Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

 

இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது.

``பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. இனிமே இதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் அல்லது தவிர்த்துடணும்'' என்று முடிவெடுத்து விடுகிறார்கள் பலர். பிள்ளைகளுக்குத் திருமணமாகியிருந்தாலோ `பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இதென்ன கருமம்' என்று அருவருப்பு காட்டுகிறார்கள் சிலர். இதில் இன்னொரு வகையும் இருக்கிறது.

`இந்த ஆளு சின்ன வயசுல தினமும் தண்ணியடிச்சிட்டு வந்து என்னை அடிப்பான். எனக்கு விருப்பமில்லைன்னாலும் விட மாட்டான். இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்.'

இள வயதில் மனைவியை அவமரியாதையாக நடத்துகிற கணவர்களுக்கு, மத்திம வயதிலும் இறுதியிலும் மனைவியின் பராமரிப்பு வேண்டுமானால் கிடைக்கலாம். நட்பும் காமமும் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

திருமணமான புதிதில், பல காலம் அடக்கி வைத்த உணர்வை வெளிப்படுத்துகிற வேகத்துடன் இருக்கிற காமம், கருத்தரிப்பு, குழந்தை என்னும் அடுத்தகட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும். குழந்தைகள் வளர ஆரம்பிக்கையில், `ஒரு வாரம், இல்ல பத்து நாளைக்கு முன்னாடி சேர்ந்திருந்தோமா' என்று ஞாபகப்படுத்திக் கொள்கிற அளவில்தான் பெரும்பாலும் தாம்பத்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடுத்தர வயதிலிருந்துதான், காமத்தை நிதானமாக அனுபவிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளிலும் இருக்கிற தம்பதிகளிடையேயான செக்ஸ் வாழ்க்கை பெரும்பாலும், காமத்தை நிதானமாக அனுபவிப்பதாக இல்லை.

 

மனநல மருத்துவர் அசோகன் பேசுகையில், ``இளவயசுல கணவனும் மனைவியும் டூ வீலர்ல போறப்போ பார்த்தீங்கன்னா, அவங்களுக்கு நடுவுல இடைவெளியே இருக்காது. சில வருடங்கள்ல குழந்தைகள் நடுவுல உட்கார்ந்து சின்ன இடைவெளியை ஏற்படுத்தினாலும் கணவரோட தோள் மேல மனைவியோட கை இருக்கும். நடுத்தர வயசுல இருக்கிற கணவன் - மனைவி டூ வீலர்ல போறப்போ கவனிச்சா, நடுவுல ஒருத்தர் உட்காரலாம்கிற அளவுக்கு இடைவெளி இருக்கும். அப்படியே நெருங்கி உட்கார்ந்திருந்தாலும், வீட்டு சம்பந்தமான ஏதோவொரு விவாதம் ஓடிட்டு இருக்கும். பிள்ளைகளோட மேற்படிப்பு, கல்யாணம்னு எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

மனநல மருத்துவர் அசோகன்
 

நடுத்தர வயசு காமம் பத்தி பேசுறப்போ, `கிளிஞ்சல்கள்' படத்துல வர்ற ஒரு சீனும், `வரவு நல்ல உறவு' படத்துல வர்ற ஒரு சீனும் எனக்கு நினைவுக்கு வருது. கிளிஞ்சல்கள் படத்துல சுமனோட அப்பா கேரக்டர், ``எங்க ரூம்ல ஒருநாளும் விளக்கு எரிஞ்சதில்லை. நானும் உங்க அம்மாவும் அந்தளவுக்கு செக்ஸ்க்கு மரியாதை கொடுக்கிறோம்" என்பார்.

வரவு நல்ல உறவுல விசு கேரக்டர் தன்னோட மனைவி கேரக்டருக்கிட்ட, ``நமக்குன்னு தனியா ஒரு ரூம் இருக்கணும்" என்பார்.

