Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்!
சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை

  • Replies 54
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலாந்தன் ஊரிலா வெளியிலா ஊரில் என்றால் கவனமாக இருக்க சொல்லுங்க பீற்றர் இளம் செழியனுக்கு தாடை பெயர்ந்தவர்கள் நிலாந்தனை சிலுவையில் தூக்கி அறைந்து  விடுவினம் என்று .🤣

16 minutes ago, பெருமாள் said:

இந்த நிலாந்தன் ஊரிலா வெளியிலா ஊரில் என்றால் கவனமாக இருக்க சொல்லுங்க பீற்றர் இளம் செழியனுக்கு தாடை பெயர்ந்தவர்கள் நிலாந்தனை சிலுவையில் தூக்கி அறைந்து  விடுவினம் என்று .🤣

நீங்க சொல்வது சரி தான். ஆனால் இதே நிலாந்தன் புலிகளை விமர்சித்திருந்தால் நினைவு தினம் கூட கொண்டாட முடியாமல் துரோகி முத்திரையுடன் போய் சேர்ந்திருப்பார் என்பது ஈழத்து அரசியலை அறிந்த கற்று குட்டிக்கு கூட தெரிந்த உண்மை. 

புலிகளை மட்டுமல்ல ஆயுத போராட்டத்தை நடத்திய எந்த இயக்கத்தை விமர்சித்திருந்தாலும் அது தான் நடந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

ஆயுத இயக்கங்களும் சுமத்திரன்  குழுவும் ஒன்று என்கிறீர்கள் நல்லதொரு திருப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

1. மக்களை திரட்டும் ஆற்றலோ பக்குவமோ சுமந்திரனுக்கு இல்லை. அதை வளர்க அவர் முயல்வதாயும் தெரியவில்லை. அது தேவையில்லை. எனக்கு எல்லாம் தெரியும் எண்ட அதிமேதாவித்தனமே அவரிடம் தெரிகிறது.

2. ஆனால் நிலாந்தன் சொல்வது போல் வெளியுறவு கொள்கையின் எல்லா அம்சமும் மேடையில் சொல்ல கூடியது அல்ல. இதை முன்னர் ஒரு தரம் பாலா அண்ணையும் சொல்லி இருந்தார்.

3. பத்தி எழுத்தாளர் பற்றி சுமந்திரன் பார்வை சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் என்றால் யார்? சுமந்திரனை குறிவைத்து எழுதும் தமிழ்வின் நிருபர்களும் அவர்கள் பதிவுகளை பின்தொடர்ந்து பகிரும் யாழ் இணையம் தொடுப்பு புயல் @பெருமாள் அவர்களும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊடகவியலாளர்கள் என்றால் யார்? சுமந்திரனை குறிவைத்து எழுதும் தமிழ்வின் நிருபர்களும் அவர்கள் பதிவுகளை பின்தொடர்ந்து பகிரும் யாழ் இணையம் தொடுப்பு புயல் @பெருமாள் அவர்களும் தானே?

அவர் நல்லது தமிழ் மக்களுக்கு செய்யணும் என்றுதான் நீங்க குறிப்பிடுபவர்களுக்கு விருப்பம் ஆனால் நடப்பது என்ன ?

இதே சுமத்திரன் பின்கதவால் உள்ளே வரும்போது தைரியமான ஆளுமையுள்ள அரசியலில் அவர் இவர் என்றெல்லாம் புகழ்ந்து தானே உள்ளெ கொண்டுவந்திங்க ஆனால் அவர் செய்வது இந்த 12 வருடத்தில் நேரே பார்த்து அறிந்தும் விளங்கவில்லையா உங்களுக்கு அவர் யார் என?

அல்லது இனியும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறீர்களா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் அருமை..

