Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

  • Replies 165
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

உண்மை மீரா. எமது அடிப்படை உரிமையினை அரசியலாக்கி தமது கருத்தினைத் திணிப்பதே சிலரின் நோக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

சந்தர்ப்பவாதியல்லாத கவரிமான்களுக்கு சிங்களத்தைப் படித்தால் மயிர் உதிர்ந்து விடும் என்பது உண்மை! 

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

5 hours ago, goshan_che said:

மலையகம் போல இல்லாவிடினும் கிழக்கிலும் கணிசமான தமிழர்கள் சிங்களம் கொச்சையாகவேனும் பேசுவார்கள். ஆனால் கிழக்கு வாழ் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது போடா🤣.  

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் &  தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது.

சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது. 

26 minutes ago, ரஞ்சித் said:

உண்மை மீரா. எமது அடிப்படை உரிமையினை அரசியலாக்கி தமது கருத்தினைத் திணிப்பதே சிலரின் நோக்கம்.

"தமிழர் சிங்களம் படிப்பது நல்லதென சொல்வோர் ரஞ்சித் தியரியின் படி இரண்டே இரண்டு வகைக்குள் அடங்குவர்" என்பதற்கான பதிலே என் பதிவு.

இது போன்ற மொக்குத் தியரிகளை எதிர்த்து உதாரணங்களுடன் கருத்துச் சொல்வது திணிப்பல்ல, யாழ் களத்தில் இருப்போரின் உரிமை!   

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததைக் காட்டிலும் கொழும்பில் வாழ்ந்ததே அதிகம். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள். என்னால் தமிழ் பேசுவதுபோல், சிங்களமும் சரளமாகப் பேச முடியும். 

ஆனால், சிங்களவரைப் பொருத்தவரை நானும் தமிழனே, நானும் இன்னொரு புலிதான். என்னுடன் பல்கலையில் படித்தவர்களே என்னை இழுத்துக்கொண்டுபோய் மொறட்டுவை பொலீஸில் கொடுத்தார்கள். அபோதுதான் நான் எனது அடையாலத்தினை உண்மையாக உணர்ந்துகொண்டேன். நான் என்னதான் சிங்களம் பேசி, அவர்களுடன் என்னையும் ஒருவனாகக் காட்ட முனைந்தாலும் என்னை அவர்கள் தம்மில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.எனக்குத் தெரிந்த சிங்களம் என்னை காப்பாற்றவில்லை. எனக்கு சிங்களவர்களைப் போலவே அசல் உச்சரிப்புடன் சிங்களம் பேசமுடியும் என்று நான் காட்டிவந்த "விலாசம்" என்னைக் காப்பாற்றவில்லை. மொறட்டுவையில் வைத்து அடித்தபோது "நீ புலிகளின் புலநாய்வுத்துறையால் அனுப்பப்பட்டவன் தானே? அதுதானே சிங்களம் பேசுகிறாய்?" என்று கேட்டே அடித்தார்கள். எனக்குச் சிங்களம் தெரியுமென்பதால் பிரபாகரனையும் புலிகளையும், ஒட்டுமொத்தத் தாமிழர்களை படுமோசமாகச் சித்தரித்து சிங்களத்தில் என்னிடம் கூறி, "உனது நண்பர்களுக்குச் சொல்லடா" என்று கத்தினார்கள். 

சரி, என்னை விடுங்கள். 1983 இல் கொழும்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்களுக்குத் தெரிந்த சிங்களம் காப்பாற்றியதா? எம்மை அழிக்கும்போது நாம் சிங்களம் அறிந்துவைத்திருந்தோமா என்று அவர்கள் பார்த்தார்களா? 

