Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமோ நமோ சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஒரு கோஷ்டியாக இயங்கக்கூடாது என்பதும் களவிதி  தானே....  அது எப்படி, இங்கே பதித்தவர்கள் எல்லோரும்....(கபித்தான் தவிர) ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.... 🤔

நான். இங்கு  கோஷ்டியாக  இயஙகவில்லை  என்பதை  மிக்க உறுதியுடன்  தெரிவித்துக்கொள்கிறேன்...கோஷ்டியாக  இயங்கினால் கருத்துக்களின் எண்ணிக்கை  குறைத்துவிடும்  இதனால் பல நல்ல கருத்துகளை அறிய முடியாது போய்விடும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு கோஷ்டியாக இயங்கக்கூடாது என்பதும் களவிதி  தானே....  அது எப்படி, இங்கே பதித்தவர்கள் எல்லோரும்....(கபித்தான் தவிர) ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.... 🤔

நோக்கம் தான் என்ன? நிர்வாகம் கவனித்துக்கொண்டு தான் இருக்கும். 🙏

இங்கே நிர்வாகம், வேண்டியதை செய்து நகர்ந்து விட்டது.

மினக்கடாமல், வேறு வேலையை பாருங்கள். மிக்க நன்றி.

நன்றி ஐயா, உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தத்துக்கு.🤣😜

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் ஆக்கபடுவதை உணர்ந்து

சினம் வந்தால் நீயும் என் தோழனே 🤣

இனவாததுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று கூடி போராடினோம் அது குழுவாதமா?

இல்லை.

யாழ்களம் பம்மாத்துக்களுக்கு பலியாக கூடாது என ஒரு நேரிய கோணத்தில் சிந்திக்கும் அனைவரும் ஒரு நேர்கோட்டில் வரவேண்டியது அடிப்படை கணிதம்.

ஒரு கள உறவின் புரோபைலில் இருக்கும் படத்தை “சின்னபுள்ள” என கிண்டல் அடித்தது. இன்னொரு உறவு அது சரியில்லை என்ற பின்னரும் தொடர்ந்தது களவிதிகளுக்கு ஏற்பத்தானா? அப்போ bullying and harassment உறைக்கவில்லையா?

2 hours ago, Nathamuni said:

ஒரு கோஷ்டியாக இயங்கக்கூடாது என்பதும் களவிதி  தானே....  அது எப்படி, இங்கே பதித்தவர்கள் எல்லோரும்....(கபித்தான் தவிர) ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.... 🤔

நோக்கம் தான் என்ன? நிர்வாகம் கவனித்துக்கொண்டு தான் இருக்கும். 🙏

இங்கே நிர்வாகம், வேண்டியதை செய்து நகர்ந்து விட்டது.

மினக்கடாமல், வேறு வேலையை பாருங்கள். மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, goshan_che said:

முட்டாள் ஆக்கபடுவதை உணர்ந்து

சினம் வந்தால் நீயும் என் தோழனே 🤣

🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

🤣

Bild

அண்ணை,

நேற்று விவேகானந்தர் இண்டைக்கு சேகுவாரா🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, goshan_che said:

அண்ணை,

நேற்று விவேகானந்தர் இண்டைக்கு சேகுவாரா🤣

நாளைக்கு பின்லாடனா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

படம் தெரியவில்லை கற்பிதன் ஆனால் cut and paste பண்ணி பார்க்க முடிகிறது.

இந்த சிவதாசன் யார்? டிவி புரோகிராம் செய்பவர் என்கிறது டிவிட்டர் அக்கவுண்ட்.

அவரேதான் அதேதான்.

உவங்கள்தான் கனடாவிலுள்ள தமிழர் ஒருவரையும் சிந்திக்க விடாமல்(விட்டால் சிந்தித்திருப்பினமோ எண்டு முனகப் படாது 😜) தலையில மிளகாயத் தொடர்ச்சியாக 2009 May வரை அரைத்துக்கொண்டிருந்தவங்கள். அதுக்குப் பிறகு ஆக்கள் எஸ்கேப். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாளைக்கு பின்லாடனா? :cool:

🤣 இல்லை மார்கோ போலோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

🤣 இல்லை மார்கோ போலோ🤣

அப்ப அடுத்தது கொலம்பஸ் தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

அவரேதான் அதேதான்.

உவங்கள்தான் கனடாவிலுள்ள தமிழர் ஒருவரையும் சிந்திக்க விடாமல்(விட்டால் சிந்தித்திருப்பினமோ எண்டு முனகப் படாது 😜) தலையில மிளகாயத் தொடர்ச்சியாக 2009 May வரை அரைத்துக்கொண்டிருந்தவங்கள். அதுக்குப் பிறகு ஆக்கள் எஸ்கேப். 

