Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
தாலிபன்
 
படக்குறிப்பு,

சுஹைல் ஷாஹீன், தாலிபன் செய்தித்தொடர்பாளர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை நினைவுகூர்ந்தார்.

"முஸ்லிமாக இருப்பதால், காஷ்மீரிலோ இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு," என்றும் ஷாஹீன் தெரிவித்தார்.

"முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரத்து ஒலிப்போம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அரசு அமைந்த பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுக்கின்றன.

இந்தியாவை சுற்றியுள்ள மூன்று அண்டை நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மோதி அரசு கொண்டு வந்தது, முஸ்லிம்களை ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெற்ற இந்திய அரசின் நடவடிக்கையும் அதை செயல்படுத்திய விதமும் அங்குள்ள பல உள்ளூர் வாசிகளை கோபப்படுத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த நாற்பது ஆண்டுகளாக பிரச்னை நீடிப்பதற்கு, ஜம்மு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற விவகாரமே மூல காரணமாகும்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் குழப்பங்கள் நிறைந்த வெளிநாட்டுப் படை விலக்கலைத் தொடர்ந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபன் தமது வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகள் முளைக்கலாம் என்றும்

தாலிபனுக்குள் உள்ள சில பிரிவுகள் இனி தங்களுடைய பார்வையை ஜம்மு காஷ்மீர் பக்கம் திருப்பலாம் என்றும் இந்தியாவில் உள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.

சமீபத்தில் ஒளிபரப்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாகிஸ்தானில் ஆளும் பிடிஐ கட்சித் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக், "காஷ்மீர் விடுதலைக்காக எங்களுக்கு உதவுவதாகவும் இந்த விஷயத்தில் நாங்களுடன் உங்களுடன்தான் என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர் என்றும் பேசியதாக ஒரு காணொளி விரிவாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில நாளிதழ்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தியாவுக்கு சோதனைக்காலம்

 2001ஆம் ஆண்டில் தாலிபனை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வெளியேற்றும் முன்பாக, அந்த நாட்டில் தாலிபனுக்கு எதிரான வடக்கு கூட்டணி குழுவை இந்தியா ஆதரித்தது.

மோதி இந்தியா

பட மூலாதாரம்,MEA INDIA

படக்குறிப்பு,

ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி (கோப்புப்படம்)

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுநாள்வரை அந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்புக்கு தலைமை தாங்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய அஷ்ரஃப் கனி அரசுடன் இந்தியா நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தது.

 அந்த நாட்டில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் கோடிக்கணக்கில் இந்தியா முதலீடுகளை குவித்து வந்தது. ஆனால், தற்போது அந்த நாட்டில் தாலிபன் அதிகாரத்துக்கு வந்து விட்டதால், இந்தியா ஆப்கனில் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகுமோ என்ற அச்சம் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் கத்தாரின் தோஹாவில் உள்ள தாலிபன் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தாலிபன் தலைவர் ஷெர் மொஹம்மத் அபாஸ் ஸ்டானெக்ஸாயுடனான முதலாவது அதிகாரபூர்வ தொடர்பை இந்தியா ஏற்படுத்தி தமது கவலைகளை வெளிப்படுத்தியது.

 அந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் தீவிரவாத செயல்களுக்கும் எந்தவொரு வடிவிலும் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்தது.

இந்தியாவுக்கு இது எளிதான தேர்வல்ல

மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 தாலிபனுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ஆயுத குழுக்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது இந்திய அதிகாரிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.

 தாலிபன் கட்டமைப்பில் ஹக்கானி குழு என அழைத்துக் கொள்ளும் ஆயுதக்குழுதான் ஆயுதங்களை சிறந்த முறையில் கையாளும் பயிற்சி பெற்றது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் உள்பட இந்திய சொத்துகள் பலவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாகவும் தாக்குதல்களை செயல்படுத்திய குழுவாகவும் இந்த ஹக்கானி குழு அறியப்படுகிறது என டெல்லியில் இருந்து செயல்படும் பன்னாட்டு சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வு அமைப்பான கர்னெஜி இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் ஹக்கானி தலைமைக்கு இடையிலான நெருங்கிய தொடர்பை வைத்துப் பார்க்கும்போது, ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து கொண்டு இந்திய எதிர்ப்பு கொள்கையை ஹக்கானி குழு தொடரவே அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இது குறித்து தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஷாஹீனிடம் பிபிசி கேட்டபோது, ஹக்கானிக்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று பதிலளித்தார்.

 "ஹக்கானிகள் ஒரு குழு கிடையாது. அவர்கள் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் அங்கம். அவர்கள்தான் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்," என்கிறார் ஷாஹீன்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,REUTERS

இருபது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு 180 பேருடன் சென்ற இந்திய விமானம் கடத்தப்பட்டதில் தாலிபனின் பங்கு இன்னும் இந்தியர்களின் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.

அப்போது அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகளை தாலிபன்கள் பணய கைதிகளாக வைத்துக் கொண்டதால் இந்திய சிறைகளில் உள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவித்து பயணிகள் மீட்கப்பட்டனர்.

