Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...

poli_image258.jpg

'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். 

விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து நான் மட்டுமல்ல இந்த அரசே பெருமைப்படுகிறது.

imaege_poli_25821.jpg

'இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி', 'கனவு மாநிலத்தையே உருவாக்கிய மகத்தான சிற்பி', 'அரை நூற்றாண்டு காலத்தின் நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்த முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நவீன விளக்கப்படங்களுடன் சென்னை காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் காணி பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

திமுக அரசு பதவியேற்றதும் சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் அறிவிப்பு இது என்பதாலும், கலைஞரின் நினைவிடத்தின் மாதிரி தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதாலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/112004

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழக அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில்,

இப்படியான வீண் செலவுகள் செய்யலாமா

இதனை… கருணாநிதியே விரும்ப மாட்டார். 😎😎😎😎😎😎😎😎

அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்றால் மறுக்க மாட்டார்........!  😎

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

குமாரசாமி அண்ணை… அதற்கு பல காரணங்கள் உள்ளது.

1) முன் உள்ள பேனை தான்…. கருணாநிதி.

அவருக்குப் பின்…. ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி…. என்று மன்னர் ஆட்சியை  குறிக்கின்றது.

2) மனைவி, துணைவி, காதலி என்று அவருடன்….  வாழ்ந்த அம்மணிகளை குறிக்கின்றது. என நினைக்கின்றேன்.

10 minutes ago, suvy said:

அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்றால் மறுக்க மாட்டார்........!  😎

முன்பு அப்படி இருந்திருக்கலாம். கடைசிக் காலத்தில்… தமிழரை காப்பாற்ற வந்த, “கட்டு மரம்” என்று சொல்லிய உத்தமர்.

  • கருத்துக்கள உறவுகள்

1) உடன்பிறப்புகளை விலக்கு.....!

2) ஊழலைப்  பெருக்கு.........!

3) உறவுகளை அணைத்துக் கொள் .......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

1. கடமை (குடும்பத்துக்கு)

2. கண்ணியம் ( கிலோ என்னவிலை?)

3. கட்டுப்பாடு (இன உணர்வுக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சுனாமி எப்ப வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நந்தன் said:

அடுத்த சுனாமி எப்ப வரும் 

ம‌க்க‌ளுக்கு பாதிப்பு இல்லாம‌ சுனாமி வ‌ந்து மெரினாவை த‌ர‌ம‌ட்ட‌ம் ஆக்கினா ம‌கிழ்ச்சி யுவ‌ர் ஆன‌ர் ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர்

வேறு நாட்டவர்கள் கலைஞரை விமர்சிப்பதை விடுங்கள், அத்தனை புகழ்வாய்ந்த கலைஞரை சொந்த மாநில மக்கள் நிரந்தர முதல்வர் பதவியில் வைத்து அல்லவா அழகு பார்த்திருக்கவேண்டும், ஏன் செய்யவில்லை?

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தவரை முதல்வர் நாற்காலி இருந்தபக்கமா கலைஞர் சும்மா போய் வரகூட தமிழக மக்கள் அனுமதிக்கவில்லை.

அண்ணா இறப்பின் பின்னர் பல போட்டியாளர்களின் நடுவில் கலைஞரை முதல்வர் பதவியில் அமர்த்தியதே எம்ஜிஆர்தான் எங்கிறது வரலாறு.

பின்பு அதே எம்ஜிஆர் மக்களின் அமோக ஆதரவுடன் கருணாநிதியின் முதல்வர்  நாற்காலியை பறிச்சுபோட்டு அங்கால ஓடிபோ என்று கலைச்சுவிட்டார் என்பதும் வரலாறு. 

பின்பு ஜெயலலிதா காலத்திலும் அதே நிலை, தமிழின தலைவர் என்று கருணாநிதி தனக்குதானே போஸ்டர் அடிச்சுவிட்டுக்கொண்டு திரிஞ்ச காலத்தில் சாதாரண நடிகையா இருந்த ஜெயலலிதா பின்னாளில் முதல்வரானதும் அவர்கிட்டையே பலமுறை படுதோல்வியடைந்தது இந்த 80 வருசமா தமிழ் சமுதாயத்துக்கு உழைத்த போராளியின் கட்சி.

