Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்

பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரில் சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்

எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்/விழாக்கள் புலத்தில் குறைந்து வெள்ளைக்காரர்களினைப் பார்த்து காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் (ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், தாயார் தினம் கொண்டாடப்பட வேண்டும்),இன்னும் பல தினங்கள்(21 வயது வந்தவுடன் நடக்கும் களியாட்டங்கள்) தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரக்கலையான பறைமேளம், நாதஸ்வரம், மேளம் போன்றவற்றினை சாதி என்ற பெயரில் ஒதுக்கிவிட்டு, மிருதங்கம் கற்பதற்கும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் , தெழுங்கு கீர்த்தனை, நாட்டியங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டாமல், வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக தமிழ் அல்லாத பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது ஆடிக்கூழ் காய்ச்சுவது எப்படி என்று சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

http://www.arusuvai.com/tiffin/village/aadikkool.html

இவ்விணைப்பில் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்வையிடலாம். மேலதிகமான உணவு தயாரிப்புக்களும் உள்ளன.

கந்தப்பு

தமிழ் அழிகின்றது என்று கவலைப்படுவதால் ஒன்றுமே ஆகப் போவதில்லை. தமிழைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் சொல்லுகின்ற கலைகள் அழிகின்றது என்றால் அதைக் காப்பாற்ற நாங்கள் ஒரு வழி முறை கண்டு பிடிக்க வேண்டும்.

கவலைப்படுவதோ, கண்ணீர் விடுவதோ மற்றவர்களுக்கு புரிவதற்கான வழியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.arusuvai.com/tiffin/village/aadikkool.html

இவ்விணைப்பில் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்வையிடலாம். மேலதிகமான உணவு தயாரிப்புக்களும் உள்ளன.

இணைப்புக்கு நன்றி தூயவன் :)

கந்தப்பு என்ன குஞ்சாச்சி கூழ் காய்ச்சுறது என்று சொன்னவ வருவோ அந்த பக்கம்.........எல்லாற்றையும் நீங்களே குடிக்காம எனக்கும் கொஞ்ச வையுங்கோ.............. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்ன குஞ்சாச்சி கூழ் காய்ச்சுறது என்று சொன்னவ வருவோ அந்த பக்கம்.........எல்லாற்றையும் நீங்களே குடிக்காம எனக்கும் கொஞ்ச வையுங்கோ.............. :P

உங்கட வீட்டிலையும் கூழ் காட்சுவதாகக் கேள்விப்பட்டேன். புத்தன் சொல்ல வில்லையா?.

உங்கட வீட்டிலையும் கூழ் காட்சுவதாகக் கேள்விப்பட்டேன். புத்தன் சொல்ல வில்லையா?.

நாம எப்பவும் சஸ்பென்சா தானே என்னவும் செய்வோமல தெரியாதோ................ஓ ஒ கூழ் காய்ச்சுற விசயம் அந்த ச் அப்பேர்ப் வரை பரவிட்டோ..........சரி சரி வாங்கொ அப்படியே குஞ்சாச்சி கூட்டி கொண்டு வாங்கோ............ ;)

மு.செ - பரவைமுனியம்மாவும் வரலாம்...........யார் என்று விளங்குதோ........... :P

கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியம் மேலெழுந்து செல்லும் இக்காலட்டத்தில், தமிழ்த்தேசியத்திற்காகப் பாடுபடும் ஊடகங்களின் பணி மிக முக்கியமானதாகும். இந்த வகையில் தமிழர் வாழ்வில் முக்கியமாக அமையப் பெறும் ஆடிப்பிறப்பு நாள் தொடர்பான தகவல்களை மக்கள் மயப்படுத்தப் படல் அவசியம்.

- புலம்பெயர் தேசங்களில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாக்கள் இதனை ஒட்டியே நடைபெறுவதாகக் கருதமுடியும்.

- நம்மவர்களது ஊடகங்கள் தமிழர்களின் முக்கியமான நிகழ்வு நாட்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு நாளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.

- நமது புலம்பெயர்வு வாழ்வில் சில நிகழ்வுகளை அதற்குரிய அந்த நாளிலேயே நடத்த முடியாது. ஆனால் இதையொட்டிய வாரத்தில் பரந்துபட்ட பிரச்சாரங்களுக்கூடாக பொதுமைப்படுத்தப்பட்டு வார இறுதி நாட்களில் நிகழ்வுகளாக்கலாம். அதேவேளை, ஊடகங்கள் அதே நாளில் அதன் சிறப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைக்கலாம்.

நன்றி இந்தநாளை இன்று ஞாபகமூட்டியதற்கு.

ஏன் ஆடிப்பிறப்பை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்?

அதிலும் பால்கஞ்சி காய்ச்சி எல்லாரும் பகிர்ந்து உண்ணும் காலை உணவு அற்புதம்.

ஞாபகப் படுத்தியமைக்க நன்றி.

ஆடிக்கூழ் எவ்வாறு நம் பண்பாடு ஆனது. ஆடிக்கூழின் தனித்துவம் (அதற்குள் இடப்படும் மாவுருண்டைகள் முதலிய தனித்துவங்கள்) எதனைச் சித்தரிக்கின்றது முதலிய தகவல்கள் அறிந்தவர்கள் அறியத்தரமுடியுமா? (பதிவாகவோ தனிமடலாகவோ)

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எங்கள் வீட்டிலும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் கட்டாயம் அம்மா செய்து வைப்பா!