ஓம் இங்கயும் ஒரு பாரிய ஆதரவாளராக தன்னை காட்டி - முழுக்க முழுக்க புலிகளை வன்முறையாளராக காட்டும் உள்ளடிகளில் ஈடுபட்டு வந்தார்.

எனக்கு அப்போ சந்தேகம் வந்தது. தெரிந்த சிலருடன் பேசிய போது அப்படி இல்லை மிகவும் நம்பிக்கையானவர் என்றார்கள்.

சரிதான் நான்தான் சந்தேக பிராணி என்று விட்டு விட்டேன். 

2010 இல் ஆள் ஊருக்கு போய் எசமானர்களுடன் ஐக்கியம் ஆகி விட்டார்.

அண்மையில் நடந்த உண்ணாவிரதம் பற்றி @பெருமாள்எழுதியவற்றை வாசித்தேன். 

உண்மையில் பெருமாள் போன்ற உண்மையானவர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்பது ஆறுதலாக இருந்தது.

ஆனால் அவரை கேட்டாலே சொல்லுவார் 2009 வரை இவர்கள்தான் குரல்தரவல்லவர்களாக இருந்தார்கள்.

2009 வரை தலையில் அரைச்ச மிளகாயின் எரிச்சலே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் இன்னும் புது புது குழவிகளோடு வருகிறார்கள் 😡.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 05:16, Nathamuni said:

கருத்து / அலசல் | சிவதாசன்

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம்.

இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தமான ‘ஸ்கிறிப்டும்’ இலங்கையில் எழுதப்படவில்லை. இத நடைமுறைச் சாத்தியமாக்கியது மட்டுமே இலங்கை.

ராஜபக்சக்களின் மீளமர்த்தலுக்கு அப்பால் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு, 20 வது திருத்தம். இப்படியொரு அரசியலமைப்பு திருத்தத்தை, அதுவும் சில நாட்களுக்குள் உருவாக்க, தற்போதுள்ள ராஜபக்ச முகாமில் எவருமில்லை. அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீதியமைச்சர் அலி சப்றி பாராளுமன்றத்தில் கூற மறுத்துவிட்டிருந்தார். தற்போது வரையப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள துறைமுகநகரச் சட்ட வரைவு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். இச் சட்டமூலத்தில் சுமார் இருபத்தைந்து அரசியலமைப்பு முரண்பாடுகள் இருக்கிறது என்பதைக்கூட, உலகப் புகழ் பெற்ற சட்டப் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூட் பார்க்கவில்லை என்றால் – do as you are told- கட்டளை அவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் அல்லது முதுகெலும்புகள் அதி பலவீனமாக இருந்திருக்க வேண்டும்.

நிறைவேறி விட்டது. சீனாவில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்கும். விரைவில் துறைமுக நகரத்தில் சீனக் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. சீனம், சிங்களம், ஆங்கில மொழிகளில் வீதிப் பதாகைகள் பிரமாண்டமாக எழுப்பப்படப் போகின்றன. மதத் தலைவர்களைச் சமாதானமாக்க துறைமுகத்திலேயே அதி உயரமான புத்த விகாரையும், ஆயிரம் கால் புத்த கலாச்சார மண்டபமும் கண் விழித்து மூடுவதற்குள் நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

துறைமுக நகரத்தால் தமிழருக்கு நேரடியாக எந்தவித இலாப நட்டமுமில்லை. சிங்களவர்களைப் போலவே அவர்களும் அங்கு வெளிநாட்டுக்காரர் தான். 99 வருடங்களுக்குள் சீனர் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமாக வந்துவிடுவர். அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொர்க்கம் அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதியுபககாரமாக ராஜபக்ச பரம்பரையினருக்கு துறைமுக நகரத்தில் மாட மாளிகைகள் பரிசாகக் கிடைக்கலாம். ஒரு காலத்தில் (உயிரோடு இருந்தால்) ராஜபக்சக்கள் மக்களின் கல்லெறிகளிலிருந்து தப்பி வாழ அது அடைக்கலத்தையும் வழங்கலாம். ராஜபக்சக்களின் எடுபிடிகளுக்கு ஓரமாக நின்று தெரு வியாபாரம் செய்ய சீனா இடமொதுக்கிக் கொடுக்கலாம். அங்கு முக்கிய தெருவியாபாரிகள் சீனராகவே இருப்பர்.

