Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதில் விசம் எங்கே இருக்கிறது விசுகர்? அவர் சொன்ன விடயம் சுவிசில் நடந்ததா இல்லையா? ஒரு கருப்பொருள் பற்றிப் பேச்சு வரும் போது நடந்த சம்பவத்தைச் சொல்வது ஏன் இவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது உங்களுக்கு?  

ஒரு தரம் சொல்லலாம்

நூறு தரும் சொல்லலாம்

ஆயிரம் தரம் சொல்லலாம்

ஒரு லட்சம் தடவை என்றால்???

அதுவும் ஆட்டுக்குள் மாட்டை அவிழ்த்து விட்டால்??

பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

44 minutes ago, valavan said:

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

அத்தனையும் உண்மை.

இறுதிக்கால நிதிச்சேர்ப்பின்போது யூரோவில் நான்கு பூச்சியம் தொகை கொடுத்த நானே பொத்திக் கொண்டு இருக்கிறேன். ஒளிச்சு திரிந்துவர்கள் மதில் மேல் பூனையாக நின்றவர்களின் ஓலங்கள் தாங்க முடியவில்லை 😡

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு தரம் சொல்லலாம்

நூறு தரும் சொல்லலாம்

ஆயிரம் தரம் சொல்லலாம்

ஒரு லட்சம் தடவை என்றால்???

அதுவும் ஆட்டுக்குள் மாட்டை அவிழ்த்து விட்டால்??

பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தனையும் உண்மை.

இறுதிக்கால நிதிச்சேர்ப்பின்போது யூரோவில் நான்கு பூச்சியம் தொகை கொடுத்த நானே பொத்திக் கொண்டு இருக்கிறேன். ஒளிச்சு திரிந்துவர்கள் மதில் மேல் பூனையாக நின்றவர்களின் ஓலங்கள் தாங்க முடியவில்லை 😡

விசுகர், இலஞ்சம், கையூட்டு ஏதும் வாங்கினர் என்ற ஆதாரங்கள் எவையும் இல்லாமலே சில த.தே.கூ அரசியல் வாதிகளை "பெட்டி வாங்கினார்" என்று ஆயிரக்கணக்கான தடவைகள் எழுதும் போது இந்தக் கோபம் உங்களுக்கு வருவதில்லை! ஆனால் கள்ள வேலை செய்தனர் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு குழுவை குற்றஞ்சாட்டுவது உங்களுக்கு ஆத்திரம் தருகிறது, சலிப்பூட்டுகிறது! 

இத்தகைய அரசியல் சாயம் பூசிய பார்வையில்லாமல் எல்லாரும் செய்த திருட்டுத் தனங்களைச் சுட்டிக் காட்ட யாருக்கும் உரிமையுண்டு! இது கொடுத்த தொகையில் எத்தனை பூச்சியங்கள் இருந்தன என்று பார்த்து வழங்கப் படும் உரிமையல்ல! சொல்லப் போனால், இது யாரும் யாருக்கும் கொடுக்கும் அல்லது பறித்துக் கொள்ளும் உரிமையல்ல என்றே நினைக்கிறேன். பேசப்படும் விடயத்தோடு ஒத்துப் போனால் இவற்றைப் பேசுவதில் தவறுமில்லை!

பொய்யான வெள்ளையடித்த வரலாற்றை நாம் எழுதி அடுத்த சந்ததியையும் கொள்ளையர்களிடம் ஏமாளிகளாக விட்டு விடாமல் இருக்க இது பேசப்பட வேண்டும்!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

வளவன், அந்த ஒபாமா கேள்வியின் சீரியசான தன்மை உங்களுக்கும் புரியவில்லையென்பது ஆச்சரியம் தான்!
 எனக்குத் தெரிந்த மனித வரலாற்றின் படி, "தூய" என்று இன அடையாளத்தில் இல்லை! இனம் என்பதே ஒரு cultural construct. தமிழ் என்ற மொழியையும் வாழ்க்கை முறைகளையும் சுற்றி இருப்போர் தமிழர்! 

