Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_6cf416c9a9.jpg

எம்.றொசாந்த்

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இன்று (06) பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்படி அறிவித்தல் ஒட்டப்பட்டு, ஆச்சிரமம் மூடப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி கோவில் வருடாந்திர பெருந்திருவிழா, நாளை மறுதினம் (08) ஆரம்பமாகிறது. சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின்  சந்நிதியான்  ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்போது, கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால், பொதுச் சுகாதார பரிசோதகரால் ஆச்சிரமம் மூடப்பட்டது.

இதேவேளை, கோவில் சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர், பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் அறிவுறுத்தப்பட்டது. 

image_85c9532a67.jpg

Tamilmirror Online || அன்னதானம் வழங்கியதால் ஆச்சிரமத்துக்கு சீல்

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார பரிசோதகருக்கு வாழ்த்துக்கள்.. அருமையான செயல்..👏 என்னத்த செஞ்சாலும் உலக அறிவும் நாட்டில என்ன நடந்துகொண்டிருக்கிறது எங்குர அறிவும் இல்லாத உந்த முட்டாப்பயலுவ திருந்தமாட்டனுவள்..🤦‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுகாதார பரிசோதகருக்கு வாழ்த்துக்கள்.. அருமையான செயல்..👏 என்னத்த செஞ்சாலும் உலக அறிவும் நாட்டில என்ன நடந்துகொண்டிருக்கிறது எங்குர அறிவும் இல்லாத உந்த முட்டாப்பயலுவ திருந்தமாட்டனுவள்..🤦‍♀️

ஊரில் அண்மையில் நடந்த ஒரு திருவிழாவில் அனுமதிக்கப்பட்டதைவிட பலர் கலந்து கொண்டதால் அவர்களை அள்ளிக்கொண்டுபோய் செக் பண்ணினதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக உறவினர்கள் சொன்னார்கள்.

மிக நீண்ட யுத்தம், இருக்கும் சிறிய சனத்தொகையில் பாதியளவானவர்கள் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்துவிட்டார்கள், எஞ்சிய மக்களையும் நிலத்தையும் சக இனங்கள் முழுங்க ஓடி திரிகின்றன, மீதமுள்ள எம் மக்கள் தொகையையாவது பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அங்குள்ள மக்களின் பொறுப்பு.

பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டு மொத்தமாக அனைத்தையும் இழந்து நிற்கும் நிலமை உருவாககூடாது என்பதே ஆதங்கம்.

அங்குள்ள மக்களுக்கு விழாக்கள் விருந்துக்கள், ஆட்டம் பாட்டத்தில் கலந்துகொள்ள அத்தனைக்கும் உரிமையுண்டு , ஆனால் அதற்கு இது நேரமல்ல.

தீவிர நிலமை முடிந்த பின்பு சேர்ந்து சிரித்து வாழுங்கள் அதில் எந்த தவறுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 அச்சூழலில் ஆலயத்தை நம்பியுள்ள 100 மேற்பட்டவர்களுக்கு சுகாதார அதிகாரி மூலம் மூன்றுவேளை உணவு வழங்கப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 அச்சூழலில் ஆலயத்தை நம்பியுள்ள 100 மேற்பட்டவர்களுக்கு சுகாதார அதிகாரி மூலம் மூன்றுவேளை உணவு வழங்கப்படுமா?

நீங்கள் சொல்வது நியாயம்தான்.

கொஞ்சம் யோசித்து இருந்தால் அன்னதானத்தை பொட்டலமாக கட்டி, காற்றோட்டமான வெளியில், சமூக இடைவெளியில் வரிசையில் வந்து எடுத்து போகுமாறு அன்னதானம் கொடுப்பவர்கள் செய்திருக்கலாம்.

ஒரு பெருந்தொற்று நேரம் ஆசுபத்திரி எல்லாம் நிரம்பி வழியும் போது எல்லாத்தையும் முன்னர் போல செய்தே தீருவோம் என்பது சரிவராது.

வல்லவன் சொல்வது போல் சுனாமி, போரில் அதிகம் பேரை இழந்தவர் நாம். இதுவும் ஒரு 15% ஐ கொண்டு போனால்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

கட்டளைகளை பிறப்பிக்க தெரிந்தவர்களுக்கு தினசரி கூலியாளர்களுக்கும் வீதியில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் ஒரு வழி செய்திருக்க வேண்டுமல்லவா?

சட்டம் சீல் வைத்திருப்பது வியாபார தலத்திற்கு அல்ல.  24மணி நேரமும் பசியென வருபவர்களுக்கு உணவளிக்கும்  இடம் அது.பசித்தவர்களின் வயிற்றில் அடிக்காமல் எச்சரிக்கை விடுத்து  மாற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?