1995 இல் கொழும்பை அதற்குமுன்னர் பார்த்திராத யாழ்ப்பாணத்து, மட்டக்களப்பு மாணவர்கள் மொறட்டுவை பல்கலையில் வந்து இணைந்தார்கள். அவர்களுக்குச் சிங்களம் என்பது தெரியாத அந்நிய மொழி. ஆனால், தமது அன்றாட அலுவல்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்துக்கொண்டார்கள். இன்றுவரை அதுதான் நடக்கிறது. எனக்கு அதிகம் சிங்களம் தெரியும் என்பதால் நான் அவர்களைக் காட்டிலும் அதிக பயன்களைப்பெறவுமில்லை, அவர்களுக்கு சிங்களம் தெரியாததால் அதிகம் இழக்கவுமில்லை. இருவருமே ஒரே நேரத்தில் பல்கலையில் இருந்து வெளியே வந்தோம், வேலைகளை எடுத்தோம். அவர்களில் இன்னும் பலர் இன்னும் கொழும்பிலேயே வாழ்கிறார்கள். எம்மில் பலருக்கு சிங்களம் தெரியாததை விட ஆங்கிலம் தெரியாமல் இருந்ததுதான் பெரிய குறையாக இருந்தது. அதுவே எமது கல்வியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியது. தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை படித்துவிட்டு ஆங்கிலத்தில் பல்கலையில் படிக்கும்போது பல சவால்களை நாம் சந்திக்க நேரிட்டது. அந்தச் சவால்களுடன் ஒப்பிடும்போது சிங்களம் தெரியாது என்பது எவருக்குமே ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. 

பஸ்ஸில் டிக்கெட் எடுக்கவும், கடையில் சாமான்கள் வாங்கவுமே எனக்குச் சிங்கள மொழி பயன்பட்டது. சிங்களம் தெரியாதவர்கள் கூட என்னைப்போலவே பஸ்ஸில் பயணிக்கிறார்கள், கடையில் பொருட்களை வாங்குகிறார்கள். இருவருக்கும் வித்தியாசம் இல்லை.

சிட்னிக்கு வந்தபிறகு எனக்குச் சிங்களவர்களுடன் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. 2003 இல் ஒருநாள் தமிழ்க் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது எவரோ சிங்களம் பேசியதைக் கேட்ட நான், அவரைத் தேடிச் சென்று சிங்களத்தில் பேசினேன். நான் அப்படிச் செய்திருக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை. நான் எனக்குச் சிங்களம் தெரியும் என்று எவருக்குமே காட்டவேண்டிய தேவையோ அல்லது அதனை உபயோகிக்க வேண்டிய தேவையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இனிமேல் சிங்களம் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கிறேன். 

கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்குச் சிங்களம் தெரிந்தால் சிலவேளை தமது வேலைகளைச் சுலபமாகச் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, எமது தாயகத்தில் அதற்கான தேவை ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. அப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறதென்றால், எம்மை தமது அடிமைகளாக வைத்திருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகிறது என்பதை முற்றாக நம்புகிறேன்.

நாம் சிங்களம் பேச அவதிப்படுவதுபோல சிங்களவர்கள் தமிழ் பேச அவதிப்படுவதில்லை. 

என்னைப்பொறுத்தவரையில் சிங்களம் எம்மை ஆக்கிரமிக்கும் ஒரு இனத்தின் மொழி. அதனைக்கற்கவேண்டிய தேவையில்லை. அதனைக் கற்றதன் மூலம் நான் ஏனைய தமிழர்களைக் காட்டிலும் அதிகம் அடையவுமில்லை.  

எனது தாயகத்தில் எனது மொழியினை நான் பேச எனக்கு உரிமை இருக்கிறது. அதனை மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல், எவர் எப்படித்தான் அதனை நியாயப்படுத்த முயற்சித்தாலும்கூட.  

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

எமது காலத்தில் யாழில் சிங்களவர்கள் என்று யாரும் இருக்கவில்லை. ஓரிரு தமிழ்-சிங்கள குடும்பங்கங்கள் இருந்தன அவர்கள் தமிழிலே கதைத்தார்கள். வீட்டிலும். எனவே இவர்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

ஆனால் நான் உலகிலேயே கண்ட மிக மோசமான இனவாதிகள் என்றால் - திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்கள்தான்.  

Just now, ரஞ்சித் said:

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

யாழ்பாணத்தில் சிங்களத்தில் கருமம் ஆற்ற வேண்டும் என நான் கருதவில்லை, ஆனால் ரவிராஜ் - 48க்கு பின்னர் வந்த சகல தமிழ் அரசியல்வாதிகளை விடவும் எமது பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எடுத்துப்போனார் அதனாலே பேரினவாதம் விளித்து அவரை அழித்தது என்பதை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த காரணதுக்காகவே (மட்டுமே) நாம் ஒரு துணை மொழியாக சிங்களதை கற்றல் ஆகாதா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

உங்கள் அனுபவம், அதன் வழி வந்த முடிவு புரிந்து கொள்ளக் கூடியதே!