இந்த வரைவிலக்கணம் தெரியாத (அல்லது தெரிந்தும் மறைக்கும்) மூன்றாந்தர தமிழக அரசியல் வாதியொருவர், வரைவிலக்கணம் தெரியாத இன்னும் சில ஆர்வலர்களையும் சேர்த்துக் கொண்டு "தூய தமிழன்" என்றொரு குழு இருப்பதாக தோற்றம் காட்டுகிறார்! முன்னர் பல திரிகளில் cut and dry ஆகவே இதை மறுத்துரைத்திருக்கின்றனர், நான் உட்பட பலர்! 

இப்போது நேராக விளக்கும் நிலையைத் தாண்டி, சலிப்புடன் கூடிய நக்கல் என்னிடம் வந்து விட்டது! சில சமயங்களில் நேராகச் சொல்வதை விட இப்படி நக்கல் வழி சொன்னால் சிலருக்கு ஏறக்கூடும்! சிலருக்கு கோபம் வந்தால் அது collateral damage. ஒரு பாதகமும் இல்லை! 

8 hours ago, குமாரசாமி said:

எப்போதாவது நடுநிலமையாக நின்று கருத்து தெரிவித்து இருக்கின்றீர்களா?

அதென்ன உங்களுக்கு புலிகள் மட்டும் தவறு செய்தவர்களாக தெரிகின்றாகள்? யாழ்களத்தில் எத்தனையோ திரிகளில் வேறு  இயக்கங்கள் பற்றி கடுமையான கருத்தாடல்கள் நடந்தனவே? சிங்கள இனவாதம் பற்றி காரசரமான கருத்தாடல் எல்லாம் நடந்தனவே? அங்கு எல்லாம் வர மாட்டீர்கள். அப்படியே அந்த திரிகளுக்குள் தாங்கள் சமூகமளித்தாலும் புலி சொல் கட்டாயம் இருந்தே தீரும்.

இந்த கேள்வியை நீங்கள் உங்களையே மனச்சாட்சியுடன் கேட்க முடியுமா? எனது கருத்துக்களில் தமிழரின்  விடுதலை போராட்டத்தின் படு தோல்விக்கும் இன்றைய தமிழ் மக்களின் கையறு நிலைக்கும் அகிம்சை போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளினதும் ஆயுதப்போராட்டத்தை நடத்திய ஆயுதப்போராளிகளினதும் பாரிய தவறான அரசியலே காரணம் என்பதை தெளிவாக பல முறை கூறியுள்ளேன். மற்றையவர்களின் அரசியலை முற்றாக வன்முறை மூலம் தடை செய்து முழுமையாக போராட்டத்தை நீண்ட காலம் நடத்திய விடுதலைப்புலிகளுக்கும் போராட்ட தோல்வியில் பாரிய பங்கு உள்ளது என்றே தெரிவிக்கிறேன். இதில் புலிகளின் குற்றங்களை மறைத்தவாறு மற்றையவர்கள் மீது முழுப்பழியையும் போட எத்தனிக்கும் நீங்கள் நடுநிலை வாதியா? 

சிங்கள அரசு இனவாத அரசு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த இனவாத அரசு தமிழரின்  போராட்டதை பயங்கரவாதமாக பரப்புரை செய்து உலகை ஏற்றுகொள்ள வைப்பதில் வெற்றியடையும் விதமாக எமது போராட்டதை நடத்தியவர்களின் தவறான செயற்பாடு எவ்வாறு உதவி செய்தது என்பதை பற்றியே நான் பேசுகிறேன். 

இந்த திரியில் தமிழர்கள் என்றால் பத்தரை மாற்று தங்கங்கள் என்றும் எந்த லஞ்ச ஊழல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு அது அப்படி அல்ல என்று தமிழர்களும்  ஊழல் லஞ்சம் பண மோசடி செய்வதில் கில்லாடிகள் தான்   என்ற உண்மையை தெரிவித்ததற்கு நடுநிலை தவறியதாக நீங்கள் பொங்கியது ஏனோ? 

