Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

December 17, 2021

spacer.png

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசனினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமாினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமாினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர்  வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது. மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான திரு.எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன்,  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி, திரு.சுந்தரலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.விக்னேஸ்வரன், திரு.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/170592

  • Replies 191
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் சைவத்தை மாத்திரம் அல்ல சாதியையும் திறம்பட வளர்த்தவர். சிங்களவன் தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிப்பதற்கு நல்ல தான் காய் நகர்த்துகின்றான், அதற்க்கு எம்முடைய உயர் குடி மக்களும் துணை போகின்றார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் தமிழரின் கலாச்சாரத்தை அழிப்பது, நிலத்தை அபகரிப்பது. மறுபுறத்தில் சிவராத்திரி,  நவராத்திரி கொண்டாட்டம், நாவலர் ஆண்டு பிரகடனம். தமிழ் மக்களுக்கும் அறளை பிறந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

நாவலர் சைவத்தை மாத்திரம் அல்ல சாதியையும் திறம்பட வளர்த்தவர். சிங்களவன் தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிப்பதற்கு நல்ல தான் காய் நகர்த்துகின்றான், அதற்க்கு எம்முடைய உயர் குடி மக்களும் துணை போகின்றார்கள்.
 
6 hours ago, satan said:

ஒருபக்கம் தமிழரின் கலாச்சாரத்தை அழிப்பது, நிலத்தை அபகரிப்பது. மறுபுறத்தில் சிவராத்திரி,  நவராத்திரி கொண்டாட்டம், நாவலர் ஆண்டு பிரகடனம். தமிழ் மக்களுக்கும் அறளை பிறந்திட்டுது.

இரு வேறுபட்ட பார்வை,

@zumaஎல்லாம் பார்ப்பதில் தான் உள்ளது. எப்பவோ செத்துப்போன நாவலரின் செயற்பாட்டை இன்னும் பூச்சாண்டி காட்டிக் கொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இதே மகிந்தர் அரசுக்கட்டில் இருக்கும் (சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியாக இருந்த  வேளை) போது தான் நல்லூர் நாவலர் சிலை.. சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டு.. தலை வேறு.. உடல் வேறாக பிரித்துக் காட்சிப்படுத்திவிட்டுச் சென்றிருந்தார்கள் என்பதையும்.. மிஸ்டர் நல்லை ஆதினம்.. அனுபவித்துக் கடந்து வந்திருப்பார் என்று நினைக்கிறோம். 

Edited by nedukkalapoovan

21 hours ago, zuma said:

நாவலர் சைவத்தை மாத்திரம் அல்ல சாதியையும் திறம்பட வளர்த்தவர். சிங்களவன் தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிப்பதற்கு நல்ல தான் காய் நகர்த்துகின்றான், அதற்க்கு எம்முடைய உயர் குடி மக்களும் துணை போகின்றார்கள்.
 
நீங்கள் கூறியது சரியே. சைவத்தை உயர் சாதிக்குரிய சாதி வெறி மதமாக கட்டி வளர்கக வேண்டும் என்பதே நாவலரின் எண்ணமாகும்.  அதையே அவர் செய்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இரு வேறுபட்ட பார்வை,

@zumaஎல்லாம் பார்ப்பதில் தான் உள்ளது. எப்பவோ செத்துப்போன நாவலரின் செயற்பாட்டை இன்னும் பூச்சாண்டி காட்டிக் கொண்டு

எப்பவோ செத்துப்போன நாவலரின் சைவ வினா- விடையை யாழ்ப்பாணத்தில் தற்போதும் கற்ப்பிக்கின்றார்கள், அதுதவிர அவருடைய ஆக்கங்களில் சம்ஸ்கிருதம் மலிந்து இருக்கும்.   

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0513.pdf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

எப்பவோ செத்துப்போன நாவலரின் சைவ வினா- விடையை யாழ்ப்பாணத்தில் தற்போதும் கற்ப்பிக்கின்றார்கள், அதுதவிர அவருடைய ஆக்கங்களில் சம்ஸ்கிருதம் மலிந்து இருக்கும்.   