மொறட்டுவை, கொழும்பு பல்கலை, ஏன் - பேராதனையில் ஆற்றுக்கு அக்கரையில் இருந்த பொறியியல் பீடத் தமிழர்களுக்கே ஆற்றுக்கு இக்கரையில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களை விட கசப்பான அனுபவம் தான்!

ஆனால், இந்த தனி அனுபவங்களை வைத்துக் கொண்டு சிங்களம் கற்க விரும்பும் தமிழர்களை உங்கள் தியரிப் படி வகுக்க வேண்டிய அவசியமில்லை!

மேலே நீங்கள் சொல்லியிருப்பது போல எந்த மொழியைப் படிப்பது விடுவது என்று நீங்கள் தீர்மானிக்க உரிமையுண்டு! மற்றவன் உங்கள் மரியாதை பெறாத மொழியைப் படித்தால் அதற்கு ஏதோ அடிமைப் புத்தி அல்லது அப்பாவித் தனம் மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தான் மொக்குத் தியரி என்கிறேன்!

10 minutes ago, ரஞ்சித் said:

ரவிராஜ் வாழ்ந்ததும், வேலை பார்த்ததும் கொழும்பில். அதனால் சிங்களம் அவருக்குச் சரளமாகப்பேசக்கூடியதாக இருந்தது. போதாக்குறைக்கு பாராளுமன்றத்திலும் சிங்களத்திலேயே பேசினார். சிங்களம் தெரிந்ததால் தப்பித்தாரா? இறுதியில் அவர் சிங்களத்தில் பேசிய விடயங்களுக்காகவே கொல்லப்பட்டார் என்பது வேறு விடயம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? 

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

யாழ்பாணத்தில் சிங்களத்தில் கருமம் ஆற்ற வேண்டும் என நான் கருதவில்லை, ஆனால் ரவிராஜ் - 48க்கு பின்னர் வந்த சகல தமிழ் அரசியல்வாதிகளை விடவும் எமது பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எடுத்துப்போனார் அதனாலே பேரினவாதம் விளித்து அவரை அழித்தது என்பதை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த காரணதுக்காகவே (மட்டுமே) நாம் ஒரு துணை மொழியாக சிங்களதை கற்றல் ஆகாதா?

தமிழர் பக்க நியாயங்களை சிங்களவருக்குச் சொல்வதற்கு ரவிராஜ் போன்றவர்கள் முயன்றார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதேவேலை சிங்களவர்களுக்குள்ளேயே பலர், உதாரணத்திற்கு விக்கிரமாபாகு கருணாரத்ன, முன்னாள் வாசுதேவ நாணயக்கார (இப்போது அவர் ஒரு சுத்த இனவாதி) போன்றவர்கள் முயற்சித்தார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கலவர்களின் மனங்களை மாற்ற முடிந்ததா?

இனவாதம் சிங்களவர்களின் அன்றாட வாழ்வியலில் ஒன்றாகக் கலந்திருக்கின்றது என்பது நீங்கள் அறியாதது அல்லவே? ரவிராஜுக்கும், சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் தெரிந்த சிங்களத்தால் இன்றுவரை எத்தனை சிங்களவர்களை நாம் மனம் மாற்றியிருக்கிறோம்? இவர்கள் அனைவருமே புலிகள் என்று சிங்கலவர்கள் வெளிப்படையாகவே சொல்வதைத்தவிர, எம்மால் அவர்களில் எந்த மாற்றத்தினையாவது கொண்டுவர முடிந்ததா? தமிழர் உரிமைகள் என்று பேசினாலே அது பயங்கரவாதம், பிரிவினைவாதம், தமிழ் இனவாதம் என்கிற மனோநிலையில் வாழும் ஒரு சமூகத்தினை அவர்களின் மொழி பேசிப் புரியவைக்க முடியும் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், இதுவரை அப்படி முயன்றவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது புலியென்று முத்திரை குத்தப்பட்டார்கள்.

