Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

Capture-2-696x395.png
 122 Views

யாழ். நகரில் தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் பவனி வருவதுடன், கடைகள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் தமிழில் பேசியும் வருகின்றனர்.

Capture-4.png

வாகன ஓட்டிகளிடம் சரியாக முகக்கவசம் அணியும்படியும், வாகனங்களில் ஏற்றுபவர்களை முகக் கவசம் அணியும்படி கூறும்படியும் தமிழில் தெரிவிக்கின்றனர்.

Capture-3.png

வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்களிடம் முகக்கவசம் அணியும்படியும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணும்படியும் தமிழில் தெரிவித்து வருகின்றனர்.

https://www.ilakku.org/?p=50721

  • Replies 82
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படையணியினர்.... யாழ். மாநகர சபையால் களமிறக்கப் பட்டவர்களா?

அல்லது.... ஶ்ரீலங்கா ராணுவத்தால் களமிறக்கப் பட்டவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படையணியினர்.... யாழ். மாநகர சபையால் களமிறக்கப் பட்டவர்களா?

அல்லது.... ஶ்ரீலங்கா ராணுவத்தால் களமிறக்கப் பட்டவர்களா?

பொறுத்திருங்கள் பதில் சீக்கிரம் வெளியில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படையணியினர்.... யாழ். மாநகர சபையால் களமிறக்கப் பட்டவர்களா?

அல்லது.... ஶ்ரீலங்கா ராணுவத்தால் களமிறக்கப் பட்டவர்களா?

எண்ணிக்கையைப் பார்க்கும்போது  ஶ்ரீலங்கா ராணுவத்தால் களமிறக்கப்பட்டது தான்  இது சிங்களப்பெண்கள்போல் தெரிகிறது. அப்படியெனில் யாழ் மாநகரசபை  நியமித்து இருக்கவாய்ப்பில்லை இருப்பினும் தமிழில் பேசி வேலை செய்வது நல்லவிடயம். 1960 மட்டில் தமிழர்கள் சிங்களம் படித்தால் மட்டும் பதவி உயர்வு...சம்பள உயர்வு .....வேலைவாய்ப்பு...வழங்கப்பட்டது...சிங்களம் தெரியதவர்கள்  பதவி நிக்கப்பட்டார்கள்   இப்ப  தலைகீழாகமாறி  சிங்களவர் தமிழ் கதைத்து வேலை செய்ய வேண்டிய காலம் .சிலநேரம்  தமிழ்ஈழம் கூடக்கிடைக்கலாம்   

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிள்ளையளையும் சேர்த்தவங்கள் எல்லோ?!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

சிங்களவர் தமிழ் கதைத்து வேலை செய்ய வேண்டிய காலம்

அதுவும் தமிழருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவாகவும் இருக்கலாம். தமிழர் எது படித்தாலும் வேலையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, உடையார் said:

யாழ். நகரில் தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் பவனி வருவதுடன், கடைகள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் தமிழில் பேசியும் வருகின்றனர்.

22 hours ago, உடையார் said:

வாகன ஓட்டிகளிடம் சரியாக முகக்கவசம் அணியும்படியும், வாகனங்களில் ஏற்றுபவர்களை முகக் கவசம் அணியும்படி கூறும்படியும் தமிழில் தெரிவிக்கின்றனர்.

22 hours ago, உடையார் said:

வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்களிடம் முகக்கவசம் அணியும்படியும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணும்படியும் தமிழில் தெரிவித்து வருகின்றனர்.

டேய் தமிழா இதை விட உனக்கு என்னடா வேணும்? 😎

சார் சம்பத்,மாவை,சும்பத் எல்லாரும் கலைஞ்சு போங்கோ...போய் அவரவர் வேலையை பாருங்கோ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

டேய் தமிழா இதை விட உனக்கு என்னடா வேணும்? 😎

சார் சம்பத்,மாவை,சும்பத் எல்லாரும் கலைஞ்சு போங்கோ...போய் அவரவர் வேலையை பாருங்கோ...🤣

அண்ணை இந்த சம்பத், சும்பத்தின் விளக்கம் என்ன?

பத் என்றால் சிங்களத்தில் சோறு.

சம் சும் சோத்துக்க்கா எதையும் செய்வார்கள் என்பதையா இப்படி குறிக்கிறீகள்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

சம் சும் சோத்துக்க்கா எதையும் செய்வார்கள் என்பதையா இப்படி குறிக்கிறீகள்🤣.

