Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம்  எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அப்பா, அயலட்டை எண்டு பார்ப்பது என் விசர்த்தனம்.

இன்றே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திடவேணும் என்று எண்ணியபடி கட்டிலை விட்டு எழுந்தாள் ஜீவா. 

தாயார் சமையலறையில் சம்பல் செய்துகொண்டிருப்பது சம்பல் வாசத்திலேயே தெரிந்தது. தானும் வெள்ளண எழுந்து தாய்க்கு உதவி செய்யாததை இட்டு மனதிலொரு குற்ற உணர்வும் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அவளின் பிரச்சனை அதைவிடப் பெரிதே என்றும் திரும்பக் கேள்வி கேட்டது. அம்மாவிடம் விஷயத்தைக் கதைத்துப் பார்ப்போமா என்று எண்ணினாலும் ஒரு தயக்கமும் இருந்துகொண்டேதான் இருந்தது. எதற்கும் வாகீசனிடம் கதைத்துவிட்டே பெற்றோருடன் கதைக்கலாம் என்று எண்ணியபடி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவா. வாகீசன் இவளிடம் அக்கறை கொண்ட ஒரு நல்ல நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாகப் படித்ததில் உரிமையுடன் அவள் வீடுவரை வந்து கதைக்கும் உரிமையும் பெற்றவன்.

 

முன்னர் பொதுக் கிணற்றடியில் இவர்கள் வளவுக்குள் கட்டியிருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு நீர் நிரப்பிக் குளிப்பது. அறையுடன் சேர்ந்த இந்த பாத்ரூம் ரொய்லற் கட்டி எட்டு ஆண்டுகள் தான். அதுவும் இவள் திருமணம் நிட்சயமானதும் வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளைக்கு வசதியாக இருக்கட்டும் என்று தந்தைதான் கட்டுவித்தது. அப்பவே 75 ஆயிரம் ரூபா முடிந்தது. அப்பாவுக்கு காசுப்  பிரச்சனை இருக்கேக்குள்ள இது தேவைதானா என இவளும் ஆரம்பத்தில் வேண்டாம் அப்பா என்று சொல்லிப் பார்த்தாள் தான். ஆனாலும் அது வெளிநாட்டில பிறந்த பிள்ளையாம். வந்து மூன்று மாதங்கள் நிக்கேக்குள்ள நின்மதியா மலசலம் கழிக்க வேணுமெல்லோ என்றவுடன் இவளுக்கும் சரி என்று பட பேசாமல் இருந்துவிட்டாள். இன்றுவரை அவள் அறையுடன் சேர்த்துக் காட்டியதை இவளைத் வேறு யாரும் பயன்படுத்தவில்லை.

நினைவுகளைக் கலைத்துவிட்டு குளித்து முழுகி வேலைக்குப் போவதற்கான சேலையையும் கட்டிக்கொண்டு குசினிக்குள் எட்டிப்  பார்த்தாள். இவளின் குரல் கேட்குமுன்னரே இவள் வருகையை உணர்ந்த தாய் இடியப்பம் போட்ட தட்டை இவளுக்கு நீட்ட, இவள் வாங்கிக்கொண்டு மேசையில் போய் அமர்ந்து உண்ணவாரம்பித்தாள்.

பின்னாலேயே இவளின் சாப்பாட்டுப் பெட்டியைக் கொண்டு வந்து இவளருகில் வைத்தபடி “உருளைக்கிழங்குப் பிரட்டலும் முட்டையும் பொரிச்சு வச்சிருக்கிறன்” என்கிறார். 

“நீங்கள் கஷ்டப்படாதேங்கோ எண்டு எத்தனை தரம் சொல்லிப்போட்டன். பாங்குக்குப் பக்கத்தில எத்தினை சாப்பாட்டுக்கடை இருக்கம்மா. அங்க வாங்கிச் சாப்பிடுவன் தானே” என அலுத்துக்கொண்டாள். 

