Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

தமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 9 மணி முதல் ஆளுநர் மாளிகையின் திறந்த புல்வெளியில் குறைந்த விருந்தினர்களுடன் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகின்றது.

முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

https://athavannews.com/2021/1214253

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 34 people and text

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ

வாழ்த்துக்கள்

கொஞ்சம் எங்களுக்காகவும் பேசுங்கள்

பதவி

கூட்டணி

வேண்டப்பட்டவர், எதிரி என்று பாராமல் அநீதி எங்கு நடந்தாலும் பணயம் வைக்காது நீதியின் பக்கம் நில்லுங்கள். 

உலகத்தில் தமிழர்களுக்கு என்று குரல் கொடுக்க கூடிய அதிக மக்களின் பிரதிநிதியாக நடவுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

முதல்வருக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Bild

முதல்வருக்கு வாழ்த்துகள்.

கண்ணீர் வரும் தானே.

ஏறாத கோவில் இல்லை. பண்ணாத பூசைகள் இல்லை. வைக்காத விக்குகள் இல்லை.

***************.

எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப, நாலு வருசமா தலையால கிடங்கு கிண்டி பார்த்தார்.

கடைசீல மக்கள் முதல்வர் ஆக்கி இருக்கிறார்கள். 

ஆக, முதலமைச்சருக்கு யாழ் கள உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்பர், கட்டுமரத்தாரின் சுத்துமாத்துகள், இல்லாமல், நேர்மையாக ஆட்சி  செய்தால் நல்லது.

அதுசரி, விக்கை எப்ப சார் தூக்கி எறிவீங்க?

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

அதுசரி, விக்கை எப்ப சார் தூக்கி எறிவீங்க?

ஏன் இந்த வஞ்சகம்??

அப்பாவை கண்ணாடியை களட்டும்படி  கடைசிவரை கேட்காத நீங்கள் ஏன் இவரை மட்டும்???

கருணாநிதிக்கு இயலாமல் போகாமல் இருந்திருந்தால் இன்றும் தளபதி தான் இளைஞர் அணித்தலைவர்?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கண்ணீர் வரும் தானே.

ஏறாத கோவில் இல்லை. பண்ணாத பூசைகள் இல்லை. வைக்காத விக்குகள் இல்லை.

****************

எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப, நாலு வருசமா தலையால கிடங்கு கிண்டி பார்த்தார்.

கடைசீல மக்கள் முதல்வர் ஆக்கி இருக்கிறார்கள். 

ஆக, முதலமைச்சருக்கு யாழ் கள உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்பர், கட்டுமரத்தாரின் சுத்துமாத்துகள், இல்லாமல், நேர்மையாக ஆட்சி  செய்தால் நல்லது.

அதுசரி, விக்கை எப்ப சார் தூக்கி எறிவீங்க?

எம் ஜி ஆர் தொப்பியுடன் வலம் வந்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை
திறமையான ஆட்சியை மட்டுமே மக்கள் பெற்று வாழ்த்தி வணங்கினர்.

தகப்பன் அரசியல் சரியில்லை என்பதற்காக
மகனின் அரசியல் (அதுவும் இன்றுதான் பதவியேற்றுள்ளார்) சரியாக வராது என்ற கணக்கு எப்போதும் சரியாக வராது.
இவரது இனி வரப்போகும் செயற்பாடுகளை
இவரது மகன் தனது அரசியலின் எதிர்காலத்தைக் கணக்கிட்டு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

இவர்  
இன்னும் இரண்டுமுறை பதவியேற்க சந்தர்ப்பங்கள் உள்ளனவாம்

 முதல்வருக்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தவறுகள், ஒரு போதுமே சரியாகாது.

ஸ்டாலின் அண்ணன் அழகிரி கூட, தா கிருஷ்ணன் கொலை, தினகரன் பத்திரிகை அலுவலக, ஊழியர்கள் 3 பேர் கொலை என்று மாட்டி, தந்தையால் காப்பாத்தப்பட்டவர். அதனால் அவரை அரசியலில் முன்னுக்கு கொண்டு வர முடியாமல் தவிர்த்த கட்டுமரம், ஸ்டாலினை முன்னே கொண்டு வந்தார்.

