Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இவங்கள் சொதப்பப் போகிறாங்கள் என்று ஒமிக்கிரான் வரும்போதே தெரிந்துவிட்டதால் பூஸ்டர் போட அனுமதி கிடைத்த மறுநாளே பூஸ்டரும் போட்டு இரண்டு பக்கெட் LFT ரெஸ்ற் கிற்றும் ஓடர்  பண்ணி எடுத்திருந்தேன்.! டிசம்பரில் பார்ட்டிகளுக்குப் போக முன்னரும் பின்னரும் ரெஸ்ற் பண்ண உதவியாக இருந்தது. 

தடிமன், காய்ச்சல் குணங்குறி இருந்தால் உடனே ரெஸ்ற் பண்ணுவது நல்லது.

நானும் ஊகித்து கொஞ்சம் முன்னமே எடுத்து வைத்துள்ளேன். 

இப்படி எல்லாரும் பொரிசை “நம்பி” ஓடர் பண்ணியதால்தான் ஸ்டொக் அவுட்டோ தெரியாது🤣.

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

தடுப்பூசி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் உதவுமே தவிர, தொற்றைப் பெரிதாகத் தடுக்காது. ரெஸ்ரோரன்ற் போகமுதல் ரெஸ்ற் எடுத்தால், தொற்று இருப்பதாகக் காட்டினால் போகாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பரப்புவதைக் குறைக்கலாம். 

 எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை   உள்ள பெரிய வருத்தங்களுக்கெல்லாம் ஒரு ஊசியோட விசயம் முடிஞ்சுது..... மலேரியா அம்மை வருத்தங்கள் போலியோ எண்டு சொல்லிக்கொண்டே போகலாம் எல்லோ?
ஆனால்.....
கொரோனாவுக்கு ஊசி குத்தீனமாம்.....குத்தீனமாம்......குத்தீனமாம் குத்திக்கொண்டே இருப்பினமாம்....அதுக்குள்ளை இடைக்கிடை பேர் மாற்றம் வேறை.....இப்ப இமிக்கிரான் இனி அடுத்தது அமுக்குறான் ஆக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவது  தடுப்பூசியையும் கட்டாயம் போடுங்கள் என்பது போல் பல சட்டங்களை உருவாக்கி வருகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

 எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை   உள்ள பெரிய வருத்தங்களுக்கெல்லாம் ஒரு ஊசியோட விசயம் முடிஞ்சுது..... மலேரியா அம்மை வருத்தங்கள் போலியோ எண்டு சொல்லிக்கொண்டே போகலாம் எல்லோ?
ஆனால்.....
கொரோனாவுக்கு ஊசி குத்தீனமாம்.....குத்தீனமாம்......குத்தீனமாம் குத்திக்கொண்டே இருப்பினமாம்....அதுக்குள்ளை இடைக்கிடை பேர் மாற்றம் வேறை.....இப்ப இமிக்கிரான் இனி அடுத்தது அமுக்குறான் ஆக்கும்?

பொதுவாக வைரஸுக்களின் மாறல் வகைகளில் சில வகை வைரஸ்கள்.. அதிக மாறல்களை உருவாக்கும் நிலையில்.. சில குறைந்த நிகழ்தகவுக்குரிய மாறல்களை உருவாக்குகின்றன. 

உதாரணத்துக்கு தடிமன் வைரஸ். புளூ வைரஸ்.. கொரோனா வைரஸ். இவை அதிக மாறல்களை உருவாக்கிக் கொள்வதுடன்.. அதன் மாறல்கள் அவற்றின் தொற்றும் இயல்பை அதிகரிக்க உதவவும் செய்கின்றன.

ஆனால்.. அம்மைக்குரிய வைரஸ்கள் அதிக மாறலை வெளிப்படுத்த முதலே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதற்கு எமது உடல் ஒரு தொற்றின் பின் உருவாக்கும் இயற்கையான நீண்ட கால வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த வைரஸ்கள் இலக்காகி அழிவதும்.. வக்சீன்கள் மூலம் இவை உடலில் பெருக முதல் கட்டுப்படுத்தப்படுவதும் ஒரு காரணம். குறிப்பாக அம்மை.. கொப்பளிப்பான்.. சின்னமுத்து.. கூகைக்கட்டு.. இவை ஒரு தரம் வந்தால்.. மீண்டும் வராத அளவுக்கு தான்.. அவற்றின் மாறல்களின் நிகழ்தகவு அமைந்து விடுகிறது. உடலும் நன்கு தன்னை தயார்ப்படுத்தி வைத்துக் கொள்கிறது. 

