Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

இது அமெரிக்காவின் நன்கொடை.

கீழே பிஸ்கெட் வரும் பாகின் படம் உள்ளது.

  • Replies 130
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிவப்பு கலரில் இருக்குமா? பூந்திக்கும், தேன் குழலுக்கும் இடைப்பட்ட பதத்தில்? சாப்பிட்டால் அரிசி மா டேஸ்ட் அடிக்கும்?

இல்லை இது கடலை மாவில் செய்து  மிக்சருடன் சேர்ப்பார்கள் பூந்தி  மாதிரித்தான்  மா மஞ்சள் என்றால் இது சிவப்பு மஞ்சள்,லைட் பச்சை,லைட் றோஸ் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு கலரிலும் ஒரு நீண்ட பொலித்தின் பையில் போட்டு மெச்சி ஒன்றில் வடிவாக அடுக்கி இருக்கும் ரெண்டு ருபாய் குடுத்தாள் ஒரு கடலை போடா செய்வார்களே சுருள்.  சுருளில் எல்லா கலர் பூந்தியிலும் கொஞ்சம் போட்டு தருவார்கள்..சாப்பிடும் பொது மிக்ஸ்சார் எப்படி கடிபடுமோ
அப்படியே இருக்கும் ஆனால் இனிப்பு ....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

விசுக்கோத்து என்டத்தான் ஞாபகம் வருகுது பள்ளிக் கூடத்தில் திரிபோசா மா என்று தருவார்கள்.தேங்காய்ப் பூவும் சீனியும் போட்டு குளைத்து பிடித்து சாப்பிடலாம்.தோசையும் சுடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சுவைப்பிரியன் said:

விசுக்கோத்து என்டத்தான் ஞாபகம் வருகுது பள்ளிக் கூடத்தில் திரிபோசா மா என்று தருவார்கள்.தேங்காய்ப் பூவும் சீனியும் போட்டு குளைத்து பிடித்து சாப்பிடலாம்.தோசையும் சுடலாம்.

எங்கள் காலத்தில் பிஸ்கட்தான். 88-90 சமைத்த உணவு தந்தார்கள். பின்னர் உணவு முத்திரை. பிறகு அதுவும் இல்லை.

ஆனால் திரிபோஷா நல்ல சத்தான மா என்று சொல்லி சங்ககடையில் வாங்கி தேங்காய்பூ சீனி போட்டு குழைத்து தருவதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இது அமெரிக்காவின் நன்கொடை.

இப்படி மொட்டையாக சொல்லப்படாது.
அமெரிக்க மக்களின் நன்கொடை என வரவேண்டும்.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

70+ Best Friend Captions for Instagram - IG Captions

😁

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

இப்படி மொட்டையாக சொல்லப்படாது.
அமெரிக்க மக்களின் நன்கொடை என வரவேண்டும்.😎

😎 இது அமெரிக்க மக்களின் நன்கொடை😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 14:23, நிழலி said:

எனக்கு பிடிச்ச குளுக்கரசா, தும்பு முட்டாய், நைஸ் என்று எல்லாவற்றையும் ஏனையவர்கள் சொல்லி விட்டீர்கள் - ஒன்றைத் தவிர என்று நினைக்கின்றேன். 

அது ஸ்ரார் ரொபி. 

குருணாகலில் இருக்கும் போது வீட்டின் காணியின் முடிவில் இருக்கும் ஒரு சிங்கள மொழி பேசும் பர்கர் இன பெண்மணியின் கடை இருந்தது. மாலு பாண் இல் இருந்து எல்லா வகையான சிற்றுண்டிகள். மற்றும் டொபிகள் விற்பார். அவர் கடையில் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாங்கி சாப்பிட்டு வள்ர்ந்த உடம்பு இது.

காணொளி சிங்களத்தில் உள்ளது. அதன் இறுதியில் ஸ்ரார் டொபியை காட்டுவார்கள்.

