Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்களுக்கு யாழ் மாநகர சபை விடுத்துள்ள அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர்  இயந்திரங்கள்! | Virakesari.lk

அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் வருமாறு ,

தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற் கொண்டு நல்லூர் முருகப்பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே நடைபெறவுள்ளது. 

எனவே இந்த நெருக்கடிமிக்க அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மிக மிக பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு நல்லைக்கந்தன் அடியார்களை மிகப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், அத்துடன் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கேற்பவும், நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும். குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத் தவிர்க்கவும்.

கொவிட் 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகும்.

ஆலயத்திற்கு அனுமதிக்கப்படும் வேளையில் ஆண் அடியார்கள் வேஷ்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.

சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின் படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடாத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பக்தர்களின் நன்மை கருதியும் ஆலய உற்சவம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம்முறையும் வீதித்தடைகள் நாளை நள்ளிரவு முதல் 08.09.2021 இரவு வரை முழுமையாகப் போடப்படும். வழமைபோல் மாற்றுப்பாதை அமுலில் இருக்கும்.

அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்திற்கு வந்து சேரும் ஏனைய மூன்று வீதிகளும் அடியவர்கள் செல்வதற்கு முழுமையாகத் தடை செய்யப்படும். வீதித்தடைக்கு உள்ளே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் மாநகர சபையின் அனுமதி அட்டையுடன் ஏனைய வீதித்தடைகளினூடாகச் சென்று வர அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்தினுள் அடியவர்களை அனுமதிப்பது, எத்தனை பேரை அனுமதிப்பது போன்றவை தொடர்பாக அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயச் சூழலிலும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள்,நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலய உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறுவோர் அல்லது மீறுபவர்களின் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

இக் கொரோனா தொற்று சூழலினால் எம்மால் எடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளால் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதோடு தற்போது எழுந்துள்ள மிகக்கடுமையான நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு வழிகாட்டல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்களுக்கு யாழ் மாநகர சபை விடுத்துள்ள அறிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிரமம்தான் ஆனாலும் சிறப்பான நடவடிக்கை. மக்களின் ஆரோக்கியம் முக்கியம்..........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பிழம்பு said:

அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

தமிழ்சிறி ,நாதம் ,நில்மினி குடும்பத்தினர் எப்படி போவது?

57 minutes ago, பிழம்பு said:

ஆலயத்திற்கு அனுமதிக்கப்படும் வேளையில் ஆண் அடியார்கள் வேஷ்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.

நடைமுறைக்கு சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழ்சிறி ,நாதம் ,நில்மினி குடும்பத்தினர் எப்படி போவது?

ஒன்லைன் பூசை பாக்கலாம் தானே....அங்கை போய் நெரிபடோணும் எண்டால் ஒண்டும் செய்யேலாது 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒன்லைன் பூசை பாக்கலாம் தானே....அங்கை போய் நெரிபடோணும் எண்டால் ஒண்டும் செய்யேலாது 😎

வெளிநாடுகளில் அப்படித்தானே செய்யினம்... செய்தவை.

தற்போதைய நெருக்கடி நிலையில் மக்கள் புத்திசாதுரியமாகச் செயற்படும் அதேவேளை மக்களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களும்.. சமூக ஆர்வலர்களும்.. வைத்தியத்துறையும் சரியாக வழிகாட்டனும்.

சொறீலங்கா அரசினதும்.. அந்த கெடுபிடி இராணுவத்தினதும் உதவி என்ற பெயரில்.... அதிகார துஷ்பிரயோகம் மூலம் மக்களை பயத்தால் அடிபணிய வைப்பதிலும் மக்களைப் புரிந்துணர்வோடு நடக்கச் செய்வது தான் நீண்ட கால பலனளிக்கும். அதுவும் ஓரளவு கல்வி அறிவுள்ள தமிழ் சமூகம் இதனை விளக்கிக் கொண்டு நடக்க வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, nedukkalapoovan said:

வெளிநாடுகளில் அப்படித்தானே செய்யினம்... செய்தவை.

தற்போதைய நெருக்கடி நிலையில் மக்கள் புத்திசாதுரியமாகச் செயற்படும் அதேவேளை மக்களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களும்.. சமூக ஆர்வலர்களும்.. வைத்தியத்துறையும் சரியாக வழிகாட்டனும்.

