Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

 கோடு போட்ட இடத்தில் நின்றார்கள், 

சும்மா எல்லாம் கோடு போட்டு புலிகளை நிறுத்த முடியாது 

அப்படியானால் அதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன என்பதையும் சொல்லுங்களேன்?

  • Replies 110
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் ஜனாதிபதி தாஜிகிஸ்தானுக்கு தப்பி ஓடியதாகவும் இரத்த ஆறு ஓடமிலிருக்கவே தான் தப்பி சென்றதாகவும் கூறி உள்ளார்.
இடைக்கால அரசு ஒன்றை நிறுவ தலபானுக்கு ரஸ்யா தன்னாலான உதவிகளை வழங்கும் என உறுதியளித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சும்மா எல்லாம் கோடு போட்டு புலிகளை நிறுத்த முடியாது 

அப்படியானால் அதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன என்பதையும் சொல்லுங்களேன்?

🤣 Godfather படம் பார்க்திருக்கிறீர்களா விசுகர்?  அதில் அடிக்கடி வரும் வாக்கியம்: "I made an offer that he can't refuse!" 

கோட்டைத் தாண்டினால் இந்திய இராணுவம் வரும் என்பதே "அந்த மறுக்க முடியாத" offer!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

விட்டால் தலைவருக்கே இராணுவ நகர்வு பற்றி பாடம் எடுப்பார் போல நாதம்.

சும்மா நீங்கள் நினைப்பது போல யாழ்பாணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தும் புலிகள் வாழாது இருக்கவில்லை.

மண்டைதீவிலும் கொழும்பு துறையிலும் சில அவதானிப்பு தாக்குதலை செய்து பார்த்து அதன் பிரதிபலனை கணிப்பிட்டும், அப்போது இருந்த ஆளணி, வழங்கல் நிலைமைகள், இந்திய அளுத்தத்தை வைத்தும் எடுக்கப்பட்ட மிக சரியான முடிவு அது.

புலிகள் அந்த முடிவு எடுக்க தனியே இந்திய எச்சரிக்கை மட்டும் காரணம் அல்ல.

இந்திய எச்சரிக்கைக்கு பயந்திருந்தால் புலிகள் 86 இலேயே மூட்டை கட்டி இருப்பார்கள்.

அப்போ புலிகள் யாழ்பாணத்தை தாக்கி இருந்தால் -  2ம் உலக போரில் ஹிட்லர் செய்ததை போல ஒரே நேரத்தில் பல் போர்முனைகளை திறந்த தவறு போல அது அமைந்திருக்கும்.

மேலும் நீங்கள் சொல்லும் கருத்தே ஏறுக்கு மாறாக உள்ளது.

தலிபான் கெரில்லா பாணியில் இருந்ததால் வென்றது என்கிறீர்கள், ஆனால் ஓயாத அலைகள் போன்ற மரபு போர் செய்து யாழை புலிகள் மீட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள்.

என்ன செய்வது, கேடு கெட்ட தலிபான்களோடு ஒப்பிட்டு, யாழ்களத்தில் புலிகளை கீழ்மை செய்யும் நிலையில் இப்போ நாமிருக்கிறோம்.

***

பிகு

இப்போ எல்லாம் வாழைபழத்தில் இல்லாமல் ஊசியை நேரடியாகவே ஏத்தும் தைரியம் வந்து விட்டதோ?

13 hours ago, Nathamuni said:

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

அப்படியா சிங்கம்,

அப்ப சுருக்கா முடிச்சி வக்கிய டெக்னிக்க நீங்க ஏன் செல்லி குடுக்கல்ல?

போராட்டம் என்பது கால அளவிடை நிர்ணயித்து ஆரம்பிப்பதில்லை. 

தலிபான்களுக்கு பாகிஸ்தான், ரஷ்யா, சீனா என ஒரு பெரும் உலக சக்தியே பின்னால் இருக்கிறது, அப்படி இருந்தும் அவர்களால் புலிகள் போல ஒரு தீரமிகு, தியாக மிகு, நியாயமிகு போராட்டத்தை செய்ய முடியவில்லை.

எதை, எதோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேணாம்?

***

  • கருத்துக்கள உறவுகள்

*** நான் சொல்ல வந்ததை மறந்து விட்டேன்.

ஆப்கானிஸ்தானில் நடப்பதில் இருந்தும், அமெரிக்காவின் துரித வெளியேற்றத்தில் இருந்தும் நாம் சிலதை கற்கலாம்.

1. அமெரிக்கா ஒரு இடத்தில் இராணுவத்தை இறக்க - ஒரு காரணம் மட்டுமே உள்ளது -அமெரிக்க சுயநலன் - அது முடிந்ததும் டாட்டா காட்டி புறப்படுவர்.

2. எந்த பெரிய வல்லரசாக இருந்தாலும், இன்னும் சில பெரிய நாடுகளின் உதவியுடன் இருக்கும் இன்னொரு நாட்டை அடக்கி ஆழ முடியாது. கனகாலத்துக்கு. 

ஆகவே இலங்கையை அமெரிக்கா/இந்தியா/ சீனா படைகளை இறக்கி பிடிக்க போகிறது, 

அமெரிக்காவுடன் முண்டி, சீனா பக்கம் இலங்கை சார்ந்தால் அமெரிக்க படைகள் இறங்கும், இந்திய படைகள் இறங்கும் போன்ற கற்பனாவாதங்களை இனியாவது இறக்கி வைத்து விட்டு உண்மையை தரிசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதையே தலிபான்களைப் புகழ்ந்து போய்கொண்டிருக்கும் மற்றைய திரியில் எழுத வந்தேன், இங்கே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இது தான் எங்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய பாடம்: அமெரிக்க தலையீடு என்பது mission-specific ஆகத் தான் இருக்கும். எனவே  எல்லா முட்டைகளையும் அமெரிக்காவின் பெட்டியில் வைக்கக் கூடாது!

மேலும் பைடன் நிர்வாகம் மீது அமெரிக்க மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் சில கற்பனைச் செய்திகளை கொஞ்சம் "வலது சாரி" குணமுடையோர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்😂: உண்மை அதுவல்ல!-இது தான் உண்மை நிலை நான் வசிக்கும் அமெரிக்காவில்:

1. பைடனின் சடுதியான படை விலகலின் பின்னர், 70% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தார்கள். காபூல் வீழ்ந்த பின்னர் கருத்துக் கணிப்பு இன்னும் எடுக்கப் படவில்லை! இந்த 70% கொஞ்சம் குறையலாம், ஆனால், இன்னும் பெரும்பான்மை அமெரிக்கர்கள் விலகலை ஆதரிக்கவே செய்வர்! , ஏன்? அமெரிக்க பெற்றோர், மனைவிமார் தங்கள் உறவுகளை கால வரையறையின்றி ஆப்கான் போருக்குப் பலியிட விரும்பவில்லை.

2. மேலும், எப்போதுமே தலிபான் அமெரிக்காவிற்கு நேரடியான அச்சுறுத்தலாக இருக்கவில்லை. பின் லாடனை ஒப்படைக்க மறுத்தது கூட அவர்களது பஷ்ரூன் விருந்தோம்பலின் வெளிப்பாடே ஒளிய , அமெரிக்காவினுள் தாக்கும் ஆர்வம் தலிபானுக்கு இருந்ததில்லை. சில தசாப்தங்களாக இன்டெலிஜன்ஸ் றிப்போட் பார்க்கக் கூடிய பல பதவிகளில் இருந்த பைடனுக்கு இது தெரியும்! -அப்படியானால் ஆப்கானில் ஏன் 20 வருடம்?