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0513.pdf

சாதியத்தை வளர்க்க வினா- விடையை கற்பிக்கவில்லையே🤪 நாவலரின் பெயரில் சைவ சமயம் கற்பிப்பதில் தவறு இல்லை.

2 hours ago, MEERA said:

சாதியத்தை வளர்க்க வினா- விடையை கற்பிக்கவில்லையே🤪 நாவலரின் பெயரில் சைவ சமயம் கற்பிப்பதில் தவறு இல்லை.

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

மீரா எஸ்கெப்..🤣

7 hours ago, MEERA said:

இரு வேறுபட்ட பார்வை,

@zumaஎல்லாம் பார்ப்பதில் தான் உள்ளது. எப்பவோ செத்துப்போன நாவலரின் செயற்பாட்டை இன்னும் பூச்சாண்டி காட்டிக் கொண்டு

அப்படியா...

(உ+ம்) யாழ் பல்கலைக்கழக செனற்றைக் கேட்டால்/பார்த்தால் நீங்கள் கூறியதற்கு பதில் கிடைக்கும்.. 😏

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எவரும் சரியானவர்கள் இல்லை. நாவலரும் இதற்கு விதிவிலக்கல்ல.

மதம் மாற்றும் மதவாதிகளுக்கும், மதம் மாறிப் போகிறவர்களுக்கும் இந்தத் திரிக்கான சில ஊட்டங்கள் அவர்களை நியாயப்படுத்த நல்ல வெளிச்சம் கொடுக்கும். 

தீய விடயங்களோ, செயல்களோ கண்ணில் பட்டாலும், அவற்றில் இருக்கும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம். நல்லதை மட்டும் பார்க்கும் குணம், நம்மை எப்போதும் காப்பாற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

மீரா எஸ்கெப்..🤣

யாழில் பாய் விரித்து படுத்து கிடக்க முடியாது. வரும் போது தக்க பதில் அளிக்கபடும்.

@tulpen நான் எழுதியதை மேற்கோள் காட்டுவதற்கு முன்னர் ஒன்றிற்கு பல தடவை வாசியுங்கள்.

மேலும் அந்தர்கால பழைய பதிவுகளை காவித் திரிவதை முதலில் நிறுத்துங்கள்.

52 minutes ago, tulpen said:

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

நாவலர் அவரின் காலச் சமூகத்தை பிரதிபலித்து இதில் பதில்களை அளித்திருக்கிறார். ஏதோ நாவலர் தான் சாதியை உருவாக்கின மாதிரி இருக்குது சிலரது நாவலர் வெறுப்புக் கதை.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.. தமிழ் செம்மொழியாக உழைத்தவர் அவர் என்றால்.. அது மிகையல்ல. 

மேலும் நாவலர் வாழ்ந்த காலத்தில் இருந்த பிரித்தானிய காலனித்துவத்துள் சாதியப் பாகுபாடுகள் வர்க்கப்பாகுபாடுகளாகி.. மக்களின் வாழ்க்கை தரத்திலும் பாகுபாடுகள் இருந்ததால்.. நாவலர் தூய்மையை முன்னுறுத்தி.. தூய்மை இல்லாத பழக்க வழக்கம் உள்ளோரை தாழ்ந்த சாதி என்றிரைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

ஏன் இன்றும் தான்.. தூய உடை அணியாமல்.. குளிக்காமல்.. நாற நாற ஒருவர் அருகில் வந்தால்.. அந்த இடத்தில்.. இதில நாவலரை வெறுக்கிறவை குந்தி இருந்து உணவு அருந்துவினமா..???!

நாவலர் தன் காலத்தைப் பிரதிபலித்து மக்களுக்கு எளிமைப்படுத்த இப்படி உரைத்திருக்கலாம்.. தமிழையே எளிமைப்படுத்தி உரைத்த மொழியாளர் அல்லவா அவர். 