சொறீலங்கா அரசினதும்.. அந்த கெடுபிடி இராணுவத்தினதும் உதவி என்ற பெயரில்.... அதிகார துஷ்பிரயோகம் மூலம் மக்களை பயத்தால் அடிபணிய வைப்பதிலும் மக்களைப் புரிந்துணர்வோடு நடக்கச் செய்வது தான் நீண்ட கால பலனளிக்கும். அதுவும் ஓரளவு கல்வி அறிவுள்ள தமிழ் சமூகம் இதனை விளக்கிக் கொண்டு நடக்க வேண்டும். 

சருகு ஆமையை மெத்தையில் படுக்க வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.

எவ்வளவு தொழில் நுட்பங்கள் உருவாகினாலும் அதை அழிவிற்காக மட்டுமே பயன்படுத்த  தெரிந்த இனவாத அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பிள்ளையார் கோவில் தேர் அந்த மாதிரி நடந்திருக்கு போல ....வட்சப்பில் விடியோ உலாவருகிறது புதுசோ பழசோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒன்லைன் பூசை பாக்கலாம் தானே....அங்கை போய் நெரிபடோணும் எண்டால் ஒண்டும் செய்யேலாது 😎

இப்படித்தான் கனபேர் ஊரையும் வீடையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஊர் வீதி, வளவு வாசலில் குந்தி இருந்த சுகம் ஒன்லைன் கொடுக்காது 
இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் நம்ம பக்கம் அதாவது வடகிழக்கில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அதிகம் சகலதுக்கும் வெளியில் செல்கிறார்கள் நான் கூட. தொற்றும் இறப்பும் அதிகமாகிறது இது இன்னும் அதிகரிக்கும்  போல தெரிகிறது எனது ஊரில் 15 மேற்பட்டவர்கள் இறந்து போயுள்ளார்கள் இன்றும் இறப்புத்தான் .

7 minutes ago, putthan said:

லண்டன் பிள்ளையார் கோவில் தேர் அந்த மாதிரி நடந்திருக்கு போல ....வட்சப்பில் விடியோ உலாவருகிறது புதுசோ பழசோ தெரியவில்லை

லண்டன் சனம் வந்து சொல்லுவாங்கள் உண்மையைத்தான் சொல்லுவாங்க நம்புங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படித்தான் கனபேர் ஊரையும் வீடையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஊர் வீதி, வளவு வாசலில் குந்தி இருந்த சுகம் ஒன்லைன் கொடுக்காது 

உண்மைதான் நேர போய் கும்பிடுற சந்தோசம் ஒன்லைனிலை வராதுதான்.......நானும் உந்த தேர் திருவிழாவிலை நிக்கிறன்..... வெள்ளை வேட்டி வெறும் மேலோடை தங்கச்சங்கிலி மினுங்க.....🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான் நேர போய் கும்பிடுற சந்தோசம் ஒன்லைனிலை வராதுதான்.......நானும் உந்த தேர் திருவிழாவிலை நிக்கிறன்..... வெள்ளை வேட்டி வெறும் மேலோடை தங்கச்சங்கிலி மினுங்க.....🙏🏽

ஒட்டகத்தை கட்டிக்கோ பாட்டுக்கு பிள்ளையாருக்கு காவடி எடுப்பவருக்கு அந்த மாதிரி சாமி வந்திட்டுது ....பார்த்தியளே...

52 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டன் சனம் வந்து சொல்லுவாங்கள் உண்மையைத்தான் சொல்லுவாங்க நம்புங்க

சொல்லுவினம் சொல்லுவினம்.....அஸ்ராசனிக்கா போட்டவையள் அல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையினர் முன்பாக சிதறு தேங்காய் உடைத்து , கற்பூரம் ஏற்றிய பக்தர்கள்

August 13, 2021

spacer.png

நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் காவல்துறையினர் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து,  கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர். நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, காவல்துறையினருக்கு முன்பாக  வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.

https://globaltamilnews.net/2021/164596

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரான் இறங்கி வந்து வராதீங்க என்று சொன்னாலும் நம்ம சனம் திருந்தமாட்டார்கள்.😊

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லூரான் இறங்கி வந்து வராதீங்க என்று சொன்னாலும் நம்ம சனம் திருந்தமாட்டார்கள்.😊

உண்மை தான்.

