Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம்

bangladesh_adli_wahid_splash.jpeg

ஒரு அலசல் – மாயமான்

கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல.

பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம்.

சென்ற வருடத்து வட்டியைக் கொடுப்பதற்கு சீனாவிடம் புதிதாகக் கடன் வாங்கியிருந்தது. ‘இந்தா பிடி’ என்று இந்தியாவிடம் ‘கைமாற்றாக’ வாங்கிய பணத்தைக் கால அவகாசம் முடிவதற்கு முதலே திருப்பிக் கொடுத்திருந்தது. மீண்டும் இந்த வருடமும் இந்தியாவிடம் விண்ணப்பித்திருந்தது என்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பதிலுக்குக் காத்திராமல் வங்காளதேசத்திடம் போயிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம், துறைமுக நகர விடயங்களில் இந்தியா கடுப்பாகியதும் காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையின் இந்த ‘கடன் வாங்குதலுக்கு’ பொருளாதாரக் காரணங்களை விட, இதில் அரசியல் காரணங்கள் அதிகமிருக்குமெனவே எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்க நன்கொடையாகத் தூக்கிக் கொடுத்த மில்லேனியம் சலெஞ் கோர்ப்பொறேஷனின் $480 மில்லியன் பணத்தை ‘வேண்டாம் வைத்துக்கொள்’ என்று தூக்கியெறிந்துவிட்டு ‘இரப்பான்’ வங்களாதேசத்துடன் வெறும் $200 மில்லியனுக்கு இரந்துபோகவேண்டியதற்கு வேறென்ன காரணங்கள் இருக்க முடியும்?

வங்காள தேசத்திடம் கடன் வாங்கியதற்கான அரசியல் காரணங்கள் பல. ஒன்று: சார்க் (SAARC) அமைப்பிற்குள் உள்ள நாடுகளிற்கு இந்தியாவே கடன்களையும், உதவிகளையும் வழங்கும் ‘மூத்த அண்ணன்’ நாடாக இதுவரை இருந்துவந்தது. அரசியல், பாதுகாப்பு, பொருளாதார விடயங்களில் அவர்தான் ஆலோசகராக இருந்தார்.

‘பட்டி வீதி’ப் பெருந்திட்டத்தின் பிரகாரம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செருகிய ஆப்பு பெற்றுக்கொடுத்த பாரிய இடைவெளியில் துறைமுக நகரத்தைக் கொண்டுவந்து சொருகி விட்டு எக்காளமிடுகிறது சீனா. இத்திட்டத்தில் சீனாவின் பின்னால் வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு, மியன்மார் ஆகியன நெளிந்துகொண்டு வரிசையில் நிற்கின்றன. ‘எங்களது கலாச்சார உறவு 2,000 வருடங்கள் பழமையானது’ எனக்கூறி கோதாபயரைப் புளகாங்கிதமடைய வைத்து வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி இலங்கையைக் கைப்பற்றிக்கொண்டாகிவிட்டது .

நோபல் பரிசு சமாதான ராணி ஓங் சான் சூ சீ, சீநாவின் கோப்பையில் விழுந்து மியன்மாரின் துறைமுக மாகாணத்திலிருந்து றொஹிங்யா முஸ்லிம்களைத் துரத்திவிட்டு அதைப் பட்டி வீதிக்குப் பரிசளித்தார். ஆனால் அதைப் பெற்றவுடன் அவரைக் கலைத்துவிட்டு மியன்மாரைத் தன் காலடிக்குள் கொண்டுவந்திருக்கிறது சீனா.