🤮

எமது மக்கள் சிந்திய இரத்தத்தில் இந்த so called  ஆய்வாளர்களுக்கு மிகப் பெரிய பங்கிருப்பதை மனதில் இருத்துதல் நன்று. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் அவர்கள் இயக்கத்துடன் இருக்கும் போது  அவருடைய 3Js (Japanese, Jews, and Jaffnaites) கோட்ப்பாடு பிரபலியமானது. தற்போது ஆய்வாளர்கள் என தம்பட்டம் அடிப்பவர்களின்,  2009 முன்னைய  ஆய்வுகளை படித்தால் தெரியும், இவர்களுடைய ஆய்வுகள்  எப்படி அபத்தமானதும் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்!
சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை

சுமந்திரன் தான் ஆய்வாளர் நிலாந்தனுக்கு  செருப்படி கொடுத்திருக்கின்றார் போல் தெரிகின்றது.

நிலாந்தனின் உரை 

10 hours ago, goshan_che said:

மக்களை திரட்டும் ஆற்றலோ பக்குவமோ சுமந்திரனுக்கு இல்லை. அதை வளர்க அவர் முயல்வதாயும் தெரியவில்லை. அது தேவையில்லை. எனக்கு எல்லாம் தெரியும் எண்ட அதிமேதாவித்தனமே அவரிடம் தெரிகிறது.

கோஷான், சுமந்திரன் அரசியலுக்கு வரும் போது தைரியமான ஆளுமையாக தான் இருந்தார்.  ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,   நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, tulpen said:

தமிழர்களுக்கு எவ்வகையான அரசியல் இன்று தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ செய்யும் அரசியல் போன்றதொரு அரசியல் போதுமானதென்று நீங்கள் கருதுகிறீர்களா? அதாவது, மக்கள் சுதந்திரமாக, பிற அழுத்தங்களின்றி, தமது பிரதேசத்தில் தமது உரிமைகளை தங்கு தடையின்றி பாவிக்கக் கூடிய சூழ்நிலையின் அடிப்படையில் அமைந்த வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தமக்குத் தரும் சாதாரண அரசியல்வாதிகள் தமிழர்களுக்குப் போதுமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? 

நீங்கள் கூறும் சுமந்திரனின் ஆரம்பகால யதார்த்தமான, தந்திரோபாயமான அரசியல் என்பது இன்று சிங்களவர்களாலும், தமிழகத்தவர்களாலும் நடத்தப்படும் அன்றாட சிக்கல்களுக்கான அரசியல்தான் என்பது எனது எண்ணம்.

ஆனால், தமிழர்கள் தேடும் அரசியல் என்பது, சுமந்திரனாலும் (உங்களின் பார்வையில் போலியான தேசியவாதமற்ற), சிங்களவர்களாலும் தமிழகத்தார்களாலும் செய்யப்படும் அரசியலிலிருந்து வேறுபட்டது. ஒரு மிகவும் திட்டமிட்ட, அரசியல் மயப்படுத்தப்பட்ட இனவழிப்பிற்கு முகம்கொடுத்துக்கொண்டு, தமது அன்றாட வாழ்வை தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் நடத்திவரும் இவர்கள் எதிர்பார்ப்பது சுமந்திரன் கொடுக்கும் அரசியலினை அல்ல. 

எம்மக்களுக்கு தம்மீது இன்று பலவந்தமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, தமது வாழ்வினை உலகின் ஏனைய சுதந்திர மக்கள் கூட்டங்கள் போன்று அனுபவிப்பதற்கான அவசியம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளாமல், சமரசம் என்றும், சாணக்கியம் என்று பேசும் அரசியல் அம்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்காது. 

ஆகவேதான், நீங்கள் தேசிய அரசியலைக் கீழ்த்தரமாகச் சித்தரித்தாலும் கூட, மக்களுக்கு அந்த அரசியல் தேவைப்படுகிறது. தம்மை ஒருங்கிணைத்து, ஒரு அணியாகத் திரளச் செய்ய தமிழ்த் தேசியம் உதவும் என்று கருதுகிறார்கள். 