3. 20 ஆண்டுகளில், சில நூறு பில்லியன் டொலர்கள் செலவு, மூன்று லட்சம் ஆப்கான் படையினருக்கு சம்பளம், பயிற்சி, நவீன தளவாடங்கள், நவீன விமானப் படை- இதெல்லாம் நிமிர்த்தி விட்டு விலகுவோம் என்ற நோக்கத்தில். நடந்ததோ ஆப்கான் மட்டத்தில் ஊழலும், உட்சண்டையும், இல்லாத படை வீரர்களுக்குக் கணக்குக் காட்டி அமெரிக்காவின் பணத்தை பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்ட தலைவர்களும் தான்!

எனவே, இது பைடனின் பெரிய தவறல்ல!- ஆப்கான் தலைமையின் தோல்வியும் பொறுப்பற்ற தன்மையும் தான்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை இந்த நகர்வு ஒரு trial  உம் கூட! இனி வெளியுறவுக் கொள்கையில் இராணுவ பலத்தை முன்னிறுத்தி காரியம் சாதிக்க முயலாமல் வேறு வழிகளைப் பின்பற்ற இது ஒரு சமிக்ஞை!
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நீங்கள் சொல்லும் குறுகிய கால நோக்கிலான பார்வையை நான் முற்றாக ஏற்கிறேன்.

ஆனால்… இரண்டு வகையில் இது நீண்ட கால நோக்கில் அமெரிக்காவுக்கு ஆப்பாகவே அமையும் என நான் நினைக்கிறேன்.

1. அல்கொய்தா, ஐசில், போன்றோர் அடிவாங்கி, கொஞ்சம் கவர்ச்சி மங்கி கிடந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீதான கவர்சியை தலிபான்களின் இந்த வெற்றி மீட்டுக்கொடுக்கும்.  இது உலகெங்கும் எதிரொலிக்கும்.

சோவியத் மீதான பின்லேடன் உள்ளிட்ட முஜாகிதீன்களின் வெற்றி - ஒரு வல்லரைச வீழ்த்திய அல்லாவின் படைகள் என்ற வகையில் 80-2010 வரை பல இஸ்லாமிய இயக்கங்கள் வளர ஒரு inspiration ஆக இருந்தது. 

அதே போல்,

***

இந்த உத்வேகத்தின் பிரதிபலன் அமெரிக்கவை என்றோ ஒரு நாள் சுடும்.

2. தலிபான் அல்கொய்தாவுக்கு இடம் கொடுத்தமை தனியே பஹ்தோ விருந்தோம்பும் கலாச்சாரம் மட்டும் அல்ல. இந்திய விமானத்தை கந்தகாரில் கடத்தி வைக்க அனுமதித்து இந்திய சிறைகளில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுவிக்க உதவியது தொட்டு - இன்னொரு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கு உதவுவதை தம் மார்க்க கடமையாக தலிபான்கள் கருதுகிறார்கள். நிச்சயம் இதனால் அவர்கள் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் (உகிர்) எதிரான அமைபுக்களுக்கு பின் தளமாக ஆப்கானிஸ்தானை பாவிக்க, மறைமுகமாகவேணும் அனுமதிப்பார்கள். கிளிண்டன் செய்தது போல் வானத்தில் இருந்து சில டெண்ட் கொட்டகைகளை எரிக்க மட்டுமே அமெரிகாவால் முடியப்போகிறது அல்லது மீண்டும் ஒரு பெரும் எடுப்பில் போருக்கு பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

தலிபான்களுக்கு பாகிஸ்தான், ரஷ்யா, சீனா என ஒரு பெரும் உலக சக்தியே பின்னால் இருக்கிறது

இது மிக முக்கிய கரணம், தலபான்கள் நீடித்து நின்றதற்கு.

இரான் கூட தலபான் ஐ, மாதா அடிப்படியில் எதிர்த்ததே அன்றி அரசியல் அடிப்படையில் அல்ல.

மற்றும், ஆப்கானஸ்தானின், புவியில் அமைப்பும் மிக   முக்கிய கரணம், தலபான் இன் நீடிப்பிடற்கு.

பொதுவாக, தலபான் இற்கு வழங்கல் முற்றாக தடைப்படவில்லை.  
 
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஆண்கள் ஒடிவந்து ஏறுகிறார்கள்..
ஆனால் ஒரு பெண்ணை கூட காணவில்லை..??

ஆப்கனில் உள்ள பெண்களின் நிலை என்னவென்பதை நினைத்து பாருங்கள்..

இந்த —-தான் பெண்களை காப்பாற்றுவார்களாம்..

இஸ்லாமும்,தீவிரவாதமும் பிரிக்கமுடியாத ஒன்று என்று நான் சொல்லும் போது நடுநிலைவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை..

இந்தா பல்லாயிரத்தில் இன்னொரு சாட்சி..  🤐

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆப்கானிஸ்தானில் நடப்பதில் இருந்தும், அமெரிக்காவின் துரித வெளியேற்றத்தில் இருந்தும் நாம் சிலதை கற்கலாம்.

12 hours ago, goshan_che said:

2. எந்த பெரிய வல்லரசாக இருந்தாலும், இன்னும் சில பெரிய நாடுகளின் உதவியுடன் இருக்கும் இன்னொரு நாட்டை அடக்கி ஆழ முடியாது. கனகாலத்துக்கு. 

ஆகவே இலங்கையை அமெரிக்கா/இந்தியா/ சீனா படைகளை இறக்கி பிடிக்க போகிறது, 

அமெரிக்காவுடன் முண்டி, சீனா பக்கம் இலங்கை சார்ந்தால் அமெரிக்க படைகள் இறங்கும், இந்திய படைகள் இறங்கும் போன்ற கற்பனாவாதங்களை இனியாவது இறக்கி வைத்து விட்டு உண்மையை தரிசிப்போம்.

இதில் வேறுபாடு உள்ளது.

புலிகள் தோல்வியில் இருந்து தெரிகிறது, முற்றாக வழங்கல்களை தடுத்து விட்டு, ஒப்பிட்டளவில் பாரிய படை சக்தி பிரோயோகித்தால், இலங்கைத் தீவில் இருக்கும் ஆயுதம் தரித்த அரசியல் அமைப்பை அழிக்க முடியும் என்று.

காரணம், இலங்கையின் புவியியல், தீவு.

சிங்களம் அது வரைக்கும் போகுமா என்பது ஓர் கேள்வி.

அப்படி போனால், மற்றவர் எவரேனும் வழங்க எத்தனிப்பு எடுத்தாலும், வழங்கல்களை தடுத்து,      ஒப்பிட்டளவில் பாரிய படை சக்தி பிரோயோகிக்க கூடியது அமெரிக்கா.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எனக்கு அப்படி படவில்லை. 