நாவலர் பெருமானர் தமிழுக்கும்.. தமிழர் நிலத்துக்கும் ஆற்றிய எவ்வளவோ அளப்பரிய விடயங்கள் இருக்க.. ஒரு சில அந்தக் காலப் பிரதிபலிப்புக்களை இன்றும் அவரின் பெயரை அவதூறாக்க காவித் திரிபவர்கள் தான்.. உண்மையான சாதி வெறியர்களாவர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நினைத்தது நிறைவேறுகிறது 🤣.

யாரை கையில் எடுத்தால் - தமிழருக்குள் பிக்கல் பிடுங்கல் வெடிக்கும் என்று ஸ்கெட்ச் போட்டு மூவ் பண்றாப்பல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வறணிகோயில்ல ஜேசீப்பி மெசின்ல தேர் இழுத்தவைக்கும் கரவெட்டியில் கோயில் குளத்துக்கு முள்ளுக்கம்பி போட்டவைக்கும் நீர்வேலியில் ராணுவத்தை வச்சு தேர் இழுத்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாரதரத்னா விருதும் குடுத்து அழகுபார்க்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…

பி.குறிப்பு- நாவலற்ர சாதிவெறிக்கு முட்டுகுடுப்பவர்களுக்கு யாழ் இணையமும் ஏதாவது விருது குடுத்து அழகுபார்க்கலாம்..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

எமது பார்வையில், இதை விளங்கி கொள்ளும் வகையில் தான் தவறுகள் உள்ளன. 

நாவலர் பெருமானை நான் உயர்வாக எண்ணுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னப்பறவைக்கு பாலில் நீரை கலந்து வைத்தால் அது  நீரைப் பிரித்து பாலைமட்டும் அருந்துமாம், ஆறறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் எங்கே? சுத்தப் பன்னாடைகள்!

Just now, satan said:

அன்னப்பறவைக்கு பாலில் நீரை கலந்து வைத்தால் அது  நீரைப் பிரித்து பாலைமட்டும் அருந்துமாம், ஆறறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் எங்கே? சுத்தப் பன்னாடைகள்!

1. அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா

2. பன்னாடைக்கு வடிகட்டும் ஆற்றல் உள்ளது.

1 hour ago, nedukkalapoovan said:

நாவலர் அவரின் காலச் சமூகத்தை பிரதிபலித்து இதில் பதில்களை அளித்திருக்கிறார். ஏதோ நாவலர் தான் சாதியை உருவாக்கின மாதிரி இருக்குது சிலரது நாவலர் வெறுப்புக் கதை.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.. தமிழ் செம்மொழியாக உழைத்தவர் அவர் என்றால்.. அது மிகையல்ல. 

மேலும் நாவலர் வாழ்ந்த காலத்தில் இருந்த பிரித்தானிய காலனித்துவத்துள் சாதியப் பாகுபாடுகள் வர்க்கப்பாகுபாடுகளாகி.. மக்களின் வாழ்க்கை தரத்திலும் பாகுபாடுகள் இருந்ததால்.. நாவலர் தூய்மையை முன்னுறுத்தி.. தூய்மை இல்லாத பழக்க வழக்கம் உள்ளோரை தாழ்ந்த சாதி என்றிரைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

ஏன் இன்றும் தான்.. தூய உடை அணியாமல்.. குளிக்காமல்.. நாற நாற ஒருவர் அருகில் வந்தால்.. அந்த இடத்தில்.. இதில நாவலரை வெறுக்கிறவை குந்தி இருந்து உணவு அருந்துவினமா..???!

நாவலர் தன் காலத்தைப் பிரதிபலித்து மக்களுக்கு எளிமைப்படுத்த இப்படி உரைத்திருக்கலாம்.. தமிழையே எளிமைப்படுத்தி உரைத்த மொழியாளர் அல்லவா அவர். 