உங்களின் கூற்றுப்படி செல்வாவோ, அமீரோ, சிவசிதம்பரமோ தமது அரசியல் நலனுக்காகவே தமிழ்த் தேசியம் பேசினார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட மக்களுக்கு அதுவே தேவையாகவிருந்தது. தமது இனத்திற்காகவும், மொழிக்காகவும் தாம் இரண்டாம் பிரஜைகளாக நடத்தப்படுகிறோம் என்கிற ஆத்திரமே அவர்களை தேசிய அரசியலின்பால் ஈர்த்துவைத்திருக்கிறது. இதனை, சுமந்திரன் புரிந்துகொள்வது அவசியம்.

50 minutes ago, tulpen said:

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

சுமந்திரன் தன்னையொரு தமிழ்த் தேசியவாத அரசியல்வாதியாக மாற்றிவருகிறார் என்றால், அது வரவேற்கப்படவேண்டியதே. அதை ஏன் பிழை என்கிறீர்கள்? ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவர் அவ்வாறு மாறிவருவது தனது அரசியல் ஆதாயத்துக்காகத்தானேயன்றி, மக்களின் உண்மையான விடிவிற்காக அல்ல என்பது.

அமீரோ, சம்பந்தனோ செய்தவை தேசிய அரசியல் எனும் போர்வையில் தமது இருப்பிற்கான அரசியல்தான். அதைத்தான் சுமந்திரனும் செய்கிறார் என்று நினைக்கிறேன். 

ஆனால், தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்து நிற்கத்தான் அவர் இதனைச் செய்கிறார் என்றால், விரைவில் மக்கள் அவரையும் நிராகரித்துவிடுவார்கள். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

சுமந்திரனை எதிர்ப்பவர்களுக்கும், அவருக்கும் இடையிலிருப்பது தனிப்பட்ட வன்மமாக இருக்கலாம். ஆனால், சுமந்திரன் மீது முன்வைக்கப்படும் பல உண்மையான விமர்சனங்களை வெறுமனே தனிப்பட்ட வன்மம் என்று கூறிவிட்டு கடந்துசெல்வதும் ஆபத்தானது.

சுமந்திரன் இன்று விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் சார்பாகப் பேசும் ஒரு நிலையில், குறைந்தது சர்வதேச அதிகாரிகள் அவரை அவ்வாறு ஏற்றுக்கொண்டு பேசும் நிலையில் இருக்கிறார். ஆகவே அவர் பேசுவதும், செய்வதும் தமிழர் நலன் சார்ந்து அமையவேண்டும் என்பது அவசியம். அவ்வாறு அமையாதவிடத்து அதுபற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் அவசியம்.

13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான சுமந்திரனின் கருத்து இருவகையில் பார்க்கபடல் வேண்டும். முதலாவது , அச்சட்டமூலம் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப்போவதில்லையென்கிற உண்மையான முடிவிற்கு அவர் வந்திருந்தால், அது நல்ல விடயமே. ஏனென்றால், பிற சக்திகளின் அழுத்தங்களூடாக அதனை நாம் மெருகூட்டலாம்.

ஆனால், யதார்த்தத்தின்படி, இன்று 13 ஆம் திருத்தச் சட்டம் இன்று செல்லுபடியாகாது. அது சிங்களவரைக் கோபப்படுத்திவிடும், ஆகவே அவர்கள் விரும்பும் தீர்வைத் தரட்டும், இது வேண்டாம் என்று அவர் நினைத்தால் அது ஆபத்தானது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

விட்டால் யாழில் நான்மட்டுமேதான் சுமத்திறனை எதிர்க்கிறேன் என்பீர்கள் போல் உங்கள் கதை பலதடவை எழுதியது மறுபடியும் காரணம் பெருமாள் எனும் விம்பத்தை மட்டுமே பார்க்கிறீர்கள் கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களோ தெரியவில்லை.