ஜெயலலிதாவும் எம்ஜிஆர் உருவாக்கிய ஒரு கட்சியில் இருந்த ஒரே காரணத்தினால்தான்  திடீர் புரட்சி தலைவியாகி கருணாநிதிக்கு சவாலாயிருந்தார் என்பது வேறு விசயம்.

ஜெயலலிதா இறப்பின் பின்னர் பலமான ஒரு எதிர்கட்சி தமிழகத்தில் இல்லாமல்போன ஒரேயொரு காரணத்தால் திமுக அரியணையேறி ஸ்டாலின் முதல்வரானார், இல்லையென்றால் 80 ஆண்டுகாலமாக தமிழ் சமுதாயத்திற்கு உழைத்துபோனவர் உருவாக்கிவிட்டுபோன கட்சி நிரந்தர எதிர்கட்சியாகதான் இருந்திருக்கும்.

சொந்தமக்களே நேசிக்காத ஒருவருக்கு விழுந்து விழுந்து பட்டம் கொடுப்பதும் விலையுயர்ந்த நினைவு சின்னம் எழுப்புவதும் பொதுமக்கள் வரிபணத்தில் புட்போல் விளையாடும் செயல்.

தமிழருக்காக உழைத்தார் உழைத்தார் என்று அவரும் அவர் கட்சி சார்ந்த அல்லகைகளூம் அவரது வாரிசுகளும் அலறுவதை தவிர அந்த மாநில மக்களில் பெரும்பான்மையினர்  எவரும் சின்னதா ஒரு சத்தம்கூட போட காணோம்.

இந்த நிலையில் அன்னாருக்கு நினவு சின்னம் அவசியம்தானா?

அவமானசின்னம் வேண்டுமென்றால் எழுப்புங்கள் அம்சமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

தமிழருக்காக உழைத்தார் உழைத்தார்

இல்லாத திராவிடத்துக்காக உழைத்தார்.

உண்மையாக உழைத்திருந்தால் காமராஜர் மாதிரி வெறும் கையுடனல்லவா இறந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பதவியில் இல்லாத ஒருவர் இறந்தால்...
மெரீனாவில்...  புதைக்கக் கூடாது என்று,
"டிராஃபிக்  ராமசாமியும்", வேறு ஒருவரும் போட்ட வழக்கு நீதிமன்றத்தில், இருக்கும் போது...  

அதற்கு இடம் கொடுத்த.. அப்போதைய முதல்வர், பழனிச் சாமி செய்த வேலையால்,
இனி அந்த இடத்தில், அவருக்குப்  பின், அவரின் வாரிசுகளையும் கொண்டு வந்து புதைத்து,
மெரீனாவை.. சுடுகாடு ஆக்க, இந்தக் குடும்பம்  மும்முரமாக நிற்கும்.

ஜெயலலிதா இருந்திருந்தால், கருணாநிதிக்கு மெரினாவில் ஒரு துண்டு நிலமும் கிடைத்திராது.
ஜெயலலிதா...   கருணாநிதிக்கு, கொஞ்சம் முன்பு இறந்து விட்டாரே என்ற கவலை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஜெயலலிதா இறப்பின் பின்னர் பலமான ஒரு எதிர்கட்சி தமிழகத்தில் இல்லாமல்போன ஒரேயொரு காரணத்தால் திமுக அரியணையேறி ஸ்டாலின் முதல்வரானார், இல்லையென்றால் 80 ஆண்டுகாலமாக தமிழ் சமுதாயத்திற்கு உழைத்துபோனவர் உருவாக்கிவிட்டுபோன கட்சி நிரந்தர எதிர்கட்சியாகதான் இருந்திருக்கும்.

வளவன்... கடந்த தேர்தலில் கூட,
எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ... 
சசிகலா, தினகரனை.. சேர்த்து தேர்தலில் நின்றிருந்தால்,  
தி.மு.க. படு தோல்வி அடைந்திருக்கும்.

இவர்கள் செய்த தவறால்... இனி, 
உதயநிதியையும் முதலமைச்சராக  ஆக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

imaege_poli_25821.jpg

சிறித்தம்பி அந்த 3 லைன் என்னத்தை குறிக்கும்? :cool:

1=முதல் மனைவி 

2=இரண்டாம் மனைவி 

3=மூன்றாம் மனைவி   

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

இனி, 
உதயநிதியையும் முதலமைச்சராக  ஆக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

அதில் சந்தேகம் ஏது...