இவள் வேலை செய்வது வங்கி ஒன்றில். ஒரு மணிநேர பிரேக்கில் அருணுடன் வெளியே சென்று உண்பது இப்போதெல்லாம் அவளுக்கு மனத்துக்குப் பிடித்ததொன்றாகி இருந்தது. அதற்குள் அம்மா சாப்பாடு தந்து அதை வீணாகக் கொட்டிவிட்டு சாப்பிட்டதாக அம்மாவுக்கு நடிக்கவேணும் என்று எண்ண உணவு விரயமாகிறதே என்பதுடன் அம்மாவை ஏமாற்றுகிறோம் என்னும் குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, தயவுசெய்து இனிமேல் எனக்குச் சாப்பாடு கட்ட வேண்டாம். கட்டினாலும் நான் கொண்டுபோக மாட்டன். ஆறின சாப்பாட்டைச் சாப்பிட ஏலாதம்மா என்று கூறுபவளை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு தாய் அகன்றாள். 

தந்தை தோட்டத்து மரக்கறிகளைச் சந்தைக்கு கொண்டுபோய் விற்றுவிட்டு வீட்டுக்கு வரப் பத்துமணி ஆகும். தான் வெளிநாடு சென்றாலாவது அப்பாவைத்த தோட்டம் செய்யாதேங்கோ என்று சொல்லலாம் என்று இவள் எண்ணியிருந்ததெல்லாம் கனவாகவே போய்விட்டதே என எண்ணியவுடன் துக்கமும் வந்து நெஞ்சை அடைப்பதுபோல் இருக்க என்ன அக்கா கிளம்பீடியே” என்றபடி வந்த தங்கைக்கு “ஓம்” என்று மட்டும்சொல்லிக்கொண்டு தன் ஸ்கூட்டியை வெளியே எடுத்து அதைக் கிளப்பிவிட்டு ஏறி அமர்ந்தாள்.

 

தொடரும் ..

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்து கருத்துக்களைப் பகிர்ந்த புங்கையூரன், யாயினி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி 

7 hours ago, யாயினி said:

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

அதனால் என்ன. இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

தோட்டம் வெளியே முடிந்துவிட்டது. conservertry தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

முக்கியமான விசயம் போல இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

உங்களைப் போல உற்சாகம் தருபவர்கள் இருக்கும் போது ..

8 hours ago, கிருபன் said:

முக்கியமான விசயம் போல இருக்கு!

அதில்லை. கன நாட்களாக எழுதவே இல்லை. எனது நூலும் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது என்றதும் மீண்டும் எழுதவேண்டும் என்ற ஒரு வேகம் அவ்வளவே. 

1 hour ago, ரதி said:

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

விடமாட்டேன் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை மிச்சத்தை இன்னும் கானோம்.தொடருங்கள் ஆவலுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதியையும் எழுதுங்கள்  ஆவலுடன் காத்திருக்கிறோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினேசின் படத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜீவா. பார்க்கப் பார்க்க உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓடின. இன்னும் பத்தே பத்து நாட்களில் அவளுக்கும் தினேசுக்கும் திருமணம். இரண்டு நாட்களில் தினேசின் குடும்பத்தவர் வெளிநாட்டிலிருந்து வருகின்றனர். இவள் பெற்றோருக்கு அளவில்லாத மகிழ்சிதான். வெளிநாட்டில் பிறந்த பெடியன். பொருத்தம் பாக்கிற விநாசித்தம்பியர் தான் இவரைக் கோவிலில் கண்டபோது கேட்டது. கொக்குவில் மாப்பிளை ஒண்டு வந்திருக்கு. தாய் தகப்பன் வெளிநாட்டில. ஒரேயொரு தங்கச்சி. அதுவும் கலியாணம் கட்டீட்டுதாம். நல்ல ஆக்கள். பெடிக்கு முப்பது வயது. சோலி சுரட்டில்லை என்றதும் கணபதிப்பிள்ளைக்கும் ஆசை எட்டிப்பார்த்ததுதான்.