இலங்கையைப் போலவே வங்காள தேசத்துக்கும் கடனை அள்ளிக் கொடுத்து பல உள்ளக நிர்மாண, நிதித்துறைத் திட்டங்கள் மூலம் அந்நாட்டையும் தன் கடன்சுமையால் அடிமையாக்கியது. 2035 இல் வங்த்தின் கடன் $50 பில்லியன் ஆகும் எனப்படுகிறது. ஆனால் அது தனது சுய திறமையால் சீனாவின் பல கபட திட்டங்களை இனம்கண்டு பலவற்றை மீள் ஒப்பந்தம் செய்தும் சிலவற்றிலிருந்து முற்றாக மீண்டும் வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் போலவே சீனா துறைமுக எஞ்சினியரிங் கொம்பனி (China Harbor Engineering Company (CHEC)) பல திட்டங்களைத் தன்வசம் மடக்கிக் கொண்டுள்ளது. குறைந்த செலவில் கட்டி முடிப்பதாகக் கூறப்பட்ட திட்டங்கள் பல பாதியில் இரண்டு மடங்காகியதால் வங்காளதேசம் பலவற்றை ரத்துச் செய்தது. இந்நிறுவனமும் சீமென்ஸ்நிறுவனமும் இணைந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பிடிபட்டதால் சில ஒப்பந்தங்கள் ரத்தாகியது மட்டுமல்லாது அந்நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலிலும் இடப்பட்டுள்ளன. இருப்பினும் இலங்கைக்கு அது பிரச்சினையேயல்ல. இலஞ்சம் கொடுது அகப்பட்ட நிறுவனம் இலங்கையில் ஒப்பந்தங்களைச் செய்கிறது என்றால் புதிதாக இலஞ்சங்கள் கைமாறுகின்றன என்றுதான் அர்த்தம்.

இப்படியான நிலையில் இருக்கும் வங்காள தேசம் எப்படி இலங்கைக்குக் கடன் கொடுக்கும்? இதில் பொருளாதாரத்தைவிட அரசியல் தான் அதிகம் கலந்திருக்கிறது என நிறுவுவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

‘நீ கடன் தராவிட்டால் எனக்குக் கடன் தர இன்னுமொரு சார்க் நாடு இருக்கிறது. நான் தொடர்ந்தும் உன்னில் தங்கியிருக்கத் தேவையில்லை’ என்பது இந்தியாவுக்கு இலங்கை தரும் ஒரு செய்தி.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தப்படி இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளை இந்தியாவுக்கு எதிராகத் திருப்புவதற்காக சீனா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவின் எதிரிகள் ஒரே அச்சில் இணைகிறார்கள். உடல் நிலை சீரற்று இருந்த போதிலும், கொறோணா தொற்று மும்முரமாக இருந்த காலத்தில் வங்காளதேச சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கு மஹிந்த முக்கிய விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்றால் ஸ்கிறிப்ட் சீனாவினால் எழுத்தப்பட்டது என்பதே அர்த்தம்.

ஒரு ‘basket case’ என ஹென்றி கிஸ்ஸிங்கர் நையாண்டி செய்திருந்த நாடு வங்காளதேசம். இப்போது அது ஒரு மத்தியதர வருமான மக்களைக் கொண்ட நாடாக மாறிவருகிறது. ஊழல் மிக்க நாடாக இருந்தாலும், பல சிறந்த சமூக பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இஸ்லாமிய நாடாக இருந்தாலும், பால் சமத்துவம், பெண்களுக்கு வேலை எனப் பல முற்போக்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானைப் போல ஒரு ‘தோல்வி கண்ட நாடாக அது இல்லாமல் ஒரு படித்த நாட்டின் பண்புகலைக் காட்டி வருகிறது. அதன் பொருளாதார வளர்ச்சி 8.1% (2019). அது கடன்கார நாடாக இருந்தாலும் தன் கடனைத் திருப்பியடைக்கும் வல்லமையுள்ள பொருளாதாரத்தை அது கொண்டிருக்கிறது. முதன் முதலாக அது இலங்கைக்குக் கடன் கொடுத்ததன் மூலம் உலகில் அது தனக்கென்றொரு ஸ்தானத்தை எடுத்து ஹென்றி கிஸ்ஸிங்கரின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது.

பட்டி வீதி மூலம் சீனாவுடன் கைகோர்த்த உறவு இப்போது பலம் கொண்ட பேரணியாக உருவாகிறது என இலங்கைக்கான இக் கடன் மூலம் வங்காளதேசம் இந்தியாவுக்கும் ஒரு காத்திரமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. இலங்கை ஒரு கன்னத்தில் அறைய வங்காளதேசம் மற்றக் கன்னத்தில் அறைந்து இந்தியாவுக்குப் பாடம் புகட்டியிருக்கிறது.