அந்தப் படங்கள்ல ஆண் கேரக்டர்கள் பேசினாலும் நிஜத்துல இந்த உணர்வு கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே இருக்கணும். ரெண்டு பேருமே எமோஷனலா அட்டாச் ஆகியிருக்கணும். அப்படியிருந்தா, சாதாரணமா பேசுறப்போவே உடம்புக்குள்ள குறுகுறுன்னு ஏதோ பொங்கும். பல வருஷங்களுக்கு முன்னாடி நிகழ்ந்த முதலிரவெல்லாம் நினைவுக்கு வரும்.

வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆயிட்டதாலேயே வீட்டுக்குள்ள பாடக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர் சாப்பாடு பரிமாறிக்கக்கூடாது, அப்படி பரிமாறுறப்போ சாப்பிடுற கணவன் / மனைவி தோள் மேல கை வைக்கக்கூடாது அப்படின்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சின்ன வயசுல அரை வேக்காடு உணவும் பிடிக்கும்; ஜீரணிக்கும். அதுவே நடுத்தர வயசுல நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு ஏத்தபடி பக்குவமா சமைச்சுதானே சாப்பிடணும். அந்த மாதிரிதான் தாம்பத்திய உறவும். வேகம் குறைச்சலா இருக்கும். உறுப்பு வறட்சியா இருக்கும். ஆனா, அன்பு அதிகமா இருந்தா இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. தோணும்போதெல்லாம் உங்க பெட்ரூம் லைட்ஸ் அணைக்கப்படட்டும்'' என்கிறார்.

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10| how can we have better sex life after 50-s - expert explains - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

காமத்துக்கு மரியாதை நல்ல தலைப்புதான் ஆனால் மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

நன்றி நிழலி.....!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

பேரப்பிள்ளைகள் எடுத்த பின்னும்

poornam.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

கீழே பாருங்கள் அவருக்கு விளங்கீட்டுது......!  👇  😂

10 minutes ago, ராசவன்னியன் said:

பேரப்பிள்ளைகள் எடுத்த பின்னும்

poornam.png

 

  • கருத்துக்கள உறவுகள்

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Elugnajiru said:

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

 

 img?regionKey=KDDtH82rfu4BZIGM6qB9Og==

1 hour ago, valavan said:

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

 

"இஞ்ச பாரு, பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் இதுகள் ஒன்றாக படுக்குதுகள்" என்று 40+ அல்லது 50+ ஆன தம்பதிகள் ஒன்றாக ஒரு அறைக்குள் படுப்பதை பார்த்து நக்கலடிக்கும் மனிதர்களை அடிக்கடி காண்கின்றோம்.  வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் கணவனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதை கூட தவறு என்று சொல்லுகின்றவர்களையும் கொண்ட சமூகமாக இருக்கின்றோம்.  50+ ஆன தாய் தந்தையரை ஊரில் இருந்து அழைத்து வந்து விட்டு, அம்மாவை ஒரு பிள்ளையும் அப்பாவை இன்னொரு பிள்ளையும் பொறுப்பெடுத்து தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று பிரித்து வைப்பதைக் கூட எம் புலம்பெயர் நாடுகளில் கண்டிருப்போம் (இவ்வாறு பிரித்து வைத்து இருக்கும் இருவரை நட்பு வட்டாரத்தில் காண்கின்றேன்). 

இவ்வாறான செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படையே காமம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற தவறான கற்பிதம் தான். அந்தக் கற்பிதங்களை உடைத்தெறிய இவ்வாறான கட்டுரைகளும் அவசியம்.

