Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

12-1.png
 31 Views

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்ஸுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்ஸில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் வீசினர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

https://www.ilakku.org/?p=51963

  • Replies 53
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 23:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

நீங்கள் இப்படி பிரிவினை பேசக்கூடாது.....நோயிலும் நாங்கள் தேசியத்தையும் ,நல்லிணக்கதையும் கடைபிடிக்கிறோம்....என சிங்கள மக்களுக்கு சொல்லியினம் அவையளும் நம்பி அடுத்த தேர்தலில் வாக்கு போடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 15:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

அதைத்தான் நானும் நினைத்தேன்.. அவ்ளா பெரிய தேசம் இருக்க அதை எல்லாம் கடந்து எதுக்கு இங்க கொண்டுவாறானுவள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 
அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 
நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

On 10/6/2021 at 18:03, உடையார் said:

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு விரோதமான செயல் நடை பெற்றால் ஏன் நாங்கள் தடுத்தாட போறோம் ....அங்.. அங்...
எங்கள் விருப்ப்மும் அது தானே....

எங்கள் தலிவர்கள் பாணந்துறையில் கொரானா கைதி மரணம் பற்றி புலன்விசாரணை செய்யினம் 

6 minutes ago, satan said:

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, satan said:

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

6 hours ago, putthan said:

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

ஒன்றுபட்ட நாட்டுக்குள் என்ற  இலங்கைக்குள் எண்டு ஏதும் நினைக்கினமோ தெரியேல்லை. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது..

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

large.B57857CB-5901-40F4-8095-2F77364A90D1.jpeg.25cb99ed1336470018fa290388fa6e37.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 
அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

இன்றும் தமிழர் தரப்புகளில் பிழைகளையும் குறை குற்றங்களையும் கண்டு பிடிக்கின்றார்களே ஒழிய சிங்கள தரப்பின் அட்டூழியங்களை மறந்தும் கூட முன்னிறுத்தி கதைக்கவோ கருத்தெழுதவோ மாட்டார்கள்.

4 hours ago, putthan said:

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

அடேங்கப்பா நல்லாய்ச்சொன்னியள் போங்கோ.
ஆனால்   சிங்களத்தரப்பு எது சொன்னாலும் செந்தில் ஆக்ஸன் 🤣

Senthil GIFs | Tenor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

அப்ப ஏனாம் சீமான் எண்ட பெயரை கண்டவுடனை வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையாய் வருகினமாம்? அதையும் அங்கையே வெள்ளுத்துக்கட்டலாமே. அதுமட்டுமில்லாமல் கலைஞர் கருநாநிதியெண்டாலும் சேம் பிரச்சனை அவையளுக்கு....

அது வேறை லெவல் இணையங்கள் விசுகர் 😁

  • கருத்துக்கள உறவுகள்

கல்நெஞ்சம் படைத்த மாற்றுகருத்து மாணிகம்ஸ்.

கால்ல விழுந்து கதறினாலும் - கிட்னிய கண்ல காட்ட மாடேங்கிறீங்களேப்பா🤣

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

பொலிஸ் சந்தேகநபர்களை அடிச்சுக் கொல்லுது... இப்படியும் கொல்லுது. இராணுவம் விறகு வெட்டிறவரை சுட்டுக்கொல்லுது... காட்டுக்க பன்றி பிடிக்கப் போறவனையும் கொல்லுறாங்கள்.

ஆக மொத்தத்தில் சொறீலங்கா சிங்கள இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சிக்குள்.. மனித உரிமைகளை மீறியே பழகிப் போனவர்கள்..கேட்பார் கேள்வி இல்லை என்று ஆகிப்போனதால்.. மனித உரிமைகளை காக்க யாரும் இல்லை. ஆதிக்க அதிகார பேரினவாதத் திமிர் பிடித்து அலையும்.. சிங்கள.. அரச இயந்திர குற்றவாளிகளை தண்டிக்க அங்கு நீதித்துறை என்ற.. எதுவும் உருப்படியாக இல்லை. 

இந்த நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் இலங்கையில் வாழ்கிறீர்கள் என்பதற்காக அதிகம் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. இதே நீங்கள் ஒருவேளை அரபுலகிலோ.. ஐரோப்பாவிலோ.. கனடா அமெரிக்காவிலோ.. அவுஸி.. நியூசிலாந்திலோ வாழ்ந்திருந்தால்.. நிச்சயமாக.. இப்படி கருத்தெழுதி இருக்கமாட்டீர்கள்.