இந்த சிறிய $200 மில்லியன் டாலர் கடனை இலங்கை சீனாவிடமிருந்தே alipay மூலம் பெற்றிருக்கலாம். கடனல்ல இங்கு நோக்கம். சார்க்கை உடைக்கும் சீநாவின் திட்டத்தின் வெற்றிகளில் இதுவுமொன்று.

இக் கடன் currency swap என்னும் வகையானது. $200 மில்லியன் டாலர்களாகக் கொடுக்கப்பட்ட இக் கடனை இலங்கை அரசு ரூபாய்களில் திருப்பிக் கொடுக்கலாம். நாணையப் பெறுமதியைப் பொறுத்து, பெரும்பாலும் இலங்கை இதில் இலாபமடைவதற்குச் சாத்தியங்களுண்டு. ஆனால் இங்கு இலாபமல்ல நோக்கம்.

இலங்கைக்கான அடுத்த கடன் இன்னுமொரு ‘இரப்பான்’ சார்க் நாடான பாகிஸ்தானிலிருந்து வரலாம், அடுத்தது பூட்டான், அடுத்தது நேபாளம். கடனிலும், கடலிலும் மூழ்கிவரும் மாலைதீவும் ‘ தனது பலநூற்றாண்டுகள் கலாச்சார உறவைக்கூறி இலங்கையின் கோவிட்டினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க இடம் கொடுத்ததன் மூலம் ‘நானும் ரவுடி தான்’ கணக்கில் சீன அணியோடு நின்று கண்ணடிக்கிறது.

இலங்கையின் வருமானத்தைப் பெற்றுத் தருவன முக்கியமாக மூன்று அம்சங்கள். ஏற்றுமதி வணிகம் (ஆடை வகை, தேயிலை, ரப்பர்), சுற்றுலா (பெரும்பாலும் ஐரோப்பியர்), இலங்கைப் பணியாளரால் வருவாய் (மணி ஓடர் பொருளாதாரம்). உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு, கோவிட் பெருந்தொற்று, பூகோள அரசியல் ஆகிய மூன்றையும் தற்போதய ஆட்சியாளர் கையாண்ட முறை வங்காளதேசத்தைப்போல் நாட்டை முன்னேற்றும் வழியல்ல. அது ராஜபக்சக்களை மட்டும் முன்னேற்றும் வழி. அதில் இலங்கைக்கு மூக்கு போனாலும், இந்தியாவுக்கு சகுனம் பிழைத்துவிட்டது என இலங்கை புல்லரிக்கிறது தெரிகிறது.

ஒட்டு மொத்தத்தில் இந்த வங்காளதேச வாரி வழங்கல் ஒரு பொருளாதார நடவடிக்கை என்பதைவிட ஒரு சீன இயக்கத்தில் அரங்கேறிய இலங்கையின் ‘உனக்கு ஆப்பு வைக்கிறேன் பார்’ நாடகத்தின் முதலாவது காட்சி மட்டும்தான்.

https://www.marumoli.com/வங்காளதேசத்தின்-கடன்-சீ/?fbclid=IwAR0mSeSS0eh47vA6ZD75LoTefQ1rFRR1tsJBEyh0PXigCZcmW27_ch-EdvU

  • கருத்துக்கள உறவுகள்

வங்காள தேசத்தவர் இங்கே  கொஞ்சம்  மரியாதை  தருகிறார்கள்

இனி அதுவும் போச்சு??😡

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மீது தமிழர் பொங்குவதற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா..?

🤥

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வங்காள தேசத்தவர் இங்கே  கொஞ்சம்  மரியாதை  தருகிறார்கள்

இனி அதுவும் போச்சு??😡

ஏன்? அண்ணை  நீங்களும்  அவங்களிடம் கடன்  கேட்கப்போறிர்களோ?😍😍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

ஏன்? அண்ணை  நீங்களும்  அவங்களிடம் கடன்  கேட்கப்போறிர்களோ?😍😍

புலி பசித்தாலும் புல்லை தின்னாது 😀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

சீனா மீது தமிழர் பொங்குவதற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா..?