என்ர மகளுக்கு  23 தான் அண்ணை. வயது கொஞ்சம் கூடிப்போச்சுப் போல என்று  இழுக்க, நல்ல சம்பந்தம் எண்டதாலைதான் உனக்குச் சொன்னனான். வெளிநாட்டு மாப்பிளைக்கு உங்க கியூவில் நிக்கிது சனம். எனக்கும் மனிசிக்கும் 12  வயது வித்தியாசம். நாங்கள் சந்தோசமா வாழேல்லையே? ஏழு வயதெல்லாம் ஒரு பிரச்சனையே என்றார்.  விநாசித்தம்பியரின் முகத்தை முறிக்காமல் எதுக்கும் பிள்ளை ஓம் எண்டால் எனக்குப் பிரச்சனை இல்லை. நான் பிள்ளையிட்டையும் மனிசியிட்டையும் கதைச்சிட்டு நாளைக்கு முடிவைச் சொல்லட்டோ  என்று கேட்க, நாளைக்குச் சொல்லிப்போடு. தவறினால் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது சொல்லிப்போட்டன் என்றபடி விநாசித் தம்பியர் செல்செல்கிறார்.

எதுக்கும் இதை விடக்கூடாது என்று மனதில் எண்ணியபடி வீட்டுக்கு வந்த கணபதி, மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறார். வெளிநாட்டுச் சம்மந்தம் எண்டால் ஏன் விடுவானப்பா? சாதகத்தை உடன கொண்டுபோய் சாத்திரியிட்டைக் குடுங்கோ என்றவுடன், எனக்கும் உனக்கும் எட்டு வயது வித்தியாசம். உன்ர கொப்பர் ஏமாத்திக் கட்டி வச்சிட்டார் என்று நீ அப்பப்ப எனக்குச் சொல்லுறணியெல்லோ. அதுதான் இது ஏழு வயது வித்தியாசம். எதுக்கும் பிள்ளையிட்டைக் கேட்டிட்டு சாதகத்தைக் குடுப்பம்” என்கிறார். 

எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டில்லை. முதல்ல சாதகத்தைக் குடுங்கோ. பொருத்தம் எண்டால் பெடியின்ர படத்தைக் கேளுங்கோ. ஜீவான்ர படத்தையும் குடுப்பம். பெடியனும் ஓமெண்டால் பிறகு இவளிட்டைக் கதைச்சு சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு என்று கோமதி கூறியவுடன் எல்லாம் கடகடவென்று நடந்து முடிந்து, போனிலும் ஒரு மாதமாக இருவரும் பேசி, இன்னும் இரண்டுநாளில் தினேசை நேரில் பார்க்கலாம் என்றவரை வந்துநிற்க, எப்ப அந்த நாள் வரும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறாள் ஜீவா.

இரண்டு நாட்களில் தினேசின் பெற்றோரும் தங்கையும் காரில் வந்திறங்க, இவள் கதவோரத்தில் நின்று துடிப்புடன் பார்க்கிறாள். அவனின் கண்களும் இவளைத் தேடிக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி மனதை நிறைக்க, அவர்களை உள்ளே வரும்படி பெற்றோர் அழைத்துவர, அவர்களின் இயல்பு எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அதன்பின் திருமணம் வரையும் அவன் போனில் இவளுடன் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் தன்னை வந்து பார்க்க ஆசை கொள்ள மாட்டானா என இவள் மனம் ஏங்குகிறது. மீண்டும் இவள் அவனைப் பார்த்தது திருமணத்தன்றுதான். இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

அந்த மூன்று மாதங்கள் இருவரும் சினிமா, கசோரினாக் கடற்கரை, காங்கேசன்துறைக் கடற்கரை, பூங்கா என்று போனதும் குளித்ததும், வீட்டுக்கு தொலைக்காட்சி, குளிரூட்டி எல்லாம் வாங்கிக்கொடுத்து இவளை மகிழ்வித்ததும் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 03:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

கதையின்  மிச்ச சொச்சம் எங்க

 

Edited by தனிக்காட்டு ராஜா

தொடருங்கோ சுமே கதை கேட்க ஆவலாய் உள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா, கண்மணி அக்கா, சுவி அண்ணா

22 hours ago, suvy said:

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

நானும் மறந்ததாலதான் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.