சுமத்திரனை பின்கதவால் கொண்டுவரும்போது ஆளுமையான அரசியலில் உங்கள் பெரியவர் போல் என்றுதான் கொண்டுவந்தார்கள் அப்போது யாழில் அரசியல் எழுதுவதில்லை அரசியல் பற்றி கருத்தாடுவதும் இல்லை டேவிட் கமரூன் வியத்தின் போதுதான் உண்மையான சுமத்திரனின்  சுயரூபம்  தெரியவர அதன்பின்பே இங்கு அரசியல் எழுத வெளிக்கிட்டது அதை வன்மம் என்று சொல்வது தவறு ஆனால் இவ்வளவு 12 வருடகாலப்பகுதிக்கு பிறகும் சுமத்திரன் தீர்வு கொண்டுவருவார் என்று நம்பும் முட்டாள்  இல்லை என்பதில் பெருமையே .

  • கருத்துக்கள உறவுகள்

13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன்

அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்

நேரத்துக்கு ஒன்றை சொல்லி தமிழ்மக்களை முட்டாள் ஆக்குபவர் என்ற உண்மையை மக்களுக்கு சொல்வதுக்கு  பெயர் வன்மம் என்றால் அதை தொடர்ந்து செய்யலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் சுமந்திரன் பொது மேடையில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலாந்தன் இறுதிப் போர்க்காலத்தில் வன்னியில் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுவதேயில்லையாம். ஏன் என்று கேட்டால் "நான் உண்மைகளை அடைகாக்கிறேன்" என்பாராம்!

இதனாலேயே எழுத்தாளர் கற்சுறா நிலாந்தனை ஒரு "அடை காக்கும் கோழி" என்று அழைத்தார் ஓரிடத்தில்! 😎

12 hours ago, பெருமாள் said:

அவர் நல்லது தமிழ் மக்களுக்கு செய்யணும் என்றுதான் நீங்க குறிப்பிடுபவர்களுக்கு விருப்பம் ஆனால் நடப்பது என்ன ?

இதே சுமத்திரன் பின்கதவால் உள்ளே வரும்போது தைரியமான ஆளுமையுள்ள அரசியலில் அவர் இவர் என்றெல்லாம் புகழ்ந்து தானே உள்ளெ கொண்டுவந்திங்க ஆனால் அவர் செய்வது இந்த 12 வருடத்தில் நேரே பார்த்து அறிந்தும் விளங்கவில்லையா உங்களுக்கு அவர் யார் என?

அல்லது இனியும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறீர்களா ?

நீங்க "பின் கதவால்" எனும் போது மாமனிதர் பட்டம் பெற்ற அமரர் யோசப் ஐயாவையும், தற்போது "பின் கதவால்" வந்திருக்கும் கஜேந்திரனையும் சேர்த்தே திட்டுகிறீர்கள் என்று புரிவதில்லைப் போல?😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நீங்க "பின் கதவால்" எனும் போது மாமனிதர் பட்டம் பெற்ற அமரர் யோசப் ஐயாவையும், தற்போது "பின் கதவால்" வந்திருக்கும் கஜேந்திரனையும் சேர்த்தே திட்டுகிறீர்கள் என்று புரிவதில்லைப் போல?😂

இங்கு உங்களை போல ஆட்களிடம் கேள்வி கேட்டால் பதில் தரப்பட்டுள்ளது என்கிறீர்கள் நானும் மண்டையை உடைத்து எங்கடா பதில் தரப்பட்டுள்ளது என்று தேட வேண்டி கடைசியில் பார்த்தால் உங்களுடன் ஒத்த கருத்துள்ள உறவொன்று பதிலையே பதில் பதில் என்று தூக்கி பிடிதீர்கள் .அதன் பெயர் என்ன தெரியுமா பச்சையாய் சொன்னால் குழு மோதல் என்பது அது யாழில் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிக்கொண்டு உங்கள் கருத்துக்கு வருவம் .

அவர்களும் வந்தார்கள் வந்ததுக்கு யோசப் ஐயா வை அய்யா என்று மரியாதையாக நடந்து கொண்டார் தமிழர்களிடம். கஜேந்திரனை பற்றி முன்பே சொல்லியாயிற்று துல்பனிடம் கேட்டு தெரிந்து கொள்க . தெரிந்துகொண்டு சுமத்திரனை கோசத்தில் இருந்து மடை மாற்றல் வேண்டாமே இங்கு .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

பெருமாள்: உலகம் என்ன ஷேப்? 