அது பாக்கு போட்ட சோத்துக்கொம்பனி எண்டதை என்ரை வாயாலை எப்பிடி சொல்லுவன்? ☹️

எதுக்கும் நாங்கள் கிழிச்ச கோட்டை தாண்டாமல் நிண்டு கதைப்பம்.:cool: நான் ஒண்டு சொல்ல அதுக்கு நீங்கள் ஒண்டு சொல்ல.....இதுக்கை எனக்கு இண்டையான் கிரகபலனும் சரியில்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அது பாக்கு போட்ட சோத்துக்கொம்பனி எண்டதை என்ரை வாயாலை எப்பிடி சொல்லுவன்? ☹️

எதுக்கும் நாங்கள் கிழிச்ச கோட்டை தாண்டாமல் நிண்டு கதைப்பம்.:cool: நான் ஒண்டு சொல்ல அதுக்கு நீங்கள் ஒண்டு சொல்ல.....இதுக்கை எனக்கு இண்டையான் கிரகபலனும் சரியில்லை 😁

🤣 உசாரையா உசாரு, ஓரஞ்சாரம் உசாரு🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அது பாக்கு போட்ட சோத்துக்கொம்பனி எண்டதை என்ரை வாயாலை எப்பிடி சொல்லுவன்? ☹️

எதுக்கும் நாங்கள் கிழிச்ச கோட்டை தாண்டாமல் நிண்டு கதைப்பம்.:cool: நான் ஒண்டு சொல்ல அதுக்கு நீங்கள் ஒண்டு சொல்ல.....இதுக்கை எனக்கு இண்டையான் கிரகபலனும் சரியில்லை 😁

சாமியார் பாத்து காலை வையுங்கோ! முடிச்சு பழி உங்கள் தலையில் முடியலாம்.  கிரகபலன் வேற சரியில்லை எண்டுறியள்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அது பாக்கு போட்ட சோத்துக்கொம்பனி எண்டதை என்ரை வாயாலை எப்பிடி சொல்லுவன்? ☹️

எதுக்கும் நாங்கள் கிழிச்ச கோட்டை தாண்டாமல் நிண்டு கதைப்பம்.:cool: நான் ஒண்டு சொல்ல அதுக்கு நீங்கள் ஒண்டு சொல்ல.....இதுக்கை எனக்கு இண்டையான் கிரகபலனும் சரியில்லை 😁

சனிக்கிழமை எள்ளெண்ணை எரிக்க, கிரக பலன் சரி வரும் எண்டு இவர் சொல்லுறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இதுல நல்ல சுத்த  யாழ்ப்பாண தமிழ் கதைக்கிற பிள்ளையும் இருக்கு வீடியோ நேற்று பார்த்தன் இங்க கன பேர் குத்தி முறியுற வேஸ்ட் ஆகுது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதுல நல்ல சுத்த  யாழ்ப்பாண தமிழ் கதைக்கிற பிள்ளையும் இருக்கு வீடியோ நேற்று பார்த்தன் இங்க கன பேர் குத்தி முறியுற வேஸ்ட் ஆகுது

குத்தி முறிந்ததன் பலன் அது ....உயிர்தியாகத்தின் பலன் அது ....

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 02:40, உடையார் said:

Capture-3.png

அதுசரி இதுகள் போட்டிருக்கிற உடுப்பு என்ன கலர், என்ன வடிவம் எண்டு தெரியல்ல... யாழ் மேயருக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கு ஏற்படக் கூடாது. பாவம் பெண்பிள்ளைகள் என்றும் சொல்கிறார்கள். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வந்து... இரண்டு நாள் ஆகுது.

சிங்களவர், ஒட்டுக் குழுக்கள் எல்லாம் அமைதியாக இருக்கிற படியால்... இது இராணுவம் இறக்கி விட்ட பெண்கள் அணியினர் என்று தெரிகின்றது.

இல்லாட்டி... இப்ப, மணிவண்ணன் நாலாம் மாடியில் இருந்திருப்பார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுல நல்ல சுத்த  யாழ்ப்பாண தமிழ் கதைக்கிற பிள்ளையும் இருக்கு வீடியோ நேற்று பார்த்தன் இங்க கன பேர் குத்தி முறியுற வேஸ்ட் ஆகுது

On 27/5/2021 at 02:40, உடையார் said:

பொது இடங்களில் நிற்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் தமிழில் பேசியும் வருகின்றனர்.

On 27/5/2021 at 02:40, உடையார் said:

முகக் கவசம் அணியும்படி கூறும்படியும் தமிழில் தெரிவிக்கின்றனர்.

On 27/5/2021 at 02:40, உடையார் said:

ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணும்படியும் தமிழில் தெரிவித்து வருகின்றனர்.

மேலே படத்தில் இராணுவக்குடியிருப்புயென்று தமிழிலுண்டு ..அதை வைத்து  இராணுவ நியமனமென்றும்....சிங்களப்பெண்களென்றும்  முடிவு செய்தேன். ஒரு மொழி பயன்படுத்தும்போது  அந்தமொழி  வளர்ச்சியடைகிறது  எனவே தமிழ்மொழி வளர்ச்சிக்கி சிங்களப்பெண்கள் பங்களிப்பு செய்வதை வரவேற்கிறேன்..நீங்கள் என்ன ராஜா...?தனிக்காட்டுராஜா.  சொல்லவருகிறிர்கள்...அந்தப்பெண்களை. உங்களுக்குப்பிடிததுள்ளதா?😜😜😜. சா...சா...அவர்கள் பேசும் தமிழ் நன்றாகவுள்ளதா?😎😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

செய்தி வந்து... இரண்டு நாள் ஆகுது.

