கருத்து சம்பந்தமாக மட்டுமே இங்கு விவாதம். அந்த கருத்து தவறென்பதை நீங்கள் உணர்ந்தால் சரி. 

யார் குத்தியும் அரிசி ஆனால் சரி என்பதன் அர்த்தம் புரிந்தால் போதும் நான் எழுதியதை புரிந்து கொள்ள?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

ஆனால் எதை வைத்தாவது கடவுளுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சி தான் நடைபெறுகிறது 😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகன் ஆலயத்தில்  முக்கிய பணியாற்றிய இரத்தினசப்பாபதி  கொறொனா காரணமாக இறந்து போனார். 

இதுதான் சாராம்சம். மிகுதி அனைத்தும் அலங்காரம். தமிழ்வின்னின் எழ்த்து நடையை வத்து பிடுங்குப்படவேண்டிய அவசியமே இல்லை.

தMழ்வின்.. 🤮

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனுக்கு நகை அலங்காரம் செய்தவர் போலுள்ளது, நகை செய்து போட்டவராக தெரியவில்லையே என்ற கருத்தினை போட்டேன். காணவில்லை, சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, Nathamuni said:

சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

எனக்கும்தான் .😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பெருமாள் said:

எனக்கும்தான் .😁

எல்லாருக்கும் அரோகரா...😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

4 minutes ago, பெருமாள் said:

எனக்கும்தான் .😁

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 🙏

சரிதான்... முருகபக்தர் போலை கிடக்குது...  :grin:

The Worship of Muruka or Skanda (The Kataragama God)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகனுக்கு நகை அலங்காரம் செய்தவர் போலுள்ளது, நகை செய்து போட்டவராக தெரியவில்லையே என்ற கருத்தினை போட்டேன். காணவில்லை, சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை

உண்மையில் சப்மிட் பண்ண மறந்து விட்டமா அல்லது கத்தரிக்கோல் தூக்கி கொண்டு போய் விட்டதா என்று தெரியாமல் மீண்டும் எழுதவும் முடியாமல் எழுதாமல் இருக்கவும் முடியாமல்???☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 🙏

சரிதான்... முருகபக்தர் போலை கிடக்குது...  :grin:

எல்லாம் அவன் செயல். 💐 🥥🙏🏽

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் - 25-8-1906

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவில்லையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

உங்களுக்கும், ஏழரை இல்லை, அட்டமத்து சனி தானே.... பிறகென்ன... 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, zuma said:

நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

2 minutes ago, zuma said:

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

 மரணம் எல்லோருக்குமானது. நீங்கள் இணைத்த செய்தியின் தலைப்பு என்னத்தை சொல்ல வருகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 மரணம் எல்லோருக்குமானது. நீங்கள் இணைத்த செய்தியின் தலைப்பு என்னத்தை சொல்ல வருகின்றது?

கடவுளுக்கு தங்கத்திலும் அலங்காரம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 07:45, Nathamuni said:

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 

அவர் உங்களை வைத்து, தனது ஆட்டத்தை தொடர நினைத்திருப்பார்! கொரோனா ஆடுற பேய் ஆட்டத்தில எவரின் ஆட்டமும் எடுபடாது என்று விளங்கிச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.