மகள் கனிமொழி, ஊழல் வழக்கில், திகாரில் களி தின்று பிணையில் வந்துள்ளார்.

ஆக வெளியே தெரியாத அல்லது மறைக்கப்பட்ட பெரிய சிக்கல்கள் இல்லாத ஸ்டாலின், தனது தந்தையார் போட்ட ராஜபாதையில், எவ்வித பிரச்சனையும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்தே மேலே வந்துள்ளார்.

இந்த ராஜபாதைக்கு தடையாக இருக்க கூடியர் என்று கருதப்பட்ட வைகோவை, ஈவு இரக்கம் இன்றி தூக்கி வீசினார்.

அவர் போராடி மேலே வருவத்துக்கும், வாரிசாக மேலே வருவத்துக்கும் வித்தியாசம் உண்டு.

முதல்வருக்கு வாழ்த்துகள் சொல்லும் அதேவேளை, ஜெயலலிதா தனது முதலாவது பதவிக்காலத்தில் சொதப்பினார். ஆனாலும் போட்டியாக மூன்றாவது சக்தி ஒன்று வராதபடியால் மீண்டும் முதல்வரானார்.

ரஜனி மூன்றாவது சக்தியாக அரசியலுக்கு வந்திருக்கக்கூடிய தருணம் அதுவாகவே இருந்தது.

70 வயதாகிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் இன்னும் இரண்டு முறை என்றால், 90 வயது வரை முதல்வராய் இருப்பார் என்கிறீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 34 people and text

50% சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 2 பெண்கள் தான் அமைச்சராய்  இருப்பது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்.!!  தமிழக மக்கள் வாழ்க்கையின் மலர்ச்சிகண்டுதான் அவரைப் போற்ற முடியும்.🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

50% சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 2 பெண்கள் தான் அமைச்சராய்  இருப்பது கவலைக்குரியது.

சீமான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா..? | nakkheeran

சீமான்...  தமிழகத்தின்,  முதலமைச்சராக வரும் போது... 
உங்களது... கவலைகள் யாவும்,  நிச்சயம்   நிவர்த்தி செய்யப் படும் என்று நினைக்கின்றேன். 👍 :)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சீமான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா..? | nakkheeran

சீமான்...  தமிழகத்தின்,  முதலமைச்சராக வரும் போது... 
உங்களது... கவலைகள் யாவும்,  நிச்சயம்   நிவர்த்தி செய்யப் படும் என்று நினைக்கின்றேன். 👍 :)

உங்கள் கனவு, நீங்கள் உயிருடன் இருக்கும் போது நனவாக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.😁

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை, ஓர் மாற்று பார்வை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

புதிய அமைச்சரவை, ஓர் மாற்று பார்வை 

நல்ல, ஒரு காணொளி இணைப்பு.

ஸ்ரானுக்கு... இங்கு இருந்து தான், தலையிடி ஆரம்பிக்கும்.

அதனை....  பா.ஜ.க. வலிமையாக கையாளும்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல, ஒரு காணொளி இணைப்பு.

ஸ்ரானுக்கு... இங்கு இருந்து தான், தலையிடி ஆரம்பிக்கும்.

அதனை....  பா.ஜ.க. வலிமையாக கையாளும்.

முதலில் 350 கோடி விக் கணக்கு செட்டில் பண்ண வேணும். பிறகுதான் மிச்சம்.

இவரது செயல்பாடுகள், சீமானுக்கு முதலீடு ஆகப்போகிறது.

அரசியலில், அழகிரியே நின்று பிடிக்க முடியவில்லை.

கமல், அரசியல் குளறுபடியாகி விட்டது.

தினகரன்-பன்னீர் இணையலாம். ஆனாலும் எடப்பாடி - பிஜேபி உறுதியாக இணையும்.