"இந்த தாலிபன்தான் 1999ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்துவதற்காக தீவிரவாதிகளை பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பாக அழைத்து வந்தது," என்றும் கர்னெஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், இந்த தகவல்களை மறுக்கும் ஷாஹீன், இந்திய விமான கடத்தலில் தாலிபனுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் பயணிகளை மீட்க தாலிபன்கள் உதவியதாகவும் கூறுகிறார். தங்களுடைய செயலுக்காக இந்திய அரசு தாலிபனுக்கு நன்றி கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 "கந்தஹாருக்கு வந்த இந்திய விமான நிலையத்தில் போதுமான எரிபொருள் இல்லை என்பதால் பணய கைதிகளை மீட்க உதவுமாறு தங்களை இந்திய அரசு அப்போது கேட்டுக் கொண்டது' என்றும் ஷாஹீன் தெரிவித்தார்.

 தாலிபன் எதிர்ப்பு பிரசாரத்தை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும் ஷாஹீன் குற்றம்சாட்டினார்.

 டேனிஷ் சித்திக்கி கொலையில் தொடர்பா?

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

டேனிஷ் சித்திக்கி

இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கி சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் தமது நேர்காணலின்போது தெரிவித்தார்.

"டேனிஷ் சித்திக்கியை யார் சுட்டார்கள் என எங்களுக்குத் தெரியாது. அது ஒரு சண்டை. இரு தரப்பிலும் சண்டை நடந்தது," என்கிறார் ஷாஹீன்.  

 புலிட்செர் பரிசு பெற்ற சிறந்த செய்தியாளராக அறியப்பட்ட டேனிஷ் சித்திக்கி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்காக வேலை பார்த்தார். ஆப்கன் படையினரின் பாதுகாப்புடன் அவர் சென்ற வாகனம், தாலிபன் ஆயுத போராளிகளால் பாகிஸ்தானை இணைக்கும் ஸிபின் போல்தாக் என்ற நகரில் தாக்கப்பட்டது.

 டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மக்கள், டேனிஷ் சித்திக்கியை கொன்ற பிறகு அவரது உடலை சூழ்ந்திருந்த தாலிபன்கள், "இந்திய உளவாளியை கண்டுபடித்து கொன்று விட்டோம்," என்று கூறியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

 "இப்போதும் அப்படித்தான் அவர்கள் கூறுகிறார்கள்," என்று ஓர் உள்ளூர்வாசி அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து நம்மிடம் பேசினார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,REUTERS

 இது குறித்தும் தாலிபன் செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவரோ மக்களில் சிலர் வதந்திகள் கலந்த உரையாடலில் ஈடுபடுகிறார்கள்," என்று தெரிவித்தார்.

டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விசாரணையின் விவரத்தை ஊடகங்களில் விரைவில் பகிர்வதாகவும் ஷாஹீன் கூறினார்.

 தாலிபனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தாலிபன் எதிர்ப்பாளர்கள் பற்றி கேட்டபோது, முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேஹ் தலைமையில் தாலிபனில் இருந்து பிரிந்து சென்ற ஆயுதப்போராளிகள் எங்களை எதிர்க்க சூளுரைத்திருப்பதால் அந்த பள்ளத்தாக்கில் நிலைமை பதற்றத்துடன் உள்ளது என்று சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.

 ஆப்கானிஸ்தானில் வீடு, வீடாகச் சென்று குடும்பத்தினரை தாலிபன்கள் அச்சுறுத்துவது மற்றும் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து தேடுவதாக வெளிவரும் ஊடக தகவல்களையும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் மறுத்தார்.

"அப்படி எந்தவொரு தாக்குதல் பட்டியலும் கிடையாது," என்றும் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பஞ்சீர் குழுவுக்கு ஆதரவு வழங்குவது போல் தெரிகிறது. ஆகவே இது கனகாலம் கஸ்மீரிகளுக்கான வெறும் வாய் மூல ஆதரவாக மட்டும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இந்தியா பஞ்சீர் குழுவுக்கு ஆதரவு வழங்குவது போல் தெரிகிறது. ஆகவே இது கனகாலம் கஸ்மீரிகளுக்கான வெறும் வாய் மூல ஆதரவாக மட்டும் இருக்காது.

இப்படியாவது காஷ்மீர் மக்களுக்கு இந்தியக் காட்டுமிராண்டிகளிடமிருந்து விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சியே. பாக்கிஸ்த்தானின் உளவுத்துறையினால் வழிநடத்தாப்படும் தலிபான்கள் நிச்சயம் இந்தியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தியாவைச் சுற்றி ஆப்புக்கள் பலமாக இறுகத் தொடங்குகின்றனவோ? 

  • கருத்துக்கள உறவுகள்+

சரி, அப்ப இனிமேல் இந்தியாவிற்கு நித்திரை இல்லை🤣🤣... பெரு மகிழ்ச்சி.😍

தலீபான் வாழ்க... (இப்பவே ஒன்டைப் போட்டு வைப்பம்😆)

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தி மகிழ்கிறேன்

உங்கள் பணி முடிவடையும் போது இந்தியா குறைந்தது மூன்றாகவாவது உடையணிந்திருக்க கடவது 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 09:29, பிழம்பு said:

"காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி

குரல் கொடுக்க மாட்டோம் என்றால்தான் அது செய்தி , குரல் கொடுப்போம் என்பது செய்தியல்ல, அது அன்றாட நிகழ்ச்சி,

குரல் மட்டுமா கொடுப்பீங்க குரலைவிட குண்டுதான் இனி இந்தியாவுக்கு அதிகமா கொடுப்பீங்க என்பது இந்தியாவுக்கும் நன்கு தெரியும், அதனால்தான் கட்டாரிலும் ஆப்கானிலும் தலீபான்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தான் கட்டுமானங்கள் என்ற பெயரில் ஓடி திரிகிறது இந்தியா என்று செய்திகள் வருகின்றன.