GLUCORASA (70G X 24 PKTS) | Lassana.com Online ShopJUJUBEES (100g) - Goldline Breadz

இலங்கையில் விற்கும்... "குளுக்கரசா" மிகவும் சுவையானது.
அதனை கடித்து தின்றாலும், உமிந்து மெல்லமாக சுவைத்துத் தின்றாலும்...
ஒவ்வொரு "எஃபெக்ட்"  கொடுக்கும். வாசனையும் அந்த மாதிரி இருக்கும். 😋

இங்கும் அதே மாதிரி... இனிப்புகள் விற்றாலும், 
இலங்கையில்  விற்கும், சுவைக்கு... கிட்ட வராது. :)

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் பவ் பிஸ்கட். இப்போ பழைய சுவை இல்லை.

டிப்பி டிப் - இதுவும் 80 களின் கடைசியில் சந்தைக்கு வந்தது. இப்போ அந்த சுவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

GLUCORASA (70G X 24 PKTS) | Lassana.com Online ShopJUJUBEES (100g) - Goldline Breadz

இலங்கையில் விற்கும்... "குளுக்கரசா" மிகவும் சுவையானது.
அதனை கடித்து தின்றாலும், உமிந்து மெல்லமாக சுவைத்துத் தின்றாலும்...
ஒவ்வொரு "எஃபெக்ட்"  கொடுக்கும். வாசனையும் அந்த மாதிரி இருக்கும். 😋

இங்கும் அதே மாதிரி... இனிப்புகள் விற்றாலும், 
இலங்கையில்  விற்கும், சுவைக்கு... கிட்ட வராது. :)

படங்களும் போட்டு ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள் கொரோனா பிரச்சனை முடிந்து இலங்கை போகும் போது கட்டாயம் சாப்பிட வேண்டும் 😋

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒன்று வர இல்லைப் போல் இருக்கிறது அல்லது பெயர் மாறி வந்துட்டோ தெரியாது..மோல்ரீஸ் என்று ஒரு பிறவுன் மற்றும் மஞ்சள் கலந்த பேப்பரில் வாற சொக்கிளேட் தான்..அதை தேட இந்த குகிள் வேறை ஏதோ படம் எல்லாம் தருகிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

கச்சான் அல்வா  தான் நாங்கள் விரும்பி வாங்குவது.

அத்துடன்  தள்ளுவண்டியில் பகோடா, மிக்ஸர், மரவள்ளிப் பொரியல் விற்பவர்கள் ஒருவகையான   மாவில் செய்த இனிப்பான சிறு மணித் துளிகள் போன்ற ஒரு வகை மிக்ஸரை விற்பார்கள். பல விதமான கலரில் இருக்கும். சுவையாகவும் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வாத்தியார் said:

அத்துடன்  தள்ளுவண்டியில் பகோடா, மிக்ஸர், மரவள்ளிப் பொரியல் விற்பவர்கள் ஒருவகையான   மாவில் செய்த இனிப்பான சிறு மணித் துளிகள் போன்ற ஒரு வகை மிக்ஸரை விற்பார்கள். பல விதமான கலரில் இருக்கும். சுவையாகவும் இருக்கும்

9 hours ago, அன்புத்தம்பி said:

இல்லை இது கடலை மாவில் செய்து  மிக்சருடன் சேர்ப்பார்கள் பூந்தி  மாதிரித்தான்  மா மஞ்சள் என்றால் இது சிவப்பு மஞ்சள்,லைட் பச்சை,லைட் றோஸ் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு கலரிலும் ஒரு நீண்ட பொலித்தின் பையில் போட்டு மெச்சி ஒன்றில் வடிவாக அடுக்கி இருக்கும் ரெண்டு ருபாய் குடுத்தாள் ஒரு கடலை போடா செய்வார்களே சுருள்.  சுருளில் எல்லா கலர் பூந்தியிலும் கொஞ்சம் போட்டு தருவார்கள்..சாப்பிடும் பொது மிக்ஸ்சார் எப்படி கடிபடுமோ
அப்படியே இருக்கும் ஆனால் இனிப்பு ....