பல கூத்துக்கள் நிகழும். அனுபவத்தில், ஸ்டாலின், கட்டுமரம் அல்ல.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

முதலில் 350 கோடி விக் கணக்கு செட்டில் பண்ண வேணும். பிறகுதான் மிச்சம்.

இவரது செயல்பாடுகள், சீமானுக்கு முதலீடு ஆகப்போகிறது.

கமல், குளறுபடியாகி விட்டது. தினகரன்-பன்னீர் இணையலாம். ஆனாலும் எடப்பாடி - பிஜேபி உறுதியாக இணையும்.

பல கூத்துக்கள் நிகழும். அனுபவத்தில், ஸ்டாலின், கட்டுமரம் அல்ல.

நாதம்ஸ்....
ஸ்ராலின் அமைதியாக... இருந்தாலும், 
அவரின் மனைவி துர்க்கா  வகையறாக்கள், உதயநிதி போன்றதுகள்...
தமது, இயல்பு குணத்தை காட்ட.. வெளிக்கிடும் என்று  கருதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்....
ஸ்ராலின் அமைதியாக... இருந்தாலும், 
அவரின் மனைவி துர்க்கா  வகையறாக்கள், உதயநிதி போன்றதுகள்...
தமது, இயல்பு குணத்தை காட்ட.. வெளிக்கிடும் என்று  கருதுகின்றேன். 

முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர், சித்தியும், தந்தையின் துணைவியுமான ராசாத்தி அம்மாள் வீட்டுக்கு போய், காலில் விழுந்து ஆசி பெற்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர், சித்தியும், தந்தையின் துணைவியுமான ராசாத்தி அம்மாள் வீட்டுக்கு போய், காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இது, கனிமொழிக்கு.... 
நிச்சயம்  மகிழ்ச்யை கொடுத்திருக்கும், என்றாலும்...
மதுரை வீரன், அஞ்சா நெஞ்சன்  அண்ணன்  அழகிரிக்கு... 
பயங்கர கடுப்பை... ஏத்தியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இது, கனிமொழிக்கு.... 
நிச்சயம்  மகிழ்ச்யை கொடுத்திருக்கும், என்றாலும்...
மதுரை வீரன், அஞ்சா நெஞ்சன்  அண்ணன்  அழகிரிக்கு... 
பயங்கர கடுப்பை... ஏத்தியிருக்கும்.

புல்லுக்கும் அங்கே பொசியுமாம்.

வாய்க்காலை, மதுரைக்கும் தண்ணீர் பாயுறமாதிரி அப்பப்ப திருப்பி விட்டால், அண்ணாவுக்கும், மகழ்ச்சியா இருக்கும். அதாலை யோசியாதீங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

புல்லுக்கும் அங்கே பொசியுமாம்.

வாய்க்காலை, மதுரைக்கும் தண்ணீர் பாயுறமாதிரி அப்பப்ப திருப்பி விட்டால், அண்ணாவுக்கும், மகழ்ச்சியா இருக்கும். அதாலை யோசியாதீங்கோ.

அப்பன்... வெட்டியது,  உப்புக் கிணறு என்றால்... 
அதை... மகன்,  குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆசிர்வாதம் என்பது...   "தயாளு அம்மாளின்",
ஒரு, தொப்பிள் கொடியில்...  பிறந்தவனிடம் வாங்காமல்,

"ராசாத்தி அம்மாள்" ...  வீட்டுக்குப் போனதை,
என்றும்... நியாயப் படுத்த முடியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

50% சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 2 பெண்கள் தான் அமைச்சராய்  இருப்பது கவலைக்குரியது.

சரி சுமா அவர்களே! தமிழ்நாட்டில் 31 பெண்களை அமைச்சர்களாக்கி, 2 ஆண்களை அவர்களோடு சேர்த்து அமைச்சர்களாகி  இருந்திருந்தால்...... சிந்தித்துப் பார்த்தீர்களா.? 🤣 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, zuma said:

50% சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 2 பெண்கள் தான் அமைச்சராய்  இருப்பது கவலைக்குரியது.

இதை சொல்ல வெட்கமாய் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.