முதலாவாது இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இலங்கை மீது வெளிநாட்டு இராணுவ நடவடிக்கை என்றால் அதை அத்தனை இலங்கை அரசியல் கட்சிகளும் எதிர்க்கும். தமிழ் கட்சிகளை தவிர.

சர்வதேச சட்டங்களின் படி use of force ற்கு ஒரு வரைமுறை உண்டு.

1. ஒன்றில் ஐநா பாதுகாப்பு சபை அங்கீகாரம் 

2. அல்லது தற்காப்பு (ஆப்கானில் அமெரிக்கா இறங்கியது)

3. அல்லது evolving சட்டம் என கருதப்படும் right to protect.

இந்த மூன்றும் இப்போ இலங்கைக்கு பொருந்தாது.

அப்படி செய்வதாயின் சட்சத்துக்கு புறம்பாக அமெரிக்கா இறங்க வேண்டும். 

அப்படி இறங்கினால் - அது அமெரிக்காவுக்கு பலத்த சிக்கலை தரும். ஐநா பொதுகுழுவில் கியூபா, முதல் க்ரிபாத்தி வரை எதிர்க்கும்.

தவிரவும் இலங்கை தீவு என்றாலும் நிச்சயம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வலுவான கெரில்லா அமைப்பு உருவாக அத்தனை சாத்தியமும் உள்ளது. அதற்கு வழங்கல் சீனாவில் இருந்து வந்தால் - நிச்சயம் அமெரிக்காவுக்கு அது இன்னொரு வியட்நாம், ஆப்கானிஸ்தானாக மாறும்.

எல்லாவற்றையும் விட, இலங்கையில் இத்தனை அக்கறை எடுக்கவேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை.

வெனிசுவேலாவில் கூட அமெரிக்கா  இறங்கவில்லை. சிரியாவில் கூட பின் வாங்கியது.

ஜோர்ஜ் புஷ் கால கொள்கை இப்போ மாறி விட்டது. அப்போது கூட கிளிண்டன் தன்சானிய தாக்குதலின் பின்னும் ஆப்கானில் வெறும் ஏவுகணைகளையே ஏவினார். இரெட்டை கோபுர தகர்ப்பும், முல்லா ஓமர் அல்கொய்தாவை கையளிக்க விரும்பாமையுமே புஸ்சை ஆப்கானில் இறங்க வைத்தது.

அமெரிக்கா இலங்கையில் இறங்கினால், நிச்சயம் ஒரு 20 வருட கெரில்லா போர், காடுகளில் நடக்கும். சிங்கள கெரில்லா படைகளை சீனாவும், ரஸ்யாவும் போசிக்கும்.

அமெரிக்கா இறங்காது. 

2 hours ago, குமாரசாமி said:

தொத்தி ஏறிய 3 வானில் பறக்கும் போது வீழ்ந்து மரணம் 🙁

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் போர்முறை பற்றி புலிகளின் மதியுரைஞர் போன்று தான்வாழ்ந்ததாக போர்க்காலத்திற்குப் பின்னர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட ஜெயபாலன் அவர்களின் செவ்விக்கு நேற்று நானெழுதிய மறுப்பறுப்பின் கரந்தடிப் போர்முறை தொடர்பான கருத்தினை இங்கும் பதிவிட விரும்புகிறேன். ஏனெனில் இங்கும் அது தொடர்பாக ஓடும்; ஓடுகிறது.

ஜெயபாலன் அவர்களின் திரியிற்கான கொழுவி: 

எதிர்காலத்தில் யாரேனும் புலிகள் ஏன் கரந்தடிப் போர்முறையினை தேரவில்லை எனக் கேட்டால் அவர்களுக்கு இது தெளிவிக்கும்.

(என்ர மூளையில் உதித்தவை)

" எனவே இந்த கரந்தடிப் போர்முறையினை ஈழத்தீவிற்கு ஏற்ற அனைத்தின் அடிப்படையிலும் அலசுவோம்.

இவர் எம்மின மக்கட்டொகையினை வைத்து கரந்தடிப் போர்முறையே அண்ணாக்களுக்கு சரியெனக் கூறியிருக்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் நானதை ஏற்கிறேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களே. ஆனால் இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு சாதித்திருக்க இயலும்?(இந்தியாக்காரனை மணலாற்றில் உருட்டி எடுத்ததை சிங்களவனோடு ஒப்பிடலாகாது என்பது என் கருத்து. அவன் புவியியல் அமைப்பினை அறியாமல் மோதி மூக்குடைபட்டவன். இவன் எமது தீவினையே சேர்ந்த பகை. இவனிற்கு எமது காடுகளின் புவியியல் அமைப்பு நன்கு தெரியும்.)

அண்ணாக்கள் போரிட்டது - படைத்துறை அகராதியின் படி - நிலத்தினைக் கைப்பற்றுவதற்காகவேயன்றி,  2 & 3 ஈழப்போர் காலத்தில் உலகெங்கும் கரந்தடிப் போர்முறை மூலம் போராடிய கிளர்ச்சி அமைப்புகள்(எ.கா: ஃவார்க், மாவொயிஸ்ற்) போல் அரசுடன் பேச்சு மூலம் தம்மையும் தாம்சார்ந்த இனத்தையும் ஒன்றிணைந்த நாட்டிற்குள்ளான அரசியலில் இணைப்பதற்காக அன்று.

இவர்கள் தனி நாட்டிற்காகப் போராடியதால், நிலத்தனை ஆள்வதற்காக மரபுவழியாக போரிடலாயினர். அதனால்தான் கடற்படையினையும் தரைப்படையினையும் கொண்டிருந்தனர். 'கடலை ஆள்பவன் தரையையும் ஆள்வான்' என்ற நிலைப்பாடு இவர்களுடையது. நீங்கள் அரசோடு உங்களுக்கென அதிகாரம்(மாவொயிஸ்ருக்களின் கொள்கையினை இங்கு கொள்க) வேண்டுவதற்காக போரிட்டால் நிலத்தினை ஆள வேண்டியதில்லை. 

மேலும், அண்ணாக்கள் செய்தது, போர் மூலமாக இயன்றளவு நிலத்தினையும், பின்னர் கிடைக்கும் இடத்தில் நிலைகொண்டு படைவலுச் சமநிலையினை ஏற்படுத்தி, கிடைக்கும் அரசியல் சந்தர்ப்பம் மூலம் தமிழீழமென வரையறுக்கப்பட்ட மிச்ச நிலத்தினையும் பெறக்கூடியளவு பெறுவதாகும். அதில் தம்மால் இயன்றளவு முயன்றனர். சிலகாலம் நிற்கவும் செய்தனர்.

மேலும் நான்காம் ஈழப்போரில் புலிகள் வடக்கில் மரபுவழிப்போரிலும் கிழக்கில் கரந்தடிப் போர்முறையிலும் ஈடுபட்டனர் என்பதை நினைவிற்கொள்க.

ஆனால் புவிசார் அரசியலில் கொள்ளத்தகா கொள்கையான 'தன்னிலத்தில் ஒரிஞ்சிகூட பிறருக்கு குத்தகைக்கும் தரமாட்டேன்' என்ற வீரமிகு பணியாக் கொள்கையினைக் கொண்டிருந்ததால் தோற்றுப்போகலாயினர்.