கருணாநிதி இறக்கும்வரை அரசியல் பக்கமே பெரிதாக தலை காட்டாமல் இருந்த உதயநிதி  அவர் இறந்த அடுத்தவாரமே அரசியலில் திமுக அரசியலில் முக்கிய புள்ளியாக இறக்கப்பட்டார் ,

திமுகவுக்காக பல லட்சம்  தொண்டர்கள் பல தசாப்தங்களாக  உயிர் உடல் பொருள் எல்லாம் ஈந்து சிறு வயசிலிருந்து முதுமை வந்து சாகும் வயசில் இன்று உள்ளவர்கள்கூட இன்றும் ஓட்டை  சைக்கிளிலும் அழுக்கு வேட்டியுடனும் நடந்து திரிந்தும் தலைவரே , கலைஞரே , தளபதியே என்று உருகி கொண்டு திரிகிறார்கள்.

கருணாநிதி இறப்புவரை சந்தானத்துடன் படம் நடிச்சுக்கொண்டு ஹம்மர் காரில் போய் வந்து கொண்டிருந்த உதயநிதி கருணாநிதி இறந்து இரண்டரை வருசத்தில் எம் எல் ஏ ஆகி சட்டசபையில் இருக்கிறார். அதற்கு முன்னரே ஒன்றுமேயில்லாத மதுரை தாதா அழகிரி மத்திய அமைச்சரானதும், இலக்கிய மேடைகளில் பேசி திரிஞ்ச கனிமொழி எம்பி ஆக்கப்படதும் வரலாறு.

அன்று ரிக்கெற் எடுக்க காசில்லாமல் திருட்டு ரயிலேறி மெட்ராஸ் வந்த கருணாநிதியின் குடும்பம் இப்போது  உலக கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்று,

நிதி சம்பந்தப்பட்ட குடும்பம் என்பதனால்தான்என்னமோ  உதயநிதி கலாநிதி, தயாநிதி, இன்னுமொரு தயாநிதி,அருள்நிதி,அறிவுநிதி என்று அனேக வாரிசுகளின் பெயரிலும் நிதி உண்டு.

மூன்று மனைவிகள்,கல்குலேட்டரில் தட்டி பார்த்தாலும் டக்கெண்டு கணக்கு பார்க்க முடியாதபடி  பல வாரிசுகள் அத்தனைபேரும் அரசியல் ,விமான கம்பனி, தொலைகாட்சி குழுமம், ஐபிஎல் அணி, திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ரியல் எஸ்டேட் என்று  இந்தியாவின் இன்றைய பண முதலைகள்.

கேட்டால் தமிழருக்காக 80 வருசம் உழைச்சாராம். உண்மைதான் என்ன உழைப்பு உழைச்சாரெண்டு.

ஆனால் ஒண்டு இத்தனை சுத்துமாத்து செய்திருக்கிறார் எண்டு தெரிஞ்சாலும் தமிழருக்காக தமிழுக்காக உயிரைவிடுவேன் என்று கருணாநிதி சொன்னால் தலைவா நீ எதுக்கு தலைவா எங்கள் உயிரை வேண்டுமென்றால் எடுத்துக்கோ என்று கதறி திரிந்தான் ஏழை அப்பாவி திமுக தொண்டன் இன்றும்   உதய நிதிக்காக கதறுகிறான், நாளை அவர்கள் வாரிசுகளுக்காகவும் கதறுவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/8/2021 at 12:21, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… அதற்கு பல காரணங்கள் உள்ளது.

1) முன் உள்ள பேனை தான்…. கருணாநிதி.

அவருக்குப் பின்…. ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி…. என்று மன்னர் ஆட்சியை  குறிக்கின்றது.

2) மனைவி, துணைவி, காதலி என்று அவருடன்….  வாழ்ந்த அம்மணிகளை குறிக்கின்றது. என நினைக்கின்றேன்.

முன்பு அப்படி இருந்திருக்கலாம். கடைசிக் காலத்தில்… தமிழரை காப்பாற்ற வந்த, “கட்டு மரம்” என்று சொல்லிய உத்தமர்.