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி தனது சர்வ வல்லமையை மீளப்பெற்ற பின்னர், இராணுவத் தளபதிகளின் அமைதி ஒரு விடயத்தைச் சொல்கிறது. சிங்கள கடுந்தேசியவாதிகளின் இரைச்சல் பெரும்பாலும் இல்லையென்றாகிவிட்டது. மதத் தலைவர்கள் தாங்கள் விட்ட மகா தவறை நினைத்து மண்டையில் குத்திக்கொள்கிறார்கள்.

சிங்கராஜா வன அழிப்பை நேரில் சென்று பார்த்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தின சொன்ன விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அரசாங்கத்தின் சூழல் கட்டுப்பாடுகளையும் மீறி வன அழிப்பை ஏவி விடுவது அரசியல்வாதிகள் தான், என அவர் தனது இயலாமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் பிறகு அவரது வழமையான ‘தேசிய பாதுகாப்பு’ கர்ச்சிப்புகள் குறைந்துவிட்டன. காரணம் அக் குறிப்பிட்ட வன அழிப்பு, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன தொழிற்பேட்டைக்கு நீர், மின் வழங்கலுக்காக இரண்டு பாரிய நீர்த் தேக்கங்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் சிங்களத் தேசியவாதி, சீனத் தேசியவாதி அல்ல.

இதர விடயங்களில் போல, சீனா எவ்விடயத்தையும் கால தாமதப்படுத்துவதில்லை. அவர்களது தேவைகளை ராஜப்கசக்கள் துரிதமாகச் செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக நகரத்தில் இராணுவத்துக்கு எந்தவித அக்கறையுமில்லை; அதனால் இலாபமுமில்லை. மியன்மாரில் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகள் அவர்களிடமில்லை. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என சீன இராணுவம் குடிவந்த பின்னர் தான் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

துறைமுக நகரத்தை ஒரு துபாய், சிங்கப்பூர் எனப் படம் காட்டி ராஜபக்ச தரப்பு விற்றிருக்கிறது. இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கப் போகிறவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் தமது இலக்கிலிருந்து மாறவில்லை. சேசெல்ஸ் போன்ற நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் பணத்தையும், நாட்டை விற்றதற்காக சீனா கொடுத்த ‘கமிசன்’ பணத்தையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திர்ப்பதே அவர்களது திட்டம். அதில் அவர்கள் குடும்பமாக, சகோதரர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

துறைமுக நகரம், மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கு மாளிகை மட்டும்தான். அது தனவந்தரின் விளையாட்டுத் தளமாகவே இருக்கும். அது சகல தரப்பினரும் வந்து குடித்து, கூத்தியாடி, சூதாடிச் செல்ல களமமைத்துக் கொடுக்கும் சொர்க்கம். லொஸ் ஏஞ்சலிஸ் எப்படி அமைதியாக அரேபிய முடிக்குரியவர்களை அழைத்து அவர்களின் பணத்தைப் பிடுங்குகிறதோ அப்படியான ஒன்றாகவே இதுவும் இருக்குமென நம்பலாம். அங்குள்ள கண்ணாடி மாளிகைகளின் குடியிர்ப்பாளர்களில் பலர் கவர்ச்சியான சீன, கொரிய பெண்களாக இருக்கலாம். இங்கு கிடைக்கும் இலாபம் ராஜபக்சக்கள் சொலவதைப் போலவோ அல்லது கூசா தூக்கும் கப்ரால், பீரிஸ் போன்றோர் சொல்வதைப் போலவோ இலங்கையின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொட்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.

துறைமுக நகரத்தின் நாணயம் சீனாவின் யுவானாக இருக்குமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அது ‘டொலராக’ மாற்றப்பட்டது என்கிறார்கள். திருவாளர் ‘ஹிட்லர்’ அமுனுகம கூறியதைப் போல பசில் ராஜபக்ச ‘நாட்டின் நன்மைக்காகவே திடீரென அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது’ என்பது துறைமுக நகரத்தால் ‘பயப்பட எதுவுமில்லை’ என அமெரிக்காவைத் தாஜா பண்ணுவதற்காகவாக இருக்கலாம். எனவே அமெரிக்காவைக் குஷிப் படுத்த ஏதாவது விட்டுக்கொடுப்புகளுடன் அவர் நாடு திரும்பலாம்.