7 hours ago, valavan said:

 போராட்டம் நடந்த காலத்தில் தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழர்கள் உயிரை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்,

புலம் பெயர் பெரும்பான்மை தமிழர்கள் பொருளை கொடுத்து புலிகளை வளர்த்தார்கள்.

போராட்டம் முற்று பெற்ற பின்னரும் தாயகத்திலும் சரி புலம் பெயர் தேசத்திலும் சரி புலிகளை வசைபாடிய தாயக கனவுடன் வாழ்ந்த தமிழர்களே கிடையாது.

போராட்டத்துக்கு நிதி சேகரித்தவர்கள் அது முற்று பெற்ற பின்னர் அதை கையாடல் செய்தது முற்று முழுதான உண்மைதான், அதை தவறு என்று சொல்பவர்கள் அதிகம்தான், ஆனால் அவர்களை தண்டிக்க ஏது வழி? வாழும் நாடுகளின் சூழலும் சட்டமும் இடம் கொடுக்குமா?

காசு கொடுத்தவர்களே அதுபற்றி கதைத்து புண்ணியமில்லை என்று ஒதுங்கிகொண்டார்கள், தூர நின்று ஒருகாலம் வேடிக்கை பார்த்தவர்களே அதை துருவி துருவி சந்தடி சாக்கில் எம் போராட்ட அமைப்பையும் தலைமையையும் போராளிகளையும் சீண்டி போகிறார்கள்.

எண்ணெய் பூசிகொண்டு மண்ணில் புரண்டதுபோல் மண்மீட்புகாலத்தில் வாழ்ந்தவர்களே நியாயத்தை கேட்கிறோம் என்ற பேரில் தமது தனிப்பட்ட விமர்சனங்களை போராட்ட அமைப்பு தலைமைமீது கொட்டி தீர்க்கிறார்கள், ஒருகாலம்   உயிரையும் பொருளையும் உணர்வையும் தமிழரின் எதிர்கால வாழ்வுக்காய் கொடுத்து ஏங்கியவர்கள் கொடுத்தவர்கள் அதை சகித்து கொள்ள மாட்டார்கள்.

ஒபாமா தூய தமிழரா சுவிஸ்காரர்கள் தூய தமிழரா என்று கேட்பதெல்லாம் விதண்டாவாத நகைசுவையின் உச்சம்.

சீமான் என்ற தமிழர் தமிழர்கள் பற்றிய விசயத்தில் பேசியதால் தூய தமிழன் என்ற வார்த்தை அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவே அமெரிக்கர்கள் ஒபாமாபற்றி பேசினால், சுவிஸ் மக்கள் சுவிஸ் அரசியல்பற்றி பேசினால் அங்கே தூய அமெரிக்கர்கள் தூய  சுவிஸ்காரர்கள் என்ற சொல்லாடல் கையாளப்படும்.

தூய தமிழர் என்ற சொல் எதுக்கு அங்கே வரபோகிறது?

பொருத்தமற்ற சொற் கையாடல்கள்  வெறும் சீண்டல் கருத்தாடலில் நீங்கள்  ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

இங்கு உண்மைகளை கூறுப்போது அதை வசை பாடல் என்று மடை மாற்றுவதன் காரணம் என்ன?   சிங்கள இனவாத இராணுவம் செய்த படுகொலைகள் தொடர்பான உண்மைகளை கூறும் போது  அதை வசை பாடல், நாட்டுக்கெதிரான செயற்பாடு என்று மகிந்த குழு கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? 

