Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை  பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி

12-90.jpg
 21 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘கல்முனை நீதவான் இல்லாத சமையத்தில்  ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பாணைகளை பெற்றிருந்தார்கள்.

நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயதிக்கங்களும் கிடையாது. ஆகையிலானால்   அழைப்பாணையை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்துறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு மேன்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவினை நான் ஆதரித்து இருந்தேன். இதன் காரணமாக கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ம் திகதி வரை அமுலில் இருக்கும். அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.

இந் நிலையிலேயே இந்த தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் மூலம் கல்முனை நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டு இன்று காலை தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

குறித்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஷ்வரன், அ.நிதான்சன்,துணைச் செயலாளர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி, செ.கணேஷ் தமிழ் மாணவர் மீட்பு அணி தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினரும் ஆகிய 7 பேருக்கு எதிராக கல்முனை காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=48616

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ம் திகதி வரை அமுலில் இருக்கும். அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.

5 hours ago, உடையார் said:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

29 minutes ago, Paanch said:

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

இதை வாசிச்சு விளங்கிக் கொள்ள வெளிக்கிட்டு எனக்கு காலையிலேயே தலை சுற்றிவிட்டது. நீங்கள் கொஞ்சம் லேட்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Paanch said:

தலை சுற்றுகிறது. எனக்கு மட்டுமா? வேறுயாரும் உள்ளனரா.......?????? 

11 minutes ago, நிழலி said:

இதை வாசிச்சு விளங்கிக் கொள்ள வெளிக்கிட்டு எனக்கு காலையிலேயே தலை சுற்றிவிட்டது. நீங்கள் கொஞ்சம் லேட்

நல்ல காலம், நீங்கள் இருவரும் சொன்னதால்...
வெள்ளிக்கிழமை... தலை சுற்றாமல்,  தப்பி விட்டேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம், நீங்கள் இருவரும் சொன்னதால்...
வெள்ளிக்கிழமை... தலை சுற்றாமல்,  தப்பி விட்டேன். 🤣

முக்கியமான விசயத்தை விட்டு போட்டீங்கோ....

கத்திக்கு தப்பவேணுமெண்டா, தலை சுத்திர மாதிரி இனி எழுதோணும். 😁

காலையில இருந்து, கத்தி சுழலுது... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டு போட்டீங்கோ....

கத்திக்கு தப்பவேணுமெண்டா, தலை சுத்திர மாதிரி இனி எழுதோணும். 😁

காலையில இருந்து, கத்தி சுழலுது... :grin:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

இப்படியான ஜனநாயக விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்...😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படியான ஜனநாயக விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்...😀

ஆம்... புத்தன்,
நியானி... தான், செய்வது.. சரி தானா என்று, 
கண்ணாடி முன் நின்று...
"சுய பரிசோதனை"   செய்து கொள்ள வேண்டும்.  😎

"எடுத்த.. வீச்சில்,  அப்பாவி மீது...  வாழ் வீசுவது... ஒரு போர் வீரனுக்கு அழகல்ல."   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஆம்... புத்தன்,
நியானி... தான், செய்வது.. சரி தானா என்று, 
கண்ணாடி முன் நின்று...
"சுய பரிசோதனை"   செய்து கொள்ள வேண்டும்.  😎

"எடுத்த.. வீச்சில்,  அப்பாவி மீது...  வாழ் வீசுவது... ஒரு போர் வீரனுக்கு அழகல்ல."   

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்...

Edited by பாலபத்ர ஓணாண்டி

2 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நானும்,  அவதானித்தேன்.
சீமானிசம்... என்று, ஒரு புதிய உறுப்பினர்... நேற்று,
யாழ். களத்திற்கு, அறிமுகமாகி.. சில கருத்துக்களை எழுத முதலே...
அவரை... வரவேற்கமால், மூஞ்சையில்... சுடு  தண்ணியை, ஊற்றிய  மாதிரி அனுப்பியது சரியல்ல. 😎

இல்லை, அவர் பெயரை மாற்றும் படி தனிடலில் கேட்டதற்கு இணங்க 'தமிழகன்' என்று மாற்றி இருக்கு. இன்றும் அவர் சில கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

இல்லை, அவர் பெயரை மாற்றும் படி தனிடலில் கேட்டதற்கு இணங்க 'தமிழகன்' என்று மாற்றி இருக்கு. இன்றும் அவர் சில கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

தமிழகனின் கருத்தை... இன்றும் வாசித்தேன்.
நன்றாக எழுதுகின்றார். அவரை... இங்கு, தங்க விடுங்கள் "ப்ளீஸ்" :)

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்...

