Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம்

October 26, 2021

spacer.png

யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தினை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என எம்.ஏ. சுமந்திரன் தலமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

அந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மீனவர்கள் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர். அதனாலையே கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து நாசம் செய்கின்றனர். அந்நிலையில் பொதுவாக இழுவை மடி தொழிலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், உள்ளூர் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இன்றைய போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

https://globaltamilnews.net/2021/167732

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சுமந்திரனின் உருவ பொம்மை.

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வல்வெட்டித்துறை குருநகர் பகுதி உள்ளூர் இழுவைமடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றலில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு, மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு தடிகளால் மீனவர்கள் தாக்குதலையும் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வண்ணமே குருநகர், வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகளை கட்டி ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery Gallery Gallery Gallery Gallery
 
இழுவை மடி பயன்படுத்தி மீன் பிடிப்பது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட முறை அல்லவா? அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒன்றுக்காகவா இந்தப் போராட்டம்?

தமிழகத்து மீன்வளம் நாசமானதே இந்த இழுவை மடியையும், சுருக்கு மடியையும் பயன்படுத்தி மீன் பிடித்தமையால் தான். அதையா இந்த மீனவர்கள் ஆதரிக்கின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நிழலி... நேற்று, குணா கவியழகன் இணைத்த காணொளியை... தயவு செய்து பாருங்கள்.
அதன் பின்... சுமந்திரனுக்கு எதிராக ஏன் இந்தப் போராட்டம் என்பதற்கு,
வேறு பல காரணங்களும் உள்ளதை... தெரிந்து கொள்வீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் சொல்லுறது தனக்கு தெரிந்ததோடு நிக்கவேணும். தனக்கு தெரியாததற்கு விளம்பரம் கொடுக்கப்போனால் கம்பில கட்டித்தான் அடிவிழும். நல்லவேளை மாடு குத்தாமல், வெருண்டதோடு  தப்பிற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

 Gallery

நேரில் பார்ப்பதை விட இதில் சுமத்திரன் வடிவாக இருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

நேரில் பார்ப்பதை விட இதில் சுமத்திரன் வடிவாக இருக்கிறார் .

அதெண்டால்.... உண்மைதான். நாவூறு படப்  போகுது, 
"செத்தல் மிளகாய்"  சுத்திப் போட வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 13:25, நிழலி said:

இழுவை மடி பயன்படுத்தி மீன் பிடிப்பது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட முறை அல்லவா? அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒன்றுக்காகவா இந்தப் போராட்டம்?

தமிழகத்து மீன்வளம் நாசமானதே இந்த இழுவை மடியையும், சுருக்கு மடியையும் பயன்படுத்தி மீன் பிடித்தமையால் தான். அதையா இந்த மீனவர்கள் ஆதரிக்கின்றனர்?

சுமத்திரன் ஒரு வீட்டுக்குள் சென்று வந்தால் அந்த வீடு பல பகுதியாய் உடைத்து விடுவது அவரின் நிகழ்ச்சி நிரல் மீனவ சமூகத்தையும் இரண்டாக உடைப்பது அவரின் வேலை இப்பதானே தொடங்கி இருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 08:25, நிழலி said:

இழுவை மடி பயன்படுத்தி மீன் பிடிப்பது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட முறை அல்லவா? அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒன்றுக்காகவா இந்தப் போராட்டம்?

தமிழகத்து மீன்வளம் நாசமானதே இந்த இழுவை மடியையும், சுருக்கு மடியையும் பயன்படுத்தி மீன் பிடித்தமையால் தான். அதையா இந்த மீனவர்கள் ஆதரிக்கின்றனர்?

நிச்சயமாக இந்த மீன்பிடி முறை தடை செய்யப்பட்டே ஆக  வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் ஒரு வீட்டுக்குள் சென்று வந்தால் அந்த வீடு பல பகுதியாய் உடைத்து விடுவது அவரின் நிகழ்ச்சி நிரல் மீனவ சமூகத்தையும் இரண்டாக உடைப்பது அவரின் வேலை இப்பதானே தொடங்கி இருக்கிறார் .