துறைமுக நகரத்தை ஒரு front ஆக மட்டுமே சீனா பாவிக்கும். அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு அதை ஒரு ‘சிங்கப்பூராகக்’ காட்டியே ஆக வேண்டும். ஹொங்க் கொங் போல இறுக்கமாக அங்கு இருக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை தரும் வாத்து. அதை எப்படி வளர்த்துப் பெருக்குவதென்று சீனாவுக்குத் தெரியும். இவ் விடயத்தில் இந்தியாவின் வழமையான நெளிவுகளை (சுளிவுகள் அல்ல!!) அது தனக்குச் சாதகமாகப் பாவிக்கும். அதே வேளை சீனாவின் military-industrial complex அம்பாந்தோட்டை தான். அங்கு நீண்டகாலக் குடியிருப்பிற்கு சீனா தயாராகிவிட்டது. அதுதான் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. அவுஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்காவின் இரகசிய பிரதேசமான அலிஸ் ஸ்பிறிங்ஸ் போலவே சீனாவுக்கு அம்பாந்தோட்டை என்பது மட்டும் இப்போதைக்குப் போதுமானது.

இந்தியா பல தடவைகளில் பல அணில்களை ஏறவிட்டுப் அண்ணாந்து பார்த்து வீணி வடித்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்படி இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், பைடன் நிர்வாகம் பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலகத்தில் அமெரிக்கா என்றொரு நாட்ட இறைவன் படைத்தது இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே என அவர் தீர்க்கமாக நம்புகிறார். பாலஸ்தீனத்தில் எண்ணற்ற குழந்தைகள் கொல்லப்பட்ட்போது இரங்கமுடியாத இப் பிறவிக்கு விமோசனமில்லை. கைவிட்ட கேஸ். ஒபாமா காலத்தில் கோதாபயவுடன் ‘டீல்’ போட்டு தமிழர்களைக் கொன்றொழித்ததில் அவர் கைகளிலும் இரத்தக் கறையுண்டு. எனவே துறைமுக நகரத்தில் வானத்தைத் தொடும் ஒரு அழகான கண்ணாடி மாளிகையில் அமெரிக்காவின் கொடியொன்றையும் சீனா பறக்க விடும். அதோடு அவர் மனக்குளிர்ந்து விடுவார்.

இவையெல்லாவற்றுக்கும் மாறாக, எனக்கும் கனவு காண உரிமையுண்டு என்ற வகையில் – இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொஞ்சம் முதுகெலும்புள்ள தலைமைகள் வந்தால், அவர்கள் துறைமுக நகரத்தின்மீது பொருளாதாரத் தடை விதித்தால் (economic sanctions) – அங்கு வணிகம் செய்பவர்களும், முதலீடு செய்பவர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். இதனால் அங்கு சீனாவும், சீனாவின் நண்பர்களும் மட்டுமே வியாபாரம் செய்யலாம். சீனா உலகின் தொழிற்சாலையாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நுகர்வோராகவும் இருக்க முடியாது. உலக வர்த்தகம் இன்றி அதனால் சீவிக்க முடியாது. எனவே துறைமுக நகரம் அதன் சுடுகாடாக அமைய வாய்ப்புண்டு.

போர்களை விட உலகில் அதிக அழிவுகளைக் கொண்டுவருவது பொருளாதாரத்தடை. ஈரான், ஈராக், வெனிசுவேலா என்று எண்ணற்ற நாடுகள் சமகாலத்தில் மண்டியிட்டமைக்கு வானத்திலிருந்து பொழிந்த குண்டுகள் காரணமல்ல, வயிறுகள் வெந்தமையே காரணம். மக்கள்தான் இத் துன்பங்களை அனுபவிக்கப் போகிறவர்கள். துறைமுக நகரத்தின் மக்கள் சாதாரண மக்களல்ல என்ற வகையில் – who cares?.

எனவே எனது எதிர்ப்பார்ப்பு? ஜே.வி.பி. தலைமையிலான மூன்றாவது புரட்சி – அரிவாளையும் சுத்தியலையும் எறிந்துவிட்டு, யதார்த்தமான உண்மையான, கற்பனைகளுடன் கூடாத அணுகுமுறைகளுடன் கூடிய மூன்றாவது எழுச்சி, மக்கள் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமானால், புத்த மகாசங்கங்களின் அனுசரணையுடன், ஆச்சரியப்படத்தக்க வகையில் இராணுவத்தின் அனுசரணையுடன், மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். புலிகளை வென்ற கதையும், தமிழர்களை வென்ற கதையும் இன்னும் சில தசாப்தங்களுக்கு எடுபடவும் முடியாது; எடுக்கப்படவும் கூடாது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலும், தீவிர தமிழ்த் தேசியம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட்டு உள்ளூர் உற்பத்தியான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். அனுரகுமார திசநாயக்கா அமரவன்ச அல்ல. அவரது தலைமையில் ஜே.வி.பி. பல நிதர்சனங்களை உணர்ந்திருக்கிறது. அவரோடு கற்றவர்களும், பண்புள்ளவர்களும் நிற்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு முறை அநுரகுமாரவிலும் காசைக் கட்டிப் பார்க்கலாம். குதிரை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது. ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது – Title: Courtesy: The Island / Lucien Rajakarunanayake.