மலேரியா வைரஸ் நோய் அல்ல. அது புரட்டசோவா நுண்ணுயிரிகளால்.. நுளம்புக் காவியின் துணையுடன் உருவாகும் நோய். அது வைரஸ் நோயில் இருந்தும் மாறுப்பட்ட வகை ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

24 மாத அடைவு காலத்தின் பின்.. ஒருவாறு முதல் வெளிநாட்டுப் பயணம் முடிச்சு திரும்பியாச்சு.

விமானத்தில் ஏற வக்சீன் சான்றிதழ் (பல விமான சேவைகள்.. பி சி ஆர் அல்லது அன்ரிஜென் சோதனை சான்றிதழும் கூடக் கேட்கினம்... அதோடு Locator Form நிரப்பிய பின் உறுதிப்படுத்தி வரும்.. QR code உடன் கூடிய சான்றிதழும் அவசியம். சோதனைகளில்.. வீட்டில் செய்வதை காட்ட முடியாது. தேசிய சுகாதார சேவையில் இலவச வசதியையும் பாவிக்க முடியாது. தனியாரிடம் தான் செய்யனும்.).. இறங்கின பின் அன்ரிஜென் சோதனை... அதனை முடிச்சு தான் வெளியில விடுவினம்.

பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய.. Fit to Fly என்று சொல்லி மீண்டும் சோதனை. அது ஒரு அன்ரிஜென். அதற்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்ததும்.. பி சி ஆர்.

இதற்கிடையில் Locator Form போற நாட்டிலும் நிரப்பனும்.. வாற நாட்டிலும் நிரப்பனும். வக்சீன் சான்றிதழ் இல்லாவிட்டால்.. இதனை நிரப்ப முடியாது. பறக்கவும் முடியாது. 

என்ன நவீன QR code வாசிக்கும் வசதியோடு அலைபேசியும்.. றோமிங்கும் இல்லையோ.. கதை கொஞ்சம் கஸ்டம் தான். 

ஆனால்.. விமானத்துக்குள் அரைவாசி.. மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குதுங்க. பெண்கள் மூஞ்சிக்குப் போட்ட மேக்கப் கலைஞ்சிடும்.. என்று மாஸ்கை கழுத்தில் மாட்டுகிறார்கள். விமானப் பறப்பு முழுக்க மாஸ்க் அணிவது விதிப்பாக இருந்தும்.

கொவிட் கால விமானப் பயணமும்.. பயணத்தின் முன் பின்னான அனுபவங்களும் புதிது. வக்சீன் சான்றிதழ் மிகவும் பயன் கொடுத்தது.

விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

இலங்கைக்கா போயிட்டு வந்தீர்களை ...உண்மையிலேயே 3 ஊசியும் போட்டு இருந்தால் தானா விமானத்தில் ஏத்துகின்றனர் ...உண்மையான தகவல் வேண்டும் ...நன்றி 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இலங்கைக்கா போயிட்டு வந்தீர்களை ...உண்மையிலேயே 3 ஊசியும் போட்டு இருந்தால் தானா விமானத்தில் ஏத்துகின்றனர் ...உண்மையான தகவல் வேண்டும் ...நன்றி 
 
இலங்கை போகவில்லை.

முழு வக்சினேசன் (fully vaccinated)  .. என்பது இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதும்.. அதற்கான சான்றிதழும் தான். 3வது வக்சீன் பற்றி பல விமான நிறுவனங்களோ.. விதிகளோ பேசவில்லை. QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம்.

Fit to Fly தொடர்பான பி சி ஆர் பரிசோதனை முடிவுச் சான்றிதழை பல தூர தேச விமான சேவைகள் எதிர்பார்க்கின்றன. பி சி ஆர் முடிவுச் சோதனை நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருக்க வேண்டும். QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம். 

Locator form நீங்கள் போக இருக்கும் நாட்டினால் வழங்கப்படும் இந்தப் பத்திரத்தை நிரப்பி இருப்பதை பல விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதனை பூரணப்படுத்திய பின் வழங்கப்படும்.. QR code உடன் கூடிய பத்திரம் அவசியம். 

இதற்கு மேலதிகமாக.. பாஸ்போட்.. வெளிநாட்டவருக்கான உள்நுழைவு விசா இவையும் அவசியம்.

அதற்கும் மேல்.. விமான ரிக்கெட் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இதற்கு மேலதிகமாக.. பாஸ்போட்.. வெளிநாட்டவருக்கான உள்நுழைவு விசா இவையும் அவசியம்.