👇 சுத்துமாத்து  சுமந்திரனைப்  பற்றி அறிய, இதனையும் பாருங்கள்.  👇

  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் ஒரு வீட்டுக்குள் சென்று வந்தால் அந்த வீடு பல பகுதியாய் உடைத்து விடுவது அவரின் நிகழ்ச்சி நிரல் மீனவ சமூகத்தையும் இரண்டாக உடைப்பது அவரின் வேலை இப்பதானே தொடங்கி இருக்கிறார் .

10 வருடமா இருக்கிற வீடு இன்னும் உடைந்து விழல்லையே?

On 26/10/2021 at 23:37, பெருமாள் said:

நேரில் பார்ப்பதை விட இதில் சுமத்திரன் வடிவாக இருக்கிறார் .

பெருமாள் படத்தைப் பார்த்தால் டக்லஸ் மாதிரி எல்லோ இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

10 வருடமா இருக்கிற வீடு இன்னும் உடைந்து விழல்லையே?

விழவில்லை உண்மை. விழுந்தால் அங்கு  யாரும் அதிகாரம் செலுத்தி வாழ முடியாது.  பலபேர் குனிந்து, வளைந்து தாங்குவதால்   குட்டிச் சுவராய் போய், வெளியில் பார்ப்பதற்கு வீடு போல் நிக்குது. அது எப்பவும் விழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான். 

நெடுக்ஸ் 

சும்மா வாயில வந்ததெல்லாம் கதைக்கப்படாது. தெரியாது எண்டால் தெரியாது எண்டு இருக்க வேணம். அதுதான் புத்திசாலிக்கு அழகு.. 😃

1 hour ago, satan said:

விழவில்லை உண்மை. விழுந்தால் அங்கு  யாரும் அதிகாரம் செலுத்தி வாழ முடியாது.  பலபேர் குனிந்து, வளைந்து தாங்குவதால்   குட்டிச் சுவராய் போய், வெளியில் பார்ப்பதற்கு வீடு போல் நிக்குது. அது எப்பவும் விழலாம்.

சுமந்திரன் வந்திராவிட்டால் TNA அப்பிடியே இருந்திருக்குமா அல்லது அதுக்கு முன்னர் நன்றாகத்தான் இருந்ததா ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த பிடாரியை வந்த பிடாரி துரத்துது. யாரையும் உள்ளே போகவிடுவதில்லை, இருப்பவர்களையும் துரத்துவது அல்லது அடக்கியாழ்வது. எப்படி இழுத்து இழுத்து  போர்த்தினாலும் உங்களால்  உங்களை முற்றாக மறைக்க முடிவதில்லை அதனால சொல்லுறேன். தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே அது இதுதானோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

நேரே கூறுவது, எதற்குத் தயக்கம். 😔

"இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் மேவுது" என்கிறீர்கள். 

ம்ம்ம்......😂

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா ,கனடா  வரிசையில் இனி ஜெர்மனும் 

May be an image of 4 people and people standing

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

அவுஸ்ரேலியா ,கனடா  வரிசையில் இனி ஜெர்மனும் 

May be an image of 4 people and people standing

 சில பேர்வழிகளை எங்கு சென்றாலும் அவர்களை திருத்தமுடியாது. எவ்வளவு தான் முன்னேறிய சனநாயக நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும்  மதவாத, பழங்குடி மனநிலையில்( Tribal mentality) தான் இருப்பார்கள். 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, zuma said:

 சில பேர்வழிகளை எங்கு சென்றாலும் அவர்களை திருத்தமுடியாது. எவ்வளவு தான் முன்னேறிய சனநாயக நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும்  மதவாத, பழங்குடி மனநிலையில்( Tribal mentality) தான் இருப்பார்கள். 🤪

ஓமோம்...ஓமோம்....😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஓமோம்...ஓமோம்....😎

Bild

திண்ட சோறும், அடிச்ச பியரும் சமிபாடு அடைய  வேண்டும் அல்லவா 🤣

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவுமா ராசாக்கள்! இவர்கள் திருந்துவார்கள் என்று இன்னுமா ....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