அப்படி நல்லூரான் வரவேண்டாம் என்று சொன்னால்,புத்தர் தன்னிடம் வரவேண்டாம் என்று சிங்களவர்களிடம் சொல்லவில்லை அப்படியிருக்க நல்லுரான் மட்டும் எப்படி வரவேண்டாம் என்று செல்ல முடியும் என்று வெளிநாட்டில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தடுப்பூசி போடுவதற்கு எதிர்பான கோஷ்டி கேள்வி கேட்கும்.

41 minutes ago, கிருபன் said:

கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, காவல்துறையினருக்கு முன்பாக  வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.

நல்லூரானுக்கு பதிலாக காவற்துறைக்கு தேங்காய் உடைத்து வணங்கிய, தார் வீதியை விழுந்து வணங்கிய பக்தர்கள் வாழ்க. 😂 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்.

அப்படி நல்லூரான் வரவேண்டாம் என்று சொன்னால்,புத்தர் தன்னிடம் வரவேண்டாம் என்று சிங்களவர்களிடம் சொல்லவில்லை அப்படியிருக்க நல்லுரான் மட்டும் எப்படி வரவேண்டாம் என்று செல்ல முடியும் என்று வெளிநாட்டில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தடுப்பூசி போடுவதற்கு எதிர்பான கோஷ்டி கேள்வி கேட்கும்.

இருக்கிற கோஸ்டி சங்கு ஊதிற கோஸ்டி ஊதுங்க என்றாலும் ஊதும் ஊதாதீங்க என்றாலும் ஊதும் மாற்ற முடியாது .வெளிநாட்டிலி உள்ளவர்கள் கதையெல்லாம் இங்க இப்ப எடுபடுவதில்லை  இராணுவம் , பொலிஸ் வீடு வீடாக தகவல் சேமிக்கிறார்கள் ஊசி போடாதவர்களுக்கு அந்த அணி ஊசியை ஏற்றி செல்கிறது . தப்ப முடியாது போட்டே ஆகவேண்டும் இன்று இரண்டாவது  ஊசி மட்டக்களப்பில்  போடப்படுகிறது புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் .

இருக்கிற தமிழனாவது மிஞ்சி வாழ வேண்டுங்கள் நாளை இங்குள்ளவர்கள் இறந்து போன பிறகு ஈழத்தை வைத்து கதையும் எழுத இயலாது , கட்டுரையும் எழுத இயலாது , கவிதையும் எழுத இயலாது முடிந்தவரை உறவுகளை ஊசி போட சொல்லுங்க கேஸ்டிகளே.

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை – யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார்.இவ்வாறு தரிசிப்பதன் மூலம் தொற்று நிலைமையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் தற்போது நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தீவிரமாக காணப்படுகின்றது. அந்த நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம். எனவே பொதுமக்கள் நல்லூர் ஆலயத்திற்கு வரிவதை தவிர்த்து வீடுகளிலிருந்து நல்லூர் ஆலய உற்சவத்தினை தரிசியுங்கள் எனவும் தெரவித்துள்ளார்.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 25 நாட்கள் நடைபெறவுள்ளது. தற்போது நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது. தற்போதுள்ள கொரோனா தீவிர நிலையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த சுற்றி நிருபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாண மாநகரசபை ,ஆலய நிர்வாகம் மற்றும் பொலிசார் இணைந்து ஆலய உற்சவத்தினை பாதுகாப்பான முறையில் எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம். அந்த முடிவின் பிரகாரம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்தினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வேறு எவரும் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள். வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தை தரிசியுங்கள் என இன்று ஆரம்பமாகியுள்ள நல்லூர் உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். (15)

http://www.samakalam.com/நல்லூர்-ஆலயத்திற்குள்-செ/

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கிற கோஸ்டி சங்கு ஊதிற கோஸ்டி ஊதுங்க என்றாலும் ஊதும் ஊதாதீங்க என்றாலும் ஊதும் மாற்ற முடியாது .வெளிநாட்டிலி உள்ளவர்கள் கதையெல்லாம் இங்க இப்ப எடுபடுவதில்லை  இராணுவம் , பொலிஸ் வீடு வீடாக தகவல் சேமிக்கிறார்கள் ஊசி போடாதவர்களுக்கு அந்த அணி ஊசியை ஏற்றி செல்கிறது . தப்ப முடியாது போட்டே ஆகவேண்டும் இன்று இரண்டாவது  ஊசி மட்டக்களப்பில்  போடப்படுகிறது புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் .