சிறித்தம்பி ! முதலில் சிலை வைக்க வேண்டியது இவருக்குத்தான்...

Bild

உலகையே கட்டியாண்ட ராச ராச சோழன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, valavan said:

திமுகவுக்காக பல லட்சம்  தொண்டர்கள் பல தசாப்தங்களாக  உயிர் உடல் பொருள் எல்லாம் ஈந்து சிறு வயசிலிருந்து முதுமை வந்து சாகும் வயசில் இன்று உள்ளவர்கள்கூட இன்றும் ஓட்டை  சைக்கிளிலும் அழுக்கு வேட்டியுடனும் நடந்து திரிந்தும் தலைவரே , கலைஞரே , தளபதியே என்று உருகி கொண்டு திரிகிறார்கள்.

அங்கு மட்டும்தானா இங்கு யாழிலும் உள்ளனர் பாஸ் .🤣

அப்ப  மெரினாவில் குறைந்தது இரண்டு ஏக்கர் ஆட்டையை போட போகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி ! முதலில் சிலை வைக்க வேண்டியது இவருக்குத்தான்...

Bild

உலகையே கட்டியாண்ட ராச ராச சோழன்.

குமாரசாமி அண்ணை, சரியாக சொன்னீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜ  ராஜ சோழன்... கட்டிய,  
தஞ்சை பெரிய  கோவில் சம்பந்தமான விழாக்களில் கூட..
தமிழக அரசியல்வாதிகள் கலந்து கொள்வதில்லை.
அப்படிப் போனால்.. பதவி பறி போய்விடும் என்ற பயம் உள்ளதாம்.

தமிழகத்🙏தை... மாறி, மாறி.. ஆண்டு கொண்டு இருக்கும்,
பகுத்தறிவு? திராவிட.. கட்சிகளுக்கு, ஏன் இந்தப் பயம் வந்தது என்று தெரியவில்லை.

தற்போதைய  தமிழக முதல்வர், ஸ்ராலின் அவர்கள்...
கொஞ்சம் வித்தியாசமாக செயல் படுகின்றார் போல் தெரிகின்றது.
அவரின் தந்தை... கருணாநிதி, கன்னியாகுமரியில்... 
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது போல்,

மெரினாவில்... உலகத் தமிழர்களின் மன்னன்..
ராஜ ராஜ சோழனுக்கு... கருங்கல்லால், கடலின் நடுவே...
உயர்ந்த ஒரு  சிலையை... வடிமைக்க வேண்டும் என்பதே,அனைவரின் ஆசை. 
அப்படிச்  செய்தால்... ஸ்ராலின் பெயரும், வரலாற்றில் பொறிக்கப் படும்.

இந்த வேண்டுகோளை... தமிழக முதல்வரின் நேரடியான பார்வைக்கு,
கொண்டு செல்ல... யாராவது, உதவி செய்யுங்களேன்.  🙏

இப்போ... ஆரம்பித்தால் தான், அடுத்த தேர்தலுக்கு முன்..
நாங்கள் விரும்பும், ராஜ  ராஜ சோழனின்... 
சிலையை, பார்க்க முடியும் என்பதால்... இந்த அவசர வேண்டுகோள்.  🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, சரியாக சொன்னீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ராஜ  ராஜ சோழன்... கட்டிய,  
தஞ்சை பெரிய  கோவில் சம்பந்தமான விழாக்களில் கூட..
தமிழக அரசியல்வாதிகள் கலந்து கொள்வதில்லை.
அப்படிப் போனால்.. பதவி பறி போய்விடும் என்ற பயம் உள்ளதா

சிறித்தம்பி! ஒரு விசயம் தெரியுமோ?:cool:
ராசராச சோழன்,பண்டாரவன்னியன் எண்ட பெயரை கேட்டாலே/கண்டாலே மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வேப்பமிலை புகை அடிச்ச நுளம்புகள் மாதிரி எட்டத்திலை ஓடிடுவினம்.😜

இதிலை இருந்து என்ன தெரியுது????????????? 😎*_*😎*_*😎*_**_

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு விசயம் தெரியுமோ?:cool:
ராசராச சோழன்,பண்டாரவன்னியன் எண்ட பெயரை கேட்டாலே/கண்டாலே மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வேப்பமிலை புகை அடிச்ச நுளம்புகள் மாதிரி எட்டத்திலை ஓடிடுவினம்.😜