அதற்கும் மேல்.. விமான ரிக்கெட் அவசியம். 

பஸ்சில், ரயிலில்… “வித்தவுட்டில்” போற மாதிரி…. 😁
விமானத்திலும், “வித்தவுட்டில்” போகலாம் என நினைத்திருந்தோம். 😂
உங்கள் ஆலோசனையால்… தப்பித்தோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இலங்கை போகவில்லை.

முழு வக்சினேசன் (fully vaccinated)  .. என்பது இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதும்.. அதற்கான சான்றிதழும் தான். 3வது வக்சீன் பற்றி பல விமான நிறுவனங்களோ.. விதிகளோ பேசவில்லை. QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம்.

Fit to Fly தொடர்பான பி சி ஆர் பரிசோதனை முடிவுச் சான்றிதழை பல தூர தேச விமான சேவைகள் எதிர்பார்க்கின்றன. பி சி ஆர் முடிவுச் சோதனை நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருக்க வேண்டும். QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம். 

Locator form நீங்கள் போக இருக்கும் நாட்டினால் வழங்கப்படும் இந்தப் பத்திரத்தை நிரப்பி இருப்பதை பல விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதனை பூரணப்படுத்திய பின் வழங்கப்படும்.. QR code உடன் கூடிய பத்திரம் அவசியம். 

இதற்கு மேலதிகமாக.. பாஸ்போட்.. வெளிநாட்டவருக்கான உள்நுழைவு விசா இவையும் அவசியம்.

அதற்கும் மேல்.. விமான ரிக்கெட் அவசியம். 

நன்றி நெடுகஸ்.

சில விதிகள் நாளை முதல் தளர்த்தபடுவதாக தெரிகிறது. 

https://www.dailymail.co.uk/news/article-10381483/Covid-travel-change-TOMORROW-sees-surge-holiday-bookings.html

அத்தோடு - விரரைவில் 2 டோஸ் போட்டவர்கள் fully vaccinated status ஐ இழக்க, 3 வக்சீன் போட்டவர்களுக்கே இந்த status வழங்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி போட்ட யாருக்கும் Myocarditis பாதிப்பு வந்தது பற்றி யாரும் அறிந்திருப்பின் அதுபற்றிய விளக்கம் தாருங்கள். 

Myocarditis எதிர்காலத்தில் என்னமாதிரியான தாக்கத்தை கொடுக்கும் ? ஜஸ்ரின்,நில்மினி, நெடுக்கு நீங்கள் இதுபற்றிய உண்மையை எதிர்கால பாதிப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளான வரை தொடர்ந்து எப்படி கவனிக்க வேண்டும் என எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, shanthy said:

Myo-carditis- இதயத்தசை அழற்சி.. இதனோடு Peri-carditis- இதயச் சுற்றயல் சவ்வு அழற்சி.. மற்றும் இழையப்பாய்பொருள் நிரம்பல்.

பொதுவாக சில மருந்துகள் அல்லது சொந்த நோய் எதிர்ப்பு சக்திக்குரிய காரணிகளின் ( autoimmune) தாக்க நிலை சார்ந்து இதயத்தில் இப்படியான அழற்சிகள் (inflammation) ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில்..

இந்த நிலைகளின் தீவிரத் தன்மை மரணம் வரை இட்டுச் செல்லும்.

இந்த நிலைகளின் போது அசாதாரண நெஞ்சு நோ..  இதயத்துடிப்பு வேகம் மற்றும் நடத்தை மாற்றம் .. களைப்பு.. சுவாசப் பிரச்சனை (சுவாசிக்கும் போது நோ உட்பட்டது).. மயக்கம்...அசாதாரண வியர்த்தல்.. உங்கள் இதயத் துடிப்பை நீங்களே உணரக்கூடிய நிலை.. போன்றவை உட்பட்ட அறிகுறிகள் தென்படும்.

இந்த நிலை கொவிட் வைரஸ் தாக்கத்தின் பின்னரும்..  எம் ஆர் என் ஏ வக்சீன் (பைசர்.. மொடர்னா).. முதலாம்.. அல்லது இரண்டாம் டோஸ் எடுத்தவர்களிலும் கூட அவதானிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இளவயதினரில்.. 12 தொடக்கம் 24 வயது வரை. இந்த நிலை வக்சீன் எடுத்து சில நாட்களில் இருந்து இரண்டு வார காலத்தில் ஏற்படலாம். 