நமக்குத் தெரிந்த சிங்களத்தைக் கொண்டு நாம் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புவது, "இலங்கை சிங்களவர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பெளத்தத்திற்கும் , சிங்கள மொழிக்கும் மற்றைய மதங்களுக்கும், மொழிகளுக்கும் இருக்கும் அந்தஸ்த்தினை விட அதிகம் கொடுக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், சிங்களவர்களின் நாட்டில் அவர்களுக்குச் சமமாக அந்தஸ்த்தினைக் கோராது, அவர்களைக் கோபபடுத்தாது, அவர்களாக விரும்பித் தரும் எந்தப் பிச்சையினையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்" என்பதைத்தான்.

அதைத்தான் கருணாவும், பிள்ளையானும், டக்கிளஸும் செய்துகொன்டிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

தனிச்சிங்கள சட்டம் வந்த போதும் சிங்களத்தை படித்தவர்கள் தமிழர்கள்.

சிங்களவர்கள் அப்படியல்ல. தமிழ் படிக்கவே கூடாது என விகாரத்துடன் திரிந்தவர்கள். வடபகுதியில் வாழ்ந்த பேக்கரி சிங்களவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நல்ல உதாரணங்கள்.

ஒரு தமிழனுக்கு பக்கத்து வீடு சிங்களமாக இருந்தால் அவன் தட்டித்தட்டி (பொட்ட பொட்ட) சிங்களம் கதைப்பான். ஆனால் சிங்களம் எங்கள் அளவுக்கு இறங்கி வராது.😁

இந்த பேக்கரி உரிமையாளர்களைத் தெரியாது - ஒரு வேளை 90 களில் வெளியேறி விட்டார்கள் போல! 

ஆனால் நான் அறிந்த மிகச் சில சிங்களவர்கள் தமிழ் தான் பேசினர் (சிங்கள மகாவித்தியாலயம் இல்லாமல் போய் விட்டது, எங்கே யாருடன் சிங்களம் பேசுவது யாழில்!). இவர்களில் சிலர் - பியதாச மாஸ்ரர் போன்றோர் - அரச ஊழியர்கள் சிங்களப் பரீட்சைக்குப் படிக்க உதவியிருக்கின்றனர். 

 2012 இல் வன்னி போன போது  தமிழில் சரளமாகப் பேசக்கூடிய சிங்களப் பெண் மிருக வைத்தியர்கள் பலர் அங்கே வேலை செய்தனர். எனவே காலத்தோடு சிறிய மாற்றங்கள் தேவைகள் கருதியாவது ஏற்பட்டிருக்கிறது! 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 
18 minutes ago, Justin said:

படித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்! அதே போல அந்த பொலிஸ்காரர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது சட்டப் படி அமல் செய்யப் பட வேண்டும்!

சிங்களம் கற்றல் என்பது தமிழர்களின் விருப்பத்துடன் சம்பந்தப்பட்டது என்கிற நிலை மாறி, அது கட்டாயமாக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன். "நாம் சிங்களத்தில்தான் உங்களுடன் தொடர்புகொள்வோம், வேண்டுமென்றால் சிங்களம் படியுங்கள், அல்லது உங்களுக்கு எதுவுமே கிடைக்காது" என்கிற மனநிலைதான்.

1950 களின்  தனிச்சிங்களச் சட்டத்தின் தொடர்ச்சியாகவே இது எனக்குத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 
முற்றிலும் ஏற்றுகொள்கிறேன். இப்போ வயோதிபகாலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழக அதி உயர் பதவியில் இருந்தவர் சொன்னது. 

அவர் ஆங்கில மூலம் கற்றவர். பல்கலையில்  பதவியில் இருக்கும் போது திடீரென்று ( அப்போ சட்டமும் இப்போ போலில்லை) கடிதங்கள் யாவும் சிங்களத்தில் வர தொடங்கியதாம். வேறு வழியில்லாமல் தன் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு சிங்கள சிற்றூழியனை கொண்டு கடிதங்களை வாசிக்கும் நிலை ஏற்பட்டதாம்.

அவரை ஒரு நாளில் பெரும் படிப்பாளி என்ற நிலையில் இருந்து, எழுத படிக்க தெரியாதவன் நிலைக்கு ஆளாக்கிவிட்டிருந்தார்கள்.