அடுத்து, இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு & காலம் சிங்களவருக்குப் போக்குக்காட்ட முடியும்? எந்தப் போர்முறையாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து போரிட உங்களுக்கு வழங்கல் சீராக இருத்தல் தேவை. அதிலும் கரந்தடிப் போர்முறைக்கு கண்டிப்பாக இருத்தல் வேண்டும். 

ஆனால் ஈழத்தீவின் புவியியல் அமைப்பு கரந்தடிப் போர்முறைக்கான ஆயுத வழங்கல்களுக்கு எதிரானது. ஏனெனில் தீவிற்குள் ஆயுதம் வர வேண்டுமெனில் கடல் வழியாகவே உள்வர வேண்டும். (2 & 3 ஈழப்போரில் சிங்களக் கடற்படை வளர்ந்து விட்டதென்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். போதாக்குறைக்கு இந்தியன் வேறு கழுகாக இருப்பான்.). எனவே சுப்பர் டோறாவைத் தாண்டி... நான் சொல்லி விளங்கும் அளவிற்கு வாசகர்களாகிய நீங்கள் இல்லை. ஒரு வேளை தாண்டிவிட்டாலும் எங்கே தரையிறக்குவீர்கள்? நீங்கள் வாங்கி அவனிட்டை கொடுத்ததாகத்தான் முடியும். 

 சரி, நீங்கள் இப்படி எண்ணலாம், சிங்கள பாதாளக் குழுக்களோடு கைகோர்த்து உள்க்கொணரலாமேயென... அவனுவள் கொண்டுவருவது பெரிய சமருக்கானது அன்று. குத்துவெட்டுகள் அளவிற்கானது மட்டுமே. மேலும் அவங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கட்சி மாறலாம்; காட்டிக்கொடுக்கலாம். நம்பிக்கையற்றவர்கள்! ஆதலால், உங்கள் போராட்ட வாழ்வாதாரத்திற்கான வழங்கலே இல்லாமல் போகும் போது எப்படிப் போரிடுவீர்கள்?

அடுத்து எமது தரப்பில் அக்காக்களும் களமுனையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு இயற்கையாக சில சிக்கல்கள் உள்ளதால் சிறப்புக் கவனிப்பு தேவை! அதற்கும் வழங்கல் சீராக இருக்க வேண்டும்.

அடுத்து மருத்துவமும், அதற்கான பின்தளமும். காவாலிகள் காலத்தில் தமிழ்நாட்டிற்கு(பின்தளமாக இருந்தது) மருத்துவச் சேவைக்கு சில பேர் சென்றனர். அங்கிருந்து எமது தளங்களுக்கு மருந்துகள் வந்து சேர்ந்தன. பின்னாளில் பின்தளமான தமிழ்நாடு இல்லாமல் போயிட கரந்தடியாக இருந்து காயக்காரரை என்ன செய்வீர்கள்? எங்கே கொண்டுபோவீர்கள்?

அடுத்து, கரந்தடிப் போர்முறையின் இன்னொரு பலவீனம் போராளியின் உற்றார் & உறவினர்கள் இலகுவில் இனங்காணப்பட்டு பகைவரால் கடுமையான உசாவலுக்கும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுவர்(தமிழ்நாட்டில் வீரப்பன் குழு சம்பவங்கள், வட இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளத்தில் நடைபெறுபவையினை கவனிக்குக). இது பல நாட்கள் தொடரும்போது போராளியினை உளவகையில் பாதிக்கும். அவர் பின்வாங்குவார், களத்திலிருந்து.

அடுத்து, அந்த காட்டுக் கதை... ஒன்றுமில்லாமல் எல்லா(!?) காட்டைப் பிடித்து என்ன மரங்களே வெட்டி விற்பது?அதுவும் சிங்கள காட்டுக்குள் போயிருந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?  ஜெயசிக்குறுயில் வந்தவன் ஆயிரம் இரண்டாயிரம் பேரில்லை. 20 ஆயிரம் பேர். எம்மவர் மரபுவழியென்பதால் பின்தளத்திற்கும் ஆள்விட்டு இவ்வளவு கொணர்ந்தான். இதுவே நீங்கள் ஒன்றும் பெரிதாக இல்லாத வெறும் காட்டுவாசி கரந்தடிப்படையாக இருந்திருந்தால் அத்தனை தென்னிலங்கை படைவெறியரையும் கொணர்ந்து மொங்கியிருப்பான். (மேலும், நீங்கள் கரந்தடி என்றால் உங்களிடம் ஆட்பலமும் ஆயுதபலமும் குறைவாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்க. எ.கா: இந்தியக் காவாலிகள் காலம்) நீங்கள் காட்டுக்குள்ளே இருக்க... அவன் காட்டைச் சுற்றி அடிக்கொருவன் என்று நிப்பாட்ட... ஒரே பம்பலா இருக்கும். போதாக்குறைக்கு கிபிர் மிக்கென்று.. கடவுளே! காட்டுக்குள்ளே இருக்கிற ஆட்கள் கொஞ்சக் காலத்தில் காட்டுக்குள்ளையே சமாதி ஆக வேண்டியதுதான்! "

Edited by நன்னிச் சோழன்
added a link

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எனக்கு அப்படி படவில்லை. 

முதலாவாது இலங்கை ஒரு ஜனநாயக நாடு.

அமெரிக்கா இறங்காது. 

பெயருக்காவது ஒரு ஜனநாயகத்தை வைத்திருக்கிறார்கள் - அது தமிழருக்கு பயன் தரவில்லை என்பது வேறு பிரச்சினை. மகிந்தவின் சட்ட விரோத ஆட்சிக் கைப்பற்றலை உயர் நீதிமன்றம் தடுத்தது சிறிலங்காவின் செயற்படும் ஜனநாயகத்திற்கு அண்மைய உதாரணம்!

ஆனால், இதைச் சுட்டிக் காட்டினால் சிறிலங்கா ஏஜெண்ட் என்றல்லவா திட்டுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

உண்மையில் ஜனநாயகம் என்பது தனியே பெரும்பான்மை வாக்களாரின் ஆட்சி அல்ல. அதில் சட்டத்தின் ஆளுமை, கருத்து சுதந்திரம், சிறுபான்மை நலன் என பல விடயங்கள் உள்ளன.

உண்மையில் இலங்கையில் நடப்பது majority’s mob rule. 

ஆனால் இதை உலகில் யாரும் அப்படி பார்ப்பதில்லை என்பதுதான் மகா சோகம்.

சிங்களவரை பொறுத்த வரையில் மட்டும் அல்ல, ஐநாவில் இருக்கும் 190 சொச்ச நாடுகளும் இலங்கையை என்றே பார்கிறன.

இஸ்ரேலும், பலஸ்தீனமும், அமெரிக்காவும், ரஸ்யாவும், சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் எதிரும் புதிருமான பலரும் இலங்கையினை இப்படி பார்த்துதான் நட்புப்பாராட்டி வருகிறனர்.