நோய்,சண்டைகள் இல்லாத காலத்திலேயே ஒரு வேளை சோற்றுக்கு அலையும் மக்கள் உள்ள நாடு அது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுகாதார பரிசோதகருக்கு வாழ்த்துக்கள்.. அருமையான செயல்..👏 என்னத்த செஞ்சாலும் உலக அறிவும் நாட்டில என்ன நடந்துகொண்டிருக்கிறது எங்குர அறிவும் இல்லாத உந்த முட்டாப்பயலுவ திருந்தமாட்டனுவள்..🤦‍♀️

கதிர்காமத்தானுக்கு இப்படி கெடுபிடிகள் இல்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

கட்டளைகளை பிறப்பிக்க தெரிந்தவர்களுக்கு தினசரி கூலியாளர்களுக்கும் வீதியில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் ஒரு வழி செய்திருக்க வேண்டுமல்லவா?

சட்டம் சீல் வைத்திருப்பது வியாபார தலத்திற்கு அல்ல.  24மணி நேரமும் பசியென வருபவர்களுக்கு உணவளிக்கும்  இடம் அது.பசித்தவர்களின் வயிற்றில் அடிக்காமல் எச்சரிக்கை விடுத்து  மாற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?

நோய்,சண்டைகள் இல்லாத காலத்திலேயே ஒரு வேளை சோற்றுக்கு அலையும் மக்கள் உள்ள நாடு அது.

நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கதிர்காமத்தானுக்கு இப்படி கெடுபிடிகள் இல்லையே ஏன்?

அங்கிருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது  இந்த விடயத்தில் கோசான் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைபிடித்து அன்னதானம் கொடுத்து இருக்கலாம் அதிகாரம் பண்ணுபவர்களுக்கு அடித்தட்டு சனம்  படும் பாடு தெரியாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பெருமாள் said:

அங்கிருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது  இந்த விடயத்தில் கோசான் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைபிடித்து அன்னதானம் கொடுத்து இருக்கலாம் அதிகாரம் பண்ணுபவர்களுக்கு அடித்தட்டு சனம்  படும் பாடு தெரியாது .

உண்மைதான் பெருமாள்.....

அதே ஊர்களில் திருமண கொண்டாட்டங்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் நெரிசல்களுடன் இனிதே நடந்தேறுகின்றன. இதை அந்த அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான் பெருமாள்.....

அதே ஊர்களில் திருமண கொண்டாட்டங்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் நெரிசல்களுடன் இனிதே நடந்தேறுகின்றன. இதை அந்த அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லையாம்.

சுகாதாரத்திணைக்களம்  நாட்டை கட்டாயமா 1 மாதம் மூடனும் என்கிறார்கள் கோத்தா மாட்டேன்  என்று அடம்பிடிக்கிறார் வாட்ஸுப் படங்கள் இங்கு இணைக்க முடியாத அளவுக்கு பயங்கரமாய் உள்ளன .

இது நடக்கும் என்று பள்ளிக்கூடம் போகாத நாங்களே எதிர்வு கூறினோம் கேட்டார்களா ?

மூன்று பேருக்கு ஒரு ஒட்சிசன் சிலிண்டர் என்று அவலக்குரல் எழுப்புகிறார்கள் தென்னிலங்கை சுயாதின ஊடகர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால்,

கொரோனா தாக்கம் எல்லோருக்கும் புரியும்,  நாம் பலவழிகளிலும் அழிக்கப்பட்டும் அழிந்து கொண்டும் இருக்கிறோம் என்பதும் தெரியும். ஆனால் வயிற்றுக்கு தெரியவில்லையே? பசி வந்தால் பத்தும் பறந்து போகுதே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சோறு தின்ன உயிரோட இருக்கவேணும் எல்லோ..

உயிரோட இருக்க சோறு வேணுமெல்லோ..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உயிரோட இருக்க சோறு வேணுமெல்லோ..

சிலருக்கு சோறு தின்ன உசிரோட இருக்கணும்…

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2021 at 03:22, குமாரசாமி said:

கதிர்காமத்தானுக்கு இப்படி கெடுபிடிகள் இல்லையே ஏன்?

என்ன சாமியார் கதிர்காமத்தான் என்கிறீர்கள், அதில் வரும் பெண்களையும், ஆட்டங்களையும் பாத்தால் அப்படி தெரியவில்லையே? கதிர்காமத்திலுள்ள புத்த விகாரையில் நடந்த விழா போலுள்ளதே? நான் கதிர்காமத்துக்கு போகாதபடியினால் இந்த வழமை தெரியாமலிருக்கலாம். 