 சில பேர்வழிகளை எங்கு சென்றாலும் அவர்களை திருத்தமுடியாது. எவ்வளவு தான் முன்னேறிய சனநாயக நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும்  மதவாத, பழங்குடி மனநிலையில்( Tribal mentality) தான் இருப்பார்கள். 🤪

அட இப்பவாவது உணர்ந்து கொண்டீர்கள் சம்பந்தன் சுமத்திரனை திருத்த முடியாது என்று என்றில்  இருந்து இந்த மாற்றம் ?😀

நேற்று இல்லாத
மாற்றம் உங்களது  காற்று
உங்கள்  காதில் ஏதோ
சொன்னது😀 ரிலாக்ஸ் ஓணாண்டி சொல்வது போல் விறைப்பா வந்து விறைப்பா கருத்து  எழுதிவிட்டு என்னால் போகமுடியாது நாங்கள் மனதில் பட்டதை எழுதிவிட்டு போகும் ஆட்கள்😀 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

"விட்டால் குடும்பி அடிச்சா மொட்டை" ரகம் என்கிறீர்கள். ம்ம்ம மம்.

விறகு கொத்தும்போது மொக்கு என்று ஒரு பகுதி வரும். அதை எப்படிக் கொத்தினாலும் பிளப்பது கடினம். அதை சூளைக்கு உள்ளே வைத்து எரித்தால்தான் உண்டு. அல்லது நெஞ்சாங்கட்டையாக போடவேண்டும்.

பார்ப்போம் அநாகரிகத்தின் உச்சம் எதுவரை செல்லும் என்று 

😏

(கத்தரிக்கோல்காறரே அறம் புறமாக வெட்டித் தள்ளுகிறீர்கள். எனது எழுத்தில் எது பிழைத்தது என்று கூற முடியுமா? இல்லாவிடி கண்ணை மூடிக்கொண்டு கத்தரி பிடிப்பதோ? )

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2021 at 20:56, nedukkalapoovan said:

குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான். 

யாழ்ப்பாண பூசகர் சமூகமும் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா இந்துகலாச்சார அமைச்சராகவும் ஒவ்வொரு தடவையும் அமைச்சருடனும் அவர்சார்ந்த கட்சிஉடனும் கொஞ்சிக்குலாவி உறவாடுபவர்கள்.. கோவில்களில் மேடைகளை அமைச்சருடன் கதிரைகளை பகிர்ந்து செய்திகளுக்கு போட்டோக்களுக்கு சேர்ந்திருந்து சிரித்து போஸ்குடுப்பவர்கள்.. அமைச்சரிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தம்மை வளர்த்துக்கொள்பவர்கள்.. ஆனாலும் அவர்கள் ஏரியாவை சொல்லியோஅவர்கள் சார் சமூகத்தை சொல்லியோ யாரும் குறை சொல்வதில்லை.. குருக்கள் செய்தால் குற்றம் இல்லை போலும்.. ஆனால் அதையே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சிலர் செய்யும்போது ஊர்பேர் சொல்லி ஒரு மாதிரி எண்டு ஒட்டுமொத்த ஊரையோ சமூகத்தையோ சொல்வது தவறுதானே.. குருக்கள்மார் செய்யும்போது கண்டுகொள்ளாமல் விடுவதுபோல் இதையும் கண்டுகொள்ளாமல் விடலாம்தானே.. ஏன் யாரும் அதை செய்வதில்லை..?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

குருக்கள் சமூகமா..?! சில குருக்கள்மார்.. அவங்க இந்துக்கலாசார அமைச்சிடம் இருந்து காசு வாங்க அப்படி ஆமாப் போடுறாங்க. ஏன் கம்பன் கழக ஜெயராஜ் பொன்னாடை போர்க்கல்ல.. காசோலை வாங்க.

அப்படித்தான் குருநகரிலும் ஒரு கூட்டம் இருக்குது. அதனால்.. மொத்தக் குருநகர் மக்களும் என்றாகாது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.