இருக்கிற தமிழனாவது மிஞ்சி வாழ வேண்டுங்கள் நாளை இங்குள்ளவர்கள் இறந்து போவ பிறகு ஈழத்தை வைத்து கதையும் எழுத இயலாது , கட்டுரையும் எழுத இயலாது , கவிதையும் எழுத இயலாது முடிந்தவரை உறவுகளை ஊசி போட சொல்லுங்க கேஸ்டிகளே.

கவிதை எழுதவும், கட்டுரை எழுதவும் வெட்டி வீரம் பேசவுமே ஈழம் தற்போது உதவுகிறது சிலருக்கு. மக்கள் வாழ்வுகற்றி எந்த அக்கறையும் இல்லை. அந்த அக்கறை இருந்திருந்தால் முள்ளிவாய்கால் தந்த பாடத்துக்கு பிறகாவது திருந்தி இருப்பார்கள்.

தனிக்காட்டு ராஜா, வெளிநாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் ஜதார்ததத்தை அனுசரித்தே சிந்திக்கிறார்கள். ஒரு சிறிய பழமையில் ஊறிய தொகையினர் மட்டுமே இப்போதும் தமது பொழுது போக்கிற்காக வெட்டி வீரம் பேசுகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

இலங்கை அரசு தமிழர்களுக்கு ஊசி போடாமல் விட்டிருக்குமாயின் தொற்றும் , இறப்பும் எப்படி இருக்கும் அதை எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்பதை இவர்களால் சொல்ல முடியுமா, மாறாக வேறு ஏதாவது ஊசி இறக்கி தங்களுடைய மக்கள் என நினைத்து ஊசிதான் போட்டிருக்க முடியுமா? முடியாது ஆனால்  பிழை மட்டும் பிடிப்பார்கள் இலங்கை அரசு இங்குள்ளவர்களை இலங்கை மக்கள்தான் என நினைத்துள்ளது பாகுபாடு உள்ளது இது அமெரிக்க முதல் அனைத்து நாடுகளிலும் ஒபாமா அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்து போனாலும் கறுப்பர்கள் அமெரிக்காவில் ?? அது போலவே இலங்கையிலும் இது மாறாது 

முடிந்தால் நித்தியானந்தா போல ஒரு தீவை எடுத்து தமிழர்களை குடியேற்றலாம் அங்க போனா அடுத்த பிரச்சினை, உருவாகும் (######) 

May be an image of one or more people, people standing, people walking, street, tree, crowd and road

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing and outdoorsMay be an image of one or more people, people standing and outdoorsMay be an image of one or more people, people standing, people walking, tree, street and road

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

தனிக்காட்டு ராஜா, வெளிநாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் ஜதார்ததத்தை அனுசரித்தே சிந்திக்கிறார்கள். ஒரு சிறிய பழமையில் ஊறிய தொகையினர் மட்டுமே இப்போதும் தமது பொழுது போக்கிற்காக வெட்டி வீரம் பேசுகின்றனர். 

அப்படி தங்கள் பொழுது போக்கிற்காக வெட்டி வீரம் பேசுகின்ற அவர்கள் கூட வெளிநாட்டில் தங்களது விடயங்களில் மிகவும் அக்கறையுடனே நடந்த கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்.

அப்படி நல்லூரான் வரவேண்டாம் என்று சொன்னால்,புத்தர் தன்னிடம் வரவேண்டாம் என்று சிங்களவர்களிடம் சொல்லவில்லை அப்படியிருக்க நல்லுரான் மட்டும் எப்படி வரவேண்டாம் என்று செல்ல முடியும் என்று வெளிநாட்டில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தடுப்பூசி போடுவதற்கு எதிர்பான கோஷ்டி கேள்வி கேட்கும்.

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி தங்கள் பொழுது போக்கிற்காக வெட்டி வீரம் பேசுகின்ற அவர்கள் கூட வெளிநாட்டில் தங்களது விடயங்களில் மிகவும் அக்கறையுடனே நடந்த கொள்கிறார்கள்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புலம்பெயர் தமிழர்கள் யாராவது ஈழத்தில் உள்ளவர்களை கோவிலுக்கு செல்லுங்கள் என்று கூறினார்களா?
அல்லது கொரோனா தடுப்பூசிகள் போடாதீர்கள் என்று எங்கேயாவது சொன்னார்களா?