இனச்சிறுபான்மையை மிக மோசமாக வஞ்சிக்கும் ஒரு நாடு, உண்மையில் பெளத்த மதகுருமார் கையில் சிக்கி அழியும் ஒரு indirect theocracy என்ற உண்மை தமிழர்கள் நமக்கு மட்டும்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நன்னிச் சோழன் said:

புலிகளின் போர்முறை பற்றி புலிகளின் மதியுரைஞர் போன்று தான்வாழ்ந்ததாக போர்க்காலத்திற்குப் பின்னர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட ஜெயபாலன் அவர்களின் செவ்விக்கு நேற்று நானெழுதிய மறுப்பறுப்பின் கரந்தடிப் போர்முறை தொடர்பான கருத்தினை இங்கும் பதிவிட விரும்புகிறேன். ஏனெனில் இங்கும் அது தொடர்பாக ஓடும்; ஓடுகிறது.

ஜெயபாலன் அவர்களின் திரியிற்கான கொழுவி: 

எதிர்காலத்தில் யாரேனும் புலிகள் ஏன் கரந்தடிப் போர்முறையினை தேரவில்லை எனக் கேட்டால் அவர்களுக்கு இது தெளிவிக்கும்.

(என்ர மூளையில் உதித்தவை)

" எனவே இந்த கரந்தடிப் போர்முறையினை ஈழத்தீவிற்கு ஏற்ற அனைத்தின் அடிப்படையிலும் அலசுவோம்.

இவர் எம்மின மக்கட்டொகையினை வைத்து கரந்தடிப் போர்முறையே அண்ணாக்களுக்கு சரியெனக் கூறியிருக்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் நானதை ஏற்கிறேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களே. ஆனால் இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு சாதித்திருக்க இயலும்?(இந்தியாக்காரனை மணலாற்றில் உருட்டி எடுத்ததை சிங்களவனோடு ஒப்பிடலாகாது என்பது என் கருத்து. அவன் புவியியல் அமைப்பினை அறியாமல் மோதி மூக்குடைபட்டவன். இவன் எமது தீவினையே சேர்ந்த பகை. இவனிற்கு எமது காடுகளின் புவியியல் அமைப்பு நன்கு தெரியும்.)

அண்ணாக்கள் போரிட்டது - படைத்துறை அகராதியின் படி - நிலத்தினைக் கைப்பற்றுவதற்காகவேயன்றி,  2 & 3 ஈழப்போர் காலத்தில் உலகெங்கும் கரந்தடிப் போர்முறை மூலம் போராடிய கிளர்ச்சி அமைப்புகள்(எ.கா: ஃவார்க், மாவொயிஸ்ற்) போல் அரசுடன் பேச்சு மூலம் தம்மையும் தாம்சார்ந்த இனத்தையும் ஒன்றிணைந்த நாட்டிற்குள்ளான அரசியலில் இணைப்பதற்காக அன்று.

இவர்கள் தனி நாட்டிற்காகப் போராடியதால், நிலத்தனை ஆள்வதற்காக மரபுவழியாக போரிடலாயினர். அதனால்தான் கடற்படையினையும் தரைப்படையினையும் கொண்டிருந்தனர். 'கடலை ஆள்பவன் தரையையும் ஆள்வான்' என்ற நிலைப்பாடு இவர்களுடையது. நீங்கள் அரசோடு உங்களுக்கென அதிகாரம்(மாவொயிஸ்ருக்களின் கொள்கையினை இங்கு கொள்க) வேண்டுவதற்காக போரிட்டால் நிலத்தினை ஆள வேண்டியதில்லை. 

மேலும், அண்ணாக்கள் செய்தது, போர் மூலமாக இயன்றளவு நிலத்தினையும், பின்னர் கிடைக்கும் இடத்தில் நிலைகொண்டு படைவலுச் சமநிலையினை ஏற்படுத்தி, கிடைக்கும் அரசியல் சந்தர்ப்பம் மூலம் தமிழீழமென வரையறுக்கப்பட்ட மிச்ச நிலத்தினையும் பெறக்கூடியளவு பெறுவதாகும். அதில் தம்மால் இயன்றளவு முயன்றனர். சிலகாலம் நிற்கவும் செய்தனர்.

மேலும் நான்காம் ஈழப்போரில் புலிகள் வடக்கில் மரபுவழிப்போரிலும் கிழக்கில் கரந்தடிப் போர்முறையிலும் ஈடுபட்டனர் என்பதை நினைவிற்கொள்க.

ஆனால் புவிசார் அரசியலில் கொள்ளத்தகா கொள்கையான 'தன்னிலத்தில் ஒரிஞ்சிகூட பிறருக்கு குத்தகைக்கும் தரமாட்டேன்' என்ற வீரமிகு பணியாக் கொள்கையினைக் கொண்டிருந்ததால் தோற்றுப்போகலாயினர்.

அடுத்து, இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு & காலம் சிங்களவருக்குப் போக்குக்காட்ட முடியும்? எந்தப் போர்முறையாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து போரிட உங்களுக்கு வழங்கல் சீராக இருத்தல் தேவை. அதிலும் கரந்தடிப் போர்முறைக்கு கண்டிப்பாக இருத்தல் வேண்டும். 

ஆனால் ஈழத்தீவின் புவியியல் அமைப்பு கரந்தடிப் போர்முறைக்கான ஆயுத வழங்கல்களுக்கு எதிரானது. ஏனெனில் தீவிற்குள் ஆயுதம் வர வேண்டுமெனில் கடல் வழியாகவே உள்வர வேண்டும். (2 & 3 ஈழப்போரில் சிங்களக் கடற்படை வளர்ந்து விட்டதென்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். போதாக்குறைக்கு இந்தியன் வேறு கழுகாக இருப்பான்.). எனவே சுப்பர் டோறாவைத் தாண்டி... நான் சொல்லி விளங்கும் அளவிற்கு வாசகர்களாகிய நீங்கள் இல்லை. ஒரு வேளை தாண்டிவிட்டாலும் எங்கே தரையிறக்குவீர்கள்? நீங்கள் வாங்கி அவனிட்டை கொடுத்ததாகத்தான் முடியும். 

 சரி, நீங்கள் இப்படி எண்ணலாம், சிங்கள பாதாளக் குழுக்களோடு கைகோர்த்து உள்க்கொணரலாமேயென... அவனுவள் கொண்டுவருவது பெரிய சமருக்கானது அன்று. குத்துவெட்டுகள் அளவிற்கானது மட்டுமே. மேலும் அவங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கட்சி மாறலாம்; காட்டிக்கொடுக்கலாம். நம்பிக்கையற்றவர்கள்! ஆதலால், உங்கள் போராட்ட வாழ்வாதாரத்திற்கான வழங்கலே இல்லாமல் போகும் போது எப்படிப் போரிடுவீர்கள்?

அடுத்து எமது தரப்பில் அக்காக்களும் களமுனையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு இயற்கையாக சில சிக்கல்கள் உள்ளதால் சிறப்புக் கவனிப்பு தேவை! அதற்கும் வழங்கல் சீராக இருக்க வேண்டும்.

அடுத்து மருத்துவமும், அதற்கான பின்தளமும். காவாலிகள் காலத்தில் தமிழ்நாட்டிற்கு(பின்தளமாக இருந்தது) மருத்துவச் சேவைக்கு சில பேர் சென்றனர். அங்கிருந்து எமது தளங்களுக்கு மருந்துகள் வந்து சேர்ந்தன. பின்னாளில் பின்தளமான தமிழ்நாடு இல்லாமல் போயிட கரந்தடியாக இருந்து காயக்காரரை என்ன செய்வீர்கள்? எங்கே கொண்டுபோவீர்கள்?