😀🤣

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின. அவன் நேரம் தவறாதவன். ஒருநாள் கூடப் பிந்தி வந்ததில்லை. இன்று அவள் தன் முடிவைக் கூறுவதாகவும் சொல்லியிருந்தாள். ஆனால் அவன் ஏன் இன்னும் வரவில்லை என்னும் கேள்வி மனதைப் பிசைய வைத்தது. அவனுக்குப் போன் செய்தபோது போன் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஏதேதோ எண்ணி மனம் பரபரப்பும் பயமும் கொண்டது. ஏதும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ? அவனின் நண்பன் ரவியைக்கூடக் காணவில்லை. இருவரும் எங்காவது போய்விட்டார்களோ என்று மனம் எண்ண, சரி பார்ப்போம் என்று எண்ணியபடி வேலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். ஆனாலும் ஒவ்வொரு நிமிடமும் அருணின்  வருகையின்மை மனதுள் எத்தனையோ சந்தேகங்களை எழுப்பியபடியேதான் இருக்க வலிந்து மனதைத் திடப்படுத்தி வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.

மதிய உணவு வேளையில் அருண் இல்லாமல் அம்மாவின் உணவும் இல்லாமல் தனியாக வெளியே சென்று கடையில் உண்பதற்கு மனமின்றி மீண்டும் ஒருமுறை அருணுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாள். இம்முறை அவனின் தொலைபேசி ஒலித்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை.

என்ன நடந்தது இவனுக்கு? என் அழைப்புக்குக் கூடப் பதில் இல்லை என்று எண்ணியவளாய் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாலும் மனம் ஒத்துழைக்க மறுத்தது. இத்தனை ஆசையாக என்  முடிவை அருணுக்குச் சொல்லுவோம் என்று வந்தால் அவன் ஏமாற்றி விட்டானே என்று அவனில் கோபமும் ஏற்பட வேறு வழியே இன்றித் தன் வேலையில் மனதைத் திருப்ப முனைந்தாள்.

உணவு இடைவேளையின் பின்னரே அருணின் நண்பன் ரவி வந்து சேர்ந்தான். இவளைக் கண்டவுடன் மகிழ்வாய் வணக்கம் சொல்பவன் இன்று இவளைக் காணாததுபோல் அப்பால் செல்ல இவளுக்கு ஏன் இவனும் என்னைக் கடுப்பேற்றுகிறான் என்று எண்ணியபடி

 “முரளி! ஏன் இன்று காலை உங்களைக் காணவில்லை. உங்கள் நண்பரையும் காணவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல் செல்கிறீர்கள்” என்றாள்  ஆதங்கத்துடன்.

“ஏதோ யோசனையில் உன்னைக் கவனிக்கவில்லை ஜீவா” என்றவன் கதிரையில் அமர “ஏன்அருண் இன்று வேலைக்கு வரவில்லை” என்கிறாள்.

“ அவன் உன்னிடம் கூறவில்லையா? இன்று மாலை அவனுக்கு கலியாணம் நிட்சயம் செய்யப் போகிறார்கள். அதுதான் பெண்ணுக்குச் சேலையும் ஒரு சங்கிலியும் வாங்கவேணும் என்று என்னையும் வரச் சொன்னவன். அங்க போட்டு இப்பத்தான் வாறன்” என்று அவன் கூற, “ ஓ “ என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட்டு தான் இருக்கைக்கு வந்தவளின்  கண்களில் அவளை அறியாது கண்ணீர் முட்டியது.

மற்றவர் பார்க்காதிருக்க தான் லேஞ்சியினால் கண்களைத் துடைத்துக் கொண்டவளுக்கு எப்படித் தன்னை அடக்கிக்கொள்வது என்று இருந்தது. மனம் எங்கும் வெறுமை சூழந்து நெஞ்சக் கூட்டில் எதுவுமே இல்லாததுபோல் தோன்ற ரொயிலற்றுக்குள் போய் அழுதுவிட்டு வரவேண்டும் போல இருந்த எண்ணத்தையும் அடக்கிக்கொண்டு முன்னாலிருந்த கணனியைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

எலியைப் பற்றியிருந்த கைகள் தொய்ந்துவிட்டதாகத் தோன்ற இரு கைகளையும் சேர்த்துப் பிசைந்து வலுவேற்றிக்கொண்டாள். ஆனாலும் தொய்ந்துபோயுள்ள மனதையும் கால்களையும் எப்படித் தேற்றுவது என்று ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் என்னிடம் சும்மாதான் பழகினானா அருண்? நான் தான் தேவையில்லாமல் அவன் என்னிடம் காதலாய் இருக்கிறான் என்று எண்ணிவிட்டேனா? இல்லையே என்னைப் பார்த்ததும் அவன் கண்களில் ஏற்படும் மலர்வு பொய்யில்லையே.

