Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.

January 2, 2022

spacer.png

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

https://globaltamilnews.net/2022/171280

  • கருத்துக்கள உறவுகள்

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

அப்ப மொத்தம் இந்தியாவிலிருந்து எதிர்பார்த்த மூன்று பில்லியன் டொலர் கிடைக்கவில்லை ஆக 50 மில்லியன் டொலர் கிடைக்கிறது மிச்சமெல்லாம் இந்தியாவிலிருந்து வருகிற சாமானுக்கு கடன் இதுக்குள்ள மகாராஜா லிமிடெட் கம்பெனி வடக்கு கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய விடுகிறார்கள் இல்லை தங்களின் பொருளாதார இலாபத்திற்காக இப்படியே போனால் அடுத்த ஐந்து பத்து வருடங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்த அபிவிருத்தியும் செய்யப்படுவதற்கு நிதி இல்லை இதே நேரம் சீனா வந்தால் அவர்களுடைய அரசியல் பொருளாதார நிலைமைகளையும் 
எங்களுடைய பொருளாதார அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு எங்கள் முதலமைச்சர் வடிவாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த அபிவிருத்தி செய்வது நலம்
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த திருப்பதி செல்ல பயன்படுத்திய  விமானம் யாருடையது?, பெப்ருவரி 2021 இலங்கையிலிருந்து உகண்டா நாட்டுக்கு அச்சடித்த தாள்கள் என்ற போர்வையில் தனி விமானத்தில் கொன்டுசெல்லப்பட்ட 102 தொன் எடையுள்ள பொதியின் மர்மம் என்ன என்பன போன்ற பல விடயங்களுக்கு பதில் இல்லாமல் மர்மம் நீண்டு கொன்டு போகும் இந்த வேளையில் இலங்கைக்கு புதிய பணப்பரிமாற்றம் நிகழ்வது இராஜபக்சக்களையும் இலங்கை அரசாங்கத்தையும் ஊழல், பணமோசடி பாதையில் தொடர்ந்து பயணிக்கவே தூண்டும்.

உலக வங்கி, சர்வதேசநாணயநிதியம் போன்ற பொது இஸ்தாபனங்களிடம் உதவி பெறாமல் அண்டைநாடுகளிடம் கையேந்துவதிலும் இலங்கை அரசாங்கத்துக்கு இரட்டிப்பு இலாபம்தான். மக்கள் நலன், அபிவிருத்தி சார்ந்த நிபந்தனைகளுக்கு பணியவோ  நாட்டின் கணக்கு விபரங்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் தேவையோ இலங்கை அரசுக்கு இனி இருக்காது.

தமிழரான வேலுப்பிள்ளை கணநாதனை உகண்டாவிற்கான தூதுவராக நியமித்து தூதரகத்தில் பெருமளவிலான டொலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அதுவே முடிவில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட காரணமானது என்ற கதையும் உண்டு.

https://www.colombotelegraph.com/index.php/what-is-the-ugandan-link-and-shady-dealings-with-sri-lankas-kings/

https://www.sundaytimes.lk/210418/news/sla-uplifts-102-tons-of-printed-material-to-uganda-but-refuses-to-give-details-440509.html

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

27 minutes ago, MEERA said:

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

🤣நல்லவேளை என்ர மருமக்கள் யாரும் யாழ் களத்தை வாசிப்பதில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

👆

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

ஓம். நன்றி.

இந்தியா கொடுக்கும் காசுக்கு தன்னிடம்தான் சாமான் வாங்க வேண்டும் (எரிபொருள் தவிர) எண்டு சொல்லி இருக்கு. லாபத்துக்கு லாபம். கடனும் திரும்பி வரும் (வருமா 🤣).

ஆனால் கடன் வாங்குவதிலும் ஒரு இராஜதந்திரம்.

சீனாட்ட 150 vs இந்தியா+கட்டார் 150

அவை கடனை காட்டி சலுகைகள் கேட்டா, இவைய காட்டலாம். இவை கேட்டால் அவைய காட்டலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

கோடி என்ற சொல் வந்தோன்ன, ரூபாய் என்று நினைத்து விட்டேன்.

நன்றி..... அப்ப சிறியர் சொன்னது சரிதான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

இந்த இலட்சம், கோடிகளை விடுமட்டும் நம்பர் குழப்பம் இருக்கும்!

Sri Lanka : Sri Lanka to receive $ 1 billion loan from India to alleviate food and medicine shortages

Jan 01, Colombo: India has reportedly agreed to provide a $ 1 billion loan to Sri Lanka, as a solution to the dollar shortage, for the import of essential food items and medicines.

According to government sources, the loan will be given not as cash but as a loan facility for goods imported from India, Sinhala daily Lankadeepa reported.

It is learned that in addition India has agreed to provide US $ 500 million loan for fuel purchases and US $ 400 million as an exchange loan. 

The loan facility will be provided as a result of a discussion held by the Minister of Finance Basil Rajapaksa with the Indian authorities during his recent visit to India.

Meanwhile, government sources said that a loan of US $ 1.500 billion was received from China recently and that a loan of US $ 500 million is to be received from Qatar on a one-year repayment basis.

http://www.colombopage.com/archive_22A/Jan01_1641055594CH.php

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

நொச்சி,

போராடியது தவறு என எழுதுவதை மறுத்து நாம் ஆயிரம் கருத்தை முன்வைக்கலாம். அதை தவறு என நிறுவலாம். நானும் பலரும் பத்தி பத்தியாக எழுதி உள்ளோம். 

மாறாக அதை எழுதுவதையே தடுத்தால் - அந்த கருத்து வேறு தளங்களில் கேள்வி இல்லாமல் சொல்லபடத்தான் போகிறது. 