🤥

 

ஆம் இலங்கை கட(லி)னில்  முழ்கும்போதுதெல்லாம் துக்கிவிரடுகிறது. ...சிலகாலத்துக்கு முன்பு. இந்தியாவிடம்  அடிவாங்கியுள்ளது...இன்னும். திருப்பி கொடுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சீனா மீது தமிழர் பொங்குவதற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா..?

🤥

 

ஒன்றுமே இல்லை.
தாயக அரசியல் தலைவர்கள் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவை நம்பியிருந்தால் பொருளாதார ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ எந்தவித எந்தவித நன்மைகளும் ஏற்ப்பட போவதில்லை. சீனாகாரன் ஆவது பொருளாதார ரீதியில் உதவி செய்யக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சீனா மீது தமிழர் பொங்குவதற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா..?

🤥

 

எழுதியவர் முதலில் இந்தியர் - பிறகே தமிழர். “சீனா மீது இந்தியர் பொங்குவதற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா..?” என்று கேட்பதே பொருத்தமானது.

ஈழத்தமிழரில் பலரும் சீனாமீது பொங்குகிறார்கள் தான். காரணங்கள் இரெண்டு:

1. இறுதிப்போரில் சீன ஆயுதங்கள் கடனில் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால் சிறிலங்கா தோற்றுப் போயிருக்கும் என்பதை ஈழத்தமிழர் அறிவார்கள். ஆகவே சீனாவிடம் கோபம்.

2. “அடித்தாலும், உதைத்தாலும் நீ தான் கணவன்.” என்பது போன்ற அடிமை மனைவியின் மனப்பான்மையுடன் ஈழத்தமிழர் இந்தியாவை கணவனாக பார்க்கிறார்கள். ஆகவே இந்தியாவின் எதிரியான சீனாவை பிடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, கற்பகதரு said:

இந்தியாவின் எதிரியான சீனாவை பிடிக்கவில்லை.

இந்த  அன்னியோன்னியம் என்ன மாதிரி தெரியுது? 😁

Modi-Jinping dinner at Mahabalipuram temple included Malabar Lobster,  Mutton Ularthiyadu and Mamsam Biryani - The Times Headline

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஆம் இலங்கை கட(லி)னில்  முழ்கும்போதுதெல்லாம் துக்கிவிரடுகிறது. ...சிலகாலத்துக்கு முன்பு. இந்தியாவிடம்  அடிவாங்கியுள்ளது...இன்னும். திருப்பி கொடுக்கவில்லை

அதுதான் உண்மையான காரணமா அல்லது  அடிமை மனப்பான்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த  அன்னியோன்னியம் என்ன மாதிரி தெரியுது? 😁

Modi-Jinping dinner at Mahabalipuram temple included Malabar Lobster,  Mutton Ularthiyadu and Mamsam Biryani - The Times Headline

நண்பர்களைவிட எதிரிகளுடன் நெருக்கமாக இரு என்று சொல்லக் கேள்விப்பட்டதில்லையா? நண்பர்கள் பாதகம் செய்யமட்டார்கள். ஆகவே அவர்கள் செய்வதையெல்லாம் நெருக்கமாக அமர்ந்து அவதானிக்க தேவையில்லை. ஆகவே .... இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து அவதானிக்க வேண்டிய தேவை புரிகிறதா? வை. கோ.வும் நெடுமாறனும் மிக மிக தேவையானவர்கள். மோடியுடன் நெருங்கிவரும் பணக்காரனும் தேவைதான் ..😇

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

எப்படி 3 மாதத்தில் திருப்பி கொடுக்க போகிறார்கள்? 