 தமிழரின் உரிமைக்காக தமது உயிர்களை அரபணித்த ஒவ்வொரு மாவீரரும் அவர் எந்த இயக்கத்தில் இருந்திருந்தாலும் தனிப்பட கெளரவிக்கப்படல் வேண்டும. ஆனால் தவறான அரசியல் தீர்மானங்களை எடுத்து தமிழருக்கு பேரழிவை கொடுத்தவர்கள் பற்றி அம்பலப்படுத்துதல் எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும். எவர் மீதும் விசுவாசம் கொண்டு அவர்களின் அரசியல் தவறுகளை மறைக்கும் தேவை எனக்கு இருப்பதாக கருதவில்லை. இங்கு பலருக்கு தமிழர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நாம் விசுவாசம் வைத்த அமைப்பின் தவறுகளை மறைத்து அவர்களுக்கு வெள்ளையடிப்போம் என்ற மனநிலையே உள்ளது.  ஆனால் தாயகத்தில் வாழும் பெரும்பாலான மக்களின் மனநிலை அவ்வாறு இல்லை. 

6 hours ago, விசுகு said:

இறுதிக்கால நிதிச்சேர்ப்பின்போது யூரோவில் நான்கு பூச்சியம் தொகை கொடுத்த நானே பொத்திக் கொண்டு இருக்கிறேன். ஒளிச்சு திரிந்துவர்கள் மதில் மேல் பூனையாக நின்றவர்களின் ஓலங்கள் தாங்க முடியவில்லை 😡

ஓழிச்சு திரிந்தவர்கள் என்று எதை வைத்து கூறுகின்றீர்கள்? திருட்டை பற்றி பேசினால் பதட்டமடைந்து நானே பொத்திக்கொண்டு இருக்கிறேன் நீயும்  அவ்வாறு இரு என்று, உங்கள் அன்பிற்குரிய திருடர்களை காப்பபாற்ற துடிப்பது  ஏனோ? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

விசுகர், இலஞ்சம், கையூட்டு ஏதும் வாங்கினர் என்ற ஆதாரங்கள் எவையும் இல்லாமலே சில த.தே.கூ அரசியல் வாதிகளை "பெட்டி வாங்கினார்" என்று ஆயிரக்கணக்கான தடவைகள் எழுதும் போது இந்தக் கோபம் உங்களுக்கு வருவதில்லை! ஆனால் கள்ள வேலை செய்தனர் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு குழுவை குற்றஞ்சாட்டுவது உங்களுக்கு ஆத்திரம் தருகிறது, சலிப்பூட்டுகிறது! 

இத்தகைய அரசியல் சாயம் பூசிய பார்வையில்லாமல் எல்லாரும் செய்த திருட்டுத் தனங்களைச் சுட்டிக் காட்ட யாருக்கும் உரிமையுண்டு! இது கொடுத்த தொகையில் எத்தனை பூச்சியங்கள் இருந்தன என்று பார்த்து வழங்கப் படும் உரிமையல்ல! சொல்லப் போனால், இது யாரும் யாருக்கும் கொடுக்கும் அல்லது பறித்துக் கொள்ளும் உரிமையல்ல என்றே நினைக்கிறேன். பேசப்படும் விடயத்தோடு ஒத்துப் போனால் இவற்றைப் பேசுவதில் தவறுமில்லை!

பொய்யான வெள்ளையடித்த வரலாற்றை நாம் எழுதி அடுத்த சந்ததியையும் கொள்ளையர்களிடம் ஏமாளிகளாக விட்டு விடாமல் இருக்க இது பேசப்பட வேண்டும்!  

குற்றம் நிரூபிக்க படும் வரை எவரும் நிரபராதி தான். 

ஆயிரம் திருடர்கள் தப்பினால் கூட ஒரு நிரபராதி தண்டனை பெற்று விடக்கூடாது என்பது தான் சட்டமே.