On 2/9/2021 at 09:29, பிழம்பு said:

"முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரத்து ஒலிப்போம்," என்று அவர் கூறினார்.

பிறப்பால் பிறப்புறுப்புகளை தவிர வேறு எந்த வித்தியாசமும் ஆண்களைவிட இல்லாத பெண்களை ...

 படிக்க கூடாது வேலைக்கு போககூடாது, வெளியில் தனிய கடைதெருவுக்கு கூட போககூடாது, முகத்தில் கண்ணை தவிர வேறு எதுவும் தெரியகூடாது, விளையாடகூடாது, படம் பார்க்ககூடாது ,இணையங்கள் பாவிக்ககூடாது, செல்போன் கூடாது எவ்வளவு வெயிலானாலும் வெப்பத்தை உறிஞ்சி வைச்சிருக்கும் கறுப்பு உடையால் தலையிலிருந்து பாதம்வரை மூடி கட்டோணும், அதற்குள் இயல்பாகவே பெண்கள் அணியும் பல உள்ளாடைகள் வேறு... அவர்களை ஆடுமாடுகள்போல் வருசம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அழகு பார்ப்பார்கள்.

ஆனால் ஆண்கள் எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

அதைவிட லட்சக்கணக்கில் தலீபான்களின் சொந்த மண்ணின் மக்கள்  விமானத்தின் Landing gear ல் தொங்கியபடிகூட நாட்டைவிட்டு தப்பியோட முயற்சி செய்து கீழே விழுந்து சாவார்கள். தலீபான்கள் தங்களது  பரம வைரியாக பார்க்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு  லட்சக்கணக்கில் ஓடிபோய் தஞ்சம் கேட்பார்கள்.

இவ்வளவு கேவலங்களையும் அவர்களது சொந்த மக்களுக்கு நடத்திக்கொண்டே பிறநாடுகளுக்கு வகுப்பெடுக்கிறார்கள், சொந்த மக்களை எப்படி சமமாக நடந்த வேண்டும் என்று.

இவர்கள் மங்குனிகள் மற்றும் வனவிலங்குகள் என்பது உலகம் அறிந்த ரகசியம்தான் இருந்தாலும் அதை இப்படியா மணிக்கொருதடவை நிருபிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

குரல் கொடுக்க மாட்டோம் என்றால்தான் அது செய்தி , குரல் கொடுப்போம் என்பது செய்தியல்ல, அது அன்றாட நிகழ்ச்சி,

குரல் மட்டுமா கொடுப்பீங்க குரலைவிட குண்டுதான் இனி இந்தியாவுக்கு அதிகமா கொடுப்பீங்க என்பது இந்தியாவுக்கும் நன்கு தெரியும், அதனால்தான் கட்டாரிலும் ஆப்கானிலும் தலீபான்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தான் கட்டுமானங்கள் என்ற பெயரில் ஓடி திரிகிறது இந்தியா என்று செய்திகள் வருகின்றன.

பிறப்பால் பிறப்புறுப்புகளை தவிர வேறு எந்த வித்தியாசமும் ஆண்களைவிட இல்லாத பெண்களை ...

 படிக்க கூடாது வேலைக்கு போககூடாது, வெளியில் தனிய கடைதெருவுக்கு கூட போககூடாது, முகத்தில் கண்ணை தவிர வேறு எதுவும் தெரியகூடாது, விளையாடகூடாது, படம் பார்க்ககூடாது ,இணையங்கள் பாவிக்ககூடாது, செல்போன் கூடாது எவ்வளவு வெயிலானாலும் வெப்பத்தை உறிஞ்சி வைச்சிருக்கும் கறுப்பு உடையால் தலையிலிருந்து பாதம்வரை மூடி கட்டோணும், அதற்குள் இயல்பாகவே பெண்கள் அணியும் பல உள்ளாடைகள் வேறு... அவர்களை ஆடுமாடுகள்போல் வருசம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அழகு பார்ப்பார்கள்.

ஆனால் ஆண்கள் எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

அதைவிட லட்சக்கணக்கில் தலீபான்களின் சொந்த மண்ணின் மக்கள்  விமானத்தின் Landing gear ல் தொங்கியபடிகூட நாட்டைவிட்டு தப்பியோட முயற்சி செய்து கீழே விழுந்து சாவார்கள். தலீபான்கள் தங்களது  பரம வைரியாக பார்க்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு  லட்சக்கணக்கில் ஓடிபோய் தஞ்சம் கேட்பார்கள்.

இவ்வளவு கேவலங்களையும் அவர்களது சொந்த மக்களுக்கு நடத்திக்கொண்டே பிறநாடுகளுக்கு வகுப்பெடுக்கிறார்கள், சொந்த மக்களை எப்படி சமமாக நடந்த வேண்டும் என்று.

