Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-எம். றொசாந்த்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார்.

எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த அவர், அதே பிழை என்றால், பிழை என்று கூறுவதே, தன்னுடைய பொறுப்பெனவும் கூறினார்.

இனி தான் பயப்படமாட்டேன் எனத் தெரிவித்த அவர், இதுவரை தான் அடக்கி வாசித்ததாகவும் இதனால், தன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் எனத் தெரிவித்த சிவஞானம், 'தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்' என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, 'என்னை பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது' என பதிலளித்தார்.

இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த சிவஞானம் கூறியதாவது,

'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பமாட்டேன்' என்றார்.

Tamilmirror Online || புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’

  • Replies 56
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வேற கொம்பன் தேவை?! இருக்கிறவை போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

இது உண்மையா?🙃

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது என்பது அண்மைக்காலமாக உண்மையில்லை ஆரம்பகாலத்தில் இப்படியான கூற்றினை கூட்டமைப்பின் அனைவருமே கூறிவந்தனர் ஆயினும் இப்போது சம்பந்தன் உட்பட நிறயப்பேர் இதனை நிராகருத்துக் கருத்துச் சொல்லியே வந்துள்ளனர். சுமந்திரன் ஒருபடி மேலே போய் அந்த நேரம் நான் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்கவில்லை ஆதலால் இதுபற்றி எனக்குத் தெரியாது என பல இடங்கிளில் கூறியுள்ளார்.

ஆகவே கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கப்படவில்லை எனும் கோட்பாட்டின்படியே இனிமேல் தமிழர்கள் அனைவரும் தங்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பாகச் சிந்திக்கவேண்டும்.

அதுசரி கருத்துக்களப் பார்வையாளர்கள் என்பதற்கும் 
கருத்துக்கள உறவுகள் என்பதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இது உண்மையா?🙃

தமிழ் மக்களின் உயிர் நாடியான ஒற்றுமை தியாகம் ஈடுபாடு காரணமாக தம்மை பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுத்தும் உயரிய நோக்கோடு தானாக சேர்ந்த கூட்டமே கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது 🙃

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பேசப்படும் கடிதச் செய்தியை தமிழ்வின் வினாக்குறியுடன் போட்டிருந்தது! பெருமாள், இன்னொரு திரியில் செய்தியை இணைக்கும் போது வினாக்குறி, ஆச்சரியக் குறியாக மாறி விட்டிருந்தது! விரல் வழுக்கியதா மனம் வழுக்கியதா தெரியவில்லை!😂 

ஆனால், செய்தியைத் தடித்த எழுத்தில் போட்ட உறுப்பினரைக் காய்ச்சி எடுத்த ஒருவரும், பெருமாளின் செய்தி மாற்றமடைந்த விதிமீறலைக் கவனிக்கவேயில்லை! (என்ன காரணமாகவிருக்கும்?😎

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

என்ர பெருமாளே! நாங்கள் தொலைந்தோம்!!

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

அப்படி நடக்காமல்  இருக்கமுடியுமா என்ன??

நாம  விட்டுடுவமா என்ன???

சிங்களவனுக்கு ஒரே  ஒரு வேலைதான்

நமக்கும்  தானே???

அவன்  கூட பகுதி நேரவேலை போலத்தான்

ஆனால் நாங்க?????😭

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kalyani said:

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

நான் ஏற்கனவே மட்டு அல்லது நிர்வாகம் என்று தானே பலர் நம்பிக் கொண்டிருக்கீனம்? நீங்க பார்க்கவில்லையோ நாற்சந்திப் பக்கம்?🤣

அதிருக்கட்டும்: செய்தியையோ தலைப்பையோ மாற்றுவது விதி மீறல் அல்லவா?

என்ன நடந்ததென்று பெருமாள் சொல்வாரா? கை வழுக்கியிருக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட செய்தித் திரிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! யாழ் வாசகர்கள் முடிவு செய்யட்டுமென்பதால் முறைப்பாடும் செய்யவில்லை!

8 hours ago, tulpen said:

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

ஆனால் தமிழரின் எந்தத் தரப்பை விசாரிப்பது? திரும்பவும் வெளிநாட்டில் காசு பதுக்கியோர் தான் நினைவுக்கு வருகின்றனர்! 😎அவர்கள் விசாரிக்கப் படுவதையே நானும் ஆதரிக்கிறேன்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குற்றங்கள்: சுமந்திரன் அதிரடி பதில்

என்.ராஜ்

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்

 ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும்  விசாரிக்க கோரி சம்பந்தனால்   ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என  அவ்வாறான ஒரு சம்பவமும்  இடம் பெறாது.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன்  நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள் 

நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.

