Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு

முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்களால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
President-task-300x152.png
 
ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட் டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்தது.
இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது அவற்றில் சில வருமாறு,
கிழக்கு மாணத்தில் தமிழ் இந்துக்கள் அதிக பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். ‘லவ் ஜகாத்’ என்ற கட்டமைப்பு மூலமாக தமிழ்ப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இலக்கு வைக்கின்றனர்.
வறுமை, தொழில் வாய்ப்பு இன்மை ஆகியவற்றால் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கடைகளில் வேலை செய்ய நேர்கிறது. இதை முஸ்லிம்கள் வாய்ப்பாக எடுக்கின்றனர். அப்பாவி தமிழ்ப் பெண்கள் காதலின் பெயரால் இவர்களின் வலைகளில் சிக்கி மதம் மாற நேர்கின்றது.
இதே போல பல விதமான சலுகைகளையும் காட்டி தமிழ்ப் பெண்களை வசீகரிக்கின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களும் தமிழ் மாணவிகளை மயக்கி எடுக்கின்றனர். தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மொத்தத்தில் சீரழிந்து விடுகின்றது.
இந்நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்களும், சிங்களவர் களுமே. ஆனால் வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் கபளீகரம் செய்யப்பட்டு ஊர்களின் பெயர்கள்கூட மாற்றப்பட்டுள்ளன. அதே போல தமிழ் பாடசாலைகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு சந்தைகளாக மாற்றப்பட்டன. முஸ்லிம் அதிகாரிகளின் உதவியுடன் இவை நடக்கின்றன.
இது அராபிய நாடு அல்ல. ஆனால் அராபிய கலாசாரம் திணிக்கப்படுகின்றது. காத்தான்குடியை சவூதி அரேபியா போன்று ஆக்கி வைத்துள்ளார்கள். காதி நீதிமன்ற முறைமை நமது நாட்டுக்குத் தேவை அற்றது. தமிழ் இந்துகளால் பசுக்கள் தெய்வமாக மதிக்கப் படுகின்றன. சிங்கள பௌத்தர்களும் பசுக்களைக் கொல்வதில்லை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை முஸ்லிம்கள் அறுக்கின்றனர். இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாடறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வர வேண்டும் எனவும் செயலணிக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
https://thinakkural.lk/article/154269

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட வாசகம் அடங்கிய போஸ்டரை கிழித்ததற்காக ஒருவரை தெருவிற்கு இழுத்து வந்து அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி தீமூட்டி பெட்டியில் வைத்து இலங்கைக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்கள்.

இதில் கவனிக்கப்படவேண்டியது  சமூக வலைதளங்களில் இந்திய இலங்கை முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அந்த சிங்களவர்மேல்தான் தப்பு என்று கருத்துக்களிடுகிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் பிறரை மூளை சலவை செய்து மதம் மாற்றுவதும், காதல் என்ற பேரில் பிற மத பெண்களை தங்கள் வலையில் விழுத்தி லவ் ஜிகாத் என்ற பேரில் மதம் மாற்றி முக்காடு போட வைத்து பெயரையும் மாற்றி தமது மதத்தை பரப்பும் பெரும் சதியில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு சுவரொட்டியை கிழித்தற்கே அடுத்தவனை அடித்து கொன்று எரிக்கலாம் என்று இவர்கள் மதசட்டத்தில் இருந்தால், ஒரு இனத்தையே சுத்திகரிப்பு செய்ய துடிக்கும்  இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

ஈஸ்டர் தாக்குலின் முன்னர் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இலங்கை முஸ்லீம்கள் பகிரங்கமாகவே மட்டக்களப்பும் திருமலையும் மிக விரைவில் முஸ்லிம்கள் வசமாகும் தமிழர்கள் விரட்ட படுவார்கள் என்று பதிவிட்டார்கள் , ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்களவனுக்கு பயத்தில கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்,

ஆனால் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கவேண்டும், அல்லது கிழக்கின் தமிழர் நிலங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றி அவர்களை விரட்டி விடவேண்டுமென்ற அவர்கள் நாசகார திட்டம் அப்படியே மனசுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது,

என் சந்தேகமெல்லாம் தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா, அல்லது குல்லாவை மாட்டிக்கொண்டு பெயரையும் மாற்றி அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்களா?