கொரோனா மரணங்களில் 125,000 மேல் மரணத்தைக் கண்ட நாட்டில் வாழ்ந்தாலும்.. இப்படி கொரோனா தோற்றாளர்கள் ஊர் விட்டு ஊர் கடத்தும் நடவடிக்கையை சொறீலங்கா சிங்கள இராணுவ அரசைத் தவிர வேறு எவரும் செய்யவில்லை. நோய் தொற்றாளர்களை அவர்கள் வாழும் வீட்டுக்குள் ஊருக்குள் தான் முடக்கினமே தவிர.. தொற்றாளர்கள் ஊர் விட்டு ஊர்.. பிரதேசம் விட்டு பிரதேசம்.. கொண்டு போகவில்லை.

அண்மையில் முழுத்தீவானா நயினாதீவிற்கு எப்படி கொரோனா நுழைந்தது. ஊரே அறியும் அதன் பின்னணி. இறுதியில் ஆலயக் குருக்கள் அதற்குப் பலி. 

சொந்த ஊருக்குள் ஒருவர் சைக்கிளில் போவது பயணத்தடைக்குள் வருமென்றால்.. நோய் தொற்றாளர்களை பிரதேசம் விட்டு பிரதேசம் கடத்தும் செயல் ஏன் அந்த பயணத் தடைக்குள் வரவில்லை. ஆம் அதையிட்டு கேள்வி கேட்க முடியாது. ஏனெனில்.. சுகாதார சேவை செய்ய வேண்டிய பணியை செய்வது இனப்படுகொலை இராணுவமும் பொலிஸும் அல்லவா.

என்றாலும்.. நீங்கள் இந்தளவுக்கு பயந்து வாழனுன்னு இல்லை. ஊரில் உள்ள எத்தனையோ மக்கள் இதனை அநியாயம் என்றே சொல்கிறார்கள். ஆனால்.. நீங்கள் அநியாயத்துக்கு நியாயம்..கற்பிப்பது மிகவும் அநியாயமானது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

கொரோனா சகலருக்கும் சமமானது. இதில் கேள்வி என்னவென்றால் கொழும்பிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து ஏன்  கொரோனா நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே.

முதியவரின் மரணம் அது விபத்தாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறந்தவர் முதியவர் என்பதற்காக ஏற்பட்ட விபத்தை சரியென நிஞாயம் கற்பிக்க முடியாது. பயணத்தடை விதிப்பவர்கள் சாதாரண மக்களின் ஜீவனோபாயத்திற்கு தகுந்த ஏற்பாடு ஏதும் செய்து கொடுத்தார்களா? அரசும், சம்பந்தப்பட்டவர்களும் ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கிறார்களா? பேசப்பயம் என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இங்கு வலிந்து கட்டிக்கொண்டு வந்து அநிஞாயத்துக்கு வெள்ளை அடிப்பவர்கள் அநிஞாயம் செய்பவரும்,   அதன் (அரசின்) பங்காளிகளுமே.

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகளை வடக்கிற்கு கொண்டு வந்தது தப்பில்லை, விபத்தை ஏற்படுத்தியது அதுவும் தப்பில்லை.  வயிற்றுப்பிழைப்புக்காக வெளியில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கி இறந்ததுதான் தப்பு இங்கு. இப்படிபட்டவர்களால் வழிநடத்தப்படும் இளம் சமுதாயம் எப்படிப்பட்ட ஆரோக்கியமான எண்ணங்களை கொண்டவர்களாக உருவாவார்கள்? என்பதை  நினைக்கவே பயமாக இருக்கிறது. பயணத்தடை அமுலில் இருக்கும்போது நாமல் வடக்கிற்கு விஜயம் செய்யலாம் தப்பில்லை. ஆனால் முதியவர் வெளியில் வந்தது தப்பு. அவர்  என்ன அரசியல் தேவைக்கா வெளியில் சென்றார்? என்ன, அவர்களின் திட்டம் இவரின் மரணத்தால் கசிந்து விட்டதே என்கிற ஆதங்கம், இறந்தவர் மேல் குற்றச் சாட்டு வைத்து நிஞாயப்படுத்துகிறார்கள் அரசின் முகவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

தனி,
அப்ப பாஸ் இல்லாமல் வெளியாலை போனால் அடிச்சுக் கொல்லலாம் அப்பிடித் தானே. உங்கடை சொந்தம் ஆருக்கும்நடந்தால் இப்பிடிச் சொல்லுவியளோ? அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க வேணும் என்பதற்காக எப்பிடியெண்டாலும் கதைக்கலாம் என்றுநினைக்கக் கூடாது. விவசாயிகள் தோட்டத்துக்கு போக பாஸ் இருக்குத் தானே.பாஸ் இல்லாமல் வெளியாலை போய் கொரோனா வந்தால் முதியவரில் பிழை என ஏற்றுக் கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.