இவர்கள் மங்குனிகள் மற்றும் வனவிலங்குகள் என்பது உலகம் அறிந்த ரகசியம்தான் இருந்தாலும் அதை இப்படியா மணிக்கொருதடவை நிருபிக்கணும்.

இவ்வளவு சனத்தை வெளியேற்றிய அமேரிக்கனுக்கு அவன் கொண்டு வந்த ஆயுதங்களை வெளியேற்றுவது அவ்வளவு பெரிய விடயம் அல்ல....தனது தேவை கருதி சகல ஆயுதங்களையும் விட்டு வைத்திருக்கிறான்....விரும்பினவன் எடுத்து விளையாடுங்களடா என்று....

21 hours ago, நன்னிச் சோழன் said:

சரி, அப்ப இனிமேல் இந்தியாவிற்கு நித்திரை இல்லை🤣🤣... பெரு மகிழ்ச்சி.😍

தலீபான் வாழ்க... (இப்பவே ஒன்டைப் போட்டு வைப்பம்😆)

உந்த கோதாரி பிடிச்சவங்களோடா சுன்னத்து செய்து போட்டு திரிவதை விட மொட்டையடிச்சு போட்டு ஹரே ராம ஹரே

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 00:28, goshan_che said:

இந்தியா பஞ்சீர் குழுவுக்கு ஆதரவு வழங்குவது போல் தெரிகிறது. ஆகவே இது கனகாலம் கஸ்மீரிகளுக்கான வெறும் வாய் மூல ஆதரவாக மட்டும் இருக்காது.

பஞ்சீர் பெடியள் கொஞ்சம் டிசன்டான பெடியள் போல இருக்கு  தஜிக்கிஸ்தான் (தமிழ் நாடு அல்ல)நாட்டின் துணையுடன் பிரிந்து போவங்களோ🤣

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, putthan said:

இவ்வளவு சனத்தை வெளியேற்றிய அமேரிக்கனுக்கு அவன் கொண்டு வந்த ஆயுதங்களை வெளியேற்றுவது அவ்வளவு பெரிய விடயம் அல்ல....தனது தேவை கருதி சகல ஆயுதங்களையும் விட்டு வைத்திருக்கிறான்....விரும்பினவன் எடுத்து விளையாடுங்களடா என்று....

உந்த கோதாரி பிடிச்சவங்களோடா சுன்னத்து செய்து போட்டு திரிவதை விட மொட்டையடிச்சு போட்டு ஹரே ராம ஹரே

ஆர் வந்தால் என்ன... இந்தியன் வாங்கிக் கட்டினால் சரி.😌

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

ஆர் வந்தால் என்ன... இந்தியன் வாங்கிக் கட்டினால் சரி.😌

தப்பு நண்பரே ,இந்தியனை பழி வாங்க 
நினைத்து இருப்பதையும் எம்மக்கள் இழக்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, putthan said:

தப்பு நண்பரே ,இந்தியனை பழி வாங்க 
நினைத்து இருப்பதையும் எம்மக்கள் இழக்க கூடாது

ஏன் அண்ணை அப்படி சொல்லிறீங்கள். உவனை அடிக்கிறதால எங்களுக்கு என்ன இழப்பு வரப்போகுது? 

(நண்பரே நான் அரசியல் ஞானியல்ல. எனவே கொஞ்சம் விளக்கமாக கூறவும்.)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

ஏன் அண்ணை அப்படி சொல்லிறீங்கள். உவனை அடிக்கிறதால எங்களுக்கு என்ன இழப்பு வரப்போகுது? 

(நண்பரே நான் அரசியல் ஞானியல்ல. எனவே கொஞ்சம் விளக்கமாக கூறவும்.)

ஆப்காணியை விட இவன் ஒரு படி மேல் மட்டுமே ..இவன் களை விட பலபடிகள் மேல் நாங்கள் ஜனநாயகபண்புகள் மற்றும் பல விடயங்களில் நாங்கள்...பெண்களின் உரிமைகளை மதிப்பதில் நாங்களும் இந்தியர்களும் சரி சமம்

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, putthan said:

ஆப்காணியை விட இவன் ஒரு படி மேல் மட்டுமே ..இவன் களை விட பலபடிகள் மேல் நாங்கள் ஜனநாயகபண்புகள் மற்றும் பல விடயங்களில் நாங்கள்...பெண்களின் உரிமைகளை மதிப்பதில் நாங்களும் இந்தியர்களும் சரி சமம்

அது உண்மைதான் நண்பரே. பண்புகள் ஓரமாக இருக்கட்டும். 

ஆனால், தாங்கள் இவனை அடிப்பதால் நாங்கள் எதையோ இழப்போம் என்றீர்களே, எதை இழப்போம் எனக் கூறவில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நன்னிச் சோழன் said:

அது உண்மைதான் நண்பரே. பண்புகள் ஓரமாக இருக்கட்டும். 

ஆனால், தாங்கள் இவனை அடிப்பதால் நாங்கள் எதையோ இழப்போம் என்றீர்களே, எதை இழப்போம் எனக் கூறவில்லையே!

இன்றைய ஜனநாயக (?) கோற்பாட்டில் உள்ள சில சலுகைகளை ....இன்று அமெரிக்கா இந்தியாவை பாகிஸ்தானைவிட அதிக நம்புகிறது ...
பாகிஸ்தான்,ஆப்காணிஸ்தான் ,ஈரான் கூட்டை விட இந்தியா அமெரிக்கா கூட்டு சிறந்தது என நான் நம்புகிறேன்...