போங்கடா நீங்களும் உங்க நாடும் என்று தூக்கி எறிந்து விட்டு லண்டன் வந்து விட்டாராம். 

எப்படியோ ஒரு ஆளுமை மிக்க திறைமைசாலி தமிழனை வெளியேற்றி விட்டார்கள் 🙁.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன். 

தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி அரசால் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதையும், சிங்கள அதிகாரிகள் வேண்டுமென்றே சுற்றுநிருபங்கள் கடிதங்களை சிங்களத்தில் அனுப்புவதையும், ராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே தமிழருடன் தொடர்பாடுவதையும், அதை அரசு வேண்டுமென்றே அனுமதிப்பதையும்  நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான காரணமும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது எனக்குத் தெரியும்.இதனை தமிழர் பகுதிகளின் சேவையாற்றும் சிங்கள அதிகாரிகளின் வெறும் அசமந்தமாகப் பார்த்துவிட்டு என்னால் கடந்துபோக முடியவில்லை. 

மற்றும்படி, சிங்களம் தெரிந்தால் சம்பாஷணை இலகு ஆகிவிடுகிறது. அதைத்தவிர வேறு நண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 
 
சிங்களம் கற்றல் என்பது தமிழர்களின் விருப்பத்துடன் சம்பந்தப்பட்டது என்கிற நிலை மாறி, அது கட்டாயமாக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன். "நாம் சிங்களத்தில்தான் உங்களுடன் தொடர்புகொள்வோம், வேண்டுமென்றால் சிங்களம் படியுங்கள், அல்லது உங்களுக்கு எதுவுமே கிடைக்காது" என்கிற மனநிலைதான்.

1950 களின்  தனிச்சிங்களச் சட்டத்தின் தொடர்ச்சியாகவே இது எனக்குத் தெரிகிறது.

தாயகத்தில் தற்போது வேலை தேடப் போகிற தமிழ் இளைஞர்களுக்கு சம்பாசணையை விட முக்கியமான நன்மைகள் சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் படிப்பதால் இருக்கின்றன என்பதே நான் அறிந்தது.

இந்த மும்மொழி அல்லது இரு மொழிப் பரீட்சையத்தை எதிர்பார்ப்பது பல தனியார் நிறுவனங்கள். இதன் காரணம் மிகவும் தெளிவானது: நாட்டின் எப்பகுதியிலும் வேலை செய்யக் கூடிய தன்மை தான் தற்போது தேவை! இது இல்லையேல், யாழ் பல்கலைப் பட்டதாரிகள் போல அரச வேலைக்காக உண்ணாவிரதமிருக்க வேண்டியது தான்!

இதை, ஒரு அரசியல் கோஷமாக சிங்களவன் மாற்றலாம். முன்னேற வேண்டிய தமிழரான எங்களுக்கு அப்படி கோஷம் போடும் luxury கிடையாது என நினைக்கிறேன். இதை நீங்கள் அடிமைப் புத்தி எனலாம் - நான் நடைமுறைவாதம் (pragmatism) என்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை.. சீனர்களை பார்த்துக் கேட்கலாமே. அங்கு மட்டும் சிங்களம் பணியும் குனியும்.

தமிழர்களிடத்தில் தான் இந்த வீராப்பு எல்லாம்.

தேவை என்றால்.. எல்லாரும் எல்லா மொழியும் படிக்கலாம். தேவை இல்லாதவன் எதுக்கு அதில மிணக்கடனும். அவனுக்கு தேவையான மொழியில் தொடர்பாடல் புலமை பெற்றாலே போதும்.

மேலும்.. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குக் கிழக்கில்.. தமிழே தெரியாத சிங்களவன் தொழில் செய்ய முடியும் என்றால்.. தமிழர் தமிழர் பிரதேசத்தில் ஏன் தொழில் செய்ய முடியாது..??!