அன்புத்தம்பி,

நீங்கள் சொன்ன பண்டத்தை வாத்தியார் அண்ணாவும் சொல்றார். எனக்கு நியாபகம் வருதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

படங்களும் போட்டு ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள் கொரோனா பிரச்சனை முடிந்து இலங்கை போகும் போது கட்டாயம் சாப்பிட வேண்டும் 😋

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

அவர் வைத்த செல்லமான பெயர் போலும் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளும் சாடையான இனிப்பு இனிக்கும். ஆதலால் எனக்கு பிடித்த இனிப்பு பானம். கருப்பணியும் இனிக்கும் தான். ஆனால் கள்ளு உற்சாக பானம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

சரியாத்தான் சொல்லி இருக்கிறார். நானும் இதை கடித்து உண்ணும் போது நாக்கை கடிப்பதை போல இருப்பதாக யோசிப்பதுண்டு.

Edited by goshan_che
தின்னும் ➡️ உண்ணும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவர் வைத்த செல்லமான பெயர் போலும் 😀

அதோட மெதுவான தன்மை நாக்கு போன்ற உணர்வையே தரும். 

1 minute ago, goshan_che said:

சரியாத்தான் சொல்லி இருக்கிறார். நானும் இதை கடித்து தின்னும் போது நாக்கை கடிப்பதை போல இருப்பதாக யோசிப்பதுண்டு.

ஓம் அண்ணை உண்மைதான் ... அந்த உணர்வு நாக்கு போலத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

எங்கள் காலத்தில் பிஸ்கட்தான். 88-90 சமைத்த உணவு தந்தார்கள். பின்னர் உணவு முத்திரை. பிறகு அதுவும் இல்லை.

ஆனால் திரிபோஷா நல்ல சத்தான மா என்று சொல்லி சங்ககடையில் வாங்கி தேங்காய்பூ சீனி போட்டு குழைத்து தருவதுண்டு.

88/87 களில் பிரேமதாசாவின் காலத்தில் பணிசும், வெனிலா சுவை பாலும் தந்தார்கள்.  
படு பணிஸ் வா அந்த மாதிரி இருக்கும்.
 
22 hours ago, suvy said:

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

இது எந்த  நெல்லி? இரண்டு வகை உண்டல்லவா? 

1. காட்டு நெல்லி பாடசலைக்கு அருகில் விற்பார்கள் மிளகாய் உப்புடன் சாப்பிட்டல் அந்த மாதிரி
2. கச‌ப்பு தன்மையுள்ளது, சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும்.    
 
பாடசாலை மெலிபனுக்கு முன்னால் என்பதால் மெலிபன் ஐஸ்தான் குடிப்பது அந்த மாதிரி 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

88/87 களில் பிரேமதாசாவின் காலத்தில் பணிசும், வெனிலா சுவை பாலும் தந்தார்கள்.  
படு பணிஸ் வா அந்த மாதிரி இருக்கும்.
 
இது எந்த  நெல்லி? இரண்டு வகை உண்டல்லவா? 

1. காட்டு நெல்லி பாடசலைக்கு அருகில் விற்பார்கள் மிளகாய் உப்புடன் சாப்பிட்டல் அந்த மாதிரி
2. கச‌ப்பு தன்மையுள்ளது, சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும்.    
 
பாடசாலை மெலிபனுக்கு முன்னால் என்பதால் மெலிபன் ஐஸ்தான் குடிப்பது அந்த மாதிரி 

யாழ்பாணத்தில் பாலும் கொண்டை கடலை,  கெளப்பி, கடலை வடை என்று தந்தார்கள். வாரம் ஒருநாள் மாலுபாண். பள்ளிக்கு பள்ளி மாறுபாடும் உண்டு.

கொழும்பில் பாலும் பண்ணும் என்றே கேள்விபட்டேன்.

உப்பில் ஊற வைப்பது, கசப்பான நெல்லி. பெரிய உருண்டையாக இருக்கும். தண்ணி குடித்தால் இனிக்கும்.