https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

அப்ப  வந்தே மாதரத்திற்கு ஜன கண மண  தான் போல கிடக்கு ... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

யாழ் களத்துக்கு மிகமிகச் சாதாரணமான அறிவுத்திறன் கொண்ட  மாங்கா மடையர்கள்தான் வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் இப்படித்தான் தெரியும்😂

நீங்கள் மின்னம்பல முகக்கவசம் ஆலோசனை கொடுக்கும் போது, அப்படித்தான் நினைத்திருப்பீர்கள் என்ன? 😁

13 hours ago, zuma said:

நன்றி ஐயா, உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தத்துக்கு.🤣😜

விண்டோஸ் 10 update 1% - 100% உலகளாவிய கணனி மைக்ரோசாப்ட் அலுப்பு உங்களுக்கு வராவிடில் நீங்கள் என் தோழர் அல்ல. 

இதுலயே நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்கிறியள்.... பிறகு எங்க?

நம்ம உடான்ஸ் சாமியார் ஓடியாந்து படு பவ்வியமா லிங்க் கேக்கும் போதே, எங்கேயோ உதைக்குதே என்று புரியாவிட்டால், நான் இங்கே களமாடி அடைந்த அனுபவத்தால் என்ன பிரயோசனம்?  (இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துவ முடியுமா?) :grin:

உங்கள் மேலே சத்தியமாக, முகப்புத்தகத்தில் தான் வந்தது. ஆனால் இப்போது தூக்கி விட்டார்கள் போல உள்ளது. நண்பர்களுக்கு லிங்க் அனுப்பி இருந்தேன். அவர்களும் அதையே தான் சொல்கிறார்கள்.

11 hours ago, குமாரசாமி said:

🤣

Bild

கைலாசம் போயிருந்த போதும், இங்கே காமரா சொருகிப் போட்டு தான் போயிருக்கிறார் நம்ம, உடான்ஸ் சாமியார் என்று தெரிகிறது.

சின்ன பொடியன் கொமெண்ட், பெருமாள் பதிவு: ஞான கண்ணால் பார்த்திருப்பாரோ? :grin:

***

தல... டேக் இட் ஈசி.... கைலாசம் எப்படி போனது.... நமக்கும் விசா எடுத்து தர முடியாதோ?

ஒருமாதம் லீவு எண்டுறியியல்... சொல்லாமல் கொள்ளாமல் ஓடாமல் சொல்லி விட்டு போங்கோ....

அது கிடக்குது... அந்த கோலோனியல் திருகோணமலை, புத்தகம் isbn தரமுடியுமா அல்லது எங்க வாங்கலாம் என்று சொல்லுங்கோ 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நீங்கள் மின்னம்பல முகக்கவசம் ஆலோசனை கொடுக்கும் போது, அப்படித்தான் நினைத்திருப்பீர்கள் என்ன? 😁

அந்த திரியிலேயே விளக்கம் கொடுத்தும் விளங்காவிட்டால் ...... 🥭 

On 27/5/2021 at 07:25, Nathamuni said:

முகப்புத்தகத்தில் வந்தது..... கருத்து, நல்லா இருந்தது. ஓட்டினேன். 'திருடப்பட்ட' என்ற சொல் நாகரிகமாக படவில்லை ஓய்.

முகப்புத்தகத்தில் திருடும்போது “திருடப்பட்ட” என்ற சொல்லை நீக்கும் நாகரீகம் மெச்சத்தக்கது👏👏👏

அந்த முகப்புத்தக லிங்கிற்கு நானும் வெயிற்றிங்.. நண்பர்களுக்கு அனுப்பியதை எங்களுடனும் பகிரலாமே..

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

முகப்புத்தகத்தில் திருடும்போது “திருடப்பட்ட” என்ற சொல்லை நீக்கும் நாகரீகம் மெச்சத்தக்கது👏👏👏

அந்த முகப்புத்தக லிங்கிற்கு நானும் வெயிற்றிங்.. நண்பர்களுக்கு அனுப்பியதை எங்களுடனும் பகிரலாமே..

https://www.facebook.com/tam.sivathasan/posts/10223142636027595

இதுதான் சிவதாசன் போஸ்ட்.... ஆனாலும் எனக்கு வந்த லிங்கில் நேரடியாக போஸ்ட் ஆக பதிவாகி இருந்தது. அதில் மறுமொழி.கோம் என்று இருக்கவில்லை.