சிங்களவர், ஒட்டுக் குழுக்கள் எல்லாம் அமைதியாக இருக்கிற படியால்... இது இராணுவம் இறக்கி விட்ட பெண்கள் அணியினர் என்று தெரிகின்றது.

இல்லாட்டி... இப்ப, மணிவண்ணன் நாலாம் மாடியில் இருந்திருப்பார். 😁

9 minutes ago, Kandiah57 said:

மேலே படத்தில் இராணுவக்குடியிருப்புயென்று தமிழிலுண்டு ..அதை வைத்து  இராணுவ நியமனமென்றும்....சிங்களப்பெண்களென்றும்  முடிவு செய்தேன். ஒரு மொழி பயன்படுத்தும்போது  அந்தமொழி  வளர்ச்சியடைகிறது  எனவே தமிழ்மொழி வளர்ச்சிக்கி சிங்களப்பெண்கள் பங்களிப்பு செய்வதை வரவேற்கிறேன்..நீங்கள் என்ன ராஜா...?தனிக்காட்டுராஜா.  சொல்லவருகிறிர்கள்...அந்தப்பெண்களை. உங்களுக்குப்பிடிததுள்ளதா?😜😜😜. சா...சா...அவர்கள் பேசும் தமிழ் நன்றாகவுள்ளதா?😎😎

உண்மையில் நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என நினைத்தேன்.

கையில் துவக்குடன் வேறு யார் நிக்க முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, ஏராளன் said:

தமிழ் பிள்ளையளையும் சேர்த்தவங்கள் எல்லோ?!

தமிழ் கதைச்சால் தமிழ்பிள்ளை எண்டு  போராட்டம் செய்யப்போறன் 📢

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

உண்மையில் நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என நினைத்தேன்.

கையில் துவக்குடன் வேறு யார் நிக்க முடியும்?

கோசான்... நீங்கள் நினைத்தது சரி. முனியப்பர் சத்தியமாக பகிடிக்குத்தான், சும்மா... நூல் விட்டுப் பார்த்தேன். 😁

சூடு கண்ட மணிவண்ணன், திரும்பவும் அதே வேலையை, செய்திருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்திருந்தது. 🙂

கந்தையா அண்ணைதான்... சீரியசாக எடுத்துப் போட்டார், போலை கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தமிழ் கதைச்சால் தமிழ்பிள்ளை எண்டு  போராட்டம் செய்யப்போறன் 📢

வேலைவாய்ப்புக்காகவும் வறுமை காரணமாகவும் தமிழ் பிள்ளைகள் சிறிய அளவில் சேர்ந்துள்ளனர்.
இப்போது விமானப்படையில் சேர வருமாறு குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதே படையணி  சிங்கள  பகுதிகளிலும் இருக்கா??

பவனி வருகுதா???

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இதே படையணி  சிங்கள  பகுதிகளிலும் இருக்கா??

பவனி வருகுதா???

நல்ல கேள்வி விசுகு. நான்.... இது வரை கேள்விப் படவில்லை.
நோக்கம் எதுவாக இருந்தாலும், ஒரே நாடு... ஒரே சட்டம் எனும் போது...
தமிழ்ப் பகுதியில், இருப்பது,, சந்தேகத்தை வர வழைக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாரானால் என்ன? தமிழோ, சிங்களமோ.. தனிச்சிங்களத்தில் ஆவணங்கள், சுற்றுநிறுபங்கள் எழுதப்படுகின்றன, அனுப்பப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைக்கும் இந்தக்காலத்தில் பாதுகாப்பு படையினர் தமிழில் உரையாடுகின்றார்கள் என்றாலே ஏதோ ஒரு மகிழ்ச்சிதான். 

முன்னாள் பெண் போராளிகள்கூட இந்த மோட்டார் சைக்கிள் படையில் பணியாற்றக்கூடும். யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா?

கண்ணிவெடியகற்றும் ஆபத்தான பணியில் உழைப்புக்கு வேறு வழிகள் இல்லாதபடியால் முன்னாள் போராளிகளும் ஈடுபடுவதாக அறிந்தேன்.

எங்களைப்போல் இவர்களுக்கும் வெளிநாட்டு வாழ்க்கை யோகம் அடிக்கும் பட்சத்தில்.. (சுய தணிக்கை*)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... நீங்கள் நினைத்தது சரி. முனியப்பர் சத்தியமாக பகிடிக்குத்தான், சும்மா... நூல் விட்டுப் பார்த்தேன். 😁

சூடு கண்ட மணிவண்ணன், திரும்பவும் அதே வேலையை, செய்திருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்திருந்தது. 🙂

கந்தையா அண்ணைதான்... சீரியசாக எடுத்துப் போட்டார், போலை கிடக்கு. 🤣

நூல். விடுகிறாரா...இல்லை கயிறு  விடுகிறாரா....அந்த..முனியப்பருக்குத் தான் வெளிச்சம்.  😂😂😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.