மொழி அமுலாக்கம் தேவையோடு இருக்க வேண்டுமே தவிர.. சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்போடு.. திமிரோடு.. இருக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சிங்களம் படிப்பதால் உள்ள நன்மை: சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்க உதவுமே தவிர தமிழனுக்கு வேறொரு நன்மை ஏற்படாது என்பதற்கு அமரர்  ரவிராஜும், கதிர்காமரும் சாட்சி. பிரச்சனை காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த சிங்களம் தெரிந்த பல தமிழர் போலீஸ் நிலையங்களில் பதியப்படவேண்டும் என்று அலைக்கழிக்கப்பட்டார்கள், போலிஸ்டநிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டார்கள். சிங்களத்துக்கு தேவையென்றால் சிங்களம் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும், தேவையில்லாவிட்டால் சிங்களம் தெரிந்திருந்தாலும் தூக்கியெறியும்.  ஒடுக்குழுக்கள் எல்லாம் சிங்களம் தெரிந்தா சிங்களத்தின் திட்டங்களையெல்லாம் செய்து முடித்தது? சிங்களம் படிக்க வேண்டுமா? இல்லையா? அதனால் நன்மை  உண்டா  என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள். நான் நன்மையடைந்தேன் ஆகவே நீயும் கற்றுக்கொள் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆங்கில மொழியியை உள்வாங்க தொடங்கி விட்டனர். இதற்கு சமூக வலைத்தளங்களும் ஓர் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

தமிழன் சிங்களம் படிப்பதால் உள்ள நன்மை: சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்க உதவுமே தவிர தமிழனுக்கு வேறொரு நன்மை ஏற்படாது என்பதற்கு அமரர்  ரவிராஜும், கதிர்காமரும் சாட்சி. பிரச்சனை காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த சிங்களம் தெரிந்த பல தமிழர் போலீஸ் நிலையங்களில் பதியப்படவேண்டும் என்று அலைக்கழிக்கப்பட்டார்கள், போலிஸ்டநிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டார்கள். சிங்களத்துக்கு தேவையென்றால் சிங்களம் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும், தேவையில்லாவிட்டால் சிங்களம் தெரிந்திருந்தாலும் தூக்கியெறியும்.  ஒடுக்குழுக்கள் எல்லாம் சிங்களம் தெரிந்தா சிங்களத்தின் திட்டங்களையெல்லாம் செய்து முடித்தது? சிங்களம் படிக்க வேண்டுமா? இல்லையா? அதனால் நன்மை  உண்டா  என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள். நான் நன்மையடைந்தேன் ஆகவே நீயும் கற்றுக்கொள் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

கதிர்காமரை சொல்லலாம். மாமனிதர் ரவிராஜ் இதற்குள் எப்படி அடங்குவார். 

அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அரப்பணிப்பு தமிழ்பொதுமக்களின் பல ஆண்டுகால சொல்லணா துயரங்கள்  இழப்புக்களின் பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட கிழக்கில் ஒரு அரசியல் அலகை ஏற்றுக்கொண்டுருந்தால் இன்று இவ்வாறு புலம்ப வேண்டிய நிலை வந்திருக்காது. காற்றுள்ள போது தூற்றி கொண்டிருக்க வேண்டும். போராடிய கடந்த தலைமுறை விட்ட தவறை பாடமாக எடுத்து அடுத்த தலைமுறையாவது அறிவு பூர்வமாக சுயமாக சித்தித்து  உரிமைகளை பெறட்டும். இப்போதுள்ள தலைமுறையான நாம் எமக்குள் இவ்வாறு பத்தி பந்தியாக ஒப்பாரி வைப்பதற்கு தான் லாயக்கு. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அரப்பணிப்பு தமிழ்பொதுமக்களின் பல ஆண்டுகால சொல்லணா துயரங்கள்  இழப்புக்களின் பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட கிழக்கில் ஒரு அரசியல் அலகை ஏற்றுக்கொண்டுருந்தால் இன்று இவ்வாறு புலம்ப வேண்டிய நிலை வந்திருக்காது. காற்றுள்ள போது தூற்றி கொண்டிருக்க வேண்டும். போராடிய கடந்த தலைமுறை விட்ட தவறை பாடமாக எடுத்து அடுத்த தலைமுறையாவது அறிவு பூர்வமாக சுயமாக சித்தித்து  உரிமைகளை பெறட்டும். இப்போதுள்ள தலைமுறையான நாம் எமக்குள் இவ்வாறு பத்தி பந்தியாக ஒப்பாரி வைப்பதற்கு தான் லாயக்கு”

அண்ணை என்னவொரு கண்டுபிடிப்பு…?😂

14 minutes ago, விசுகு said:

வந்திட்டார் 

கிழிஞ்ச

தேய்ஞ்ச கசற்றோட???😡

தினசரி இங்க வந்து சிங்களத்தை திட்டி ஒப்பாரி வைத்து புலம்புவது மட்டும் கிழிஞ்ச தேய்ஞ்ச இத்துபோன கசற் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுருவிகள் உள்ள இடத்திலேயே களை புடுங்கப்பட வேண்டும்….