சிலவேளை கால்கழுவி வாழ்றது எண்டு முடிவாச்சு அது சிங்களவன் காலாயிருந்தால் என்ன இஸ்லாமியன் காலாயிருந்தா என்ன என்ற முடிவுக்கு வந்தாலும் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் முஸ்லீம்மதத்துக்கு எப்படி ஐயா கட்டாயப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் நாங்கள் என்ன சவூதியிலா வாழ்கிறோம் நல்ல வெள்ளையா சல்மான் கான் அமிர்கான் அல்லது இப்போது புதிதாக வந்த கிந்திப்பட நடிகர்களைப்போல் இருக்கும் முஸ்லீம் ஆண்களை கண்டு காதல் வசமாகி அவர்களுடன் ஓடிப்போகையில் அதன் பின்பு மதம் மாறுகிறார்கள் இது காமம் மற்றும் வாலிப வயது சம்பந்தப்பட்ட விடையம். அதுக்குப்பிறகு குத்துதோ குடையுதோ என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் 

யாழ்ப்பாணத்தில தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவம் புல"நாய்" வுத்துறை மற்றும் பாண் பேக்கரியில வேலை செய்கிற சிங்களப்பெடியளை அதுவும் அரச உத்தியோகத்திலிருக்கும் பெண்கள் கலியானம் செய்யினம் என கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு செய்தி வந்ததே அதே போலத்தான் இதுவும்.

இரண்டு வருடத்துக்கு முன்பு யாழில் எனது வீட்டுக்கு அருகில் கலியாணம் கட்டி மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண் சுவிசிலிருந்து கணவன் வந்த ஒரு வாரத்தில வீட்டுக்கு ஜன்னல் வேலைக்கு வந்த ஒரு மன்னார் முஸ்லீமோட ஒடிட்டா அதுக்குபிறகு புருசன் காரன் கெஞ்சி மண்டாடி ஒருவழியாக்கூட்டி வரத் திரும்பவும் ஓடுட்டா, பிறகும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய மாதிரி புருசஙாரன் கெஞ்சி........... கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்... என்ன ஒப்பந்தமோ தெரியாது அதுக்குப்பிறகு நான் விசாரிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் ஓட்டமாவடி, வாழைச்சேனை பற்றி நசீர் அகமட்டும், ரவூப் ஹக்கிமும் அலறினார்கள் அது இங்கு டைப் அடிச்சவருக்கு தெரியுமோ என்ன 

மட்டக்கள்பில சிங்களவர்களை குடியேற்ற தமிழரசுக்கட்சி தடுக்கிறது ஆனால் பாராளுமன்ற த்தில் வாய் பொத்தி  மடக்கி நிற்கிறார்கள் இப்போதெல்லாம் சிங்களவர்களுடன் இணைந்து வாழலாமோ என எண்ணத்தோன்றுகிறது தற்போதுள்ள முஸ்லீம்கள் முற்றிலுமாக மதம் புகுத்தி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்

தற்போதுள்ள பிரச்சினை  பணம் அது அவர்களுடைய கையில் வியாபார ரீதியீல் அதிகம் புரள்வதால் பெண்களும் வேலைக்கென போய் விழுகிறார்கள் இது தற்போது கிழக்கில் நாளை வடக்கில் நாம டைப்ப அடித்து விட்டு நல்ல இலங்கை பொண்ணாத்தேடி வெளிநாட்டுக்கு எடுப்பம் 😁😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

ஆனால் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கவேண்டும், அல்லது கிழக்கின் தமிழர் நிலங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றி அவர்களை விரட்டி விடவேண்டுமென்ற அவர்கள் நாசகார திட்டம் அப்படியே மனசுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது,

என் சந்தேகமெல்லாம் தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா, அல்லது குல்லாவை மாட்டிக்கொண்டு பெயரையும் மாற்றி அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்களா?

சிலவேளை கால்கழுவி வாழ்றது எண்டு முடிவாச்சு அது சிங்களவன் காலாயிருந்தால் என்ன இஸ்லாமியன் காலாயிருந்தா என்ன என்ற முடிவுக்கு வந்தாலும் வருவார்கள்.