மற்றையதை ஊரில் அரை நெல்லி என அழைப்பார்கள்.

நெல்லி கிரஸ் - அரை நெல்லியின் சுவையில் இருக்கும் ஆனால் சீனிதான் அதிகம். Flavoring மட்டும் நெல்லி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நீங்கள் முதலாவதாக கூறியது அருநெல்லி என்று சொல்லுவோம்.மொழி மொழியாக இருக்கும்.....!

இரண்டாவது கசப்புத் தன்மையுள்ள நெல்லியைத்தான் நான் சொன்னது....சப்பிப்போட்டு தண்ணி குடித்தால் இனிக்கும்......!   👌

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில், வீதி ஓரத்தில், மஞ்சள் போட்ட மரவள்ளி பொரித்து, உப்பும், மிளகாய்த்தூளும் போட்டு தருவார்கள்.

அவித்த வெருளு அச்சாறு, அம்பிரலம்காய் + மாங்காய் + அன்னாசி அச்சாறு சொல்லி வேலை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

கொழும்பில், வீதி ஓரத்தில், மஞ்சள் போட்ட மரவள்ளி பொரித்து, உப்பும், மிளகாய்த்தூளும் போட்டு தருவார்கள்.

அவித்த வெருளு அச்சாறு, அம்பிரலம்காய் + மாங்காய் + அன்னாசி அச்சாறு சொல்லி வேலை இல்லை. 

சிங்கள பகுதி தின்பண்டங்களுக்கு என்று ஒரு தனித்திரியே திறக்கலாம்.

உப்பு மிளாகாய்தூள் போட்ட அன்னாசி. இஸ்ஸு (இறால்) வடே, மாசி வடே.

அப்புறம் ஹம்பாந்தோட்ட பக்கம் கித்துள் பாணியும் தயிரும். 

நினைத்தாலே இனிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் பாலும் கொண்டை கடலை,  கெளப்பி, கடலை வடை என்று தந்தார்கள். வாரம் ஒருநாள் மாலுபாண். பள்ளிக்கு பள்ளி மாறுபாடும் உண்டு.

கொழும்பில் பாலும் பண்ணும் என்றே கேள்விபட்டேன்.

உப்பில் ஊற வைப்பது, கசப்பான நெல்லி. பெரிய உருண்டையாக இருக்கும். தண்ணி குடித்தால் இனிக்கும்.

மற்றையதை ஊரில் அரை நெல்லி என அழைப்பார்கள்.

நெல்லி கிரஸ் - அரை நெல்லியின் சுவையில் இருக்கும் ஆனால் சீனிதான் அதிகம். Flavoring மட்டும் நெல்லி.

முழு நெல்லி

இந்த நெல்லிக்காய்தான் நீங்கள் சொன்ன மாதிரி ,சாப்பிட்டு விட்டு தண்ணி குடுத்தா இனிக்கும் ,இதை முழு நெல்லி என்பார்கள்,,மாற்றத்தை அரை நெல்லி என்பது போன்ற ஞாபகம்

20200492.jpg

அரை நெல்லி

Arai-nelli.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Fruit & Flowering - 10 Sherbet Tree - Dialium schlechteri Seeds -  Indigenous Edible Fruit was sold for R19.50 on 4 Feb at 07:33 by Seeds and  All in Port Elizabeth (ID:216937699) 

Luchazes Check List · iNaturalist

Dialiums (Genus Dialium) · iNaturalist.ca

பட்டுப் புளி என்று... குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே விற்கப்படும்,
இனிப்பும், புளிப்பும்... சேர்ந்த சுவையுடைய  இந்தப்  பழத்தை சாப்பிட்டு உள்ளீர்களா.

இது காய்க்கும் மரத்தை... ஊரில் உள்ளவரை நான் காணவில்லை.
சிங்களப் பகுதியில், உள்ள மரம் என்று நினைக்கின்றேன்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.