இந்தியா எம்மை அழித்தவர்கள்....என்பதில் மாற்று கருத்து எனக்கு இல்லை ....ஜப்பானை /வியட்நாமை அழித்த அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தான் அவர்கள் முன்னுக்கு வருகின்றனர் ...அரசியல் சதுரங்கம் அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, putthan said:

நாங்கள் அழிக்கப்பட்டு விட்டோம் என்பது புத்தனுக்கு இன்னும் புரியவில்லையோ ☹️    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பஞ்சீர் பெடியள் கொஞ்சம் டிசன்டான பெடியள் போல இருக்கு  தஜிக்கிஸ்தான் (தமிழ் நாடு அல்ல)நாட்டின் துணையுடன் பிரிந்து போவங்களோ🤣

ஓம் தாலிபான்கள் போல் கற்கால சிந்தனை உடையவர்கள் அல்ல. இரெண்டு தலைவர்களில் ஒருவரான அஹ்மட் மசூத் ( பஞ்சீர் சிங்கம் - அஹ்மட் ஷா மசூதின் மகன்) Sandhurst இல் ஒரு வருசம் இராணுவ பயிற்சி, லண்டன் கிங்ஸ் காலேஜில் சிலகாலம் படிப்பு என பிரித்தானிய மயப்பட்டவர். அதே போல் சாலா சி ஐ ஏ யால் பயிற்றபட்டா முன்னாள் முஜாகிதீன். இருவரும் ஆங்கிலம் சரளமாக பேசும், மேற்கு மயபட்டவர்கள்.

டாரி மொழிபேசும் ஆப்கானிய தஜிக் இனத்தவர், ஆப்கானில் இரண்டாவது பெரிய இனக்குழு ஆனால்  தஜிகிஸ்தான் இதுவரை ஆப்கானில் அதிகம் தலையிட்டதில்லை. இனி தலையிடுமோ தெரியாது. ரஸ்யா விரும்பினால் தலையிடகூடும். ஆனால் மேற்கின் அனுசரணையோடு, இவர்கள் பின்னால் இந்தியா நிற்பதாக படுகிறது.

பஞ்சீர் மக்களின் “அடங்காமை” மீதும் சுயாதீனம் மீதும் விருப்பு உள்ளவன் நான் - ஆனால் இந்தியாவை நம்பியோர் யாரும் வாழ்ந்ததில்லை என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்+
51 minutes ago, putthan said:

இன்றைய ஜனநாயக (?) கோற்பாட்டில் உள்ள சில சலுகைகளை ....இன்று அமெரிக்கா இந்தியாவை பாகிஸ்தானைவிட அதிக நம்புகிறது ...
பாகிஸ்தான்,ஆப்காணிஸ்தான் ,ஈரான் கூட்டை விட இந்தியா அமெரிக்கா கூட்டு சிறந்தது என நான் நம்புகிறேன்...

இந்தியா எம்மை அழித்தவர்கள்....என்பதில் மாற்று கருத்து எனக்கு இல்லை ....ஜப்பானை /வியட்நாமை அழித்த அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தான் அவர்கள் முன்னுக்கு வருகின்றனர் ...அரசியல் சதுரங்கம் அப்படி

இந்தியாவை நம்புகிறீர்களா?😂

சரி, அது உங்கள் தனிப்பட்ட முடிவு. அதை நான் மறுதலிக்கவில்லை; உடன்படவில்லை; வேறுபடுகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

இவ்வளவு கேவலங்களையும் அவர்களது சொந்த மக்களுக்கு நடத்திக்கொண்டே பிறநாடுகளுக்கு வகுப்பெடுக்கிறார்கள், சொந்த மக்களை எப்படி சமமாக நடந்த வேண்டும் என்று

நீங்கள் சொன்னதில் 100% உடன்படுகிறேன்.

ஆனால் இதன் மறுவழமும் உண்மையே.

ஈழத்திலும், கஸ்மீரிலும் அப்பாவிகளை கொன்று, பாலியல் வன்கொடுமை செய்த, ஒரு நாடாக இருந்து ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இணைந்த கஸ்மீரின் சிறப்புரிமையை ஒருதலைபட்சமாக நீக்கி, இரெண்டாக்கி, அந்தஸ்தையும் குறைத்த, மாடு சாப்பிட மனிதனை அடித்தே கொல்லும், பல ஆண்டுகால மசூதியை கலவரம் பண்ணி இடித்து விட்டு, அதை உச்ச நீதி மன்று மூலம் நியாயப்படுத்தும் இந்தியாவுக்கும் தாலிபானை சாட ஒரு அருகதையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலீபான்கள் பற்றிய என்னோட கருத்து தங்களுக்கு நான் இந்தியாவுக்கு ஆதரவாய் பேசுவது போன்ற தோற்றப்பாட்டையா தந்தது?

தலீபான்கள்மூலம் இந்தியா என்னவெல்லாம் எதிர்கொள்ளபோகிறது என்பதே கருத்து.

இந்தியா எனும் நாட்டிற்காக ஈழ தமிழர் கவலைபடுவதோ அல்லது அவர்களுக்காக குரல் கொடுப்பதோ அல்லது  இந்தியா பக்கம் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் என்ற சிந்தனைகளெல்லாம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே முடிந்து போன ஒன்று.