நாவலர் பெருமானர் தமிழுக்கும்.. தமிழர் நிலத்துக்கும் ஆற்றிய எவ்வளவோ அளப்பரிய விடயங்கள் இருக்க.. ஒரு சில அந்தக் காலப் பிரதிபலிப்புக்களை இன்றும் அவரின் பெயரை அவதூறாக்க காவித் திரிபவர்கள் தான்.. உண்மையான சாதி வெறியர்களாவர். 

நெடுக்கு, எமது தனிப்பட்ட வாழ்வில் ஒருவர் செய்த நல்லவைகளை மட்டும் நினைப்பது அவர்களுடனான உறவை பலப்படுத்த உதவும் மறுக்கவில்லை.

ஆனால் பொது வாழ்வில் அப்படியல்ல. பொது வாழ்வில் இருந்து எமக்கு முன்னோடிபோல் காட்டப்படும் ஒருவரது நல்லவைகளும் அவர் சமூகத்துக்கு கொடுத்த கெட்டவைகளும் ஞாபகத்தில் இருந்தாலே அவரை. கண்ணை முடிக்கொண்டு பின்பற்றுவதை தடுக்கலாம்.  அவர் சமூகத்துக்கு செய்த நனமைகளை பாராட்டுவதோடு அவர் இந்த சமூகத்துக்கு செய்த தீமையாக  சாதி வெறியை பலப்படுத்த பாடுபட்டதோடு அடுத்த தலைமுறைக்கு அதை ஒரு நன்நெறியாக கற்பித்த அவரது செயல் ஏற்றுக்கொள்ள முடியாததோடு கண்டிக்கத்தக்கதே.  

மேற்கத்தைய நாடுகளின் வரலாற்றில் அவர்கள் மதிக்கும் பல முன்னோர்களின் எதிர்மறையான  பல விடயங்களை மறைக்காமல் அதையும் வரலாற்று குறிப்பேடுகளில் பதிவு செய்வார்கள். எமது நாடுகளில் மட்டும் தான் ஒருரை முழுமையாக ஏற்று,  அவர் சமூகத்துக்கு செய்த தீமைகளை மறைத்து அவர் மாசற்ற நபர் போல் காட்டும் பழக்கம் உண்டு. அது எமது சமூகத்திற்கு தீமையை விளைவிக்குமே தவிர நன்மையை விளைவிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

1. அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா

2. பன்னாடைக்கு வடிகட்டும் ஆற்றல் உள்ளது.

இதத்தான் ஊரில “ஒரு அடியில மலாந்துபோய் கிடந்தான்..” எண்டு சொல்லுறனாங்கள்..😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

அன்னப்பறவைக்கு அப்படி ஒரு ஆற்றல் இல்லை. அது சும்மா எங்கள் புலவர்மார்கள் அரசர்மார்களுக்கு அவித்து விட்ட கப்ஸா

தாங்கள் ஒருக்கா பரீட்சித்து முடிவை அறியத்தரலாமே?

9 minutes ago, நிழலி said:

பன்னாடைக்கு வடிகட்டும் ஆற்றல் உள்ளது.

குப்பைகளை தன்னுள் தாங்கிக்கொண்டு தேவையானவற்றை வெளியேற்றிவிடும்.

4 minutes ago, tulpen said:

அவர் இந்த சமூகத்துக்கு செய்த தீமையாக  சாதி வெறியை பலப்படுத்த பாடுபட்டதோடு அடுத்த தலைமுறைக்கு அதை ஒரு நன்நெறியாக கற்பித்த அவரது செயல் ஏற்றுக்கொள்ள முடியாததோடு கண்டிக்கத்தக்கதே

யாரை கண்டிக்கப்போகிறீர்கள்? அவரின் சிலையையா? அவரின் நல்லவற்றை கற்பியுங்கள், தீயவற்றை தவிருங்கள். இல்லையா சொல்லிக்கொண்டு திரியுங்கள். பார்க்கிறவர்கள் வித்தியாசமாக நினைப்பார்கள். எப்போதும் போன பஸ்ஸுக்கே கை காட்டிக்கொண்டு நிப்பீர்களா?