Tamilmirror Online || புலிகளின் குற்றங்கள்: சுமந்திரன் அதிரடி பதில்

46 minutes ago, Justin said:

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

நான் ஏற்கனவே மட்டு அல்லது நிர்வாகம் என்று தானே பலர் நம்பிக் கொண்டிருக்கீனம்? நீங்க பார்க்கவில்லையோ நாற்சந்திப் பக்கம்?🤣

அதிருக்கட்டும்: செய்தியையோ தலைப்பையோ மாற்றுவது விதி மீறல் அல்லவா?

என்ன நடந்ததென்று பெருமாள் சொல்வாரா? கை வழுக்கியிருக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட செய்தித் திரிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! யாழ் வாசகர்கள் முடிவு செய்யட்டுமென்பதால் முறைப்பாடும் செய்யவில்லை!

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

ஆனால் தமிழரின் எந்தத் தரப்பை விசாரிப்பது? திரும்பவும் வெளிநாட்டில் காசு பதுக்கியோர் தான் நினைவுக்கு வருகின்றனர்! 😎அவர்கள் விசாரிக்கப் படுவதையே நானும் ஆதரிக்கிறேன்! 

நான் சொன்னது உத்தியோகபூர்வமாக மட்டு வேலையை செய்யும் படி கேட் கிறேன். இதன் மூலம் நக்கல்கள், நளினங்கள், கிரந்தங்கள் , மட்டம் தட்டல்கள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். நீங்கள் மட்டு என துல்பன் போன்ற ஆட் கள் மட்டும் நம்பினால் காணுமோ??🤪

அரசுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட பின்பா விசாரணை தொடங்கும்??😡

1 minute ago, tulpen said:

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

அப்படி இங்கே  யாழில்  எழுதப்பட்ட  ஒரு  கருத்தை  காட்டுங்கள் பார்க்கலாம்

சும்மா அடிச்சு  விட ஏலாது  பாருங்கோ இங்க

இது  யாழ்  களம்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, kalyani said:

நான் சொன்னது உத்தியோகபூர்வமாக மட்டு வேலையை செய்யும் படி கேட் கிறேன். இதன் மூலம் நக்கல்கள், நளினங்கள், கிரந்தங்கள் , மட்டம் தட்டல்கள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். நீங்கள் மட்டு என துல்பன் போன்ற ஆட் கள் மட்டும் நம்பினால் காணுமோ??🤪

அரசுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட பின்பா விசாரணை தொடங்கும்??😡

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்?

இதை முதலில் இருந்து விளக்க நேரமில்லை, நீங்கள் வேறு "புது பல்பாக" இருக்கிறீர்கள்!😂

எனவே, பெருமாளுக்கு பொய்செய்திகள் போதும் போது விதிகளை மீறாமல் போடச் சொல்லி விடுங்கள்! அவருக்கு ஏனென்று விளங்கும்! :grin:

37 minutes ago, kalyani said:

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்

அதென்ன குழு. சுதந்திரமாக கருத்து சொல்பவர்களை எல்லாம் அந்த கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என றால் ஒரு குழுவுக்குள் போடுவதா? அப்படி குழுவாதத்தில் ஈடுபடுவது யாழ்கள விதிக்கு முரணானது அல்லவா! 

 சர்வதேச விசாரணை வந்தால் இருதரப்பும் விசாரிக்கப்படுவது நாம் விரும்பியோ விரும்பாமலோ இயல்பான விடயம். ஒரு தரப்பை மட்டும் விசாரிக்குமாறு  கூற நாம் என்ன middle age காலத்தில் வாழ்பவர்கள் அல்லவே? 

யுத்த குற்றங்களை அதிகம் செய்தவர்கள் ஶ்ரீலங்கா அரசாங்கம் என்னும் போது விசாரணைக்காக  தமிழர்கள் பயப்பட வேண்டிய அவசியம் ஏன்?  அப்படியே தமிழர் தரப்பு விசாரிக்கப்பட்டாலும்  அவ்வாறான குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் மட்டுமே அவர்கள் உயிருடன் இருந்தால் தண்டனை பெறுவர்.  குற்றங்கள் செய்யாத உண்மை போராளிகள் பயப்பட வேண்டியதில்லை.  ஆனால் அதே வேளை  யுத்தக்குற்றங்களை இழைத்த, இனப்படுகொலை செய்த இராணுவ தளபதிகளும் தண்டனை அடைவர். அது நியாயம் தானே. 