இப்போது நேரடியாக தளத்தின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னடா, நாம அதில் இருந்து தானே copy பண்ணினோம், இப்ப ஏன் வேறு தளத்துக்கு போகுது என்று, உண்டான குழப்பதினாலேயே,  அதனை நண்பர்களுடன் உறுதி செய்யவே இவ்வளவு நேரம் எடுத்தது.

நன்றி....

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 20:02, zuma said:

நன்றி ஐயா, உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தத்துக்கு.🤣😜

இதுக்கு மேலே, கிருபன் ஐயாவுக்கு கொடுத்த லிங்கினை பார்க்கவும். ஏதோ முயன்று இருக்கிறேன்.

(அப்ப எனது மூக்கு உடை படேல்ல தானே.... ஹா... ஹா.) 😜

எல்லாமே அவசரம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

நீங்கள் மின்னம்பல முகக்கவசம் ஆலோசனை கொடுக்கும் போது, அப்படித்தான் நினைத்திருப்பீர்கள் என்ன? 😁

விண்டோஸ் 10 update 1% - 100% உலகளாவிய கணனி மைக்ரோசாப்ட் அலுப்பு உங்களுக்கு வராவிடில் நீங்கள் என் தோழர் அல்ல. 

இதுலயே நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்கிறியள்.... பிறகு எங்க?

நம்ம உடான்ஸ் சாமியார் ஓடியாந்து படு பவ்வியமா லிங்க் கேக்கும் போதே, எங்கேயோ உதைக்குதே என்று புரியாவிட்டால், நான் இங்கே களமாடி அடைந்த அனுபவத்தால் என்ன பிரயோசனம்?  (இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துவ முடியுமா?) :grin:

உங்கள் மேலே சத்தியமாக, முகப்புத்தகத்தில் தான் வந்தது. ஆனால் இப்போது தூக்கி விட்டார்கள் போல உள்ளது. நண்பர்களுக்கு லிங்க் அனுப்பி இருந்தேன். அவர்களும் அதையே தான் சொல்கிறார்கள்.

கைலாசம் போயிருந்த போதும், இங்கே காமரா சொருகிப் போட்டு தான் போயிருக்கிறார் நம்ம, உடான்ஸ் சாமியார் என்று தெரிகிறது.

சின்ன பொடியன் கொமெண்ட், பெருமாள் பதிவு: ஞான கண்ணால் பார்த்திருப்பாரோ? :grin:

***

தல... டேக் இட் ஈசி.... கைலாசம் எப்படி போனது.... நமக்கும் விசா எடுத்து தர முடியாதோ?

ஒருமாதம் லீவு எண்டுறியியல்... சொல்லாமல் கொள்ளாமல் ஓடாமல் சொல்லி விட்டு போங்கோ....

அது கிடக்குது... அந்த கோலோனியல் திருகோணமலை, புத்தகம் isbn தரமுடியுமா அல்லது எங்க வாங்கலாம் என்று சொல்லுங்கோ 

நாதம்,

இஞ்சாரும் என்னைட்ட கேள்வி கேக்கிறெண்ட்டா quote பண்ணி கேளுமப்பா. ஏதோ தற்செயலா இந்த திரி கண்ணில பட்டது. எல்லாட்டில் உடான்ஸ் சாமி தியானத்தில் இருக்க.  கவனியாம போறார் எண்டு குறைப்பட்டிருப்பியள்.

ISBN நம்பர் எல்லாம் தமிழ் புத்தகங்களில் அரிதப்பா. 

எழுத்தாளர் பெயர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன்.

பதிப்பு குமரன் பப்ளிசேர்ஸ் சென்னை 26

கொப்பி கிடைத்தால் @நன்னிச் சோழன்@கிருபன் க்கும் சொல்லவும். எனக்கு ஊருக்கு போன நேரம் ஒரு ஆள் பரிசா தந்தது. 

கைலாசம் போறது வலு சிம்பிள்.

கூகுள் மப்பில KY11ASH எண்ட postcode ஐ அடியுங்கோ.

அங்க வந்தால், பிள்ளையார் டி ஸ்டால்லுக்கும் முருகன் பழக்கடைக்கும் நடுவில சிவன் மூலிகை ஸ்டோர் என்று ஒரு கடை இருக்கும்.