“உப்பிடியே எத்தனை நாளைக்கு தினேஷ் வருவான் வருவான் என்று பார்த்துக்கொண்டே இருக்கப்போறீர்? ஓம் எண்டு ஒரு வார்த்தை சொல்லும் கலியாணத்துக்கு நாள் பார்த்திடுவன்இப்பிடி எல்லாம் கதைச்சதுகூடப் பகிடிக்குத் தானோ? நான் தான் அதை எனக்கு சாதாகமாய் எண்ணிட்டனோ என என்னும்போதே அவளுக்கு அவமானமாக இருந்தது.

மூன்றே மாதங்கள் தான் இன்னொருத்தனோட வாழ்ந்திருந்தாலும் ஏற்கனவே திருமணமான ஒருத்தியை திருமணம் செய்ய எந்த ஆம்பிளைதான் ஆசைப்படுவான். அதை நான் எல்லோ யோசிச்சிருக்க வேணும். அருண் விழுந்துவிழுந்து என்னோட கதைச்சதைக் கண்டு என மனம் தான் தப்புக்கணக்குப் போட்டிட்டிது. அவன் ஆசை கொண்டாலுமே அவனின் தாயார் சம்மதிப்பாவோ எண்டு யோசிச்சுப்போடு என்ர ஆசையை வளர்த்திருக்க வேணும். பெண்கள்தானே பெண்களுக்கு எதிரி இந்த சமூகத்தில என எண்ணியவளுக்கு இப்போது மனம் கொஞ்சம் சமப்பட்டிருந்தது. இருந்தாலும் அருண் தன்னைக் காதலிக்கவில்லை என்பதும் தன் வாழ்வு கடைசிவரை இப்பிடியே தானா என எண்ணப் பெரும் சலிப்பொன்றும் மனதில் எழ, இன்று இனி என்னால் இதைப்பற்றி எண்ணியபடி வேலையில் கவனம் செலுத்த முடியாது என எண்ணியவள், பொறுப்பாளரின் அறைக்குச் சென்று தனக்கு முடியாமல் இருப்பதாகக் கூறி அரை நாள் விடுப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டுக்கு இப்ப செல்ல முடியாது. என்ன என்று அம்மா தூலாவும் தூலாவலில் நான் அம்மா முன் அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என எண்ணியபடி கால் போனபோக்கில் நடக்கத் தொடங்கினாள்.

யாழ்ப்பாணம் சனநெரிசலில் சிக்கித் தவித்தபடி இருக்க ஆஸ்பத்திரி வீதியில் ஊரிப்பட்ட ஓட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களும் வரிசையாய் அடுக்கி நிறுத்தப்பட்டிருந்தது. அருண் கூட தன் மோட்டார் சைக்கிளில் மிக அழகாக இருந்து ஓட்டிவருவான். தானும் அவன் தோளைப் பிடித்தபடியோ அல்லது முதுகோடு அணைத்தபடி போகவேண்டும் என எண்ணியது மனதில் எழ, ஒருவித ஏக்கமும் கூச்சமும் ஏற்பட பெருமூச்சை நன்றாக விட்டு தன்னை அசுவாசப் படுத்திக் கொண்டாள்.

தான் ஸ்கூட்டியை வேலை செய்யுமிடத்திலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வர, தன்னை எண்ணி நொந்தபடி மீண்டும் வேலைத் தலத்துக்கு வந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சோர்வுடன் வீடு நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

வீதியால் வரும்போது பலவற்றையும் பார்த்து இரசித்தபடி வருபவளுக்கு இன்று ஸ்கூட்டியே பெரும் பாரமாக இருந்தது. அம்மாவுக்கு என்ன சொல்லிச் சமாளிப்பது என்றுகூடப் புரியவில்லை. எப்படித்தான் வீட்டுக்குவந்து சேர்ந்தாள் என்று கூடப் புரியவில்லை. எப்போதும் பூட்டிக் கிடக்கும் கேற் திறந்தே கிடக்க அம்மா பூட்ட மறந்துபோனா போல என்று எண்ணியவளாய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வர டோனி பாய்ந்து வந்து இவள் மேல் தாவியது.