ருல்பென்: கோளம், மேலே கீழே கொஞ்சம் தட்டை!

ஜஸ்ரின்: ருல்பென் சொன்னது தான் என் பதிலும்!

பெருமாள்: ஆ..அது செல்லாது , இன்னொருவர் பதிலை ஏற்றுக் கொள்வது குழுவாதம்- உது விதி மீறல்!

ஜஸ்ரின்: 🤦‍♂️

விடுங்க, பெருமாள் மீண்டும் மீண்டும் பொல்லோடு வராமல்!😂

மடை மாற்றல் இல்லை: யோசப் ஐயா, கஜேந்திரன் வேறு வழி. சுமந்திரன் வேறு வழி. அச்சில் வார்த்தது போல எல்லாரும் இருந்தால் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்!

தெரிவு செய்த மக்கள் பிடிக்கா விட்டால் அகற்றுவர். இது தான் ஜனநாயகம்! உங்களுக்கு கொஞ்சம் புதிசு தான், புரிகிறது!😎

  • கருத்துக்கள உறவுகள்

பத்தி எழுத்தாளர் அரசியல் ஆய்வாளர் எண்டது நிலாந்தனுக்கும் சுட்டுப்போட்டுது போல…😂 இந்த அரசியல் ஆய்வாளர்களை எனக்கும் கண்ணிலையும் காட்டகூடாது.. இவனுங்கதான தேளவடிவ வட்டவடிவ சதுரவடிவ தாக்குதல் எண்டு பீலா விடுரவனுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பெருமாள்: உலகம் என்ன ஷேப்? 

ருல்பென்: கோளம், மேலே கீழே கொஞ்சம் தட்டை!

ஜஸ்ரின்: ருல்பென் சொன்னது தான் என் பதிலும்!

பெருமாள்: ஆ..அது செல்லாது , இன்னொருவர் பதிலை ஏற்றுக் கொள்வது குழுவாதம்- உது விதி மீறல்!

ஜஸ்ரின்: 🤦‍♂️

ருள்பென் சொன்னதுதான் உங்கள் பதில் என்று இங்குதான் கூறுகிறீர்கள்  நல்லது உலகம் உருண்டை தானே .......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தெரிவு செய்த மக்கள் பிடிக்கா விட்டால் அகற்றுவர். இது தான் ஜனநாயகம்! உங்களுக்கு கொஞ்சம் புதிசு தான், புரிகிறது!

அகற்றினாலும் மற்றவரின் ஓட்டை சுத்து மாத்து  பண்ணி உள்ளே வரும் வித்தை தெரிந்தவர் .ஜனநாயகம் எங்களுக்கு புதிதில்லை இங்கிலாந்து சர்வாதிகார ஆட்சியிலா இருக்கிறது ?

ஆனால் ஜனநாயக நாடுகளுக்கு  விளக்கம் தருகிறோம் என்று ஓடிவரும் சுமத்திரனின் கும்பல் தான் பீற்றர் இளம் செழியனின் தாடை உடைத்தது பற்றி ஒரு திரியில் சொல்ல இன்னும் மோசமாக தாக்கி இருக்கனும் என்று நக்கல் அடித்தது நீங்கள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாது, அக்கருத்துக்களை இடுவோரை எள்ளிநகையாடி தனிமனித தாக்குதலாக மாற்றுவது நடக்கிறது. இதைத் தவிர்க்கலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

கோஷான், சுமந்திரன் அரசியலுக்கு வரும் போது தைரியமான ஆளுமையாக தான் இருந்தார்.  ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,   நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

நான் சுமந்திரனை ஆதரித்த போது அவர் சில அடிப்படைகளை விட்டு கொடுக்காமல், ஆராவாரம் செய்யாமல், சம்பந்தர் சிவி யை முன்வைத்து செயல்படும் ஒரு பின் தள ஆலோசகராக இருப்பார் என நினைத்தேன். அப்படித்தான் அவரின் ஆரம்ப நகர்வுகள் இருந்தன.