4 minutes ago, satan said:

யாரை கண்டிக்கப்போகிறீர்கள்? அவரின் சிலையையா? அவரின் நல்லவற்றை கற்பியுங்கள், தீயவற்றை தவிருங்கள். இல்லையா சொல்லிக்கொண்டு திரியுங்கள். பார்க்கிறவர்கள் வித்தியாசமாக நினைப்பார்கள். எப்போதும் போன பஸ்ஸுக்கே கை காட்டிக்கொண்டு நிப்பீர்களா?

கண்டிப்பது என்பது அவரது கருத்தை மட்டுமே. நாவலர் பெருமானின் கருத்துக்கள் என்று, அவரை ஒரு மாசற்ற மனிதராக படம் காட்டும் போது அவரது படு மோசமான சாதி வெறி கருத்துக்களையும் கூறி அவர் ஒன்றும் மக்களால் முழுமையாக பின்பற்ற வேண்டிய முன்னோடி அல்ல  என்பதை சொல்வது ஒன்றும் தவறல்ல.

அவரது சாதி வெறி கருத்துக்கள் போன பஸ் அல்ல. இன்றும் நடைமுறையில் உள்ளது தான். அவர் தனமு அடுத்த சந்ததிக்கு சொல்லிக்கொடுத்த தவறான சாதி வெறி கருத்துக்களைக் கண்டிபது கண்டு நீங்கள் கோபம் கொள்வதேன்?  

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் பெருமான் வாழ்ந்த காலம் 1822 – 1879 என்று கூறப்படுகின்றது. அவரது போதனைகள் இற்றைக்கு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளிற்கு முன்னம் கூறப்பட்டவை. அவை காலத்துக்கு உகந்ததாகவே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

அவரின் நல்லவற்றை கற்பியுங்கள், தீயவற்றை தவிருங்கள். இல்லையா சொல்லிக்கொண்டு திரியுங்கள்.

23 minutes ago, tulpen said:

சாதி வெறி கருத்துக்களைக் கண்டிபது கண்டு நீங்கள் கோபம் கொள்வதேன்?  

திருந்த, திருத்த எத்தனையோ வழிகள் இருக்கின்றன, கண்டிப்பதால் எதையும் மாற்றமுடியாது, இன்னும் வீரியம் பெறும். "தண்ணீர் ஊற்றாதீர்கள், அது தானாகவே கருகிவிடும்" என்பதே எனது கருத்து! 

9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நாவலர் பெருமான் வாழ்ந்த காலம் 1822 – 1879 என்று கூறப்படுகின்றது. அவரது போதனைகள் இற்றைக்கு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளிற்கு முன்னம் கூறப்பட்டவை. அவை காலத்துக்கு உகந்ததாகவே உள்ளன.

மனிதரை பிறப்பினால் பேதப்படுத்தும் சாதி வெறி எந்த காலத்துக்கும் உகந்தது அல்ல. ஒரு முன்னோடி என்பவர் தனது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டுபவராக இருக்க வேண்டுமே தவிர பழைய குப்பைகளையும் மூடப்பழக்கங்களையும் அடுத்த தலைமுறை மீது திணிப்பவரக இருக்கக்கூடாது.  

2 minutes ago, satan said:

திருந்த, திருத்த எத்தனையோ வழிகள் இருக்கின்றன, கண்டிப்பதால் எதையும் மாற்றமுடியாது, இன்னும் வீரியம் பெறும். "தண்ணீர் ஊற்றாதீர்கள், அது தானாகவே கருகிவிடும்" என்பதே எனது கருத்து! 

அதாவது நாவலரைப் போல சாதி வெறிக்கு தண்ணீர் ஊற்றாமல் நாம் இருக்க வேண்டும் என்கின்றீர்கள். அப்படியானால் சரி தான். 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.