இந்த நிலை சில வகை இதயப் பாதிப்பு வந்தவர்கள் அல்லது உள்ளவர்களுக்கு (உதாரணத்துக்கு rheumatic fever வந்தவர்கள் உள்ளிட்டோர்) வருவது அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளதால்.. அப்படியானவர்கள் சரியான நிபுணத்துவ ஆலோசனையின் பின் தான் எம் ஆர் என் ஏ வக்சீன் எடுக்க வேண்டும்.

இந்த நிலை சிலரில் தோன்றி இயல்பாக மாறிவிடும். சிலருக்கு இந்த அசாதாரண அறிகுறிகள் வக்சீன் எடுத்து அல்லது கொவிட் தொற்றை அடுத்து தொடர்ந்து ஏற்படின் நீடிக்கின்.. இதய சிகிச்சை வைத்திய நிபுணத்துவ உதவியை உடனடியாக நாடுவது அவசியமாகும். 

மேலதிக தகவல்களுக்கு..

https://mvec.mcri.edu.au/references/myocarditis-and-pericarditis-following-covid-19-mrna-vaccines/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

தகவலுக்கு நன்றி நெடுக்கு. மேலும் சில கேள்விகள் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

 இரண்டாம் ஊசி எடுத்த 25வயது இளைஞனுக்கு இப்பாதிப்பு வந்திருக்கிறது காச்சல் தடிமல் எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று தற்போது சுகமாகியுள்ளது. எதிர்காலத்தில் இதன் பாதிப்பு தொடருமா ? தொடர்ந்து கவனிப்பில் வைத்திருக்க வேண்டுமா ? நிரந்தரமாக மாற்றக்கூடியதா ? அல்லதும் வரை வாழ்நாள் பாதிப்பு இருக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, shanthy said:

நான் ஊசி ஏத்தமுன்னம் இது குறித்து நிறைய தேடி ஆராய்ந்தேன்.. கிடைத்த முடிவுஎன்னவெனில் தடுப்பூசியால் ஏற்படும் இதய அழற்சி என்பது அதுவும் இளைஞர்களை பொறுத்தவரை தற்காலிகமானதுஎன்றுதான் இருந்தது அனைத்து வைத்திய குறிப்புகளிலும்.. அநேகமானவர்களுக்கு வைத்தியசாலை செல்லாமலே குணமாகி இருக்கிறது… எதற்கும் உங்கள் இடத்தில் இருக்கும் பேமசான ஒரு இருதயவைத்திய நிபுணர் இடம் (கார்டியொலொஜிஸ்ட்) அப்பொய்மெண்ட் எடுத்து இதுவரை பெற்ற மருத்துவ குறிப்புகளையும் சி.ரி ஸ்கான், டொப்லர் எக்கோ, எக்ஸ்ரே போன்றவற்றையும் கொண்டு சென்று காட்டி வடிவா உங்கட சந்தேகம்கள் எல்லாவற்றையும் கேட்டு தெளிவு படுத்துங்கள்.. அதுதான் எதிர்கால பயம் இன்றி நிம்மதியா தூங்கபோக அந்த இளைஞனுக்கு உதவும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

இரண்டாம் ஊசி எடுத்த 25வயது இளைஞனுக்கு இப்பாதிப்பு வந்திருக்கிறது காச்சல் தடிமல் எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று தற்போது சுகமாகியுள்ளது. எதிர்காலத்தில் இதன் பாதிப்பு தொடருமா ? தொடர்ந்து கவனிப்பில் வைத்திருக்க வேண்டுமா ? நிரந்தரமாக மாற்றக்கூடியதா ? அல்லதும் வரை வாழ்நாள் பாதிப்பு இருக்குமா? 

எனக்கும் இரண்டாம் வக்சீன் எடுத்த பின் இந்தப் பாதிப்பின் மத்திம தாக்கம் இருந்தது. காரணம் எடுத்தது எல்லாமே எம் ஆர் என் ஏ வக்சீன் தான். ஆனாலும் அது இயல்பாகவே குணமாகிவிட்டது. பொதுவாக இது இயல்பாக குணமாகும். ஆனாலும் அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டால்.. இதய வைத்திய நிபுணரின் ஆலோசனையும் மருத்துவக் கண்காணிப்பும் பெறுவது நல்லது. ஏனெனில்.. இதன் தீவிர தன்மை உயிராபத்தை விளைவிக்கலாம்... என்பதால்.