யாழில் கூட அதை எதிர்து எழுதவில்லை, அப்படி எழுதுவதே தடை எண்டால் அந்த கருத்து எதிர்க்கப்படாமலே போகும்.

தவிரவும் அரசியல்வாதிகள் சாத்தியமில்லாத தனிநாட்டு கோரிக்கையை சுயநலமாக முந்தள்ளினார்கள் என எழுதுவதும், போராடியதே தவறு என்பதும் ஒன்றல்ல.

நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு நம் எல்லாரின் பதிலும் ஒண்டாக இருக்க வேண்டியதில்லை. எனது பதில் “ஓடி வந்தேன்”, என்று இருக்க இன்னொருவர் பதில் “நான் எதுவும் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன்” எனவும் இருக்கலாம்.

அனைத்தையும் விட சர்வவல்லமையும், தூக்கும் உரிமையும் கையில் இருக்க, அதை இதுகாறும் பெரும்பாலும் சரியாகவே பயன்படுத்தியது போல் தொடர்ந்தும் செய்யலாம்.

கையில் சுத்தியல் இருக்கு என்பதால் ஆணிகளை தேவையில்லாமல் புடுங்கதேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

ஐயா கோசான்,

முன்பும் ஒரு முறை நான் இப்படி எழுதியிருந்தேன்.

"" இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக, தன்னை தற்காத்துக்கொண்ட சிங்களம், இன்னும் ஒரு இருபத்தைந்து/ஐம்பது  வருடங்கள் தன்னை தற்காத்துக்கொள்ளாதா""

என எழுதியிருந்தேன். இந்த வசனத்தை  புரிந்துகொண்டவர் மிகச் சிலரே. 

மன்னிக்கவும் நான் முதலமைச்சர் என்று சொல்லிவிட்டேன் மாகாண முதல்வர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நொச்சி,

போராடியது தவறு என .................................

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 
இல்லை நொச்சி,

தமிழ் தேசியம் என்பது அற்புதமான, எமக்கு மிகவும் பொருத்தமான, வேறு நிகரான மாற்றுகள் இல்லாத கொள்கை.

ஆனால் அது ஒன்றும் குரானும் அல்ல நாங்கள் முஸ்லிம்களும் அல்ல.

அவர்கள் தமிழ் தேசியத்தை தேவையில்லை என்று எழுதினால் அது ஏன் தேவை என்று பதில் எழுதினால், மறுபக்கம் எஸ்சாகி போவதே இங்கு வழமை. அது தமிழ் தேசியத்தின் கொள்கை வெற்றியே.

அதேபோல் தமிழ் தேசியத்தை வைத்து சிலர் கொள்ளை அடித்தார்கள் என்று எழுதுவதும் கொள்ளையர்களை தவிர வேறு எவரையும் கொச்சைப்படுத்துவதாகாது.

இதே யாழ்களத்தில் தமிழ் தேசியத்துக்கு காவலர்களா சுயநியமனம் செய்து கொண்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்க பட்ட தளபதிகளின் துணைவியரை, இன்னொரு கதையில் இன்னுமொரு தளபதியின் துணைவியை, கீழ்தரமாக எழுதியபோது, கடைசி நேரத்தில் தப்பி வந்த கள உறவை துரோகி என எழுதிய போது - எங்கே போனது இந்த கொச்சை படுத்தலுக்கு எதிரான தார்மீக கோபம்?

வழமையாக மிக லாவகமாக சுழலும் கத்தியை, ஒளிக்க கூடாத இடத்தில் ஒளித்து வைத்திருந்தார்களா🤣.

இன்னுமொன்று நாம் எப்போதும் தமிழ் தேசியத்தை ஒரு அமைப்புடன் மட்டும் தொடர் படுத்தி பார்க்கிறோம். முன்பு கூட்டணி, பின்னர் புலிகள்.

ஒரு அரசியல் தத்துவம் என்பது கோலா மாதிரி. கோக், பெப்சி, தம்ஸப், வேர்ஜின் கோலா, டெஸ்கோ கோலா என பலவகை இருக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை இல்லாமைதான் நாம் நகர முடியாமல் 48 இல் இருந்து ஒரே இடத்தில் நிற்க காரணம் என நான் நினைக்கிறேன்.

நாம் எல்லாருமே 48 இல் இருந்து எதையும் சாதிக்கவில்லை. 48 இல் இருந்த நிலை அல்லது அதையும் கீழான நிலையில்தான் 2021 இல் உள்ளோம். இதற்கான காரண காரியங்களை ஆராயாமல் நாம் இனிமேல் வரும் காலத்தில் முன்னேறி செல்லலாம் என்றால் - அது வெறும் பகற்கனவே.

அதற்காக ஒவ்வொரு திரியிலும் ஒன்றையே சொல்லுவது தேவையில்லைத்தான். ஆனால் அதை கட்டுப்படுத்த இப்போ இருக்கும் சுத்தியலே போதுமானது.

இளையோர் எழுந்தது அவர்களின் தவறில்லை அவர்களை உசுப்பேத்தியோரின் தவறு. அதே வகை உசுப்பேத்தல் இப்போதும் (அதிகமாக வெளிநாட்டில் இருந்து) நடக்கிறது.

நாட்டின் கள நிலமை பற்றி சிறிதும் யோசியாமல், 13 மூன்றெல்லாம் எமக்கு வேண்டாம் என்று இன்றும் எழுதுகிறார்களே?

இதை பழைய தவறை முன்னுதாரணமாக காட்டி, மீளவும் அதே தவறை நாம் விடக்கூடாது என்று எழுதுவதில் என்ன தப்பு.

இதுதானே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.