இந்தியா ஈழதமிழர் தேவைக்கு ஒருபோதும் உதவாது, ஈழ தமிழ் கட்சிகளின் சொந்த அரசியல் வியாபாரத்துக்கு   மட்டுமே உதவும். இந்தியா ஈழதமிழருக்கு தீர்வு வேண்டும் என்பதற்காக இலங்கை அரசியலில் ஒருபோதும் தலையிட்டதில்லை, இந்திய தேவை ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் மட்டுமே அது ஈழ தமிழர் பெயரை பயன்படுத்திக்கொள்ளும்.

தமிழகம் எனும் எம் இரத்த உறவு நிலம் இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமே ஈழதமிழன் வாயில் அடிக்கடி இந்தியா எனும் வார்த்தை வந்து போகிறது, இல்லையென்றால் இந்தியா எனும் வார்த்தையையே ரோஷமுள்ள தமிழன் எவனும் சொல்லிகூட பார்க்கமாட்டான்.

அது நிற்க

41 minutes ago, goshan_che said:

ஈழத்திலும், கஸ்மீரிலும் அப்பாவிகளை கொன்று, பாலியல் வன்கொடுமை செய்த, ஒரு நாடாக இருந்து ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இணைந்த கஸ்மீரின் சிறப்புரிமையை ஒருதலைபட்சமாக நீக்கி, இரெண்டாக்கி, அந்தஸ்தையும் குறைத்த, மாடு சாப்பிட மனிதனை அடித்தே கொல்லும், பல ஆண்டுகால மசூதியை கலவரம் பண்ணி இடித்து விட்டு

அதே நேரம் காஷ்மீரில் வாழ்ந்த பல லட்சம் பண்டிட்களை முஸ்லீம்கள் அங்கிருந்து கொன்றும் அடித்துவிரட்டியும் காஷ்மீரை முழுமையாக ஆக்கிரமித்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு என்று வந்தால் ராணுவமானாலும் சரி பொதுமக்களானாலும் சரி மன்னிக்கப்பட முடியாதவர்களே.

அடுத்து மாட்டு இறைச்சி சாப்பிட்ட மனிதனை அடித்து கொல்கிறார்கள் என்பது துயரம்தான்...

அதேவேளை உயிரற்ற ஒரு மதத்துக்காக உலகம் முழுவதும் வாழும்  உயிருள்ள மனிதர்களை  ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கலாம் என்று முஸ்லீம்கள் அகராதியில் இருந்தால்.

உயிருள்ள மாட்டை கொல்பவனை கொல்லலாம் என்று பிறர் அகராதியில் இருக்கலாம். அதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை இடித்தது தவறு என்றால் ,  பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயங்களில் மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது நடுவில் நின்றுகொண்டு குண்டை வெடிக்க வைத்து இறைவழிபாட்டில் இருந்தவர்களை சதை குவியலாக்கியதும் தவறுதான்.

செய்வதெல்லாம் செய்துவிட்டு எமது மார்க்கம் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பார்கள், எங்காவது குண்டுகள் வைத்து கொன்று குவித்தால் அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கமாட்டார்கள்., 

அதையும்மீறி கேட்டால் இஸ்லாத்துக்கும் தீவிரவாதத்தும் சம்பந்தமில்லை என்பார்கள்., ஆனால் தீவிரவாதிகளை திட்டி பாருங்கள் லைன்ல வந்து பிறர் மதம், அம்மா அப்பா உறவுகள் என்று அனைத்தையும் மிக இழிவாக பேசுவார்கள்.

உலகில் தஞ்சமடைந்த அனைத்து நாடுகளையும் மிக விரைவில் இஸ்லாமிய நாடு ஆக்குவோம் ஆக்கிரமிப்போம்  என்பார்கள், அடைக்கலம் தந்த தேசத்து மக்களையே கொன்று குவித்து அவர்கள் குரல்வளையில் ரத்தம் குடித்துவிட்டு அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்பார்கள்.

  ஆனால் அவர்கள் நிலத்தில் மற்றவன் வந்தால் இஸ்லாமியர்களுக்கு கொடுமை செய்கிறார்கள்,இஸ்லாமிய நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்று கூவுவார்கள்.

எந்த பக்கம் புரட்டி பார்த்தாலும் எங்கும் ஒரு நியாயத்தை கொண்டிருக்காத இந்த மதவாதிகளை எந்த வகையிலும் நியாயபடுத்த போவதில்லை, அவர்கள்மேல் எந்த அனுதாபமும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

தலீபான்கள் பற்றிய என்னோட கருத்து தங்களுக்கு நான் இந்தியாவுக்கு ஆதரவாய் பேசுவது போன்ற தோற்றப்பாட்டையா தந்தது?

தலீபான்கள்மூலம் இந்தியா என்னவெல்லாம் எதிர்கொள்ளபோகிறது என்பதே கருத்து.

இந்தியா எனும் நாட்டிற்காக ஈழ தமிழர் கவலைபடுவதோ அல்லது அவர்களுக்காக குரல் கொடுப்பதோ அல்லது  இந்தியா பக்கம் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் என்ற சிந்தனைகளெல்லாம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே முடிந்து போன ஒன்று.