மேலே குறிப்பிட்டது போல.. சிலவகை இதயப் பாதிப்புக்கள் உள்ளோர் எம் ஆர் என் ஏ வக்சீன் எடுக்க முதல் ஆலோசனைகள் பெறுவதும்.. வக்சீன் போடும் இடத்தில் தமது நிலையை விளக்கிக் கொள்வதும்.. வக்சீனில் இருந்து தவிர்ப்புப் பெறுவதும் சாத்தியமும்.. நல்லதும் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎01‎-‎2022 at 20:08, nedukkalapoovan said:

இலங்கை போகவில்லை.

முழு வக்சினேசன் (fully vaccinated)  .. என்பது இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதும்.. அதற்கான சான்றிதழும் தான். 3வது வக்சீன் பற்றி பல விமான நிறுவனங்களோ.. விதிகளோ பேசவில்லை. QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம்.

Fit to Fly தொடர்பான பி சி ஆர் பரிசோதனை முடிவுச் சான்றிதழை பல தூர தேச விமான சேவைகள் எதிர்பார்க்கின்றன. பி சி ஆர் முடிவுச் சோதனை நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருக்க வேண்டும். QR code உடன் கூடிய சான்றிதழ் அவசியம். 

Locator form நீங்கள் போக இருக்கும் நாட்டினால் வழங்கப்படும் இந்தப் பத்திரத்தை நிரப்பி இருப்பதை பல விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதனை பூரணப்படுத்திய பின் வழங்கப்படும்.. QR code உடன் கூடிய பத்திரம் அவசியம். 

இதற்கு மேலதிகமாக.. பாஸ்போட்.. வெளிநாட்டவருக்கான உள்நுழைவு விசா இவையும் அவசியம்.

அதற்கும் மேல்.. விமான ரிக்கெட் அவசியம். 

இது காசு மக்களிடம் இருந்து பறிப்பதற்காகவன்றி வேறு எதற்காகவும் இல்லை ...ஒவ்வொரு நாளும் பேருந்திலும் ,புகையிரதத்திலும் பயணிக்கின்றனர் ...அதில் அரைவாசி பேர் மாஸ்க் போடுவதில்லை ...இதையெல்லாம் அரசு கணக்கெடுப்பதில்லை ...ஊசி போட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொத்தாது என்று ஆதாரம் இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

முதலாவது பக்கத்திலேயே இந்தக் கேள்விக்கு விடை சொல்லியாச்சு.😀

On 17/1/2021 at 19:05, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

மூன்றாம் ஊசி போட்டு… ஒரு கிழமையின் பின் வருத்தமா?
யாயினி…. வீட்டு வைத்தியம் பார்க்காமல், உடனடியாக வைத்தியரிடம் காட்டுங்கள்.
விரைவில் நலம் பெற வேண்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

ஊசிகள் எடுத்தபடியால் 2-3 நாட்களில் சுகமடைந்துவிடுவீர்கள்.

மனமில்லாவிட்டாலும் ஏதாவது சாப்பிடுங்கள்.

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் சிலருக்கு 3 ஊசிக்கு பின்னும் வருத்தம் வந்து 5 நாட்களுக்குள் குணமாகி விட்டது ....... நல்லகாலம் இதுவரை நான் தப்பி விட்டேன் ....... சிறு வயதில் அம்மா சணல் அடி  தந்தபோதிலும் மனிசி வஞ்சகமில்லாமல் 3 வயதுவரை பால் தந்திருக்கு......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

நோர்மலா ஊசிபோட்டு அடுத்து வரும் மூண்டு நாழு நாளைக்குத்தான் வருத்தம் இருக்கும்.. அது ஏன் உங்களுக்கு ஒருகிழமையின் பின் வந்திருக்கு? நெஞ்சு நோவுடன் இணைந்து வந்திருந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனும் வைத்திய உதவிபெறுங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2022 at 12:45, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளுதலே.. நல்லது. நாளுக்கொரு விற்றமின் டி மாத்திரையும் எடுங்கள். இது மீனெண்ணை குளுசை வழியாக எடுப்பது இலகு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, nedukkalapoovan said:

இது மீனெண்ணை குளுசை வழியாக எடுப்பது இலகு. 

மீனெண்ணை குளிசையின் பக்க விளைவுகள் என்ன? மூட்டு வலிகளுக்கு கூடாது என ஒரு சிலர் சொல்கிறார்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மீனெண்ணை குளிசையின் பக்க விளைவுகள் என்ன? மூட்டு வலிகளுக்கு கூடாது என ஒரு சிலர் சொல்கிறார்களே?