உள்ள வந்து உடான்ஸ் சாமிய பாக்கோணும் எண்டு கேளுங்கோ.

வரேக்க பற்றீஸ் எடுத்து வர மறக்க வேண்டாம்.

2 hours ago, Nathamuni said:

இதுக்கு மேலே, கிருபன் ஐயாவுக்கு கொடுத்த லிங்கினை பார்க்கவும். ஏதோ முயன்று இருக்கிறேன்.

(அப்ப எனது மூக்கு உடை படேல்ல தானே.... ஹா... ஹா.) 😜

எல்லாமே அவசரம்....

சீ…. மூக்கு உடை படேல்ல…..

பிஞ்சி தொங்குதப்பா🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 14:06, Nathamuni said:

ஒரு கோஷ்டியாக இயங்கக்கூடாது என்பதும் களவிதி  தானே....  அது எப்படி, இங்கே பதித்தவர்கள் எல்லோரும்....(கபித்தான் தவிர) ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.... 🤔

நோக்கம் தான் என்ன? நிர்வாகம் கவனித்துக்கொண்டு தான் இருக்கும். 🙏

இங்கே நிர்வாகம், வேண்டியதை செய்து நகர்ந்து விட்டது.

மினக்கடாமல், வேறு வேலையை பாருங்கள். மிக்க நன்றி.

நேர்கோடு என்றால் மாறி மாறி பச்சை குத்துவது தானே!!!!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நாதம்,

இஞ்சாரும் என்னைட்ட கேள்வி கேக்கிறெண்ட்டா quote பண்ணி கேளுமப்பா. ஏதோ தற்செயலா இந்த திரி கண்ணில பட்டது. எல்லாட்டில் உடான்ஸ் சாமி தியானத்தில் இருக்க.  கவனியாம போறார் எண்டு குறைப்பட்டிருப்பியள்.

ISBN நம்பர் எல்லாம் தமிழ் புத்தகங்களில் அரிதப்பா. 

எழுத்தாளர் பெயர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன்.

பதிப்பு குமரன் பப்ளிசேர்ஸ் சென்னை 26

கொப்பி கிடைத்தால் @நன்னிச் சோழன்@கிருபன் க்கும் சொல்லவும். எனக்கு ஊருக்கு போன நேரம் ஒரு ஆள் பரிசா தந்தது. 

கைலாசம் போறது வலு சிம்பிள்.

கூகுள் மப்பில KY11ASH எண்ட postcode ஐ அடியுங்கோ.

அங்க வந்தால், பிள்ளையார் டி ஸ்டால்லுக்கும் முருகன் பழக்கடைக்கும் நடுவில சிவன் மூலிகை ஸ்டோர் என்று ஒரு கடை இருக்கும்.

உள்ள வந்து உடான்ஸ் சாமிய பாக்கோணும் எண்டு கேளுங்கோ.

வரேக்க பற்றீஸ் எடுத்து வர மறக்க வேண்டாம்.

சீ…. மூக்கு உடை படேல்ல…..

பிஞ்சி தொங்குதப்பா🤣

ஓமோம்... அந்த....

ஒரு நிமிசம் வாறன்.... உந்த மூக்கு விசயம்....

****

ஹலோ சுமோ....

கிருபன் அய்யா... சின்ன பெடியன் படம் ப்ரொபைலில போட்டிருக்கிறதும், நான் சும்மா பகிடிவிடுறதும், அவரும் அதை பகிடியா எடுத்துகொள்ளுறதும் ஒரு புரிதல்...

உங்க கோசனும் நானும், அப்பப்ப இப்படிதான்.... நாங்கள் திண்ணெயிலேயே விழுந்து, புரண்டு, எழும்பி, வாத்தியார் வந்து, முதுகிலே ரெண்டு போட்டு, ஓடுங்கோடா வெளியாலை எண்டு திரத்து பட்டு, தியேட்டர்ல ஒரு மாதம் குந்தி இருந்தனாங்கள்.... வாத்தியார் மறந்து போனார். மொனிட்டர் தமிழ் சிறியர் நினைப்பூட்டிதான் உள்ள வந்தனாங்கள்.