30 minutes ago, விசுகு said:

அப்படி இங்கே  யாழில்  எழுதப்பட்ட  ஒரு  கருத்தை  காட்டுங்கள் பார்க்கலாம்

சும்மா அடிச்சு  விட ஏலாது  பாருங்கோ இங்க

இது  யாழ்  களம்

விசுகு உங்களுக்கு தமிழ் மொழியை வாசித்து புரிந்து கொள்ளும்  ஆற்றல் இல்லையா? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.

தேர்தலைத் தவிர வேறு எதிலாவது எங்காவது சேர்ந்து இயங்கியதைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

விசுகு உங்களுக்கு தமிழ் மொழியை வாசித்து புரிந்து கொள்ளும்  ஆற்றல் இல்லையா? 

உங்கட எழுத்துக்களை  தொடர்ந்து  வாசித்ததன் பலனாக????

வருமுன் புரிந்து  கொள்ளவும் பழகியிருக்கின்றேன்??🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விசாரணைக்கு தயார்! ஏன் இயக்கம் தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எவ்வாறு நடத்தப்பட்டது? நேர்முக சாட்சிகள் கலைக்கப்பட்டதன், ஆதாரங்கள் எரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? விதிமுறைகளுக்கு ஏற்ப போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா? பொதுமக்கள் தஞ்சம் அடைந்த இடங்களில்  குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டிய தேவையென்ன?  அத்தியவசிய பொருட்டுகளுக்கு தடை ஏன் போடப்பட்டது? சரணடைந்த பொது மக்களுக்கும், போராளிகளும் என்ன நடந்தது? இன்னோரன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து ஆராயப்படவேண்டும். புலிகள் குற்றம் இழைத்திருந்தால் உயிரோடு இருக்கும், குற்றத்தில் நேரடியாக பங்கு பற்றிய வி. முரளிதரன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் தண்டிக்கப்படட்டும். அவர்களே இருபகுதியிலும் குற்றம் புரிந்தவர்கள், உயிரோடு உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2021 at 20:51, satan said:

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!): மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை, கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Justin said:

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!): மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை, கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 
யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்த ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? அல்லது கேள்வி ஞானம் மற்றும் தங்களைப் போன்ற நடுநிலமைவாதிகள் கூறியதா? 😎

இதை வாசிச்சவுடனை தங்களுக்கு பிரசர் சிரசிலை அடிச்சிருக்குமே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!):

1 -மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை,

2 - கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 
இவை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகுமா??

1 - தடுத்தது குற்றமாகும் என்றால் அவர்களை கொன்றது??

2 - உலகம் பூராகவும் இது குற்றமாகுமே?? ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்த ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? அல்லது கேள்வி ஞானம் மற்றும் தங்களைப் போன்ற நடுநிலமைவாதிகள் கூறியதா? 😎

இதை வாசிச்சவுடனை தங்களுக்கு பிரசர் சிரசிலை அடிச்சிருக்குமே 🤣

உங்களது இந்த கருத்தில்  எனக்கு  உடன்பாடில்லை  அண்ணா

இத்தனை  வருச உழைப்பில்  ஒரு  ஆதாரம்  கூடவா  அவரால்  பிடித்திருக்கமுடியாது???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு சரிநிகராக போர் குற்றம் இழைத்தார்கள் என்று கருதுகிறவர்களிடம் கேட்க நினைப்பதெல்லாம்,

புலிகள் இலங்கை அரசு  என்று இரு தரப்பையும்  விசாரிக்கும் நிலை வந்தால் போர் செய்த இலங்கை அரச தலைவர்கள் தளபதிகள் இன்றும் இருக்கிறார்கள், புலிகள் தரப்பில் ஐநா யாரை விசாரிக்கும்?

அப்போ புலிகள் அமைப்பை அதன் தலைவரை தலைமை பீடத்தை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என்று இலங்கை அரசுகள் கூறி வருவது பொய்யாகிவிடாதா?

முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட ஒரு அமைப்பிடம் அவர்கள் பக்கம் இருந்த நியாயங்கள் அநியாயங்களை எப்படி ஐநா விசாரிக்கும்?