ஸ்ரீ லங்காவின் பொருளாதாரத்திற்கு   கொள்ளி வைத்து விட்டு தான் ஆயுத மௌனிப்பு செய்தார்கள் , இப்ப பற்றி எரியுது 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

ஒன்றுமே இல்லை.
தாயக அரசியல் தலைவர்கள் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவை நம்பியிருந்தால் பொருளாதார ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ எந்தவித எந்தவித நன்மைகளும் ஏற்ப்பட போவதில்லை. சீனாகாரன் ஆவது பொருளாதார ரீதியில் உதவி செய்யக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது.

நாங்க ரெடி என்றாலும் சீனா எங்களுடன் பேச முன் வரணுமே சுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நாங்க ரெடி என்றாலும் சீனா எங்களுடன் பேச முன் வரணுமே சுமா?

கடினம் தான். முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை தானே?

 மாகாண சபை ஊடாகவே அல்லது   நகர சபை ஊடாக ஒரு திடடத்தை பிரேதித்து நிதி உதவி செய்ய கோரலாம். 
தாயாக பகுதியில் சீன மொழி பயில வள உதவி கேக்கலாம்.( Like British Council)
கலாசார பரிமாற்று திட்டம்(cultural exchange program) ஒன்றை பிரேரிக்கலாம்.
 

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, zuma said:

கடினம் தான். முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை தானே?

 மாகாண சபை ஊடாகவே அல்லது   நகர சபை ஊடாக ஒரு திடடத்தை பிரேதித்து நிதி உதவி செய்ய கோரலாம். 
தாயாக பகுதியில் சீன மொழி பயில வள உதவி கேக்கலாம்.( Like British Council)
கலாசார பரிமாற்று திட்டம்(cultural exchange program) ஒன்றை பிரேரிக்கலாம்.
 

கண்ணுக்குள்ளை எண்ணை விட்டுக்கொண்டு திரியிற சிங்களம் ஓம் படுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

கடினம் தான். முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை தானே?

 மாகாண சபை ஊடாகவே அல்லது   நகர சபை ஊடாக ஒரு திடடத்தை பிரேதித்து நிதி உதவி செய்ய கோரலாம். 
தாயாக பகுதியில் சீன மொழி பயில வள உதவி கேக்கலாம்.( Like British Council)
கலாசார பரிமாற்று திட்டம்(cultural exchange program) ஒன்றை பிரேரிக்கலாம்.
 

நல்ல யோசனைதான்👏🏾.

34 minutes ago, குமாரசாமி said:

கண்ணுக்குள்ளை எண்ணை விட்டுக்கொண்டு திரியிற சிங்களம் ஓம் படுமா? 

நாம் கேட்டு, சீனாவும் விரும்பினால், அவர்களுக்கு அதை தடுக்க கஸ்டமாய் இருக்கும் ஆனால், முயற்சிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-05-30-20-22-32-666-org-m

  • கருத்துக்கள உறவுகள்

வங்காளதேசத்திடம் கடன் வாங்கும் இலங்கை

 
Capture.JPG-1-2.jpg
 67 Views

பணப் பரிமாற்றம் மூலம் 200 மில்லியன் டொலர்களை வங்காளதேசத்திடம் இருந்து இலங்கை அரசு கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மேற்கொண்ட வேண்டுகோளைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் வங்கி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தனது நிதிக் கையிருப்பு கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், அவசர உதவி தேவை எனவும் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

உலகின் கடன் தரப்படுத்தும் நிறுவனமான எஸ் அன்ட் பி எனப்படும் நிறுவனம் இலங்கையின் கடன் பெறும் தகுதியை பி யில் இருந்து சி யிற்கு குறைத்ததை தொடர்ந்து அனைத்துலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மீளச் செலுத்த வேண்டிய இந்த பணத்தை சிறீலங்கா அரசு பெற்றுக் கொண்டுள்ளது. வங்காளதேசத்திடம் இருந்து இலங்கை அரசு கடனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தென் கொரியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடந்த மாதமும், அதற்கு முன்னர் சீனாவிடம் இருந்து அதே அளவான தொகையையும் சிறீலங்கா அரசு பெற்றுக் கொண்டிருந்தது.

 

https://www.ilakku.org/?p=50963

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.