அதாலை, பெரிய அடிபாடு போலை எண்டு உந்த திரியில நடக்கிறதை வேற திரியிலை போய், ஒருத்தர், லிங்க் தர ஏலாமல் மூக்குடைச்சு போய் நிக்கிறார் எண்டு சொல்லிக் கொண்டு திரியிரேல்ல... ஒகே... 😁

****
ஆ... அந்த முகவரி போட்டு பார்த்தன். ஆஸ்திரேலியா வந்து இறங்கினா... ஏர் கருடா ஏத்திக்கொண்டு போகுமாம். உங்கண்ட கடிதத்தோடை வந்தா ... அந்த தூசணத்திலை (கெட்ட வார்த்தை ஸ்பெசிலிஸ்ட்) கலாநிதி பட்டம் வாங்கின பிள்ளையை ஏர்போட்டுக்கு அனுப்புவினமாம்.

தருவியல் தானே... அட... எனக்கு செய்யாட்டி பிறகு யாருக்கு? 😜

Nithyananda case | Gujarat HC directs to present two sisters before it on  Dec 20

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Nathamuni said:

தருவியல் தானே... அட... எனக்கு செய்யாட்டி பிறகு யாருக்கு? 😜

Nithyananda case | Gujarat HC directs to present two sisters before it on  Dec 20

😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை பகிடி ஒண்டு நினைவுக்கு வருகுது.

நம்ம தமிழ் வாத்தியாருக்கு, அப்பப்ப, ஆங்கிலம் கதைக்கோணும் எண்டு ஒரு பொல்லாத ஆசைகள் வரும்.

ஒரு நாள், கதைச்சு கொண்டிருந்த பொடியள் மூண்டு பேரை கூப்பிட்டு, கெட் அவுட் சொல்லிப்போட்டார்.... 

கிளாஸ் முடியிற நேரம் உள்ள வர சொல்ல, தமிழில சொன்னா மரியாதை என்னாகிறது... 

வாத்தியார் முகட்டை பார்க்கிறார், அங்காள பார்க்கிறார், இங்காள பார்க்கிறார். கடகட எண்டு நடந்து வெளியாலை போய், பொடியளுக்கு கையால் வகுப்பு அறை கதவை காட்டி, கெட் அவுட் எண்டு கத்தினார்....

எல்லோரும் சிரிக்க... வாத்தியாருக்கு கோவமோ, கோவம்.. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

ஓமோம்... அந்த....

ஒரு நிமிசம் வாறன்.... உந்த மூக்கு விசயம்....

****

ஹலோ சுமோ....

கிருபன் அய்யா... சின்ன பெடியன் படம் ப்ரொபைலில போட்டிருக்கிறதும், நான் சும்மா பகிடிவிடுறதும், அவரும் அதை பகிடியா எடுத்துகொள்ளுறதும் ஒரு புரிதல்...

உங்க கோசனும் நானும், அப்பப்ப இப்படிதான்.... நாங்கள் திண்ணெயிலேயே விழுந்து, புரண்டு, எழும்பி, வாத்தியார் வந்து, முதுகிலே ரெண்டு போட்டு, ஓடுங்கோடா வெளியாலை எண்டு திரத்து பட்டு, தியேட்டர்ல ஒரு மாதம் குந்தி இருந்தனாங்கள்.... வாத்தியார் மறந்து போனார். மொனிட்டர் தமிழ் சிறியர் நினைப்பூட்டிதான் உள்ள வந்தனாங்கள்.

அதாலை, பெரிய அடிபாடு போலை எண்டு உந்த திரியில நடக்கிறதை வேற திரியிலை போய், ஒருத்தர், லிங்க் தர ஏலாமல் மூக்குடைச்சு போய் நிக்கிறார் எண்டு சொல்லிக் கொண்டு திரியிரேல்ல... ஒகே... 😁

****
ஆ... அந்த முகவரி போட்டு பார்த்தன். ஆஸ்திரேலியா வந்து இறங்கினா... ஏர் கருடா ஏத்திக்கொண்டு போகுமாம். உங்கண்ட கடிதத்தோடை வந்தா ... அந்த தூசணத்திலை (கெட்ட வார்த்தை ஸ்பெசிலிஸ்ட்) கலாநிதி பட்டம் வாங்கின பிள்ளையை ஏர்போட்டுக்கு அனுப்புவினமாம்.

தருவியல் தானே... அட... எனக்கு செய்யாட்டி பிறகு யாருக்கு? 😜

Nithyananda case | Gujarat HC directs to present two sisters before it on  Dec 20

எல்லா தரலாம், சரிக்கட்டலாம். பற்றீசோட வந்தால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எல்லா தரலாம், சரிக்கட்டலாம். பற்றீசோட வந்தால்.

பற்றிஸ் என்ன பற்றிஸ், அந்த பிள்ளையோட வருகிறேன். பற்றிஸ் சுட்டு தர சொல்லி சாப்பிடலாம்... 
😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.