இதிலை இருந்து என்ன தெரியுது????????????? 😎*_*😎*_*😎*_**_

குமாரசாமி அண்ணை... 
அவர்கள்...கூலிக்கு... மாரடிக்கும், ஆட்கள் என்று நினைக்கின்றேன்.
அவர்கள்... தமிழ் இனத்தில் பிறந்து, தமிழ் பேசி... வாழ்ந்தாலும்,
தன், இன...  உணர்வு அற்ற, மர  மண்டைகள். 😶 😶 😶

(அதாவது... "சோறு... முக்கியம்" என நினைப்பவர்கள்.) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... 
அவர்கள்...கூலிக்கு... மாரடிக்கும், ஆட்கள் என்று நினைக்கின்றேன்.
அவர்கள்... தமிழ் இனத்தில் பிறந்து, தமிழ் பேசி... வாழ்ந்தாலும்,
தன், இன...  உணர்வு அற்ற, மர  மண்டைகள். 😶 😶 😶

(அதாவது... "சோறு... முக்கியம்" என நினைப்பவர்கள்.) :)

சீமான் விடயத்தில் கும்மி அடிப்பவர்கள்   சிவகுமாரன் விடயத்தை கூட தெரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

கேடு கெட்ட தமிழர்கள் மற்றவர்களை திட்ட மட்டும் பிறந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சீமான் விடயத்தில் கும்மி அடிப்பவர்கள்   சிவகுமாரன் விடயத்தை கூட தெரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

கேடு கெட்ட தமிழர்கள் மற்றவர்களை திட்ட மட்டும் பிறந்தவர்கள்.

என்னத்தை... சொல்ல,  தமிழினத்தின் தலை விதி, இது.

தமிழகத்திலுள்ள... " கீழடி" ஆய்விலிருந்து,  
தமிழன்... 6000 ஆண்டுகளுக்கு முற் பட்ட, 
எழுதத் தெரிந்த, மனிதன் என்பது   அறியப் படுகின்றது. 

அப்படி இருந்தும்... காக்கை வன்னியனாலும், 
கருணா... என, பெயர் தொடங்கும்... ஆட்களால் ...  காட்டியம், கூட்டியும்.. 
நய வஞ்சக  சூழ்ச்சியால்... வீழ்த்தப் பட்ட,  இனம் தான்... தமிழ் இனம். 

நாலு... நரி, செய்த.. இனத் துரோக வேலையால்...
உலகத் தமிழனுக்கு... கிடைக்க, இருந்த,  "தமிழ் ஈழம்"... பின் தள்ளிப் போயுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

சீமானை திட்டி விட்டு சம்பந்தனும் சுமந்திரனும் சரியில்லை என்கிறார்கள்.ரணிலும் சரியில்லை என்கிறார்கள்.....கோத்தாவும் பயம் என்கிறார்கள்

ஆனால் அண்ணன் டக்கிளசை பற்றி வாய் திறக்கவே மாட்டன் என்கிறார்கள்....அவ்வளவு விசுவாசம்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சீமானை திட்டி விட்டு சம்பந்தனும் சுமந்திரனும் சரியில்லை என்கிறார்கள்.ரணிலும் சரியில்லை என்கிறார்கள்.....கோத்தாவும் பயம் என்கிறார்கள்

ஆனால் அண்ணன் டக்கிளசை பற்றி வாய் திறக்கவே மாட்டன் என்கிறார்கள்....அவ்வளவு விசுவாசம்..🤣

அட... நான், இந்தக் கோணத்தில்,  சிந்திக்கவில்லையே... 😂
டக்ளஸ் அங்கிள்.... இப்ப,  நல்லவரா?    கெட்டவரா....?   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

அட... நான், இந்தக் கோணத்தில்,  சிந்திக்கவில்லையே... 😂
டக்ளஸ் அங்கிள்.... இப்ப,  நல்லவரா?    கெட்டவரா....?   🤣

உங்கட கதையை பாத்தால் டக்ளஸ் அண்ணர் முந்தி கெட்டவர் எண்ட மாதிரியெல்லோ கதை போகுது :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.