விடிவெள்ளி இருக்கட்டும் வலவன் 
அப்படியே உங்கள் கூத்தாடி  தேசிக்காய்கள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கோ 
கிழக்குமாகாணசபையை  தாரை வார்த்து தவிலடிக்கும் போது இது தெரியவில்லையோ 
சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார், 
விடிவெள்ளி செய்யாத வேலையெல்லாம் கூத்தமைப்பு கூத்தாடிகள் நடத்திமுடிக்க இப்பிடி கப்பில கடா வெட்டக்கூடாது   
 
  • கருத்துக்கள உறவுகள்

Samuel-Smith-bans-mobile-phones-from-pub

குறிப்பிட்ட வயதுவரை செல்லிடை பேசிகளை தடை செய்தால் நாட்டில் பாதி பிரச்சனை தீரும் ..😢

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

விடிவெள்ளி இருக்கட்டும் வலவன் 
அப்படியே உங்கள் கூத்தாடி  தேசிக்காய்கள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கோ 
கிழக்குமாகாணசபையை  தாரை வார்த்து தவிலடிக்கும் போது இது தெரியவில்லையோ 
சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார், 
விடிவெள்ளி செய்யாத வேலையெல்லாம் கூத்தமைப்பு கூத்தாடிகள் நடத்திமுடிக்க இப்பிடி கப்பில கடா வெட்டக்கூடாது   
 
அக்னி,

அந்த வடக்கின் கூட்டமைப்பின் பிடியிலிருந்தும் கிழக்கை விடுவிப்போம் என்றுதானே விடிவெள்ளிகள் ஆக்ரோஷ குரல் எழுப்பின அப்படியிருக்கும்போது கூட்டமைப்புபற்றி எதற்கு அவர்கள் கவலை கொள்ளவேண்டும்?

கூட்டமைப்பு என்பது எதற்கும் உதவாதது என்று பெரும்பாலான தாயக மக்கள் முடிவுக்கு வந்து எவ்வளவோ காலமாச்சு.

கிழக்கை விழுங்க துடிக்கும் முஸ்லீம்களை புலிகளை ஒழிப்பதற்கு  சிங்கள ஆட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று அதற்கு பிரதியுபகாரமாய் மஹிந்த கட்சியின் பிரதி தலைவர் ரேஞ்சுக்கு போன விடிவெள்ளிகளால் மட்டுமே அரச ஆதரவுடன் கட்டுபடுத்தும் சக்தியுண்டு. அப்படியிருந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அதைதான் கேட்டேன்.

எந்த அதிகார பலமும் இல்லாத கூட்டமைப்பால் அது சாத்தியமா? 

வடக்கு மக்களுக்கு கிழக்கும் தாயகம்தான், அதேபோல் கிழக்கு மக்களுக்கு வடக்கும் தாயகம்தான், வடக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிழக்கை மீட்போம் என்று பேரிடியாய் குரலெழுப்பி விஷ விதைகள் விதைத்த விடிவெள்ளிகள் இன்று  கண்முன்னே கிழக்கு சோனகரிடம் பறிபோவதை அதிகார பலமுள்ள மஹிந்த அரசின் கையாட்களாக இருந்து கொண்டும் பார்த்துக்கொண்டு மெளனமாய் இருப்பது ஏன்? , 

இந்த முஸ்லீம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கிழக்கு மக்களுக்கு விடியலை காண்பிக்க தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்ட விடிவெள்ளிகள் சொல்லபோவது என்ன என்பதே ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

நல்ல கேள்வி… கருணா பிள்ளயான் வியாழேந்திரன் டக்ளஸ் அங்கயன் போன்ற அரசுடன் சேர்ந்தியக்கும் எம்பிக்கள் தமது அதிகாரங்கள் மூலம் அரசில் இருக்கும் செல்வாக்கின் மூலம் இதை கட்டுப்படுத்தவேண்டும்… தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் பங்கேற்பதுமில்லை தமிழ் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்வதில்லை.. இலங்கை அரசியலிலும் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகள் அவர்கள்.. எமக்கு இப்பொழுது பலம் என்றால் அரசில் அங்கம் வகிப்போர்தான்.. அவர்கள் இதற்கு ஒரு முடிவுகட்டினால் எப்படி முஸ்லீம் எம்பிக்கள் தம்மக்களுக்கு அரசில் அங்கம் வகித்து அதன்மூலம் பலம்பெற்றுகுடுக்கிறார்களோ அப்படி நல்லது செய்தால் நிச்சயம் எதிர்கால தேர்தல்களில் அசைக்கமுடியாத சக்தியாக அவர்கள் வருவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கேள்வி… கருணா பிள்ளயான் வியாழேந்திரன் டக்ளஸ் அங்கயன் போன்ற அரசுடன் சேர்ந்தியக்கும் எம்பிக்கள் தமது அதிகாரங்கள் மூலம் அரசில் இருக்கும் செல்வாக்கின் மூலம் இதை கட்டுப்படுத்தவேண்டும்… தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் பங்கேற்பதுமில்லை தமிழ் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்வதில்லை..