நான் வெள்ளன வந்தது உனக்குச் சந்தோசமே என்றபடி அதை வருடிக் கொடுத்தபடி உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அருண் வடிவில்.

வா ஜீவா. இவர் உன்னோட வேலை செய்யிறவராம். இவ அவற்றை தாய். இவருக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். தன்ர மகனுக்கு உன்னை செய்து தரச் சம்மதமோ எண்டு கேக்கிறா. உன்னைக் கேட்டுத்தான் சொல்லவேணும் எண்டு சொன்னனான். ஜீவா வருமட்டும் தாங்கள் இருந்து கேட்டுவிட்டே போறம் எண்டிட்டுக் கதைச்சுக்கொண்டு இருக்கிறம் என்று வாயெல்லாம் பல்லாகத் தாய் கூற, மனதில் பொங்கி எழுந்த அடங்கமாட்டாத மகிழ்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கியபடி ..

“ அம்மா எனக்கு யாரையுமே இன்னொருதடவை கலியாணம் கட்ட விருப்பமில்லை” என்கிறாள்.

கதிரையில் இருந்த அருண் பாதைப்புடன் எழுந்து

“ ஜீவா அவசரப்படாதையும். நான் அம்மாட்டை எல்லா விடயமும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்தனான். அவவுக்கு முழுக்க சம்மதம். உமக்கு சப்றைசா இருக்கவேணும் எண்டுதான் நீர் போன் செய்ததுக்கும் எடுக்கேல்லை”

“அப்ப உங்கள் அம்மா வேண்டாம் என்றால் வந்திருக்கவே மாட்டியள். அப்பிடித்தானே அருண்”

“பிள்ளை ஜீவா! அருண் எனக்கு ஒரே பிள்ளை. அடிக்கடி உம்மைப்பற்றிக் கதைக்கிறவன். இப்ப காலம் மாறிப் போச்சு. பிள்ளையளின்ர சந்தோசத்துக்கு நாங்கள் மறுப்புத் தெரிவிச்சு என்னத்தைக் காணப்போறம். எனக்கு உம்மைப் பார்க்க முதலே அருண் சொல்லுறதைக் கேட்டு உம்மைப் பிடிச்சுப்போச்சு. இனி உம்மடை விருப்பம்”.  

“அத்தை எனக்கும் அருணைச் செய்ய விருப்பம் தான். ஆனால் விடியத் தொடக்கம் போனை நிப்பாட்டி வச்சு என்னை டென்சன் ஆக்கினதுக்கு பதிலுக்கு நானும் அப்பிடிக் கதைச்சனான்” என்றபடி மகிழ்வுடன் நிமிர்ந்து அருணைப் பார்க்கிறாள்.  

 

                           நிறைவுற்றது

  • கருத்துக்கள உறவுகள்

தினேசுக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.......!

கதை நல்லாயிருக்கு சகோதரி......!

இந்த அழகான கதையை இனி முதலில் இருந்து வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2021 at 13:12, suvy said:

தினேசுக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.......!

கதை நல்லாயிருக்கு சகோதரி......!

இந்த அழகான கதையை இனி முதலில் இருந்து வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.......!  😂

தினேசா ஆ ஆ .. .. .. வாசிச்சு முடிச்சதுக்கு நன்றி அண்ணா 😀

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி முடிஞ்சுது.ஜிவா மாதிரி எமக்கும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

தினேஷ் என்ன ஆனார் .....????

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின.

இடையில் கொஞ்சம் விடுபட்டது போல் இருக்கிறது . முடிவு நன்று . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

அப்பாடா ஒரு மாதிரி முடிஞ்சுது.ஜிவா மாதிரி எமக்கும் மகிழ்ச்சி.

😂😀

4 hours ago, நிலாமதி said:

இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

தினேஷ் என்ன ஆனார் .....????

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின.

இடையில் கொஞ்சம் விடுபட்டது போல் இருக்கிறது . முடிவு நன்று . 

நீங்கள் தான் கவனித்திருக்கிறீர்கள். தினேஷ் மீண்டும் வரவே இல்லை. தொடர்பும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.