தூயவன்,

அந்த இணைப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஈழத்தமிழர்களாகிய எங்களது செய்முறை வேறு அல்லவா?!

தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு

கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது

ஒரு பேணி - பச்சரிசி மா

அரைமூடித்தேங்காய்ப்பால்

பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு

மிளகுத்தூள் தேவையான அளவு

சீரகத்தூள் தேவையான அளவு

ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...

கலவை 1

இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.

பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

நம்ம ஆடிக்கூழ் தயார்...பலாஇலைக்கெல்லாம் எங்க போறது, வாயை வைச்சு உறிஞ்சிக்குடியுங்கோ :rolleyes:

கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.

கவி அக்கா..............கூழ் சூப்பர் அந்த மாதிரி இருந்தது..............நீங்க மிஸ் பண்ணி போட்டீங்க.சரி சரி என்ட கூழில கண் வைக்காம கந்தப்புவின்ட கூழில கண்ணை வையுங்கோ பாவம் நான் பேபி ஆக்கும்.......அவுஸ்ரெலியா பக்கம் வந்தா அடுத்த கூழை போடலாம் என்ன தான் கூழ் குடித்தாலும் ஒன்று இந்த முறை குறந்து போயிட்டு அது தான் வழமையா கூட்டமா சேர்ந்தா அடிக்கிற கார்ட்ஸ் தான் (3.0.4) மற்றபடி சூப்பரா இருந்தது................... :P :P

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

அந்த இணைப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஈழத்தமிழர்களாகிய எங்களது செய்முறை வேறு அல்லவா?!

ஓ. ஆடிக்கூழ் என்று தேடிப்பார்த்தேன். அம்முறை தான் கிடைத்தது. எம் முறையில் பயறு கொஞ்சம் அதிகமாக இருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக் கூழைக் காட்டிலும் ஒடியற்கூழ் உடம்புக்கு நல்லது. இப்போதெல்லாம் ஒடியற்கூழ் காய்ச்சும் பழக்கம் புலம்பெயர்ந்தோர் மத்தியில் பிரபலமாகி வருகிறது. காரத்தைக் கொஞ்சம் குறைத்தால் EELAM SOUP என்று வெள்ளைக்காரர் மத்தியில் அதனை ஒரு ஸ்பெசல் சூப்பாக அறிமுகம் செய்யலாம். விரும்பிக் குடிப்பார்கள்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் நல்லா இருக்குது. அதுதானப்பா குடித்துக்கொண்டே எழுதுகிறேன். :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடிக்கூழுடன் கொழுக்கட்டையும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லையப்பா :rolleyes: இருந்தாலும் கந்தப்பு அவர்களுக்கு நன்றிகள்.

இப்போ சுடச்சுட செய்த ஆடி கூழ் :D

canada405zv8.jpg Shot at 2007-07-17

பலரும் மறந்து விட்ட அருமையான இந்தப் பாடலை இணைத்த கந்தப்பு மாமாவிற்கு நன்றி. நன்றி நன்றி.

புலத்திலை கூழோ????

கூழ் கிடைக்கும் எண்டு தெரிஞ்ச வீட்டுக்குப் போனன். cool soda தான் கிடைச்சுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் மறந்து விட்ட அருமையான இந்தப் பாடலை இணைத்த கந்தப்பு மாமாவிற்கு நன்றி. நன்றி நன்றி.

புலத்திலை கூழோ????

கூழ் கிடைக்கும் எண்டு தெரிஞ்ச வீட்டுக்குப் போனன். cool soda தான் கிடைச்சுது.

தலைவிதியை யாராலைதான் மாத்தேலும் கொடியேறிட்டுதெல்லே இனித்தான் படிப்படியாய் ஒவ்வொருதிருவிழாக்காட்சியும

ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன்

ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு

1 பேணி வறுத்த அரிசி மா

4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்)

சீனி

1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால்

கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள்

செய்முறை

11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்)

சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஆடிக்கூல் ரெடி :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன்

ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு

1 பேணி வறுத்த அரிசி மா

4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்)

சீனி

1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால்

கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள்

செய்முறை

11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்)

சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஆடிக்கூல் ரெடி :P

இந்த முறை பார்க்க நல்லா இருக்கே. அடுத்த முறை செய்வோம்

ஆடிக்கூழுடன் கொழுக்கட்டையும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லையப்பா :huh: இருந்தாலும் கந்தப்பு அவர்களுக்கு நன்றிகள்.

என்ன கு.சா

ஆடிப்பிறப்பு எண்ட உடன வலும் சந்தோசம் போல. பழைய ஞாபகங்கள் வருகுதோ ?????? :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) இங்கு கருப்பனி கிடைக்காததால்

பனங்கட்டியில் எல்லோ கூழ் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கூழுக்கு கருப்பணி பாவிக்கிறதா? கருப்பட்டி அலயஸ் பனங்கட்டிதான் சாதாரனமாக பாவிப்பது வழக்கம். :mellow::)

கருப்பணி கள்ளின் அக்காவல்லவா? ஆகா என்ன வொரு இனிமை! பிஞ்சு மாங்காயும் இருந்தால் சொல்லி வேலையில்லை. :P :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.