இந்தியா ஈழதமிழர் தேவைக்கு ஒருபோதும் உதவாது, ஈழ தமிழ் கட்சிகளின் சொந்த அரசியல் வியாபாரத்துக்கு   மட்டுமே உதவும். இந்தியா ஈழதமிழருக்கு தீர்வு வேண்டும் என்பதற்காக இலங்கை அரசியலில் ஒருபோதும் தலையிட்டதில்லை, இந்திய தேவை ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் மட்டுமே அது ஈழ தமிழர் பெயரை பயன்படுத்திக்கொள்ளும்.

தமிழகம் எனும் எம் இரத்த உறவு நிலம் இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமே ஈழதமிழன் வாயில் அடிக்கடி இந்தியா எனும் வார்த்தை வந்து போகிறது, இல்லையென்றால் இந்தியா எனும் வார்த்தையையே ரோஷமுள்ள தமிழன் எவனும் சொல்லிகூட பார்க்கமாட்டான்.

அது நிற்க

அதே நேரம் காஷ்மீரில் வாழ்ந்த பல லட்சம் பண்டிட்களை முஸ்லீம்கள் அங்கிருந்து கொன்றும் அடித்துவிரட்டியும் காஷ்மீரை முழுமையாக ஆக்கிரமித்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு என்று வந்தால் ராணுவமானாலும் சரி பொதுமக்களானாலும் சரி மன்னிக்கப்பட முடியாதவர்களே.

அடுத்து மாட்டு இறைச்சி சாப்பிட்ட மனிதனை அடித்து கொல்கிறார்கள் என்பது துயரம்தான்...

அதேவேளை உயிரற்ற ஒரு மதத்துக்காக உலகம் முழுவதும் வாழும்  உயிருள்ள மனிதர்களை  ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கலாம் என்று முஸ்லீம்கள் அகராதியில் இருந்தால்.

உயிருள்ள மாட்டை கொல்பவனை கொல்லலாம் என்று பிறர் அகராதியில் இருக்கலாம். அதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை இடித்தது தவறு என்றால் ,  பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயங்களில் மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது நடுவில் நின்றுகொண்டு குண்டை வெடிக்க வைத்து இறைவழிபாட்டில் இருந்தவர்களை சதை குவியலாக்கியதும் தவறுதான்.

செய்வதெல்லாம் செய்துவிட்டு எமது மார்க்கம் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பார்கள், எங்காவது குண்டுகள் வைத்து கொன்று குவித்தால் அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கமாட்டார்கள்., 

அதையும்மீறி கேட்டால் இஸ்லாத்துக்கும் தீவிரவாதத்தும் சம்பந்தமில்லை என்பார்கள்., ஆனால் தீவிரவாதிகளை திட்டி பாருங்கள் லைன்ல வந்து பிறர் மதம், அம்மா அப்பா உறவுகள் என்று அனைத்தையும் மிக இழிவாக பேசுவார்கள்.

உலகில் தஞ்சமடைந்த அனைத்து நாடுகளையும் மிக விரைவில் இஸ்லாமிய நாடு ஆக்குவோம் ஆக்கிரமிப்போம்  என்பார்கள், அடைக்கலம் தந்த தேசத்து மக்களையே கொன்று குவித்து அவர்கள் குரல்வளையில் ரத்தம் குடித்துவிட்டு அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்பார்கள்.

  ஆனால் அவர்கள் நிலத்தில் மற்றவன் வந்தால் இஸ்லாமியர்களுக்கு கொடுமை செய்கிறார்கள்,இஸ்லாமிய நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்று கூவுவார்கள்.

எந்த பக்கம் புரட்டி பார்த்தாலும் எங்கும் ஒரு நியாயத்தை கொண்டிருக்காத இந்த மதவாதிகளை எந்த வகையிலும் நியாயபடுத்த போவதில்லை, அவர்கள்மேல் எந்த அனுதாபமும் கிடையாது.

நீங்கள் எழுதியதில் இந்திய ஆதரவு தொனி, தொனிக்கவில்லை -அதே போல் தாலிபான்கள்/அடிப்படைவாத முஸ்லீம்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஆனால் என்ன, தாலிபான்கள் நாம் அடிபடைவாதிகள் அதனால் பாமியன் புத்தரை உடைக்கிறோம் என்று நேரடியா சொல்வார்கள், இந்தியா ஜனநாயக, சட்டத்தின் ஆளுமை உள்ளநாடு என்று சொல்லிவிட்டு அதையே செய்வார்கள்.