சும்மா பழஞ்சீலை கிளிஞ்சமாதிரி புலம்பெயர் தமிழர்களை திட்டுவதை குறையுங்கள் எரிச்சல்காரரே 😂

ஈழத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே முடிவெடுப்பார்கள் என ஒரு புறம் கூறிவிட்டு இங்கு வந்து புலம்பெயர் தமிழர்தான் இதற்கு காரணம் என்பதுபோல்  வழிந்து கொண்டு நிற்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிந்தால் நித்தியானந்தா போல ஒரு தீவை எடுத்து தமிழர்களை குடியேற்றலாம் அங்க போனா அடுத்த பிரச்சினை, உருவாகும் (######) 

May be an image of one or more people, people standing, people walking, street, tree, crowd and road

அங்க போனா சாதிகேப்பான் யாழ்ப்பாணத்தான்.. தீவுக்குள்ள அதுக்கு தனிய ஒரு நாடு உருவாக்கிவச்சிருப்பான்.. அதுக்குள்ள ஊருக்கு வேறாயா ஒரு நாடு இருக்கும்.. நான் போனா மட்டு திரிகோணமலை கண்டி ஆக்கள் இருக்குர பக்கமா கேட்டு போய்டுவன்.. மட்டக்கிளப்பு திரிகோணமலை பொடியளோட ஒரு வருசம் இருந்தனான்.. அவங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லை.. யாழ்ப்பாணத்தான் போய் இப்ப அங்கையும் கெடுத்து வச்சிருப்பான்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அங்க போனா சாதிகேப்பான் யாழ்ப்பாணத்தான்.. தீவுக்குள்ள அதுக்கு தனிய ஒரு நாடு உருவாக்கிவச்சிருப்பான்.. அதுக்குள்ள ஊருக்கு வேறாயா ஒரு நாடு இருக்கும்.. நான் போனா மட்டு திரிகோணமலை கண்டி ஆக்கள் இருக்குர பக்கமா கேட்டு போய்டுவன்.. மட்டக்கிளப்பு திரிகோணமலை பொடியளோட ஒரு வருசம் இருந்தனான்.. அவங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லை.. யாழ்ப்பாணத்தான் போய் இப்ப அங்கையும் கெடுத்து வச்சிருப்பான்.. 

மட்டக்களப்பு,திருகோணமலைப்பக்கம் சாதிப்பிரச்சனை இல்லையா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு,திருகோணமலைப்பக்கம் சாதிப்பிரச்சனை இல்லையா சார்?

ஒரு ஏழு எட்டுபேர் ஒருவீட்ல தங்கி இருந்தனாங்கள்.. அதில ரெண்டுபேர் மன்னார் மிச்சம் எல்லாம் அடிமுடி தூய மட்டக்களப்பு மற்றும் திரிகோணமலை எந்த யாழ்ப்பாண பின்னணியும் இல்லை.. நான்தான் ஒரே ஒரு யாழ்ப்பாண பனங்கொட்டை… அவர்களுக்கு சாதி தெரியாது.. ஆனால் யாழ்ப்பாண அடிமுடி பின்னணியுடன் அங்கு இருப்பவர்களுக்கு இடையில் அது இருப்பதாக ஆட்கள் பேசகேட்டு இருக்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயத்திற்கு செல்வதனை தவிருங்கள் ! - பொலிஸார் வேண்டுகோள்.

நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார்.

நல்லூர் உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

nallur.jpg

மேலும் தெரிவிக்கையில், 

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது.  தற்போதுள்ள கொரோனா தீவிர  நிலையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்துவது, தொடர்பில் சுகாதார அமைச்சினால்  சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாண மாநகரசபை, ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸார்  இணைந்து ஆலய உற்சவத்தினை பாதுகாப்பான முறையில் எவ்வாறு நடத்துவது,  தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

அந்த முடிவின் பிரகாரம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள்  ஆலய நிர்வாகத்தினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு  எவரும் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். 

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற்கொண்டு ஆலயத்துக்கு வருவதை தவிர்த்துகொள்ளுங்கள்.  வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தை  தரிசியுங்கள்.

தற்போது நாட்டில் கொரோனா பரவல்  நிலைமை தீவிரமாக காணப்படுகின்றது. அந்த நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.

எனவே பொதுமக்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருவதனை  தவிர்த்து வீடுகளிலிருந்து நல்லூர் ஆலய உற்சவத்தினை  தரிசியுங்கள் என்றார்.

நல்லூர் ஆலயத்திற்கு செல்வதனை தவிருங்கள் ! - பொலிஸார் வேண்டுகோள் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.