அடுத்து, கரந்தடிப் போர்முறையின் இன்னொரு பலவீனம் போராளியின் உற்றார் & உறவினர்கள் இலகுவில் இனங்காணப்பட்டு பகைவரால் கடுமையான உசாவலுக்கும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுவர்(தமிழ்நாட்டில் வீரப்பன் குழு சம்பவங்கள், வட இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளத்தில் நடைபெறுபவையினை கவனிக்குக). இது பல நாட்கள் தொடரும்போது போராளியினை உளவகையில் பாதிக்கும். அவர் பின்வாங்குவார், களத்திலிருந்து.

அடுத்து, அந்த காட்டுக் கதை... ஒன்றுமில்லாமல் எல்லா(!?) காட்டைப் பிடித்து என்ன மரங்களே வெட்டி விற்பது?அதுவும் சிங்கள காட்டுக்குள் போயிருந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?  ஜெயசிக்குறுயில் வந்தவன் ஆயிரம் இரண்டாயிரம் பேரில்லை. 20 ஆயிரம் பேர். எம்மவர் மரபுவழியென்பதால் பின்தளத்திற்கும் ஆள்விட்டு இவ்வளவு கொணர்ந்தான். இதுவே நீங்கள் ஒன்றும் பெரிதாக இல்லாத வெறும் காட்டுவாசி கரந்தடிப்படையாக இருந்திருந்தால் அத்தனை தென்னிலங்கை படைவெறியரையும் கொணர்ந்து மொங்கியிருப்பான். (மேலும், நீங்கள் கரந்தடி என்றால் உங்களிடம் ஆட்பலமும் ஆயுதபலமும் குறைவாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்க. எ.கா: இந்தியக் காவாலிகள் காலம்) நீங்கள் காட்டுக்குள்ளே இருக்க... அவன் காட்டைச் சுற்றி அடிக்கொருவன் என்று நிப்பாட்ட... ஒரே பம்பலா இருக்கும். போதாக்குறைக்கு கிபிர் மிக்கென்று.. கடவுளே! காட்டுக்குள்ளே இருக்கிற ஆட்கள் கொஞ்சக் காலத்தில் காட்டுக்குள்ளையே சமாதி ஆக வேண்டியதுதான்! "

நன்னி,

புலிகள் 2005-2009 பகுதியில் மீளவும் ஏன் கரந்தடி முறைக்கு மாற முடியவில்லை என்பதை களத்தில் நின்ற பகலவன் அண்ணா @பகலவன்  மிக தெளிவான தரவுகளோடு விளக்கி, எனது பதிவுக்கு ஒரு பதில் எழுதி இருந்தார்.

தேடிப்பார்கிறேன் காணவில்லை.

@கிருபன் ஜி ஒருக்கால் நேரம் கிடைக்கும் போது தேடி இணைத்து விடுங்கள்.

நன்னி அதை உங்கள் ஆவணக்காப்பில் சேர்க்கலாம் - அத்தனை விசயம் அந்த ஒரு பதிவில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களைப் புகழ்வதும், புலிகளுடன் அவர்களை ஒப்பிட்டு எழுதுவதும் அபத்தமானது.

புலிகள் போராடியது தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக. தலிபான் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதக் காட்டுமிராண்டிகள் போராடுவது கற்காலத்து , நாகரீகமற்ற ஒரு சமூகத்தை, பெண்களை கால்நடைகளாகப் பார்க்கும் ஒரு சமூகத்தை ஆப்கானிஸ்த்தானிலும், உலகெங்கிலும் உருவாக்குவதற்கு. இதற்குள் புலிகளைக் கொண்டுவந்து ஒப்புநோக்குபவர்கள் இதுவரையில் புலிகள் எதற்காகப் போராடினார்கள் என்கிற தெளிவு இல்லாமலேயே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

தலிபான்கள் இதுவரையில் அழியாமல் இருப்பதற்குக் காரணம் பாக்கிஸ்த்தானியர்கள்தான். தலிபான்களை உருவாக்கியவர்களும், இன்றுவரை தனது எல்லைகளைத் திறந்து அடைக்கலம் கொடுத்தவர்களும் பாக்கிஸ்த்தானியர்களே. தமக்குச் சார்பான, தமது சொல்கேட்கும் இஸ்லாமிய நாடொன்று அருகிலிருப்பது தமக்கு அவசியம் என்று கருதியதாலேயே பாக்கிஸ்த்தான் இன்றுவரை தலிபான்களை ஆதரித்து வருகிறது. இன்னொருவகையில் சொல்லப்போனால், ஆப்கானிஸ்த்தானை தனது முன்னரங்காக பாக்கிஸ்த்தான் பார்க்கிறது. 

தலிபான்களோ அல்லது அவர்கள் அடைக்கலம் கொடுத்த அல்கைடாவோ 2001 இல் அமெரிக்கர்கள் அப்கானிஸ்த்தானுக்குள் நுழைந்தபோது பாக்கிஸ்த்தானுக்குள் போய்த்தான் ஒளிந்துகொண்டார்கள். பின்லாடன் கூட பாக்கிஸ்த்தானின் அபொட்டாபாத்தில் , பாக்கிஸ்த்தானிய ராணுவ தலைமையகத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர்கள் தொலைவிலேயே பாதுகாப்பாக தங்கியிருந்தார். 

ஆனால் புலிகளுக்கு அடைக்கலம் தேடுவதற்கோ அல்லது வழங்கல்கலைத் தொடர்ச்சியாக கொண்டு நடத்தவோ அயல்நாடென்று ஒன்று இருக்கவில்லை. இந்தியா புலிகளை அழிக்கத் தருணம் பார்த்திருந்ததே ஒழிய தனது எல்லையினைத் திறந்து புலிகளை உள்வாங்கவில்லை. இதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்த்தானுக்குள் அமெரிக்கா போய் இறங்கிய  நாட்களிலிருந்தே பாக்கிஸ்த்தானிய அரசும் ராணுவமும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்த்தானில் கால்வைக்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் கூட கந்தகாரிலிருந்து தனது விமானப்படை விமானங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான தலிபான் மற்றும் அல்கைடா போராளிகளை பாக்கிஸ்த்தானிய அரசு பாதுகாப்பாக பாக்கிஸ்த்தானுக்குள் கொண்டுவந்து சேர்த்தது.  தனது ராணுவத்தினரையே அகற்றிக்கொள்கிறோம் என்று கூறிக்கொண்டு பாக்கிஸ்த்தான் ராணுவம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையே அப்போது பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. அமெரிக்காவுக்கு இது தெரிந்திருந்தும், பாக்கிஸ்த்தானின் உதவியில்லாமல் அல்கைடாவுக்கெதிரான யுத்தத்தில் ஜெயிக்க முடியாது என்பதற்காக மெளனமாக இருந்தார்கள். 