8 hours ago, valavan said:

கிழக்கை விழுங்க துடிக்கும் முஸ்லீம்களை புலிகளை ஒழிப்பதற்கு  சிங்கள ஆட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று அதற்கு பிரதியுபகாரமாய் மஹிந்த கட்சியின் பிரதி தலைவர் ரேஞ்சுக்கு போன விடிவெள்ளிகளால் மட்டுமே அரச ஆதரவுடன் கட்டுபடுத்தும் சக்தியுண்டு. அப்படியிருந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அதைதான் கேட்டேன்.

எந்த அதிகார பலமும் இல்லாத கூட்டமைப்பால் அது சாத்தியமா? 

வடக்கு மக்களுக்கு கிழக்கும் தாயகம்தான், அதேபோல் கிழக்கு மக்களுக்கு வடக்கும் தாயகம்தான், வடக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிழக்கை மீட்போம் என்று பேரிடியாய் குரலெழுப்பி விஷ விதைகள் விதைத்த விடிவெள்ளிகள் இன்று  கண்முன்னே கிழக்கு சோனகரிடம் பறிபோவதை அதிகார பலமுள்ள மஹிந்த அரசின் கையாட்களாக இருந்து கொண்டும் பார்த்துக்கொண்டு மெளனமாய் இருப்பது ஏன்? , 

புலவர் & வளவன் 
எந்த தார்மீக அர்த்தத்தில் நீங்களும் தமிழ்மக்களும்  கொஞ்சமும் வாக்குப்போட தயாராகவே இல்லாத கருணா போன்ற தலைவன் தனது  செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மக்களை காப்பாற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
என்ன சொல்லவருகிறீர்கள் அதாவது நாங்கள் உனக்கு வாக்களிக்கமாட்டோம் ஆனால் நீ எங்களை உனது அதிகாரம், செல்வாக்குகளை பாவித்து காப்பாற்ற வேண்டும் என்றா ....? 
அவர்களும் தமிழர்கள் தான் இழிச்சவாயர்கள் இல்லை. கருணா இயக்கத்தை விட்டு பிரிந்தது, காட்டிக்கொடுத்தது, புலிகளை பலவீனப்படுத்தியது எதையும் நான் மறுக்கவுமில்லை, அதனை ஆதரிக்கவுமில்லை , ஆனால் 8000 போராளிகளை தான் காப்பாற்றியதாக சொன்னாரே ....இல்லை என்று மறுதலிக்கப்போகிறீர்களா....?  இவர்கள் அனைவரும் புலிகளுடன் இருந்திருந்தால் 8001 மாவீரர்களை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் 8001 குடும்பங்களை  தவிரவும் வேறு எது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்கும்...? 
பிள்ளையான் வியாழனுக்கு வருகிறேன் 
பிள்ளையானுக்கு அரசு ஆதரவு என்ற ஒரு தகுதியை விட வேறு என்ற பதவிநிலைகளும் கிடையாது அவரும் அதிகாரவரம்பை பொறுத்தவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே, மக்களுக்காக பேச மட்டுமே முடியும் என்ன இவருடைய பேச்சை அரசு காது கொடுத்தாவது கேட்கும்.
வியாளனுக்கு அதிகபட்சம் முடிந்தது ரோட்டு போட்டு,பாலம் கட்டி கொடுப்பது அதனை அவர் சரியாகவே செய்கிறார்( அவரது முகநூலை பின்தொடர்கிறேன்).
பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகம் அது பிள்ளையானால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் கூத்தமைப்பின் கூத்தாடிகளின் சகல உச்ச வரம்புகளையும் பாவித்து கிடப்பில் போடப்பட்டது உங்களுக்கு தெரியுமா...
ஏன் அது கட்டிமுடிக்கப்பட்டால்  பிள்ளையானுக்கு கிரெடிட் போய்விடுமே என்ற கிலி.  
அதை விட முக்கியம் இவர்கள் எவரும் தீர்வு இந்தக்கிழமை வரும் வாறகிழமை வரும் பொங்கலுக்கு வரும் தீபாவளிக்கு வரும் என்று உடுக்கடித்து பா.உக்கள் ஆகவில்லை அவர்களது எல்லை எது என்று அவர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் தெரியும். ஒட்டிஉறவாடி உருண்டு பிரண்டு மகிழ்ந்த ரிசாட்டுக்கே இப்போது ராஜபக்சாக்கள் கொடுக்கும் மரியாதையை பார்த்தீர்கள் தானே அதுதான் எல்லை 
அது என்ன அரச ஆதரவு நிலை என்றாலும் அடி மடியில் கைவைத்தால் இதுதான் முடிவு. 