அப்படியானால் எல்லாரையும் ஒரே சாக்கில் போட்டு ஒவ்வொரு திரியிலும் இருட்டடி செய்யும் போதும் உங்கள் வரலாற்றுக்கு தூய்மை செய்யும் ஐம்புலன்களும் அசைவின்றி இருப்பதும் கவனிக்கத்தக்கது 

16 minutes ago, tulpen said:

ஓழிச்சு திரிந்தவர்கள் என்று எதை வைத்து கூறுகின்றீர்கள்? திருட்டை பற்றி பேசினால் பதட்டமடைந்து நானே பொத்திக்கொண்டு இருக்கிறேன் நீயும்  அவ்வாறு இரு என்று, உங்கள் அன்பிற்குரிய திருடர்களை காப்பபாற்ற துடிப்பது  ஏனோ? 😂😂

உங்களுக்கு திருடரை தெரிந்து இருந்தால் அதை பகிரங்க படுத்துங்கள் என்று இத்துடன் ஆயிரம் தரம் எழுதி விட்டேன்.

ஒன்றில் நீங்கள் அவர்களை காப்பாற்ற முயல்கிறீர்கள் அல்லது நீங்களே அதில் ஒருவராக இருக்கணும்.

எனவே எதுக்கு இடைக்கிடை தூக்க நேரம் முடிய இங்கே குசு விடுதல்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

அப்ப ஒபாமா தூய தமிழரா? (நானும் ஆய்வாளர் இல்லை! பகிடி தான்:grin:)

ஒபாமாவில் ஊழல் குற்றச்சாட்டில்லாத படியால அவரையும் தூய தமிழரா எடுக்கலாம். 🤔

13 hours ago, tulpen said:

நீங்கள் தூய தமிழ் மகனை பற்றி கூறியதால் தூய தமிழ் மகனைப் பற்றி  பொது படையாகவே தெரிவித்தேன் ஏராளன். நான் சீமானை பற்றி கூறவில்லை. எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளார்கள்.  ஊழல் செய்யும் திருடர்களும் உள்ளார்கள். தமிழரில் அப்படி லஞ்சம் ஊழல் செய்வோர் இல்லை என்று நீங்கள் ஜோக் அடித்த‍தால் உங்களுக்கு பதில் எழுதினேன்.

சுவிற்சர்லாந்து பொது துறை ஊழல்கள் குறைந்த நாடு. அப்படியானல் சுவிஸ் மக்கள் தூய தமிழரா?😂

நீங்கள் கூறுவதில் மாற்றுக்கருத்து இல்லை, பொதுமைப்படுத்தாது இருப்போம். எல்லாத்திலயும் 50-50 இருக்கு.
சுவிஸிலயும் தூய தமிழர்கள் இருப்பினம் தானே?!🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் சேர்த்த பணத்தை களவெடுத்தவர்களை எல்லோரும் எதிர்ப்பார்கள் தானே? அதில் யாழ் உறவுகளும் தீவிரமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

55 minutes ago, விசுகு said:

உங்களுக்கு திருடரை தெரிந்து இருந்தால் அதை பகிரங்க படுத்துங்கள் என்று இத்துடன் ஆயிரம் தரம் எழுதி விட்டேன்.

ஒன்றில் நீங்கள் அவர்களை காப்பாற்ற முயல்கிறீர்கள் அல்லது நீங்களே அதில் ஒருவராக இருக்கணும்.

அந்த திருடர்கள் பற்றி சுவிற்சர்லாந்துல்  திருட்டு கொடுத்த பல ஆயிரக்கணக்கான தமிழருக்கு தெரியும். இநு ஒன்றும் இரகசியம் அல்ல.  அது சரி நான் அந்த திருடர்களை பற்றி பொதுவாக எழுதினால் ஒவ்வொரு முறையும்  தேவையில்லாமல் நீங்கள் வந்து ஆஜராகி அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதால் நீங்களும் அந்த திருடர்களில் ஒருவரோ என று என்னாலும் கேட்க முடியுமல்லாவா? ஆனால் அப்படி தனிப்பட்ட தாக்குதல் நடத்தியாவது இது பற்றி பேசாமல் தடுக்கலாம் என்ற உங்கள் மலினமான உத்தி எனக்கில்லை. 

Edited by tulpen
மேலதிக சேர்ககை

31 minutes ago, ஏராளன் said:

நீங்கள் கூறுவதில் மாற்றுக்கருத்து இல்லை, பொதுமைப்படுத்தாது இருப்போம். எல்லாத்திலயும் 50-50 இருக்கு.