போரின் பின்னர் சரணடைந்த சிங்களவர்கள் உயிருடன் விடுவித்த கடை நிலை போராளிகளுக்கு தலைமைபீட நடவடிகைகள் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கா? 

ஐநா விசாரணையில் புலிகளும் விசாரிக்கப்படுவார்கள் என்ற நிலைவரும் என்றால் இலங்கை அரசு தன்மீதான குற்றச்சாட்டை ஐநா விசாரிக்க அனுமதி வழங்க மறுப்பது ஏன்? அதற்கு எதிராக போர் கொடி தூக்குவதேன்? ராணுவத்தை விசாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கதறுவதேன்?

ஐநா விசாரணைக்கு ஆதரவாக போர் குற்றம் செய்யவே இல்லையென்று முழங்கும் இலங்கை அரசு தன்னிடம் இறுதி யுத்ததில் சரணடைந்த புலிகளின் தளபதிகளை ஐநா முன் கொண்டுபோய் நிறுத்துமா?

நிறுத்தினாலும் சிங்கள அரச பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் சிங்கள புலிகள் பக்கமிருந்த நியாயங்களை சொல்லும் நிலை இருக்குமா?

இது சம்பந்தமாக புலம்பெயர் தேசங்களிலுள்ள புலிகள் ஆதரவு பிரமுகர்களை ஐநா விசாரிக்க முனைந்தால் , போர் முனையில் சக தளபதிகளுக்கே பல விசயங்களை தெரியாமல் ரகசியம் காக்கும் புலிகள் தலைபீடம் இவர்களுக்கு தெரியும் அளவிற்கு போர் நடவடிக்கைகளை பகிர்ந்திருக்குமா?

இவை அனைத்தும் சிங்களவன் தனக்கு பாதகமான நிலை என்று நன்கே உணர்ந்திருக்கிறான், நாம்தான் அவனை கை கொடுத்து தூக்கிவிட புலிகளும் விசாரிக்கப்படுவர் என்று ஹோர்லிக்ஸ் கொடுத்து உற்சாக படுத்துகிறோம்,

விசாரணையென்று வந்தால் அவனால் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் ஒரு அமைப்பு அவர்கள் பக்கமிருந்த போர்குற்ற நடவடிக்கைகளை கூற வாய்ப்பு இல்லை,ஒருவர் இல்லாத இடத்தில் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் நம்பகதன்மை உடையதாக ஐநாவுக்கு இருக்குமா?

வெறும் ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு ஐநா ஒரு முடிவுக்கு வராது என்றே நம்புகிறேன் போரின் ஈடுபட்ட நேரடி தலைவர்கள் தளபதிகளையே அது விசாரணைக்கு  தேர்வு செய்யும்.

ஆனால் சிங்களவன் நிலை அவ்வாறானதில்லை,  அவன் பக்கமே போரில் முழுமையாக ஈடுபட்ட அரச தலைவர்கள் தளபதிகள் சாட்சியாக இருக்கிறார்கள் என்ற பலவீனமே சிங்களவன் பின்வாங்குவதற்கு முழுகாரணம். 

58 ல் இலங்கை தமிழர்கள்மீதான ஆயுத அடக்குமுறைகள் ஆரம்பித்தன , 80 களின் தொடக்கத்தில்தான் வேறுவழியின்றி இலங்கை அரச படைகளுக்கெதிராக தமிழர்கள் ஆயுத வன்முறையை கையிலெடுத்தார்கள்,

அதுவும் 83ல்  சிங்களவன் திட்டமிட்ட இனகலவரத்தை ஏற்படுத்தாமல் விட்டிருந்தால் நிச்சயமாக தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இயக்கங்களில் சேர்ந்திருக்கவே மாட்டார்கள், அப்போதும்கூட யுத்தம் புரிவது தமிழர்களின் நோக்கமாக இருந்தது கிடையாது.

ஏறக்குறைய ஐம்பது வருடங்களிற்கு மேலாக ஒரு பேரினவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்த பயங்கரவாதத்தை ஓரணியின் நின்று தட்டிகேட்காமல் பேரினவாத தலைமைகள் மட்டுமே தப்பு பண்ணவில்லையென்று எம்மவர்களில் ஒரு சிலர் சிங்களவருக்கு நெய் தடவுவது  எக்காலத்திலும் இந்த இனம் விமோசனமடைய போவதில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.