Top 20 Pulikesi GIFs | Find the best GIF on Gfycat

பாலபத்ர ஓணாண்டியாரே... 
இதுக்கெல்லாம்.... திரும்ப,  ஆயுதப் போராட்டத்தை  எடுக்கக் கூடாது.
திரும்பவும்... மன்னரிடம் தான், முறையிட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

Top 20 Pulikesi GIFs | Find the best GIF on Gfycat

பாலபத்ர ஓணாண்டியாரே... 
இதுக்கெல்லாம்.... திரும்ப,  ஆயுதப் போராட்டத்தை  எடுக்கக் கூடாது.
திரும்பவும்... மன்னரிடம் தான், முறையிட வேண்டும்.  

சரி சண்டை வேணாம்.. தலாச்சம் புள்ள  மண்ட  ஓடு எழும்பிச்சம் பழம் கூவாத  சேவல் எல்லாம்  வச்சி நியானிக்கு  ஒரு  நவீன பூஜை  பண்றன்...spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி சண்டை வேணாம்.. தலாச்சம் புள்ள  மண்ட  ஓடு எழும்பிச்சம் பழம் கூவாத  சேவல் எல்லாம்  வச்சி நியானிக்கு  ஒரு  நவீன பூஜை  பண்றன்...

"மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண,"
நம்ம.... பயலுவழுக்கு, ஏதும் நடந்தா... ஒனக்கு, சங்கு தான்டி.  💕 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

"மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண,"
நம்ம.... பயலுவழுக்கு, ஏதும் நடந்தா... ஒனக்கு, சங்கு தான்டி.  💕 🤣

அடச்சீ சிறி படுத்தே விட்டானய்யா... 😂😂spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

போற  போக்க  பாத்தா கவலையில சிறி இண்டைக்கு விடிய விடிய கலர் சாப்டப் போறாப்லருக்கு...😂😂  spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் பொலிகண்டி பேரணி வழக்கு தொடர்பாக உத்தரவு வழங்க மே 18வரை தடை!

Court.800-696x348.png
 12 Views

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பி2பி தொடர்பான வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் – பொலிகண்டி பேரணி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் முன்னிலையாகி திறமையான சமர்ப்பணங்களை செய்தார்.

அதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று 30.04.2021 நடைபெறவிருக்கும் வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் மே 18 வரை வழங்க கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (30)வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இவ்வுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதான வழக்கினை கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் இரா.சாணக்கியன் த.கலையரசன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் சீ.யோகேஷ்வரன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் செல்வராசா கணேஷ்ஆகிய ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=48554

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நான்... தான்,  வீணாய்... நிழலி  மேலை  சந்தேகப் பட்டுட்டன்.
அவரை... இப்ப, நினைக்க... பாவமாக உள்ளது.  😢

எதையும் தாங்கும் உள்ளமது. நீங்கள் வீணாய்  கலங்காதேங்கோ.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஓ.... நிழலி 
யாழ். களத்தில்.... பெயர் மாற்றம் குறித்த,  அறிவித்தல்  வரவில்லை என்பதால்,
உங்களைப் பற்றிய, தப்பான... எண்ணம் ஏற்பட்டமைக்கு, வருந்துகின்றேன். 😢

8 hours ago, குமாரசாமி said:

எனக்கு முதலே நல்ல வடிவாய் தெரியும்...நிழலி அப்பிடி செய்யுற ஆள் இல்லையெண்டு 🙃

3 hours ago, satan said:

எதையும் தாங்கும் உள்ளமது. நீங்கள் வீணாய்  கலங்காதேங்கோ.  

ஒருவரை வால் பிடிப்பதற்கு அவர் வால் கிடைத்து வளைக்க முடிந்தாலும்.....

"வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை."😲 

Vanakam.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.