கோத்தபாய ஜனாதிபதியானது முழு இலங்கைக்கும் தரித்திரமாயிருப்பினும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கு  இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் இப்போது பல்லுபுடுங்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருப்பது நிம்மதி. இல்லாவிடில் திகாமடுல்லயில் ஹரிஸ் ஒருபக்கம் கூட்டி அள்ள, மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூட்டி அள்ள, திருகோணமலையில் நசீர் அஹமட் அள்ள, கூத்தமைப்பின் கைங்கரியத்தில் வாயால் வீணி  வடித்துக்கொண்டு தீர்வு உடுக்கடித்துக்கொண்டிருந்திருப்போம். 
நான் இணைந்த வடகிழக்கு என்ற சாத்தியமற்ற கானல்நீரை விட்டு கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் என்று எனது வட்டத்தை சுருக்கி நீண்ட காலம், அங்கயன் டக்ளஸ் பற்றி எனக்கு தெரியாது
ஆனால் கூத்தமைப்பின் கூத்தாடி கோஷ்ட்டிகளுக்கு தர்ம அடி அடிக்குமளவுக்கு கிழக்குமாகாண அரசு ஆதரவு அணிகளின் அரசியல் அடைவு  தெரியும்     

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2021 at 07:42, அக்னியஷ்த்ரா said:

அதாவது நாங்கள் உனக்கு வாக்களிக்கமாட்டோம் ஆனால் நீ எங்களை உனது அதிகாரம், செல்வாக்குகளை பாவித்து காப்பாற்ற வேண்டும் என்றா ....? 

இவங்கள் துரோகி என்பார்கள் அரச ஒத்தூதி என்பார்கள் ஆனால் சம்பவங்கள் நடந்தால் ஏன் அவர்களால் செய்ய முடியல என்று கேள்வியும் கேட்பார்கள்  ஆக கேள்வி மட்டும் கேட்டு மணிய ஆட்டுவம் 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக கேள்வி மட்டும் கேட்டு மணிய ஆட்டுவம்

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள். இப்பவும் ஆட்டி குடும்பத்திலிருக்கும் மிச்ச சொச்சத்தையும் ஸ்பான்சர் பண்ணுவம் என்று பார்த்தால்  ஊரிலிருக்கிற சனத்திடம் இந்த மணி  ஆட்டல் ஒன்றும் எடுபடுதில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள்.  

ஆராய்வாளர்களை என்றால்  சரி  தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள். இப்பவும் ஆட்டி குடும்பத்திலிருக்கும் மிச்ச சொச்சத்தையும் ஸ்பான்சர் பண்ணுவம் என்று பார்த்தால்  ஊரிலிருக்கிற சனத்திடம் இந்த மணி  ஆட்டல் ஒன்றும் எடுபடுதில்லை  

அத விடுங்க வேலை ஒன்று பாருங்க அங்க எங்கயாவது போய் நிம்மதியாக வேலை ஒன்று செய்ய 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2021 at 00:50, valavan said:

தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா,

விடிவெள்ளிகளையும், வசந்தங்களையும் வைத்து தமிழர்களை பிரித்தாள முடியுமே தவிர வேறெதுவும் இவர்களால் முடியாது. அதற்காகவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட பதவி. பதவிக்கான தகுதியேதும் இல்லாமலே அரியாசனம் ஏறினால் அது தப்பான அல்லது செயற்பாடற்ற சொல்லிக்கொள்ள மட்டுமே முடியும்.

On 7/12/2021 at 16:26, அக்னியஷ்த்ரா said:

சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார்,

வடக்கு கிழக்கு இணைந்த முதலமைச்சராகும் கனவு அவருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.