நான் பொதுமைப்படுத்தவில்லை ஏராளன். உலகில் வாழும் எல்லா இனங்களிலும் நல்லவர்களும் உண்டு. கிரிமினல்களும் உண்டு. தூய தமிழர்கள் என்றால் ஊழல் செய்யாதவர்கள் என்று நீங்கள் கூறிய  ஜோக்கிற்கு எல்லா தமிழர்களுமே சிரிப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நான் பொதுமைப்படுத்தவில்லை ஏராளன். உலகில் வாழும் எல்லா இனங்களிலும் நல்லவர்களும் உண்டு. கிரிமினல்களும் உண்டு. தூய தமிழர்கள் என்றால் ஊழல் செய்யாதவர்கள் என்று நீங்கள் கூறிய  ஜோக்கிற்கு எல்லா தமிழர்களுமே சிரிப்பார்கள். 

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்😀, தூய்மையான ஒருவரையுமா நீங்கள் சந்திக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்ணை அந்த எக்கவுண்டே ஒரு parody. அதாவது யூடு புருட்டஸ் என்பவரின் டிவிட்டர் கணக்கை போல உருவாக்கிய போலி டிவிட்டர் ஐடி.

இப்படி ஒரு பத்து பேரை செட்டப் செய்து, தலைவர் படத்தை காட்டி இவர் யாரென்று தெரியுமா என்று கேட்கும் இன்னொரு வீடியோவும் உலாவருவது உங்களுக்கு தெரியுமோ தெரியாது.

எதுக்கும் போலி இல்லாத இந்த விடியோவையும் பாருங்கள்.

ஆள் அடையாளம் தெரியுதோ?

இது டிரெய்லர்👇

இது மெயின் பிக்சர்👇 

முழு பேட்டியுமே பார்க்க வேண்டியதுதான் ஆனால் 10 நிமிடத்தில் இருந்து ஈழம் பற்றி சொல்கிறார்.

புலமைபித்தன் ஐயாவுக்கு ஒரு வந்தேறிப் பட்டம் பார்சல் !

45 minutes ago, ஏராளன் said:

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்😀, தூய்மையான ஒருவரையுமா நீங்கள் சந்திக்கவில்லை?

தூய்மையானவர்கள் என்று யாரை கருதுகின்றீர்களோ தெரியவில்லை ஏராளன். ஆனால் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை எல்லா இனத்திலும் கண்டிருக்கிறேன். 

அதனால் உங்கள் தியறியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தூய்மையானவர்கள் என்று யாரை கருதுகின்றீர்களோ தெரியவில்லை ஏராளன். ஆனால் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை எல்லா இனத்திலும் கண்டிருக்கிறேன். 

அதனால் உங்கள் தியறியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மற்ற இனங்களில் இருக்கினம், தமிழர்களில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?! எனக்கென்னவோ எங்களிடம் தான் நிறைய நல் உள்ளங்கள் இருப்பதாக எண்ணுகிறேன். பேரழிவின் பின்பும் மெதுவாக துளிர்க்கிறோம் அல்லவா?
ஒருவருடைய சிந்தனையை மற்றவர் மேல் திணிக்க முடியாதே! ஏனெனில் நாம் எல்லாம் தனித்துவமானவர்கள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்😀, தூய்மையான ஒருவரையுமா நீங்கள் சந்திக்கவில்லை?

எப்படி சந்தித்திருக்கமுடியும்??

நல்லவனையெல்லாம் ஒரே சாக்கில் போட்டு கட்டி பயங்கரவாதியாக்கியாச்சே

மிச்சம்  தானே சேரும்

10 minutes ago, ஏராளன் said:

மற்ற இனங்களில் இருக்கினம், தமிழர்களில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?! எனக்கென்னவோ எங்களிடம் தான் நிறைய நல் உள்ளங்கள் இருப்பதாக எண்ணுகிறேன். பேரழிவின் பின்பும் மெதுவாக துளிர்க்கிறோம் அல்லவா?
ஒருவருடைய சிந்தனையை மற்றவர் மேல் திணிக்க முடியாதே! ஏனெனில் நாம் எல்லாம் தனித்துவமானவர்கள் இல்லையா?