இதை எல்லாம் யார் கண்டுபிடிக்கினமோ நமக்குத் தெரியவில்லை.

பொதுவாக மூட்டுவலிக்கு முக்கிய காரணம்.. தேய்வடையும் எலும்புகளும்... எலும்புகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க காணப்படும் கசியிழைய இழப்பும் தான். விற்றமின் டி எலும்புகள் பலவீனமடைவதை தடுக்கும்.. குறிப்பாக கல்சியச் சேமிப்பு மூலம்.

அதனால் தான்.. சூரிய வெளிச்சம் குறைந்த காலங்களில் எல்லோரும் விற்றமின் டி எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. கோட் லிவர் ஒயில் எனப்படும் மீன் எண்ணெய் குளுசையில் தேவையான விற்றமின் டி உண்டு.

விற்றமின் டி எலும்புக்கு மட்டுமல்ல.. பற்களின் உறுதிக்கும் அவசியம். தைரொயிட் சுரப்பி ஒழுங்கா வேலை செய்யிறதுக்கு அவசியம்.. எல்லாவற்றிற்கும் மேலாக.. நோய் எதிர்ப்பு சக்தியை காக்க அவசியம். 

விற்றமின் டி பற்றாக்குறை பல்வேறு நோய்களை உருவாக்க ஊக்கமாக இருக்கும். 

Vitamin D is an essential vitamin for health.

Deficiencies of vitamin D can lead to impaired absorption of the two important dietary minerals calcium and phosphorus. This can lead to rickets in children, bone tenderness or pain, muscle weakness, and thinner bones with ageing, which increases the risk of fractures. Vitamin D is also essential to keep your immune system healthy. In addition it may reduce inflammation and the risk of some cancers. There are two main dietary forms of vitamin D; D2 (known as ergocalciferol) and D3 (cholecalciferol). Either form can be taken to help maintain or improve your body’s level of vitamin D. 

At risk groups: Certain groups of the population are more at risk of vitamin D deficiency.

These are:  All pregnant and breastfeeding women  Babies from birth and young children under the age of five  People aged 65 years and over  People who are not exposed to much sun – such as people who cover up their skin when outdoors, or those who are housebound or confined indoors for long periods of time.

People who have darker skin, such as those of African, African-Caribbean and South Asian origin.

Foods Vitamin D is found in a small number of foods:

Oily fish – such as salmon, sardines and mackerel, all contain a reasonable amount of vitamin D  Fortified breakfast cereals (amount of vitamin D varies with the best sources having at least 1.5mcg per portion)  Fortified fat spreads (average of 0.75mcg per 10g portion)  Eggs, meat and milk contain small amounts but this varies during the seasons  Cod liver oil contains a lot of vitamin D – the amount of vitamin D varies between products (avoid taking this if you are pregnant, have kidney problems, or any other medical condition where too much vitamin A may be harmful).

https://www.uhcw.nhs.uk/download/clientfiles/files/Patient Information Leaflets/Clinical Support Services/Dietetics/117569_Vitamin_D_(1655)_-_April_2018.pdf

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளுதலே.. நல்லது. நாளுக்கொரு விற்றமின் டி மாத்திரையும் எடுங்கள். இது மீனெண்ணை குளுசை வழியாக எடுப்பது இலகு. 

Worst and worst ✍️👋 உட்கார்ந்தா வலி,நிண்டா வலி, நித்திரை இல்லை.வேணாம் என்று போகுது.‌

.ஏலவே வீக்கானவர் எண்டதால் அப்பிடித்தான் இருக்கும் எண்டு சொல்கிறார் குடும்ப நல வைத்தியர்.✍️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nedukkalapoovan said:

பொதுவாக மூட்டுவலிக்கு முக்கிய காரணம்.. தேய்வடையும் எலும்புகளும்... எலும்புகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க காணப்படும் கசியிழைய இழப்பும் தான். விற்றமின் டி எலும்புகள் பலவீனமடைவதை தடுக்கும்.. குறிப்பாக கல்சியச் சேமிப்பு மூலம்.

சரி.....வந்தனீங்கள் மூட்டுவலியளுக்கு தொடர்ந்து வலிநிவாரண(மறைப்பு) குளிசயள் எடுக்கலாமோ? அதாலை வாற பக்க விளைவுகள் என்ன? பக்கவிளைவு இல்லாத வலிநிவாரண மருந்து மாத்திரையள் உண்டோ? எண்டதையும் சொல்லிட்டு போறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.