அமெரிக்கா தாக்கும்போது பாக்கிஸ்த்தானுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் தலிபான்களும், அல்கைடா பயங்கரவாதிகளும், அமெரிக்கப்படையின் தாக்குதல் முடிந்தபின்னர் மீண்டும் ஆப்கான் - பாக்கிஸ்த்தான் எல்லையூடா நடந்துவந்து தமது இடங்களில் பதுங்கிக் கொண்டார்கள். இதனாலேயே தமது தாக்குதல் தொடர்பான விடயங்களை பாக்கிஸ்த்தான் அரசுடன் கலந்தாலோசிப்பதை அமெரிக்கர்கள் நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. 2010 இல் நடைபெற்ற ஒசாமா மீதான தாக்குதல் பாக்கிஸ்த்தான் அரசுக்குத் தெரியாமலேயே அமெரிக்கர்களால் நடத்தப்பட்டது. தமது தாக்குதல்பற்றி பாக்கிஸ்த்தான் அறிந்துகொண்டால், ஒஸாமாவைத் தப்பவைத்துவிடுவார்கள்  என்கிற அச்சம் தமக்கு இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

இதற்குள் புலிகளைக் கொண்டுவந்து ஒப்புநோக்குபவர்கள் இதுவரையில் புலிகள் எதற்காகப் போராடினார்கள் என்கிற தெளிவு இல்லாமலேயே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அவர்கள் கொழும்பில் இருந்து போராட்டத்தை பார்த்தவர்கள்.

அவர்களை பொறுத்த வரை மதம்தான் முக்கியம்.

அதானால்தான் அபலை தமிழ் சிறுமிக்கு ஒரு வார்த்தை அனுதாபப்படாமல், ரிசாத்தை நினைத்து நெஞ்சுருகும் படியாயிற்று.

இலங்கையில் தமிழர்களை விரோதிகளாக பார்க்கும் வேற்று மத/இனத்தவரிடம் புலிகள் ஏன் போராடினார்கள் என்ற விளக்கம் இருக்கும் என எதிர்பார்ப்பது எமது தவறு.

7 minutes ago, ரஞ்சித் said:

ஆப்கானிஸ்த்தானுக்குள் அமெரிக்கா போய் இறங்கிய  நாட்களிலிருந்தே பாக்கிஸ்த்தானிய அரசும் ராணுவமும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்த்தானில் கால்வைக்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் கூட கந்தகாரிலிருந்து தனது விமானப்படை விமானங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான தலிபான் மற்றும் அல்கைடா போராளிகளை பாக்கிஸ்த்தானிய அரசு பாதுகாப்பாக பாக்கிஸ்த்தானுக்குள் கொண்டுவந்து சேர்த்தது.  தனது ராணுவத்தினரையே அகற்றிக்கொள்கிறோம் என்று கூறிக்கொண்டு பாக்கிஸ்த்தான் ராணுவம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையே அப்போது பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. அமெரிக்காவுக்கு இது தெரிந்திருந்தும், பாக்கிஸ்த்தானின் உதவியில்லாமல் அல்கைடாவுக்கெதிரான யுத்தத்தில் ஜெயிக்க முடியாது என்பதற்காக மெளனமாக இருந்தார்கள். 

அமெரிக்கா தாக்கும்போது பாக்கிஸ்த்தானுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் தலிபான்களும், அல்கைடா பயங்கரவாதிகளும், அமெரிக்கப்படையின் தாக்குதல் முடிந்தபின்னர் மீண்டும் ஆப்கான் - பாக்கிஸ்த்தான் எல்லையூடா நடந்துவந்து தமது இடங்களில் பதுங்கிக் கொண்டார்கள். இதனாலேயே தமது தாக்குதல் தொடர்பான விடயங்களை பாக்கிஸ்த்தான் அரசுடன் கலந்தாலோசிப்பதை அமெரிக்கர்கள் நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. 2010 இல் நடைபெற்ற ஒசாமா மீதான தாக்குதல் பாக்கிஸ்த்தான் அரசுக்குத் தெரியாமலேயே அமெரிக்கர்களால் நடத்தப்பட்டது. தமது தாக்குதல்பற்றி பாக்கிஸ்த்தான் அறிந்துகொண்டால், ஒஸாமாவைத் தப்பவைத்துவிடுவார்கள்  என்கிற அச்சம் தமக்கு இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். 
 
ஐ எஸ் ஐ யின் உதவி மட்டும் இல்லாவிட்டால் இப்ப தலிபான் என்ற கதையே இராது.

1998 இல் தாலிபான்கள் மசார் ஈ சரிப்பில் ஈரானிய தூதுவராலயத்தை தாக்கி சிலரை கொன்றார்கள். ஈரான் கிட்டதட்ட படை எடுக்கும் நிலைக்கு போனபின் பாகிஸ்தான் தலையிட்டு சமாதானம் செய்தது.

இப்போதும், ஷியா ஈரானுக்கு எதிரான தடை கல்லாகவே, சன்னி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் இன்னமும் அழியாமல் இருப்பதற்குக் காரணம் பாக்கிஸ்த்தானே.  இதனாலேயே கடந்த 20 வருடங்களாக ஆயிரக்கணக்கான மேற்குநாட்டு ராணுவவீரர்களைப் பலிகொடுத்தும், கோடிக்கணக்கான பணத்தினை விரயமாக்கியும், முடிவில்லாத போராக இது நடைபெற்று வந்தது. தமது பிள்ளைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டவும், பெரும் பண விரயத்தினை ஏற்படுத்தியும் நடந்துவந்த இப்போரினை அமெரிக்கர்கள் நிறுத்தவே விரும்பினார்கள். ஜனநாயகக் கட்சி மட்டுமல்லாமல் குடியரசுக் கட்சியினர் கூட தமது ராணுவம் விலக்கப்படவேண்டும் என்று கூறத் தொடங்கினார்கள்.

தனது தேர்தல் கால வாக்குறுதிகளின்படி ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவத்தினரை மீள அழைத்துக்கொள்ளத் தொடங்கினார் ஒபாமா. ஆப்கானிஸ்த்தானிலிருந்தும் ராணுவத்தினரை அழைத்துக்கொள்ளும் திட்டத்தினை ஒபாமா அப்போது கொண்டிருந்தார். ஆனால், தலிபான்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகலை ஆரம்பித்து ராணுவத்தினரை முற்றாக வெளியேற்ற கால நிர்ணயத்தில் ஈடுபட்டவர் டொனால்ட் ட்ரம்ப்தான். அமெரிக்க ராணுவத்தினரைத் தாக்குவதை நிறுத்துங்கள், நாம் கூறியபடி விலகிக்கொள்கிறோம் என்று தலிபான்களிடம் ட்ரம்ப் தெரிவித்ததாகவும், அதன்படி கட்டாரில் நடந்த பேச்சுவார்த்தைகளின்படி அமெரிக்க ராணுவத்தினர் மீது  தாக்குவதை தலிபான்கள் நிறுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆக, இன்று பெய்டன் செய்திருப்பது ட்ரம்பினால் ஆரம்பிக்கப்பட்ட படை விலகலை துரிதப்படுத்தியதுதான். ஆனால், இந்த துரிதப்படுத்தப்பட்ட படைவிலகலை தீர்மானித்த பெய்டன், அதன்பின்னரான சூழ்நிலையினையோ அல்லது ஆப்கான் அரசப் படைகள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதையோ அறிந்திருக்கவில்லையென்றும், கடந்த மாதம் வரை "அரச படைகள் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிப்பார்கள், தலிபான்களால் ஒருபோதுமே ஆப்கானிஸ்த்தானை முற்றாகக் கைப்பற்ற முடியாது" என்றும் கூறிவந்தார். ஆனால், அவரின் தளபதிகள் பலர் தலிபான்கள் நிச்சயமாக ஆப்கானிஸ்த்தானைப் பிடிப்பார்கள் என்றும் , அரச படைகளால் இதனைத் தடுக்கமுடியாதென்றும் பெய்டனிடம் கூறியதாகவும், ஆனால் அவற்றினை அவர் கருத்தில் எடுக்கவில்லையென்றும் கூறுகிறார்கள். 