காமம் உணவு போன்றது. 40 அல்லது 50 வயது வரைக்கும் நல்லா சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக புதிய ருசியான உணவை நாம் தவிர்ப்பது இல்லை. எத்தனை முறை சாப்பிட்டாலும் பசி எடுக்கும் போது உணவு தேவைப்படுவது போன்றதுதானே காமமும். சாப்பிடும் அளவுகள் மாறுபடலாம், ஆனால் பசி எப்போதுமே தன்னை போக்க உணவை தேடும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் 20 வயதுகளில் தோன்றும் காமம் T20 match போன்றது. கனக்க சிக்ஸர்கள் அடிக்கலாம், ஆனால் நிதானித்து விளையாட முடியாததுடன் விரைவில் அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறி விடவேண்டி வந்து விடும். 30 வயதுகளின் பின் தோன்றும் காமம் One day match போன்றது. வேகமாக விளையாடிக் கொண்டு இருக்கும் போது இடைக்கிடை நிதானமாகவும் விளையாடும் match இது கெதியன அவுட்டாக சந்தர்ப்பம் இதிலும் அதிகம். ஆனால் 40+ பின் வரும் காமம் தான் Test match போன்றது. நின்று நிதானித்து ஒவ்வொரு பந்தாக அவதானித்து புரிந்து நின்று ஆடலாம். விரைவில் அவுட் ஆக சந்தர்ப்பம் குறைவு. சக batsman இன் உணர்வுகளையும் தெளிவாக புரிந்து ஆடும் அருமையான ஆட்டம் இது.

இப்படிக்கு
நிழழியானந்தா ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

 

 img?regionKey=KDDtH82rfu4BZIGM6qB9Og==

“”and Jogi says he is not finished yet””

🤣🤣

3 hours ago, valavan said:

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

வயித்தெரிச்சல்....🤣🤣

3 hours ago, Elugnajiru said:

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

தம்பி இன்னும் (அந்த) வயசுக்கு வரவில்லையோ...🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, suvy said:

காமத்துக்கு மரியாதை நல்ல தலைப்புதான் ஆனால் மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

 

பிந்தின காம காதலுக்கு எங்கடை புங்கையர் முந்தியொருக்கால் நல்ல விளக்கம் தந்தவர் தெரியுமோ?  😁

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடி இருந்தாலும் இமாஜினேஷன் வலு முக்கியம்; இபுதிது புதிதாக கண்டு பிடித்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


 சற்றே பிரத்தியேகம் தான் என்றாலும் மூத்த பிரசைகளின் நன்மைக்காக ..


இன்று அதிகாலை எழுந்த வேளை மனம் சற்றே உல்லாசமாக இருந்தது .


பக்கத்தில இருந்த ஆளை தட்டி எழுப்பி “ இனி என்னை மச்சான் எண்டு கூப்பிடுமன் எண்டு கேட்டேன்.
 ஆள் முழித்துப் பார்த்து “ இப்ப என்ன மகளுக்கும் மருமகனுக்கும் கோல் எடுக்கிறதோ" எண்டு விட்டு அங்காலப்பக்கம் திரும்பிப் படுத்திட்டுது.


 நான் விடேல்லை.  

காலை ஆஃபீஸ் போற மட்டும் ஒரு பத்து தரம் எண்டாலும் திருப்பி திருப்பி கேட்டிருப்பேன்.


 கடைசியில காரில ஏறுற கடைசிக்கநதாயத்திலே ஆள் அங்கால பக்கம் திரும்பி  ஓ மச்சான்”  எண்டு மெதுவாத்தான் சொல்லிச்சுது .


 சக்ஸஸ் … சக்ஸஸ் …


என்ன மாதிரி முன்னேறும் எண்டு பின்னேரம் தெரிந்து விடும்.😍


 வெள்ளி மாலைகள் இனிமையானவை……
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

“”and Jogi says he is not finished yet””

🤣🤣

கில்லாடியப்பு, யாரும் கவனித்திருக்க மாட்டார்களென நினைத்தேன்.

 

5 hours ago, சாமானியன் said:

சக்ஸஸ் … சக்ஸஸ் …

 

அதை இப்படியல்லோ சொல்ல வேணும்..! 😍  (Thanks to தங்கப் பதக்கம் movie)

test.png

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.