 பாவம் அந்த யானை எல்லாவற்றையும் மூடிக்கட்டி வைத்திருக்கிறார்கள். எவ்வளவு நேரந்தான் அதுவும் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சிலருக்கு சோறு தின்ன உசிரோட இருக்கணும்…

அப்போ கேக் தின்னலாம் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் ஏற்கனவே தெரிந்தது தான், இன்றைய வலம்புரியில்

70-E721-FA-5-EA8-4175-9-B8-D-BEB8983-A75

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல ஒருத்தரும் ஒரு நேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கேல்ல...குடும்பத்தை பார்க்க வக்கில்லாத சோம்பேறிகள் தான் கோயில்களில் வந்து படுத்து கிடப்பது ...வயோதிபதிபர்களுக்கும் அங்கவீனர்களுக்கும் அயல் சனம் இடைக்கிடை சாப்பாடு கட்டிக் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் சாப்பிட போகின்றார்கள் சுவைக்காகவும்,கோயில் சாப்பாடு என்பதற்காகவுமே போகின்றார்கள்...அவர்களில் ஒருவருக்கு வருத்தம் இருந்தால் , அவ்வளவு பேருக்கும் பரவி விடும் ...உயிரோடு இருந்தால் நாளைக்கும் சோறு சாப்பிடலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

தவறான கருத்து கண் தெரியாத யுத்தத்தில் அங்கவீனர்கள் ஆன  முதியவர்கள் வீட்டுக்கு பாரம் அடுத்த நேர உணவை கூட உண்ண வழி இல்லாதவர்கள் ஒரு 60 பேர் அளவில் அங்கு உள்ளனர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சோறு தின்ன உயிரோட இருக்கவேணும் எல்லோ..

சோத்து தத்துவம் இங்கேயும் வரட்டும் :cool:

1 நபர், நிற்கும் நிலை, கூட்டம் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறங்கள், கூட்டம் மற்றும் , ’11:42 Vo)) M Siva Kumar 19m.6 வரலாற்றுப் பெருமைகொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளை யார் ஆலய ஆடி அமாவாசைத் திர்த்தோற்சவம் சிறப்பாக இனிதே நிறைவுற்றது. 14 8 comments 3 shares’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் அமர்ந்துள்ளனர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆலய நிர்வாகம் மீதும் கலந்து கொண்டவர்கள் , அரச ஊழியர்கள், சுற்றி வர உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது அரச ஊழியர்களாக இருந்தால் தனிமைப்படுத்தப்ப்படும் நாட் கள் சொந்த விடுமுறையாக கழிக்கப்படவேண்டுமெனவும் சுகாதார துறை பணிப்பாளரால் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது சாமியார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சோத்து தத்துவம் இங்கேயும் வரட்டு

இதில் சொல்லுற PHI கிறீஸ்தவனா, மொக்குதனமாய் தீர்தத்தில் கலந்துகொள்ளும் இந்து மட்டகளப்பா யாழ்பாணமா என்ட கேள்வியே பிழை அண்ணை.

இனத்தின் எண்ணிக்கை இருப்பை கொஞ்சம் யோசிச்சால் - கட்டுப்பாடு இல்லாமல் நடப்பவர்கள் மீதான ஆதங்கம் விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியான் மீது சிங்களம் துவேசத்தைக் காட்டுவது இது முதற் தடவையில்லையே. ஏலவே பல தடவைகள் சந்நிதியான் தேரையும் எரித்தவர்கள் தானே.

தென்னிலங்கையில்.. புத்தாண்டு.. வெசாக்..  புத்த கோவில் விழாக்கள் எல்லாம் தடையின்றி நிகழ்கின்றன. 

கோவில்களுக்கு மட்டும் தடை. ஏன் கோவில்களுக்கு சமூக இடைவெளி மற்றும் தனிநபர் பாதுகாப்போடு நிகழ்வுகளை குறித்த ஒரு தொகையினருடன் நடத்த அனுமதிக்க முடியாது..??!

ஏலவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்.. சொறீலங்கா அரசு.. மற்றும் அதன் இராணுவம் காவல்துறை மீது கொரோனா கால மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வருகின்றன.

ஆனால் நம்ம அரசியல் வியாதிகள் மட்டும்.. மூச். புலிகள்.. சிறீசபாரட்ணத்தை கொன்றார்கள் என்ற உலகமே அறியாத செய்தியை சிங்களப் பாராளுமன்றில்.. பேசிக்கிட்டு காலம் கழிக்கிறார்கள்.. என்றால் பாருங்களே.. எம் அரசியல் வியாதிகளுக்கு மக்கள் மீதுள்ள அக்கறையை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈரைப்பேனாக்கி பேனை பெருமளாக்கிறதில எங்கடை ஆக்களை அடிக்கேலா…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.