வியட்நாமிய சைகோன்  பின்வாங்கலுக்கு நிகரான, படுதோல்விகரமான பின்வாங்கல் என்று இன்றைய காபூல் பின்வாங்கலை மேற்குலகப்  பத்திரிக்கைகள் வர்ணிக்கின்றன. 

ராணுவத்தை மீளப் பெற்றுக்கொள்வது அமெரிக்கர்களின் விருப்பமாக இருக்கலாம், ஆனால் தமது பிள்ளைகளின் மரணங்கள் வீண்போய்விட்டதான உணர்வும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீண்டும் அங்கே கோலோட்சும் நிகழவும், ஆப்கானிஸ்த்தான் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக மாறவிருப்பதும் நிச்சயமாக அமெரிக்கர்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. இதற்கான விலையினை பெய்டனும், அவரது கட்சியும் அடுத்த தேர்தல்களில் நிச்சயம் செலுத்தவேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் யாழ் நோக்கிய படையெடுப்பின்போது, ஒருகட்டத்தில் பலத்த உயிரிழப்புகளுக்குப் பின்னர் தமது திட்டத்தைக் கைவிட்டு முகமாலையில் தமது முன்னரங்கினை அமைத்துக்கொண்டார்கள். சாவகச்சேரிப் பகுதியில் ராணுவத்தினரின் பல்குழல் எறிகனை வீச்சில் பல போராளிகள் கொல்லப்பட்டும், சாவகச்சேரி நகர் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டதும் புலிகள் இப்பகுதிகளை விட்டுப் பின்வாங்கக் காரணமாகியது.

அண்மையில் பால்ராஜ் அண்ணாவின் செவ்வியொன்றினை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில், தாம் யாழ்நகர்மீதான படையெடுப்பினை தொடரமுடியாமல்ப் போனதற்குக் காரணம் கடுமையான ஆள்ப்பற்றாக்குறையே என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். தன்னிடம் இன்னும் ஒரு ஆயிரம் போராளிகள் இருந்தால் ராணுவத்தினரை இரு வழிகளில் மறித்து, முற்றான முற்றுகைக்குள் கொண்டுவந்து பலாலிவரை சென்றிருப்போம் என்று கவலையுடன் கூறினார். இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது சமாதான காலத்தில்.

வடக்கிலிருந்த ராணுவத்தினருக்கான கடல்வழி வழங்கல்ப்பாதையினை புலிகள் துண்டித்து, பலாலி விமானப்படைத்தளம் புலிகளின் எறிகணை வீச்செல்லைக்குள் வந்தபோது அங்கிருந்த 40,000 ராணுவத்தினரை பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு சந்திரிக்கா இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை செய்யமுடியாது என்று மறுத்துவிட்ட வாஜ்பேய் அரசு , யாழ்நகர் மீதான புலிகளின் படையெடுப்பினை நிறுத்துமாறு கேட்டதாகச் செய்திகள் வந்தன. ஆனால் பால்ராஜ் அண்ணாவின் செவ்வியில் ஒருகணமேனும் இந்திய அழுத்தத்தினாலேயே நாம் யாழ்மீதான படையெடுப்பினைக் கைவிட்டோம் என்று கூறியதாக நினைவில்லை. 

56 minutes ago, goshan_che said:

நன்னி,

புலிகள் 2005-2009 பகுதியில் மீளவும் ஏன் கரந்தடி முறைக்கு மாற முடியவில்லை என்பதை களத்தில் நின்ற பகலவன் அண்ணா @பகலவன்  மிக தெளிவான தரவுகளோடு விளக்கி, எனது பதிவுக்கு ஒரு பதில் எழுதி இருந்தார்.

தேடிப்பார்கிறேன் காணவில்லை.

@கிருபன் ஜி ஒருக்கால் நேரம் கிடைக்கும் போது தேடி இணைத்து விடுங்கள்.

நன்னி அதை உங்கள் ஆவணக்காப்பில் சேர்க்கலாம் - அத்தனை விசயம் அந்த ஒரு பதிவில் உண்டு.

இதுவா என்று பாருங்கள் : 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

புலிகளின் யாழ் நோக்கிய படையெடுப்பின்போது, ஒருகட்டத்தில் பலத்த உயிரிழப்புகளுக்குப் பின்னர் தமது திட்டத்தைக் கைவிட்டு முகமாலையில் தமது முன்னரங்கினை அமைத்துக்கொண்டார்கள். சாவகச்சேரிப் பகுதியில் ராணுவத்தினரின் பல்குழல் எறிகனை வீச்சில் பல போராளிகள் கொல்லப்பட்டும், சாவகச்சேரி நகர் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டதும் புலிகள் இப்பகுதிகளை விட்டுப் பின்வாங்கக் காரணமாகியது.

அண்மையில் பால்ராஜ் அண்ணாவின் செவ்வியொன்றினை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில், தாம் யாழ்நகர்மீதான படையெடுப்பினை தொடரமுடியாமல்ப் போனதற்குக் காரணம் கடுமையான ஆள்ப்பற்றாக்குறையே என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். தன்னிடம் இன்னும் ஒரு ஆயிரம் போராளிகள் இருந்தால் ராணுவத்தினரை இரு வழிகளில் மறித்து, முற்றான முற்றுகைக்குள் கொண்டுவந்து பலாலிவரை சென்றிருப்போம் என்று கவலையுடன் கூறினார். இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது சமாதான காலத்தில்.

வடக்கிலிருந்த ராணுவத்தினருக்கான கடல்வழி வழங்கல்ப்பாதையினை புலிகள் துண்டித்து, பலாலி விமானப்படைத்தளம் புலிகளின் எறிகணை வீச்செல்லைக்குள் வந்தபோது அங்கிருந்த 40,000 ராணுவத்தினரை பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு சந்திரிக்கா இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை செய்யமுடியாது என்று மறுத்துவிட்ட வாஜ்பேய் அரசு , யாழ்நகர் மீதான புலிகளின் படையெடுப்பினை நிறுத்துமாறு கேட்டதாகச் செய்திகள் வந்தன. ஆனால் பால்ராஜ் அண்ணாவின் செவ்வியில் ஒருகணமேனும் இந்திய அழுத்தத்தினாலேயே நாம் யாழ்மீதான படையெடுப்பினைக் கைவிட்டோம் என்று கூறியதாக நினைவில்லை. 

இந்த பேட்டியை முடிந்தால் பகிரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த பேட்டியை முடிந்தால் பகிரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இணையவன் said:

இதுவா என்று பாருங்கள் : 

இதுதான் இணையவன். நன்றி.

நன்னியும் அதே திரியில் கருத்தெழுதி உள்ளார். எனவே வாசித்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.