நான் தெளிவாக எல்லா இனத்திலும் என்று கூறியுள்ளேன் ஏராளன். எல்லா இனத்திலும் என்றால் தமிழரும் அடக்கம். வேண்டுமென்றே தவறாக புரிகின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

இந்த "தூய தமிழ் மகன்" என்றால் என்ன? யாராவது ஆய்வாளர்கள் விளக்கம் தருவார்களா?😂

தூய நீங்க தமிழனா அல்லது கலப்பா😎? உங்களால் ஆதரத்துடன் நிறுவ முடியும் தூய தமிழனாக தான் பிறந்தேன் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நான் தெளிவாக எல்லா இனத்திலும் என்று கூறியுள்ளேன் ஏராளன். எல்லா இனத்திலும் என்றால் தமிழரும் அடக்கம். வேண்டுமென்றே தவறாக புரிகின்றீர்களா? 

நீங்கள் தமிழர்கள் என்றால் தாம்தூம் என குதிப்பதால் அப்படி நினைத்துவிட்டேன்! தவறை திருத்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நான் பொதுமைப்படுத்தவில்லை ஏராளன். உலகில் வாழும் எல்லா இனங்களிலும் நல்லவர்களும் உண்டு. கிரிமினல்களும் உண்டு. தூய தமிழர்கள் என்றால் ஊழல் செய்யாதவர்கள் என்று நீங்கள் கூறிய  ஜோக்கிற்கு எல்லா தமிழர்களுமே சிரிப்பார்கள். 

எல்லா இனங்களிலும் நல்லவர்களும் உண்டு. கிரிமினல்களும் உண்டு உண்மைதான். ஊரில் மதிப்புக்குரிய பெரியவர்கள் எனத் தமிழினத்தில் போற்றப்படுபவர்கள், அதாவது தூய தமிழர்களின் முன்னால் தங்கள் கிரிமினல் வேலைகளைப் பகிடியாகவேனும் செய்வதற்கு ஆசைப்படுபவர்கள் கூச்சப்படுவதையும், தயங்குவதையும் கண்ட அனுபவம் உண்டு. இந்த நிலை வேறு இனத்தில் அரிதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணை அந்த எக்கவுண்டே ஒரு parody. அதாவது யூடு புருட்டஸ் என்பவரின் டிவிட்டர் கணக்கை போல உருவாக்கிய போலி டிவிட்டர் ஐடி.

இப்படி ஒரு பத்து பேரை செட்டப் செய்து, தலைவர் படத்தை காட்டி இவர் யாரென்று தெரியுமா என்று கேட்கும் இன்னொரு வீடியோவும் உலாவருவது உங்களுக்கு தெரியுமோ தெரியாது.

எதுக்கும் போலி இல்லாத இந்த விடியோவையும் பாருங்கள்.

ஆள் அடையாளம் தெரியுதோ?

இது டிரெய்லர்👇

இது மெயின் பிக்சர்👇 

முழு பேட்டியுமே பார்க்க வேண்டியதுதான் ஆனால் 10 நிமிடத்தில் இருந்து ஈழம் பற்றி சொல்கிறார்.

புலமைபித்தன் ஐயாவுக்கு ஒரு வந்தேறிப் பட்டம் பார்சல் !