கஸ்மீர் - தொடர் இஸ்லாமிய படை எடுப்புகளால் வட இந்திய ஹிந்துக்களுக்கு நிழந்த கொடுமை கொஞ்ச நஞ்சம் அல்ல - ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வரலாற்றை திருப்பி எழுத முனைய கூடாது, அப்படி முயல்வது அநீதிக்கு மேல் அநீதியாகவே இருக்கும் என்பது என்பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

ஆப்காணியை விட இவன் ஒரு படி மேல் மட்டுமே ..இவன் களை விட பலபடிகள் மேல் நாங்கள் ஜனநாயகபண்புகள் மற்றும் பல விடயங்களில் நாங்கள்...பெண்களின் உரிமைகளை மதிப்பதில் நாங்களும் இந்தியர்களும் சரி சமம்

இந்தியாவை விட இலங்கையில் பெண்களுக்கு அதிக உரிமை வழங்கப்படுகின்றது ...இந்தியாவில் இன்னும் பெண்களை பாலியல் அடிமைகளாகவே நடத்துகிறார்கள் ...ஆனால் அவர்கள் தாலிபான்களை விட மேல் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

உந்த கோதாரி பிடிச்சவங்களோடா சுன்னத்து செய்து போட்டு திரிவதை விட

அப்படி நீங்கள் அதை செய்துவிட்டு சும்மா திரிய முடியாது. மார்க்க கடமைகள் காபிர்கள் மீது சுப்பர் மாக்கெட்டில் கத்தியால் குத்தவது குண்டு வைப்பது செய்ய வேண்டும்.

4 hours ago, valavan said:

அதே நேரம் காஷ்மீரில் வாழ்ந்த பல லட்சம் பண்டிட்களை முஸ்லீம்கள் அங்கிருந்து கொன்றும் அடித்துவிரட்டியும் காஷ்மீரை முழுமையாக ஆக்கிரமித்தார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படி உண்மையில் முன்பு நடந்து இருக்கிறது இதை பற்றி பலருக்கு தெரியாது.

1 hour ago, ரதி said:

இந்தியாவை விட இலங்கையில் பெண்களுக்கு அதிக உரிமை வழங்கப்படுகின்றது ...இந்தியாவில் இன்னும் பெண்களை பாலியல் அடிமைகளாகவே நடத்துகிறார்கள் ...ஆனால் அவர்கள் தாலிபான்களை விட மேல் 

💯

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

தமிழகம் எனும் எம் இரத்த உறவு நிலம் இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமே ஈழதமிழன் வாயில் அடிக்கடி இந்தியா எனும் வார்த்தை வந்து போகிறது, இல்லையென்றால் இந்தியா எனும் வார்த்தையையே ரோஷமுள்ள தமிழன் எவனும் சொல்லிகூட பார்க்கமாட்டான்.

அது நிற்க

இந்த எண்ணம் மக்களிடையே இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்லைகளை வகுக்கும் பொழுது பல தில்லுமுல்லுகளை செய்து விட்டு மேற்குலகம் சென்றது.இன்று ஆப்கானிஸ்தானில் பல இனகுழுமங்கள் இருக்கின்றன அவர்களை இருநாட்டு எல்லைகளில்வாழும் வகையில் செய்து விட்டு சென்றுள்ளனர்.முக்கியமாக பஸ்தூன் இனமக்கள் இரு பகுதியிலும் வாழ்கின்றனர் .தேவைக்கு ஏற்ப மக்களை பயன்படுத்தலாம் என்ற உள்நோக்கம்.இனம் என்று ஒற்றுமை படுத்தாமல் மதம் என்ற ரீதியில் ஒற்றுமை படுத்தி சென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி உண்மையில் முன்பு நடந்து இருக்கிறது இதை பற்றி பலருக்கு தெரியாது.

💯

இன்றைய காலகட்டத்தில் யசீரிஸ்ட் (அவர்கள் குத்துவிளக்கை வழிபடுகிறார்கள் )என்பதனால்.மக்களின் மீது செய்துள்ளனர் ஈராக்கில் வாழும் இனத்தினர் மீது.. மேற்குலக படையெடுப்புக்கள் நடை பெறவில்லை என்றால் சில சமயம் நாங்களும் அரபிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ,பெண்களை மொட்டாக்கு போட வைத்து
தலிபான் வெற்றிக்கு பேரீட்சை பழம் கொடுத்திருப்போமோ ?

6 hours ago, Kapithan said:

நாங்கள் அழிக்கப்பட்டு விட்டோம் என்பது புத்தனுக்கு இன்னும் புரியவில்லையோ ☹️    

நாங்கள் அழிக்கப்படவில்லை ....எமது போராட்ட குழுவை அழித்துவிட்டனர் என்பது உண்மை ஆனால் இனம் இன்னும் வாழ்கின்றது பலரின் தேவைக்கு அந்த இனம் அங்கு வாழ வேண்டியிருக்கும் ....அதை பயன்படுத்திகொண்டு எம்மவர்கள் வாழ்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தியாவை நம்புகிறீர்களா?😂

சரி, அது உங்கள் தனிப்பட்ட முடிவு. அதை நான் மறுதலிக்கவில்லை; உடன்படவில்லை; வேறுபடுகிறேன்.

நன்றி.

எந்த உலக அரசியல் கொள்கை வகுப்பாளர்களையும் நம்ப முடியாது....நம்பவும் இல்லை ஆனால்....அவர்களின் தேவையை எமது நன்மைக்கு பயன்படுத்த தெரிய வேண்டும் ....
எமது இனம் அங்கு வாழ வேண்டும் என்பது பலரின் தேவை .....சிங்களவரை தவிர....

சிங்களவரை பொறுத்தவரை நாங்கள் அங்கு வாழ்வதால் அவர்களின் நாட்டுக்கு  பாதுகாப்பு பிரச்சனை என்ற எண்ணம் நீண்ட நாட் களாக உண்டு.தமிழ்பிரதேசம் என்ற அடையாளத்தை வேறுப்பதன் முக்கிய காரணம் அதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.