6 minutes ago, MEERA said:

அண்ணை என்னவொரு கண்டுபிடிப்பு…?😂

இது ஒன்றும. கண்டு பிடிப்பு இல்லை. சாதாரண பொது மக்கள் கூட புரிந்து கொள்ளக்கூடிய உண்மை. இந்த சிறிய விடயத்தைக் கூட புரிந்து செயற்படுத்த முடியாத முட்டாள்தனத்தால் தான் இங்கு எந்த பயனுமற்ற ஒப்பாரி நடக்கிறது.  எதிர்கால பிள்ளைகள் இந்த மூடத்தனங்களை செய்யக்கூடாது என்பதற்காகவே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. 

3 minutes ago, MEERA said:

புல்லுருவிகள் உள்ள இடத்திலேயே களை புடுங்கப்பட வேண்டும்….

களை பிடுங்குதென்றல் என்ன? அடுத்தவர் பெற்ற பிள்ளைகளை போட்டு தள்ளும் ஈனச்செயல் தானே! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

அந்த மக்கள் தங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்  என்று விரும்புகிறார்கள்

ஆகவே இதுவரைக்கும் அந்த மக்கள் நீங்கள்  சொல்லும் 'தங்களுக்கு' என்பவர்களுக்கு அடிமையாகத் தானே இருந்தனர் என்பதை தானே சொல்கிறீர்கள்.

இந்த தங்களுக்கு' என்பவர்களை, புலம் பெயர்ந்த மக்கள், அதிலும் யாழ் காலத்தில் பதிப்பவர்களின் கருத்தோடு ஒத்து போகும் புலம் பெயர்ந்த மக்கள் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் சொல்வது அப்படிப்பட்ட புலப்பெயர்ந்த மக்களுக்கு, அந்த (அங்குள்ள) மக்கள் இதுவரைக்கும் அடிமையாக இருந்தனர்.

சரி, பொதுவாக அடிமை, அரசன் உறவில், எவர் எவருக்கு  சேவகம் செய்வது, கேட்டபோதெல்லாம் பொருள்  கொடுப்பது, எந்த நேரமாயினும் கிஞ்சித்தும் தயக்கம் இன்றி கட்டாயம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது, கேட்பது, செய்யுமாறு ஆணை போடுவது.. 

நான் அறிந்த  வரையிலும், அடிமை தான் அரசனுக்கு சேவகம் செய்வது, பொருள்  கொடுப்பது, நேரகாலம்  இன்றி அரசன் தான் விரும்பியதை கேட்டது, அடிமையும் அரசனின் மனம் நோகாமல் செய்ய எத்தனிப்பது.

இப்படிப்பட்ட புலம்பெய மக்களே, 'தங்களுக்கு' என்பவர்களுக்கு (தனிப்பட்ட உறவு என்பதை தாண்டி கூட),  சேவகம் செய்வது, பொருள்  கொடுப்பது, நேரகாலம்  இன்றி அங்குள்ளவர்கள்  விரும்பியதை கேட்பது, 'தங்களுக்கு' என்பவர்களுக்கு  மனம் நோகாமல் புலம்பெயர்  மக்கள்  செய்ய எத்தனிப்பது.

எவர் அடிமை? எவர் அரசன்? இதுவரையிலாவது?  

13 hours ago, Justin said:

இந்த பேக்கரி உரிமையாளர்களைத் தெரியாது - ஒரு வேளை 90 களில் வெளியேறி விட்டார்கள் போல! 

இந்த பேக்கரி உரிமையாளர்களும் அவர்களிடம் வேலை செய்த சிங்களவரும் நன்றாக தமிழ் பேசினர் என்பதே உண்மை. சிறு வயதில் அவர்களை எமது ஊர் அயலவர்கள் என்றே நினைத்தேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.