விக்கி போன்ற‌ சில்ல‌ரைக‌ளுக்கு இர‌ண்டு நாக்கு

விக்கியின் உண்மை முக‌ம் தெரிந்த‌ பிற‌க்கு விக்கியின் யூடுப் ச‌ண‌லில் இருந்து 10000ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வில‌கினார்க‌ள்

க‌லைஞ‌ரை / க‌ட்டும‌ர‌ம்
கோபால‌புர‌த்து கொத்த‌டிமைக‌ள்
200ரூபாய் கூட்ட‌ம்  திருட்டு திராவிட‌ம் என்று அடிக்க‌டி காணொளி போட்ட‌ யோக்கிய‌வான் தான் இந்த‌ விக்கி

இப்போது க‌ட்டும‌ர‌ம் தான் த‌ன்ட‌ த‌லைவ‌ராம் ஹா ஹா , திராவிட‌த்துக்கு சொம்பு தூக்க‌ வெளிக்கிட்டா ஒழுங்காய் தூக்க‌னும் அப்ப‌ தான் ப‌சிக்கு சோறு கிடைக்கும்

இந்த‌ பேட்டி கொடுத்த‌ முதிய‌வ‌ர் 2009ம் ஆண்டு என்ன‌ செய்திட்டு இருந்தார்

த‌லைவ‌ருக்கு அது செய்தோம் இது செய்தோம் என்று சொல்லி க‌ட‌சியில் அப்பாவி ம‌க்க‌ளோடு அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை முள்ளிவாய்க்கால் சுடுகாட்டுக்கை கொண்டு போய் போட்ட‌து தான் திராவிட‌ம் 

இவ‌ர் போன்ற‌ சில்ல‌ரைக‌ளை க‌ட‌ந்து செல்வ‌து தான் சிற‌ப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பையன்26 said:

வணக்கம் பையன்,

விக்கி சில்லறையா, தாள் காசா என்னவா வேணா இருக்கட்டும்.

அதில் இணைக்கப்பட்ட காணொளி பிபிசி தமிழ் உடையது. 

நேர்முகம் கொடுத்தவர் புலமைபித்தன்.

விக்கியின் டைம்லைனில் டிரைய்லர் இருந்தது. கீழே முழு வீடியோவும் உள்ளது. ஆகவேதான் இரெண்டையும் இணைத்தேன்.

தவிர விக்கி பெரும் அரசியல் மேதை என்று அவர் கருத்தை எதையும் நான் இங்கே இணைக்வில்லை. 

எனக்கு விக்கி பற்றி எதுவும் தெரியாது இந்த டிரைலர் டைம்லைனில் வந்தது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் முன்பு நாதகவில் இருந்து இப்போ திமுகவில் இருப்பவர் போலுள்ளது. 

அப்ப ஆள் சில்லறைதான்.

50 minutes ago, பையன்26 said:

இந்த‌ பேட்டி கொடுத்த‌ முதிய‌வ‌ர் 2009ம் ஆண்டு என்ன‌ செய்திட்டு இருந்தார்

த‌லைவ‌ருக்கு அது செய்தோம் இது செய்தோம் என்று சொல்லி க‌ட‌சியில் அப்பாவி ம‌க்க‌ளோடு அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை முள்ளிவாய்க்கால் சுடுகாட்டுக்கை கொண்டு போய் போட்ட‌து தான் திராவிட‌ம் 

இவ‌ர் போன்ற‌ சில்ல‌ரைக‌ளை க‌ட‌ந்து செல்வ‌து தான் சிற‌ப்பு 

இது புலமைபித்தன் பற்றியா?

ஐயா நேற்றுத்தான் காலமானார். யாழில் இரெண்டு திரி ஓடுது - வாசிச்சு பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் தூய்மைவாதம் பேசுபவர்களை, நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி அவர்களின் மண்டையை சோதிக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 12:14, goshan_che said:

இந்த பெரியார் சிலையை அரசு கட்டவில்லையாமே?

Crowd funding மூலம் ஒரு தனியார் அமைப்பு செய்கிறதாமே?

உண்மையா?

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் பிரமாண்ட அளவில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செயலாளராக இருக்கிறார். மேற்கண்ட நிறுவனம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. கிடப்பில் இருந்த திட்டத்துக்கு தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார் ” 

https://youturn.in/factcheck/trichy-periyar-statue-100cr-govt.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.