ஆனால் அவரோ தன்னையே ஒரு தலமையாக முந்தள்ளி, தாந்தோன்றி தனமாக நடக்க முற்பட்டார். குறிப்பாக சிவி யின் வெளியேற்றம். அதுக்கு இவர்களிருவரினதும் personality clash மட்டுமே பிரதானமான காரணம்.

ஜனரஞ்சக அரசியலுக்கு வந்தவுடன் பொய் சொல்லவும் ஆரம்பித்தார்.

தீபாவளிக்குள் தீர்வு என்றார். நல்லாட்சி அரசு காலத்தில் ஒரு aim இல்லாமல், அந்த அரசை காப்பாற்றுவதுதான் தன் தலையாக கடமை, தீர்வு அடுத்த பட்சம் என்பது போல் இருந்தது இவரின் செயல். கல்முனை விவகாரத்தில் நேர்மையின்றி நடந்தார்.

புதிய அரசமைப்பை அமைக்க பாடுபட்டார். சரி அதை செயலாக்கினாரா? இல்லை. (இதற்கு இவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது) அடுத்து இனவாத அரசு வந்தவுடன் அத்தனையும் பாழ்.

இலங்கை இனவாத அரசுகளின் வரலாற்று போக்கை அறிந்திருந்தால், உள்ளே அரசமைப்பை மாற்றி மட்டும் தீர்வு சாத்தியமில்லை, ஒரு கடும் வெளி அளுத்தம் தேவை என உணர்ந்து எப்போதோ, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, வெளி அளுத்தம் வர உழைத்திருக்கலாம் ( இதில் டிரம் வந்தது உட்பட வேறு காரணிகளும் உண்டு).

கடைசியாக வயலில் இறங்கியது அடுத்த கட்ட பம்மாத்து.

அதேபோல் தனது தாந்தோன்றி விறுக்கு தனத்தால் பல உள்ளூர் அரசியல்வாதிகளையும் குழப்பி அடித்து, கூட்டமைப்பை மேலும் கூழாம்பாணியாக்கினார்.

ஆகவே இவரும் பழைய “இரத்த பொட்டு” கோஸ்டிதான் என்பது என் தீர்மானம்.

ஆனாலும் தீர்வு வரும் போது இவருக்கு ஒரு பெரிய வகிபாகம் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இவரின் அண்மைய சுருதி மாற்றம் - எனக்கும் குழப்பம்தான்.

இலங்கை -13 எண்டும்.

இந்தியா+ மேற்கு 13 எண்டு தொடங்கும்.

கூட்டமைப்பு 13+ எண்டும்

சீவி federal என்பார்

கஜன் confederal என்பார்.

முடிவு 13 - 13+ க்கு இடையில் வரலாம் என்றே நான் எண்ணி இருந்தேன்.

இப்போ

சிவி 13 என்கிறார் 

சுமந்திரன் 13+ என்கிறார். அல்லது federal என்கிறாரோம் தெரியாது. 

இது negotiating positioning ஆ? அல்லது 13 க்கு மேலே கேளுங்கள் என யாரும் வெளிச்சக்திகள் கூறினவா? தெரியவில்லை.

5 hours ago, பெருமாள் said:

13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன்

அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்

நேரத்துக்கு ஒன்றை சொல்லி தமிழ்மக்களை முட்டாள் ஆக்குபவர் என்ற உண்மையை மக்களுக்கு சொல்வதுக்கு  பெயர் வன்மம் என்றால் அதை தொடர்ந்து செய்யலாம் .

இதில் ஏறுக்கு மாறாக ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சோறும் சம்பலும் சாப்பாடு போடுவோம் -  அரசு. (ஆனால் தட்டில் எதுவும் போடவில்லை). 

எமக்கு சோறும்+ ஆட்டுக்கறியும் வேண்டும் - சுமந்திரன்.

சோறும் சம்பலும் போடுவோம் என்று சொல்லும் அரசு முதலில் அதையாவது தட்ட்டில்  போடட்டும் - சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி ஒருக்கா சொல்றார் பின்பு அதெல்லாம் சரிவராது என்கிறார் இவரே சரி என்று பின்பு அதே வாயால் பிழை என்கிறார் அதுக்கு பெயர்தான் சுத்துமாத்து என்கினம் .

1 hour ago, goshan_che said:

நான் சுமந்திரனை ஆதரித்த போது அவர் சில அடிப்படைகளை விட்டு கொடுக்காமல், ஆராவாரம் செய்யாமல், சம்பந்தர் சிவி யை முன்வைத்து செயல்படும் ஒரு பின் தள ஆலோசகராக இருப்பார் என நினைத்தேன். அப்படித்தான் அவரின் ஆரம்ப நகர்வுகள் இருந்தன.

ஆனால் அவரோ தன்னையே ஒரு தலமையாக முந்தள்ளி, தாந்தோன்றி தனமாக நடக்க முற்பட்டார். குறிப்பாக சிவி யின் வெளியேற்றம். அதுக்கு இவர்களிருவரினதும் personality clash மட்டுமே பிரதானமான காரணம்.

ஜனரஞ்சக அரசியலுக்கு வந்தவுடன் பொய் சொல்லவும் ஆரம்பித்தார்.

தீபாவளிக்குள் தீர்வு என்றார். நல்லாட்சி அரசு காலத்தில் ஒரு aim இல்லாமல், அந்த அரசை காப்பாற்றுவதுதான் தன் தலையாக கடமை, தீர்வு அடுத்த பட்சம் என்பது போல் இருந்தது இவரின் செயல். கல்முனை விவகாரத்தில் நேர்மையின்றி நடந்தார்.

புதிய அரசமைப்பை அமைக்க பாடுபட்டார். சரி அதை செயலாக்கினாரா? இல்லை. (இதற்கு இவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது) அடுத்து இனவாத அரசு வந்தவுடன் அத்தனையும் பாழ்.

இலங்கை இனவாத அரசுகளின் வரலாற்று போக்கை அறிந்திருந்தால், உள்ளே அரசமைப்பை மாற்றி மட்டும் தீர்வு சாத்தியமில்லை, ஒரு கடும் வெளி அளுத்தம் தேவை என உணர்ந்து எப்போதோ, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, வெளி அளுத்தம் வர உழைத்திருக்கலாம் ( இதில் டிரம் வந்தது உட்பட வேறு காரணிகளும் உண்டு).

கடைசியாக வயலில் இறங்கியது அடுத்த கட்ட பம்மாத்து.

அதேபோல் தனது தாந்தோன்றி விறுக்கு தனத்தால் பல உள்ளூர் அரசியல்வாதிகளையும் குழப்பி அடித்து, கூட்டமைப்பை மேலும் கூழாம்பாணியாக்கினார்.

ஆகவே இவரும் பழைய “இரத்த பொட்டு” கோஸ்டிதான் என்பது என் தீர்மானம்.

ஆனாலும் தீர்வு வரும் போது இவருக்கு ஒரு பெரிய வகிபாகம் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இவரின் அண்மைய சுருதி மாற்றம் - எனக்கும் குழப்பம்தான்.

இலங்கை -13 எண்டும்.

இந்தியா+ மேற்கு 13 எண்டு தொடங்கும்.

கூட்டமைப்பு 13+ எண்டும்

சீவி federal என்பார்

கஜன் confederal என்பார்.

முடிவு 13 - 13+ க்கு இடையில் வரலாம் என்றே நான் எண்ணி இருந்தேன்.

இப்போ

சிவி 13 என்கிறார் 

சுமந்திரன் 13+ என்கிறார். அல்லது federal என்கிறாரோம் தெரியாது. 

இது negotiating positioning ஆ? அல்லது 13 க்கு மேலே கேளுங்கள் என யாரும் வெளிச்சக்திகள் கூறினவா? தெரியவில்லை.

இந்ததெளிவு சுமத்திரன் சின்ராசுகளுக்கு கூட இல்லை நன்றி கோசான் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,  நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

இந்த தமிழ் ஆய்வாளர்கள் தொல்லைகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.